"முன்பின் பார்த்திராத வதனம், பள்ளிக்கூடப் படிப்பைப் பாதியில் விட்ட வயது (அ) அரியர்ஸை முடிப்பதற்குள் விசா கிடைத்துவிட்ட சிரித்த முகம், போதாதற்கு மூன்று வயதுக்குள் இருக்கக்கூடிய குழந்தையின் புகைப் படங்களின் பதிவு, எல்லாவற்றிற்கும் மேலாக அடையாளத்தை மேலும் சிரமமாக்கும் கருப்புக் கண்ணாடியும் அணிந்து கொண்டு "ஃபிரண்ட ரிக்வெஸ்ட்" நிறைய வருகிறதே, என்ன செய்யட்டும்?. எல்லாம் பெண்டிங்கில் நிற்கின்றன.
(அந்த முகங்கள் எப்படியோ எங்கோ பார்த்த மாதிரி இருக்கக் காரணம் அவரகள் வாப்பாக்களை எனக்குத் தெரியுமோ!!!)"
மேற்கண்ட வினாவை முகநூலில் இருக்கும் ஜாகிர் உள்ளிட்ட நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்தபோது கீழ்க்கண்ட பதில் ஜாகிரிடமிருந்து வந்தது:
# பாஸ்.. இது போல் எனக்கும் வரும். சிலர் லத்தீன் அமெரிக்காவிலிருந்து கவர்ச்சி புயலாகவும் இருக்கும்.
# நம் ஊர் சார்ந்த மாதிரி அயன் கலையாத சட்டை போட்ட பசங்களும் வந்து ரிக்வெஸ்ட் எல்லாம் வரும். சிலர் நமது தமிழ் அறிவில் மயங்கி [!] நானும் உன்னுடன் 'பழம்' என்று என்ட்ரி கொடுப்பார்கள்.
# கவர்ச்சி புயலுக்கு பதில் கொடுத்தால் 3 வது இ-மெயிலில் 2000 அமெரிக்கன் டாலருக்கு மொய் வைக்கப்பார்க்கும் ...ரொம்ப பல்லை இழிச்சால் அமவுன்ட் பெரிதாக தேவைப்படும் [ அவங்களுக்கு ] .
# எங்கள் ஆபிசில் ஒருவர் இப்படித்தான் ஆரம்பித்து மாட்டிக்கொண்டார். இதில் ஒரு பெண்ணும் ஒரு வெள்ளைக்கார பயலிடம் காசு அழுதாள். [ சிவப்பா உள்ளவன் பொய் சொல்ல மாட்டான் பாஸ்.. ]
# பசங்களுக்கு நாம் லைக் போட்டால் சமயத்தில் தத்துவ போஸ்டர் அனுப்பி சாவடிப்பானுங்க...சில பேர் மீனில் / செடியில் / பழத்தில் / மேகத்தில் இறைவன் பெயர் இருக்கிறது..உடனே லைக் போடு இல்லாவிட்டால் நீ ஒரு ம.ம.க என்று அதிரை த.த.ஜ மாதிரி கொடுமை செய்வார்கள்.
# தமிழ் விரும்பிகள்.... இவனுகதான் மொனை மழுங்கிய கத்தி வைத்திருப்பவர்கள்... எதை தமிழில் எழுதினாலும் 'நல்லா இருக்கு' நீயும் படி என்று வார்த்தைக்கு கீழ் வார்த்தை போட்ட எல்லாத்தையும் கவிதை என்று ஜல்லி அடிப்பானுக.
# சிலர் கலர் கலரான சாமி படம் எல்லாம் அனுப்பி ரொம்ப சக்தி வாய்ந்ததுனு எழுதி எத்தினி ஹார்ஸ்பவர்னு மட்டும் சொல்ல மாட்டானுக..
நீதி: தெரியாதவனுக்கு லைக் / கன்ஃபர்ம் போட்டால் தெரிந்தவர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் திட்டு வாங்க நேரிடும்.
***
இபுறாகீம் அன்சாரி காக்காவிடமிருந்து...
hahahahhahaha. There U R
***
அதிரைக்காரனிடமிருந்து...
அதைவிட கொடும என்னான்னா ஆன்றாய்டில் கேண்டி கலக்சன் கேம் விளையாட வரும் அழைப்புகள்.
***
அபூ இப்ராஹீமிடமிருந்து...
//நீதி: தெரியாதவனுக்கு லைக் / கன்ஃபர்ம் போட்டால் தெரிந்தவர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் திட்டு வாங்க நேரிடும்.//
இப்போ புரியுதா? எவ்வ்வ்வ்வ்வ்வ்ளோ வாங்கி கட்டிக்கிறோம்னு...
பில்லி சூன்யத்திடமிருந்து அழைப்பு வந்திருக்கா?....
***
தூண்டில்காரனுக்கு மிதவையில் கண் என்பதற்கேற்ப அபு இபுறாகீமிடமிருந்து மீண்டும் இப்படி...
"ஆச்சா, இப்பவெல்லாம் எல்லாவற்றிற்கும் "மேக்கிங்" பின்னணியைச் சொல்வது ட்ரெண்டாகி விட்டதால்... சொல்லியாயிற்று. இதில், மேக்கிங்தான் பதிவே என்பதாலும் தனியாகப் பதிவு மேற்கொண்டு இல்லை என்பதாலும் இன்னும் கொஞ்சம் சொல்லிவிட்டு முடித்துக் கொள்வோம்.
இணைய வலையுகம்தான் கலியுகம் என்னும் தற்போதைய நிலைப்பாட்டிற்கு முன்பதாக ஒரு காலம் இருந்தது. அதில், எழுதும் ஆர்வமுள்ளவர்கள் தனது சிறு துணுக்காவது ஜனரஞ்சக பத்திரிகையில் வந்துவிடாதா என்று ஏங்கி கடுமையாக முயற்சி செய்வர். வாசகர் கடிதம் பகுதியிலாவது நம் பெயர் வந்துவிடாதா என்று தொடர்ந்து தபால் அட்டை அம்புகள் தொடுத்த காலம் அது. அன்புள்ள அல்லியோ ("உங்கள் மனைவியிடம் கேட்க வேண்டிய கேள்வி இது") அரசு பதில்களோ ("ஹிஹி") எப்போதாவது இவர்கள் கேள்விக்குப் பதில் சொல்லி விட்டாலே சந்தோஷத்தில் குதிப்பர்.
வலையுகம் தீவிரமடைந்த பிறகு அதே எழுத்தாளர்களுக்கு தம் கருத்தை பதிவாகவோ பின்னூட்டங்களாகவோ எடுத்துச் சொல்வது இலகுவானது. இதனால் அதிகமான திறமைசாலிகள் அடையாளம் காணப்பட்டார்கள். தொடர்ந்து வாய்த்த வலைப்பூ வசதிகளை வாகாகப் பயன்படுத்திக் கொண்ட வலைஞர்கள் தம் திறமைகளை தம்மால் முடிந்த கவிதை, கட்டுரை, கதை, வாழ்வியல் போன்ற வடிவங்களில் வெளிக் கொணர்ந்து தமக்கென உலகளாவிய வாசக வட்டங்களை வசீகரித்துக் கொண்டு எழுத்துலகில் கோலோச்சுகிறார்கள். இதற்காக இவர்கள் செலவிடும் நேரம் வீணாகாமல் இவர்களின் ஆக்கங்கள் ஆவணப் படுத்தப் படுவதால் சிறப்பான ஆக்கம் என்றால் சிகரம் தொடும் வாய்ப்புகள் ஏராளம்.
ஆனால், இந்த ஃபேஸ்புக் மோகம் தலைக்கேறிய பிறகு அது தற்போது ஃபத்வா கொடுத்துத் தடை செய்யப்பட வேண்டிய அளவுக்கு போதையாகவே மாறிப்போய் வருவது ஆரோக்கியமானதா என்றால் கண்டிப்பாக இல்லை என்பதே பெரும்பான்மையானோரின் பதிலாக இருக்கிறது.
ஃபேஸ்புக்கில் நண்பர்கள் உரையாடுகையில் ஒருசில தருணங்களில் நானும் கலந்து கொள்ள நேர்ந்தபோது, அருமையான, உபயோகமாகக் கூடிய, சுவாரஸ்யமான, ஆக்கப்பூர்வமான எத்தனையோ கருத்துகள், விமர்சனங்கள், ஆலோசனைகள் ஆவணப்படுத்தப்படாத உரையாடல்களால் யாருக்கும் உபயோகம் இல்லாமலும் அவர்களின் பொண்ணான நேரத்தைக் கொன்றும் களைகிறது என்பதை உணர முடிந்தது.
ஃபேஸ்புக்குக்கு ஒதுக்கும் நேரத்தில் கடிவாளம் இட்டு, சில்லறை உரையாடல்களைத் தவிர்த்து, உங்கள் சிந்தனைகளை ஓர்முகப்படுத்தி, தொகுத்து பதிவுகளாக அதிரைநிருபர் போன்ற நல்ல தளங்களில் வெளியிடுவதன் மூலம் அதிக வாசகர்களைச் சென்றடைவதோடு உங்கள் ஆக்கங்கள் காலகாலத்திற்கும் ஆவணப்படுத்தப் பட்டு எதிர்காலச் சந்ததியர்க்கும் வாசிக்கக் கிடைக்கிறது என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பும்போது மறவாமல் கண்கள் தெரியுமாறு ஒரு புகைப்படமும் உங்களைப் பற்றியச் சிறு அறிமுகமும் இருப்பது நல்லது. அதைப்போல், யாரையும் ஃபிரெண்ட் என்று ஆமோதிக்குமுன் அவர் யார் என்பது உங்களுக்குத் தெரிந்திருத்தல் மிகமிக அவசியம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள சில்லறை உரையாடல்களால் விரயமாக்கப்பட்ட சுவாரஸ்யமானவற்றை விடவா இக்கால எழுத்தாளர்கள் எழுதுகின்றனர்?
Mohamed Thasthageer:
நான்
கண்மூடியபின்
தோண்டியெடுத்தால்
அதில்
அவள் உருவம் மட்டும் பதிந்திருக்கும்!
like • 1 • Delete • Feb 28
AbuIbrahim Nainathambi
நிலவை
அன்னாந்து பார்க்கிறார்கள்
அதனை
பக்கத்தில் வைத்துக் கொண்டு..
like • 2 • Delete • Feb 28
Jamaludeen Noor Mohammed
அன்பே
நீ கடித்த ஆப்பிளை
நான் கடிக்க ஆசைதான்
சற்றுபொறு
என்
பல்செட்டை
பொருத்திக் கொள்கிறேன்.
-80 வயதில் கவி கொள்ளுத்தாத்தா-
(இன்ஷா அல்லாஹ்:)
Edited • Like • Delete • Feb 28
Sabeer Ahmed
ஜமாலுதீன்,
பல் செட் மாட்டுவதற்குள்
ஆப்பிளில்
அவள்
உலர்ந்துபோவாளே?
சட்டென்று
சப்பிவிட வேண்டியதுதானே
Like • 2 • More • Feb 28
Jafarullah Jafar
ஒரு கவிஞர் சொன்னாராம்.. (அது நீங்கள் இல்லை என நம்புகிறேன்)
"ஒரு பெண்ணைப் பற்றி ஒரு கவிதை எழுதினேன் அதற்கு என் மனைவி உதவினாள்"
'அப்படியா?"
"ஆமாம் அக்கவிதையை எழுதி முடிக்கும் வரை அவள் என்னுடன் இல்லை"
Like • 1 • Delete • Feb 28
Jamaludeen Noor Mohammed
கல் நெஞ்சக்காரி
கடந்து போகிறாள்
கொள்ளெனச் சிரித்து
நானெழுதிய கவிதைகள்
கிறுக்கல்களாம்!
அடிப்பாவி அறிவாயா நீ?
உனைப் பார்த்ததுமுதலே
நான் கிறுக்கன்தான் என்பது!
நீ ரசிப்பாய் என்று நம்பி
தூக்கம் தொலைத்து எழுந்த
பின்சாமப் பொழுதுகளில்
வார்த்தை கிடைக்காமல்
வார்த்த வரிகளடி அவை!
மீண்டும் சிரிக்காதடி உன்
சீண்டும் விழிகளுக்கு நான்
மாண்டு போயிடுவேன்.
(அடக்கல்சோ....ஒருநாள்கூட என்னை இப்படி எல்லாம் சொன்னதில்லையே! - அதிரையிலிருந்து அசரீரி)
உடு ஜூட்.
Edited • Unlike • 3 • Delete • Feb 28
Sabeer Ahmed
இப்படி
உழுது வைத்தாலும்
பயிரிடப்படாத வயலாக
எழுதி முடித்தாலும்
கொடுக்கப்படாத கவிதைகள் எத்தனையோ
ஜமாலுதீன்
இதிலெல்லாமா ஜூட் விடுவார்கள்?
நின்று
நிதானமாக
நிறைவாக்கியிருக்கலாமே!
இந்த
உணர்வுகளின் மொழிபெயர்ப்புகளை
கிறுக்கல் என்றால்
அவள்தான் கிறுக்கி!
(பி.கு.: கல்நெஞ்சக்காரி என்று சொல்கிறீர்கள், எதற்கும் நேருக்குநேராக மோதாமல் இருப்பது நல்லது என்று கிரவுன் நினைக்கலாம்)
Muhiyadeen Sahib Mysha
ஜன்னலோரக் காற்றை நான்
சுவாசித்துக் கொண்டு நின்றபோது
சலனமற்று ஓர் உருவம் தெரு வீதியில்
கொலுசு ஒலியில்
சமிக்கை காட்டிச் சென்றுகொண்டிருந்தன.
சற்றுநேரத்தில் நானும் சலனமற்றவனாய் ஆகி
உற்று நோக்கிப் பார்ப்பதற்குள்
எட்டுத் திசையும் சலனமற்று இருந்தன.
அது யாராக இருக்குமென்று
இன்று வரையிலும் நான் யோசிக்கிறேன்.
Unlike • 1 • Delete • Feb 28
Sabeer Ahmed
மெய்சா,
நீ பேய் பிசாசுபற்றி எழுதுறவனாச்சே... ஒரு வேளை மோகினிப்பிசாசோ?
Like • More • Feb 28
AbuIbrahim Nainathambi
உனக்கு இரவு
எனக்கு பகல்
இரண்டுக்கும் நடுவில்
நாம் இருவர்...
ஜோடிப் பொருத்தம்
பால் பொருத்தி வாசிச்சுடு
Like • Delete • Feb 28
Mohamed Thasthageer
கண் அறிவித்ததோ
நான் வருவேன் என
முன்கூட்டியே!
Like • Delete • Feb 28
Mohamed Thasthageer
இரவின்பால் பகலுக்கு காதல்,
பகலின் பால் இரவின் காதல்!
அன்பின் பால் ஈர்க்கப்பட நட்பு
நடுனிசி, நன் பகல் பார்க்காது!
like • 1 • Delete • Feb 28
Sabeer Ahmed
தமிழை
ஃபுட்பால் ஆடுகிறார் கிரவுன்
உதைக்காமல்
ஒருவேளை
கோல் கீப்பரோ!
மேலும்... ஆங்காங்கே வாசித்தவைகள்...
Safath Ahamed
9 minutes ago near Bellevue, WA, United States
விழுந்து எழுதலில்
விளங்கிக் கொள்ள முடிகிறது..
சில காயங்களும்,
பல பாடங்களும்!!
Like•Comment•Share
Safath Ahamed
Mar 23 at 10:35pm
Everyone is ready to support some party.. But no one to support voters !!
Like•Comment•Share
அஹ்மது இர்ஷாத்
"முழு தேங்காய நாய் கவ்விட்டு போன மாதிரி ஃபேசுபுக்கு ஃபுல்லா ஒரே அரசியல் டாலிக்கா ஓடிட்டு இருக்கே பாஸ்...
எம் ஆதரவு இடைத்தேர்தலுக்குத்தான்..." ண்னு ஒரு எம்.எல்.ஏ.வை மண்டைய போடச் சொல்றமாதிரி இருக்கு...
Like•Comment•Share
ஃப்ரெண்டு ரெகுஸ்ட் கிடைக்கப் பெற்று அதனை ஏற்பதா இழப்பதா ? என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு, முகநூல் குறிச்சொல் துவங்கப்பட்ட நிமிடத்திலிருந்து உங்களின் கடைசி தட்டச்சு / விரல் சொடுக்கும் எழுத்து பதியும் வரை என்னவெல்லம் நிகழ்கிறது, அது எவ்வாறு இயங்கி பயனர்களின் நேரத்தை குடிக்கிறது என்பதை மற்றுமொரு பதிவோடு அதிரைநிருபர் டெக்னிகல் டீம் வந்து சந்திப்பார்கள்.
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
அன்பே நீ கடித்த ஆப்பிளை நான் கடிக்க ஆசைதான்! பல்செட் மாட்டிவரவில்லை: உன் வாயாலையே ஊட்டி விடு!
ReplyDeleteஃபேஸ்புக்குக்கு ஒதுக்கும் நேரத்தில் கடிவாளம் இட்டு, சில்லறை உரையாடல்களைத் தவிர்த்து, உங்கள் சிந்தனைகளை ஓர்முகப்படுத்தி, தொகுத்து பதிவுகளாக அதிரைநிருபர் போன்ற நல்ல தளங்களில் வெளியிடுவதன் மூலம் அதிக வாசகர்களைச் சென்றடைவதோடு உங்கள் ஆக்கங்கள் காலகாலத்திற்கும் ஆவணப்படுத்தப் பட்டு எதிர்காலச் சந்ததியர்க்கும் வாசிக்கக் கிடைக்கிறது என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
ReplyDeleteLike.
Comments: Insha Allah. We try.
ஃப்ரெண்ட் ரெகுவஸ்ட்-ஐ விட... இந்த முகநூல்...!
ReplyDeleteஅகத்தின் அழகை முகநூலில் காட்டிவிடுகிறது, வலை மேய்ச்சலில் ஈடுபடுவது போன்று ஒவ்வொருவரின் அல்லது தேடியெடுத்து கிடைக்கும் பக்கத்தில் மேய்ந்து கொண்டிருக்கும்போது, சிண்டு முடுஞ்சி விடுற வேலையை இந்த முகநூல் பின்புலத்தில் வாழப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் செய்யும். அதன் வலியை, விளைவுகளை பார்ப்பவர்களால் உணர முடியாது !
நடைமுறையில் உதாரணத்திற்கு, உங்களின் நண்பரின் வீட்டு திருமணத்திற்கு செல்கிறீர்கள், அங்கே உங்களை பார்ப்பவர்களின் கண்களில் படுகிறீர்கள், சிலருக்கு யாரென்று தெரியும் மேலும் சிலருக்கும் யாரென்று தெரியாவிட்டாலும் அறிந்து கொள்ள வேண்டும் எண்ணம் வரலாம் / வராமலும் இருக்கலாம். அங்கே கிடைக்கும் புது நட்புகள், அல்லது பழைய நட்புகளின் புதுப்பித்தல்கள் என்று பொழுது கழியும்.
அங்கு வந்து சென்றவர்களைப் பற்றிய தகவல்கள் மனதில் ஓடும், நல்லவைகளும் / கெட்டவைகளும் அப்படி ஓடும் எண்ண ஓட்டத்தைத் தான் பின்னால் இருந்து செய்கிறது இந்த முகநூல்... இது பற்றி நீண்டதொரு பதிவு எழுதும் அளவுக்கு பின்னல் இருக்கிறது.
முகநூல் / ஃபேஸ்புக்கில் முகம் புதைத்து அங்கே தங்களது கோவணத்தை தொலைத்தவர்கள் ஏராளம் ! அம்மா சோமபாணத்தையும் விஞ்சும் போதையில் சிக்க வைக்கும் சொக்கு அங்கிருக்கும் !
தேர்தல் களோபரத்தில் எந்தப் பக்கம் போனாலும் ஒரே... "ஜே" ன்னு ஆரம்பிக்குது இல்லே "ஜே" ன்னு முடியுது... !
ஜே...ஜே வென்று ஆரம்பித்து கடைசியில் பீ.ஜே. என்று முடிகிறது இன்றைய தமிழ் இஸ்லாமிய முகநூல் வட்டம்......
ReplyDeleteஎழுத்திலும்
ReplyDeleteஎண்ணத்திலும்
பேஸ் புக்கில்
பேசாமல்
பலர் போலி முகம்
காட்டுவதால்
தூர விலகி விட்டேன்,
அதனால்
நேர மிச்சம் பண்ணி
சேமித்தேன்
பொன்னான நேரத்தை !!
-------------------------------
நிறைய முஸ்லிம்கள் குரானுக்கு ஒதுக்கும் நேரத்தை விட பேஸ் புக் குக்கு ஒதுக்கும் நேரம் அதிகம்.சைத்தான் இதில் வெற்றி கொண்டுவிட்டான்,ஜாக்கிரதை மக்களே.
ReplyDeleteபீலி கொண்டு உன் பெயர் எழுதப்போகின்றேன்
ReplyDeleteஏனனில், பேனா முள் பட்டு
உன்பெயர் காயப்பட்டு விடக்கூடாதே என்று.
காதரூ,
ReplyDeleteவண்ட்டியா!
வாடா வாடா
எங்கேடா போயிருந்தே இத்தன நாளா?
எல்க்ஷன் டயத்ல வண்ட்டுகிறியே ஓட்டு கீட்டு கேப்பியோ?
எது கேட்டாலும் வரம்பு மீறாம கேளு. இவிங்களுக்காக கேட்டா அவிங்க வையிறாய்ங்க அவிங்கிளுக்காக கேட்டா இவிங்க வையிறாய்ங்க!
வாயைத் தெறந்தா ஆதாரம் கேட்கிறாய்ங்க; கொட்டாவி வுட்டா அதே அளவு வாய பொளந்து சமமா வரம்பு மீறலாம்னு ஆதாரம் காட்றாய்ங்க.
காப்பாத்டா ப்பா!
Assalamu alaikkum.
ReplyDeleteBro. Abu Asif @ Abdul Khadir,
Welcome back. How are you?
I'm very fine, Ibraahim Ansari Kakkaa .
ReplyDeleteசபீறு,
ReplyDeleteஉன்னை காப்பாத்த உன்னாலேயே முடியலைனா நான் எப்படி ?
பேசாமே வாய மூடிக்கிட்டு தேர்தல் என்னும் நாடகம் முடியும் வரை
அமைதி கப்பாதுதான் இப்போதைய புத்தி சாலித்தனம்.
கடைபிடிப்பதோ வாயை கொடுத்து மாட்டிக்கொள்வதோ உன் விருப்பம்.
எம் எல் ஏ ராஜினாமா செய்தாலும் இடைதேர்தல் வருமே காக்கா... திங்க் பாஸிட்டிவ்..
ReplyDelete:))
This comment has been removed by the author.
ReplyDelete