அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
சமீப நாட்களாக சூடு பிடித்திருக்கும் அரசியல் ஆய்வு பற்றி அவ்வப்போது நமது அதிரைநிருபர் தளத்தில் வெளிவரும் பதிவுகளை படித்து எனக்குள் எழுந்த எண்ணங்களை நமதூர் இஸ்லாமிய சகோதரர்களுடன் கருத்து கணிப்புபெற்று நாம் ஏன் மற்ற இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதி மக்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க கூடாது?“சிறு துளியே பெரு வெள்ளம்”, “ ஓடும் நீர் புதைக்குழி கண்டு பதுங்கும்” என்ற கருத்து நிறைந்த கற்பனை மொழிகளை நடைமுறைபடுத்த இஸ்லாம் கற்று தருவதை முன் நிறுத்தி இன்ஷா அல்லாஹ் இன்றே செயல்படுவோம்.
எதையும் சாதிக்க நினைக்கும் இளைஞர்களே! சற்று இஸ்லாமிய நெறியை சீர்தூக்கி சிதைந்து கிடக்கும் நம் ஊர் சகோதரர்களிடம் உள்ள தெரு வேற்றுமை, கொள்கை வேறுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் பிளவுகளுக்கு முதன்மையாய் தலையை அசைக்கும் தராதரத்தை தூக்கி எறிந்து விட்டு சீறிய நெறியை செயல்கொண்டுவர நேரம் காலம் பாராது இப்பொழுதே திருமறையில் சமுதாயம் வெற்றி பெற கையாளவேண்டிய கருத்து நிறைந்த குறுகிய சொல்லாம் واعتصموا بحبل للله - "ஒற்றுமை எனும் கயிற்றை பற்றி பிடித்து கொள்ளுங்கள்".என்ற சொல்லை முதலில் நமதூர் சகோதரர்கள் குறிப்பாக இளைஞர்கள் (10 +1 & +2 மாணவர்களை தவிர) எடுத்து நடக்க முதலில் வெட்டிபேச்சு இடங்களில் இருக்கும் சகோதரர்களை தவிர்த்து வாக்குறிமை உள்ள ஒவ்வொரு இளைஞனும் ஒவ்வொரு நாளும் தான் செல்லும் விளையாட்டு மைதானதில் இது சம்மந்தமாக அருகில் உள்ள சகோதரனோடு வான்சையோடு வார்த்தொடுக்கலாமே.
துவங்கும் வார்த்தை இஸ்லாமிய முகமன் கூறி சமுதாய ஒற்றுமை மட்டுமே எனது குறிக்கோள் என்று சொல்லின் நளினம் வைத்து துவங்கி பாருங்களேன். இன்ஷா அல்லாஹ் நிச்சயம் வெற்றி நமதே!
கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும், ஒருபடிமேல் ஏறி எழுதினால் கல்லு மனமும் கறையும், எப்போது தெறியுமா? ஒரு செயலை செய்ய தொடங்கும் முன் பரிசுத்தமான உள்ளத்தோடு பரிபூரனமாக உளூ எடுத்து தேவைகள் வெற்றியோடு நிறைவேற (ஸலாத்துல் ஹாஜ்ஜத்) இரண்டு ரக்அத் தொழுது அல்லாஹ்விடம் கையேந்தி விட்டு செல்லுங்கள் நிச்சயம் வெற்றி நமக்கே என்பதில் சந்தேகமிருக்காது.
விளையாட்டு மைதானத்தை முதல் மொழிகிறேன் என்ற கேள்வி எழுகிறதா? எனது பள்ளி படிப்பு பருவத்தில் எனக்கு தலைமை ஆசிரியராக இருந்த ஹாஜி SKM ஹாஜாமுஹைதீன் ஆசிரியர் அவர்கள் கற்று தந்தது பச்சை மரத்தில் ஆணி அரைந்தாற்போல் பதித்த சொல்லின் (சாதி மதம் வேற்றுமையை களையுமிடம், ஒற்றுமையை நிலைபெற செய்யுமிடம் விளையாட்டு மைதானம்) செயல் நிறைந்த பிறதிபளிப்பே இது. நாங்கள் ஊரில் இருக்கும் போது மாலை நேரம் விளையாட்டு மைதானத்தில் தான் எல்லா வேற்றுமைகளை மறந்து எவ்வளவோ நற்செயல்களுக்கு திட்டம் போட்டிருக்கின்றோம், செயல் படுத்தியிருக்கின்றோம். இது எங்கள் அனுபவதிலும் பல முறை கண்டது.
ஆம் ஊரில் உள்ள அன்பு அதிரை இஸ்லாமிய இளைஞர்களே இன்று மாலை பொழுதில் உங்கள் சகாக்களோடு இதை துவங்கி பாருங்களேன் விளையாட்டு மைதானத்தில். இந்த தேர்தலில் ஒரு தாக்கம் ஏற்படும். இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையிலும் நிம்மதி கிடைக்கும்.
உண்மை ஆதங்கள் வேளை பளுவோடு எழுதப்பட்டது இந்த பதிவு, இதை படித்து பின்னூட்டமிடும் சகோதர சகோதரிகளும் அவரவர் சொந்த பந்தங்களுக்கும் உரிமையோடு சொல்லிக் கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ் இந்த தேர்தலில் குறிப்பாக நமதூரில் இஸ்லாமிய உள்ளங்கள் ஒன்றுபட்டு ஊருக்கு எல்லாவகையிலும் நன்மை ஏற்படுத்திதர உத்திரவாதம் (தேர்தல் வாக்குறிதியல்ல) தரும் ஒரே ஒரு கட்சியையே ஆதரிப்பது அல்லது நமக்கு எவர்களும் ஒத்துவராதவர்கள் என்று தோன்றினால் இந்த தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு என்ற முடிவை எடுக்கவேண்டும் என்ற பரிந்துறையோடு நிறைவுசெய்கிறேன்!
இன்ஷா அல்லாஹ் வரதட்சனையை ஒழிக்கும் ஆக்கம் 3ஆம் பதிவாக எழுத சிறு இடைவெளி தேடுகிறேன்.
-- அப்துல் ரஷீத் ரஹ்மானி


