அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி
வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
இரவில் நின்று வணங்குவதின் சிறப்பு
இரவில் தஹஜ்ஜுத் தொழுகை தொழுவீராக!
அது உமக்கு நபிலாக உள்ளது. உமது இறைவன் உம்மை ''மகாமன் மஹ்மூதா'' எனும்
புகழுக்குரிய இடத்தில் எழுப்புவான்.
(அல்குர்ஆன் : 17:79)
அவர்களின் விலாப் பகுதி படுக்கைகளை
விட்டும் ஒதுங்கி நிற்கும்.(அல்குர்ஆன் :32 :16 )
அவர்கள் குறைவாகவே தூங்குகிறவர்களாக
உள்ளனர். (அல்குர்ஆன் : 51:17 )
''நபி
(ஸல்) அவர்கள், தங்களின் பாதங்கள் வீங்கும் அளவுக்கு இரவில் நின்று வணங்கிக்
கொண்டிருந்தார்கள். ''இறைத்தூதர் அவர்களே! உங்கள் முன்-பின் பாவங்கள் உங்களுக்கு
மன்னிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படி ஏன் வணங்குகிறீர்கள்?'' என்று அவர்களிடம்
கேட்டேன். ''நன்றி உள்ள அடியானாக நான் இருக்க வேண்டாமா?'' என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1160)
''இரவில்
தொழுதால் அப்துல்லாஹ் நல்ல மனிதர்தான்!'' என, என் தந்தை பற்றி நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். அதன்பின் (என் தந்தை) அப்துல்லாஹ் அவர்கள் குறைந்த நேரமே இரவில்
தூங்குவார்கள். (அறிவிப்பவர்: ஸாலிம் இப்னு அப்துல்லாஹ், இப்னு உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1162)
''அப்துல்லாவே!
இரவில் நின்று வணங்கி விட்டு, பின்பு இரவில் நின்று வணங்குவதையே விட்டுவிட்ட
இன்னார் போல் நீ இருந்து விடாதே'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் (புகாரி,
முஸ்லிம்) (
ரியாளுஸ்ஸாலிஹீன்:1163 )
''காலையில்
எழும் வரை இரவில் தூங்கிவிட்ட ஒரு மனிதர் பற்றி நபி(ஸல்) அவர்களிடம்
கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அவன் இரு காதுகளிலோ, அல்லது ஒரு
காதிலோ ஷைத்தான் சிறுநீர் கழித்து விட்டான்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1164)
''ஒருவர்
தூங்கினால் அவரின் தலைப் பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகள் போடுவான். ஒவ்வொரு
முடிச்சின் போது. ''உனக்கு நீண்ட இரவு உள்ளது. நீ தூங்குவாயாக'' என்று கூறுவான்.
அவர் தூங்கி எழுந்து, அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடும்.
அவர் உளுச் செய்தால், ஒரு முடிச்சு அவிழ்ந்து விடும். அவர் தொழுதால் இறுதி
முடிச்சும் அவிழ்ந்து விடும். உடனே அவர் சுறுசுறுப்பான, மகிழ்ச்சியான மனிதராக ஆகி
விடுவார். அவர் தொழவில்லை என்றால், மனநிம்மதி இல்லாதவராக, சோம்பேறியாக
ஆகிவிடுகிறார்' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1165)
''மனிதர்களே!
ஸலாம் கூறி (ஸலாமைப்) பரப்புங்கள். (பசித்தவருக்கு) உணவளியுங்கள். மக்கள் தூங்கி
கொண்டிருக்கும் நிலையில் இரவில் தொழுங்கள். (இதைச் செய்தால்) நல்லவிதமாக
சொர்க்கத்தில் நுழைவீர்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு
ஸலாம் (ரலி) அவர்கள்
(திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:
1166)
''ரமளான்
மாதத்திற்குப் பின் நோன்புகளில் மிகச் சிறந்தது, அல்லாஹ்வின் மாதமான ''முஹர்ரம்''
மாதமாகும். கடமையான தொழுகைக்குப் பின் (நபிலான) தொழுகைகளில் மிகச் சிறந்தது,
இரவுத் தொழுகையாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 1167)
''நபி
(ஸல்) அவர்கள் இரவில் இரண்டு, இரண்டு ரக்அத்தாக தொழுதுவிட்டு, ஒரு ரக்அத் வித்ருத்
தொழுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள்
(புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1169)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள்''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ்
வளரும்...
அலாவுதீன்
S.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா !
வெள்ளி(நட்சத்திர)ப் பதிவு !
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்
ReplyDeleteபடைத்தவன் அல்லாஹ்வைப் பற்றியும்,real super star,real hero நம் தலைவர் பற்றியும் சொல்லும் உங்கள் கட்டுரை நெஞ்சத்தை அள்ளும் உன்னதமானது என்பதில் சந்தேகம் இல்லை.அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்,இதைப் போல் எழுதி ஞாபகமூட்டும் மற்றவர்களுக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும்.
ReplyDelete