இயற்கை இன்பம் – 12 1

அதிரைநிருபர் பதிப்பகம் | June 25, 2016 | , , ,

ஊர்வன



பார்வையிலே  அழகழகாய்த்  தோற்றம்  பெற்றுப்
                       பலவாறு  தன்மைகளில்  உலகில்  வாழும்
ஊர்வனவும்  கண்களையே  கொள்ளை  கொள்ளும்
                       உயிர்வாழ்வுக்  குதவுகின்ற  புழுவும்  நச்சுக்
கூர்வாயைக்  கொண்டச்சம்  கொள்ள  வைத்துக்
                       கொட்டுகின்ற  பாம்புகளும்  தேளும்  பூரான்
யார்வாழ்வும்  தமக்கெதிரென்  றெண்ணா  மல்தம்
                       ஆர்வத்தில்  அங்கிங்கும்  திரிந்து  வாழும்.

அதிரை அஹ்மத்

1 Responses So Far:

crown said...

மனதில் எண்ணமா(ய்?)ஊர்கின்ற சொல் இங்கே அழகு கவிதையாகி காட்சியளிக்கின்றன.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.