அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி
வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
ஜும்ஆ நாளின் சிறப்பு
''சூரியன்
உதயமாகும் நாட்களில் சிறந்தது, ஜும்ஆ (வெள்ளிக்கிழமை) நாளாகும். அன்றுதான் ஆதம்
படைக்கப்பட்டர். அன்றுதான் சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டார். அன்றுதான்
அதிலிருந்து வெளியேற்றப்பட்டார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள்
(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1147)
''ஐந்து
நேரத் தொழுகைகளும், ஒரு ஜும்ஆத் தொழுகை, மறு ஜும்ஆ வரையிலும், ஒரு ரமளான்
(நோன்பு), மறு ரமளான் வரையிலும், பெரும் பாவங்கள் தவிர்க்கப்பட்டிருக்குமானால்,
அவற்றிற்கிடையே உள்ள (சிறுபாவங்கள்) அழிக்கக்கூடியதாக அமையும்'' என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1149)
''ஜும்ஆ
தொழுகைகளை விட்டுவிடுவதை விட்டும் கூட்டத்தார்கள் விலகட்டும்! இல்லையெனில்
அவர்களின் இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரை இடுவான். பின்பு அவர்கள் பொடு
போக்கானவர்களாக (தொடர்ந்து) ஆகி விடுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் தன் மேடையின்
படிகளில் நின்றவாறு கூற நாங்கள் கேட்டோம். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - இப்னு உமர்(ரலி) அவர்கள்
(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1150)
''உங்களில்
ஒருவர் ஜும்ஆவிற்கு வந்தால், (முதலில்) குளித்துக் கொள்ளட்டும்! என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள்
(புகாரி, முஸ்லிம்) ரியாளுஸ்ஸாலிஹீன்: 1151)
''ஜும்ஆ
நாளில் குளிப்பது, வயதுக்கு வந்த அனைவர் மீதும் அவசியமாகும்''என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் (முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1152)
''ஜும்ஆ
நாளன்று ஒருவர் குளித்து, தன்னை இயன்ற அளவுக்கு தூய்மைபடுத்தி, எண்ணெய் தேய்த்து,
அல்லது தன் வீட்டில் நறுமணம் பூசி, பின்பு பள்ளிவாசல் சென்று, (அங்கு
உட்கார்ந்திருப்போரில்) இரண்டு பேரை பிரிக்காமல், பின்பு தன் மீது கடமையாக உள்ள
(சுன்னத்) தொழுகையை நிறைவேற்றி, பின்பு இமாம் உரை நிகழ்த்தும்போது, வாய் மூடி
இருந்தால், இந்த ஜும்ஆவிற்கும், வருகின்ற ஜும்ஆவிற்கும் இடையே ஏற்பட்ட குற்றங்கள்
மன்னிக்கப்படும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: ஸல்மான் (ரலி) அவர்கள்
(புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1154)
''ஜும்ஆ
நாளில் கடமையான குளிப்பை ஒருவர் குளித்து விட்டு, பின்பு முதலில் பள்ளிக்குச்
சென்றால், அவர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாவதாக சென்றவர், ஒரு
மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாவதாக சென்றவர், கொம்புள்ள ஆட்டைக்
குர்பானி கொடுத்தவர் போலாவாவர். நான்காவதாக சென்றவர் கோழியை குர்பானி கொடுத்தவர்
போலாவார். ஜந்தாவதாக சென்றவர், முட்டையை தர்மம் செய்தவர் போலாவார். இமாம் (உரை
நிகழ்த்த) வந்து விட்டால், அந்த உரையைக் கேட்க வானவர்கள் (தங்கள் பதிவேடுகளை
மூடிவிட்டு) பள்ளிக்குள் வந்து அமர்ந்து விடுவார்கள்'' என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1155)
''நபி(ஸல்)
அவர்கள் ஜும்ஆ நாள் பற்றி கூறும்போது, ''அதில் ஒரு நேரம் உள்ளது. ஒரு முஸ்லிமான
அடியான், நின்று தொழுது விட்டு எதையேனும் அல்லாஹ்விடம் அவர் கேட்டது அந்த
நேரத்திற்கு ஏற்ப அமைந்தால், அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை''
என்று கூறிவிட்டு '' அந்த நேரம் குறைவு'' என்பதை தன் கையால் இஷாராச் செய்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,
முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1156)
''நாட்களில்
மிகச் சிறந்தது ஜும்ஆ நாளாகும். அன்று என் மீது அதிக ஸலவாத் கூறுங்கள். நிச்சயமாக
உங்களின் ஸலவாத் என்னிடம் எடுத்து காண்பிக்கப்படுகிறது'' என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள்
(அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1158)
நம்பிக்கை கொண்டோரே!
வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக
அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு
விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. (அல்குர்ஆன்: அல்ஜும்ஆ -
62:9)
தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து
அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி
பெறுவீர்கள். (அல்குர்ஆன்: அல்ஜும்ஆ - 62:10)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ்
வளரும்...
அலாவுதீன் S.
A +++
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் காக்கா..
ReplyDeleteஜஸாக்கல்லாஹ் ஹைரன் !
உங்களைப் போன்ற நல்லெண்ணமும், தக்க நேரத்தில் நல்லதொரு காட்டலும் செய்துவருவதை மறுக்கவோ மறக்கவோ மாட்டோம் !
அல்லாஹ்வுக்கு நன்றியுடையவர்களாக இருப்போம் இன்ஷா அல்லாஹ் !
நல்லுபதேசங்களுக்கு நன்றி அலாவுதீன்!
ReplyDelete