Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label அபுஇபுறாஹிம். Show all posts
Showing posts with label அபுஇபுறாஹிம். Show all posts

தமிழ்நாடு சட்டசபை வரலாறு 27

அதிரைநிருபர் | May 16, 2016 | ,

விரிந்த வலையிலும் வாய்ப்புகள் வசப்பட்டச் சூழலில் வாசித்த புத்தகங்களிலும் சிக்கியவைகளை சான்றாக எடுத்து இங்கே தகவலாக பதிந்தால் நீங்களும் வாசிச்சுடுவீங்கதானே !

1773ம் ஆண்டின் முறைப்படுத்தும் சட்டத்தின்கீழ் வங்காள ஆளுநர் அனைத்து மாகாணங்களின் தலைமை ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) நியமிக்கப்பட்டார்.

1833 மற்றும் 1853 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்த சட்டங்களின்படி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கின.

1861 மற்றும் 1892 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட 'இந்திய கவுன்சில்கள் சட்டஒத்தின்கீழ் சட்டம் இயற்றும் மன்றங்கள் உருப்பெற்றன.

1861ம் ஆண்டு சட்டத்தின்கீழ் முதல் முறையாக சட்டமன்றங்களுக்கு தேர்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

1919ம் ஆண்டின் இந்திய அரசு சட்டத்தின்கீழ் 'சென்னை மாகாண சட்டமன்றம்' 1921-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது - ஆயுட்காலம் மூன்றாண்டுகளாகும்.

1921ம் ஆண்டு ஜனவரி 9-ம் நாள் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

1923ம் மற்றும் 1926ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களின் அடிப்படையில் சென்னை மாகாணத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது சட்டமன்றங்கள் அமைந்தன.

1930ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட நான்காவது சட்டமன்றத்தின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டு,

1935ம் ஆண்டின் இந்திய அரசு சட்டத்தின்கீழ் மாகாண தன்னாட்சி 1937-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் வரை செயல்பட்டது.

1935ம் ஆண்டின் சட்டத்தின்கீழ் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு 'மேல் அவை', 'கீழ் அவை' என இரு அவைகள் உருவாக்கப்பட்டன.

சட்ட மேலவையில் 35 பொது உறுப்பினர்களும், ஏழு இஸ்லாமிய உறுப்பினர்களும், ஒரு ஐரோப்பிய உறுப்பினரும், மூன்று இந்திய கிறிஸ்துவ உறுப்பினர்களும் இருந்தனர்.

சென்னை மாகாண சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 215-ஆக இருந்தது. இதில் 146 இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - 30

பிற்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்தோர் மற்றும் பழங்குடியினர் - 1

முஸ்லீம்கள் - 28

ஆங்கிலோ இந்தியர்கள் - 2

ஐரோப்பியர்கள் - 3

இந்திய கிறிஸ்தவர்கள் -8

தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் - 6

நிலச்சுவான்தார்கள் - 6

பல்கலைக்கழகம் - 1

தொழிலாளர் பிரதிநிதிகள் - 6

பெண்கள் - 8

1935ம் ஆண்டு இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் மாகாணங்களை பொறுத்தவரை 1937-ம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது.

1937ம் ஆண்டு ஜுலை மாதம் தேர்தல் நடத்தப்பட்டு சென்னை மாகாணத்தின் முதலாவது சட்டமன்றம் அமைக்கப்பட்டது.

1939ம் ஆண்டு அக்டடோபர் மாதம் இரண்டாம் உலகப் போரை ஒட்டி அவசரகால பிரகடனம் அறிவிக்கப்பட்டதால் அமைச்சரவை பதவி விலகியது.

1946ம் ஆண்டு மார்ச் மாதம் போர் முடிந்ததும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மே மாதம் இரண்டாவது சட்டமன்றம் அமைக்கப்பட்டது.

1952ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது.

1952ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி சென்னை மாநிலத்தின் முதலாவது சட்டமன்றம் அமைக்கப்பட்டது.

1956ம் ஆண்டு நவம்பர் முதல் நாளிலிருந்து 'மாநிலங்கள் சீரமைப்புச் சட்டம்' நடைமுறைக்கு வந்தது.

1956ம் ஆண்டு 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக சென்னை மாநில சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 205-ஆக உயர்ந்தது.

1957ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து இரண்டாவது சட்டப்பேரவை ஏப்ரல் 1ம் தேதி அமைக்கப்பட்டது.

1959ம் ஆண்டு சென்னை மாநிலத்திற்கும் ஆந்திர மாநிலத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட எல்லை சீர்திருத்தத்தின் விளைவாக ஆந்திர மாநில சட்டப்பேரவையின் ஒரு உறுப்பினர் இடம் சென்னை சட்டப்பேரவைக்கு மாற்றப்பட்டது.

1961ம் ஆண்டு 'இரட்டை உறுப்பினர் தொகுதி'கள் முறை நீக்கப்பட்டன. இதற்கு பதிலாக 38 கூடுதல் 'ஒரு உறுப்பினர்' தொகுதிகள் உருவாக்கப்பட்டன.

1962ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தல்களை தொடர்ந்து மார்ச் 3-ம் தேதி மூன்றாவது சட்டப்பேரவை அமைக்கப்பட்டது.

1965ம் ஆண்டு 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக சென்னை சட்டப்பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கை 234-ஆக உயர்த்தப்பட்டன.

1967ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தல்களின் விளைவாக மார்ச் முதல் தேதி சென்னை மாநிலத்தின் நான்காவது சட்டப்பேரவை அமைந்தது.

1969ம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாள் 'சென்னை மாநிலம்' 'தமிழ்நாடு' மாநிலமாக பெயர் மாறியது.

1971ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி அமைக்கப்பட்ட ஐந்தாவது சட்டப்பேரவை 1976ம் ஆண்டு ஜனவரி 31ம் நாள் கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி முதல் முறையாக அமல் செய்யப்பட்டது.

1977ம் ஆண்டு ஜுன் 30-ம் தேதி ஆறாவது தமிழக சட்டப்பேரவை அமைக்கப்பட்டது.

1975ம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக மாற்றியமைக்கப்பட்ட 234 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது.

1980ம் ஆண்டு இந்த சட்டப்பேரவையும் கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது.

1980ம் ஆண்டு ஜுன் 9-ம் தேதி ஏழாவது சட்டப்பேரவை அமைக்கப்பட்டன.

1985ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி எட்டாவது சட்டப்பேரவையும் அமைக்கப்பட்டன.

1988ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி எட்டாவது சட்டப்பேரவை கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.

1986ம் ஆண்டு எட்டாவது சட்டப்பேரவையில் தமிழக 'சட்ட மேலவை'யை நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து அதே ஆண்டின் நவம்பர் 1ம் தேதி தமிழக 'சட்ட மேலவை' கலைக்கப்பட்டது.

1937ம் ஆண்டு இரு அவைகளாக உருவாக்கப்பட்ட தமிழக சட்டமன்றம்

1986ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஒரே அவையைக் கொண்ட சட்டமன்றமாக உருவெடுத்தது.

1989ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அமைந்த 9-வது சட்டப்பேரவை 1991-ம் ஆண்டு ஜனவரி 30-ம் நாள் கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

1989ம் ஆண்டு ஏற்கனவே கலைக்கப்பட்ட 'சட்ட மேலவை'யை மீண்டும் உருவாக்க இந்த சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1991ம் ஆண்டு ஜுன் 24-ம் தேதி 10-வது சட்டப்பேரவை அமைக்கப்பட்டது.

1991ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி 'சட்ட மேலவை'யை மீண்டும் உருவாக்கும் தீர்மானத்தை ரத்து செய்வதற்கான தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

1996ம் ஆண்டு மே 13ம் தேதி 11-வது தமிழக சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது.

2001ம் ஆண்டு மே 10ம் தேதி நடைபெற்ற தேர்தலை தொடர்ந்து மே 14ம் தேதி 12-வது தமிழக சட்டப்பேரவை அமைக்கப்பட்டது.

2006ம் ஆண்டு மே 8ம் தேதி 13-வது தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது.

1951ம் ஆண்டு இறுதியில் துவங்கி 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் இந்தியா குடியரசு ஆனதற்கு பின் தமிழக சட்டசபைக்கான முதல் பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் ஒன்பது கட்டங்களாக நடைபெற்றது.

1957ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது தேர்தலில் மாநிலங்கள் சீரமைப்பின் விளைவாக தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 205 ஆக குறைந்தது.

1965ம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்தது.

1975ம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் அடிப்படையில்தான் 1977-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. 234 தொகுதிகளில் அப்போது தேர்தல் நடந்தன.

1977ம் ஆண்டில் இருந்து 2006-ம் ஆண்டு வரையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல்கள் 1975-ம் ஆண்டு சீரமைக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் நடைபெற்று வந்தன.
2007ம் ஆண்டு நடைபெற்ற 'தொகுதி சீரமைப்'பின்படி தொகுதிகள் சில மாற்றி அமைக்கப்பட்ட போதும் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

2011ம் ஆண்டு சட்டபைத் தேர்தலுக்காக காத்திருகோம்...

வலை மேய்ச்சலில் கிடைத்த விளைச்சல்களை குவியலாக்கித் தந்தவன் :

அபுஇபுறாஹிம்.

சுட்டும் விரலே சுட்டிக் காட்டிடு - வாக்கு அளிக்க வழிமுறைகள் ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 11, 2016 | , ,

வாக்கு அளிப்பது இந்திய இறையான்மையில் ஜனநாயக உரிமை, இந்தத் தேர்தலில் கட்டாயம் உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள். அதற்கான இலகுவான வழிமுறைகள்.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம். ஆனாலும், உங்கள் ஓட்டை வேறு யாரும் போட்டுவிடாமல் இருக்க, முன்னதாக ஓட்டுப் போடச் செல்வதே சிறந்த வழி.

உங்கள் வீட்டுக்கு அருகிலிருக்கும் வாக்குச் சவடிக்குச் செல்லுங்கள், மற்றவர்கள் அழைத்தார்கள் என்று வேறு வாக்குச் சாவடிக்கு வேடிக்கைப் பார்க்கச் செல்லாதீர்கள்.

வாக்குச்சாவடியில் ஆண், பெண், மாற்றுத் திறனாளிகள், முதியோர்என்று தனித்தனி வரிசைகள் இருக்கும். உங்களுக்கு என்று உள்ள வரிசையில் நின்று பொறுமை காத்திருங்கள். பெண்களுக்கும், முடியாதவர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள்.

எவ்விதப் பதற்றம் இல்லாமல் நிதமான வாக்கு பதியுங்கள், ஒவ்வொரு வாக்காளராகவே உள்ளே அனுமதிப்பார்கள்.

வாக்குச்சாவடிக்குள் நுழைந்தவுடன் முதல் வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா, அந்தப் பெயருக்கு உரியவர் நீங்கள்தானா என்பதைப் பரிசோதிப்பார். வாக்காளர் அடையாள அட்டையையும் தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாளச் சீட்டையும் அவரிடம் காண்பிக்க வேண்டும். அதன் பிறகு, அவர் உங்கள் பெயரையும் வரிசை எண்ணையும் குறிப்பிடுவார். இதன் மூலம், தேர்தல் (கட்சி வேட்பளர்களின்) முகவர்கள் உங்களின் இருப்பை அறிந்து கொள்வார்கள். அடுத்து, நீங்கள் இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்ல வேண்டும்.

இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்லும்போது, அவர் உங்களின் இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் அழிக்க முடியாத மையைத் தடவுவார். அதன் பிறகு, வாக்காளர் பதிவேட்டில் உள்ள வாக்காளர் பட்டியலில் உங்கள் வரிசை எண்ணைப் பதிவு செய்வார். அதன் பிறகு, அந்தப் பதிவேட்டில் நீங்கள் கையெழுத்திட வேண்டும் அல்லது இடது கைப் பெருவிரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும். அவர் கையெழுத்திடப்பட்ட அடையாளச் சீட்டை உங்களுக்குத் தருவார். அடுத்து, நீங்கள் மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்ல வேண்டும்.

மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலரிடம் செல்லும்போது, இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலரால் வழங்கப்பட்ட அடையாளச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, கட்டுப்பாட்டு இயந்திரத்தின் பொத்தானை இயக்குவார். இப்போது நீங்கள் வாக்களிப்பதற்கான அனுமதியைப் பெற்று விட்டீர்கள்.


ஓட்டுப் போடும் இயந்திரம் இருக்கும் மறைவான வைத்திருக்கும் இடத்துக்கு சென்றதும், ஏற்கனவே முடிவு எடுத்திருந்தாலும் அல்லது அதுவரை முடிவுக்குள் வரவில்லை என்றால் ஒரு கணம் ஆழ்ந்து யோசியுங்கள். தகுதி உடைய சரியான நபரை மனதில் தேர்ந்தெடுங்கள். முக்கியமாக, உங்களுக்கும் சமுதாயத்திற்கும் நீங்கள் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். வேட்பாளருக்கு உரிய பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக இருக்கும் நீலப் பொத்தானை அழுத்துங்கள். 'பீப்’ ஒலி கேட்கும். அதேசமயம், நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக சிவப்பு ஒளி ஒளிரும். ஒரு முறை பொத்தானை அழுத்தினால் போதும். இப்போது உங்கள் ஓட்டு பதிவாகிவிட்டது.

நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமான ரகசியம். வாக்குச்சாவடிக்குள் நின்றுகொண்டு நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதைத் தெரிவித்தால், உங்களை வாக்களிக்க அனுமதிக்க மாட்டார்கள். யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதைத் தெரிவித்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல, வாக்களிப்பதைப் படம் எடுப்பதும் கூடாது அங்கே மொபைல் ஃபோன் எடுத்துச் செல்லாதீர்கள்!

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால், கவலை வேண்டாம். தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாளச் சீட்டு உங்களிடம் இருந்தால்போதும். தாராளமாக ஓட்டுப் போடலாம். அதுவும் இல்லையென்றால், நீங்கள் ஓட்டுப் போட முடியாது.

சிலருக்கு இப்படியான பிரச்னைகள் வரலாம். அதாவது, பட்டியலில் உங்கள் பெயர் இருக்கும். ஆனால், உங்கள் படம் இருக் காது. வாக்காளர் அடையாள அட்டையும் இல்லை. தேர்தல் ஆணையம் வழங்கும் அடையாளச் சீட்டும் இல்லை என்றால் என்ன செய்வது? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு இவற்றில் எதையாவது ஒன்றைச் சான்றாகக் காட்டி ஓட்டுப் போடலாம். குடும்ப அட்டைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறது. ஆனால், அந்தப் பெயருக்கு உரியவர் நீங்கள் இல்லை என்று வாக்குச் சாவடியில் உள்ள யாராவது சந்தேகம் எழுப்பினால், என்ன செய்வது? பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ்... இப்படிச் சில ஆவணங்கள் மூலம் உங்கள் அடையாளத்தை நீங்கள் நிரூபிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் போலியானவர் என நிரூபிக்கப்பட்டால், உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல் வாக்குப்பதிவு அலுவலர், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா எனப் பரிசோதிப்பார். உங்கள் பெயரில் வேறு யாரேனும் ஓட்டுப் போட்டு இருந்தால், அதை உடனே வாக்குச்சாவடித் தலைமை அலுவலரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். உங்களுக்கு ஆராய்ச்சிக்குரிய ஓட்டுச் சீட்டு (டென்டர்ட் பேலட் பேப்பர்) அளிக்கப்படும். அதைப் பெற்றுக்கொண்டு, நீங்கள் கையெழுத்திட வேண்டும். நீங்கள் வாக்களித்ததும், அதை ஓர் உறையில் இட்டு தனியே வைத்துக்கொள்வார்கள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்... நீங்கள் மின்னணு ஓட்டு இயந்திரத்தின் மூலம் வாக்களிக்க முடியாது. ஏதாவது விசேஷக் காரணங்கள் இருந்தால் தவிர, உங்கள் ஓட்டு கணக்கிலும் எடுத்துக்கொள்ளப்படாது!

வாக்கு அளித்து விட்டு அங்கேயே காத்திருக்காதீர்கள், உடணடியாக உங்களின் வீடுகளுக்கு திரும்பிடுங்கள், வாக்கு நடைபெறும் நாளில் வெளியில் கூட்டமாக இருந்திடாதீர்கள்.

பெண்கள் அணிகலங்களை அணிந்து கொண்டு வாக்கு அளிக்கச் செல்லாதீர்கள், உங்களின் விரலில் பெண் அதிகாரி மை வைக்குமிடத்தில் இல்லாவிடின் அவர்கள் சொல்லும் இடத்தில் உங்கள் விரலை மேஜைமேல் வையுங்கள், விரல் நீட்டிக் கொண்டிருகாதீர்கள்.

பெண்களே வீட்டில் இவர்கள் இல்லையே அவர்கள் இல்லையெ என்று அடுத்தவர்கள் வாக்குகளை செலுத்த கட்சிகளின் உறவுகளோ அழைத்தால் உங்கள் வாக்கைத் தவிர வேறு வாக்குகள் அளிக்க முன்வராதீர்கள் மறுத்தி விடுங்கள், இன்றையச் சூழலில் சட்டம் கடுமையாக இருக்கிறது அதோடு மீடியாக்களின் பிரச்சாரம் விபரீதத்தை உண்டாக்கிடும்.

இந்தத் தேர்தலின் கதாநாயகன் / கதாநாயகி 'எது’வாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அன்றைய கதாநாயகன் / கதாநாயகி நீங்களாகத்தான் இருக்க வேண்டும்.

வாழ்த்துகள் மனசுல வைத்திருப்பவர்கள் வென்றிட !

அபுஇபுறாஹிம்

பதவிகள் இல்லாத நாற்காலிகள்... – அச்சம் ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | May 04, 2016 | , , ,


பாரம்பரியம் மிக்க அதிரைப்பட்டினம், நம் சமுதாய மக்களின் நன்னெறிகளாலும் அவர்களின் இயல்பான பண்பாலும் அதன் சுற்று வட்டாரத்திலும் கோலோச்சினார்கள், அதிமுக்கியமாக மார்க்க விஷயத்திலும், நல்ல விடயங்களை முன்னெடுத்து செல்வதிலும். காலச் சூழல், இளமையை தொலைத்திட வெளிநாடு/வெளியூர் சென்ற இரண்டு தலைமுறை சமுதாயம், அவரவர்களின் இருப்பிடம் திரும்பி நிம்மதியாக இருக்கலாம் என்று திரும்ப நினைத்தாலும் அச்சமே அவர்களை ஆட்கொள்வதாக பரவலாக இருக்கும் புலம்பல்கள்.

இளமையின் இரகசியம் அறியாதவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை, ஆனாலும் இப்படித்தான் வாழவேண்டும் என்று சட்டமாக்கப்படாத சாபத்தின் சஞ்சலங்களை கட்டாய கடமை போன்று பின்பற்றி அதன் போக்கிலேயே கடந்த இரண்டு தலைமுறை தொலைத்தது தனது இளமையை என்று சொன்னால் மறுக்க யாரும் கொடிதூக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

அவ்வாறான சூழ்நிலைகள் இனியும் நிகழாவண்ணம், இனிவரும் தலைமுறை / இப்போது தலையெடுக்கும் தலைமுறை என் குடும்பம், என் வீடு, என் ஊர், என் நாடு என்று வட்டங்களிட்டு அவைகளுக்குள் சுழல கற்றவர்களாக எழுந்து வருவது ஆரோக்கியமே, இதனை அவ்வாறே நிலைத்திடவும் உறுதி கொள்ளவேண்டும் இன்ஷா அல்லாஹ் !

மேற்சொன்னவைகள் தலைப்பிற்கு எவ்வித சம்பந்தமில்லாதது போன்று தோன்றினாலும், அன்றைய அல்லது அவைகளை கடந்து வந்த தலைமுறைகள் அனுபவிக்கும் இன்றைய சூழலின் கஷ்ட நஷ்டங்களை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை....

15 வருடங்களுக்கு முன்னால் பள்ளிவாசல்களில் நாற்காலிகள் என்று இருக்கும் அவைகள் தொழுகை அல்லாத நேரங்களில் பயன்படுத்தவும் அல்லது அதில் ஏறி நின்று மோதினார் ஒட்டடை அடிக்கவும், அல்லது கடிகாரத்தின் முட்களை சரியாக நிமிரித்தி வைக்கவும் என்றுதான் இருந்தது. அவைகளில் வெளிப் பள்ளியில் ஒன்றோ இரண்டோ இருக்கும் அல்லது மோதினார் தங்கியிருக்கும் அரையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

இன்றைய சூழலில், தொழுகைக்கான சஃப்பிலும் மற்றும் இதர காரியங்கள் பள்ளிவாசல்களில் நடைபெற்றால் அங்கேயும் சரி நாற்காலிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. இதில் வயது பேதமில்லை, இளயவர்களும் முதியவர்களும் என்று அதிகரித்திருப்பது சொல்லாமல் எதனையும் சுட்டிக் காட்டவில்லை, தலையில் அடித்து சொல்வது ஆரோக்கியத்தினை பற்றிதான்.

தொழுகைக்காக பள்ளிக்குள் நாற்காலிகள் ஓரத்தில் வரிசையாக வைக்கப்ப்பட்டிருந்தது, அதன் அருகில் ஒரு நடுத்தர வயதுடையவர் தொழுது கொண்டிருந்தார் ஜமாத்தாக... அதன் பின்னர் இரண்டாவது ரக்காத்தில் இணைந்து கொள்ள மற்றொரு சகோதரர் அங்கே நெருங்கியபோது பின்னால் நின்ற அந்த சகோதரருக்கு முன் சஃப்பில் இருந்த நாற்காலியின் பாதிபாகம் பின் சஃப்பில் இருந்ததால் அதனை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு தக்பீர் கட்டிவிட்டார் அப்போது அது யாருக்கும் பெரிதாக தெரியவில்லை அனைவரும் தொழுகையில் ஈடுபட்டிருந்த்தால்...

தொழுகை முடிந்ததும், நாற்காலியில் முன்னே தொழுத நடுத்தர வயது சகோதரர் சற்றே கோபத்துடன் ‘யார்ரா இங்கிருந்த நாற்காலியை எடுத்தது’ என்று நாற்காலி(!!?) பறிபோன கோபத்தில் கேட்டார், பின்னால் நின்ற சகோதரர் தொடர்ந்து தொழுது கொண்டிருந்ததால் அவரின் தொழுகையை முடித்ததும், ‘நான் தான் செய்தேன், நீங்கள் நிலையாக நின்று தொழுது கொண்டிருந்தீர்கள் அதோடு பின்னால் இருந்த சஃப்பிற்கு இடமில்லாமல் இருந்தது அதனால்தான் மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்றார்... அவரும் பரவாயில்லை என்று அமைதியாக சென்று விட்டார்....

அதன் பின்னர் பள்ளியை விட்டு வெளியில் வரும்போது, நாற்காலியில் அமர்ந்து தொழுதவரோடு பேசிக் கொண்டிருந்தவர் அருகில் இருந்தவரிடம் "தரையில் அத்தஹ்யாத்தில் நீண்ட நேரம் உட்கார முடியவில்லை அதனால்தான் சேர் போட்டு தொழுகிறேன் என்றார் அதற்கு அவரின் நண்பர் "உனக்கு எந்த வியாதியும் இல்லையே, வெளிநாட்டிலும் இப்படித்தான் சேர் போட்டு தொழுவியா என்று... ?" அவரோ "அங்கேயெல்லாம் சஃப்பில் நின்றுதான் தொழுவேன் ஊருக்கு வந்ததும் மூட்டு வலி தொடர்ந்து இருக்கிறது....." என்றார்..

இவ்வாறான உரையாடல்களை கேட்டு விட்டு அங்கிருந்து நகரும்போது பழைய நினைவுகளை நோக்கி (MSM-n மற்றும் ஜஸீலா காலத்து அப்பாக்களை) அசைபோட்டேன்.... அதிகமான வயதுடைய மூத்தோர் எவரையும் அப்போது நாற்கலிகளில் அமர்ந்து தொழுகையை நிறைவேற்றியதாகவோ அல்லது, மார்க்க பயான்கள் கேட்டதாகவோ அதிகம் நினைவில் இல்லை... அது அவர்களின் ஆரோக்கியத்தையும் உழைப்பையும், காட்டியது.

எத்தனையோ பெரியவர்கள் தரையில் அமர்ந்தபடியே தொழுவதை கண்டிருக்கிறோம் அன்றும் இன்றும், நாற்காலி போட்டு அமர்வதற்கு ஒரே காரணம் தரையில் அமர்ந்தால் எழுந்திருக்க முடியாத சூழல், கால் மடக்கி உட்கார முடியாத நிலை, நீண்ட நேரம் கால் மடக்கி அமர்ந்தால் எழுந்து நடப்பதில் சிரமம்... ? இவைகள் எதனால் ?

ஏன் இப்படியான நிலை? அச்சமாக இருக்கிறது !

அபுஇபுறாஹிம்

பரீட்சையை கண்டுபிடித்த புண்ணியாவனே ! - படிக்காதவங்களுக்காக** இது ஒரு ரிவைண்ட் ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | March 16, 2016 | , , , ,

1980 - 90களில்... நினைவலைகள் ! - இது ஒரு ரிவைண்ட் !

பரீட்சை அப்டீங்கற விஷயத்தை கண்டுபிடிச்ச புண்யவான் யாருன்னு தெரியலை.. - அவர் தலை மேல.! ஆவல் தீர குட்டனும்னு கோபம் கோபமா வருதே !

பின்ன என்ன தலைவா.. பரீட்சைன்னு ஒண்ணு வெச்சா, ரிசல்ட்ன்னு ஒண்ணு வந்து தொலைக்குது.. எந்த பயத்தையும் விட இந்த ரிசல்ட் பயம் தான் பெரிய பயமா இருக்கு..!

பத்தாங்கிளாஸ்.. அதாங்க, எஸ்.எஸ்.எல்.சி-க்கு போனவுடனே, ஆளாளுக்கு 'பப்ளிக் எக்ஸாம்' 'பப்ளிக் எக்ஸாம்'னு நமக்கு பிரஷரை ஏத்துவாங்க.. வீட்ல நிம்மதியா கதை புக் படிக்க முடியாது, ரேடியோ கேட்க முடியாது.. அட, ஒரு கல்யாணம், விசேஷம்னு யாராச்சும் கூப்பிட வந்தா, அவங்க கூட கொஞ்ச நேரம் பேசக் கூட விடமாட்டாங்க. படி படின்னு ஒரே ரோதணை. நாம படிச்சே தீரணும்னு ஒரு கூட்டமே நமக்கு எதிரா திரண்டிருக்கும்.

பரீட்சை நேரத்துல ஏற்கனவே பயந்து இருக்க நமக்கு, அட்வைஸ் பண்றேங்கற பேர்ல ஆளாளுக்கு ஆடியோ பேதி மருந்து குடுப்பாங்க.. இந்த பாட புஸ்தகம் இருக்கே.. ஹப்பா.. எனக்கு அதை தொறந்த அஞ்சாவது நிமிஷம் கொட்டாவி வரும், ஆறாவது நிமிஷம் தூக்கம் வரும். எட்டாவது நிமிஷம் டீ வரும்.

உம்மா டீ குடுக்கும் போது அவங்களை பாத்தா பாவமா இருக்கும். நம்மளை என்னவோ 'உலகம் சுற்றும் வாலிபன்' லெவலுக்கு மதிச்சு, மாத்தி மாத்தி டீ போட்டு குடுத்துகிட்டே இருப்பாங்க.. அது என்னமோ, என்ன மாயமோ தெரியலை.. அந்த டீயை குடிச்சா இன்னும் நல்லா Fresh-ஆ தூக்கம் வரும்.

பரிட்சை நேரத்துல என்னைத் தவிர எல்லாரும் என் படிப்பு மேலயே அக்கறையா இருப்பாங்க.. பத்தாக்குறைக்கு ரேடியோவில வர்ற விளம்பரம், பத்திரிகைகள்ல வர கட்டுரை எல்லாமே படிப்பு.. படிப்பு.. படிப்பு பத்தி தான்.

எனக்கு ஒரு சந்தேகம்.. அது எப்படி பரிட்சை நேரத்துல மட்டும் இந்த பாழாப்போன ஜுரம் வந்து தொலைக்க மாட்டேங்குது.?

இதெல்லாத்தையும் விட இப்போது பரீட்சைப் பேப்பரு ரயில்வே டிராக்கில் போட்டுவிட்டு சென்ற புண்ணியவான் மாதிரியெல்லாம் அப்போ எவனும் இல்லே... அப்படியிருந்துச்சுன்னா எவ்வ்வ்ளோ குஷியா இருந்திருக்கும் !

ஒரு வழியா கடைசி பரிட்சைய எழுதி முடிச்சதும் மனசுக்குள்ள வந்த சந்தோஷம் இருக்கே.. ஹைய்யோ.. அடுத்த ஒரு மாசம் கிரிக்கெட், ஃபுட்பால், ஃபிரண்ட்ஸ்னு கலக்கலா போச்சு..

காலைல எழுந்து பசங்களோட ஜாகிங்.. வீட்டுக்கு வந்து காலை சாப்பாடு, மைதானத்துக்கு போய் கிரிக்கெட், மறுபடியும் வீடு. குளியல். சோறு. கிளம்பி தெருவில் இருக்கும் முச்சந்தியில் நிற்பது இல்லாட்டி ஏதாவது குளக்கரையோரம் அரட்டை, ரேடியோ, நொறுக்கு தீனி, மறுபடியும் கிரிக்கெட். 6.30 மணிக்கு மேல மேட்ச் நடக்கற இடத்துக்கு போய் அலப்பறை. ஆஹா.. நிம்மதியா போய்கிட்டிருந்தது.

"பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. வரும் ஜூன் மாதம்.. " உம்மாடியோவ்.. அதுக்குள்ள ரிசல்ட்டா..?! என்ன அவசரம்.. நல்லா பொறுமையா டயம் எடுத்து இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு ரிசல்ட்டை வெளியிடலாமே.."

நல்லா படிக்கற பசங்களுக்கு கவலை இல்லை.. கண்டிப்பா புட்டுக்கும்னு தெரிஞ்ச பசங்களுக்கும் கவலை இல்லை.. என்னை மாதிரி மதில் மேல் மியாவ் தான் இதுல அவஸ்தைபடறோம்.

இன்னும் பத்து நாள்ல ரிசல்ட் வரப் போகுதுன்னு தெரிஞ்ச உடனே, எனக்கு மனசு பக் பக்குனு அடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. "பாஸ் பண்ணிடுவ இல்லை..?"னு மாமா கேக்கும்போது "கண்டிப்பா.."ன்னு பலவீனமா சொன்னேன். மாமா என் கண்ணையே ஒரு 3 செகண்ட் பாத்துகிட்டு இருந்தார்.. ஒருவேளை மாமாவுக்கு நாம கணக்கு பரிட்சை சரியா எழுதலைன்னு தெரிஞ்சிருக்குமோ..?

மாமா நகர்ந்ததும் உம்மா வந்து, " நல்லா தானே எழுதியிருக்க.. பாஸ் பண்ணிடுவ இல்லை..? யாரும் என்னை மதிக்க மாட்டா.. நீ பெயில் ஆயிட்டா  ரொம்ப இளக்காரமா போயிடும்டா.." அதாவது, நான் பாஸ் பண்ணி ப்ளஸ் ஒன் போறது கூட முக்கியமில்லை.. உறவுக்காரங்க மத்தில தலைக்குனிவு வந்திடக் கூடாது..! என்ன உலகம்டா இது..!

மறுநாள் பேப்பர் படிச்சிட்டிருந்த மாமா, கண்ணாடியை கழட்டி வெச்சுட்டு, பாத்ரூமுக்கு போயிருந்தார் போல.. நான் கண்ணாடியை பாக்காம, பேப்பரை அப்டியே எடுக்க, கண்ணாடி 'க்ளிங்' ஆயிடுச்சு..!

மாமா வந்து உடைஞ்சிருந்த கண்ணாடியை பாத்தார்.. கண்ணாடி போடாத மாமாவோட முகத்தைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. என்னை முறைச்சது கூட பரவால்ல.. திட்டியிருந்தா கூட திருப்தியா இருந்திருக்கும்.. ஒண்ணும் சொல்லலை.. உடைஞ்ச துண்டுகளை ஒரு பேப்பர்ல எடுத்து போட்டுகிட்டு, " ரிசல்ட் வரட்டும்.."ன்னு சொல்லிட்டு போயிட்டார். கண்ணாடி உடையறதுக்குக்கும், என் ரிசல்ட்டுக்கும் என்ன சம்மந்தம்.. ? கண்ணாடியை உடைச்சதுக்கு திட்டித் தொலைக்க வேண்டியது தானே. ரிசல்ட் புட்டுகிச்சுன்னா, இதுக்கு சேத்து வெச்சு.. ஐயோ..!

இறைவா.. நான் எப்படியாவது பாஸ் ஆகிடணும்.. இந்த ஒரு தடவை மட்டும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு...!

எங்க செட்ல யாரெல்லாம் பெயில் ஆவான்னு யோசிச்சு பாத்தேன்.. ம்ஹூம்.. சொல்ல முடியாது.. எல்லாருமே பாஸ் ஆனாலும் ஆயிடுவானுங்க.. நான் மட்டும் பெயில் ஆகி, மத்தவன் எல்லாம் பாஸ் ஆகிட்டா.. உம்மாடியோவ்.. அதுமட்டும் நடக்கக் கூடாது.. குறைந்தபட்சம், பக்கத்து வீட்டு நண்பன் மட்டுமாவது பெயில் ஆயிடணும்.. அவன் பிட் அடிச்சிருப்பானோ.. இறைவா.. என்னை பாஸ் பண்ண வெக்க முடியாட்டி, அட்லீஸ்ட் எனக்கு கம்பெனி குடுக்க ஒரு நண்பனையும் பெயில் ஆக்கிடு.. டீலிங்..!

அதுக்கப்பறம் எந்த எதிர்மறையான வார்த்தைகள் காதுல விழுந்தாலும், அது என் ரிசல்ட்டை பத்தி ஞாபகப்படுத்திகிட்டே இருந்தது. 'போச்சு' 'வராது' 'இல்லை'ன்னு எல்லா வார்த்தைகளையும் மாத்தி மாத்தி யாராவது சொல்லிகிட்டே இருந்தாங்க.

பஸ்ல போயிட்டிருக்கும்போது, என் கணக்கு பேப்பரை திருத்தும்போது, திருத்தரவருக்கு பைத்தியம் பிடிச்சு, நூத்துக்கு 80 மார்க் போடற மாதிரி பகல் கனவெல்லாம் கண்டேன்.. திட்டமிட்டு காணும் கனவு எல்லாம் பலிக்குமான்னு தெரியலை.

ரிசல்ட் வந்த அன்னிக்கு பசிக்கவே இல்லை.. உம்மா என்னை விடாம "சீக்கிரம் சாப்பிட்டுடு.."ன்னு வம்படியா சாப்பிட வெச்சாங்க.. அன்னிக்கு வீட்ல எல்லாரும் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருந்தாங்க.. மாமா ஆபிஸுக்கு போவாரா மாட்டாரான்னு சந்தேகமா இருந்தது.. இறைவா.. அவர் கிளம்பி ஆபிஸ் போயிடணும்.. வம்படியாக பிரார்த்தனை முணுமுணுத்தது...

இப்ப மாதிரி ரிசல்ட்டை பிரவுசிங் சென்டர்ல எல்லாம் போய் பாக்க முடியாது.. பேப்பர் தான்.

ரிசல்ட் பேப்பர் இப்ப வரும்.. அப்ப வரும்னு அலைகழிய வெச்சிட்டாங்க.. பக்கத்து தெரு, அடுத்த தெருன்னு நாயா பேயா அலைஞ்சு, பேப்பரை வாங்கினா கை காலெல்லாம் நடுங்குது.

பேப்பர்ல நம்பரை தேட முடியலை.. கண்ல பூச்சி பறக்குது.. வயத்துல பட்டாம்பூச்சி பறக்குது.. பேப்பர்ல டுடோரியல் காலேஜ் விளம்பரம் எல்லாம் போட்டிருக்காங்க.. ஒரே அபசகுனமா இருக்குது..

என் நம்பர் சுத்தமா மறந்து போச்சு.. பேப்பரை தரைல விரிச்சு, அது மேலயே மண்டி போட்டு உக்காந்து, நம்பரை ஞாபகப்படுத்தி, கஷ்டப்பட்டு தேடிப் பாத்ததுல.. நம்பர் இல்லை.. இன்னொரு தடவை ஒழுங்கா பாக்கறேன்.. ம்ஹூம்.. இல்லை.. என்னமோ தெரியலை.. எல்லா டென்ஷனும் போய், நிம்மதியா இருந்தது..

நாம ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் மார்க் எதிர்பார்த்து அது வரலைனா வருத்தப்படலாம்.. பேப்பர்ல போட்டோ வர வேண்டாம் பாஸ்.. வெறும நம்பர் மட்டும் வந்தா போதும்னு பொன் செய்யும் மருந்தா மனசை வெச்சிருக்கோம்.. அதுக்கு கூட வழியில்லாம போயிடுச்சு..

திடீர்னு பக்கத்து வீட்லேந்து பயங்கரமா சத்தம் கேட்டது.. நண்பனை திட்டிகிட்டிருந்தாங்க.. ஆஹா.. அவனுக்கும் புட்டுகிச்சா..?! நன்றி நண்பா..!

மேட்டரை கன்ஃபர்ம் பண்ணிக்க பக்கத்து வீட்டுகிட்ட போனேன். பக்கத்து வீட்டு பையனும் உங்கூட தானே படிக்கறான்.. அவன் பாஸ் பண்ணிட்டான்.. நீயும் இருக்கியே தண்டம்.. தண்டம்.. "

என்ன சொல்றாங்க.. நான் பாஸா.. ? எப்படி?

அட, ஆமா.. பதட்டத்துல என் நம்பருக்கு பதிலா நண்பர்களின் நம்பரை மட்டுமே பேப்பர்ல தேடியிருக்கேன்.

பேப்பரை எடுத்து பார்த்ததுல, என் நம்பர் என்னைப் பார்த்து கண் அடிச்சுது.

மாமா வீட்டுக்குள்ளேயிருந்து பயங்கர சந்தோஷத்துடன் வெளியே வந்து, முதுகைத் தட்டி விட்டு ஆபிஸுக்கு போனார். கண்ணாடி போடாத மாமாவின் முகம் இப்ப அழகா இருந்தது.

மறுபடியும் மறுபடியும் பேப்பரை தரைல பரப்பி, என் நம்பரை பாத்துகிட்டே இருந்தேன்.

நல்லவேளை டாஸ்மாக் கடைகளின் களியாட்டம் அப்போது இல்லை, அப்படி ஒன்று நிகழ்ந்து அதனால பாஸ் பன்னவன்னு ஒரு பழிச்சொல் சுமக்காமல் போனோமே ! அப்பாடா !

இப்ப நினைச்சு பாத்தா அந்த ரிசல்ட் டென்ஷன் இருக்கே, அதுவும் ஒருமாதிரி நல்லா தான் இருக்கு, இல்லை.!
குறிப்பு : கடந்த 212ம் வருடம் ஒரு பிரபல வரப்பத்திரிகையில் வெளியான கட்டுரையைத் தழுவி வட்டார பேச்சு மொழி இணைத்து சின்ன சின்ன நெறியாடல் செய்து வித்தியாசமான ரசனையாக அந்த மீடியம் கிளாஸ் மாணவனின் ஏக்கத்தில்தான் இந்தப் மீள்பதிவு...

இப்படிக்கு இவ்வாறன அவஸ்தைகளில் சில வற்றை அனுபவித்த...  [**தலைப்பில் இந்தப் பதிவை அன்று படிக்காதவர்களுக்காக என்று இப்போ வாசிச்சுடுங்க ப்ளீஸ்]


அன்றைய மாணவன்


அபூஇப்ராஹீம்

உள்ள ஆட்சியிலா? உருவாகப் போகும் ஆட்சியிலா ? 6

அதிரைநிருபர் பதிப்பகம் | August 23, 2015 | , , ,

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களையும் இளைஞர்களையும் பார்த்து கனவு காணுங்கள் என்று சொன்னார்கள், அதனால் நாங்களும் முன்னாள் மாணவர்கள்தானே என்றும் இளைஞர்கள்தானே என்ற மெதப்பில் இருக்கும் இந்த தருணத்தில் கனவு ஒன்றைக் கண்டு விட்டோம் அது என்னடான்னா அதிரைப்பட்டினத்தைச் சுற்றியே இருக்கு (மண்வாசனை யோடு) சரி நம்ம கணவு பலிக்குமா? எல்லாவற்றையும் வெளியில சொன்னா ! என்று யோசனையில் இருக்கும்போது உள்ளாட்சித் தேர்தலும் வந்துவிட்டது அட ! நம்மவங்க எல்லாத்தையும் பலிக்க வச்சுடுவாங்கன்னுதான் ஒரு கற்பனையாக இப்படி எழுதத் தோனுச்சு !

இன்றைய (உள்ள) ஆட்சியில் சொன்னது அன்று இலவசம் இலவசம் இலவசம் அவைகள் இன்று எவர் வசம் என்று தேடவும் ஆரம்பித்து விட்டனர் வாக்குப் பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்திய இலவசத்தில் மனவசப்பட்ட மக்கள்.

அதிரை தேர்வுநிலை பேரூராட்சி மன்றத் தேர்தல் களம் கண்ட அந்த நேரத்தில் எந்த ஒரு வேட்பாளரும் தேர்தல் அறிக்கைகள் என்று வெளியிட்டதாக எமக்குத் தெரியவில்லை ஒருவேளை இப்படியிருக்கலாமோ தேர்தல் அறிக்கை என்றொரு மரபு உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கு இல்லாமலிருக்குமோ யாம் அறியோம்!?.

எது எப்படியிருந்தாலும் ! தேர்தல் என்று வந்தால் அறிக்கைப் போர் நடந்தால்தான் அந்தச் சமரில் காரமும் இருக்கும் தும்மலும் இருக்கும் !

சரி அவர்கள்தான் அப்படிச் செய்யவில்லை என்றால் நாம் சும்மாவா இருக்கமுடியும், ஆதலால் அவர்களின் சார்பாக பேருராட்சி மன்றத் தேர்தல் அறிக்கையை நாமே இங்கே சமர்பிப்போம் மக்களாகிய நீங்கள் தீர்ப்பை சொல்லுங்க பார்க்கலாம் !

- அதிகாலை அதிரை நகரினை அழகுற அனைவருக்கும் எழுந்திருக்க வைக்க வேண்டும் !

- காலைக் கதிரவன் கன்னிக் கதிரை வெளிக் கொணரும்போது எழும் சில்லென்ற புகையோடு கூடிய தெருக்கள் பெருக்கி எழும் புழுதியை ரசிக்க ரசிகர் மன்றங்கள் ஒவ்வொரு தெரு முணைகளில் வைத்திட வேண்டும்.

- இரவில் உறங்காத கொசுக்களை காலை முதல் மாலை வரை தாலாட்டி சீராட்டி உறங்க வைக்க தனி தொண்டர் படை அமைக்க வேண்டும்.

- குடிநீர் குழாயில் தண்ணீர் வரும்வரை வரும் காற்றை குழாய் வழியாக எடுத்துச் சென்று வீடுகளில் இருக்கும் மின் விசிறிகளை இயங்க வைக்கும் நவின வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

- கோடு போட்டு ரோடு போடாவிடினும் பாடுபட்டு கட்டிய வீட்டிற்குள் மழைநீரும், சாக்கடையும் நுழையாமல் நீண்டகால திட்டம் தீட்டி வடிகால் அமைத்திட வேண்டும் !

- வீட்டு வரி வசூல் செய்ய வீடுகளுக்கு வருபவர்கள் அது பேரூராட்சி கஜானாவுக்குள் சேர்கிறதா என்று உத்திரவாதம் தந்திட வேண்டும் !

- அதிவேக மின்சாரம் வேண்டாம், அளவான மின்சாரமும் அடிக்கடி அனைக்காத மின்சாரமும் வேண்டும் !

- சுற்றித் திரியும் பன்றிகளுக்கு ஊருக்கு ஒதுங்குப் புறத்தில் சங்கம் அமைத்து தெருவுக்குள் நுழையாமல் இருந்திட நடவடிக்கைகள் அவசியம் வேண்டும்.

- சாக்கடைதான் என்று நூறு சதவிகிதம் ஊர்ஜிதப் படுத்தப்பட வேண்டும் அப்போதுதான் மக்களுக்கு குடிநீருக்கும் சாக்கடைக்கும் வித்தியாசம் தெரியும் எது எங்கே இருக்கிறது என்ற நிலை தெரியாமல் தவிக்கும் இன்றைய நிலையில் !

- பிளாஸ்டிக் பைகளின் அராஜகத்தை அறவே அகற்ற முடியாவிட்டாலும் கண்டதும் அதனைச் சுட உத்தரவு போடவேண்டும் அதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற (???) பணியாளர்களை அமர்த்தி கு.பொ.வாரியம் ஒன்று உருவாக்கி அதறகு தகுந்த தலைவரை இன்றைய இளம் தலையை அங்கே அமர்த்தப்பட வேண்டும்.

- இரவில் சுற்றித் திரியும் திருடர்களையும் திருந்தாத தருதலைகளையும் கண்கானிக்க வீட்டுக்கு வீடு வாசலில் ஐ.பி.கேமராவெல்லாம் வைக்காமல் (அரசாங்க பணத்தை வீணடிக்காதீங்க ப்ளீஸ்) உறங்கும் காவல்துறைய தட்டி எழுப்பி நடைபயில அனுப்பி வைக்க வேண்டும். ஒருவேளை அவர்களே அந்த பணியை கையில் எடுத்துக் கொண்டால் இரவை பகலாகவும் பகலை இரவாகவும் மாற்றி அறிவிக்கவும்.

- கடைத்தெருவில் அதிநவின வசதியுடன் (குறிப்பாக வாங்கிப்போகும் மீன், இறைச்சி ஆகியவை கெடாமல் இருக்க ச்சில்லர் வசதியுடன்) கூடிய மெட்ரோ இரயில் நிறுத்தமும் மேம்பாலமும் அமைத்திட வேண்டிக் கொள்கிறோம் யோசனைக்கு இங்கிருக்கும் படத்தைக் மாதிரியாக பயண்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.


- பிலால் நகரிலிருந்து ஷிஃபா மருத்துவ மனை வரை பறக்கும் இரயில் வேண்டும் என்று கேட்டால் கிடைக்கவா போகிறது, ஆதலால் ஒரு யோசனை ஆங்காங்க தொங்கும் மின்சாரக் கம்பிகளை நன்றாக இழுத்துக் கட்டி அருகிலிருக்கும் வீட்டாருக்கு துணி காயப்போடும் வசதியை செய்து கொடுக்க வேண்டும் கண்டிஷன் மின்சாரம் தாக்குதல் நடக்கக் கூடாது !


- ஏற்கனவே அகல இரயில்பாதைக்கு போராடிக் கொண்டிருக்கும் அதிரைப் பெருநகர மக்களுக்கு ஆறுதலாக இரண்டு இரண்டாக தனியாக இருக்கும் தடங்களில் போலி விமானம் ஸாரி போயிங்க் விமானம் ஒன்றினை வாடகைக்கு எடுத்து அங்கே நிறுத்தினால் பெருமை பட்டுக் கொள்ளலாம்.


- செக்கடிக் குளத்தின் மேல் தொங்கு பாலம் கட்டித் தாருங்கள் என்று கேட்டால், நீங்களே வசூல் செய்து ஆகாயத்தில் இடத்தை வங்கித்தாருங்கள் அங்கே கட்டுவோம் என்று சொல்லும் அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் இந்த உள்ளாட்சி மன்ற வேட்பாளர்களே, அதற்கான மாதிரியை இங்கே படத்தில் மாதிரி காட்டியிருக்கிறோம் எவ்வளவு செலவு ஆகும் என்று கணக்கிட்டு முறையாக என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்துக் கொள்ளுங்கள்.


 - கடற்கரைத் தெரு பள்ளி அருகே நவீன வசதியுடன் கூடிய பஸ்வசதி நிறுத்தம் அமைக்கப்பட வேண்டும் அங்கே அதிரை மாநகரில் அனைத்து தெருக்களின் வழியாக செல்ல பேருந்துகள் இயக்க வேண்டும், எதிர் காலத்தில் 4 நிமிடத்திற்கு ஒரு இரயில் / மெட்ரோ நமதூர் இரயில் நிலையத்திற்கு வந்து செல்ல இருப்பதால (!!!???) அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து தர வேண்டுகிறோம் !


- மேலத் தெருவிலிருந்து வண்டிப்பேட்டை வரை சுரங்க வழி இரயில் அமைத்திட இங்கே ஒரு மாதிரிப்படம் இணைத்திருக்கிறோம் இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து தெருக்களையும் ஒன்றினைக்கும் படியாக இந்த திட்டத்தை நிறைவேற்றிட வேட்பாளர்களை கெஞ்சி கதறி விரும்பிக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இன்னும் இருக்கிறது கனவுகளாக ! இதேபோல் உங்களிடமும் இருக்கும்தானே ! பகிர்ந்திடுங்களேன் பின்னூட்டத்தில் !

அபுஇபுறாஹிம்

“முற்போக்கு கூட்டணி – உட்கட்சிப் பிரிவு” 3

அதிரைநிருபர் பதிப்பகம் | March 30, 2015 | , , , ,

கிசு….. கிசு…..  இது உங்கள் காதுகளுக்கு மட்டுமே இந்த பிசு பிசு...!

'அழுக்கு' நல்லது !

உங்களில் எத்தனை பேர், பட்ஸ் அல்லது பின்னைக் கொண்டு காதில் உள்ள அழுக்கை எடுத்து சுத்தப்படுத்துகிறீர்கள்? அல்லது நம்மூரில் அந்தக் காலத்தில் செய்வதுபோல கோழி இறகை விட்டுக் கண்கள் சிறுக சொக்கிப்போய் குடய்கிறீர்கள்?

'நான்.. நான்...' என்று உற்சாகமாக யாரெல்லாம் காது குத்துக்கிறீர்களோ ஸாரி.. .கைதூக்குகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஒரு குட்டு, சுத்தம் என்ற பெயரில் காதுக்குள் நீங்கள் செய்யும் கலவரத்தால் சேதாராம்தான் ஏற்படுமே தவிர, உங்களின் நோக்கம் நிறைவேறாது.

அப்படியானால் காதுக்குள் இருக்கும் அழுக்கை எப்படி வெளியேற்றுவது? முதலில் அதை அழுக்கு என்று சொல்வதே தவறு. குரும்பி என்று பொதுஜன வழக்கில் அழைக்கப்படும் அந்தப் பொருள், ஒருவகையான மெழுகு போன்றது. அழுக்கு என்று நாம் நினைக்கும் இந்த மெழுகுதான் காதின் அரோக்கியத்தைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, செவிப்பறையைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம்போல் இது செயல்படுகிறது.

காது மடலில் இருந்து செவிப்பறை நோக்கி நீளும் பாதையில் சில தனித்தன்மை வாய்ந்த சுரப்பிகள் உள்ளன. அவைதான் காது மெழுகை உருவாக்குகின்றன. காதுக்குள் நுழையும் தூசிகளையும், அழுக்குகளையும் இந்த மெழுகு தன்னிடம் உள்ள ஈரப்பசையின் மூலமாக, தன்னுள் ஒட்டவைத்துக் கொள்கிறது. அதாவது, செவிப்பறையைத் தூசுகள் எட்டிவிடாமல் மெழுகு பாதுகாக்கிறது.

அது மட்டுமல்ல, காதுக்குள் இந்த மெழுகுப் படலம் பரவி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்கிறது. அதாவது, எண்ணெய்ப் படலத்தின் மீது தண்ணீர் ஒட்டாது இல்லையா? அதுபோல், மெழுகின் மீதும் தண்ணீர் ஒட்டிக்கொள்வதில்லை. மெழுகு இல்லாமல் போனால், காதுக்குள் உள்ளதோல் பகுதியில் தண்ணீர் பட்டுப் பட்டு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

பொதுவாக, ஓரளவு மெழுகு உருவானவுடனேயே அது உலர்ந்து தானாக வெளியே வந்து விடும். கூடவே, தூசிகளும் அழுக்குகளும்கூட அதனுடன் ஒட்டிக் கொண்டு வெளியேறிவிடும். காதுக்குள் இருந்து வெளிப்புறம் நோக்கி மெழுகு நகர்வதற்கான அமைப்பு இயல்பாக இருக்கிறது.

ஆனால், இது தெரியாமல், காதை சுத்தப்படுத்த நாம் முயற்சி செய்யும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. சுருளாக்கப்பட்ட துணி அல்லது பேப்பரை காதுக்குள் செருகிக் குடையும்போது மெழுகு வெளியேறுவதற்குப் பதிலாக உள்புறம் சென்றுவிட நிறைய வாய்ப்பு உண்டு. இதனால், காது அடைத்துக் கொள்ளலாம். நாளடைவில், இந்த மெழுகு மிகவும் இறுகிப் போகும்போது காது கேட்கும் தன்மைகூட பாதிக்கப்படலாம். அப்புறம், ஏழு கட்டை இ.எம்.ஹனீஃபாகூட பாடினால், பஸ்ஸில் பக்கத்து சீட்டில் அமர்ந்து பயணம் செய்யும் புது மனைவியின் கிசுகிசுப்புப் போல்தான் கேட்கும்.
மெழுகினால் காது எப்படி அடைபடும் என்பதற்கான காரணங்களை இப்படிப் பட்டியல் இடலாம்.
  • மடிக்கப்பட்ட துணி, மெல்லிய குச்சி போன்றவற்றால் நாமே மெழுகை நீக்க முயற்சிப்பது.
  • சில சமயம், தானாக மெழுகு மிக அதிகமாக உருவாவது.
  • வெளிக் காதின் பாதை குறுகிவிடுவதன் காரணமாக மெழுகு வெளிப்படுவதில் தடை ஏற்படுவது.
  • மெழுகின் அசாதாரண பண்பு காரணமாக, காதின் துவாரச் சுவர்களில் வந்து ஒட்டிக் கொள்வது.
செவித் துவாரத்தின் சுவருக்கும் மெழுகுக்கும் நடுவே மிக மெல்லிய இடைவெளி இருந்தால் கூட கேட்கும் சக்தி குறைந்துவிடாது. ஆனால், குளியல் அல்லது முகம் கழுவுதல் காரணமாக தண்ணீர் உள்ளே சென்றால் அது அந்த மெழுகை வீங்கச் செய்துவிடலாம் அல்லது எஞ்சியிருக்கும் கொஞ்சம் இடைவெளியை அந்தத் தண்ணீர் அடைத்துக் கொண்டுவிடலாம்.

இந்த நிலையில், அந்தக் காதின் சொந்தக்காரருக்கு அவரது குரலே எதிரொலிபோல் கேட்கும். காதுகளில் ஒருவித ரீங்கார ஒலி கேட்கும்.

வெளிக்காதில் உள்ள அழுக்கை, சுத்தமான துணியில் ஒருவிரலை நுழைத்துக் கொண்டு சுத்தம் செய்யலாம். மாறாக, காதுக் குழாய்க்குள் எதையும் நுழைக்க வேண்டாம்.

காது மெழுகு தானாகவே வெளியேறிவிடும் என்றோம். ஆனால், அபூர்வமாக சிலசமயம் அது கட்டிதட்டிப் போகலாம்.

அப்போது டாக்டரிடம் சென்றால் சொட்டு மருந்தை உள்ளே செலுத்துவதன் மூலம் உலர்ந்த மெழுகைக் கரைத்த பிறகு, கருவிகளின் மூலம் மெழுகை எடுத்துவிடுவார்.

சிரிஞ்ச் மூலமாகத் தண்ணீரைப் பீய்ச்சியும் எடுப்பது உண்டு. ஆனால், செவிப்பறையில் சிறிய ஓட்டை விழுந்திருந்தாலும் டாக்டர் இந்த முறையைப் பயன்படுத்தமாட்டார். மெழுகும் அழுக்கும் செவிப்பறைக்குள் சென்றுவிட வாய்ப்பு உண்டே!.

காதுக்குள் அளவுக்கு அதிகமாக மெழுகு அடைத்துக் கொண்டிருக்கிறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

  • காதுகளில் சத்தம் கேட்கும். சத்தம் கேட்டாத்தானே காது என்றெல்லாம் வியாக்கியானம் பேசக்கூடாது. இது வேறுவிதமான சத்தம்
  • காதுகளில் அதீத வலி
  • கேட்கும் சக்தி குறைவதுடன், இந்தக் குறைபாடு அதிகமாகிக் கொண்டே இருப்பது.
  • காது முழுவதும் அடைத்துக் கொண்டது போன்ற உணர்வு தொடர்ந்து ஏற்படுவது.

இந்த அறிகுறிகள் இருந்தால், உடனே தகுந்த மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், இங்கே முன்பே குறிப்பிட்டதுபோல், காதை மெழுகு நன்றாக அடைத்துக் கொண்டு, காது கேட்காத தன்மையை உருவாக்கி விடும்.

என்ன?  சொன்னதெல்லாம் காதில் விழுந்ததா?

இப்படிக்கு,
முற்போக்கு கூட்டணி

சுவாசத்தின் வாசல் ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | March 23, 2015 | , , , , ,

மூக்கு மிக முக்கியமான பாகம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது என்றே தோன்றுகிறது. ஜீரண மண்டலம் எப்படி வாயில் இருந்து தொடங்குகிறதோ, அதேபோல் சுவாச மண்டலமும் மூக்கில் இருந்துதான் தொடங்குகிறது.

வாய் மூலமாக சுவாசிக்க முடியும் என்றாலும் நம்மில் பெரும்பாலானோர் மூக்கின் மூலமாகத்தான் சுவாசிக்கிறோம். மூக்கு ஏதாவது ஒரு காரணத்தால் அடைபடும்போதுதான் அவசரத் தேவைக்காக வாய் உதவுகிறது. எனவே, நம் உயிர் ஆதாரமான ஆக்சிஜனை உடலுக்குள் அனுப்பி வைக்கின்ற நல்ல காரியத்தைச் செய்வது மூக்குதான்.

வாயால் தொடர்ந்து சுவாசிப்பதும் நல்லதல்ல. தேகப் பயிற்சியின்போதும் நீச்சல் அடித்த பிறகும் வாயால் சுவாசிக்கலாம். அப்போது மூக்கோடு, வாயின் துணையும் தேவைப்படும். மற்ற சமயங்களில் சுவாசிக்க மூக்கே சிறந்தது.

வாசனையை முகர்ந்து பார்த்து இன்றைக்கு வீட்டில் இறைச்சி ஆனமா ? கோழிக் குருமாவா ? இல்லே பொரிச்ச மீனா ? என்று முதலில் அறிவிப்பது மூக்குதான் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் ஆச்சர்யமான தகவல் என்னவெனில், நம் மூக்கில் உள்ள ஒரு சிறிய பகுதியால் கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாசனைகளைப் பிரித்து உணர முடியுமாம்.

மூக்கின் பயன் இதோடு முற்றுப் பெறுவதில்லை.நாம் நன்றாகப் பேசுவதற்கும் மூக்குக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. பேச்சு என்றால் வாய்க்கும் தொண்டைக்கும் தானே வேலை? மூக்கோடு அதை எப்படி முடிச்சு போடுவது என்பவர்கள், ஜலதோஷத்தால் மூக்கு அடைபட்டவர்கள் பேசுவதைக் கவனியுங்கள். ஒலி ஒழுங்கு இல்லாமல் வரும்.

நம்மிடம் இருந்து வெளிப்படுகிற ஒலிக்கு ஓர் ஒழுங்கான வடிவத்தையும் இனிமையையும் தருவதில் தொண்டைக்கு மட்டுமல்ல, மூக்குக்கும் அதில் உள்ள சைனஸ் அறைகளுக்கும் கூட முக்கிய பங்கு இருக்கிறது.

மூக்கு நாம் சுவாசிக்கும் காற்றைத் தனது முன்பக்கத்தில் உள்ள மயிரிழைகளால் வடிகட்டி, சுத்தப்படுத்தி பின்னர் மூக்கிலே சுரக்கும் திரவத்தால் குளிரூட்டி உள்ளே அனுப்புகிறது. காற்றை ஏன் குளிரூட்டி அனுப்ப வேண்டுமா ? அப்படி இல்லையென்றால் நாம் சுவாசிக்கும் காற்றின் வெப்பம் நுரையீரலைப் பாதிக்கும். இது மட்டுமின்றி, மூக்கில் இருந்து சுரக்கும் இந்தத் திரவத்தில் 'லைசோசைம்' என்ற ஒரு கிருமி நாசினி உள்ளது. இது மூக்கின் வழியாக நமது உடலுக்குள் எந்தக் கிருமியும் நுழையாமல் பார்த்துக் கொள்கிறது.

சகஜமாக மூச்சுவிட வேண்டுமானால், உள்ளே இழுக்கப் பட்ட காற்று மூக்கின் வழியாகத் தடை எதுவும் இல்லாமல் உள்ளே செல்ல வேண்டியது அவசியம். மூக்கு வழியாகச் செல்லும் காற்றில் தூசிகள், மூக்கில் உள்ள சிறிய ரோமங்களால் வடிகட்டப்பட்டு, ரத்தம் எந்த வெப்ப நிலையில் உள்ளதோ அந்த அளவுக்கு சுடாக்கப்பட்ட நிலையில் உள்ளதோ அதே அளவுக்கு சூடாக்கப்பட்டு உள்ளே அனுப்பப்படுகிறது. அந்தக் காற்று உலர்ந்தால் அதை ஈரமாக்கும் வேலையையும் மூக்கு செய்கிறது.

மூக்கில் உண்டாகும் மிக முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்று சைனஸ், சைனஸ் என்ற பகுதி பாதிக்கப்பட்டால் உண்டாகும் தொந்தரவின் பெயர் சைனுசைடிஸ், இந்தப் பாதிப்பையே சைனஸ் தொந்தரவு என்று குறுப்பிடுவது நம் வழக்கமாக இருக்கிறது.

நம் முகத்தில் மூக்கைச் சுற்றி உள்ள காற்றுப்பைகள்தான் சைனஸ் எனப்படுகிறது. இவற்றில் சில, கண் இமைகளுக்கு அருகே இருக்கும். சில, கண் எலும்புகளுக்கு உள்புறம் அமைந்திருக்கும். வேறு சில, கண்களுக்கு நடுவே அமைந்திருக்கும்.

நம் உடல் அரோக்கியமாக இருக்கும்போது, இந்த சைனஸ் பகுதிகள் காற்றினால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் காரணமாக, நம் முகத்தில் உள்ள எலும்புகள் எடை குறைந்தவையாகவும் இருக்கும். சைனஸ் மட்டும் இல்லை என்றால் நம் மண்டை ஓடு மிகவும் அதிக எடை கொண்டதாக மாறிவிடும்.

சைனஸால் பாதிக்கப்படுவதற்கு பாக்டீரியா, வைரஸ் அல்லது இரண்டுமேகூட காரணமாக அமையக்கூடும், பொதுவாக, ஒருவரது சைனஸ் பகுதி பாதிக்கப்படும்போது அவருக்கும் கடும் ஜலதோஷம் ஏற்படுவது உண்டு. இப்படி ஏற்படுவதை Viral Sinusitis என்பார்கள்.

ஒவ்வாமை காரணமாகவும் சைனுசைடிஸ் உண்டாகலாம். ஜலதோஷம் மற்றும் ஒவ்வாமை காரணமாக மூக்கடைப்பு ஏற்படும்போது, சைனஸ் பகுதியில் பாக்டீரியா பரவியிருப்பதன் காரணமாக, இந்தச் சளியை வெளியேற்ற முடியாமல் போகலாம். இந்த நிலையை Bacterial Sinusitis என்று அழைப்பார்கள். வைரஸால் ஏற்படும் சைனஸில் அதிக வலி இருக்கும். வீக்கமும் அதிகமாக இருக்கும். காய்சலும் இருக்கக்கூடும்.

பாக்டீரியா காரணமாக சைனுசைடிஸ் உண்டாகியிருந்தால் மூக்கில் இருந்த அடர்த்தியான சளி வெளியாகும். தொடர்ந்து இரு வாரங்களுக்கு மூக்கு ஒழுகும். இருமலுக்கும் குறைவிருக்காது. கண்களைச் சுற்றி வீக்கமோ வலியோ இருக்கக் கூடும். கன்னது எலும்புகளைச் சுற்றி வலி தோன்றும்.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் முன்புறம் குனிந்தாலே தலைவலி உண்டாகும். என்னதான் பற்களைத் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் உண்டாகும்ம். மேல் வரிசை பல்லில் வலி இருக்கும் 102 டிகிரியைத் தாண்டலாம்.

தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தை டாக்டர் எழுதிக்கொடுக்கக்கூடும். உடல்நிலை சரியாகிவிட்டதென்று எண்ணி பாதியிலேயே மருந்து சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டாம். அடங்க தொடங்கியிருக்கும் பாக்க்டீரியா மீண்டும் பலம் பெற்று எழ வாய்ப்பு உண்டு.

சைனஸ் பாதிப்பு, தொற்று நோய் அல்ல. ஆனால், இருமலும் இத்துடன் இணையும்போது அதைச் சுற்றி இருப்பவர்களுக்குப் பரவக்குகூடும். சைனஸ் பாதிப்பு ஏற்படும்போது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், நிறைய திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உப்பு அடங்கிய, மூக்குல் விடக்கூடிய சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

மூக்கில் இருந்து இரத்தம் வெளியேறினால் ஏதோ உயிருக்கு ஆபத்து வந்துவிட்டதாக எண்ணி சிலர் பதறுவார்கள். மூக்கில் முன்பக்கத்தில் இருந்து இரத்தம் வெளியேறினால் அது ரொம்ப சாதரணமான விஷயம். இதில் கவலைப்ட எதுவும் இல்லை.

மூக்கில் அடிபட்டுக் கொண்டதாலோ, மிகவும் பலமாக மூக்கை சிந்திவிட்டுக் கொண்டதாலோ மூக்கின் முன்பகுதியில் உள்ள மிக மெல்லிய ரத்தக் குழாய்கள் வெடிப்பதன் காரணமாக இரத்தம் வெளியேறலாம்.

இப்படி இரத்தம் வெளியேறினால் தலையை முன்புறமாக சாய்த்துக் கொள்ளுங்கள். மூக்கின் முன்பகுதியை சுமார் 5 நிமிடத்திற்கு அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள் (வாய் வழியாக மூச்சு விட்டால் பரவாயில்லை). இரத்தம் வெளியேறுவது நின்றவுடன் முமூக்கை சிந்திவிட்டுக் கொள்ள வேண்டாம் சொல்லப்போனால் அடுத்த நாள் முழுவதும் மூக்கை சிந்தவிட்டுக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

சில சமயம், மூக்கின் பின்புறம் இரத்தம் வெளியேறி அது தொண்டைக்குள் போகலாம், பெரும்பாகும் இதனால் உபத்திரவம் இல்லை. தானாக நின்றுவிடும்.

ஆனால், அதிக நேரம் இது தொடர்ந்தால் இரத்த இழப்பு அதிகமாகும். இப்படி நேர்வதற்கு எது காரணமாக இருக்கக்கூடும்? அதிக ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை போன்றவை காரணங்களாக இருக்கலாம். அதிக மதுப் பழக்கமும் காரணமாக அமையக்கூடும்.

மூக்கில் இருந்து இரத்தம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டு இருந்தால் மருத்தவ ஆலோசனை பெறுங்கள்.

'ஆகா என்ன ஒரு மணம்' என்று ரோஜாவையோ மல்லிகையையோ நாம் பாராட்டக் காராணம், நம் மூக்கு சரியாக வேலை செய்வதனால்தான். இதற்கு நம்மூக்கு மற்றும் நாக்கு நரம்புகள் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும்.

உணவுப்பொருள் கெட்டுபோயிருந்தால் அது நமக்குத் தெரிய வேண்டாமா ? அதற்கு மூக்கு மற்றும் நாக்கு நரம்புகளின் ஒத்துழைப்பு அவசியம். இந்த நரம்புகள் சரிவர வேலை செய்யவில்லை என்றால் வாசனை மற்றும் சுவையை அறிந்து கொள்வதில் கோளாறுகள் ஏற்படும்.

மூக்கில், வாசனை அறிவதில் கோளாறு ஏற்பட்டால் பலவித சங்கடங்கள் உண்டாகும், விபரீதங்களும் ஏற்படலாம். சந்தேகமாக இருக்கிறதா? சமையல் அறையில் காஸ் கசியத் தொடங்கும்போது அதை உங்கள் மூக்கு உணரவில்லை என்றால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.

மூக்கில் கோளாறுகள் உண்டானால் முன்பு ரசித்த வாசனைகளை கூட "நாத்தம்டிக்குதே" என்று ஒதுக்கத் தோன்றும்.

சுவை மர்றும் வாசனையை அறிவதில் ஏன் கோளாறுகள் உண்டாக வேண்டும் ? தலையில் அடிபட்டால் இப்படி நேரலாம். கடுமையான ஜலதோஷத்தின் காரணமாகவும் இந்தக் கோளாறுகள் உண்டாகலாம். சிலவகை மருந்துகள்கூட நம் வாசனை மற்றும் சுவை அரும்புகளைப் பாதிக்கக்கூடும். வயதுகூட இதில் பங்கு வகிக்கலாம். முதியவர்கள் சரியான வாசனையையும், சுவையயும் அறியாமல் தவிப்பதும் நாம் அடிக்கடி காணும் காட்சிதானே. இந்தக் கோளாறுகளை, உரிய மருந்துகளின் மூலம், டாக்டர் மெல்ல மெல்ல குணப்படுத்துவார்.

அடிக்கடி தும்மல் வருகிறது, மூக்கு ஒழுகிறது, இருமலுக்கும் குறைவில்லை. கண்கள், மூக்க்கு, தொண்டைப் பகுதிகளில் அரிப்பு உண்டாகிறது. கண்ணைச் சுற்றி சமீபகாலமாக கருவளையங்கள் தோன்றியுள்ளன.

மேலே உள்ள அத்தனை அறிகுறிகளும் இருக்க வேண்டும் என்பதில்லை. அவற்றில் சில இருந்தாலே கூட, அது ஹே காய்ச்சலின் (Hay Fever) அறிகுறியாக இருக்கக்கூடும்.

இது எதனால் ஏற்படுகிறது ? கீழே விழும் மரம், புல் அல்லது களை, போன்றவை மகரந்தப் பொடிகளை வெளிப்படுத்தலாம். அவற்றில் சில காற்றின் வழியாக உங்கள் மூக்கு அல்லது தொண்டையை அடையக்கூடும். இந்தப் புதிய பொருள் ஒவ்வாமை உண்டாக்கி, அது ஹே காய்ச்சலில் முடியலாம்.

அலர்ஜி எனப்படும் ஒவ்வாமைக்குரிய மருந்துகளின் மூலம் இதனைக் குணப்படுத்த முடியும்.

என்ன மூக்கைப் பொத்திட்டீங்க ? இனிமேல்தான் இருக்கு இன்ஷா அல்லாஹ்...

இப்படிக்கு,
கா.மூ.தொ. முற்போக்கு கூட்டணி.

நன்றியுடன் : காது-மூக்கு-தொண்டை (பிரச்சினைகள் - தீர்வுகள்) கையடக்க புத்தகத்திலிருந்து (காசு கொடுத்து) சுட்டதும், மனதைத் தொட்டதும்... அங்கே சுவாசித்ததும் உங்களின் மேலான பார்வைக்கு... - அபுஇபுறாஹிம்.

முற்போக்கு கூட்டணி ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | March 16, 2015 | , , , ,


காற்றுக்கேது வேலி !

கா.மூ.தொ. கூட்டணியினை அதாவது E.N.T - மருத்துவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களாகிய நமக்கும் இது பரிச்சயமான வார்த்தைதான். காது (EAR), மூக்கு (NOSE). தொண்டை (THROAT) என்பதுதான், இதன் விரிவாக்கம்.

பொதுவாக, நம் உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்புக்கும் தனித்தனி மருத்துவப் பிரிவு இருக்கிறது. அந்த பிரிவில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள், குறிப்பிட்ட உறுப்புக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டு அறிந்து சரி செய்கிறார்கள். ஆனால், காது, மூக்கு, தொண்டை ஆகிய உறுப்புகளை மட்டும் ஒரே கூட்டணியாக்கி அதை ஈ.என்.டி (கா.மூ.தொ) என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்திவிட்டார்கள். இதற்கு என்ன காரணம்?

விசேஷமாக ஒன்றும் இல்லை. இந்த மூன்று உறுப்புகளுமே காற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன என்பது முதல் காரணம். செயல்படும் விதத்திலும் இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று நெருக்கமான தொடர்பில் இருக்கின்றன என்பது இன்னொரு காரணம்.

உதாரணமாக, நமக்குக் காது நன்றாகக் கேட்க வேண்டும் என்றால், அதற்குத் தொண்டையின் பங்களிப்பும் அவசியம். மூக்கில் இருந்து ஆரம்பிக்கும் நமது சுவாசப் பாதை, தொண்டை வழியாகத்தான் பயணப்படுகிறது. ஆக, நமது சுவாசம் சரிவர நடைபெற, இந்த இரண்டு உறுப்புகளும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியிருக்கிறது. இப்படி, இந்த மூன்று உறுப்புகளுமே பல வகையில் கூட்டணியாகப் பணியாற்றுவதாலும் இவை ஒரே பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

அமைப்பு ரீதியாகப் பார்த்தாலும், இவை அருகருகே, பக்கமாக, நெருக்கமாக அமைந்துள்ளன என்பது மூன்றாவதாகச் சொல்லப்படும் காரணம். மூன்று உறுப்புகளுக்கும் சேர்த்து மூன்று காரணங்களைச் சொல்லியாகிவிட்டது. இனி, ஒவ்வோர் உறுப்பு பற்றியும் தனித்தனியாகப் பேசலாம்.

காது: 

இந்த உலகத்தோடு நம்மைத் தொடர்புபடுத்தும் உறுப்புகளுள் காதுக்கு மிக முக்கியமான பொறுப்பு உண்டு. நாம் காது என்று பொதுவாக எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதுமட்டும் காது அல்ல. அதாவது, வெளியில் நாம் பார்க்கிற காதுமடல் மட்டுமே காது அல்ல.

நமது காது, வெளிப்புறக் காது, நடுக் காது, உள் காது என மூன்று பகுதிகளைக் கொண்டது. ஓர் ஒலியை கேட்டு உணர்வதில் இந்த மூன்று பகுதிகளும் ஒவ்வொரு மீடியமாகச் செயல்படுகின்றன. வெளிப்புறக் காது, வாயு மீடியம்; நடுக் காது திட மீடியம்; உள் காது திரவ மீடியம். எப்படி என்று பார்க்கலாம்.

ஒலியை நாம் உணர்வது பல கட்டங்களாக நடைபெறுகிறது. கேட்கப்படும் ஒலியைக் காற்றின் மூலமாக உள்வாங்கி, அதை நடுக் காதின் பக்கம் அனுப்பிவைப்பதுதான் முதல் கட்டம். வெளிப்புறக் காதின் வசம்தான் இந்த முதல் கட்டம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. காற்றுதான் இங்கே மீடியமாகச் செயல்பட்டு, ஒலியை வெளியிலிருந்து உள்ளே எடுத்துச் செல்கிறது. ஓர் ஒலியின் அளவு, திசை போன்றவற்றை உணர்ந்து கொள்ளும் முக்கியமான வேலையிலும் வெளிப் புறக் காது பங்கேற்கிறது.

வெளிக் காதையும் நடுக் காதையும் பிரிக்கும் பகுதியை செவிப்பறை (EAR DRUM) எனப்படும். புனல் போன்று தோன்றும் காது மடல், ஒரு குறுகிய பாதையின் வழியே நீண்டு செவிப்பறையை அடைகிறது. இந்த செவிப்பறையின் பின்புறம் ஹாமர், அன்வில், ஸ்டிர்ரப் (HAMMER, ANVIL and STIRRUP) ஆகிய மூன்று எலும்புகள் உள்ளன. இந்த அமைப்புதான் நடுக் காது எனப்படுகிறது.

வெளிப்புறக் காதின் வழியாக உள்ளே வரும் ஒலியின் அலை வரிசைக்கு ஏற்ப, செவிப்பறை அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. மேலே குறிப்பிட்டுள்ள அந்த மூன்று எலும்புகள்தான் திட மீடியமாகச் செயல்பட்டு, செவிப்பறையில் ஏற்படும் அதிர்வுகளைக் கடத்துகின்றன. செவிப்பறை உண்டாக்கும் அதிர்வுகளைப் பொறுத்துதான் இது எந்த வகையான ஒலி என்பதை உணர்ந்து கொள்கிறோம்.

அடுத்து அமைந்துள்ளதுதான் உள் காது. உள்ளே துளை உடைய பகுதி இது. நம் உடலில் மிக அடர்த்தியான எலும்புக்குள் இது புதைந்திருக்கிறது. உள் காதில், பெரிலிம்ப், எண்டோலிம்ப் என்ற இரண்டு வகையான திரவங்கள், இரண்டு அடுக்குகளாகக் காணப்படுகின்றன. நடுக் காதில் உள்ள ஸ்டிர்ரப் எலும்புதான், மனித உடலில் உள்ள மிகமிகச் சிறிய எலும்பு. செவிப்பறையில் ஏற்படும் அதிர்வால் இந்த எலும்பு அசையும்போது உள் காதில் உள்ள எண்டோலிம்ப் திரவத்திலும் அதிர்வுகள் உண்டாகின்றன.

இந்தத் திரவத்தைச் சுற்றிலும் புரதத்தால் ஆன மிக மெல்லிய ரோம செல்கள் அமைந்திருக்கின்றன. திரவம் அதிரும்போது, இந்த செல்கள் தூண்டப்பட்டு ஒருவகையான ரசாயனத்தை வெளிப்படுத்துகின்றன.

எலும்புகளால் கடத்தப்படும் ஒலி அலைகள், ரசாயனத்தோடு சேர்ந்து மின் அலைகளாக மாற்றப்பட்டு, திரவத்தில் மிதந்து கொண்டிருக்கும் செவியுணர்வு நரம்புகள் மூலமாக, மூளைக்கு அனுப்பப்படுகின்றன. இந்த மின் அலைகளுக்கு ஏற்ப, குறிப்பிட்ட ஒலியை காரின் ஹார்ன் சத்தமா, உம்மாவின் இனிய குரலா என்று மூளை அடையாளம் கண்டு கொள்கிறது.

காது என்பது கேட்பதற்கான முக்கியப் பகுதி மட்டுமல்ல, தள்ளாடாமல், தடுமாறாமல் நம்மை நிலைநிறுத்தச் செய்து கொண்டு நிலையாக நிற்கவும், நடக்கவும் உதவியாக இருக்கிறது. உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதிலும், காதுக்குப் பங்கு இருக்கிறது. தள்ளாடாமல் நிலையாக நிற்கும் விஷயத்தில் கண்கள், மத்திய நரம்பு மண்டலம் ஆகியவற்றுக்கும் மிக முக்கியமான பொறுப்பு இருக்கிறது.

சிறு வயதில் உங்களையே நீங்கள் சுற்றிக் கொண்டிருப்பீர்கள். அப்போது உங்களின் தலை கிர்ர் என்ற சத்தத்தோடு சுற்றுவது போல் ஓர் அனுபவம் உங்களுக்குக் கிடைத்திருக்கும். ஆனால், நீங்கள் சுற்றிவிட்டு நின்றபிறகும் காட்சிகளும் தடுமாறுவதுபோல் இருக்கும். இதற்குக் காரணம் நம் காதுதான்.

நாம் சுற்றும்போது காதுக்குள் உள்ள திரவமும் அசைகிறது. இந்த திரவம், காதுக்குள் உள்ள சிறு சிறு ரோமக் கால்கள் மூலம், இப்போது உடல், எந்தத் திசையில், எங்கே, எப்படி இருக்கிறது என்று மூளைக்குத் தகவல் அனுப்புகிறது. சுற்றி முடித்தவுடன் உடம்பு நின்றுவிடுகிறது. ஆனால், காதில் உள்ள திரவம் தொடர்ந்து சிறிது நேரம் அசைந்துவிட்டுத்தான் ஓய்வு நிலையை எட்டுகிறது. இதனால்தான், உடல் ஒரு நிலைக்கு வந்த பிறகும் நமக்குத் தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன.

மேலே குறிப்பிட்ட மூன்று பாகங்களும் மூளைக்கு அனுப்பும் செய்தியில் வேறுபாடு ஏற்பட்டால் தலை சுற்றுவது போன்ற உணர்வு ஏற்படத்தான் செய்யும். நாம் நின்றுவிட்டோம் என்பதை கண்கள் உணர்த்துகின்றன. ஆனால், காதுகளோ (திரவத்தின் அசைவுகள் தொடர்வதால்) 'உடல் தொடர்ந்து சுற்றுகிறது' என்ற தவறான செய்தியை மூளைக்கு உணர்த்துகின்றன. இதனால்தான், மூளையும் குழம்பி தலை சுற்றுகிற உணர்வை ஏற்படுத்துகிறது.

சிறிது நேரம் கழித்து திரவத்தின் அசைவு நின்றுபோக, "உடல் இப்போது அசைவில்லாமல் இருக்கிறது" என்ற தகவலைக் காதும் உறுதி செய்ய, மூளையும் குழப்பம் விலகி உத்தரவுகளைப் பிறப்பிக்க, தலை சுற்றுவது நிற்கிறது.

ஏதோ ஓர் உடல் பிரச்சினையின் காரணமாக, காதுக்குள் உள்ள திரவத்தின் அசைவில்லாத் தன்மை பாதிக்கப்படும்போது, நம் உடலின் நடுநிலையும் பாதிக்கப்படுகிறது என்பதைத்தான் நீங்கள் இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.

நம் உடலின் சில குறிப்பிட்ட பாகங்கள் சரியாக வேலை செய்யாததாலும், பேலன்ஸ் தவறிப்போகலாம். பார்க்கின்ஸன்ஸ் நோய், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் மூளையில் உள்ள சில நரம்புகள் சரிவர இயங்காததால் உண்டாகின்றன இவற்றால் பாதிக்கப்பட்டவர்களால் தங்கள் உடலை ஒழுங்காக நேர் நிலைச் செய்ய முடியாது, நீரிழி நோய், பாதங்களில் உள்ள நரம்புகள் பாதிக்க, அப்போதும் ஒழுங்காக நடக்கமுடியாமல் போகலாம்.

சிலர், 'வெர்டிகோ; (VERTIGO) என்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். உயரமான இடங்களுக்குச் சென்று கீழே பார்த்தால் இவர்களுக்குத்ட் தலை சுற்றும். காதுகளின் உள்புறத்தில் ஏற்படும் சிக்கல்களின் காரணமாகத்தான் இப்படி ஏற்படுகிறது.

நீர்ச்சத்து குறைதல் (DEHYDRATION), ரத்தச் சோகை, சில வகை மருந்துகள், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தானியங்கி நரம்பு மண்டலத்தில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றின் காரணமாகவும் இவை ஏற்படலாம். கேடராக்ட் க்ளுகோமோ போன்ற கண் பார்வைக் குறைபாடுகளாலும் உடலைச் சீராக நடக்கவைக்க முடியாமல் போகலாம்.

எல்லாவற்றுக்கும் மேல், உடலுக்குக் கொஞ்சம் சக்தியாவது வேண்டும். இடுப்பு, முழங்கால் போன்ற பாகங்களில் உள்ள தசைகள் நாம் நேராக நிற்பதற்கு முகவும் அவசியம். அவை பலவீனமாக இருந்தால் நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையும் சாத்தியமில்லை.

இப்படிக்கு
கா.மு.தொ.முற்போக்கு கூட்டணி !

நன்றியுடன் : காது-மூக்கு-தொண்டை (பிரச்சினைகள் - தீர்வுகள்) கையடக்க புத்தகத்திலிருந்து (காசு கொடுத்து) சுட்டதும், மனதைத் தொட்டதும்... (அபுஇபுறாஹிம்)

உணவுக்கும் நானே; சுவாசத்துக்கும் நானே ! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | March 09, 2015 | , , , , , ,

உணவு, ஆக்சிஜன் - நாம் உயிர் வாழ்வதற்கு இவைகளும் இன்றியமையாதது என்பது உங்களுக்குத் தெரியும். உணவு, உணவுக் குழாயின் வழியாக வயிற்றுக்குச் செல்கிறது. ஆக்சிஜன், சுவாசக் குழாயின் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இதில் இரண்டு குழாய்களுமே தொண்டையின் வழியாகத்தான் பயணப்படுகின்றன என்பதைத்தான் நீங்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்(!!)

ஆக, உணவும் ஆக்சிஜனும் உடலுக்குள் செல்ல தொண்டையும் ஒரு முக்கியமான பாதையாக இருக்கிறது. இன்னொரு வகையில் சொல்வதென்றால் உணவுப் பாதையிலும் சுவாசப்பாதையிலும் தொண்டையும் ஓரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.

இதோடு தொண்டையின் வேலை முடிவதில்லை. உணவு, சுவாசக் குழாய்க்குள் போகாமல், சுவாசக் காற்று உணவுக் குழாய்க்குள் போகாமல் பார்த்துக் கொள்வதும் மிக முக்கியம். அந்த சிறப்பான பணியையும் பொறுப்புடன் நிறைவேற்றுவது திருவாளர் / திருமதி (செல்வன் / செல்வி) தொண்டையார்தான். பொதுவாக, சுவாசப் பாதை எப்போதும் திறந்தே இருக்கும். உணவுப்பாதை எப்போதும் மூடியே இருக்கும், உணவு சாப்பிடும்போது சுவாசப்பாதை மூடிக் கொள்ளும், உணவுப் பாதை திறக்கும்.

உணவு உள்ளே போனதும் உணவுப் பாதை மீண்டும் மூடிக் கொள்ளும், சுவாசப்பாதை திறக்கும். இந்த வேலையை EPGLOTTIS என்ற பாகம் செய்கிறது. டான்சில்ஸ் என்ற குட்டிச் சதையும் இதில் பங்கேற்கிறது.

உணவுப் போக்குவரத்து நடைபெறும்போது (இங்கேயும் நம்மில் சிலர் ஒரு கவலம் உட்சென்று இறங்குவதற்குள் அடுத்தடுத்து உள்ளே அனுப்பி டிராஃபிக் ஜாம் ஏற்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்) சுவாசப்பாதையின் வாயிலை மூடவும், சுவாசப் போக்குவரத்து நடக்கும்போது உணவுக் குழாயின் வாயிலை மூடவும் இவை பயன்படுகின்றன. இதனால், சுவாசக் குழாயில் உணவு செல்லாமல் தடுக்கப்படும். அதேபோல், காற்றும் உணவுக் குழாயில் செல்லாமல் இருக்கும், ஆனால், சாப்பிடும்போது பேசினால், பேசுவதற்காக சுவாசக் குழாய் திறக்கும். இங்கே சிக்னலில் சிக்கல் வந்தால் "யாரோ நினைக்கிறாங்கமா" என்ற ஸ்லோகன் அருகிலிருப்பவரிடமிருந்து தானாக வரும் !

இதன் காரணமாக, சிலசமயம், சுவாசக் குழாயில் உணவு நுழைந்துவிடும். இது மிகவும் ஆபத்தானது. இதனால் ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்கத்தான், உணவை சுவாசக் குழாய் வெளியே பலவந்தமாகத் தள்ளும். இதைத்தான் "புரையேறுதல்" எனக் கூறுகிறோம். இதனால் சில நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்படும்.

பொதுவாக, பாடகர்களும், பேச்சாளர்களும் தங்களது தொண்டையை நன்றாக பார்த்துக் கொள்வார்கள், பராமரிப்பார்கள். ஆனால் இந்த விஷயத்தில் எங்களுக்குச் சம்மதம் இல்லை என்று மற்றவர்கள் ஒதுங்க முடியாது. ஏனெனில், நம் ஒவ்வொருவருக்கும் தொண்டை மிகமிக முக்கியம். எட்டுக்கட்டை ஸ்ருதி பாடுவது இருக்கட்டும், பிறர் காதுகளில் எட்டும் வகையில் பேசுவதற்காவது தொண்டை தேவைப்படுமே.

தொண்டையில் உணவுக் குழாயும், சுவாசக் குழாயும் சந்தித்துக் கொள்ளும் இடத்துக்கு மிக அருகில் உள்ள குரல்வளைதான் நாம் பேசுவதற்கான ஆதாரம். ஆனால், அங்கிருந்து எழும்பும் ஒலியை மேம்படுத்தி, பாலீஷ் போட்டு, இனிமையான குரலாக, கரகர குரலாக வெளிப்படுத்த வாய், கன்னம், சைனஸ் அறைகள் போன்றவற்றோடு தொண்டையும் முக்கியமாகப் பயன்படுகிறது.

தொண்டைக்குள் தாகத்துக்கும்கூட மிக நெருங்கிய தொடர்பு உண்டு. நம் அனைவருக்குமே எப்போதாவது தாக உணர்வு ஏற்படுவது இயல்புதான். முதலில் தண்ணீரின் அவசியம் புரிந்தால்தான் தாகத்தின் அருமையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். தண்ணீர் நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மூன்று வாரங்கள் தண்ணீர் குடிக்காமல் ஒருவர் இருந்தால் அவர் இறந்து போவதற்கான வாய்ப்பு அதிகம்.

நம் உடலில் பொதுவாக, 47 லிட்டர் தண்ணீர் இருக்கிறது. தசைகளில் முக்கால்வாசி தண்ணீர்தான் அடங்கியிருக்கிறது. கல்லீரலில் 70 சதவீதம் தண்ணீரே. சிறுநீரகத்தில் 83 சதவீதம், மூளையில் 79 சதவீதம் என்ற அளவில் தண்ணீர் இருக்கிறது. வாயும் தொண்டையும், வறண்டுபோனால் தாகம் என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. அச்ச உணர்ச்சிகூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகும் சிலருக்கு நாக்கும் தொண்டையும் வறண்டு போகலாம் அல்லது எச்சில் ஊறும் வேகம் திடீரென்று குறைவாக இருக்கலாம். இதனாலும் வறட்சி உண்டாகி இருக்கக்கூடும். கொஞ்சம் எலுமிச்சை ஜூஸை குடித்தால் எச்சில் மீண்டும் வழக்கம்போல் சுரக்கும்.

மிக அதிகமாக எச்சில் சுரந்தால் (அல்லது சுரக்க வைக்கப்பட்டால்) தாகம் அடங்கிவிடுமா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில். எச்சில் சுரந்து வயிறு நிரம்பி விட்டால்கூட தாகம் ஏற்படலாம்.

சரி, இப்போது அடிப்படைக் கேள்விகளுக்கு வருவோம். 

"தாகம் ஏன் ஏற்படுகிறது. ?"

"நம் உடலில் உள்ள உப்பு, சர்க்கரை ஆகிய இரண்டும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் உள்ளன. ஏதோ ஒரு காரணத்தால் இந்த விகிதம் மாறி உப்பின் அளவு (தண்ணீரோடு ஒப்பிடும்போது) அதிகமானால் தாகம் எடுக்கும்."

நம் மூளையில் தாக மையம் (Thirst Center) என்ற பகுதி உண்டு. இது நம் ரத்தத்தில் உள்ள உப்பின் அளவைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும். உப்பின் சதவீதம் அதிகமானால், உடனே தொண்டையின் பின்பக்கத்தில் உள்ள நரம்புகளுக்குத் தகவலைத் தெரிவிக்கும். அந்தத் தகவல் மூளையை எட்டும். இப்படி தகவல் பரிமாற்றங்கள் நடக்கும்போதுதான் நாம் தாகத்தை உணர்கிறோம். தண்ணீர் குடித்து உப்பு - தண்ணீர் விகிதத்தை சரி செய்கிறோம்.

தொண்டையின் தொண்டு பற்றி விரிவாகப் பார்த்தாகிவிட்டது. இனி, தொண்டையில் ஏற்படும் சின்னச் சின்ன தொந்தரவுகளையும் வரிசையாகப் பார்க்கலாம்.

அங்கே இருமல், விக்கல் தும்மல் என்ற தொண்டர் அணியின் அணிவகுப்பை அடுத்தடுத்து பார்க்கலாம்....

சொடுக்குத் தகவல்:-

அடிக்கடி ஏப்பம்! ஏற்படக் காரணம் என்ன ? 

உணவுக் குழாய் உள்ளே காற்று இருப்பதனால் ஏப்பம் வருகிறது. சாப்பிடும்போது அதிகமாகப் பேசுவது, கரிய மில வாயு கலந்த பானங்களை குடிப்பது, புகைப்பிடித்தல், இவற்றி ஏதாவது ஏப்பம் வரக் காரணமாக இருக்கும். வாயிலும், தொண்டைக் குழியிலும் இருக்கும் காற்று, வயிற்றுக்கும் குடலுக்கும் செல்லாமல் வாயின் வழியாக ஏப்பமாக வருகிறது. சாப்பிடும்போது அதிகமாக பேச வேண்டாம். குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். புகைப் பழகத்தில் இருந்து மீள வேண்டும். இவற்றைச் செய்தாலே ஏப்பம் வருவது பெரும்பாலும் நின்றுவிடும்.

இப்படிக்கு,
கா.மூ.தொ. முற்போக்கு கூட்டனி.
நன்றியுடன் : காது-மூக்கு-தொண்டை (பிரச்சினைகள் - தீர்வுகள்) கையடக்க புத்தகத்திலிருந்து (காசு கொடுத்து) சுட்டதும், மனதைத் தொட்டதும்... அங்கே சுவாசித்ததும் உங்களின் மேலான பார்வைக்கு... - அபுஇபுறாஹிம்.

பதவிகள் இல்லாத நாற்காலிகள்... – அச்சம் ! 6

அதிரைநிருபர் | August 14, 2014 | , , , , , ,


பாரம்பரியம் மிக்க அதிரைப்பட்டினம், நம் சமுதாய மக்களின் நன்னெறிகளாலும் அவர்களின் இயல்பான பண்பாலும் அதன் சுற்று வட்டாரத்திலும் கோலோச்சினார்கள், அதிமுக்கியமாக மார்க்க விஷயத்திலும், நல்ல விடயங்களை முன்னெடுத்து செல்வதிலும். காலச் சூழல், இளமையை தொலைத்திட வெளிநாடு/வெளியூர் சென்ற இரண்டு தலைமுறை சமுதாயம், அவரவர்களின் இருப்பிடம் திரும்பி நிம்மதியாக இருக்கலாம் என்று திரும்ப நினைத்தாலும் அச்சமே அவர்களை ஆட்கொள்வதாக பரவலாக இருக்கும் புலம்பல்கள்.

இளமையின் இரகசியம் அறியாதவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை, ஆனாலும் இப்படித்தான் வாழவேண்டும் என்று சட்டமாக்கப்படாத சாபத்தின் சஞ்சலங்களை கட்டாய கடமை போன்று பின்பற்றி அதன் போக்கிலேயே கடந்த இரண்டு தலைமுறை தொலைத்தது தனது இளமையை என்று சொன்னால் மறுக்க யாரும் கொடிதூக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

அவ்வாறான சூழ்நிலைகள் இனியும் நிகழாவண்ணம், இனிவரும் தலைமுறை / இப்போது தலையெடுக்கும் தலைமுறை என் குடும்பம், என் வீடு, என் ஊர், என் நாடு என்று வட்டங்களிட்டு அவைகளுக்குள் சுழல கற்றவர்களாக எழுந்து வருவது ஆரோக்கியமே, இதனை அவ்வாறே நிலைத்திடவும் உறுதி கொள்ளவேண்டும் இன்ஷா அல்லாஹ் !

மேற்சொன்னவைகள் தலைப்பிற்கு எவ்வித சம்பந்தமில்லாதது போன்று தோன்றினாலும், அன்றைய அல்லது அவைகளை கடந்து வந்த தலைமுறைகள் அனுபவிக்கும் இன்றைய சூழலின் கஷ்ட நஷ்டங்களை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை....

15 வருடங்களுக்கு முன்னால் பள்ளிவாசல்களில் நாற்காலிகள் என்று இருக்கும் அவைகள் தொழுகை அல்லாத நேரங்களில் பயன்படுத்தவும் அல்லது அதில் ஏறி நின்று மோதினார் ஒட்டடை அடிக்கவும், அல்லது கடிகாரத்தின் முட்களை சரியாக நிமிரித்தி வைக்கவும் என்றுதான் இருந்தது. அவைகளில் வெளிப் பள்ளியில் ஒன்றோ இரண்டோ இருக்கும் அல்லது மோதினார் தங்கியிருக்கும் அரையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

இன்றைய சூழலில், தொழுகைக்கான சஃப்பிலும் மற்றும் இதர காரியங்கள் பள்ளிவாசல்களில் நடைபெற்றால் அங்கேயும் சரி நாற்காலிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. இதில் வயது பேதமில்லை, இளயவர்களும் முதியவர்களும் என்று அதிகரித்திருப்பது சொல்லாமல் எதனையும் சுட்டிக் காட்டவில்லை, தலையில் அடித்து சொல்வது ஆரோக்கியத்தினை பற்றிதான்.

தொழுகைக்காக பள்ளிக்குள் நாற்காலிகள் ஓரத்தில் வரிசையாக வைக்கப்ப்பட்டிருந்தது, அதன் அருகில் ஒரு நடுத்தர வயதுடையவர் தொழுது கொண்டிருந்தார் ஜமாத்தாக... அதன் பின்னர் இரண்டாவது ரக்காத்தில் இணைந்து கொள்ள மற்றொரு சகோதரர் அங்கே நெருங்கியபோது பின்னால் நின்ற அந்த சகோதரருக்கு முன் சஃப்பில் இருந்த நாற்காலியின் பாதிபாகம் பின் சஃப்பில் இருந்ததால் அதனை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு தக்பீர் கட்டிவிட்டார் அப்போது அது யாருக்கும் பெரிதாக தெரியவில்லை அனைவரும் தொழுகையில் ஈடுபட்டிருந்த்தால்...

தொழுகை முடிந்ததும், நாற்காலியில் முன்னே தொழுத நடுத்தர வயது சகோதரர் சற்றே கோபத்துடன் ‘யார்ரா இங்கிருந்த நாற்காலியை எடுத்தது’ என்று நாற்காலி(!!?) பறிபோன கோபத்தில் கேட்டார், பின்னால் நின்ற சகோதரர் தொடர்ந்து தொழுது கொண்டிருந்ததால் அவரின் தொழுகையை முடித்ததும், ‘நான் தான் செய்தேன், நீங்கள் நிலையாக நின்று தொழுது கொண்டிருந்தீர்கள் அதோடு பின்னால் இருந்த சஃப்பிற்கு இடமில்லாமல் இருந்தது அதனால்தான் மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்றார்... அவரும் பரவாயில்லை என்று அமைதியாக சென்று விட்டார்....

அதன் பின்னர் பள்ளியை விட்டு வெளியில் வரும்போது, நாற்காலியில் அமர்ந்து தொழுதவரோடு பேசிக் கொண்டிருந்தவர் அருகில் இருந்தவரிடம் "தரையில் அத்தஹ்யாத்தில் நீண்ட நேரம் உட்கார முடியவில்லை அதனால்தான் சேர் போட்டு தொழுகிறேன் என்றார் அதற்கு அவரின் நண்பர் "உனக்கு எந்த வியாதியும் இல்லையே, வெளிநாட்டிலும் இப்படித்தான் சேர் போட்டு தொழுவியா என்று... ?" அவரோ "அங்கேயெல்லாம் சஃப்பில் நின்றுதான் தொழுவேன் ஊருக்கு வந்ததும் மூட்டு வலி தொடர்ந்து இருக்கிறது....." என்றார்..

இவ்வாறான உரையாடல்களை கேட்டு விட்டு அங்கிருந்து நகரும்போது பழைய நினைவுகளை நோக்கி (MSM-n மற்றும் ஜஸீலா காலத்து அப்பாக்களை) அசைபோட்டேன்.... அதிகமான வயதுடைய மூத்தோர் எவரையும் அப்போது நாற்கலிகளில் அமர்ந்து தொழுகையை நிறைவேற்றியதாகவோ அல்லது, மார்க்க பயான்கள் கேட்டதாகவோ அதிகம் நினைவில் இல்லை... அது அவர்களின் ஆரோக்கியத்தையும் உழைப்பையும், காட்டியது.

எத்தனையோ பெரியவர்கள் தரையில் அமர்ந்தபடியே தொழுவதை கண்டிருக்கிறோம் அன்றும் இன்றும், நாற்காலி போட்டு அமர்வதற்கு ஒரே காரணம் தரையில் அமர்ந்தால் எழுந்திருக்க முடியாத சூழல், கால் மடக்கி உட்கார முடியாத நிலை, நீண்ட நேரம் கால் மடக்கி அமர்ந்தால் எழுந்து நடப்பதில் சிரமம்... ? இவைகள் எதனால் ?

ஏன் இப்படியான நிலை? அச்சமாக இருக்கிறது !

அபூஇப்ராஹீம்
இது ஒரு மீள்பதிவு


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு