Sunday, April 13, 2014

இதயத்தைக் கனக்கவைத்த இறப்புச் செய்தி !

Adirai Educational Trust (AET) என்ற அதிரை கல்வி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு,
அதன் முதலாவது ‘கல்வி விழிப்புணர்வு மாநாடு’ 2011 ஜனவரியில் நடத்தத் தீர்மானம் நிறைவேற்றியபோது, அந்த வரலாற்றுச் சிறப்பு நிகழ்ச்சியை நடத்த முனைந்து, அந்த மாநாடு யாருடைய தலைமையில் நடத்துவது என்ற கேள்வியை நம் சகோதரர்கள் எழுப்பினர், ‘அதிரை அறிஞர்’ புலவர் அஹ்மது பஷீர் அவர்களைப் பற்றி நான் முன்மொழிந்தேன். ‘யார் அவர்?’ என்று அப்போது அந்தக் கலந்தாய்வில் பங்கு பற்றிய பலரின் புருவங்கள் உயர்ந்தன !  அந்த அளவுக்கு அதிரை மக்களால் அறியப்படாத ‘அதிரை அறிஞர்’ ! சென்னைவாசி;  ஆனால், நம்மூர்க்காரர் ! 
                                  
‘தமிழ்மாமணி’ புலவர் பஷீர் அவர்களின் தலைமையுரை தொடங்கிச் சரளமாக, ஆழமாக,  அடைமழை போன்று அள்ளிச் சொரிந்து நிகந்தபோது, மாநாட்டு அமர்வில் கலந்து கொண்டோரின் புருவங்கள் உயர்ந்தன !  

அதனைத் தொடர்ந்து, இன்னும் சில உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கும் அழைத்து, அந்த அறிஞரின் அறிவாற்றலைப் பயன்படுத்திக் கொண்டோம்.  இவ்வறிஞர் தமது அறிவுப் பெட்டகத்திலிருந்து அள்ளித் தெளித்த அறிவு முத்துகள், அவர்களை அதுவரை  அறியாதிருந்த – பயன்படுத்திக் கொள்ளாதிருந்த அதிரை மக்களுக்கு அப்போது வியப்பும் கைசேதமும் !

கடந்த 2011 செப்டம்பர் அன்று அந்த அறிவுச் சுடர் அணைந்தது !  ‘அதிரை நிருபர்’ தளத்திலும் அந்த அறிவிப்புச் செய்தி வெளியாயிற்று.

அந்தத் தந்தையாருக்கு ஒரே மகனாகப் பிறந்தவர், ‘அஃப்சலுல் உலமா’ அஹ்மது ஆரிஃப், M.Com., M. Phil. அவர்கள்.  பல ஆண்டுகளாக Arabic Institute of Commerce என்ற on- line Arabic Teaching நிறுவனத்தினை உருவாக்கி, உலகின் பல நாடுகளில் வாழும் அரபி ஆர்வலர்களுக்கு அரபி மொழியைக் கற்பித்துவந்தார்.  அறிவு, அடக்கம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த சகோதரர் அஹ்மது ஆரிஃப் அவர்களின் இறப்புச் செய்தி, நேற்றிரவு (12-04-2014) பேரிடியாக எனக்கு வந்து சேர்ந்தது !   தம்பி ஆரிஃபின் மகளார், நான் மதுரையிலிருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது, அன்புத் தந்தையின் இறப்புச் செய்தியை அழுதழுது எனக்கு அறிவித்தார்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்! 

அன்புச் சகோதரர் ஆரிஃப் அவர்களின் இறப்பு, மர்ஹூம், ‘தமிழ் மாமணி’, ‘அதிரை அறிஞர்’ அவர்களின் குடும்பத்துக்கு மாபெரும் இழப்பாகும்.  

மறுமை வாழ்க்கையே தமது இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த இளவல் ஆரிஃப் அவர்களுக்கு, அல்லாஹ் மறுமையின் நற்பேறுகள் அனைத்தையும் வழங்கி, அவர்களைத் தன் நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக !  

அன்னாரின் இறப்புத் தொழுகையும் உடலடக்கமும் சென்னையில் இன்று காலை பத்து மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

18 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

    அன்புச் சகோதரர் ஆரிஃப் அவர்களின் இறப்பு, மர்ஹூம், ‘தமிழ் மாமணி’, ‘அதிரை அறிஞர்’ அவர்களின் குடும்பத்துக்கு மாபெரும் இழப்பாகும்.

    மறுமை வாழ்க்கையே தமது இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த இளவல் ஆரிஃப் அவர்களுக்கு, அல்லாஹ் மறுமையின் நற்பேறுகள் அனைத்தையும் வழங்கி, அவர்களைத் தன் நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக !

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    மறுமை வாழ்க்கையே தமது இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த இளவல் ஆரிஃப் அவர்களுக்கு, அல்லாஹ் மறுமையின் நற்பேறுகள் அனைத்தையும் வழங்கி, அவர்களைத் தன் நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக !

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. வ இன்னாலில்லாகி வ இன்னா இளைகி ராஜூயூன்.யாஅல்லா அன்னாருக்கு உன்னால் ஆசிர்வாதிக்கப்பட்டவர்களின் நல்லிடத்தை அருள்வாயாக.ஆமீன்

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்... நாம் அனைவரும் இறைவனிடம் இருந்தே வந்தோம்... அவனிடமே திரும்பிச் செல்பவர்களாகவே இருக்கிறோம்...

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

    இஸ்லாமிய அறிவுலகத்துக்கு ஒரு பெரிய இழப்பு. அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக!

    ReplyDelete
  12. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.

    அல்லாஹ், அன்னாரது நல்லறங்களைப் பொருந்திக் கொண்டு மறுமை வாழ்வை சிறக்கச் செய்வானாக. அன்னாரது குடும்பத்தினருக்கு இப்பேரிழப்பைத் தாங்கும் வலிமையைக் கொடுப்பானாக.!

    அதிரையில் நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் கலந்து கொள்ள சகோதரர் ஆரிஃப், அவர்களது தகப்பனார் மர்ஹூம் தமிழறிஞர் புலவர் பஷீர் அஹ்மது அவர்களோடு வந்திருந்தபோது சந்த்தித்து கொண்டோம்.

    மிகச் சிறந்த மொழியாற்றல் கண்டு வியந்திருக்கிறேன், தகப்பனாரின் அசலாக தன்மையாக பேசக் கூடியவராக கண்டேன், அரபி தமிழ் மொழி மாற்றம் பற்றி நெடுநேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.

    அல்லாஹ் அன்னாரின் நற்கருமங்கள் அனைத்தையும் பொருந்திக் கொள்வானாக !

    ReplyDelete
  14. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.

    ReplyDelete
  15. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இன்னும் என்னால் ஜீரணிக்க இயலாத இழப்பு

    ReplyDelete
  16. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . 

    இஸ்லாமிய அறிவுலகத்துக்கு ஒரு பெரிய இழப்பு. அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக.

    ஒரு சமயம் "நம்முடைய ஆதித்தந்தை ஆதம் அலைஹி...அவர்கள் பேசிய மொழி ஒரு வேளை நம் தாய்மொழியாம் தமிழ் மொழியாக இருக்குமோ?" என்று நான் ஒரு பதிவில் வினவ, அதற்கு பெரும் விளக்கத்தை சகோ. ஆரிஃப் அவர்கள் தன் தனிக்கட்டுரையில் அ.நி. விளக்கி இருந்ததை இங்கு நான் நினைவுகூறுகிறேன்.

    ReplyDelete
  17. انا لله و انا ايه راجعون

    ReplyDelete
  18. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    தோன்றின் புகழோடு தோன்றுக, அதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று.

    குறளின் எடுத்துக்காட்டாக வாழ்ந்து சென்றாரோ.

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.