ஒவ்வொருத்தரும் சத்துமிக்க, ஆரோக்கியமான உணவு, போதிய உடற்பயிற்சி, மிதமான நிம்மதியான உறக்கம் இவைகளைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் கண்பாதிப்புகளை ஓரளவு தவிர்க்கலாம்.
அத்தோடு, வாரம் ஒரு முறை கண்களுக்கான மாஸ்க்கினைக் கொண்டு சுமார் 15 நிமிடங்கள் கண்களில் வைத்துப் பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி வரப் புத்துணர்வைப் பெற்றிடலாம். கண்களை மூடி மூச்சை நன்றாக ஐந்தாறு முறை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் கண்களுக்குச் செல்லும் ரத்தம் மிகுதியாகிறது. முகத்தில் ஏற்பட்டிருக்கும் இறுக்கம் தளர்வுறும் வரையில் மறுபடி மறுபடி மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். நெற்றி, கன்னம் மற்றும் தாடை போன்ற பகுதிகளுக்கும் கண்களுக்குச் செலுத்தப்படும் அதே அளவு அக்கறையையும், பாதுகாப்பினையும் கொடுக்கப் பெறக் வேண்டும்.
* ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை பளீர் என்று பிரகாசிக்கச் செய்ய ஒரு பஞ்சு உருண்டையை பன்னீரில் நனைத்து மூடிய கண்களின் இமைகள் மீது 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
* கண்களை மசாஜ் செய்வதற்கு உங்கள் மோதிர விரலையே உபயோகியுங்கள். அதுதான் கண்களைச் சுற்றியுள்ள மெல்லிய சருமத்திற்கு அதிகப்படியான அழுத்தத்தைத் தராது.
* படிக்கும் போது உங்கள் கண்களுக்கும், புத்தகத்துக்கும் இடையில் குறைந்தபட்சம் இரண்டடி இடைவெளி இருக்க வேண்டியது உங்கள் கண்களின் பாதுகாப்புக்கு அத்தியாவசியமானது.
* உஷ்ணத்தால் எரியும் கண்களைக் குளிரவைக்க ஐஸ்வாட்டரில் நனைத்த பஞ்சு அல்லது கைக்குட்டையை உங்கள் மூடிய கண்கள் மீது 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
* ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை புத்துணர்வு பெறச்செய்ய, சிறிது உப்பு கரைத்த நீர் நிறைந்த கிண்ணத்தை கண்ணோடு ஒட்டி வைத்து இந்தக் கரைசலுக்குள் விழியை முக்கி கண்களைத் திறந்து, கண் விழியை இடமும், வலமும், மேலும் கீழுமாக உருட்டவும். இது கண்களில் உள்ள அழுக்கு, தூசு ஆகியவற்றை அகற்றி விடும்.
பார்வைக்கு குறைபாட்டிற்காக கண்ணாடி அணிபவர்களில் பலர் அதனைத் தொடர்ந்து அணிந்தால் மேலும் விரைவாகப் பார்வை பழுதாகிவிடும் என எண்ணுகிறார்கள். இடையிடையே அதனைக் கழற்றி கண்ணுக்கு ஓய்வு அளிப்பது நல்லது என நினைக்கிறார்கள். இதுவும் ஒரு தவறான கருத்தே.
வாசிப்பதற்காக அல்லது தூரப் பார்வைக்காக உங்களுக்கு கண்ணாடி தரப்பட்டிருந்தால் அதனை அணியாதிருப்பது நல்லதல்ல. கண்ணாடி இல்லாது கண்ணைச் சுருக்கி, சிரமப்படுத்தி வாசிப்பதும், தூர உள்ள பொருட்களைப் பார்க்க முயல்வதும் (உங்கள் கண்களுக்கு வேலைப்பளுவை அதிகரித்து சோர்வடையச் செய்யும்.
தொடர்ந்து கண்ணாடி அணிந்திருப்பது உங்கள் பார்வைக் குறைபாட்டை அதிகரிக்கச் செய்யாது. அதேபோல வேறு கண் நோய்களையும் கொண்டு வராது.
தொங்கு சதைக்கு அறுவை சிகிச்சை:
கண்களுக்குக் கீழே உள்ள பகுதி மிக மிருதுவாகவும் லேசாகவும் இருப்பதால் வெகு விரைவில் அழற்சிக்கு ஆட்பட்டு விடுகின்றது. சத்தற்ற உணவும், வேலைப்பளு மற்றும் மன இறுக்கம் போன்றவை இவ்வழற்சியை மேலும் தீவிரமாக்குகிறது. சில பெண்களுக்கு மரபியல் தன்மை காரணமாகவும் இந்நிலை ஏற்படச் சாத்தியமுள்ளது. வயதாகும் பொழுது, இத்தகைய தொங்கு தசைகள் முகத்தில் பெருங் குறையை உண்டாக்கி, தோற்றத்தையே சிதைத்து விடுகின்றன.
இவ்வாறாக ஏற்படும் கொழுப்பு சதையை பிளிபிரோம் பிளாஸ்டி (Blepheroplasty) எனப்படும் கண் அறுவை சிகிச்சை மூலம் உறிஞ்சி வெளியே எடுத்து சீர் செய்து விடலாம். ப்ரோ லிப்ட் (Brow Lift) என்னும் முறைப்படி ஒழுங்கற்று இருக்கும் புருவங்களை அழகாகத் தீட்டி கண்களை இளமையோடும் புதுப் பொலிவுடனும் இருக்கச் செய்யலாம். பிளாஸ்டிக் சர்ஜரி (Plastic Surgery) செய்து வரும் மருத்துவர்களின் உதவியால் இக் குறைபாட்டை அகற்றிடலாம்
அடுத்து வரும் தொடரில் கண்களுக்கு இடும் சுர்மா பற்றி இடம் பெறும்
(வளரும்)
அதிரை மன்சூர்
This comment has been removed by the author.
ReplyDeleteஇந்த தொடரின் இறுதி பாராவில் இரண்டு அட்வர்ட்டைஸ் பாக்ஸ் தானாக இயங்குகின்றது. அது ப்லாக்ஸ்பாட் கம்பேணிகாரர்களின் வேலையாக இருக்கும்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசூபர் தகவல் மச்சான்
ReplyDelete//ப்ரோ லிப்ட் (Brow Lift) என்னும் முறைப்படி ஒழுங்கற்று இருக்கும் புருவங்களை அழகாகத் தீட்டி கண்களை இளமையோடும் புதுப் பொலிவுடனும் இருக்கச் செய்யலாம்.//
இந்த முறை இஸ்லாத்தில் கூடுமா என்று மார்க்க அறிங்கர்களிடம் தெரிந்து வெளியிடுவது நல்லது.சரியாக இருந்துவிட்டால் பிரச்னை இல்லை.அது மார்க்கத்துக்கு விரோதமானது என இருந்தால்,அதை எத்தி வைத்த குற்றத்துக்கு அல்லாஹ் விடம் பதில் சொல்ல வேண்டி வரும்.இதற்கு மட்டுமல்ல,எல்லாவற்றுக்கும் பொதுவாக சொல்கிறேன்.
மேலும் இந்த முறையில் ஆபத்துக்கள் உண்டு.
http://www.plastsurgery.com/flash9/ypo.swf
தம்பி மன்சூர். !
ReplyDeleteசிறந்த தகவல்கள்.
அத்துடன் கள்ள முழி முழிக்கிறான் - இந்த ஆளுடைய முழியே சரியில்லையே ! என்று சிலபேரைப் பார்த்ததும் சொல்கிறார்களே. அப்படி உள்ளக் கிடக்கையை கண்ணில் காட்டுவது பற்றியும் தகவல் திரட்டித் தாருங்கள்.
ஆஹா ஆஹா...
ReplyDeleteகலக்குறீங்க மன்சூர்!
மச்சான்
ReplyDeleteபுருவத்தை சிரைத்து அழகு படுத்துவது இஸ்லாத்தில் தடுக்கப்ட்ட ஒன்று
ஆனால் பிளாஸ்டிக் சர்ஜரி இஸ்லாத்தில் அனுமதி இருப்பதாகவே கருதுகின்றேன்
ப்ரோ லிப்ட் என்னும் முறை கொழுப்பு சதையை பிளிபிரோம் பிளாஸ்டி எனப்படும் கண் அறுவை சிகிச்சை மூலம் உறிஞ்சி வெளியே எடுத்டு அந்த மேடான அல்லது கரடு முரடான பகுதியை சீர் செய்வதுதான்
இப்படி ஒரு ஆப்ரேஷன் இருப்பதே ஆலிம்களுக்கு தெரிய வாய்ப்பில்லை இதற்கு எந்த அடிப்படையில் பத்வா கொடுப்பது என்று குழம்பவும் சான்சஸ் அதிகம்
நாம் இதையெல்லாம் ரொம்ப நுனுக்கமாக ஆராய்ந்தோமேயானால் சமையங்களில் தெளிவு கிடைக்கும் சில சமையங்களில் குழம்பிவிடும்
அல்லாஹ் போதுமானவன்
உங்களுக்கு இது பற்றி விபரம் தெரிந்தால் சொல்லுங்கள்
காக்கா சிலபேருடைய முழிக்கும் முழியைவைத்து
ReplyDeleteஅவனுடைய அடுத்த நடவடிக்கை என்ன என்பதை இடம் பொருள் ஏவல் இவைகளை வைத்து தீர்மானித்து விடலாம் இப்படி இறைவன் நமக்கு சில விஷயங்கலை நமக்கு காட்டி தருவான் நமக்கு கிடைக்கும் அந்த சிந்தனை பெறும்பாலும் தவறுவதில்லை அதாவது நமது கணிப்பு பெரும்பாலும் தப்பாகிவிடாது
சில சமையங்களில் மட்டுமே அட ச்சே தப்பா கணக்கு போட்டுவிட்டமே நாம் நமக்குள் அலுத்துகொள்வது உண்டு.
ஆக நாம் நம்மை அறியாமலேயே பெறும்பாலும் அடுத்தவர்கள் முழிக்கும் முழியிலேயே அவர்களின் உள்ள கிடங்கை படித்து விடுகின்றோம் அதுவும் உங்களைப் போன்ற அனுபவசாலிகளுக்கு மிகவும் எளிது
This comment has been removed by the author.
ReplyDeletemachan,please check this web site
ReplyDeletehttp://islamqa.info/en/47694
-------------------------------------------
Beautification to reshape a deformed part of the body is generally recommended in Islam, as long as it is used for a valid reason. But cosmetic surgery that is done in an attempt to look more beautiful—such as enlarging or reducing the breasts, lifting the face, reducing the size of lips or nose—is not permitted because they alter the Creation of Allah.
In his response to your question, Sheikh Ahmad Kutty, a senior lecturer and Islamic scholar at the Islamic Institute of Toronto, Ontario, Canada, states:
“If the condition you are referring to is considered a deformity or an abnormality that causes emotional and psychological suffering, then you are allowed to undergo surgery to remove or improve it. The Prophet (peace and blessings be upon him) did allow some of his companions to undergo certain procedures to repair nose and teeth.
But it must be pointed out, however, that in Islam we are not allowed to undergo such procedures simply for cosmetic purposes alone, for to do so would be akin to tampering or interfering with the creation of Allah.
So consider carefully whether yours is a deformity. If it is deemed so, then you are allowed to take such steps that are deemed safe so long as they have been recommended by experts in the field and are considered safe.”
Excerpted, with slight modifications, from: www.muslims.ca
//நாம் இதையெல்லாம் ரொம்ப நுனுக்கமாக ஆராய்ந்தோமேயானால் சமையங்களில் தெளிவு கிடைக்கும் சில சமையங்களில் குழம்பிவிடும்//
ReplyDeleteஇல்லை மச்சான்,அது தவறு.
நம் மார்க்கம் எல்லாவற்றுக்கும் சிந்திக்க சொல்கிறது.சிந்திக்காமல் எதையும் நாம் ஏற்க முடியாது.ஒருவர் சொல்லும் போதும்,எழுதும் போதும் நாம் இது மார்க்க வரம்பில் சிந்தித்தால் - எது உண்மை எது பொய் என்பதைக் கண்டு கொள்ளலாம்.அதை தெரிந்த பிறகு,நாம் கட்டாயம் அது சரி அல்லது தவறு என்று சொல்வது நம் கடமை.
எந்தக் குழப்பமும் இல்லை.ஒரு முஸ்லிம் சிந்திப்பவன்
அமெரிக்காவில் சிவப்பு நிலா ?
ReplyDeletehttp://peacetrain1.blogspot.com/