இயற்கை இன்பம் – 6 5

அதிரைநிருபர் பதிப்பகம் | May 07, 2016 | , , , ,

பூங்கா

இனம்பலவாய்  நிறம்பலவாய்  மணமும்  கமழ
இருக்கின்ற  பூச்செடிகள்  இதயம்  ஈர்க்கும்
மனம்மகிழ  வேண்டுமெனும்  நாட்டங்  கொண்டோர்
மறக்காமல்  சென்றுவரும்  உலகச்  சுவனம்!

கனம்மிக்க  இதயத்தால்  விதியை  நொந்து
கவலையுடன்  வாழ்க்கையினை  ஓட்டும்  மாந்தர்,
சினங்கொண்டோர்,  மனத்துள்ளே  இறுக்கங்  கொண்டோர்,
சிறியோரும்  மகிழ்வென்னும்  கனியைக்  கொய்வார்!

அதிரை அஹ்மத்

5 Responses So Far:

Blood circulation said...

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

அற்ப ஆயுசு
வாழட்டும் கொஞ்சநாள்
பூக்களைப் பறிக்காதீர்:

Blood circulation said...

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

அற்ப ஆயுசு
வாழட்டும் கொஞ்சநாள்
பூக்களைப் பறிக்காதீர்:

crown said...

Ahamed Ameen சொன்னது…

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

அற்ப ஆயுசு
வாழட்டும் கொஞ்சநாள்
பூக்களைப் பறிக்காதீர்:
---------------------------------

அஸ்ஸலாமுலைக்கும். காக்கா ஒரு தடவ கவரும் வகையில் சொன்னா போதுமே ஏன் ஒவ்வொரு முறையும் இருமுறை பதிவு?உங்களுக்கு இதற்குமுன் சுட்டிகாட்டியிருந்தேன்.உங்களுக்கே உங்கள் எழுத்தில் நம்மிக்கை வர எழுதுங்கள்,பல முறை பதிந்தாலும் நல்லா சொல்லாத எழுத்து ஒருமுறையும் மனதில் பதியாது!

Blood circulation said...

ஒருமுறைதான் பதிவிடுகிறேன். ஏனோ தெரியவில்லை, இருமுறை பதிவாகிறது. விளக்கவும்.

Blood circulation said...
This comment has been removed by the author.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.