இயற்கை இன்பம் – 8 0

அதிரைநிருபர் பதிப்பகம் | May 21, 2016 | , , , ,

தீவு 


கடலோரக்  கரைநின்று  பார்ப்போ  ருக்குக்
                     கண்ணெட்டும்  நெடுந்தொலைவில்  பசுமை  தோன்றும்
உடலிங்கே  உளமங்கே  என்று  ணர்வோர்
                     உடனங்கே  படகேறிச்  செல்வா  ரன்றோ!
மடலைப்போல்  மாக்கடலில்  மிதப்ப  தைப்போல்
                     மனக்கொள்ளை  கொளுமந்தத்  தீவி  னுள்ளே
இடமெல்லாம்   விதவிதமாய்  விலங்கி  னங்கள்
                     இன்பமுடன்  சுற்றுவதைக்  காண்பா  ரன்றோ!

அதிரை அஹ்மத்

0 Responses So Far:

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.