நாம் பிறந்த, வளர்ந்த, வாழ்வின் வசந்தம் சூழும் நமதூர் மண் வாசனையை மறக்கத்தான் முடியுமா !?
அதிரை என்ற பெயரைக் கேட்டாலே ஆனந்தம் அப்படியே அட்டாச் ஆகிவிடுகிறது நினைவுகளை அசை போடும்போதே!.
ஃபேஸ்புக் என்ற சமூக பிணைப்பு தளங்களை முகநூல், முகப்புத்தகம், இன்னும் ஏதேதோ...! இப்படியாக கஷ்டப்பட்டு ‘தமிழ்’ வளர்க்க பாடுபடும் அனைவருக்கும் அந்தப் பின்னலின் பின்புலங்கள் தெரிந்திருக்குமா என்பது கேள்விக்குறியே !
நேசிப்பவர்களோடு உறவாடத்தான் என்று நேற்று வரை நினைத்திருந்தால் அதுவும் அறியாமையே இன்றையச் சூழலில். வேடதாரிகளின் வேடந்தாங்கலாகவும் புகழிடமாகவும் இவ்வகை சமூக பிணைப்பு வலைத்தளங்கள் அமைந்து இருப்பதையும் மறுக்க இயலாது.
வளர்ந்து விட்ட அல்லது வளர்ந்துவரும் தகவல் பரிமாற்றங்கள் மனிதகுலத்தின் ‘மதி’மாற்றத்தை எவ்வாறெல்லாம் சூரையாடுகிறது என்பதற்கு ‘முதல் காட்டே’ இவ்வகை சமூக வலைத்தளங்களின் மற்றொரு முகம்.
ஆணென்றும் பெண்ணென்றும் பால் மாற்றி அன்பால் இனம் மாற்றி சமூகச் சீரழிவைத்தான் தூண்டுகிறது என்ற காலம் பின்னுக்குச் சென்று, ஆளுக்கு ஆயிரம் ஐடிகள் (குறியீடுகள்) அனைத்திலும் ஆயிரத்தில் ஒருவனாக முன்னிறுத்திக் கொள்வதில் மும்முரம்.
யாரோடு உறவாடுகிறோம் நட்பு பாராட்டுகிறோம் என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் இவ்வகை கண்ணாமூச்சி விளையாட்டில், உள்ளே நுழைந்திருப்பது பாஷீச தீயசக்திகள். திட்டமிட்டு குறிவைத்து ஆரம்பித்திருக்கும் இந்த குழுமங்கள் அல்லது தனிநபர் குறியீடுகள் அனைத்தும் தரம் பிரித்து அதன் நம்பகத்தன்மையை அவசியம் அறிய வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.
இலகுவான தொடர்புகளை ஏற்படுத்தும் இவ்வகை சமூக பிணைப்பு வலைத்தளங்களில் உலாவும்போது, அங்கே மேயச் சென்ற மான்களைப் போன்று இல்லாமல் கூட்டமாக சென்ற சிங்கங்களாக நிமிர்ந்து நிற்பவர்கள் வெகுச் சிலரே அதில் நம்மவர்கள் வீறுநடையும் போடுகிறார்கள்.
சமீபத்தில் 'அதிரை' என்ற பெயரை எங்கு கேட்டாலும் 'அட! நம்மவூரு' என்ற வாஞ்சையுடன் 'அதிரை'க்குள் என்ன இருக்கிறது என்று பார்க்கும் முன்னரே அங்கே 'லைக்' என்ற முத்திரை குத்துவது வாடிக்கையாகி வருகிறது.
அதிரை என்ற சொற்றொடரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் அதில் என்னுரிமை உன்னுரிமை என்று மல்லுக்கட்ட முடியாது. ஆனால், நம்மவர்கள் அதிகமாக பயன்டுத்தி வந்த இந்தச் சொல் சமூக விரோதிகளாலும், பாஷிச கொடூர சக்திகளாலும் பயன்படுத்தப்பட்டு வருவதை கண்டறிய முடிகிறது.
சமூக பிணைப்பு தளங்கள் அல்லது இணைய குழுமங்கள் அல்லது தனி மின்னாடல் குழுமங்கள் என்று எதிலிருந்து உங்களுக்கு அழைப்போ அல்லது இணையத் தேடலில் சிக்கியதில் சொடுக்கியோ வந்தால் நன்கறியப்பட்டவர்களாக அல்லது அறியப்பட்டவைகளாக இருந்தால் மட்டும் இணைத்துக் கொள்ளுங்கள் இல்லையேல் தவிர்த்து விடுங்கள்.
கோடி கோடியாக கொட்டி கொடியவர்களால் பின்னப்பட்டிருக்கும் இந்த வலையில் சிக்கி விடாதீர்கள், அவர்களால் விரிக்கப்படும் இந்த மாஸ் மீடியா என்ற சிக்கலில் சிக்கிவிடாமல் தனித்து நின்று வென்றெடுங்கள் !
பகிர்வுகளை பத்திரமாக பகிர்ந்து கொள்ள உங்களின் நட்பு வட்டத்தையும் சமூக வட்டத்தையும் வலுப்படுத்த மேற்சொன்ன புல்லுருவிகளை அடையாளம் கண்டு விளகிக் கொள்ளுங்கள்.
அதிரைச் சமூகத்திற்கென்று இருக்கும் குழுமங்கள் அல்லது சமூக பிணைப்பு வலைத்தளங்கள் என்று இருக்குமாயின் அதன் நடத்துனர்கள் / பங்களிப்பாளர்கள் யாரென்று அறிந்து கொண்ட பின்னரே இணையுங்கள், எதையும் பகிர்ந்து கொள்ளுங்கள். மாறாக ஏதும் விபரங்கள் அறியாமல் "அதிரை" என்ற பெயர் தாங்கி யாரென்றே அடையாளம் அறியப்படாத எதுவானாலும் புறக்கணியுங்கள்.
இது ஒரு புலணாய்வின் விளைவாகக் கண்டறிந்த திடுக்கிடும் தகவல்களின் காரணமாக எச்சரிக்கையுணர்வை ஏற்படுத்தவே பதிக்கப்படுகிறது...!
அதிரைநிருபர் பதிப்பகம்
முன்னெச்சரிக்கையுடன் விழிப்பூட்டு பதிவு!
ReplyDeleteபதிவுகள் வருமிடத்தை அறிந்துவிட்டு முழுமையாக பார்த்து/ படித்து விட்டு லைக், சேர் செய்வதால் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதுடன் விசமிகளின் தீங்குகளிலிருந்தும் பாதுகாப்படையலாம்.
ஆம், தற்போதைய சூழ்நிலையில் முகநூலில் உன்மை பெயர்களைக் கொண்டு உலாவுபவர்களை விட போலியான பெயர்களை வைத்து உலாவுபவர்கள் தாம் அதிகம் உள்ளனர். மேலும் நான் கேள்விபட்ட ஒரு செய்தி இது... அதிரையை சேர்ந்த ஒருவர் தன்னை ஒரு பெண்போல் காட்டிக்கொண்டு தன் நண்பனையே ஏமாற்றியுள்ளார். அவரும் இந்த ஐ.டி யில் இருப்பது பெண்தான் என நினைத்துக்கொண்டு தன்னைப் பற்றிய அனைத்து விசயங்களையும் ஒன்று விடாமல் கூறியுள்ளார். இது சில நாள் களித்து இவருக்கு தெரிய வர் இவர்களின் நட்பும் பிரிவானது.
ReplyDeleteWell said & awareness article regarding the misuses of social web sites nowadays. We can say it as an ocean where uprights & culprits can swim easily without any prior experiences & identifications. If any one trusts it blindly as it is, then no one can save us except Allah if he sees in kind.
ReplyDeleteSo we can also call it as "Mask Book" instead Face Book.
ReplyDeleteநேரம் அறிந்து கால கட்டத்திற்கு தேவையான விழிப்புணர்வு பதிவு.
ReplyDeleteபுள்ளிமான்கள் சிங்கங்களின் வலைகளில் வீழ்ந்து விடாமல் இருக்க தரம் அறிந்து பயன் படுத்த தரப்பட்ட ஒரு பதிவு.
இது போன்ற எச்சரிக்கை விஷயங்கள் தங்களை போன்ற சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் அவ்வப்பொழுது ஒவ்வரு சீர் கேடான விஷயங்களுக்கும் தந்து கொண்டிருந்தால் விழிப்புணர்வு என்னும் செடி முளைத்து அது மரமாக வளர்ந்துஅது சமூத்தில் கேடுகெட்ட விஷயங்களை முளையிலேயே கிள்ளி எரிய ஏதுவாக இருக்கும்.
உங்களின் அக்கறை பாராட்டுக்குரியது.
அபு ஆசிப்.
காலத்திற்கேற்ற கட்டாயப்பதிவு.
ReplyDeleteசமுதாய நலனில் அக்கறை கொண்டு பதியப்படும் இதுபோன்ற ஆக்கங்கள் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteமுகனூல் பற்றிய எச்சரிக்கை பதிவு மிகவும் அற்புதமான பாதிவாகவும் நம் சகோதரர்களின் அறியாமையை விளக்கும் பதிவாகவும், அவர்களுக்கு எச்சரிக்கை தரும் பதிவகவும் அமைத்திருப்பது பதிவாளர்களின் மெச்சூரிட்டியை படம் பிடித்து காட்டுகின்றது என்னை பொருத்தவரை இப்படி முகமூடி அனிந்து வருபவர்களின் முகத்திரையை கிழித்தெரிய நாம் கொஞ்சமும் தயக்கம் காட்டக்கூடாது என்பது என்னுடைய நிலைபாடு ஒழுங்கான ஆண் மகனாக இருந்தால் தன் சொந்த முகவரியில் வரவேண்டும் அதுதான் ஆண் மகனுக்க அழகு.
அதிரைமன்சூர்
அடப்பாவிங்களா காவிக் கயவர்களால் விரிக்கப்பட்ட வலையில் ! இயக்க மயக்கத்தில் இருப்பவர்களும் அங்கே தங்களது ஃபோஸ்டரை ஒட்டுகிறார்கள் 'அதிரை' என்ற பெயர் இருப்பதனாலே...
ReplyDeleteஆராய்ந்து அது யாரென்று கூட சிந்திக்க விடமால் செய்து விட்டது !
நீண்ட காலமாக பல சந்தர்பத்தில் எடுத்து வைத்து வருகிறேன், பின்னலின் பின்னால் கன்னி வைக்கப்படுகிறது, கண்ணி களையும் கவரப்படுகிறது.
தேர்தல் நேரம், யார் காலை யார் வாரலாம், யாருக்கு வாரிக் கொடுக்கலாம் என்ற திரைமறைவு சர்வே தொடங்கி விட்டது... அதற்கு இந்த வேடதாரிகளுக்கு வரவேற்பு அளிக்காமல் புறம் தள்ளுங்கள் !
அதோடு, வீடுகளில் இருக்கும் கணினி ஜன்னலையும் கண்காணிங்கள்...! விழிப்புணர்வை வீட்டுக்குள் எடுத்துரையுங்கள்.
இளமையில் வீராப்பாக தெரியும் இந்த வலை, தன் பிள்ளைகள் இளமையை அடையும்போது தவிக்கும் அந்த பரிதவிப்பை கட்டுபடுத்த முடியாது !
முகநூல் என்கிற முதல் வார்த்தையே பொய்யின் பிறப்பிடமாக இருக்கிறது.
ReplyDeleteபல வெறுக்கத்தக்க கதைகள் வெளியாகின்றன.
அதிரையை தொடர்புபடுத்தி வருவது பற்றிய எச்சரிக்கை விடுத்தமைக்கு நன்றி.
புலனாய்வில் கிடைத்த அதிரைப் போலிகளை பட்டியலிட்டால இன்னும் நல்லது.
ReplyDeleteமுகநூல் மூலம் மட்டுமல்ல, பாதுகாப்பற்ற இணையக் கடலில் எல்லா ரூபத்திலும் விஷமிகள் தங்கள் நாச வேலைகளைச் செய்து கொண்டுதான் இருப்பார்கள். நாம்தான் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
ReplyDeleteஉபயோகமானப் பதிவு.
புலனாய்வில் கிடைத்தத் தகவல்கள் தேவைப்படுவோர் தமது சுய அறிமுகத்தோடு அதிரை நிருபர் ஆசிரியருக்கு மின்னஞ்சல் அனுப்பி பெற்றுக்கொள்ளவும். பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பொதுவில் வைக்க முடியாது.
இப்போது தேவையான ஆக்கம்...முதல் 3 பத்திகளை படிக்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் [ எல்லோராலும் புரிந்து கொள்ளக்கூடிய மாதிரி எழுதுவது நல்லது ]
ReplyDeleteஃபேஸ்புக் அக்கவுன்ட் இருப்பதையே ஏதோ ஸ்விஸ்பேங்கில் பணம்போட்டு வைத்திருப்பது மாதிரி "பந்தா" வாக திரியும் சமூகம் இருக்கும்வரை எந்த நாயும் திறந்த வீட்டுக்குள் நுழையும்.
//ஃபேஸ்புக் அக்கவுன்ட் இருப்பதையே ஏதோ ஸ்விஸ்பேங்கில் பணம்போட்டு வைத்திருப்பது மாதிரி "பந்தா" வாக திரியும் சமூகம் இருக்கும்வரை எந்த நாயும் திறந்த வீட்டுக்குள் நுழையும்.//
ReplyDeleteஆமாம். இவர்களின் ரோதனை தாங்க முடியவில்லை. பஸ்சில், குளக்கரைகளில் அப்பப்பா.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மீன் மார்க்கெட்டில்
டேய் ! ரோசாப்பூ ( கண் இல்லாதவன் வச்ச பெயர்) இங்கே வாடா! இந்தக் கொடுவா மீனை படம் எடுத்து பேஸ் புக்கிலே போடு.
இ.அ.காக்கா:
ReplyDeleteஅந்த பெயர் ஃபேஸ்புக் ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் !
இப்போதெல்லாம் !
"அகத்தின் அழகு ஃபேஸ்புக்கில் தெரியும்"
என்று மாற்றிக் கொண்டாலும்...
சரியே இன்றைய இணைய உலகில் இனையாத உறவுகள் அதிகமாக உருவெடுக்கிறது !
//So we can also call it as "Mask Book" instead Face Book.//
ReplyDeleteசெய்யலாமே!
//Ebrahim Ansari சொன்னது…
ReplyDelete//So we can also call it as "Mask Book" instead Face Book.////
காக்கா, ஃபேஸ்புக் பற்றிய ஒரு குறுந்தொடர் தயாராகிறது...
அதன் இயக்கம், பலருக்கு அதன் மீதான மயக்கம், சிலருக்கு ஏன் தயக்கம், இன்னும் அவைகளை நினைத்தாலே கலக்கம்...
இப்படியாக !
//ஃபேஸ்புக் பற்றிய ஒரு குறுந்தொடர் தயாராகிறது...//
ReplyDeleteஇதை இதை இதைத்தான் நான் எதிர் பார்த்தேன் தம்பி.