Showing posts with label கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம். Show all posts
Showing posts with label கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம். Show all posts

ADT கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் - நன்றி ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | May 22, 2014 | , , ,

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

‘அதிரை தாருத் தவ்ஹீத்’ தொடர்ந்து நடத்திவரும் ‘கோடைகால இஸ்லாமிய நல்லொழுக்கப் பயிற்சி முகாம்’ பற்றிய அறிவிப்பைக் கண்ட நாள் முதல், ஒவ்வோர் ஆண்டும் இப்பயிற்சி முகாமினால் பயன் பெற்றுவந்த மாணவ மாணவியர்களிடமும் கல்வித் தேட்டம், பொறுப்புணர்வு, ஆர்வம் முதலான தன்மைகளில் செயலூக்கம் காணப்பட்டது!  பெயர்ப் பதிவும் இதர முன்னேற்பாடுகளும் மாணவ மாணவியரிடத்தில் காணப்பட்டது, ‘அதிரை தாருத் தவ்ஹீத்’ (ADT) நிர்வாகிகளுக்கு ஆர்வத்தையும் ஊக்கத்தையும் தந்தது.

களமிறங்கக் காத்திருந்த செயல் வீரர்கள், பயிற்சி முகாமுக்கான முன்னேற்பாடுகளில் இறங்கத் தொடங்கினர்.  முதலில், பயிற்சிமுகாம் பற்றிய அறிவிப்பு வெளியாயிற்று.

நமதூரைப் பொருத்தவரை, பயிற்சிமுகாமில் கலந்துகொண்டு பயன்பெறுவோர் மாணவிகளே.  ஆனால், இவ்வாண்டு மாணவர்களின் பங்கு முன்னைய ஆண்டுகளின் பதிவைவிடக் கூடுதலாகவே இருந்தது.  இந்த நிழற்படம், இதனை உறுதிப் படுத்தும்.


நமது ‘அர்ரவ்ழா பெண்கள் கல்லூரி’யின் ஆசிரியைகளும் களத்தில் இறங்கிப் பயிற்சியளிக்க ஆயத்தமாயினர்.  அவர்கள் இத்தூய பணியில் ஆர்வத்துடன் கலந்து, பொறுப்புகளைச் சிறப்புடன் நிறைவேற்றினார்கள். அவர்கள் அனைவருக்கும்  ADT நிர்வாகம் தனது நன்றியைத் தெரிவிக்கின்றது.  

இவ்வாண்டு நமக்குக் கிடைத்த இலங்கை முத்து, அப்துல் ஹமீத் (ஷரஇ). இவர் ‘ஆலிம்’ பட்டம் பெற்றதுடன், மனோதத்துவ அறிஞரும் கூட.  இவர் பெரும்பாலும் மாணவர்களுக்கே ‘தர்பியா’ என்னும் ஒழுக்கவியல் பாடங்களைப் போதித்தார்.       


எமது அமீரகச் சகோதரர்களின் அழைப்பை ஏற்று, அதிரைக்கு வந்தவர்.  நமது ஊரைச் சூழவிருக்கும் ஊர்த் தவ்ஹீத் சகோதரர்கள் தம் ஊர்களில் வகுப்பெடுக்க வேண்டும் என்று நம்மிடம் விரும்பி வேண்டி அழைத்தனர். முத்துப்பேட்டை மதுக்கூர், நாகூர், அறந்தாங்கி, மஞ்சக்கொல்லை ஆகிய ஊர்ச் சகோதரர்களின் ‘ஜுமுஆ’ மற்றும் மாலை நேர வகுப்புகளும் எடுக்கச் செய்து பெரும்பலனைப் பெற்றனர்.


காலை முதல் முற்பகல்வரை பயிற்சி முகாமில் பாடங்கள் முடிந்தபின், மாணவ மாணவிகள் தத்தமக்கு ஒதுக்கப்பட்ட ‘வேன்’களில் வீடுகளுக்குச் சென்றபின், மதிய உணவுக்குப் பின்னர், குடும்பத் தலைவியருக்குப் பொருத்தமான பயனளிக்கும் மனோதத்துவப் பாடங்களை எடுத்துணர்த்தி, அவர்களை அதிசயிக்க வைத்துப் பயிற்சியளித்தார்.     


மவ்லவி அப்துல் ஹமீத் (ஷரஈ) அவர்களுக்கு ADT நிர்வாகம் தன் நன்றிக் கடப்பாட்டைத் தெரிவிக்கின்றது.

இடையில் இன்னொரு அப்துல் ஹமீது!  அவர்தான், நமதூருடன் நட்புறவு கொண்ட ‘அழைப்பாளர்’, சென்னைவாசி.  இவரும் பிலால் நகர் ‘தர்பியா செண்ட’ரில் பயனுள்ள வகுப்புகளைப் பையன்களுக்கு எடுத்து, பயிற்சி முகாமில் கிடைத்த நன்மைகளை நுகரச் செய்தார்.  அவருக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

இடையில் ஒருநாள், ‘இஸ்லாமிய அழைப்பாளர்’ தருமபுரி சாதிக் அவர்கள் நமதூருக்கு வந்தவர், நமது அனுமதியைப் பெற்று, சிறுவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.  அவருக்கும் நாம் கடப்பாடுடையோம்.


நமது நன்றியுணர்வுக்கு, இன்னும் முடிவில்லை!  இன்னும் சிலருக்கும் நாம் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளோம். மாணவ மாணவிகளின் பயிற்சி முகாமிலும் இடம் பெறாத, அவர்களின் படிப்புக்குத் தொடர்புடைய, பாட நூல்களில் இடம் பெறாத, 'இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களின் வீர வரலாறு' எனும் தலைப்பில் இணையதள எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் பயனுள்ள உரையொன்றை நிகழ்த்தி, மாணவ மாணவியரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.  இதன் கட்டுரை வடிவப் பதிப்பு, ‘அதிரை நிருபர்’ என்ற தளத்தில் இடம் பெற்றதாகும். சகோதரர் இபுராஹீம் அன்சாரி அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முத்துப்பேட்டையிலிருந்து வந்து, நமது வேண்டுதலுக்கு அவருடைய சொற்பொழிவின் மூலம் தம் கடமையை நிறைவேற்றினார்.  அன்னாருக்கும் நமது நன்றி உரித்தாகும்.

நாம் திட்டமிட்டுத் தொகுப்பாக அமைத்திருந்தபடி, இன்னொரு அருமையான நிகழ்ச்சியை ‘செக்கடி மேட்டில்’ வயது வரம்பின்றி அனைவரும் பயன்பெறும் விதத்தில் நடத்தினோம். இது ஓர் அற்புதமான அழைப்புச் சாதனமாகும். அது இதுதான்:


இந்த நிகழ்ச்சியை, மிகச் சிறப்பாகப் ‘பவர் பாயின்ட்’ முறையில் நடத்தித் தந்தவர், ‘உளவியல் அறிஞர்’, மவ்லவி அப்துல் ஹமீத் (ஷரஇ) அவர்கள்தாம்.  மிகச் சிறப்பாக அமைந்த இந்நிகழ்ச்சியைப் பற்றிப் பாராட்டாதவர் இல்லை!  இதற்காகவும் மவ்லவி அவர்களுக்கு நம் உளம் நிறைந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

இந்த எல்லா நிகழ்ச்சிகளுக்கும் முத்தாய்ப்பாக அமைந்தது, ‘தக்வாப் பள்ளி’ முனையில் நாம் நடத்திய பரிசளிப்பும்,  அதைத் தொடர்ந்து,  'குடும்பப் பிரச்சினைகளும் அவற்றுக்கு இஸ்லாம் கூறும் உளவியல் தீர்வுகளும்' என்ற தலைப்பில் அப்துல் ஹமீத் (ஷரஇ) நிகழ்த்திய சிறப்புரையுமாகும்.

அபுதாபியிலிருந்து துபாய்க்கு வந்து, நம் சகோதரர்களைக் கூட்டி, இந்தப் பயிற்சி முகாமின் வெற்றியை நோக்கமாகக் கொண்டு, இறுதிச் சிறப்பு நிகழ்ச்சிவரை பக்கபலமாக நின்ற ஆர்வலர் அமீன் அவர்களின் பங்களிப்பு, அனைவரையும்விட அதிகமாகும். பரிசுப் பொருள்களைக்கூட அமீரகத்தில் வாங்கி, அதிரைக்கு அனுப்பித் தந்து, பரிசு பெற்ற மாணவ மாணவிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய பெருமைக்குச் சொந்தக்காரரான சகோதரர் அமீனை எவ்வாறு புகழ்வதென்று புலப்படவில்லை!  அத்துணைக்கு அமைந்து விட்டது, அவருடைய பங்களிப்பு!


ADTயின் பொதுச் செயலாளர் தம்பி ஜமீல் ஆற்றிய களப்பணியின்போது, அவரின் உடை வியர்வையால் சொட்டச் சொட்ட நனைந்து போயிருந்ததைக் கண்டவன் என்ற முறையில், நான் அவருடைய பங்களிப்பை உயர்த்தியே கூறுவேன்.  இடையிடையில், சில படிவங்களுக்குப் பிரதியெடுக்கும் தேவை ஏற்படும்போது, அதனையும் தானே முன்வந்து, கணினியில் பதிந்து, அதைப் பிரதியெடுத்து, அதைக் கொண்டு ஆகவேண்டிய பணியைத் தான் ஒருவரே செய்து, எனக்கு மலைப்பூட்டியவர்!  மட்டிட்டுக் கூற முடியாத அவருடைய dedication காரணமாக எனது பங்களிப்பைக் குறைத்துக்கொண்டேன் என்பதுவே உண்மையாகும்.  ‘நன்றி’ எனும் ஒற்றைச் சொல்லில் கூறினால், அவர் ஈடுபட்டுச் செய்த பணிகளுக்கு நம் நன்றி போதாது.  அவரின் திட்டமிடுதல், அதன்படி இயக்குதல், குறைபாடுகள் இருந்தால், அவற்றைச் சரிப்படுத்துதல் போன்ற dedications அவருக்கே உரிய ஒன்றாகும்.


மழை வருகின்றதா என்று வானத்தை நோக்கியபோது, அது நமது பயிற்சி முகாம் தடையின்றி நடைபெறச் சாதகமற்ற சூழலை உருவாக்கிவிடுமோ என்ற கவலையில்,  அதே நேரம், இந்தக் கோடை வெயிலின் தாக்கத்துக்கு இம்மழையின் தேவை நிலையில், மாணவ மாணவியர் தத்தம் வீடுகளுக்குச் சென்று சேர்ந்த பின் மழை வந்தால் போதும் என்ற எண்ணத்தில், வானை நோக்கிய எனது கவலைப் பார்வை!


தனது பள்ளி விடுமுறையின்போது எமது பயிற்சி முகாமுக்காகத் தன்னால் இயன்ற எல்லா வசதிகளையும் செய்து தந்தமைக்காக, இப்பள்ளியின் தாளாளர் அப்துர்ரஸ்ஸாக் அவர்களுக்கு ADT நிர்வாகம் மிக்க நன்றியைக் கூறுகின்றது.

பயிற்சி முகாம் நடக்கும்போது தாமும் ஊரில் இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் தனது விடுப்பை முன்னோ பின்னோ அமைத்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்து, எங்களுடன் இணைந்து செயல்பட்ட அப்துல் காதர் அவர்களுக்கு மிக்க நன்றி.

எம்மோடு இணைந்து செயல்பட்ட அப்துர்ரஹ்மான், அஹ்மது ஹாஜா, பிலால் நகர் கமாலுதீன் ஆகியோருக்கு என் இதயம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.

வஸ்ஸலாம்.


ADT/ அமீர்
அதிரை தாருத் தவ்ஹீத்

கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2014 - பரிசுகள் 11

அதிரைநிருபர் பதிப்பகம் | May 20, 2014 | , , , ,

கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2014

போட்டிகள், பரிசுகள்

மாணவிகள் பிரிவு

பதிவு செய்த மொத்த மாணவிகள் : 228

நிலை 1 (3, 4 & 5 வகுப்புகள்) மாணவிகள் : 74

            பத்துப் பிரார்த்தனைகள் - போட்டியார்கள் : 27

முதல் பரிசு :                  நதீரா பானு முஹம்மது அப்துல்லாஹ், மேலத்தெரு
இரண்டாம் பரிசு :         நபீஹா அஹ்மது அனஸ், கடற்கரைத் தெரு
மூன்றாம் பரிசு :            நஸூஹா ஸாதிக் பாட்சா, CMP லேன்
ஆறுதல் பரிசுகள் : 24

          மனனம் : ஸூரத்துல் ஆதியாத் (+ தஜ்வீத்) - போட்டியாளர்கள் : 40

முதல் பரிசு :                  ஜுல்ஃபா முஹம்மது தமீம், CMP லேன்
இரண்டாம் பரிசு :         முபீனா முஹம்மது நளீம், பிலால் நகர்
மூன்றாம் பரிசுகள் :      ஃபழீலா & ஃபஹ்மிதா இத்ரீஸ் முஹைதீன், புதுமனைத் தெரு
ஆறுதல் பரிசுகள் : 36

நிலை 2 (6 & 7 வகுப்புகள்) மாணவிகள் : 68

            பேச்சுக் கலை : "மனிதனை அழிப்பது எது?" போட்டியாளர்கள் : 29

முதல் பரிசு :                  ஹம்னா அப்துர் ரஹ்மான், சேது ரோடு
இரண்டாம் பரிசு :         சுமையா முஹம்மது யூஸுஃப், புதுத் தெரு
மூன்றாம் பரிசுகள் :      ஆமினா அப்துர் ரஸ்ஸாக், நடுத்தெரு & முஃப்லிஹா நஜ்முத்தீன், தட்டாரத் தெரு
ஆறுதல் பரிசுகள் : 25

            மனனம் : ஸூரத்துல் இன்ஃபிதார் (+ தஜ்வீத்) போட்டியாளர்கள் : 28

முதல் பரிசு :                  ஃபாத்திமா முஹம்மது ஃபாஸி, ஆலடித் தெரு
இரண்டாம் பரிசு :         வஃபியா ஸல்மான் , ஆலடித் தெரு
மூன்றாம் பரிசுகள் :      ஃபழீலா அலாவுத்தீன், கடற்கரைத் தெரு & மர்யம் முனவ்வரா முஹம்மது மீரா ஸாஹிப், ஆலடித் தெரு
ஆறுதல் பரிசுகள்  : 25

            கட்டுரைப் போட்டி - போட்டியாளர்கள் : 68

முதல் பரிசுகள் :            ஹம்னா அப்துர் ரஹ்மான், சேது ரோடு & ஆயிஷா அப்துர் ரஸ்ஸாக் புதுமனைத் தெரு
இரண்டாம் பரிசு :         சமீஹா ஹாஜா அலாவுத்தீன், மேலத் தெரு
மூன்றாம் பரிசு :            சுமையா முஹம்மது யூஸுஃப், புதுத் தெரு

நிலை 3 (8 & 9 வகுப்புகள்) மாணவிகள் : 51

            பேச்சுக் கலை :"குர் ஆன் கூறும் நல்லுபதேசம்" - போட்டியாளர்கள் : 26
முதல் பரிசு :                  சஃபீனத்துர் ராபியா அப்துல் ஹமீது, கடற்கரைத் தெரு
இரண்டாம் பரிசு :         தஹ்ஸீனா அபுல் ஹஸன், ஆலடித் தெரு
மூன்றாம் பரிசு :            ருமைஸா அஹ்மது ஹாஜா, நடுத் தெரு
ஆறுதல் பரிசுகள் : 23

            மனனம் : ஸூரத்துல் கியாமா (+ தஜ்வீத்) - போட்டியாளர்கள் : 26

முதல் பரிசு :                  தஹ்ஸீனா அபுல் ஹஸன், ஆலடித் தெரு
இரண்டாம் பரிசு :         அஸ்மா அப்துஸ் ஸாதிக், மேலத் தெரு
மூன்றாம் பரிசு :            கதீஜா காமிலா சய்யித் அஹ்மது புகாரீ, ஆஸ்பத்திரித் தெரு
ஆறுதல் பரிசுகள் : 23

          கட்டுரைப் போட்டி - போட்டியாளர்கள் : 68

முதல் பரிசு :                  சஃபீனத்துர் ராபியா அப்துல் ஹமீது, கடற்கரைத் தெரு
இரண்டாம் பரிசு :         அஸ்மா அப்துஸ் ஸாதிக், மேலத் தெரு
மூன்றாம் பரிசு :            ருமைஸா அஹ்மது ஹாஜா, நடுத் தெரு

நிலை 4 (10, +1 & +2 வகுப்புகள்) மாணவிகள் : 35

            பேச்சுக் கலை : "மதி மயக்கும் உலக ஆசைகள்" - போட்டியாளர்கள் : 14
முதல் பரிசு :                  தவ்ஹீதா ஷேக் தாவூது, மேலத் தெரு
இரண்டாம் பரிசு :         பெல்ஹா முஹம்மது முஹைதீன், மேலத் தெரு
மூன்றாம் பரிசு :            அனீஸா அப்துஸ் ஸாதிக், மேலத் தெரு
ஆறுதல் பரிசுகள் : 11

            மனனம் : ஸூரத்துல் முத்தஃதிர் (+ தஜ்வீத்) - போட்டியாளர்கள் : 13

முதல் பரிசு :                  சுஹைமா அப்துல் கரீம், புதுமனைத் தெரு
இரண்டாம் பரிசு :         முஃப்லிஹா முஹம்மது தமீம், புதுமனைத் தெரு
மூன்றாம் பரிசு :            பெல்ஹா முஹம்மது முஹைதீன், மேலத் தெரு
ஆறுதல் பரிசுகள் : 10

          கட்டுரைப் போட்டி - போட்டியாளர்கள் :

முதல் பரிசு :                  சுஹைமா அப்துல் கரீம், புதுமனைத் தெரு
இரண்டாம் பரிசு :         ரிஹானா நர்கிஸ் அஹ்மது அலீ, பழஞ்செட்டித் தெரு
மூன்றாம் பரிசு :            பெல்ஹா முஹம்மது முஹைதீன், மேலத் தெரு


மாணவர்கள் பிரிவு
பதிவு செய்த மாணவர்கள் - 65 ; வருகையாளர்கள் - 38
எழுத்துப் போட்டியாளர்கள் - 21

          எழுத்துப் போட்டி அ-பிரிவு

முதல் பரிசு :          தவ்ஃபீக் ஷாஹுல் ஹமீது, பிலால் நகர்
இரண்டாம் பரிசு : அப்துர் ரஹ்மான் பஹ்ருத்தீன், மேலத்தெரு
மூன்றாம் பரிசு :    ஷேக் உமர் அஹ்மது ஹாஜா, நடுத் தெரு

          எழுத்துப் போட்டி ஆ-பிரிவு

முதல் பரிசு :          அப்துல் பாஸித் ஜியாவுல் ஹக், ஹாஜா நகர்
இரண்டாம் பரிசு : இர்ஃபான் அலீ சஹாபுத்தீன், பிலால் நகர்
மூன்றாம் பரிசு :    ஜாஹிர் ஹுஸைன் கமாலுத்தீன், பிலால் நகர்
எழுத்துப் போட்டி ஆறுதல் பரிசுகள் - 15
வாய்மொழி ஆறுதல் பரிசுகள் 17

        துஆ மனனப் போட்டி - பங்கெடுத்த மாணவர்கள் : 19

முதல் பரிசு :          ஜாஹிர் ஹுஸைன் கமாலுத்தீன், பிலால் நகர்
இரண்டாம் பரிசு : ஹாமித் அப்துர் ரஹ்மான், சேது ரோடு
மூன்றாம் பரிசு :    இர்ஃபான் அலீ சஹாபுத்தீன், பிலால் நகர்
ஆறுதல் பரிசுகள் : 16

        சூரா மனனப் போட்டி - பங்கெடுத்த மாணவர்கள் : 21

முதல் பரிசு :          ஹாஸர் மாஜுத்தீன், சான வயல், மேலத்தெரு
இரண்டாம் பரிசு : இர்ஃபான் அலீ சஹாபுத்தீன், பிலால் நகர்
மூன்றாம் பரிசு :    நிஅமத்துல்லாஹ் ஷேக் அப்துல் காதிர், நடுத் தெரு

ஆறுதல் பரிசுகள் : 18

SEC-ADT
அதிரை தாருத் தவ்ஹீத்