Sunday, March 16, 2014

என் இதயத்தில் இறைத்தூதர்..! - 3 - [பெண்ணே-தயக்கம் ஏனோ, சுணக்கம் வீணே!]

பிஸ்மில்லாஹ்...

பெண்ணே-தயக்கம் ஏனோ, சுணக்கம் வீணே!

ஐரோப்பாவின் 17ம் நூற்றாண்டு, அறியாமைக் காலத்து உச்சம், மடமையின் மிச்சம். பெண்களுக்கு "ஆன்மா" உண்டா? எனக் கேட்டு அவர்களை பாடாய் படுத்திய கால கட்டம்.பைபிள் கட்டுக் கதைகளை நம்பி, சிந்திக்காமல், சிந்திக்க இடம் கொடாமல், மூளையை, இதயத்தை பூட்டி வைத்த அந்த காலம், அதனால் வரலாற்றில் "இருண்ட கால ஐரோப்பா" எனும் பெயர் பெரும் அளவுக்கு  நிலை மனித தன்மையற்றதாக, படுமோசமாக இருந்தது.

அம்மண்ணில், இஸ்லாம் உள்ளே நுழைந்தது தான் தாமதம், அறிஞர் பெருமக்கள் பைபிளை விட்டுவிட்டு திருக்குர்ஆனை ஆராய ஆரம்பித்தார்கள். திருக்குர்ஆன் சிந்திக்க ஆர்வமூட்டுகிறது. எனவே, விஞ்ஞானிகள், சான்றோர்கள், பல்துறை வல்லுநர்கள் ஒன்று கூடி இனி குர்ஆன் கூற்றுக்கினங்க நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்று சிந்திக்க தலைப்பட்டார்கள். கோள்கள், மனித இயக்கம், பிரபஞ்ச தோற்றம் இன்னும் அனைத்து வகையான ஆராய்ச்சிகளையும் குர்ஆனைக் கொண்டே செய்ய வேண்டும். ஏனெனில் குரானில் எல்லாவற்றுக்கும் ஆதாரமும், அத்தாட்சியும் இருக்கிறது, ஆனால் பைபிளோ பொய் புனைக் கதைகள் பல சொல்கிறது, சிந்திக்கவும் தடை போடுகிறது.  எனவே "குர்ஆனைக் கையில் எடுப்போம் பைபிளை கைவிடுவோம் "என்று முடிவுக்கு வந்தனர்.

ஆம்! அன்று அவர்கள் குரானையும், நபிகள் நாயகத்தின் போதனைகளையும் வைத்து தொடங்கிய அந்த ஆராய்ச்சி இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, இன்னும் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அன்றிலிருந்து ஐரோப்பாவும், அமெரிக்க போன்ற நாடுகளும் பல துறைகளில், முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு, அவர்கள் செய்தது "குர்ஆனைக் கையில் எடுத்தது, பைபிளை கைவிட்டது" என்ற அஜெண்டா எனில்  அது மிகையில்லை.

அதனால்தான், முஸ்லிம் அறிஞர் ஒருவர் சொன்னார், "கிறிஸ்தவர்கள் பைபிளைக் கை கொண்டிருக்கும் போது, அறியாமையில் திளைத்தார்கள், அதனை கைவிட்டு, குர்ஆனை புரட்டியபோது, பெரும் ஆராய்ச்சியாளர்களாக மாறினார்கள். "முஸ்லீம்களோ ! திருக்குர்ஆனைக் கற்று, தம் வாழ்நாளில் பிரதிபலிக்கும் வரை உலகின் எல்லா மூலைமுடுக்குகளிலும் சிறந்து விளங்கினார்கள். அறிவொளி பரப்பினார்கள் ஆனால், அந்தோ எப்பொழுது திருக்குர்ஆனை விட்டு-விலக ஆரம்பித்தார்களோ, அன்று முதல் இன்று வரை ஏளனப்படுத்தப்பட்டும், உலக ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்டும், நேரடியாகவும், மறை முகமாகவும் அடிமைப்பட்டு கிடக்கின்றார்கள். இன்ஷா அல்லாஹ், மீண்டும் அவர்கள் அல்குர்ஆனை உண்மையாகப் பற்றி நடந்தால், அவர்களை வெல்ல எவராலும் இயலாது.

என்ன அருமையான வார்த்தைகள் !

17ம் நூற்றாண்டு  என்ன ? இன்றைய காலகட்டத்திலும்கூட பிற மதங்களின் கருத்துப்படி பெண்களின் நிலையை மட்டுமே ஆராய்ந்தால் கூட , எந்தளவு அவர்களுக்கு எதிராகவே "மனு" சட்டங்கள் மற்றும் உலக நாடுகளின் சட்டங்கள்  இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.

காசி, மதுரா, பனாரஸ் போன்ற இடங்களில் என்ன நடக்கிறது ? கங்கை தவழும் நதிக்கரை நகரங்கள், இந்துக்களுக்கு புனிதமானவைகள் என சொல்லப்படும் அந்த இடங்களில் கணவனை இழந்த பெண்கள், வயதான பெண்கள் (ஆண்களையும்) போன்றோரை, "வா, பாவம் போக்கலாம் ? என அழைத்துச் சென்று, புண்ணியம் பெரலாம் என கூட்டிச் சென்று அவர்களின் பிள்ளைகள் அவர்களை அங்கேயே விட்டு விட்டு வந்து விடுகின்றனர்.

அந்த பெண்களின் நிலை? சிலர் தேவரடியாக்களாகவும், பிச்சை எடுத்தும், தற்கொலை செய்து கொண்டும், கங்கையில் மூழ்கியும் அவர்களின் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.இதை அரசும்,மீடியாக்களும் கண்டு கொள்வதில்லை,கண்டு கொண்டால்,ராம ராஜியத்தின் அவல நிலை கண்டு உலகம் எள்ளி நகையாடும் என்ற பயம்தான் காரணம்.

ஆனால், இஸ்லாமோ,எப்படி பெண்களைப் போற்றுகிறது என கவனியுங்கள்.

"மனிதர்களே ! உங்கள் இறைவனுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள்! அவன் உங்கள் யாவரையும், ஒரே ஆத்மாவிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர், இவ்விருவரிலிருந்து ஆண்களையும், பெண்களையும், பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்)  கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும், இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்.)நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கிறான் (அல்குர்ஆன் - 4:1)

"... ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு. பெண்களுக்கும் அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு.." (அல்குர்ஆன் - 4:32)

"பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்றதில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்றதில் பெண்களுக்கும் பாகமுண்டு. குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும் (அல்குர்ஆன் - 4:07)

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள், ஆண்களைப் போல் பெண்களுக்கும் எதிலும்  உரிமை உண்டு என தெளிவாகக் கூறுகிறது. இதைப் போல, எந்தவொரு பிற மத சடங்கிலோ அவர்களின் புனித நூல்களிலோ காண இயலுமா ? அதனால்தான், ஏனைய மதங்களில் உள்ள பெண்கள் அந்த மத ஆண்களினால் நசுக்கப்படுகிறார்கள், கொடுமைப் படுத்தப்படுகின்றார்கள் சடங்குகள் என்ற போர்வையில் பிழியப் படுகிறார்கள்.

உங்களில் யார் சிறந்தவர் எனில், உங்கள் மனைவியிடம் சிறந்த முறையில் நடந்து கொள்கிறாரோ அவரே என்று, மனைவியின்  அந்தஸ்தைக் கூட்டி, அவளின் நிலையை உயர்த்தி, அவள் ஒன்றும் அடிமையல்ல என்ற நிலையை நபி(ஸல்) அவர்கள் உருவாக்கினார்கள்.

ஒருவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து "என்னுடைய முதல் சேவையை பெற்றுக் கொள்ள உரிமை பெற்றவர் யார்? என வினவ, அதற்கு நபிகளார் அவர்கள் "உன் தாய்!" என்று நவின்றார்கள், பிறகு யார் ? எனக் கேட்க, "உன் தாய்!" என்றார்கள், மூன்றாம் முறையும் அவர் கேட்டதற்கு நபிகளார் அவர்கள் "உன் தாய்!" என்றார்கள். நான்காம் தடவை கேட்கும்போது "உன் தந்தை" என்றார்கள்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தாய்க்கு கொடுத்த உயரிய மரியாதை, இடத்தைப் பார்த்தீர்களா ?

இன்றைய நவீன காலத்தில் குடும்ப அமைப்பைக் குலைத்த பெருமை, சிறப்பு எல்லாம் பிற மதங்களையும், அதன் கொள்கைகளையுமே , சாரும்.

உதாரணமாக! பைபிளில் காணப்படும் அசிங்கமான  உதாரணங்கள், சிலேடைகள், வர்ணிப்புகள், இந்துமத சிலைகள் உணர்த்தும் அருவருக்கத்தக்க காட்சிகள், புராண கதைகள், ஞானிகள், சித்தர்கள் என்ற பெயரில் பெண்கள் ஒரு போகப் பொருளே என வர்ணிக்கும் பெண் அடிமைக் கவிதைகள் என சொல்லிக் கொண்டே போகலாம்.

இதன் காரணமாக, இளம் பிஞ்சுகள் எல்லாம் தங்களது இளமையிலேயே வெம்பி, பிஞ்சிலே பழுத்த பழமாக  மாறி வருகின்றனர்.முறையற்ற உறவு, கள்ளக் காதல், ஓரினச் சேர்க்கை, போதை மருந்து பழக்கம், இன்னும் எண்ணற்ற குற்றங்கள் தலை தூக்கி மனித சமூகத்தையே கொன்று வருகின்றது.

இதகைய அவலங்களைக் குழி தோண்டிப் புதைத்து, எல்லாவித சீரழிவிலிருந்தும் பெண்களைக் காப்பாற்றி, பெண்களின் பெருமைகளை போற்றி பாதுகாத்து வரும் இஸ்லாத்தின் உன்னத தூதையும், இறுதித் தூதரின் தூதுச் செய்தியையும் அறிந்து நடக்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, பிற மத ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் உண்டு.

ஏனெனில் நபிகளின் அந்த செய்தி  "வாழ வைக்கும் " 

பிறமத பெண் சமூகமே ! உலகைப் படைத்து ஆளும் இறைவனும் அவனுடைய இறுதித் தூதரும் அழைக்கிறார்கள் நீங்கள் ஏற்றம் பெற ! இன்னும் தயக்கம் ஏனோ ?

இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இப்னு அப்துல் ரஜாக்

5 comments:

  1. உயர்ந்த மார்க்கத்தை எடுத்துச்சொல்லிய அழகான அழைப்பு!

    அல்லாஹ் பலனை நாடிடுவானாக.

    ReplyDelete
  2. கணவன்இறந்தால் அவனோடுமனைவியேயும்உயிரோடு தீயிலிட்டுல்சாம்பலாக்கும் கொடுமை- பெண்களுக்குஎதிரான அநீதி வேறு மதத்தில் இருந்தது .திருமணம் போன்ற மங்கள காரியங்களில் அவள் ஓரங்கட்டப்பட்டாள்.வண்ணைப் பிடவை கட்டவும் நெற்றியில் குங்குமப் பொட்டுவைக்கவும் அவளுக்கு தடைபோடப்பட்டது.கட்டியபுருஷன் கண்மூடிப்போனால் ஒருபெண்ணின் இயல்பான உணர்வுகளை எல்லாம் உதறிஎறிய வற்புருதப்பட்டாள்.ஆனால் இஸ்லாத்தில் இவையெல்லாம் இல்லை என்பதே இஸ்லாத்தின் பெண்களுக்க்னசிறப்புகளில் ஒன்று!

    ReplyDelete
  3. உள்ளதைச் சொல்லி நல்லதைப் புகட்டும் நல் முயற்சி இப்பதிவு.

    மார்க்கத்தை மட்டும் சொல்லி வந்தால் சாத்தியக்கூறுகள் குறித்து ஐயம் எழலாம் என்ற அனுமானத்தில், சமகால நடப்புகளைச் சொல்லி 'சாத்தியமே' என்று நிரூபிப்பதால் வித்தியாசப் படுகிறது தம்பி இப்னு அப்துர்ரஜாக்கின் இப்பதிவு.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. தொடர்ந்து உயிரோட்டமுள்ள பதிவு.

    அண்மையில் அனுசரிக்கப் பட்ட உலக மகளிர் தினத்தில் சில வடநாட்டு ஊடகங்களில் விவாதிக்கப் பட்ட இஸ்லாத்தை பற்றிய விமர்சனமாக வைக்கப் பட்டது பர்தா- புர்கா- ஹிஜாப் ஆகியவை பற்றி. இவை திட்டமிட்ட பிரச்சாரம்.
    பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டிய அருமையான பொருள்களை- நகைகளை- இன்னும் சில செல்வங்களை பத்திரப் படுத்தி வைப்பது மனித இயல்பு. அப்படித்தான் பெண்களை பாதுகாப்புடன் வைத்திருக்கிறது இஸ்லாம்.

    மருந்துக் கடைகளில் உயிர் காக்கும் உன்னத மருந்துகள் அங்கிருக்கும் குளிர்சாதனப் பெட்டியில்தான் வைக்கபப்ட்டு இருக்கும். அவ்வாறுதான் பெண்களும் இஸ்லாமிய முறையில் கண்ணியப் படுத்தி பாதுகாப்பாக வைக்கப் பட்டு இருக்கிறார்கள்.

    அண்மையில் உலகெங்குமிருந்து இஸ்லாத்தைத் தேடி நாடி ஓடி வந்து தழுவியவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்றே புள்ளி விபரங்கள் சான்று பகர்கின்றன.

    தம்பி இப்னு அ.ர. அவர்களின் இந்தப் பணி பாராட்டுதற்குரியது.

    ReplyDelete
  5. வாசித்த,கருத்திட்ட, துவா செய்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும்,அல்லாஹ் அருள் புரிவானாக

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.