பெண்ணாய் பிறப்பதைப் போல் பேரின்பம் வேறில்லை ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 23, 2016 | , , ,


பெண்ணாய் பிறப்பதைப் போல்
பேரின்பம் வேறில்லை !

பெரியோன் ரஹ்மானிடம்
            பெருஞ் சலுகை பெற்றிடவே
பெண்ணாய்ப் பிறப்பதைப் போல்
            பேரின்பம் வேறில்லை !

பலவேலை களுக் கிடையில்
            பாங்கு சப்தம் கேட்டவுடன்
பள்ளிக்கு ஓடிச் செல்லும்
            பரபரப்பும் பெண்ணுக் கில்லை !

வளமார் ரமளானில்
            வல்லான் ரஹ்மானும்
வழங்கும் ஆறுதினம்
            வாங்க வழி ஆணுக்கில்லை !

சுவனத்தைத் தேடி
            சுற்றியலையாதீர் - உம்மைச்
சுமந்தவள் காலடியில்
            சுவனம் எனப் பெருமை !

செப்பினார் செம்மல் நபி
            இப்பதவி போதாதா ?
பெண்ணாய்ப் பிறப்பதைப் போல்
            பேரின்பம் வேறில்லை !

ஜமீல் M ஸாலிஹ்
காலம் : ஜூன் 1982
மதி’நா மாத இதழில் வெளியானது !
பரிந்துரை : இக்பால் M ஸாலிஹ்

0 Responses So Far:

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.