Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label அஜிஜுதீன். Show all posts
Showing posts with label அஜிஜுதீன். Show all posts

இதை படிங்க முதல்ல - நன்றி மறப்பது நன்றன்று 11

அதிரைநிருபர் | October 27, 2010 | , ,

வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். அது போல நமக்கு அல்லாஹ் வழங்கிய எண்ணிலடங்கா அருட்கொடைகள் அது திரும்பப் பெறப்படும்போது நமெக்கெல்லாம் புரிய வரும். உலகில் மனிதனாய் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்: அல்லாஹ் சிலரை வறுமையால் சோதிக்கின்றான்.சிலரை நோய்,நொடிகளால் சோதிக்கின்றான், இன்னும் சிலர்களை கடன் தொல்லைகளால் சோதிக்கின்றான்.

ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள். நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விடவோ சோதனைகுள்ளக்கப்படுகிறார்கள் என்று.

சரியாக சிறுநீர் வெளியேறாமல், வயது முதிர்ந்த ஒரு மனிதர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், அங்கு அவருக்கு சிறுநீர் வெளியேற்றுவதற்கான கருவிகளைப் பயன்படுத்தி சிறுநீர் வெளியேற்றப்படுகிறது. சில நாட்களுக்குப்பின்பு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார், அவருக்கு செய்யப்பட மருத்துவத்திற்காக பில் கொடுக்கப்படுகிறது. அதனை பார்த்துவிட்டு பெரியவரின் கண்களில் கண்ணீர்த்துளிகள் வழிந்தோடியது, இதைப்பார்த்த மருத்துவர்கள், ஏன் பெரியவரே அழுகின்றீகள், என்று கேட்டதற்கு பதிலேதும் பேசாமல் மறுபடியும் அழத்தொடங்கினார். அருகில் உள்ள மற்ற உறவினர்கள் அனைவரும் மறுபடியும் கேட்க, கண்களைத்துடைத்தவாறு பெரியவர் சொன்னார், "நான் என்னிடம் கொடுக்கப்பட்ட மருத்துவ செலவைப்பார்த்து அழுகின்றேன் என்று யாரும் நினைத்து விடவேண்டாம், இரண்டு நாட்கள் சிறுநீர் வெளியேற்றியதற்காக என்னிடம் இவ்வளவு பணம் கேட்கின்றீர்களே, அருளும் அன்பும் உடைய எனது இறைவன், கடந்த 60 வருடங்களாக சிறுதும் தடங்கலின்றி சிறுநீர் வெளியாக்கியதர்காக இதுவரை என்னிடம் ஒரு பைசா கூட கேட்டு பில் அனுப்பவில்லையே! என்று எனது இறைவனின் அருளை நினைத்து அழுகின்றேன் என்றார்.

ஆக ஒருவருக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அருட்கொடைகள், திரும்பப்பெறப்படும்போதுதான் அதன் அருமை தெரிய வரும். உலக விஷயங்களைப் பொறுத்துவரை நமக்கு கீழ்நிலையில் உள்ளவர்களைப் பார்த்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் குணம் நம்மிடையே இருந்தால் நம்முடைய குறைகள் சற்றே நிமிடத்தில் மறைந்து விடும்.

அல்லாஹ் தன் திருமறையில் முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஹலாலான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள். அல்குர்ஆன் - (16:114) என்று கூறியிருக்கிறான்.

கால் வழியால் அவதிப்படுபவர்கள் கால்களே இல்லாதவர்களைப் பார்த்து, தனக்கு கால்களை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல் வேண்டும்.

சிறுநீர் சீராக கழிக்க முடியாமல் அவதிப்படுபவர்கள், இரண்டு சிறுநீரகங்களும் செயழிழந்து உயிருக்காக போராடும் எத்தனையோ மனிதர்களைப் எண்ணிப் பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்துதல் வேண்டும்.

அதற்காக, நபி (ஸல்) அவர்கள் “நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள்” என்ற கருத்துப்பட கூறியிருப்பதை யாரும் மறந்து விடுதல் கூடாது

சொந்தங்களைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் நமக்கெல்லாம் தொலைபேசி எனபது இன்றியமையாத ஒன்று என்பதை நாம் அறிந்ததே. இதன் மூலம் நினைத்த மாத்திரத்திலேயே நாம் சொல்ல நினைப்பதை பரிமாறும் அளவுக்கு தொழில்நுட்பத்தை அல்லாஹ் நமக்கு அருளி இருக்கிறான் .

எனக்கு தெரிந்த ஒரு வாய்ப்பேச முடியாத நபர் துபாயில் வேலை செய்துவருகிறார் அவரால் தன் தாயிடமோ தந்தையிடமோ ஏன் தன் பாசமிகு மனைவியிடம் கூட அவரால் பேச முடியாது. எதாவது ஒரு செய்தியை தன குடும்பத்தாரிடம் சொல்லவேண்டுமெனில் சில தூரம் நடந்து வந்து தன் நண்பரிடம் விஷயத்தை விளக்கி தன் குடும்பத்தாரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்வார்.

அவருக்கு சத்தம் என்ற சொல்லுக்கு இதுவரை அர்த்தம் தெரியாது.

அவருக்கு தன் பாசமிகு தாய், தந்தை, மனைவியின் குரல்கள் எப்படி இருக்குமென்று தெரியாது

அவரால் தனக்கு என்ன நோய் ஏற்பட்டிருக்கிறது என்று கூட மருத்துவரிடம் விளக்கி கூற முடியாது

நம்மெல்லாம் அலாரம் வைத்து எழுந்திருப்பதுபோல் அவரால் எழுந்திருக்க முடியாது

இதுவெல்லாம் என் கண்ணிற்கு தெரிந்த சில விஷயங்களே, எனக்கு தெரியாமல் எத்தனை விஷயங்களிலோ அவர் படும் துயரத்தை அல்லாஹ் ஒருவனே அறிவான்.

எனக்கு இப்படி ஒரு குறையை அல்லாஹ் தந்துவிட்டானே என்று ஒரு முறை கூட அவர் சொல்லி நான் கேட்டதில்லை.

மாறாக சில சமயங்களில் அல்லாஹ் எனக்கு அழகிய கண்களைக் கொடுத்து இருக்கின்றானே என்பதை நினைத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியது என் நினைவிற்கு வருகிறது.

அப்படியானால் நமது உடல் உறுப்புக்களை ஒரு சிறிதும் குறை இல்லாமல் படைத்த நம் அல்லாஹ்வுக்கு நாம் எவ்வளவு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம் என்பதை சிந்தித்து அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் அடியார்களாக ஆவோமாக ஆமீன்

நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் - 4:147)

-- Azeezudheen.

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்? 24

அதிரைநிருபர் | August 03, 2010 | , , ,

அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். . அதிர்ந்து பேச‌மாட்டான். மிக‌ அமைதியான‌வ‌ன்.
                                                                                              
சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. இந்த‌ கோட்டிலிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டுவ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி.

பெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், துபாயில்  ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில் அவ‌னுக்கு வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் இந்திய ரூ.10000.

பிற‌ந்த‌து முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் த‌ன் பெற்றோரை பிரிந்த‌தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின்
 2  வருடத்துக்கு  ஒரு முறைதான் வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச் செய்தாலும், த‌ன் குடும்ப‌ம் ந‌ல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது அவ‌சிய‌ம் என்று க‌ருதி த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.

ப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை ஒழிய‌ த‌ன் க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும் என்ப‌து அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. .
காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு ம‌ணிக்கு முன்னே அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.

அன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில் உள்ள‌து அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே விழுந்த‌து அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்!
 





அங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள் அவ‌னுடைய‌ டீமுக்கு த‌க‌வ‌ல் அளித்து அவ‌னை ம‌ருத்துவ‌ம‌னைக்குக் கொண்டு செல்ல‌ ஏற்பாடு செய்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ரிசோதித்த‌ ம‌ருத்துவ‌ர் ம‌றுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்". 'டெட் ஆன் அரைவ‌ல்' என்று ரிப்போர்ட்டில் ப‌திவு செய்தார்.
பின்ன‌ர் அவ‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது தெரிய‌வ‌ந்த‌து. அவ‌னுக்கு புகை, குடி என்று எந்த‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஒவ்வொரு மாத‌மும் அவ‌னுக்கென்று இந்திய ரூ.3500 எடுத்துக்கொண்டு மீதி ப‌ண‌த்தை த‌ன் குடும்ப‌த்துக்கு அனுப்பிவிடுவான். அந்த‌ 3500ல் போக்குவ‌ர‌த்து, அலைபேசி, உண‌வு ஆகிய‌வ‌ற்றிற்கான‌ செல‌வுக‌ள் அட‌ங்கும். செல‌வைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ன் மேற்கொண்ட‌ ஒரு முடிவு. தினமும் காலை உண‌வைத் த‌விர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை ம‌ட்டுமே உண்ணுவ‌து.

இந்த‌ ப‌ழ‌க்க‌ம் வெகு நாட்க‌ளாய்த் தொட‌ர்ந்து உட‌லுக்குள் வாயு உருவாகி அது இத‌ய‌த்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வ‌ய‌தில் மார‌டைப்பு! இது ஏதோ க‌ற்ப‌னையாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரி அல்ல‌. அவ‌னுடைய‌ உண‌வு ப‌ழ‌க்க‌த்தை அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் கூற‌க்கேட்டு அறிந்த‌ பின் ம‌ருத்துவ‌ர் சொன்ன‌து.

ப‌ண‌ம் ஒன்றையே பிராதான‌மாக‌க் க‌ருதி ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருக்கும் இந்த‌ யுக‌த்தில், ந‌ம்மில் பெரும்பாலானோர் காலை உண‌வைத் த‌விர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும் கார‌ண‌ம்.."டைம் இல்ல‌". சாப்பிடுவ‌த‌ற்குக் கூட‌ நேர‌மில்லாம‌ல் அப்ப‌டி என்ன‌ கிழித்துவிட‌ப் போகிறோம்?

இத‌ற்கு மேல் இதைப்ப‌ற்றி நீங்க‌ளே சொல்லுங்க‌ள்!


பி.கு: நானும் இந்த‌ ம‌ட‌த்த‌ன‌மான‌ கார‌ண‌த்தைக் காட்டி ப‌ல‌ நாட்க‌ள் காலை உண‌வைத் த‌விர்த்திருக்கிறேன். அவ‌ன் ம‌ர‌ண‌ம்...என‌க்கொரு பாட‌ம். அன்றிலிருந்து என்னுடைய‌ காலை உண‌வு நேர‌ம் 8 அல்ல‌து 8:30க்குள்.
காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது; எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், நம் வண்டியை ஓட்ட "பெட்ரோலாக" தேவைப்படும் உணவு அது.


---Azeezudheen

சகோதரர் சாகுல் கேட்டதுக்காக......

Photos: Thanks to Sisiter Jaleela's Blog and Sister Malikka's Blog

கற்பா? படிப்பா? 4

அதிரைநிருபர் | August 01, 2010 | , , ,

கோ எஜுகேசன் என்ற பெயரில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நடக்கும் அனாச்சாரங்கள் மிக அதிகமாகிக்கொண்டிருக்கும்         இந்த காலகட்டத்தில் பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியாக இந்த கட்டுரையை சில மாற்றங்களுடன் வெளியிடுகிறோம்.  "இந்த கோ எஜுகேசன் தான் இளைய சமுதாயம் சீரழிவதற்கு காரணம்" என்று மனோ தத்தவ நிபுணர் பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு சவுதியில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார்கள் என்பதை இங்கு நம் அனைவருக்கும் நினைவுப் படுத்த விரும்புகிறோம். இக்கட்டுரை பெண்களின் படிப்புக்கு எதிரானாது அல்ல என்பதையும் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

கற்பா? படிப்பா?

பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள்கிறார்கள்; பெரும்பாடு படுகிறார்கள். பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு ஒன்றும் தடையில்லை. குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்குப் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் பள்ளிப் படிப்புக்கு மேலான படிப்புக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் கற்பைப் பறி கொடுக்கும் பேரபாயம் காத்திருக்கின்றது என்பதைப் பின்வரும் சில எடுத்துக் காட்டுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆட்டோ அல்லது வேன் பயணம்

சிலர் தங்களது பருவமடைந்த வயதுப் பெண்களை தன்னந்தனியாக, காரில் அல்லது ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றனர். சிலர் ஆட்டோவில் நான்கைந்து சக வயதுப் பெண்களுடன் அனுப்பி வைக்கின்றனர். ஆட்டோ ஓட்டுனர்களும் வாலிப வட்டங்கள் தான் என்பதைப் பெற்றோர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

ஆட்டோ பறக்கின்ற போது, ஆட்டோவே அதிர்கின்ற வகையில், அமர்க்களப்படுகின்ற வகையில் துள்ளிசைப் பாடல்கள் காதுகளைப் பிளக்கின்றன. பாடல் வரிகள் அத்தனையும் கொத்துக் கொத்தாய் ஆபாச வார்த்தைகளை வெடித்துத் தள்ளுகின்றன. உள்ளிருக்கைகள் நிரம்பி வழிந்து, ஓட்டுனரை ஒட்டியிருக்கின்ற பலகையில் பருவ வயதுப் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஒட்டுகின்ற விரச விளையாட்டுக்கள்.

பள்ளியில் கொண்டு விட்ட பின்னர் மாலையில் படிப்பு முடிந்ததும் மாணவிகள் - நம் சமுதாயப் பெண்கள் வெளியே வருகின்றனர்.வாசலில் ஆட்டோவுடன் காத்து நிற்கின்றான் ஆட்டோ ஓட்டுனர். அவனுக்குரிய காக்கிச் சீருடையை அணியாமால் கலர் கலர் பேண்ட், சர்ட் அணிந்து இன் செய்து, சீவிச் சிங்காரித்து எடுப்பாக நிற்கின்றான்.

பள்ளிக்கூடத்தில் மாணவிகளை விடுவது 4 மணி, நான்கரை மணி, 5 மணி என்று முறை வைத்து விடுகின்றார்கள். அல்லது டியூசன் போன்ற காரணங்களால் மாணவிகளின் வருகை நேரம் மாறுபடுகின்றது. இந்த ஆட்டோக்காரன் கடைசி அணி வருகின்ற வரை, ஏற்கனவே வந்த பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கின்றான்.

மீண்டும் அதே உரசலுடன் நம் பிள்ளைகளை வீட்டில் விட்டுச் செல்கிறான். அதன் பின்னர் ஆட்டோ டிரைவர் கரையேறி விட்டாலும் அவனைத் துரத்துகின்ற கனவு அலைகளிலிருந்து அவன் கரையேறுவதில்லை. மறுநாள் காலையில் அதே சொகுசுப் பயணம். வேன் டிரைவர்களும் இதே போன்று தான். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் பெரும்பகுதி இந்த நிலை தான். இப்போது சிந்தியுங்கள். இந்தக் கல்லூரிப் படிப்பு தேவையா என்று!

ஆட்டோ, வேன் பயணம் தான் இப்படி என்றால் பஸ் பயணமும் பாதுகாப்பாக இல்லை. நகரத்தை நோக்கி வருகின்ற பஸ்கள் தன்னுடைய கொள்ளளவையும் தாண்டியே ஆட்களை நிரப்புகின்றன. இங்கும் பெண் பித்தர்கள் சபலப் புத்தியுடன் பெண்களின் உடல் உரசலுக்கு வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்து ஏங்கியே பயணிக்கின்றனர். நடத்தை கெட்ட சில நடத்துனர்கள், ஓட்டுனர்களுடன் வழிதவறும் பெண்களும் இருக்கிறார்கள். இது போன்ற விவகாரங்களும் சமுதாயத்தில் சந்தி சிரிக்கின்றன.

பட்டப்படிப்புக்காக வெளியூர்களுக்குச் செல்லும் போது, குழுவாகச் செல்லும் இப்பெண்களின் ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கின்றது. ஆர்ப்பரித்துச் சப்தமிடுவது, பாடல்களைப் பாடி ஆடுவது, கும்மாளமிடுவது என கல்லூரிப் பெண்கள் நடத்தும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. பேருந்து நடத்துனர்களுக்குக் கொண்டாட்டம் தான். கணவன், மனைவி போல் அருகருகே அமர்ந்து கொண்டு கொஞ்சிக் குலாவுவது சர்வ சாதாரணமான ஒன்று!

பள்ளி, கல்லூரியில் மட்டுமல்ல! வருகின்ற வழிப் பயணத்திலும், வழிப் பாதையிலும் பெண்களின் கற்புகளைப் பறிப்பதற்கு ஷைத்தான் தன் பரிவாரங்களுடன் முற்றுகையிட்டு நிற்கின்றான். இப்படி ஆபத்துக்கிடையில் பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு தேவையா என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

பிற மதத்தவருடன் காதல் பயணம்

கல்லூரிக்குச் செல்லும் வயதுப் பெண்களின் அவலம் இத்துடன் நிற்கவில்லை. பிற மதத்தவருடன் கற்பைப் பகிர்கின்ற, உள்ளத்தை உறையச் செய்யும் படுபாதகச் செயலும் பகிரங்கமாகவே நடைபெறுகின்றது. இவ்வாறு கூறுகையில், நம் சமுதாய ஆண்களுடன் ஓடலாமா? என்று கேட்கலாம். யாருடன் சென்றாலும் விபச்சாரம் தான். ஆனால் பிற மதத்தவருடன் ஓடும் போது கொள்கையும் சேர்ந்தே போய் விடுகின்றது. கொள்கை மாறுதல் என்பது இஸ்லாத்தில் கொடிய பாவமாகும்.

உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இbhவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:217)

ஓடும் பெண்களும் வாடும் பெற்றோரும்

இவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு வித்திட்டது எது? இந்தக் கல்லூரிப் படிப்பு! பெற்றோர்களின் கண்டு கொள்ளாத போக்கு! இம்மை வாழ்விற்காக மறுமையைப் பலியாக்கி நம்முடைய பிள்ளைகளை நரகப் படுகுழியின் விறகுகளாக்கத் துணிந்து விட்டோம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.  (அல்குர்ஆன் 66:6) இந்த வசனத்தைக் கவனிக்கத் தவறி விட்டோம்.

தமிழகத்தின் தென் பகுதியில் முஸ்லிம்கள் நிறைந்த ஒரு சில ஊர்களில் கல்லூரி, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்கள் பிற மதத்தவர்களுடன் ஓடுவது சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது.

பெண் பிள்ளைகள் ஓடுகின்றனர்; பெற்றோர்களோ வாடிக் கொண்டிருக்கின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக கவலையில் ஆழ்ந்து கிடக்கின்றனர்.

பள்ளிப் படிப்புக்கே இந்தக் கதி என்றால் கல்லூரிப் படிப்பிற்கு என்ன கதி?

எனவே இத்தகைய விளைவுகளைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஒரு பெண்ணுக்கு அவசியத் தேவை கற்பா? கல்லூரியா? ஈமானா? இறை மறுப்பா? என்று சிந்திக்க வேண்டும்.

நம் மகள் கற்பிழந்தால் அல்லது மதம் மாறினால் அவள் செய்த பாவத்தில் நமக்குப் பங்கில்லை என்று நாம் தப்ப முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாüயாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்.  (நூல்: புகாரி 2409)

இந்த ஹதீஸின்படி பெற்றோர்களும் அந்தப் பாவத்தின் சுமையை மறுமையில் சுமந்தே ஆக வேண்டும். கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டும்.

ஒரு பெண்ணை உயர் கல்வி படிக்க வைக்கும் போது சாதகங்களை விட, பாதகங்களைத் தான் பார்க்க வேண்டும். அப்படியே ஒருவர் தமது மகளைப் படிக்க வைக்க வேண்டுமானால்...

1. குறைந்தபட்சம் அந்தப் பள்ளி அல்லது கல்லூரி ஊருக்குள்ளேயே அமைந்திருக் வேண்டும். நம்முடைய கண்காணிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.

2. உள்ளூராக இருந்தாலும், வெளியூராக இருந்தாலும் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியாக இருக்க வேண்டும். (அதிலும் ஆண் நிர்வாகிகள் ஆட்டம் போடுகின்ற, வயதுப் பெண்களிடம் சில்மிஷம் செய்கின்ற பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்)

3. தூரத்தில் இருந்தால் ஆட்டோ, கார் அல்லது வேன் போன்றவற்றில் தனித்துச் செல்லக் கூடாது.

"கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர ஒரு பெண் மூன்று மைல்கள் தூரத்திற்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது'
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),  நூல்: தப்ரானி


கற்பா? படிப்பா? என்ற இந்தத் தலைப்பில்  பள்ளி கல்லூரிப் படிப்பில் ஏற்படுகின்ற பாதகங்களைப் பட்டியலிடும் போது பள்ளி, கல்லூரியில் படித்த பெண்கள் எல்லாம் தவறானவர்கள் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. அனைத்து ஆட்டோ, பஸ், வேன், கார் ஓட்டுனர்களும் தவறானவர்கள் என்று எண்ணவேண்டாம், எந்தனையோ நல்ல குணம் உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இங்கு எழுதப்பட்டவை அனைத்தும் நடப்பவை, நடந்து கொண்டிருப்பவை. இந்தத் தீமைகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் எச்சரிக்கை செய்தியாக  இந்தக் கட்டுரை இங்கே பதியப்பட்டுள்ளது.

ஆக்கம்: அஜிஜுதீன்


எச்சரிக்கைகள் தொடரும்....


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு