ஊரையே பேச வைத்த பேசும் படம் ஊமையானதோ என்று கேள்வியோடு எட்டிப் பார்க்கும் மின்னஞ்சல்களுக்கு பதிலுரை என்னவோ "வேலைப் பளு பேசாமல் வேலையைப் பாரு என்ற அழுத்தம்".
மூன்றாம் கண் கண்ட காட்சிகளைக் கொண்டு இனியொரு பேரணி நடத்தலாமென்ற அடுத்தக் கட்ட முடிவு :)
ஒரே புகை மூட்டமா இருக்கு, கீழே குனிந்து பாருங்க விமானம் ஏதாவது விழுந்து கிடக்கப் போவுது !?
எதுக்கும் கொஞ்சம் தள்ளி நின்னே பாருங்க போட்டோவை.
இங்கயும் ரோடு போட்டு தரணுமுன்னு கலக்டர்டே மனு கொடுத்துராதிய
இந்த மாதிரி காட்டை பார்த்தால் முதலில் நினைவுக்கு வருவது காட்டு மிருகங்கள் அதற்கு அடுத்து வீரப்பன்
ஆங்கிலத்தில் Couple (ஜோடி)இங்கே தமிழில் கப்பல் கப்பலாக
கப்பலின் பெயரை பார்த்தாலே மைனாரிட்டி மெஜாரிட்டியை ஆட்சி செய்வது புரிய வருமே
ஒண்டி கட்டை என்று சொல்வார்களே அதுக்கு இது பொருந்துமா ?
ஆறு வித்தியாசமெல்லாம் ஒண்ணும் கிடையாது மேலே உள்ளது அப்படியோ கீழே தண்ணிரில் தெரிகின்றது
Sஹமீது









