Showing posts with label நிஜாம். Show all posts
Showing posts with label நிஜாம். Show all posts

நிஜாம்... 10

அதிரைநிருபர் பதிப்பகம் | May 27, 2016 | , , , ,


நிஜாம்,

டேய்,

முத்திரைத் தோழனே
நித்திரை நிலை
நின்றன்
நிரந்தரமானதா

இத்தரைமீதினில்
இனியுன்
இன்முகம் காணாத
இதயங்களோடு
எத்துணை நாட்கள்தான்
நாங்களும்
இழுத்தடிப்பதடா

ஏனிந்த அவசரம்?

நட்பை
கற்பெனக் கண்டவனே
இன்னும் கொஞ்ச நாள்
எங்களோடு
இருந்துவிட்டுப் போனால் என்ன

வேதனையை உட்சுமந்து
எமக்கெல்லாம் பகிராமல்
புன்னகைப் போர்த்தியவனே

வலிகளோடு கணநாள்
வாழப்பழகியவனே

சக மனிதரின்
முகம் வாடினால்
அகம் கலங்கும் நண்பா
நீ
ஐந்து நிமிட உரையாடலில்
ஆறாத புண் ஆற்றுவாய்
தேனை யொத்த வார்த்தைகளால்
தீராத வலி நீக்குவாய்

வலியோடு உன்னை நாடியோருக்கு
வழி காட்டி மகிழ்வாய்

ஆண்டவன்
அருள் பெற்ற நீ...
நீட்டிய கைகளில்லாம்
பொருள் இட்டவன்
வாட்டிய வறுமையை
விலக்கிய தர்மஸ்தன்

உன்னை இழந்தது
எம்மில் எதையோ
இழந்தது போலவே இருக்கிறதேடா

இருமிக்கொண்டோ
செருமிக்கொண்டே
நீ இருந்திருந்தாலாவது
ஏக்கம் மீறுகையில்
நின்றன்
எழில்வதனம் கண்டேனும்
ஆறுதல் உய்வோம்

இனி
எங்கேடா
எப்போடா
எப்படியடா என் தோழா

என்
விழித்திரையில் இன்னும்
உயிர்த்திருக்கிறாய்
செவிகளுககுள் இன்னும்
ஒலித்திருக்கிறாய்

கண்டதும்
கைகுலுக்கும்
தற்கால நட்புலகில்
கண்டதும் கட்டியணைத்துத்
தோளில் முத்தமிடும்
கற்கால நட்பன்றோ நமது

மலேசிய மண்ணறை
மஹ்சர் வரை உனக்கு
மாளிகையென துலங்கட்டும்

உன்
இறுதி மூச்செனும்
ஈட்டி எய்து
எங்கள்
இதயம் குத்திய நண்பா
உன் பிரிவை ஏற்க
வலிமை தரட்டும்

வல்ல இறைவன்..

அவனிடமிருந்தே வந்தாய்
அவனிடமே மீண்டாய்
அவனிடமிருந்தே வந்தோம்
அவனிடமே மீள்வோம்

யா அல்லாஹ்
எங்கள் நிஜாமுக்கு
உயர்ந்த சொர்க்கத்தை
உரித்தாக்கு!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

கலப்படங்கள் - ஓர் எச்சரிக்கை ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | January 10, 2012 | , ,


விலைவாசி உயர்வால், செலவைக் குறைப்பதற்காகவும், அதிகமான லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் விதம் விதமாய் கலப்பட உத்திகளை கையாள்கிறார்கள். இதனால் உடல் அளவிலும், மனதளவிலும், பொருளளவிலும் பாதிக்கப்படுவது பொதுமக்களாகிய நாம்தான்.

இதில் பாலில் நீர் சேர்ப்பதும், அரிசியில் கல் இருப்பதும் அறிந்திருப்பீர்கள். பிற விஷயங்கள் ஆச்சரியப்படுத்தும் !! சில அதிர்ச்சியளிக்கும் !!!  

இதோ... !

உணவுப்பொருட்களும் அதனுள் கலக்கபடும் பொருட்களும்

பால்தண்ணீர், ஸ்டார்ச்
அரிசிகல்
பருப்பு கேசரி பருப்பு
மஞ்சள் பொடிlead chromate
தானியா பொடி சானி பொடி, ஸ்டார்ச்
நல்ல மிளகுகாய்ந்த பப்பாளி விதைகள்
வத்தல் பொடிசெங்கல் பொடி, மரப்பொடி
தேயிலை மரப்பொடி, பொடிசெய்யப்பட்ட உளுந்து தோல், ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட தேயிலை

பெருங்காயம் மண், பிசின்
கடுகு ஆர்ஜிமோன் விதைகள்
சமையல் எண்ணைமினரல் எண்ணைகள், ஆர்ஜிமோன் எண்ணை
வெண்ணை பிற கொழுப்புகள்

பச்சை பட்டானி பச்சை சாயம்
நெய் வனஸ்பதி
ஆட்டிறைச்சி - மாட்டிறைச்சி
மிளகு - பப்பாளி விதை
புதியதாக தயாரித்த புரோட்டவுடன் - பழைய புராட்டாவை
சர்பத் ஜூஸ்களில் - சாக்கிரீன்
ஹோட்டல்களில் சோறு விறைப்பாக வர - சுண்ணாம்பு

இப்படி இன்னும் பல…நாம், அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுப்பொருள்களில் மீது கலப்படங்களை சேர்க்கிறார்கள். 

அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வில்லை என்று குறை கூறிக்கொண்டு இருக்காமல், சகோதர, சகோதரிகளே ! நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  குறிப்பாக நாம் பொருட்கள் வாங்கும்பொழுது அதனுடைய தரம், உற்பத்தி செய்த நாள் மற்றும் பயன்படுத்தக்கூடிய கால அவகாசம் ஆகியவைகளை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த சட்டம் ஒன்றை மத்திய அரசு 2006 ‘ ல் இயற்றியுள்ளது. இதில் சில முக்கியமான பொருட்களில் செய்யப்படுகின்ற  கலப்படத்திற்காக ஆயுள் தண்டனை வரை வழங்க  வாய்ப்பு உள்ளது. மேலும் சட்டத்தின்படி கலப்பட உணவுப் பொருள் உற்பத்தியாளர்கள் மீது கலப்படப் பொருளின் தன்மைக்கேற்ப ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம். மாவட்ட துணை ஆட்சியர் அந்தஸ்திலான அதிகாரி இந்த அபராதத்தை நிர்ணயிக்கலாம்.

உணவு பொருட்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் நகராட்சி பகுதிகளில் நகராட்சி உணவு ஆய்வாளர் அல்லது நகராட்சி ஆணையர் அவர்களுக்கும் கிராமப்பகுதிகளில் துணை இயக்குனர் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.

புகார் தெரிவிக்க வேண்டிய முகவரி :
Food Safety Commissioner :   Sh. Girija Vaidyanathan ( IAS )
Contact Details : Chennai - 600 003
TEL :  044 24320802, 24335075,   FAX :  044 24323942
E-mail :  dphpm@rediffmail.com
Status of Laboratories:  Food Analysis Laboratory, Medical College Road, 
Near Membalam,  Thanjavur - 673001

Food Safety  Officer  for Thanjavur  District :  Mr. S. Raj Kumar , Mr. N. Chandra Mohan

இறைவன் நாடினால்,  தொடரும்... !
- சேக்கனா M.நிஜாம்.

மகளிருக்கு மட்டும் ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | January 06, 2012 | , , ,

கர்ப்பினிகளுக்கு அரசு ரூ 12,000 /  உதவி !


தமிழக அரசின் நலத்திட்டங்களில் ஒன்றான “ டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் “ கீழ் கர்ப்பமுற்ற சகோதரிகளுக்கு ரூ 12,000 /  அரசின் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.


அரசின் உதவி பெற விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி :-

1. அரசு மருத்துவமனை – அதிராம்பட்டினம்
2. அரசு ஆரம்ப சுகாதார மையம் – ராஜாமடம்

பிறந்த குழந்தைகளுக்கு இலவச நோய் தடுப்பு ஊசி !!

மேலும் பிறந்த குழந்தைகளுக்கு டாக்டர்களின் ஆலோசனைகளின் பேரில் கீழ் கண்ட நோய் தடுப்பு ஊசிகளும் மேற்கண்ட மருத்துவமனைகளில் இலவசமாக போட்டுக்கொள்ளலாம்.

குழந்தை பிறந்தவுடன் :  BCG  / Oral Polio  / HEPB
6 வது வாரத்தில்         :  DPT / Oral Polio  / HEPB / HIB
10 வது வாரத்தில்         :  DPT / Oral Polio / HIB
14  வது வாரத்தில்         :  DPT / Oral Polio / HEPB  / HIB
9 வது மாதத்தில்         :  Measles
15 வது மாதத்தில்         :  MMR
18 வது மாதத்தில்         :  DPT / OPV / HIB Booster
2 வது வருட தொடக்கத்தில் :  TYPHOID


"பெண்டா வேலண்ட்" தடுப்பூசி :

குழந்தைகளுக்கு தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி, நிமோனியா காய்ச்சல், மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களுக்காக தமிழக அரசால் ஒரே தடுப்பு மருந்தாக “ பெண்டா வேலண்ட் “ என்ற தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்களால் போடப்படுகின்றன.

சகோதரிகளே ! 

அரசு மருத்துவமனைகளில் செலுத்தும் நோய் தடுப்பு ஊசிகள் மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்பட்டு, வீண் விரயமாகும் நம்முடைய பணமும் சேமிக்கப்படுகிறது. ஆகையால் தங்களின் குழந்தைகளுக்கு மேற்க் கண்ட நோய் தடுப்பு ஊசிகளை செலுத்த நமது ஊர் அரசு மருத்துவமனை மற்றும் நமது ஊர் அருகில் உள்ள ராஜமடத்தில் இருக்கிற அரசு ஆரம்ப சுகாதார மையத்தை அணுகி பயனடையுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு வாரம் ‘செவ்வாய் கிழமை’ தோறும் கருவுற்ற சகோதரிகளுக்கும், ‘புதன் கிழமை’ தோறும் குழந்தைகளுக்கும் நோய் தடுப்பு ஊசிகள் போடப்படுகின்றன.

இறைவன் நாடினால், தொடரும்... 
- சேக்கனா M.நிஜாம்