அல்லாஹ்வின் திருப்பெயரால்..
2014 பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற இருக்கும் சூழலில் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. வழமையாக முஸ்லீம் இயக்கங்களும் கட்சிகளும் தமிழகத்தின் இருவேறு அணியாக இருக்கும் அதிமுக திமுகவுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இச்சூழலில் நாம் எவ்வாறான நிலைபாடுகளை எடுக்க வேண்டும் என்ற சிந்தனையை பதியலாம். இதில் சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம், ஆனால் அந்தரத்தில் தொங்கவிடப்பட்ட சமுதாயமான இஸ்லாமிய சமுதாயம் சரியான நிலைபாட்டை முன்னெடுத்தால் நம்முடைய ஓட்டு பலம் என்ன என்பதை தமிழக அரசியல் களத்தில் நிரூபிக்கலாம்.
இந்த வருட பாராளுமன்ற தேர்தலில் அகில இந்தியா அளவில் பேசப்படும் பேச்சு ‘மோடி’ எனும் திட்டமிட்டு திணிக்கப்படும் மீடியா அரசியல் அலை! ஒரு போலியான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் தமிழகத்தில் முதலமைச்சர் ‘அம்மையார்’ அவர்களை பிரதமராக்குவோம் என்று அதிமுக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. தேசிய அளவில் நம்முடைய அடுத்த நிலைபாடு என்ன? யாரை ஆதரிப்பது? என்ற குழப்பதில் உள்ளது திமுக. தமிழகத்தில் அட்ரஸ் தேடி அலையும் காங்கிரஸ், தள்ளாடும் தேமுதிக, காவிகளின் கூடாரம் பாஜக, மனக்குழப்பத்தில் வைக்கோ, சாதிக் கூத்தில் பாமக. இவைகளுக்கு மத்தியில் தமிழக முஸ்லீம் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் அரசியல் ஆட்டங்கள்.
சுப்ஹானல்லாஹ்…! அல்லாஹு அக்பர்!. என்ன நடக்குது என்று எவருக்கும் புரியவில்லை. எங்கள் பின்னால் வாருங்கள் என்று நம் சமுதாயத்தை எங்கு இவர்கள் இழுத்துச் செல்கிறார்கள் என்பது புரியவில்லை. காயிதே மில்லத் போன்ற வலுவான முஸ்லீம் அரசியல் தலைவர் தமிழகத்தில் ஒருவர்கூட இல்லையே என்ற ஏக்கம் மீண்டும் எழுந்துள்ளது.
மமக: தங்கள் பிரதான கோரிக்கைகளான இட ஒதுக்கீடு அதிகரிப்பு, திருமண பதிவு சட்ட திருத்தம், கோவை சிறைவாசிகள் விடுதலை போன்றவைகளை நிறைவேற்ற எவ்வித முயற்சியும் செய்யாத ஆளும் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி சிறுபான்மை காவலர்(!?) திமுகவுடன் கூட்டனி சேர்ந்து அற்பம் ஒரே ஒரு பாராளுமன்றத் தொகுதியை பெற்று இதுவே போதும் என்று மேலும் போராடிப் பெற திராணியற்று அங்கே ஒதுங்கியுள்ளது.
முஸ்லீம் லீக்: திமுகவின் தலைவர் இதயத்தில் மட்டும் இடஒதுக்கீடு பெற்றுள்ளவர்கள், தொடர்ந்து கலைஞருக்கு ஜால்ரா அடித்து வரும் முஸ்லீம் லீக் வழக்கம்போல் கோரிக்கை ஒன்றுமில்லாமல், ஒரே ஒரு பாராளுமன்ற சீட்டை வாங்கிக் கொண்டு, இந்த முறை இது கிடைத்ததே என்ற திருப்தியுடன் உள்ளது.
ததஜ: இடஒதுக்கீட்டை இந்த தேர்தலின் முக்கிய கோரிக்கையாக முன்னிருத்தி சிறை நிரப்பு போராட்டம் நடத்தியது, இதை வைத்து, அதிமுக அரசிடம் மாநிலத்தில் 7 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், ஆட்சியில் உள்ள இவர்கள் தரவில்லை என்றால் இவர்களுக்கு எதிரான நிலைபாட்டை எடுப்போம் என்று எச்சரித்தார்கள். போராட்டம் முடிந்த பின்னர் 7 சதவீத கோரிக்கை என்பது காணாமல் போய், இட ஒதுக்கீட்டை அதிகரித்துத் தந்தால் அதிமுகவுக்கு ஓட்டு, இல்லையென்றால் அவர்களுக்கு எதிராக எங்கள் ஓட்டு என்ற பேச்சுக்களை ஆரம்பித்தார்கள்.
பின்னர் அவசர பொதுக்குழு, அதன் பின்னர் அவசர செயற்குழு கடந்த மார்ச் 2ம் தேதி சென்னையில் கூடி தேர்தல் நிலைபாடு என்ன என்பதை அறிவிப்போம் என்றார்கள். ஆனால் செயற்குழுவுக்கு பின்னர் கடந்த ஒருவாரமாக ததஜவிடமிருந்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. என்ன சூழலோ அவர்களுக்கு அல்லாஹ் மட்டுமே அறிவான்.
அந்த இயக்கத்திலிருப்பவர்களில் பலர் இனி வரும் காலங்களில் வெளியேறப் போகிறவர்கள், கடந்த ஒரு வாரமாக உண்மையில் நடந்தது இதுதான் என்பதை நிச்சயம் பொதுவில் விளக்குவார்கள் என்று எதிர் பார்க்கலாம். கடந்த 8ம் தேதி அதிமுகாவுக்கு ததஜ ஆதரவு காரணம், அம்மா ஆணையம் அமைத்து பரிந்துரை கேட்டுள்ளார்களாம். அதனால் எதிர்கால விளைவுகளை கருத்தில் கொண்டு அதிமுகவுக்கு ஆதரவு என்ற பேட்டியை கொடுத்து விட்டார்கள். அவர்கள் எடுத்து வைத்த ஜீவாதார கோரிக்கையான 7 சதவீத இட ஒதுக்கீடு கேரிக்கை என்ன ஆச்சு? தராவிட்டால் அவர்களுக்கு எதிரான நிலைபாடு என்ற வேகம் எங்கே போய்விட்டது? அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இந்த பாராளுமன்ற தேர்தலின் முக்கிய கேரிக்கையாக பேசப்பட்ட இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை ஒதுக்கீடு செய்து விட்டு, புலி வாலை பிடித்தவர்கள் போன்று அவரவர் இயக்கங்களை இருபெரும் அரசியல் கட்சிகளின் வெறுப்பிலிருந்து தங்கள் இயக்கங்களை பாதுக்காக்காத்துக் கொள்ள, அனைத்து முஸ்லீம் இயக்கங்கள் ஒட்டு மொத்த தமிழக முஸ்லீம்களின் ஜீவாதராமாக கையில் எடுத்து களம் கண்டவர்கள் இன்று அவர்களை நட்டாற்றில் விட்டு விட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
ஒரு சீட்டில் மயங்கி விட்ட கட்சி மமக..... ஒரு சீட்டுக்காக கலைஞரின் இதயக்கூட்டில் இருக்கும் கட்சி முஸ்லீம் லீக். இட ஒதுக்கீடு தொடர்பாக சிறுபான்மையினர் ஆணையத்து கடிதத்தில் மயங்கி ஆளும் வர்க்கத்துக்கு பனிந்துள்ள இயக்கம் ததஜ. அடுத்து என்ன கோரிக்கை வைக்கலாம் என்று அரியாமல், உதிரி இயக்கங்களும் போய் சந்திக்கிறார்கள் நாமும் போவோம் என்று அதிமுகவுடன் கண்ணை மூடிக் கொண்டு இன்னும் சரணடைந்த பிற முஸ்லீம் இயக்கங்கள் (இதஜ, இதேலீக், etc...).
அனைத்து முஸ்லிம் கட்சிகளும், இயக்கங்களும் தமிழக முஸ்லீம்களை கொத்து பரோட்டா போடுவது போல் தூள்தூளாக்கி சிதறடித்து ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். பாமர சமுதாயத்தை வஞ்சித்து விட்டார்கள். இயக்க மயக்கத்தை தூண்டும் அனைத்து இயக்கத் தலைவர்களின் வீரதீரப் பேச்சுக்கள் எல்லாம் வெறும் வெத்து நாடகமே.
திமுக அதிமுக இவர்களின் எவர் வந்தாலும் மோடிக்கு ஆதரவளிப்பார்கள் அல்லது எதிராக இருக்கமாட்டார்கள் என்பது அறிந்த ஒன்றே. முஸ்லீம்கள் போட்டியிடும் தொகுதிகளில் உள்ள நல்ல முஸ்லீமை அடையாளம் கண்டு அவர்களுக்கு மட்டுமே எங்கள் ஓட்டு என்று அறிவித்து விட்டு... பிற தொகுதிகளில் நான் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்ற NOTA buttonக்கே நம் வாக்கை அளித்து நம்முடைய வெறுப்புணர்வை பொறுப்புணர்வுடன் இந்த அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தலாமே. இதுதான் நியாயமான முறையாக இருக்கும். இந்த சிந்தனைகளின் நிலைபாடு சரியானதா ? அல்லது மாற்று கருத்துகள் இருப்பினும் தெரிவிக்கலாம்.
ஒட்டு மொத்த இயக்கங்களும் சினிமாக்கூத்தாடி அரசியல்வாதிகளின் அரசியல் சூழ்ச்சியில் விழுந்து அவர்கள் சார்ந்த தமிழக முஸ்லீம் சமுதாயத்தை அடகு வைத்து விட்டார்களே. உள்ளக் குமுறல் உண்மையில் சமுதாய அக்கறையுள்ள ஒவ்வொரு முஸ்லீம்களிடம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இனி எவரையும் நம்ப முடியாது என்ற எண்ணம் ஏற்படுவதையும் ஒதுக்க முடியவில்லை. இதுபோன்ற அரசியல் நிலைபாடு, அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல் நேரத்து சமரசம் என்பதும் தமிழகத்தின் தவ்ஹீத் எழுச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படவுள்ளதோ என்ற சந்தேகம் நம்மில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
அல்லாஹ் யார் யாரை எந்த நேரத்தில் உயர்த்துவான் அல்லது கேவலடுத்துவான் என்பது அவன் மட்டுமே அறிவான். இன்ஷா அல்லாஹ் யார் யார் எல்லாம் சமுதாய துரோகிகள் என்பது விரைவில் தமிழக முஸ்லீம்களுக்கு உணர்த்தப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
அல்லாஹ் மட்டுமே நம் சமுதாயத்தை பாதுகாக்க போதுமானவன்...
அதிரைநிருபர் பதிப்பகம்
Assalamu Alaikkum
ReplyDelete//தேசிய அளவில் நம்முடைய அடுத்த நிலைபாடு என்ன? யாரை ஆதரிப்பது? என்ற குழப்பதில் உள்ளது திமுக. தமிழகத்தில் அட்ரஸ் தேடி அலையும் காங்கிரஸ், தள்ளாடும் தேமுதிக, காவிகளின் கூடாரம் பாஜக, மனக்குழப்பத்தில் வைக்கோ, சாதிக் கூத்தில் பாமக. இவைகளுக்கு மத்தியில் தமிழக முஸ்லீம் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் அரசியல் ஆட்டங்கள்.//
//ஒட்டு மொத்த இயக்கங்களும் சினிமாக்கூத்தாடி அரசியல்வாதிகளின் அரசியல் சூழ்ச்சியில் விழுந்து அவர்கள் சார்ந்த தமிழக முஸ்லீம் சமுதாயத்தை அடகு வைத்து விட்டார்களே. உள்ளக் குமுறல் உண்மையில் சமுதாய அக்கறையுள்ள ஒவ்வொரு முஸ்லீம்களிடம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இனி எவரையும் நம்ப முடியாது என்ற எண்ணம் ஏற்படுவதையும் ஒதுக்க முடியவில்லை. இதுபோன்ற அரசியல் நிலைபாடு, அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல் நேரத்து சமரசம் என்பதும் தமிழகத்தின் தவ்ஹீத் எழுச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படவுள்ளதோ என்ற சந்தேகம் நம்மில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.//
Are the above insights not reflecting the following quote from a scholar.?
"Politics is the last resort for the scoundrels"-George Bernard Shaw.
May Allah save us from evil powers.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai.
Assalamu Alaikkum
ReplyDelete//ஒட்டு மொத்த இயக்கங்களும் சினிமாக்கூத்தாடி அரசியல்வாதிகளின் அரசியல் சூழ்ச்சியில் விழுந்து அவர்கள் சார்ந்த தமிழக முஸ்லீம் சமுதாயத்தை அடகு வைத்து விட்டார்களே. //
If the cinema is giving advantage of familiarity of face (not the public service motive) to jump into politics then we cannot blame them. Its their own acceptable strategy to enter into politics.
In the same way, if the religious scholar(!!!????) are using the same strategy of familiarity of face(without competencies for doing public service), then there is no difference between cinema celebrity and the religious celebrity.
May Allah save us from evil powers.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai.
Assalamu Alaikkum
ReplyDelete//இயக்க மயக்கத்தை தூண்டும் அனைத்து இயக்கத் தலைவர்களின் வீரதீரப் பேச்சுக்கள் எல்லாம் வெறும் வெத்து நாடகமே. //
Actually an (political)actor or actress has to act as per his/her role. If not he/she might unfit to play the role in that drama(?).
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai.
Assalamu Alaikkum
ReplyDeleteI pray to God Almighty to give more knowledge, intelligent, courage and clarity to us so that we do not take decisions based on emotions and sentiments when we deal with politics and governments.
Thanks and best regards
B. Ahamed Ameen from Dubai.
பொறுத்திருப்போம்...!
ReplyDeleteகண்மூடிக் கொண்டு தான் சாந்த இயக்கத்திற்கு வரிந்து கட்டும் சகோதரர்களுக்கு நன்றாகவே தெரியும் அவர்களைப் பற்றியும் ஒரு கோப்பு அந்த இயக்கத்தில் இருக்கும் என்பது !
என்றைக்கு அவர்கள் வெளியேறுகிறார்களோ / வெளியேற்றப் படுகிறார்களோ அன்றைக்குத்தான் அன்ந்த கோப்பு (folder) திறக்கபப்டும் அபோது திட்டுங்கள் திறக்கப்படும் என்ற பாலிசி அரங்கேற்றப்படும் !
தன்னிலை விளக்கங்கள் தன்னிலை மறந்து இனி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் !
அன்று சிந்திக்கிக்க தூண்டிய எழுச்சியாளர்கள் இன்று சீரழி அரசியல் தூண்டிலில் சிக்கிக் கொண்டு தடுமாறுகிறார்கள் !
அன்று அரசியல் (முஸ்லீம்களுக்கு) வேண்டாம்... இன்று அன்றே அரசியலில் சென்றவர்கள் (முஸ்லீம்கள்) வேண்டாம் !
பாவம் பக்தர்கள், கண்ணை மூடிக் கொண்டு தங்களது பந்த்தாட்டத்தை தொடர்கிறார்கள்...
என்னைப்பொருத்தவரை மமக, முஸ்லிம் லீக் எல்லாம் அரசியலில் குதித்து கரையேரமுடியாமல் தத்தளிக்கின்றார்கள்..அது ஊர் அறிந்த விஷயம்..
ReplyDeleteஒரு அரசியல் விமர்சகக்கூட்டம் "நாம் வாக்களிக்காவிட்டால்,ஆதரவு கொடுக்காவிட்டால் நம் சமுதாயத்தவர்கள் அனைவரையும் கைது பண்ணிவிடுவார்களே" என்பதுபோல் பயந்து அடக்கு முறைக்கு பெயர்போன கட்சிக்கு ஆதரவு கொடுத்திருக்கே அதைவைத்து சிலகேள்விகள்..
1)கடிதம் பற்றி அவ்வளவு விளக்கம் கொடுக்கின்றாரே? சச்சார் கமிசன் ஆய்வு அறிக்கை இப்போ எங்கு தூங்கிக்கொண்டிருக்கு என்று தெரியாதா?அதே நிலை இதற்கு வராது என்று என்ன நிச்சயம்? (http://en.wikipedia.org/wiki/Sachar_Committee_Report)
2)TNTJ விற்கு சட்ட ஆலோசகர்கள் பலகாலமாக இருந்து வந்திருப்பார்கள். இலட்ச மக்களின் நேரத்தையும், பணத்தையும் திரட்டி ஆர்ப்பாட்டம்பன்னுவதற்கு முன் சட்ட ஆலோசகர் எங்கு சென்றார்?
3)தேர்தல் தேதிக்கு பிறகு ஆணை பிறப்பித்தால் கூட நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்ற நிலைப்பாடு மாறியதற்கு ஒரு மரியாதை நிமித்தமாக மன்னிப்புகூட கேட்கவில்லை..
4)TNTJ ஆலோசனை கூட்டத்தை கூட்டி கேட்டவர்கள் அதை அனைத்து இயக்கத்தவர்களும் Jan 28 கலந்துக்கொண்டபோது பொதுவான இசுலாமியர்களிடம் விருப்பத்தை கேட்டிருக்கலாமே? இட ஒதுக்கீடு TNTJ குடும்பத்தாருக்கு மட்டும் இல்லையே?அதை கூறித்தானே கூட்டம் கூட்டினார்கள்..
5)பழைய வீடியோவில் தெளிவாக சொல்லி இருப்பார்(http://www.youtube.com/watch?v=QWCEmxl3BOs&feature=youtu.be) "மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும்பட்சத்தில் அடுத்த தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீடு குடுப்போம் என்று இடம்பெற்றாலும் ஆதரிக்கமாட்டோம் என்று.. தற்போதைய தேர்தல் அறிக்கையில் அவர்கள் குருப்பிடக்கூட இல்லை.. குடுக்கக்கூடாது என்ற எண்ணம் இருக்கப்போய்தானே "தனிப்பட்ட கடிதம் அனுப்பி இருக்கின்றார்கள்.?அதுவும் ஆதரவு கொடுத்தபின்புதான் என்று நினைகின்றேன்..
சஹாபாக்களுக்குள் சில கருத்துவேறுபாடு இருந்தாலும் போர் என்று வந்துவிட்டால் எதிரியை வீழ்துவதில்தான் குறியாய் இருப்பார்கள்.. நம் எதிரி தற்போது யார் என்று தெரிந்தும் "எதிரிக்கு நெருக்கமானவரை ஆதரிப்பது எவ்வகையில் இசுலாம்?
ஆட்சியாளர்களுக்கு எல்லாம் ஆட்சியாலனான அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து அதிமுக விற்கு ஆதரவு அளிக்காமல் இருந்திருக்கலாம்.. இட ஒதுக்கீடிற்காக நாம் நரபளியிடம் சிக்குவதைவிட்டு பாதுகாத்துக்கொள்ள..
எந்த தமிழக இயக்கமும் இசுலாமியர்களுக்கு அல்ல என்பது இயக்கங்களுக்கும் தெரியும், கட்சிகளுக்கும் தெரியும்.. எங்கள் கவுரவத்தை அடகுவைக்க உங்களுக்கு ஒருபோதும் உரிமை கொடுக்கமாட்டோம், எங்கள் உரிமை இன்றி....
Although, The reason y many neutral ppl too going against TNTJ is "IF any other did this mistake, they will go vigorously against them and drag them to the streets and combine,edit videos from 1990's view to 2014's view and share,critisize on every corner of the world..."..tats y many ppl r taken tis as opportunity and going against thm at tis time.. Atleast nw they should realize.
Also, they shd accept if they committed anything wrong..But, no need to share 10's of 100's of self justification to hide the mistake.. v knw mistakes are human nature.. 1st of all these groups have to improve their acceptance level.. Tis is also a Sunnah..
//7% சதவீத இடஒதிக்கீடு தரவில்லை என்றால்.......// 'அரசியல்வாதி எதைசொல்கிறானோ அதற்க்கு எதிரான நிலைபாட்டையே எடுப்பான்' என்பது அரசியல் சூத்திரம்.'சிறைநிறப்பும் போராட்டம்செய்தும் இடஒதிக்கீடு இல்லையே!'என்று உண்மை தொண்டன் களக்கமுறலாம்.அதுவேறு வகையில் நிறப்பபட்டிருக்கலாம்.பாவம்அது அப்பாவி தொண்டனுக்கு தெரியாது.
ReplyDeletePolitics is the last resort for the scoundrels/-. by.George Bernard Shaw. மருமகன் அஹமது அமீன் சொன்னது.'' பெர்னாட்ஷா' என்பவர் யாருங்கோ?'' இது ஒரு அப்பாவிதொண்டனின்கேள்வி.'' நான் ஒருதடவை சொன்னால் அது அம்பது தடவை சொன்னது மாதிரி'' என்று சொல்லிப்பாருங்கள்''இல்லை! இல்லை! அம்பதுதடவைஅல்ல நூறு தடவை சொன்ன மாதிரி''என்றுரஜனிகாந்த் சொன்னார்'' என 'நேற்று பால்மறந்த' பச்சைப்பிள்ளை கூடசொல்லும் நாடுநம் நாடு. இங்கே பெர்னாட்சா விலைபோகமாட்டாருங்கோ!
ReplyDeleteதி.மு.க.வுக்கு போட்டாலும் சரி அல்லது அ.தி.மு.க.வுக்கு போட்டாலும் சரி இருவருமே மோடிக்கு உதவக்கூடியவர்களே! இன்றைய சூழ்நிலையில் மோடியை துணிவுடன் பகிரங்கமாக எதிர்க்கும் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பதே மற்ற கட்சிக்கு வாக்களிப்பதைவிட நமக்கு உகந்ததாகும்.
ReplyDeleteமமக ஓர் அரசியல் கட்சி. ததஜ ஓர் ஆன்மீக அமைப்பு. தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் வாய்ப்பை பொறுத்து கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கலாம். ஆனால்!? அரசியலில் தொடர்பில்லாத, தேர்தலில் போட்டியிடாத ஆன்மீக அமைப்பான ததஜ அலறியடித்துக் கொண்டு அம்மாவுக்கு ஆதரவு என்று ஏன் சரணடைய வேண்டும்? காரணம்-காசேதான் கடவுளடா! அது அண்ணனுக்கும் தெரியுமடா!!
ReplyDeleteஇங்கு தரப்பட்டுள்ள இணைப்பைப் படித்துப் பார்க்கும்படி அனைத்து சகோதரர்களையும் கோருகிறேன். இதை எழுதியதற்காக - அவதூறுகள்- மிரட்டல்கள்- கண்ணியக்குரைவான வார்த்தைகள் வீசப்பட்டன.
ReplyDeleteஅந்த ப் பதிவில் எழுப்பப் பட்டிருந்த சந்தேகங்கள் இன்று உண்மையாகிவிட்டனவா இல்லையா என்று சொல்லுங்கள்.
http://adirainirubar.blogspot.in/2014/02/27.html
ஏதாவது கேட்டால் மனித நேய மக்கள் கட்சியை ஏன் கேட்கவில்லை என்று பதில் கேள்வி எழுப்புகின்றனர். மனித நேய மக்கள் கட்சியையும் அதிமுகவுடன் சென்றபோது கண்டித்து இருக்கிறோம்.
நமது நோக்கம் யாரையும் காயப்படுத்துவது அல்ல. நாம் இந்த ஒற்றுமையற்ற சமுதாயத்தை உருவாக்கியவர்களுடன் அதிகம் விவாதம் செய்கிறோம். அவ்வளவே. யாரும் யாருக்கும் எதிர்களல்ல. அப்படி எண்ண வேண்டியதில்லை.
மாற்றுக் கருத்துக்களே ஜனநாயகத்தை வளர்க்கும். அதே நேரம் தவறை தவறு என்று ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவமும் பண்பாடும் வளர வேண்டும். திருத்திக் கொளவும் வேண்டும்.
நமக்குப் பிடிக்காததை ஒருவன் சொல்கிறான் என்றால் உடனே அவனது தனிப்பட்ட வாழ்வின் நிகழ்வுகளை பட்டியல் போட்டு காயம் படுத்துவது , வன்முறைகளான வார்த்தைகளால் மனப புண் ஏற்படுத்துவது மார்க்கம் கற்றுத்தந்த வழியா?
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று பட்டி தொட்டிகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று பணியாற்றிய ஒரு பகுதி சகோதரர்கள் இன்று தங்களின் பெயருக்குப் பின்னால் - இதுவரை ஆற்றிவந்த அரும்பணிகளுக்கு எதிரான ஒரு பெயர் சூட்டபப்ட்டு அழைக்கப் படுவது ஏன் - எதனால் என்பதை தயவு செய்து சிந்திக்க வேண்டும்.
சமுதாயத்தின் தலை மீது மோடி என்கிற கத்தி தொங்கிக் கொண்டு இருக்கிறது. ஆர் எஸ் எஸ் என்கிற இயக்கத்தின் போர்வாளாக அது புறப்பட்டு இருக்கிறது. முஸ்லிம்களின் உரிமைகளின் மீது கை வைப்பதற்கு ஒரு அதிகாரத்தை பல வேஷங்கள் கட்டி அது பெற்றுக் கொள்ளப் பார்க்கிறது. முஸ்லிம்களின் வாக்குரிமையைக் கூடப் பறித்து அவர்களை இரண்டாந்தர மக்களாக ஆக்க சதி நடக்கிறது. இதை உணராமல் தனிப்பட்ட காரணங்களுக்காக ஒவ்வொரு இயக்கமும் ஒருவரை எதிர்த்து ஒருவர் கச்சை கட்டி பெரிய பண்ணைக் கட்சிகளின் பொம்மளாட்டத்துக்கு கைப்பாவை ஆகின்றன.
மோடி ஆளவந்தால் அடுத்து ஒரு தேர்தல் நடக்குமா? என்கிற நிலையில் இப்படி ஆளுக்கு ஆள் வித்தியாசமான வேஷங்கட்டி விளையாடுவது எதிர்கால சமுதாயத்தின் வாழ்வுக்கு இடப்பட்டு இருக்கும் எச்சரிக்கை!!!!!!!!!!!
இதை அனைவரும் சகோதரத்துவத்துடன் உணரவேண்டும். நம்மை அல்லாஹ் காப்பானாக!
This comment has been removed by the author.
ReplyDeleteபொதுவாக எஸ் டி பி ஐ கட்சிக்கு ஒரு பெயர் உண்டு. தனித்துப் போட்டி இட்டு முஸ்லிம்களுடைய வாக்குகளைப் பிரித்துவிடுவதன் மூலமாக பெரிய கட்சிகளின் முஸ்லிம் வேட்பாளர்கள் கூட தோல்வி அடைந்துவிடக் காரணமாவார்கள் என்று ஒரு பெயர் உண்டு.
ReplyDeleteஆனால் இம்முறை
முஸ்லிம் இயக்கங்களுக்கு ஒதுக்கபப்ட்டு இருக்கும் வேலூர், மற்றும்
மயிலாடுதுறையில் அவர்கள் போட்டி இடவில்லை. ஆகவே அவர்களின் வாக்குகள் அந்தத் தொகுதிகளில் நிற்கும் முஸ்லிம் லீக் மற்றும் மமக கட்சிகளின் வேட்பாளர்களுக்கு விழும் . இன்ஷா அல்லாஹ்.
அதே போல் எஸ் டி பி ஐ கட்சி அறிவித்துள்ள வடசென்னை, திருநெல்வேலி, இராமநாதபுரம் தொகுதிகளில் கட்சி வித்தியாசம்- கூட்டணி தர்மம் பார்க்காமல் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
அமையப போகும் நெருக்கடியான பாராளுமன்றத்தில் நிறைய முஸ்லிம் உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும். இதற்காக இறைவனிடம் நாம் அனைவரும் து ஆச செய்ய வேண்டும். . இயக்க அரசியலை விட்டு நம்மை விலகி இருக்க அல்லாஹ் வழி காட்ட வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
ReplyDeleteகாக்காமார்களே தம்பிமார்களே,
இந்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமாவது நமக்குள் அடித்துக் கொள்ளாமல் இருந்தால் என்ன என்பதே என் போன்றோரின் ஆதங்கம். நடக்க இருப்பது மார்க்க விவாதமோ; யார் சரி யார் தப்பு என்னும் ஆராய்ச்சியோ அல்ல.
நம்மை எல்லாவிதத்திலும் ஒடுக்கப் பார்க்கும் அதிகார வர்க்கத்தைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல். யார் வந்தாலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ நசுக்கப்பபடப் போவது நாம்தான். இதில், நமக்குக் குறைவாகத் தீங்கிழைக்கப்போகிறவன் யார் என்பதை மட்டுமே சீர் தூக்கிப் பார்க்க முடியும். அவ்வகையில் கண்டிப்பாக அரக்கன் மோடி நேரடியாகவே நம்மை அழிக்க சபதம் பூண்டவன். எனவே, மாற்றுக் கட்சியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. அப்படி தேர்ந்தெடுக்கும் கட்சியின் தலைமை நம் சமுதாயத்திற்கு எதிரான தீர்மாணங்கள் நிறைவேற்ற முனையும்போது எதிர் குரல் கொடுக்க மன்றத்தில் நம்மவர் வேண்டாமா? இதற்காகவாவது, இப்போதைக்கு சண்டை போடாமல் இருந்து ‘விஸ்வரூப’ எதிரலையைப்போல் எழுச்சி பெறுங்களேன்.
எதிர் கொள்கை கொண்ட அரசியல் வாதிகள் கூட கூட்டணி அமைத்து வெற்றி ஒன்றையே நோக்கமாக்கி மேடையில் கைகளை ஒன்றாக உயர்த்தும்போது; ஓரிறைக் கொள்கைவாதிகளாகிய நாம் ஏன் தேர்தலுக்கு மட்டுமாவது ஒன்று கூடக் கூடாது?
தேர்தல் முடிந்த கையோடு “பொது மேடை” “விவாதம்” “ஆதாரம்” “ஸனது” “தாயி” “போன்ற மயக்கும் சொற்களைக் கொண்டு இயக்கம் வளர்த்து எஞ்ஜாய்ப் பண்ணுவோமே?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
ReplyDeleteகாக்காமார்களே தம்பிமார்களே,
இந்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமாவது நமக்குள் அடித்துக் கொள்ளாமல் இருந்தால் என்ன என்பதே என் போன்றோரின் ஆதங்கம். நடக்க இருப்பது மார்க்க விவாதமோ; யார் சரி யார் தப்பு என்னும் ஆராய்ச்சியோ அல்ல.
நம்மை எல்லாவிதத்திலும் ஒடுக்கப் பார்க்கும் அதிகார வர்க்கத்தைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல். யார் வந்தாலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ நசுக்கப்பபடப் போவது நாம்தான். இதில், நமக்குக் குறைவாகத் தீங்கிழைக்கப்போகிறவன் யார் என்பதை மட்டுமே சீர் தூக்கிப் பார்க்க முடியும். அவ்வகையில் கண்டிப்பாக அரக்கன் மோடி நேரடியாகவே நம்மை அழிக்க சபதம் பூண்டவன். எனவே, மாற்றுக் கட்சியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. அப்படி தேர்ந்தெடுக்கும் கட்சியின் தலைமை நம் சமுதாயத்திற்கு எதிரான தீர்மாணங்கள் நிறைவேற்ற முனையும்போது எதிர் குரல் கொடுக்க மன்றத்தில் நம்மவர் வேண்டாமா? இதற்காகவாவது, இப்போதைக்கு சண்டை போடாமல் இருந்து ‘விஸ்வரூப’ எதிரலையைப்போல் எழுச்சி பெறுங்களேன்.
எதிர் கொள்கை கொண்ட அரசியல் வாதிகள் கூட கூட்டணி அமைத்து வெற்றி ஒன்றையே நோக்கமாக்கி மேடையில் கைகளை ஒன்றாக உயர்த்தும்போது; ஓரிறைக் கொள்கைவாதிகளாகிய நாம் ஏன் தேர்தலுக்கு மட்டுமாவது ஒன்று கூடக் கூடாது?
தேர்தல் முடிந்த கையோடு “பொது மேடை” “விவாதம்” “ஆதாரம்” “ஸனது” “தாயி” “போன்ற மயக்கும் சொற்களைக் கொண்டு இயக்கம் வளர்த்து எஞ்ஜாய்ப் பண்ணுவோமே?
====
தம்பி வா! தலைமை தாங்க வா! உன் ஆணைக்குக் கட்டுப் பட்டு நடக்கிறோம் என்று நெடுஞ்செழியன் திமுக பொதுச்செயலாளராக ஆனபோது அண்ணா சொன்னாராம்.
அதையே இப்போது நான் சொல்ல விரும்புகிறேன் தம்பி சபீர்- உங்கள் கருத்துக்கு ஆதரவாக.
சகோதர வலைத்தளத்தின் களத்தில் போராடும் சகோதரர்களின் விழுப்புண்கள் சீக்கிரத்தில் குணமடைய வேண்டுமென்பதே எம்முடைய அவா !
ReplyDeleteஎனது அருமை சமுதாயச் சொந்தங்களே!
ReplyDelete//நம்மை எல்லாவிதத்திலும் ஒடுக்கப் பார்க்கும் அதிகார வர்க்கத்தைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல். யார் வந்தாலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ நசுக்கப்பபடப் போவது நாம்தான். இதில், நமக்குக் குறைவாகத் தீங்கிழைக்கப்போகிறவன் யார் என்பதை மட்டுமே சீர் தூக்கிப் பார்க்க முடியும். அவ்வகையில் கண்டிப்பாக அரக்கன் மோடி நேரடியாகவே நம்மை அழிக்க சபதம் பூண்டவன். எனவே, மாற்றுக் கட்சியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. அப்படி தேர்ந்தெடுக்கும் கட்சியின் தலைமை நம் சமுதாயத்திற்கு எதிரான தீர்மாணங்கள் நிறைவேற்ற முனையும்போது எதிர் குரல் கொடுக்க மன்றத்தில் நம்மவர் வேண்டாமா? இதற்காகவாவது, இப்போதைக்கு சண்டை போடாமல் இருந்து ‘விஸ்வரூப’ எதிரலையைப்போல் எழுச்சி பெறுங்களேன்.//
நடு நிலையோடு பார்க்கும் நாம் அனைவருக்கும் தற்போது நடக்கும் விரும்பத்தகாத நடவடிக்கைகள் நம் மனதில் ஒரு ஆழம் தெரியாத ஒரு கவலையை ஏற்படுத்தி வருகின்றது.
நம் அனைவருக்குமான பொது எதிரியை எதிர்ப்பதில் விவேகத்துடன் செயல்படவேண்டிய நாம் நமக்குள்ளே உள்ள பங்காளி சண்டையை பெரிதாக்கி நம்மை நாமே எதிரியைவிட மோசமாக்கிப் பார்க்கிறோம். இது நமக்கு நாமே குழிபறிக்கும் செயல் மட்டுமல்ல. பொது எதிரிக்கு அவர்களின் காரியத்தை எளிதாக்கிக் கொடுக்கின்றோம் என்பதனையும் மறந்துவிட்டோம் என்பதும் வேதனையே.
///அல்லாஹ் யார் யாரை எந்த நேரத்தில் உயர்த்துவான் அல்லது கேவலடுத்துவான் என்பது அவன் மட்டுமே அறிவான். இன்ஷா அல்லாஹ் யார் யார் எல்லாம் சமுதாய துரோகிகள் என்பது விரைவில் தமிழக முஸ்லீம்களுக்கு உணர்த்தப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை. ///
அல்லாஹ் மட்டுமே நம் சமுதாயத்தை பாதுகாக்க போதுமானவன்...
மூனு சமுதாய இயக்க்கங்களும் சேர்ந்து மூவர் உட்பட அனைவரையும் அனாதைகளாக்கி சம்பந்தமில்லா எவனையோ வெற்றி பெற வழிவகுத்துள்ளனர்.
ReplyDeleteஅடப்பாவிகளா ஜெயலலிதாவுக்கும் கருனாநீதிக்கும் சப்போர்ட் செய்கின்றேன் என்ற பெயரில் ஜனநாயகம் என்ற ஒரு வழிகேடு கொள்கைக்கு வழிப்படுகிறீர்களே!
ReplyDeleteஇஸ்லாம் என்ற உயர்ந்த கொள்கை நம்மிடம் இருப்பதையே மறந்துவிட்டீர்களா?.
இங்கு இட ஒதுக்கீடு கிடைத்துவிட்டால் பங்களாதேஷ் முஸ்லிகள் முன்னேறிவிடுவார்களா?
எகிப்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தும் ஏன் முஸ்லிம்கள் அனுதினமும் யூத ஆதரவு நாய்களால் கொல்லப்படுகிறார்களே ஏன்?
ராணுவ வலிமை மிக்க நாடாக இருந்தும் அமெரிக்க நேட்டோ நாடுகளிடம் அடிவாங்கி இன்று வரை வெடித்துகொண்டிருக்கிறது ஈராக் ஏன்?
இன்னும் இன்னும் சொல்லனா துயரங்களை பல வடிவங்களில் முஸ்லிம்கள் இந்த உலகம் முழுவதும் நித்தம் அனுபவித்துகொண்டிருக்கிரார்களே ஏன்?
இவர்களெல்லாம் இஸ்லாம் என்ற உன்னத கொள்கையை பள்ளிவாசலோடு நிறுத்திவிட்டு வாழிவியல் அரசியல் விவகாரங்களில் ஜனநாயகம் , கம்யூனிஷம், பாத்திசம் , இப்படி வழிக்கேடு கொள்கைக்கு வழிப்பட்டதன் விளைவுதான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?. இல்லை கேப்பிடளிசத்தின் லாப நட்ட கணக்கின் வழி இஸ்லாத்தை புறந்தள்ளிவிட்டீர்களா?
திமுக அதிமுக இரண்டையும் சம அளவில் தான் பார்க்கவேண்டும்.எனவே மமக முஸ்லிம் லீக் எஸ் டீ பி ஐ திருமாவலவன் காங்கிரஸ் இவைகலுக்கு மட்டும் ஒட்டு போட்டு,மோடி வராமல் நாம் உஷாராக இருக்க வேன்டியதுதான்.
ReplyDeleteஉணர்ச்சி வயப்பட்டு இந்த நேரத்தில் இயக்க மாயை மேலோங்கி,னமக்கிடையெ பிரிவினை ஏர்படாமல் அல்லாஹ் காப்பானாக.
ReplyDeleteதிமுக கூட்டனிக்கு மமகவினரும்,அதிமுகவுக்கு த த ஜ சகோதரர்கலும் வாக்களிக்கட்டும்.அது அவர்கள் விருப்பம்.எந்த இயக்கத்திலும் இல்லாத நம் முஸ்லிம் மக்கள் மமக முஸ்லிம் லீக் எஸ் டீ பி ஐ திருமாவலவன் காங்கிரஸ் இவைகலுக்கு மட்டும் ஒட்டு போட்டு,மோடி வராமல் நாம் உஷாராக இருக்க வேன்டியதுதான்.
ReplyDelete//2)TNTJ விற்கு சட்ட ஆலோசகர்கள் பலகாலமாக இருந்து வந்திருப்பார்கள். இலட்ச மக்களின் நேரத்தையும், பணத்தையும் திரட்டி ஆர்ப்பாட்டம்பன்னுவதற்கு முன் சட்ட ஆலோசகர் எங்கு சென்றார்? //
இந்த சட்ட ஆலோசகர் எல்லாம் மற்றவர்களை எப்படி வயசு வித்தியாசம் இல்லாமல் மட்டரகமா திட்டலாம் என்ற ஆலோசனையில் இருந்து இருப்பார்கள் (அதானே அவங்க சிறப்பசெய்கின்ற கேவலமான வேலை)
sabeer.abushahruk சொன்னது…
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
//காக்காமார்களே தம்பிமார்களே,
இந்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமாவது நமக்குள் அடித்துக் கொள்ளாமல் இருந்தால் என்ன என்பதே என் போன்றோரின் ஆதங்கம். நடக்க இருப்பது மார்க்க விவாதமோ; யார் சரி யார் தப்பு என்னும் ஆராய்ச்சியோ அல்ல.//
வலைக்கும் முஸ்ஸலாம்
இப்படி எல்லாம் நல்லது சொல்லாதிய அப்படி சொன்னா அவங்க உங்களை கள்ள ஹாஜின்னு சொல்லுவாங்க அவங்க முக்காடு போட்டு ஒளிஞ்சிகிட்டு உங்க முக்காடு முகத்திரையும் கிழிந்தது என்று அழகிய முறையில் தௌகீது பணி செய்வாங்க!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ். அதிரை நிருபரின் இந்த ஆசிரியர் கருத்து படு பாமரத்தனமாக உள்ளது.
ReplyDelete'அரசியல் இஸ்லாம்' பேசி பேசி 'படு தோல்வி அடைந்து' முஸ்லீம்கள் மனதில் ஒரு வகை விரக்தி நிலையை தோற்றுவிக்க காரணமான ஜமாத்தே இஸ்லாமி, எஸ்டிபிஐ போன்ற இயக்கங்கள் எடுத்து வைக்கும் வாதம் போன்றுள்ளது.
மௌலான மௌதூதி வாழும் காலத்திலேயே அவரது அரசியல் இஸ்லாம் சோதனைகள் பாகிஸ்தானில் படு தோல்வி அடைந்தது தெரிந்தும் அதை இன்னும் தூக்கி பிடிப்போரை என்னவென்று சொல்ல.
பங்களாதேஷில் இந்த அரசியல் இஸ்லாத்தோடு, உருது வெறி இஸ்லாத்தையும் சேர்த்து பாகிஸ்தான் மற்றும் ஜமாத்தே இஸ்லாமி செய்த முட்டாள் தனங்கள், இந்தியாவிற்கே ஒரு பாடமாக அமைந்து 'ஹிந்தி மொழி' திணிப்பு கை விடப்பட்டதா இல்லையா?
பங்களா தேஷில் இன்று 'உருது, உருது' என்று பேசி அலைந்தவர்கள் இன்றைய நிலை என்ன?
ஜமாஅத்தே இஸ்லாமியின் 'அரசியல் இஸ்லாம்', 'உருது இஸ்லாம்', 'பெட்ரோ டாலர் இஸ்லாம்' மற்றும் 'ஷியா ஒற்றுமை இஸ்லாம்' ஆகியவற்றின் படு தோல்விக்கு 'பாகிஸ்தானும்', 'பங்களாதேஷும்' மிக சிறந்த உதாரணங்கள்.
எனவே, முஸ்லீம்கள் சிறுபான்மையாக வாழும் இந்தியா போன்ற நாடுகளில், குறிப்பாக 'தமிழகம்' போன்ற மாநிலங்களில் 'ஒற்றுமை' என்று பேசி பேசி, 'முஸ்லீம் லீகர்கள்' திமுகவிற்கு தமிழக முஸ்லீம்களை அரை நூற்றாண்டாக அடகு வைத்ததை போன்று வைக்க சொல்கிறாரா 'அதிரை ஆசிரியர்'?
அரசியல் சாதூரியம் இல்லாத காரணத்தால் தான் 'எகிப்தில்' 'இஹ்வான்கள்' நாடாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்த 'தோண்டியை' கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்துள்ளனர் என்பது யாவரும் அறிந்தது.
நபிகள் நாயகம் அவர்களே மூன்று சாம்ராஜ்யங்களின் மன்னர்களை கண்ணியமாக இஸ்லாத்திற்கு அழைத்தார்கள் என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இறைவனின் தூதரே வழிகாட்டியது போன்று செயல்படாது இஸ்லாத்தின் 'ஓரிறை கொள்கையை முன்னிறுத்தாமல்', கிலாபத்தை நிலை நிறுத்த போகிறோம் என்ற பெயரில் 'அரசியல் இஸ்லாம்' பேசி அதனால் வீழும் 'ஆணவக்கார, சூழ்ச்சி வெல்லும்' என நினைக்கும் முட்டாள்களை என்னவென்று சொல்வது.
இப்போதுள்ள நிலைமையில் பரந்துபட்ட அளவில் முஸ்லீம் இயக்கங்கள் 'கூட்டணி வைப்பது' அரசியல் சாதுரியம் நிறைந்தது.
இஸ்லாத்தின் நோக்கம் ஒற்றுமை என்ற பெயரில் 'அரசியல் இஸ்லாம்' செய்வதல்ல. இறைவன் ஒருவன் என்ற உண்மையை நம்பி, செயல்பட்டு மக்களுக்கு எடுத்துரைப்பது மட்டுமே.
இறைவன் நாடினால் முஸ்லீம்களுக்கு ஆட்சி பொறுப்பை 'கொடுப்பான்' இல்லை என்றால் அது பற்றி 'முஸ்லீம்களுக்கு' காவலை இல்லை, உள்ள ஆட்சியாளர்கள் எவரோ அவரிடம் 'சத்தியத்தை' துணிவாக அதே சமயம் 'கண்ணியமாக' எடுத்துரைக்க வேண்டும்.
அதை விட்டு விட்டு முஸ்லீம்கள் 'பிரிந்தார்கள்', 'அநாதை ஆனார்கள்' என்று பிதற்றுவது 'இஸ்லாத்திற்கு எதிரான' அரசியல் இஸ்லாம் பேசுவோரின் 'தோல்வி மனப்பான்மையாகும்'.
வஅலைக்குமுஸ்ஸலாம் சகோதரர் கான்:
ReplyDeleteதங்களின் திறந்த மனதுடன் பகிர்ந்த கருத்துக்கு மிக்க நன்றி.
நீங்கள் குறிப்பிடும் மவ்தூதி போன்றவர்களின் அரசியல் இஸ்லாம் பற்றிய உங்கள் கருத்துடன் நாங்கள் உடண்பட்டவர்கள் என்பதை இங்கு முதலில் பதிவு செய்கிறோம். ஓரிறை கொள்கையை ஒதுக்கிவைத்துவிட்டு, அல்லாஹ் தன்னுடைய ஆட்சியை நிலைநாட்டச் சொல்லி மனிதனை இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கவில்லை என்பதை நாம் நன்கு அறிந்து வைத்துள்ளோம்.
எங்களுடைய ஆதங்கம் அனைத்து முஸ்லீம் கட்சிகளும் இயக்கங்களும் தேர்தல்களை வைத்துக் கொண்டு அவர்களின் கட்சிகளையும், இயக்கங்களையும் வளர்த்துக் கொள்ளவே முனைப்பு காட்டுகிறார்கள். இந்த முறையும் முஸ்லீம்களின் ஜீவாதாரக் கோரிக்கையான இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்னுறுத்தி ஒரு இயக்கம் போராட்டம் நடத்தியது. இட ஒதுக்கீடு தந்தால் ஓட்டு இல்லாவிட்டால் ஆளும் கட்சிக்கு வேட்டு என்று வீர வசனம் செய்தது. பின்னர் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு தமிழக அரசு இட ஒதுக்கீட்டை அதிகரித்து தர பரிந்துரை செய்ய வேண்டும் என்று எழுதிய கடித்தத்தை நம்பி அதிமுகவுக்கு ஆதரவு சென்று சமுதாய துரோகம் செய்துள்ளது.
வழக்கம் போல் முஸ்லீம் அரசியல் கட்சிகள் சீட்டுக்காக சிறுபான்மையினர் காவலர் (?) திமுகவிடம் அடைக்கலம் பெற்றுள்ளார்கள். இதனால் முஸ்லீம்களின் ஓட்டுக்கள் பிளவுபட்டு பாராளுமன்றத்திற்கு செல்லும் முஸ்லீம் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு வேட்டு வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் முஸ்லீம்களுக்கு குரல் கொடுக்க ஒரு முஸ்லீம் கூட இல்லாத நிலை ஏற்படுத்தப்படும் இந்த நிலையில் ஏராளமான தமிழ முஸ்லீம்கள் கடும் அதிர்ப்தியில் உள்ளதன் வெளிப்பாடே எம்முடைய கட்டுரையில் முஸ்லீம்கள் அனாதையாக்கப்பட்டுள்ளார்கள் என்பதை பதிவு செய்துள்ளோம்.
இந்த ஏடு-இட்டோர்-இயல் பாமரத்தனம் என்று சொல்லுவது எவ்வகையில் என்பதை படித்து ஆய்ந்தவர்களாகிய தாங்கள் விரிவாக விளக்கினால் புரிதலுக்கு நன்றாக இருக்கும்
ஜஸக்கல்லாஹ் ஹைரா..
அதிரைநிருபர் பதிப்பகம்
முதலில் 'பாமரத்தனம்' என்று உங்களை குற்றம் சாட்டிய எனது 'கடுஞ்சொற்' பயன்பாட்டிற்கு விளக்கம் அளித்து விடுகிறேன்.
ReplyDeleteமுஸ்லீம் ஒற்றுமை என்ற பெயரில் பிரிந்த 'பாகிஸ்தான்' ஒன்றாக இருக்க முடிந்ததா? பின்னர் இன்று வரை 'அமைதியான' ஒரு 'இஸ்லாமிய' நாட்டையோ அரசையோ அமைக்க முடிந்ததா? உலகில் ஏதாவதொரு நாட்டை 'இஸ்லாமிய நாடு' என்று கூற முடிகிறதா?
மேற்க்கண்ட கேள்விகளுக்கான விடை 'இல்லை' என்பதேயாகும்.
இதற்கு காரணம் என்னவென்றால், நாடுகளை ஆள 'அரசியல் ரீதியான ஒற்றுமை' தேவைபடுகிறது - மீண்டும் கூறுகிறேன் 'இஸ்லாமிய ஒற்றுமை அல்ல' - அரசியல் ஒற்றுமை. காரணம், ஆட்சியை பிடிக்கவும், பிடித்த ஆட்சியை தக்க வைக்கவும் பல விடயங்களில் 'கொள்கை ரீதியான' சமரசம் செய்யும் சாதுர்யம் தேவை படுகிறது.
உதாரணமாக, சவ்தி அரேபியா 'ஷியாக்களின் சமாதி வணக்கத்தை' ஒழித்து கட்டி ஓரளவிற்கு 'ஷரியா முறையிலான' ஆட்சியை நிலை நிறுத்த வேண்டுமானால் - மத நம்பிக்கையற்ற போலி கிருத்துவர்களின் வல்லரசு நாடான 'அமெரிக்காவின்' பின்புலம் தேவை படுகிறது.
அமெரிக்கர்களின் 'பெட்ரோ டாலர் சுழற்சியின்' மூலம் உலகை ஆள 'சௌதி அரேபியா' ஒரு 'இஸ்லாமிய கிலபத்தாக' இல்லாமல் ஒரு 'மன்னராட்சியாக' இருப்பதே வசதியாக உள்ளது.
இன்னும் நேரடியாக சொல்ல வேண்டுமென்றால் 'இந்தியாவின் ஆட்சியை இழந்து தவித்த' ஹுமாயூனுக்கு - 'ஷியாவாக' மாறினால்தான் 'ஆட்சி கிடைக்கும்' என்ற நிலையில் 'ஷியாவாக' மாறியதால் - இந்தியாவே 'சமாதி வணக்கம்' என்ற படுகுழியில் வீழ்ந்து இன்று எழ முடியாமல் தவிக்கிறது, என்பதை காண்கிறோம்.
ஆக 'அரசியல் அதிகாரத்தால்' ஹுமாயூன் 'சாதித்ததென்ன'? என்று பார்த்தால் ஒழுங்காக இருந்து இறைவன் ஒருவன் என்ற கொள்கையை பின்பற்றிய 'இந்திய முஸ்லீம்கள்' மத்தியில் 'சமாதி வணக்கத்தை கொண்டு வந்து கெடுத்ததுதான்' என்ற பதிலே மிஞ்சுகிறது.
எனவே இது போன்ற 'அரசியலுக்காக இஸ்லாம்' என்ற 'சுய நலத்துடன்' செயல்பட்டு அதற்காக 'முஸ்லீம்கள் ஒன்று பட வேண்டும்' என்று கூறுவோர் யாவரும் இவ்வாறு தான் தாங்களும் வழி தவறி மற்றவர்களையும் வழி தவற செய்து, முஸ்லீம்களின் பொருளாதாரம், சக்தி, முன்னேற்றம் யாவற்றையும் விரையமாக்குவதை வரலாறு முழுக்க பார்க்கலாம்.
மொத்தத்தில் 'சமரசம்' அல்லது 'கொள்கையை விட்டு கொடுப்பதுதான்' தான் 'அரசியல்' என்பதை 'பாமர முஸ்லீம்களை' தவிர, வரலாறு படித்த, சம கால விடயங்களில் விழிப்போடுள்ள எந்த முஸ்லீமுக்கும் தெரியும் - தெரியா வேண்டும்.
ஏனவே இன்று முஸ்லீம்களுக்கு முன்னால் உள்ள சவால்களுக்கும் அதற்க்கான தீர்வுகளையும் அலசுவோம்.
ReplyDeleteஇந்திய முஸ்லீம்களுக்கு முன் உள்ள அரசியல் கேள்வி கோத்ரா கலவர மோடியின் 'பாஜகா வா', ஓரினச்சேர்க்கை சோனியாவின் 'காங்கிரஸ் கட்சியா' அல்லது பலவீனமான 'மூன்றாவது அணியா' என்பதுதான்.
ஆகவே முஸ்லீம்களுக்கு முழு முதல் ஆபத்தான மோடியின் பாஜாகவை வரவிடாது செய்ய காங்கிரஸ் அல்லது மூன்றாவது அணியை ஆதரிப்பதுதான் 'முஸ்லீம்கள்' செய்ய கூடியது.
குறிப்பாக 'பாஜகவின்' மறைமுக ஆதரவாளரான 'ஆம் ஆத்மி கட்சிதான்' உண்மையில் முஸ்லீம்கள் ஓட்டை சிதறடிக்க கூடியது என்பதையும் நாம் நினைவில் கொள்வது அவசியம். எனவே, ஆம் ஆத்மி கட்சி மற்றும் இரட்டை வேட தாரி 'கேஜாரிவாளின்' கட்சிக்கு எதிராக 'முஸ்லீம்கள் ஒட்டு போடுவது அவசியம்.
தமிழகத்தை பொறுத்த வரை, காங்கிரஸ், திமுக, அதிமுக, மமக இவற்றில் வாய்ப்பு அதிகமுள்ள கட்சிக்கு தமிழக முஸ்லீம்கள் ஆதரவளித்து ஒட்டு போடுவதுதான் சரியானது.
அதைத்தான் தமிழக முஸ்லீம் அமைப்புக்கள் செய்து வருகின்றன எனும்போது அதில் தவறென்ன?
இதை விட்டு விட்டு ஒரே கட்சிக்கு 'ஒற்றுமை என்ற பெயரில்' ஷியா பரேல்வி தர்கா வணங்கிகள் மற்றும் உருது வாலாக்களின் கட்சியான முஸ்லிம் லீகர்கள் 'அடகு வைத்ததை' போன்று 'தமிழ் முஸ்லீம்களை' அடகு வைக்கபடுவது - பெரும்பான்மையாக உள்ள தமிழ் பேசும் முஸ்லீம்களை அரசியல் பிரதிநிதுவத்தில் இருந்து ஒதுக்கப்படவே வழி வகுக்கும்.
மற்றுமொரு முக்கியமான விடயம் என்னவென்றால் தமிழகத்தை பொருத்தவரை 'லெட்டர் பேடு கட்சியான' பாஜக வை விட ஆபத்தானது தேமுதிக.
முட்டாள்களின் கட்சியான 'தேமுதிக' வை மற்றும் அதன் தலைவன் 'முழுமூடன் விஜயகாந்தை' முஸ்லீம்கள் முழு மூச்சாக எதிர்ப்பது அவசியம் - என்பது எனது தனிப்பட்ட கருத்து.
காரணம் யார் வேண்டுமானாலும் 'அரசியல் செய்யலாம்' - ஆனால் 'விஜயகாந்து' போன்ற ஒரு முழு மூடநாள் நடத்தப்படும் அறிவே இல்லாத 'முட்டாள்கள்' மற்றும் 'மூடர்கள்' நிறைந்த 'தேமுதிக' தேர்ந்தெடுக்கப்படுவது தமிழகத்திற்கும் சரி இந்தியாவிற்கும் சரி பேரபாயத்திலும் பேரபாயமானது.
எனது நிலைப்பாட்டில் தவறேதும் இருந்தால் கூறுங்கள் - இன்ஷா அல்லாஹ் மேலும் விவாதிக்கலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteசகோதரர் கான்:
தங்களின் கருத்துக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன் !
// மௌலான மௌதூதி வாழும் காலத்திலேயே அவரது அரசியல் இஸ்லாம் சோதனைகள் பாகிஸ்தானில் படு தோல்வி அடைந்தது தெரிந்தும் அதை இன்னும் தூக்கி பிடிப்போரை என்னவென்று சொல்ல. // - Khan testant சொன்னது…
ReplyDelete1964 ஜனவரி மாதம் அன்றைய பாகிஸ்தானின் ராணுவ தளபதியும் பிரதமருமான ஜெனரல் அயூப்கான் மௌலானா மௌதுதி அவர்களை அவர்களது வீட்டில் சந்திக்கிறார்.
அயூப் கான் : "ஷேக்,நமது நாடும், நமது மக்களும் உங்களது மேதமையின் பால் மிகவும் தேவை உடையவர்களாக இருக்கின்றோம்! தீனில், அதன் ஆய்வில் இன்னும் நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். எனவே நீங்கள் அரசியல் பணியை விட்டு விட்டு இஸ்லாமிய பணிகளில் இறங்கினால் இந்த நாடும் உலக முஸ்லிம்களும் பயனடைவார்கள் அல்லவா?"
மௌலானா: "அயூப்கான், நீங்கள் உண்மையில் எந்த நோக்கத்துக்காக என்னை அரசியலை விட்டு ஒதுங்குமாறு சொல்கின்றீர்கள்?"
அயூப்கான்: "ஷேக், அரசியல் ஒரு சாக்கடை. அது உங்களைப் போன்ற நல்லவர்களுக்கு ஒத்து வராது."
மௌலானா: "அழுக்கு அழுக்காகவே இருக்க வேண்டுமா? அழுக்கை அப்படியே நாற்றமடிக்க விட வேண்டுமா? அல்லது தூய்மைப் படுத்த வேண்டுமா? நான் அதனைத் தூய்மைப்படுத்தும் நோக்கத்தில் அரசியலில் நுழைகிறேன்! இன்ஷா அல்லாஹ் தூய்மையாகும்!"
அயூப்கான்: "உங்களது பிள்ளைகள் பெயரில் தொழிற்சாலைகளை நிறுவுங்கள். அரசு அதற்கான அத்தனை உதவிகளையும் செய்யும்! உங்களுக்கு விருப்பமான நாட்டில் நமது நாட்டின் உயர் அதிகாரியாக உங்களுக்கு பதவி தருகிறோம் ....................!"
மௌலானா: "அயூப்கான், ஸலாம், நீங்கள் இன்னும் என்னைப் புரிந்து கொள்ளவும் இல்லை , என்னை இழிவு படுத்தியும் விட்டீர்கள்......... தயவுசெய்து இங்கிருந்து வெளியேறுங்கள்."
தலையைத் தொங்க விட்டவண்ணம் அந்தச் சிறுநரி சிங்கத்தின் குகையிலிருந்து வெளியேறியது.
மறுநாள் மௌலானா பாகிஸ்தானின் ராணுவ அரசால் கைது செய்யப் பட்டார்.
அதிரைக்காரன்
Excellent comment by Adiraikkaran.
ReplyDeleteஅன்புள்ள அதிரைக்காரன் அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.
ReplyDeleteஉங்களது விளக்கம் எனது கருத்தை தவறாக புரிந்ததால் விளைந்தது, என்பது தெரிகிறது.
முதலாவதாக நான் விமர்சித்து 'அரசியல் இஸ்லாம்' என்ற கொள்கையையும் அதை தூக்கி பிடிப்போரையுமே தவிர, முஸ்லீம்கள் 'அரசியலில்' பங்கு பெறுவது 'இஸ்லாத்திற்கு எதிரானது' என்று கூற வில்லை.
உங்களுக்கு இன்னும் எளிமையாக புரியும் படி கூறுவதானால் 'அரசியல் இஸ்லாம்' என்பது 'இஸ்லாத்தின்' முழு முதல் நோக்கமே 'அரசாட்சியை பிடித்து' அதன் பின்னர் 'இஸ்லாத்தை நிலைநாட்டுவதுதான்' என்று கூறுவதாகும்.
ஆனால் இதற்க்கு நேர் மாறாக 'இஸ்லாத்தின்' நோக்கம் என்னவென்றால் மக்களிடம் 'உண்மையை' உறுதியாக, பொறுமையாக எடுத்தது கூறிக்கொண்டே இருப்பதுதான்.
மௌலான மௌதூதி கூறியது போன்ற 'அரசியல் இஸ்லாம்' தெற்காசியாவில் முழுமையாக 'தோற்று போனது' அரசியல் ஆய்வாளர்கள் யாவரும் அறிந்த உண்மை.
தயவு செய்து 'அல்லாஹுவையும் ரசூலையும்' தவிர மற்றவர்கள் எவரது சொல்லாக இருந்தாலும் 'சாதாரன மனிதர்களான' அவர்களது கருத்து, சொல், செயலில் சிறிதும் பெரிதுமாக தவறுகளுக்கும் அதனால் விமர்சனத்துக்கும் வாய்ப்புண்டு என்ற உண்மையை உணர்ந்து 'அறிவை தேடுவதில் முயற்சியுடன் செயல்படுங்கள்'.
ஜமாத்தே இஸ்லாமியாகட்டும், தௌஹீத் ஜமாஅத், தப்லீகாகட்டும் அல்லது வேறு எந்த இஸ்லாமிய இயக்கமாகட்டும் அவையெல்லாம் வரும் போகும். ஆனால் 'இஸ்லாம்' மற்றும் அது கூறும் உண்மைகள் மட்டுமே நிலைக்கும், என்பதை நான் கூறவில்லை - 'மௌலான மௌதூதி தான்' கூறியுள்ளார், என்பதை நீங்கள் கணக்கில் எடுத்து கொண்டால் காழ்ப்பு உவப்பின்றி சிந்திக்கவும், இஸ்லாத்தில் மீது நன்நம்பிக்கையுடன் கூடிய உருத்திப்பட்டை வளர்த்து கொள்வதற்கும் எளிதானது என்பது எனது தாழ்மையான கருத்து.
'அல்லாஹ் மற்றும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டிய இஸ்லாம் எளிதானது, அதை நாம் எளிதாகவே வைத்திருப்பது நமக்கும், நமது சமுதயதிர்க்கும், உலகிற்கும், பிற்கால சந்ததிக்கும் நாம் செய்யக்கூடிய மிக பெரிய நன்மையாக இருக்கும்.