ட்விட் (tweet) இதை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று போஸ்டர் அடித்துச் சொல்ல வேண்டியதில்லை இரண்டு வார்த்தைகளில் தட்டிவிட்டாலே உலகைச் சுற்றிவரும் அதிவேக மற்றுமொரு வரம். தற்போது நடந்து வரும் ஐ.பி.எல்.மேட்சில் டிவிட் கவுண்ட் போட்டுக் காட்டும்போது நமதூரில் இருந்தும் இல்லாமல் இருக்கும் மின்சாரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மீட்டரில் ஓடும் வேகத்திற்கு டிவிட்டுகள் வினாடிக்கு வினாடி எகிரிக் கொண்டிருப்பது போன்ற ஒரு பிரம்மை.
அந்த அளவுக்கு பிரம்மையெல்லாம் இங்கே கொடுக்காவிட்டாலும் இது போல நீங்களும் ட்விட்டுங்களேன்.
ஏர் லங்க்கா விமானத்தில் பணிபுரிய ஏர் ஹோஸ்ட்டஸ்கள் தேவை. சித்தாளாகவோ ரோட்டில் தார் ஊற்றும் வேலையிலோ முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மலேசியாவை விசிட் செய்யும் ட்டூரிஸ்ட்களுக்கும் முதற் தகுதியா ’24 மணி நேரமும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும்’ சக்தி மேன்டேட்டரி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தேநீர் உலகப் பிரசித்தி பெற்றது, மலிவானது. இருப்பினும் ஒரு கப் ட்டீ 130 ரூபாய்ங்கோ.
கர்நாடகாவில் பாரதிய ஜனதாவின் படுதோல்விக்குக் காரணம் உட்கட்சி சண்டை என்பது அபாண்டம்; அம்பூட்டும் வெளியே தெரிகிற மாதிரியே ரணகளப் பட்டதை நாடு அறியும்.
ஜெயிப்பதற்கான எந்த முகாந்திரமுமின்றித் தடுமாறிய காங்கிரஸை கர்நாடகாவில் வெற்றியடைய வைத்த பாரதிய ஜனதாவுக்கு நன்றி பாராட்டும் விழாவை காங்கிரஸ் எடுக்கும்.
ராஜஸ்தான் ராயலிடம் சென்னை சூப்பர் கிங் தோற்றதற்குக் காரணம், ‘பந்து பேட்டுக்கு வராததே” என்று டோனி விளக்கம்.
தீவிரவாதிகள் பிரமுகர்களாக்கும் சம்பவம், படிப்பது இரமாயணம் இடிப்பது பாபரி மஸ்ஜித் என்பது போல்தான் இருக்கிறது !
சமீபத்தில் (ஜெ)அம்மா போட்ட லிஸ்டில் மரம் வெட்டிய டாக்டருக்கு நிறைய மருந்துகள் ரெடியாகிக் கொண்டிருப்பதாக சொன்னார் !
எதிர்ப்பது நீயாக இருப்பதால்தான் நீ எதிர்ப்பதையெல்லாம் எதிர்க்கிறோம் என்ற கொள்கை முடிவும் அதிரைக்கு மட்டும் விதிவிலக்கா என்ன ?
அப்பாவியான தன்னை ஐ பி எல் சூதாட்டத்தில் தன் நண்பன்தான் ஈடுபடுத்தினான். அவனிடம் டூ விட்டுவிடுகிறேன். என்னை விட்டுவிடுங்கள் – ஸ்ரி சாந்த்.
இனி நீங்களும் ட்விட்டலாம் !
அபூசாஹ்ரூக் - அபூஇப்ராஹீம்

