Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label MSM MEERASHA RAFIA. Show all posts
Showing posts with label MSM MEERASHA RAFIA. Show all posts

முதல் புனித பயணமும், முதல் மோனோ ரயில் பயணமும் - மீள்பதிவு ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | November 07, 2011 | , , ,

இது ஓர் மீள்பதிவு..!

ஆம்.. இவ்வருடம் (2010) என் வாழ்வில் கிடைக்கப்பெற்ற விலை மதிக்கமுடியா பொக்கிசம் என்றுதான் கூறவேண்டும். என் முதல் ஹஜ் பயணம் வரலாற்றுமிக்க முதல் ஹஜ் ரயில் சேவையோடு தொடர்ந்தது. நூற்றிமுப்பது வயது மூதாட்டி இந்தியாவிலிருந்து ஹஜ்ஜிற்கு வருவதாக கேள்விப்பட்டவுடன், 'அட! நமக்கு இன்னும் முப்பது வயதுகூட ஆகவில்லை ஆனால் அல்லாஹ் நமக்கு அவன் அருளை அள்ளி கொடுத்துவிட்டானே!' என்ற பிரம்மிப்பு கலந்த சந்தோசம் .

முப்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஹஜ்ஜிற்கு வந்திருந்தும் அரபு நாட்டவர்களுக்கும், அந்நாட்டில் வசிப்பவர்களுக்கும் மட்டுமே இந்த மோனோ ரயில் பயணம் அல்லாஹ்வின் கிருபையால் கிடைக்கப்பெற்றது.

இந்த அனுவபத்தை பற்றி பகிர்ந்து கொள்வதற்கு முன் இந்த ரயில் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக செயல்படுத்திக்கொடுத்த சஊதி அரசிற்கும், அசுர வேகத்தில் அசராமல் (24x7) நம்மை அசர வைத்த சீன நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். என்னடா இவன் அதிரம்பட்டினத்துல கம்பன் எக்ஸ்பிரசை நிப்பாடிடானுங்கங்குரத்துக்காக ரயில் வண்டியையே பார்க்காதமாதிரி! சொல்றானேன்னு பார்க்காதீங்கோ காக்காமார்களா.. நம் நாட்டில் இது நடந்தேற எனக்கு தெரிஞ்சு 6-8 வருடம் இழுப்பார்கள். இடையில் கொஞ்சம் "ராஜா.., ராணி.." ஆட்டம்லாம் வேற ஆடுவாங்க. 18 கிலோ மீட்டர் ரயில் பாதை இங்கு ஒரே ஆண்டில் முடிவுற்றது. இப்ப சொல்லுங்க நான் ஆச்சர்யப்படுவது சரிதான?

இதோ அரபியில் நாலு வரியில் எழுதக்கூடிய வார்த்தையை ஏழு கட்டத்திற்குள் கிளித்தட்டில் ஏத்தம் விட கோடு போட்டமாதிரி அடக்கிவைச்சிருக்கான்களே, இங்குதான் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் இரவுபகல் வேலைபார்க்குமிடம்.

சரி சரி விசயத்திற்கு வர்றேன். பயணம் ஆரம்பமாகபோகுது சீட் பெல்ட போட்டுக்கொள்ளுங்கள்..

முதல் நாள் (ஹஜ் 8):

சுபுஹுக்குப்பின் ஜித்தாவிலிருந்து மினா வரை பேருந்தில் பயணித்தோம். ஹஜ்ஜின் கடமைப்படி மினாவில் லுகரிலிருந்து ஐந்து வேலை தொழுகை நிறைவேற்றிவிட்டு சுபுஹுக்குப்பின் அரபாவிற்கு செல்ல வேண்டும். ஆனால் ரயில் அட்டவணையின்படி எங்கள் குழு விடியற்காலை 1 மணிக்கு ரயிலை பிடித்தாக வேண்டும் என்று சஊதி அரசாங்கதிடமிருந்து உத்தரவு வந்தது. எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம் என்று கட்டுப்பட்டு காத்திருந்தோம் . அப்போதுதான் கையில் கட்டப்பட்டது அந்த ரயில் பயணச்சீட்டு. இதை தண்ணீரில் ஊற வைத்தாலும் , வெயிலில் காய வைத்தாலும் கிழியாதாம். ஆகையால் ஒரு கரத்தில் பயண சீட்டும், மறுகரத்தில் காணாமல் போகாமல் இருக்க டென்ட் முகவரிகளும், எண்ணத்தால் சைத்தானுக்கு பூட்டும் போட்டவனாக இருந்தோம் .

பயணச்சீட்டு உங்கள் பார்வைக்காக..

இதில் நம் பயணத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நாட்கள், நாம் ஏற வேண்டிய ஸ்டேஷன் எண் மற்றும் பிரத்யேக பார்கோடு அச்சு செய்யபட்டிருந்தது.

ஸ்டேசன் எண் நம் டெண்டிற்கு அருகாமையில் இருப்பதைதான் குடுப்பார்கள்.

இரவு 12:30 மணிக்கெல்லாம் ரயிலை பிடிக்க சென்றுவிட்டோம். எனக்கு இது முதல் ஹஜ், முன்னால் ஹாஜிகளுக்கு இது முதல் ரயில் பயணம் என்று பலதரப்பட்ட மக்கள் பல்வேறு சந்தொஷங்களோடு ஒன்று, இரண்டு மணி நேரம் ரயில்வே கேட்டின் படியின் கீழ் படர்ந்திருந்தோம். படி ஏறலாம் என்று கொடி காண்பிக்கப்பட்ட அந்த நொடியில் மக்கள் திரளாக "லப்பை அல்லாஹும்ம லப்பைக்..." என்ற சத்தம் விண்ணைத்தொட்டவாரே வின்வெளிப்பயனம்போல் ரயில் பயணத்தை தொடர்ந்தோம் . படி ஏற முடியாதவர்கள் ஒரே நேரத்தில் 60 பேர் ஏறக்கூடிய லிப்டில் ஏறினார்கள்.

 3000 மக்கள் பதினைந்தே நிமிடத்தில் மீனா - அரபா சென்றடைந்தோம். ஒரு மணிநேரத்தில் 30 ஆயிரம் மக்கள் பல்வேறு ரயில் வண்டிகள் மூலம் அரபா வந்தடைந்தார்கள். ஹஜ்ஜின் முக்கிய நாளான அன்று எங்களுக்கு எல்லா விதத்திலும் வல்ல ரஹ்மான் எளிமையாக்கிதந்தான்.

இரண்டாம் நாள் (ஹஜ் 9):

அரபாவிளிருந்து மக்ரிப் தொழுகையை முடித்துக்கொண்டு முஸ்தலிபா செல்வதற்காக வெளியில் காத்திருந்தோம். இந்த ரயிலில் பெர்த், அன்ரிசெர்வ்டு , வெயிட்டிங் லிஸ்ட் எதுவும் கிடையாது. ஆனால் ஒன்று, இரண்டு மணிநேரம் 'கொஞ்சம் வெயிட் பிளீஸ்' என்ற சத்தம் மட்டும் அரபு கலந்த ஆங்கிலத்தில் (மலையாளம் கலந்த ஆங்கிலத்தை ஒப்பிடுகையில் இது கொஞ்சம் ஸ்டைலாகத்தான் இருந்தது) கேட்டுக்கொண்டே இருந்தது. பிறகு அரபா-முஸ்தலிபாவிற்கு பத்து நிமிடத்தில் சென்றடைதோம்.

இஷாவை முடித்தவண்ணம் அங்கேயே உறங்கிவிட்டு மறுநாள் காலை ஸுபுஹ் தொழுகை முடிந்த பின் ஜமராத் கற்களை அங்கயே எடுத்துக்கொண்டு மீனாவிற்கு வந்து சேர்ந்தோம். ரயில் நிலையத்தைவிட மினா டென்ட் எங்களுக்கு மிக அருகாமை என்பதால் பத்து நிமிட நடை பயணத்தில் வந்தடைந்தோம்.

மூன்று,நான்கு மற்றும் ஐந்தாம் நாள் (ஹஜ் 10 ,11 ,12 ):

இறுதி மூன்று நாட்கள் ஜமராத் கல் எறிவதற்காக மினா-ஜமராத்திற்கு தினமும் பத்து நிமிட ரயில் பயணம் மேற்கொண்டோம்.முன்புபோல் எங்கே வழிதவரிவிடுவோமோ, வெயில் சுட்டெறிக்குமோ, நம் ஒரு வயது குழந்தை தாக்குபிடிக்குமோ என்ற அச்சமெல்லாம் தணிந்து இறையச்சத்தோடு இஷ்டப்பட்ட நேரத்தில் ரயில் பயணத்தை மேற்கொண்டோம். கொஞ்சம் சொகுசாகவே நிறைவேற்றிவந்த இந்த ஹஜ்ஜில் உடலையும், மனதையும் இறைவனின் சோதனை கூடர்திற்கு அழைத்துச்சென்றது ஜமராத்-மக்கா. ஆறு கிலோமீட்டரை நடந்து கடக்க 2 -3 மணிநேரம் எடுத்தது (இன்ஷா அல்லாஹ் இனி வரும் வருடங்களில் இதற்கும் ரயில் பாதை அமைத்துவிடுவார்கலாம்). உண்மையில் இந்த கணம்தான் நம் முன்னோர்கள், நபி(ஸல்) அவர்கள் , நபித்தோழர்கள் செய்த தியாகம் என் மூளைக்கு எட்டியது(சுடு பட்டால்தான் உறைக்கும் என்பார்களே அது இதுதானோ!) .

மனம் குளிர ஒரு மழைத்துளி:

சிக்னல் இல்லாத ரயிலிற்கும், சிக்னல் கொடுக்காமல் வந்த மழைக்கும் கடும் போட்டி நிலவியது . முதல் சுற்றில் புகை இல்லா புகை வண்டியோடு வெற்றிபெற்று இறைவனின் அருட்கொடையை (ரயில்) குடையாய் பயன்படுத்திக்கொண்டு எங்கள் டென்ட் வந்தடைந்தோம். . பிறகு கஅபா முதல் மினா வரை மக்கள் யாவரும் ஒரு சுற்றும், முற்றும் சுற்றமுடியாமல் மழை சுழற்றி எடுத்தது. ரயில் பயணமும் சிறிது நேரம் ரத்தானது.

ஐந்து கடமையையும் முடித்துவிட்டோம் எங்கள் பிழைகளை மன்னித்து ஏற்றுக்கொள்ள துஅ செய்தவனாக வீடு திரும்பினோம்.

காக்காமார்களே உஷார்! உங்களுக்காக ஒரு டிப்ஸ்:

ஒரு கம்பார்மெண்டில் கிட்டத்தட்ட இருபது பேர் உட்காரும் அளவிற்கு இருக்கை இருக்கும். முட்டி மோதிக்கிட்டு கர்சீப் போட்டு முதல் ஆளாக இருக்கையில் அமர்ந்தாலும் கடைசி நபராக பெண்கள் கூட்டம் வந்தே தீரும். ஆகையால் எல்லா(மூவ்/நகரு)!! என்ற வார்த்தை தங்கள் காதுகளை துளையிடுவதற்கு முன் 'எலே.. எந்திரிலே' என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டு ஏறும்போதே ஏதாவது ஒரு மூலையில் ஒதிங்கி நிப்பது புத்திசாலித்தனம்.

ஹஜ் ரயில் பயணம் ஒரு பார்வை -

1) ரயில் பயணத்தால் தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரம் சேமிக்கபட்டது.

2) அதிக நேரம் தங்கும் இடத்திலேயே நன்மையை பெற்றுக்கொள்ள அறிய வாய்ப்பு (இது நாம் பயன்படுத்திக்கொள்வதை பொருத்தது).

3) இயலாதோற்கு இது இறைவன் கொடுத்த வரம்.

4) தினமும் 5000 வாகனங்கள் போக்குவரத்து நேரிசலோடு சேவை செய்யவேண்டியதை, இரு தண்டவாளங்கள் சீர் செய்தது.

5) நள்ளிரவு 11 - 3 ரயில் சேவை நிறுத்தப்படும். இது முன்னறிவிப்பு இல்லாமல் நடந்தமையால் கொஞ்சம் வாக்குவாதமும், சமாதானமும் நடந்தேறியது.

6) ஹாஜிகள் வசதிக்கேற்ப அதிக ரயில் நிறுத்தங்கள், அரபா 1- 2- 3, முஸ்தலிபா 1-2-3, மீனா 1-2-3

ஹஜ்ஜை முடித்து அலுவலகத்திற்கு வந்தபோது அரபு செய்திதாளில் படித்தேன் "சீனப்போருட்களில் தரமும் இருக்கின்றது" என்றதுபோல் ஒரு கட்டுரையை.

ஹும்ம்.. சீனர்களை கண்டாவது சின்சியாரிடியை கற்றுக்கொள் என்பது புது மொழியாக இருக்கக்கூடும் .

வல்ல ரஹ்மான் இந்த புனித ஹஜ்ஜை ஏற்றுக்கொள்வானாக என்று துஆ செய்தவண்ணம் , விடைபெறுகிறேன்

- மு.செ.மு / M.S.M. மீராஷாஹ் ரஃபியா

ஜெத்தா, சஊதி அரேபியா.

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் சில தொண்டு நிறுவனங்கள்‏ 4

அதிரைநிருபர் | May 29, 2011 |

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
 
அன்பானவர்களே.
 
12 மற்றும் 10 வகுப்புகளின் தேர்வு முடிவுகள் வெளிவந்து நம் சமுதாய மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள். கல்வி கற்க பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற உயரிய நோக்கில் இஸ்லாமியக் தொண்டு நிறுவனங்கள் பல மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்து வருகிறார்கள். இதே அவர்களின் விபரம்.
 
என்னால் முடிந்ததை உங்களுக்கு பகிர்ந்துள்ளேன். மேலும் கல்வி உதவி செய்பவர்கள் பற்றிய செய்திகள் இருந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள். கல்வி கற்க ஆர்வமிருந்தும் பொருளாதாரமில்லாதா மாணவர்கள் தகுதியானவர்கள் மட்டும் இந்த கல்வி உதவியை பெற்று பயனைடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை, அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445.
 
2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க், ராயபேட்டைநெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530
 
 3. சீதக்காதி அறக்கட்டளை,  688 , அண்ணா சாலை, சென்னை - 06
 
 4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, கிரீம்ஸ் ரோடு, சென்னை - 06
 
 5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் , 4, மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)  Phone:+91-44-42261100 Fax: +91-44-28231950 Download Aplication
 
 6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், 82,Dr. Radha Krishnan Road,Mylapore, Chennai, 600004, Phone : +91-44-28115935 Mob : 93805 31447
 
 7. முஹம்மது சதக் அறக்கட்டளை , 144/1 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34. Tel: 044-2833 4989, 2833 4990 http://www.sathaktrust.com
 
 8. மெஜெஸ்டிக் பவுண்டேசன், 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02
 
 9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.
 
 10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 03
 
 11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564
 
 12. அஸ்மா காசிம் அறக்கட்டளை, மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08
 
 13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207
 
 14. டாம்கோ, 807, - அண்ணா சாலை, 5 வது மாடி, சென்னை
 
 15. ஹாஜி. அஹமது மீரான், (Managing Director Professional Courier’s), 22, மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18
 
 16. மியாசி, புதுக் கல்லூரி வளாகம்,பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14
 
 17. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை .
 
தகவல் உதவிக்கு நன்றி: நூஹு.

இத்தகவலில் ஏதேனும் தவறு இருந்தால் பின்னூட்டத்தில் திருத்தத்தை தெரிவிக்கவும்.

அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக.

 இங்ஙனம்,

-- மீராஷாஹ் ரஃபியா

B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு 3

அதிரைநிருபர் | May 25, 2011 | ,

B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு தற்போது பெரும்பாலான மாணவர்களின் விருப்ப படிப்பாக மாறிவருகின்றது. தமிழகத்தில் 12 கல்லூரிகளில் மட்டும்தான் இந்த படிப்பு உள்ளது. அதில் 2 கல்லூரிகள் (சென்னை புது கல்லூரி, கீழகரை சதக் கல்லூரி)முஸ்லீம்களால் நடத்த படுகின்றன. B.Arch படிப்பில் சேர அண்ணா பல்கலை கழகம் வருட வருடம் கலந்தாய்வு (counseling) நடத்துகின்றது. அதற்க்கான விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது, விண்ணப்ப படிவம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் மட்டும்தான் கிடைக்கும். விண்ணப்பத்தை பெறுவதற்க்கு NATA தேர்வில் தேர்சி பெற்று இருக்க வேண்டும். NATA தேர்வின் முழுவிபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. NATA தேர்வின் மதிப்பெண் சான்றிதழுடன் (Score card) சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்திற்க்கு சென்று விண்ணப்பத்தை பெற வேண்டும்.

B.Arch கலந்தாய்வு (counseling) முறை : +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்ன்னையும், NATA தேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும் வைத்து கட் ஆப் மதிப்பெண் கணக்கிட படுகின்றது. அதாவது +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்ணை 6 - ஆல் வகுத்துகொள்ள வேண்டும், அதனுடன் NATA தேர்வின் மதிப்பெண்ணை கூட்டினால் வருவதுதான் B.Arch கட் ஆப் மதிப்பெண். இது 400 மதிப்பெண்ணுக்கு இருக்கும்.

உதாரணத்திற்க்கு ஒரு மாணவர் +2 தேர்வில் 1050 மதிப்பெண்னும், NATA தேர்வில் 130 மதிப்பெண்னும் எடுத்து இருந்தால், அவரின் கட் ஆப் மதிப்பெண் 305 ஆகும்.

இந்த கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை பட்டியல் (Rank list) தயாரிக்கப்பட்டு மாணவர்கள் கலந்தாய்விற்க்கு (counseling) அழைக்கப்படுவார்கள். இந்த B.Arch கலந்தாய்வில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது.

NATA (National Aptitude Test in Architecture)தேர்வு

இது ஒரு கட்டிட நிர்மான கலை திறன் ஆய்வு தேர்வாகும். இதை எழுதுவதர்க்கு தமிழகத்தில் 15 மையங்கள் உள்ளன. அங்கு சென்று NATA தேர்வு எழுத நாம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்து ஒருவாரம் அல்லது 10 நாளில் தேர்வு எழுதலாம். தேர்வு கட்டணம் ரூ.800 . தேர்வு எழுதிய ஒரு நாளில் மதிப்பெண் சான்றிதழ் (Score card)வழங்கப்படும். இந்த தேற்விற்க்கு தயாராவதற்க்கு புத்தகங்கள் உள்ளன. இந்த தேர்வு எழுதுவதற்க்கு பயிற்சியும் அளிக்கப்படுகின்றது, ஆனால் பயிற்சி கட்டணம் ரூ.6000 முதல் ரூ.8000 வரை இருக்கும்.

NATA தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. ஒன்று Online தேர்வு 100 மதிப்பெண் கொண்டது, (Chose the best answer type) மற்றொன்று வரைதல் தேர்வு (Drawing Test) 100 மதிப்பெண் கொண்டது. மொத்தம் 200 மதிப்பெண், இரண்டு தேர்விலும் சேர்த்து குறைந்தது 80 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 80 -க்கும் குறைவாக மதிபெண் எடுத்தால் மீண்டும் இந்த தேர்வை எழுதலாம். ஆனால் அதிக பட்சமாக 3 முறைக்கு மேல் எழுத முடியாது. அதாவது மூன்று முறை NATA தேர்வு எழுதி 80 மதிப்பெண் எடுக்காவிடால் நடப்பு ஆண்டில் (Current year) B.Arch படிக்க முடியாது. அடுத்த ஆண்டில் தேர்வு எழுதி படிக்கலாம். NATA தேர்வு எழுத தமிழகதில் உள்ள 15 மையங்கள் மற்றும் NATA தேர்வு பற்றிய இதர விபரங்கள் இந்த www.nata.in இணையதளத்தில் உள்ளன.

மேலும் விபரங்களுக்கு sithiqu.mtech@gmail.com மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி

S.சித்தீக்.M.Tech
 
தகவல்: MSM MR & V.A. Syed Abdul Hameed

அரசியல் - ஆச்சர்யம், ஆனால் உண்மை‏ 27

அதிரைநிருபர் | March 16, 2011 |

ஆச்சர்யம், ஆனால் உண்மை. அரசியலை பொறுத்தவரையில் நாம் பிரச்சனைகளை போர்வையாய் போட்டுக்கொண்டு முரட்டுத்தூக்கம் தூங்கிக்கொண்டேதான் இருக்கின்றோம், இன்னும் விழிக்காமலே. நாம் விழிப்பதற்குள் சூரியன் உச்சிக்கு வந்து நம் தலையை பிளக்கிறது.
தனிமரமாக வாய்ப்பின்றி, வருடும் இலைகளுக்கு அருகில் செங்காயாக இன்று இன்றிருக்கின்றோம். நாளை நம் சமூகம் பழுத்து, தனி மரமாக மிளிரும் என்ற நம்பிக்கையோடு.இன்ஷா அல்லாஹ்.

இந்த ஆ(தா)க்கம் ஏன் என்று தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கே புரியும்.

சகோ.மு.ஜபருல்லாஹ் அவர்களின் எண்ணத்தின் ஏக்கம் கீழே எழுத்துவடிவில்..

தமிழகத்தின் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தவிர, ஏறத்தாள 60க்கும் மேற்பட்டத் தொகுதிகள் 80ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்டவை. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சியோ தமிழகத்திற்காக இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை என்பது ஆச்சரியகரமான, அதே சமயம் வருத்தத்திற்குரிய செய்தியாகும். தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது.

அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்:

1. நன்னிலம்,2. கடலாடி,3. கேயம்புத்தூர் மேற்கு ,4. மதுரை மத்தி, 5. திருச்சி, 6. சேலம், 7. அரவக்குறிச்சி, 8. குடியாத்தம், 9. ராணிப்பேட்டை,10. ஆற்காடு,11. சென்னை துரைமுகம், 12. சேப்பாக்கம்,13. ஆயிரம் விளக்கு, 14. திருவல்லிக்கேணி, 15. எக்மோர், 16. சென்னை பூங்காநகர், 17. ராயபுரம், 18. திண்டுக்கல்,19. நத்தம்,20. பெரியகுளம்,21. பாளையங்கோட்டை,22. திருச்செந்தூர்.

இதுதவிர, தமிழகத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகள் என்பதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. 23 சட்டமன்றத் தொகுதிகள் அறுபதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. தமிழக முஸ்லிம்கள் அனவைரும் ஒரே குடையின் கீழ் ஒன்றினைந்து நமக்கு நாமே உருவாக்கும் அரசியல் அமைப்புக்கு வாக்களிப்போம் எனில் தமிழகத்தில் மாத்திரம் 45-55 சட்டமன்றத் தொகுதிகளிலும், 4-6 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதியாகக் கூறமுடியும். அனைத்து அரசியல் கட்சிகளையும் நம் காலடியில் விழ வைப்பதுடன், தமிழக அரசியலைப் பொறுத்தவரை நாம் வகுத்ததுதான் சட்டம் என்கிற நிலையையும் உருவாக்க முடியும்.

தமிழகத்தின் 6 மாநகராட்சிகளில் முஸ்லிம்களே மேயர்கள் என்பதையும் உறுதியாகக் கொள்ளலாம். சென்னையைத் தவிர தமிழத்தில் மற்றுமுள்ள மாநகராட்சிகளில் ஒன்றரை இலட்சம் வாக்குகள் பெறுபவரே மேயர். மதுரை, திருச்சி மற்றும் கோவை மாநகராட்சிகள் 3 இலட்சம் முஸ்லிம் வாக்களர்களைக் கொண்டவை. சேலம் மற்றும் நெல்லை மாநகாராட்சிகள் இரண்டரை லட்சம் முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை.

சட்டசபை தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் ஒருங்கிணைந்து தமது வாக்குகளையும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே அளிப்பார்கள் எனில், தமிழக சட்சடசபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் முஸ்லிம்களே என்கிற நிலை ஏற்படும். முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் எந்த ஒரு சட்டமும் நிறைவேற்றப்பட முடியாது என்கிற நிலையை தமிழக சட்டசபையிலும் உருவாக்கமுடியும். தமிழகத்தில் மட்டுமில்லாது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா என இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் உள்ள சட்டசபைகளிலும் இந்நிலையே உருவாகும். இதே நிலை தொடருமெனில் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெரும்பான்மை நிலைக்கு உயரும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 400 முதல் 800 பள்ளிவாயில்களை ஒன்றிணைப்பது மிகவும் எளிதான காரியம். தமிழகத்தில் உள்ள 8000 பள்ளிவாயில்களைச் சார்ந்த 1ஒன்றரை கோடி முஸ்லிம்களும் ஒரு பொது நலனுக்காக ஒன்றிணைவார்கள் எனில், நாம் நினைக்கும் எதையும் சாதிப்பது எளிது என்பதை முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும்.

இது நேர்த்தியான, அதேசமயம் யாருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லாத அமைதியான முடிவு என்பதையும் முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் ஆட்சி அதிகாரம் பெற வேண்டும் என்பதற்கு இதைத்தவிர ஒரு சரியான தீர்வு இல்லையென்றே சொல்ல வேண்டும். அரசியல் செல்வாக்கு மற்றும் ஆட்சி அதிகாரம் இன்றி இந்த பூமியில் நாம் எதையுமே சாதிக்க முடியாது என்பது உறுதி.

இதுபோன்ற பிற அரசியல் கட்சிகளுக்காக கொடி தூக்கி அவர்களை வெற்றிபெற செய்ய வேண்டுமா? அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிபீடம் ஏறிய பின்பு நம்முடைய அடிப்படை உரிமைகளுக்காக அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தேவைதானா?

தேர்தல் காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோமே. ஏன்? முஸ்லிம்கள் முஸ்லிம் வேட்பாளருக்கே வாக்களிக்கட்டும். முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்று வந்த பின்புள்ள நிலைமையை ஆய்ந்தறிந்து, முஸ்லிம்களுக்கு நல்லது செய்யக்கூடியவர்களுக்கு நம்முடைய ஆதரவை வழங்கலாம். மானம் மற்றும் சுயமரியாதை ஈமானின் ஒரு பகுதி என்பதை முஸ்லிம்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இக்கட்டுரையை மீண்டும் மீண்டும் படியுங்கள். முஸ்லிம்களுக்கு நன்மை செய்யாத எந்த ஒரு அரசியல் கட்சியையும் நம்பாதீர்கள். முஸ்லிம்களே! அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைவோம். நமது ஒற்றுமையின் மூலம் நாம் விரும்பியவைகளை உடனடியாகப் பெற முடியும். இந்த முடிவை சிந்தித்து செயல்படுத்துவது முஸ்லிம்களாகிய நம்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைவோம். நம் அன்றாட வாழ்க்கை எளிதாக அமையும். நாம் நமது அடிப்படை உரிமையான இறைவழிபாட்டு உரிமைகளை தங்கு தடையின்றி தொடரலாம். நம் வருங்கால தலைமுறையும் பாதுகாப்பான வாழ்வைத் தொடரும்.

தேர்தலில் நாம் வாக்களிக்காமல் புறக்கணிப்போம் எனில் நஷ்டம் நமக்குத்தான். ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது. நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஏராளமான மாற்றங்களை கொண்டுவரும். அரசை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நம்மில் சிலர் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். அதனால் ஏற்படும் நஷ்டம் நமக்கே! மற்ற அரசியல் கட்சிகள் நம்மை எள்ளி நகையாடுவதுடன், அதிக பயனடைவது அவர்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனதருமை முஸ்லிம் சொந்தங்களே! நமக்கென ஒரு தனி அரசியல் அமைப்பு காண்பதும், அந்த அமைப்பின் மூலம் நமக்காக பாடுபடக்கூடிய முஸ்லிம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புவதுமே இனி நம்முடைய தலையாய பணியாக இருக்க வேண்டும்.

நாளைய உலகம் நம் கையில் என்பதை தெளிவாக தெரிந்த நாம், மரணித்த பிணம் போல் நடமாட வேண்டுமா? நாம் நம்முடைய குறிக்கோளில் தெளிவாக இருப்போம். அனைத்து அரசியல் கட்சிகளையும் நம் பின்னால் கைகட்டி நிற்க வைப்போம். அமைதியாக நாம் நம்முடைய குறிக்கோளை எட்டுவோம். நமது உறுதிமொழி நம் வருங்கால தலைமுறையின் வாழ்வுரிமைக்கு அடிப்படையாக அமையட்டும். எந்த காரணம் கொண்டும் முஸ்லிம்களின் ஒற்றுமை என்னும் அடிப்படை குறிக்கோளை விட்டு நம் கவனம் சிதறாமல் இருக்கட்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கு அருள் புரியட்டும்!

மு.செ.மு. மீரஷாஹ் ரஃபி அஹ்மத்

சவுதி அரேபியாவில் வேலை வாய்ப்பு - சென்னையில் நேர்முக தேர்வு 15

தாஜுதீன் (THAJUDEEN ) | February 19, 2011 | ,

WANTED
(ONLY MUSLIMS)
BIN DAWOOD / DANOUB SUPERMARKETS,
JEDDAH/MAKKAH, SAUDI ARABIA

SL.NO
CATEGORY
SALARY IN SR
REQ
    01
WARE HOUSE SUPERVISORS
2500.TO.3000
10.
02
STORES SUPERVISORS
2000.TO.2500
10.
03
ACCOUNTANT (B,com.4.YEARS EXP)
1500.TO.2000
10.
04
SALES MAN (RETAIL SHOW ROOM EXP)
1400.TO.1500
30.
05
DATA ENTRY (ANY SUPERMARKET EXP)
1400.TO.1500
20.
06
A/C.MECHANIC (I.T.I.OR DIP.3.YRS EXP)
1400.TO.1500
08.
07
ELECTRICIAN (I.T.I.OR.DIP.4.YRS EXP)
1400.TO.1500
08.
08
HELPERS  (W/H.STORE.&.CLEANERS)
1000.TO.1200
60.
09
HELPERS (PASTRY MAKING HELPERS)
1000.TO.1200
40.

SL.NO.1.TO.7.MUST BE EXPERIENCE IN ANY SUPERMARKET OR RETAIL SHOWROOM

SL.NO.8.EXPERIENCE NOT REQUIRED BUT HEALTHY AND GOOD CONDITION.

SL.NL.9.EXP IN ANY BAKERY OR RESTAURANT.

CLIENT INTERVIEW IN CHENNAI.ON.22/23.FEB.2011.

CONTACT:

Arul.G                                   Ph: 98407 75480

Faiz Ahmed .A.S               Ph: 94447 51757

 Emree Consultants
23/1, Second Floor
Mahalakshmi Street,
Opp. Siva Vishnu Temple,
T.Nagar Bus stand,
T.nagar, Chennai -17
Ph: 044- 2431 2665
Mob: 98407 75480, 9444751757

- MSM (MR)

ஜித்தாவில் ஜில் துளிகள்... 20

அதிரைநிருபர் | January 02, 2011 | ,

நம்ம ஊரு நல்லவங்க பெரியவங்கல்லாம் சவூதில இருக்கிறதாலயோ  என்னமோ தெரியல, இப்பெல்லாம் ஜித்தாவிலும் அப்பப்போ மழை பொழிகிறது. 30.12.2010 ஒரு அரை மணிநேரம் பெய்த மழைக்கு இந்த ஜித்தா தலைநகரத்தின் தகரங்கள்(வாகனங்கள்) தத்தளிப்பதை  நானும் என் நண்பனும் புகைத்ததை பகிர்கிறேன் (தப்பா நினைகாதீக காக்கா.. புகைப்படம் எடுத்ததைத்தான் புகைதேன்னு சொன்னேன்) .. பயணத்திற்கு ரெடியா? மறக்காம வேட்டிய தூக்கி கச்சல கட்டிகோங்க..நனைஞ்சிற போகுது.. 

எங்க பில்டிங் ஸ்ட்ராங், ஆனா பேஸ்மான்ட் கொஞ்சம் லீக்கு..  

நம் நாட்டில் ஜனவரியில் பொங்கலாக இருக்கலாம். இங்கு டிசம்பரிலயே....(இது கணக்கோ?!!) 
டிரைனேஜ்(வடிகால்) விசயத்தில் இவர்கள் இன்றும் ஸ்டோநேஜில்தான்(கற்காலம்) இருக்கிறார்கள்.

இது விமான பணிப்பெண்களும், ஆண்களும் தங்குமிடம்.. 
என்னத்தான் இவர்கள் சிறகின்றி பறக்கும் பறவைகளாக இருந்தாலும், சேட்டான்(மலையாள காக்கா) கடையில் தாமியா(ஒருவகை சாண்ட்விட்ச்) வாங்கணும்னா தத்தளித்துதான் வர வேண்டும்.

பார்ட் டைம் வேலைக்கு ஆட்கள் தேவை. தலைக்கு ஐம்பது ரியால்.இங்கு தில்லு முல்லு கிடையாது. எல்லாமே தள்ளு முல்லுதானாம். மிதக்கிற காரை கரை சேர்கனுமாம். போட்டிக்கு சூடானி வருவார்கள். இருந்தாலும் ஒரு கை பார்போம். 

காக்கா!! இருந்தாலும் இந்த வழியா 'அண்ணா நகர் வடக்கு செல்லும் 7F பேருந்து வருமா'!ன்னு கேக்குறது கொஞ்சம் ஓவர்.. 

இத்தனைநாள் தூங்கிகொண்டிருந்த வைப்பருக்கு, வச்சிட்டாங்க ஆப்பு..கையிருந்தால் ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கும். 

இது பாலமா? பள்ளமா? ஆராய்கிறார்கள் ஆசியர்கள்(கண்டிப்பாக இன்னாட்டவர்களாக இருக்க வாய்ப்பில்லை).

சரி.. சரி..காக்கா மார்களைலாம் தொப்பு தொப்பா மழைல நினச்சிட்டேன்னு நினைக்கிறேன்.. 
இன்னும் இரண்டு நாளைக்கு மழை இருக்குன்னு வானிலை ஆராய்ச்சி மையம் அறிக்கை  விடுத்திடுச்சாம். இப்போ போயிட்டு இன்ஷா அல்லாஹ் அப்பாளிக்கா வர்றேன். அது வரைக்கும் முடிந்தால் கமண்ட் மழையில் சந்திப்போம்..வரட்டா...டுர்ரர்ர்ர்ர்.......(இந்த டொயோடா லேண்ட் க்ருசர் என்னுது இல்லீங்கோ)    

மு.செ.மு.மீராஷாஹ் ரபியா
MSM(MR) 

முதல் புனித பயணமும், முதல் மோனோ ரயில் பயணமும் 30

அதிரைநிருபர் | December 15, 2010 | , , ,

ஆம்.. இவ்வருடம் என் வாழ்வில் கிடைக்கப்பெற்ற விலை மதிக்கமுடியா பொக்கிசம் என்றுதான் கூறவேண்டும். என் முதல் ஹஜ் பயணம் வரலாற்றுமிக்க முதல் ஹஜ் ரயில் சேவையோடு தொடர்ந்தது. நூற்றிமுப்பது வயது மூதாட்டி இந்தியாவிலிருந்து ஹஜ்ஜிற்கு வருவதாக கேள்விப்பட்டவுடன், 'அட! நமக்கு இன்னும் முப்பது வயதுகூட ஆகவில்லை ஆனால் அல்லாஹ் நமக்கு அவன் அருளை அள்ளி கொடுத்துவிட்டானே!' என்ற பிரம்மிப்பு கலந்த சந்தோசம் .

முப்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஹஜ்ஜிற்கு வந்திருந்தும் அரபு நாட்டவர்களுக்கும், அந்நாட்டில் வசிப்பவர்களுக்கும் மட்டுமே இந்த மோனோ ரயில் பயணம் அல்லாஹ்வின் கிருபையால் கிடைக்கப்பெற்றது.

இந்த அனுவபத்தை பற்றி பகிர்ந்து கொள்வதற்கு முன் இந்த ரயில் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக செயல்படுத்திக்கொடுத்த சஊதி அரசிற்கும், அசுர வேகத்தில் அசராமல் (24x7) நம்மை அசர வைத்த சீன நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். என்னடா இவன் அதிரம்பட்டினத்துல கம்பன் எக்ஸ்பிரசை நிப்பாடிடானுங்கங்குரத்துக்காக ரயில் வண்டியையே பார்க்காதமாதிரி! சொல்றானேன்னு பார்க்காதீங்கோ காக்காமார்களா.. நம் நாட்டில் இது நடந்தேற எனக்கு தெரிஞ்சு 6-8 வருடம் இழுப்பார்கள். இடையில் கொஞ்சம் "ராஜா.., ராணி.." ஆட்டம்லாம் வேற ஆடுவாங்க. 18 கிலோ மீட்டர் ரயில் பாதை இங்கு ஒரே ஆண்டில் முடிவுற்றது. இப்ப சொல்லுங்க நான் ஆச்சர்யப்படுவது சரிதான?

இதோ அரபியில் நாலு வரியில் எழுதக்கூடிய வார்த்தையை ஏழு கட்டத்திற்குள் கிளித்தட்டில் ஏத்தம் விட கோடு போட்டமாதிரி அடக்கிவைச்சிருக்கான்களே, இங்குதான் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் இரவுபகல் வேலைபாற்குமிடம்.

சரி சரி விசயத்திற்கு வர்றேன். பயணம் ஆரம்பமாகபோகுது சீட் பெல்ட போட்டுக்கொள்ளுங்கள்..

முதல் நாள் (ஹஜ் 8):

சுபுஹுக்குப்பின் ஜித்தாவிலிருந்து மினா வரை பேருந்தில் பயணித்தோம். ஹஜ்ஜின் கடமைப்படி மினாவில் லுகரிலிருந்து ஐந்து வேலை தொழுகை நிறைவேற்றிவிட்டு சுபுஹுக்குப்பின் அரபாவிற்கு செல்ல வேண்டும். ஆனால் ரயில் அட்டவணையின்படி எங்கள் குழு விடியற்காலை 1 மணிக்கு ரயிலை பிடித்தாக வேண்டும் என்று சஊதி அரசாங்கதிடமிருந்து உத்தரவு வந்தது. எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம் என்று கட்டுப்பட்டு காத்திருந்தோம் . அப்போதுதான் கையில் கட்டப்பட்டது அந்த ரயில் பயணச்சீட்டு. இதை தண்ணீரில் ஊற வைத்தாலும் , வெயிலில் காய வைத்தாலும் கிழியாதாம். ஆகையால் ஒரு கரத்தில் பயண சீட்டும், மறுகரத்தில் காணாமல் போகாமல் இருக்க டென்ட் முகவரிகளும், எண்ணத்தால் சைத்தானுக்கு பூட்டும் போட்டவனாக இருந்தோம் .

பயணச்சீட்டு உங்கள் பார்வைக்காக..

இதில் நம் பயணத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நாட்கள், நாம் ஏற வேண்டிய ஸ்டேஷன் எண் மற்றும் பிரத்யேக பார்கோடு அச்சு செய்யபட்டிருந்தது.

ஸ்டேசன் எண் நம் டெண்டிற்கு அருகாமையில் இருப்பதைதான் குடுப்பார்கள்.

இரவு 12:30 மணிக்கெல்லாம் ரயிலை பிடிக்க சென்றுவிட்டோம். எனக்கு இது முதல் ஹஜ், முன்னால் ஹாஜிகளுக்கு இது முதல் ரயில் பயணம் என்று பலதரப்பட்ட மக்கள் பல்வேறு சந்தொஷங்களோடு ஒன்று, இரண்டு மணி நேரம் ரயில்வே கேட்டின் படியின் கீழ் படர்ந்திருந்தோம். படி ஏறலாம் என்று கொடி காண்பிக்கப்பட்ட அந்த நொடியில் மக்கள் திரளாக "லப்பை அல்லாஹும்ம லப்பைக்..." என்ற சத்தம் விண்ணைத்தொட்டவாரே வின்வெளிப்பயனம்போல் ரயில் பயணத்தை தொடர்ந்தோம் . படி ஏற முடியாதவர்கள் ஒரே நேரத்தில் 60 பேர் ஏறக்கூடிய லிப்டில் ஏறினார்கள்.

 3000 மக்கள் பதினைந்தே நிமிடத்தில் மீனா - அரபா சென்றடைந்தோம். ஒரு மணிநேரத்தில் 30 ஆயிரம் மக்கள் பல்வேறு ரயில் வண்டிகள் மூலம் அரபா வந்தடைந்தார்கள். ஹஜ்ஜின் முக்கிய நாளான அன்று எங்களுக்கு எல்லா விதத்திலும் வல்ல ரஹ்மான் எளிமையாக்கிதந்தான்.

இரண்டாம் நாள் (ஹஜ் 9):

அரபாவிளிருந்து மக்ரிப் தொழுகையை முடித்துக்கொண்டு முஸ்தலிபா செல்வதற்காக வெளியில் காத்திருந்தோம். இந்த ரயிலில் பெர்த், அன்ரிசெர்வ்டு , வெயிட்டிங் லிஸ்ட் எதுவும் கிடையாது. ஆனால் ஒன்று, இரண்டு மணிநேரம் 'கொஞ்சம் வெயிட் பிளீஸ்' என்ற சத்தம் மட்டும் அரபு கலந்த ஆங்கிலத்தில் (மலையாளம் கலந்த ஆங்கிலத்தை ஒப்பிடுகையில் இது கொஞ்சம் ஸ்டைலாகத்தான் இருந்தது) கேட்டுக்கொண்டே இருந்தது. பிறகு அரபா-முஸ்தலிபாவிற்கு பத்து நிமிடத்தில் சென்றடைதோம்.

இஷாவை முடித்தவண்ணம் அங்கேயே உறங்கிவிட்டு மறுநாள் காலை ஸுபுஹ் தொழுகை முடிந்த பின் ஜமராத் கற்களை அங்கயே எடுத்துக்கொண்டு மீனாவிற்கு வந்து சேர்ந்தோம். ரயில் நிலையத்தைவிட மினா டென்ட் எங்களுக்கு மிக அருகாமை என்பதால் பத்து நிமிட நடை பயணத்தில் வந்தடைந்தோம்.

மூன்று,நான்கு மற்றும் ஐந்தாம் நாள் (ஹஜ் 10 ,11 ,12 ):

இறுதி மூன்று நாட்கள் ஜமராத் கல் எறிவதற்காக மினா-ஜமராத்திற்கு தினமும் பத்து நிமிட ரயில் பயணம் மேற்கொண்டோம்.முன்புபோல் எங்கே வழிதவரிவிடுவோமோ, வெயில் சுட்டெறிக்குமோ, நம் ஒரு வயது குழந்தை தாக்குபிடிக்குமோ என்ற அச்சமெல்லாம் தணிந்து இறையச்சத்தோடு இஷ்டப்பட்ட நேரத்தில் ரயில் பயணத்தை மேற்கொண்டோம். கொஞ்சம் சொகுசாகவே நிறைவேற்றிவந்த இந்த ஹஜ்ஜில் உடலையும், மனதையும் இறைவனின் சோதனை கூடர்திற்கு அழைத்துச்சென்றது ஜமராத்-மக்கா. ஆறு கிலோமீட்டரை நடந்து கடக்க 2 -3 மணிநேரம் எடுத்தது (இன்ஷா அல்லாஹ் இனி வரும் வருடங்களில் இதற்கும் ரயில் பாதை அமைத்துவிடுவார்கலாம்). உண்மையில் இந்த கணம்தான் நம் முன்னோர்கள், நபி(ஸல்) அவர்கள் , நபித்தோழர்கள் செய்த தியாகம் என் மூளைக்கு எட்டியது(சுடு பட்டால்தான் உறைக்கும் என்பார்களே அது இதுதானோ!) .

மனம் குளிர ஒரு மழைத்துளி:

சிக்னல் இல்லாத ரயிலிற்கும், சிக்னல் கொடுக்காமல் வந்த மழைக்கும் கடும் போட்டி நிலவியது . முதல் சுற்றில் புகை இல்லா புகை வண்டியோடு வெற்றிபெற்று இறைவனின் அருட்கொடையை (ரயில்) குடையாய் பயன்படுத்திக்கொண்டு எங்கள் டென்ட் வந்தடைந்தோம். . பிறகு கஅபா முதல் மினா வரை மக்கள் யாவரும் ஒரு சுற்றும், முற்றும் சுற்றமுடியாமல் மழை சுழற்றி எடுத்தது. ரயில் பயணமும் சிறிது நேரம் ரத்தானது.

ஐந்து கடமையையும் முடித்துவிட்டோம் எங்கள் பிழைகளை மன்னித்து ஏற்றுக்கொள்ள துஅ செய்தவனாக வீடு திரும்பினோம்.

காக்காமார்களே உஷார்! உங்களுக்காக ஒரு டிப்ஸ்:

ஒரு கம்பார்மெண்டில் கிட்டத்தட்ட இருபது பேர் உட்காரும் அளவிற்கு இருக்கை இருக்கும். முட்டி மோதிக்கிட்டு கர்சீப் போட்டு முதல் ஆளாக இருக்கையில் அமர்ந்தாலும் கடைசி நபராக பெண்கள் கூட்டம் வந்தே தீரும். ஆகையால் எல்லா(மூவ்/நகரு)!! என்ற வார்த்தை தங்கள் காதுகளை துளையிடுவதற்கு முன் 'எலே.. எந்திரிலே' என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டு ஏறும்போதே ஏதாவது ஒரு மூலையில் ஒதிங்கி நிப்பது புத்திசாலித்தனம்.

ஹஜ் ரயில் பயணம் ஒரு பார்வை -

1) ரயில் பயணத்தால் தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரம் சேமிக்கபட்டது.

2) அதிக நேரம் தங்கும் இடத்திலேயே நன்மையை பெற்றுக்கொள்ள அறிய வாய்ப்பு (இது நாம் பயன்படுத்திக்கொள்வதை பொருத்தது).

3) இயலாதோற்கு இது இறைவன் கொடுத்த வரம்.

4) தினமும் 5000 வாகனங்கள் போக்குவரத்து நேரிசலோடு சேவை செய்யவேண்டியதை, இரு தண்டவாளங்கள் சீர் செய்தது.

5) நள்ளிரவு 11 - 3 ரயில் சேவை நிறுத்தப்படும். இது முன்னறிவிப்பு இல்லாமல் நடந்தமையால் கொஞ்சம் வாக்குவாதமும், சமாதானமும் நடந்தேறியது.

6) ஹாஜிகள் வசதிக்கேற்ப அதிக ரயில் நிறுத்தங்கள், அரபா 1- 2- 3, முஸ்தலிபா 1-2-3, மீனா 1-2-3

ஹஜ்ஜை முடித்து அலுவலகத்திற்கு வந்தபோது அரபு செய்திதாளில் படித்தேன் "சீனப்போருட்களில் தரமும் இருக்கின்றது" என்றதுபோல் ஒரு கட்டுரையை.

ஹும்ம்.. சீனர்களை கண்டாவது சின்சியாரிடியை கற்றுக்கொள் என்பது புது மொழியாக இருக்கக்கூடும் .

வல்ல ரஹ்மான் இந்த புனித ஹஜ்ஜை ஏற்றுக்கொள்வானாக என்று துஆ செய்தவண்ணம் , விடைபெறுகிறேன்

-- மு.செ.மு / M.S.M. மீராஷாஹ் ரஃபியா

ஜெத்தா, சஊதி அரேபியா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு