இயற்கை இன்பம் – 11 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 18, 2016 | , , , ,

காற்று



காற்றின்றிக்  கடிதாகும்  உலகின்  வாழ்க்கை
  கருணையிறை  எல்லார்க்கும்  பொதுவாய்த்  தந்த
ஏற்றமுள  அருட்கொடையுள்  அதுவும்  ஒன்றே
  இயற்கையெழில்  இவ்வருளை  அழகாய்  ஆக்கும்
நாற்றுமுதல்  நெடிதுயர்ந்த  மரங்க  ளெல்லாம்
  நமக்கிதனைப்  பரிசாகப்  பருவந்  தோறும்
மாற்றியிறை  இன்னருளாய்த்  துய்க்கும்  வண்ணம்
  மருந்தாக்கித்  தருவதுவும்  வியப்பே  யன்றோ!

அதிரை அஹ்மத்



0 Responses So Far:

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.