Showing posts with label அதிரைத் தென்றல் (CMP Ifran). Show all posts
Showing posts with label அதிரைத் தென்றல் (CMP Ifran). Show all posts

தண்ணீரை வீண் விரயமாக்குவதைத் தடுக்க முடியும்! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | September 10, 2013 | , , ,

உணவு இல்லாமல்கூட பல நாட்கள் மனிதனால் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மனிதனால் ஓரிரு நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது. தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பது என்ன என்று யோசித்தால், உடனடியாக நம் மனதில் தோன்றும் முதல் பிரச்சனை தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனை. அது கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது. தேவைக்கு குறைவாக கிடைக்கிறது. இதனால் அண்டை மாநிலங்களோடு சண்டை, சச்சரவு ஏற்படுகிறது.

இயற்கையின் கொடையான தண்ணீர் உயிரின் ஆதாரம். இயற்கையின் விதிப்படி தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. தற்போது வாழும் மக்களுக்கு மட்டுமின்றி வரவிருக்கும் தலைமுறைக்கும் அதன் மீது உரிமை உண்டு. 

தண்ணீர் பற்றிய தகவலை நான் தேட ஆரம்பித்தது ஒரு கட்டாய சூழ்நிலையில் தான். ஏனென்றால் தற்பொழுது அதிரையில் தண்ணீர் தட்டுப்பாடு ஆங்காங்கே காண முடிகிறது, போர்வெல்களில் தண்ணீர் வரத்தில்லை, தண்ணீர் அடி மட்டம் கீழே இறங்கியுள்ளது ஆதலால் கம்பரசர் ஊதியே ஆக வேண்டுமென பலரும் இச்செயலில் செய்கின்றனர் காரணம் தண்ணீர் இல்லாமல் எந்தறொரு ஜீவனும் வாழ்வது கடினம். 

அன்று, கிணற்றினில் தண்ணீர் சாதரணமாக அள்ளலாம் அந்த அளவிற்கு தண்ணீர் நிறைந்து காணப்படும் மேலும் அள்ள அள்ள நீர் ஊறிக்கொண்டே இருக்கும் ஆனால் இன்று, கார்ப்பரேஷன் தண்ணீர் ஒருநாள் விட்டு ஒருநாள் நம் பகுதிகளுக்கு வருகிறது என்பது சிறு ஆறுதல் தரக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம், வந்தோர்  தாகம் தணிக்க தண்ணீரும் இல்லை, சோகம் உரைக்க சொற்களும் இல்லை. 

வானிலை அறிஞர்கள் இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாது என்று சொல்லி வயிற்றில் புளி கரைத்திருக்கிறார்கள். தண்ணீர் ஒரு நாட்டின் ஜீவாதார பிரச்சனை, அதுதான் தனி மனிதனின் ஜீவாதார உரிமையும் கூட .வற்றாத ஜீவ நதிகளெல்லாம் வற்றும்வரை தண்ணீர் திருட்டு. வாழ வீடு கட்ட, வளம் கொழிக்கும் மணல் திருட்டு. வீட்டிலுள்ளோர், வெளியில் சென்று வந்தாலும், விருந்தினர் வந்து சேர்ந்தாலும் வந்தோரை வரவேற்று முதலில் உபசரிப்பது ஒரு குவளை தண்ணீர் கொடுத்து அந்நேரத்தில் தான் தண்ணீரின் முக்கியத்துவம் நமக்கு தெரிகிறது.

முந்தைய காலங்களில் (முன்னே என்றதும் பழங்காலத்துக்கு செல்ல வேண்டாம், 15-20 ஆண்டுகளுக்கு முன்னே ஆற்றங்கரை என்று அழைக்கப்படும் சி.எம்.பி லைன் வாய்க்காலில் தண்ணீர் வழிந்தோடும் ஆற்றில் சரியாக தூர்வாரப்படாமல் தெருக்களில் சிதறி பல நாட்களாக ஓடி பல குளங்கள் நிறையும் ஆனால் தற்போது அவ்வழியே துர்நாற்றம் வீசி தண்ணீர்க்கு பதில் சாக்கடை கால்வாய்களாக ஓடுகிறது என்பது வேதனையான விஷயம்,

இன்றைய தலைமுறை வற்றிய வாய்க்காலையும், ஆறையும், வானம் பார்த்த பூமியையும் வரலாற்றுச் சின்னங்களாய் பார்த்து வாய் பிளந்து நிற்கின்றனர். நாளைய தலைமுறைக்கு நாம் இவற்றையெல்லாம், நல்ல பல கதைகளாய், கவிதைகளாய், புவியியல் பாடத்தில் புள்ளிகளாய், கோடுகளாய் மட்டுமே சொல்ல இயலுமென்பதே இன்றைய நிலை. 

தமிழ்நாட்டில் விவசாயம் என்பதே இல்லாமல் போனாலும் ஆச்சர்யமில்லை . அரிசி ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யபடுகிறது, விலை உயர்வுக்கு காரணம் அதுதான். தமிழ்நாட்டில் தண்ணீர் இப்போது விற்பனை பொருள் , தண்ணீர் பாக்கெட் , தண்ணீர் பாட்டில் , தண்ணீர் கேன் என்று அது இப்போது பணம் பண்ணும் தொழில் என்றாகிவிட்டது. 

நம் பருவகாலத்தில் பலஞ்சூர், நசுனி, ராஜாமடம் போன்ற ஆறுகளிலும், செக்கடிக் குளம், செடியன் குளம், வெள்ளை குளம் மற்றும் ஆலடிக்  குளம் போன்ற குளங்களிலும் குளித்து அதன் கரையில் உள்ள மணலில் குதித்தோடி விளையாடி, மகிழ்ந்திருந்த காலம் மலையேறிப் போய்விட்டது. வற்றாத ஆறுகள் / குளங்கலெல்லாம், வசதி படைத்தோர், மணலை வாரிச்சுருட்டியப் பின் விட்டுச் சென்ற பள்ளங்கள் மட்டுமே, மனிதனின் உயிரைக்குடிக்க வாய் பிளந்து நிற்கின்றன வறண்டும் கிடக்கின்றன. 

நதிகள் ஒன்றாக இணந்தால் வெள்ள அபாயம் இருக்காது, நல்ல மழை பெய்த மாநில தண்ணீர் வறட்சி பாதித்த மாநிலத்திற்கு போய் சேரும் அந்த மாநில தண்ணீர் பிரச்சனையும் தீரும் , சமூக ஆர்வலர்கள் சுற்று சூழல் நிபுனர்கள் சமூக அமைப்புகள் நதிகள் இணைப்பை வலியுறுத்துகிறது , அது அவசர அவசியம் என்கிறார்கள் , ஆனால் எல்லா அரசும் ஆமாம் அவசியம் என்று சொல்லிவிட்டு அதற்கு எத்தனை ஆயிரம் கோடி செலவாகும் என்று சொல்லி ஒதுங்கி விடுவார்கள்.

ஆற்றுநீர் ஓடி, அளப்பரிய வளம் பெற்ற நாட்டினிலே, பாட்டில் நீரை வாங்கி பருக வேண்டிய கட்டாயம். நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை  மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான். 

பருவமழை பொய்த்தது என்பது நமது தண்ணீர் தாகத்திற்கு காரணம் அல்ல. பெய்த மழை நீரை நாம் தேக்கி வைத்து கொள்ள எந்த ஏற்பாடும் செய்து கொள்வதில்லை, இதனால் பெய்த மழை நீரின் முக்கால் பங்கு கடலில் கலந்து வீணாகிறது என்பதுதான் நிஜம். வீட்டில் மழை நீர் சேமிப்பின் அவசியத்தை அரசு சொன்னதே பத்து வருடங்களுக்கு முன்புதான். இப்போது கூட கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் சரிவர தூர் வாரபடுவதில்லை, இதனால்தான் தண்ணீர் பிரச்சனை. ஆனால் தூர் வாரியதாக பொய் கணக்கு எழுதமட்டும் தவறுவதில்லை, இதனால் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் நிறைந்து வழிந்து கடலில் கலந்து விடுகிறது . இதுபற்றி எந்த அரசும் அக்கறைபட்டதும் இல்லை. கவலைபட்டதும் இல்லை.

அதிரையில் அதிகளவில் உப்பு விளைகிறது தண்ணீர் தேக்கமில்லாத காரணத்தால் அனைத்து தண்ணீரும் கடலோடு கலக்கின்றன, இந்தியாவின் இருபத்தைந்து சதவிகித மாவட்டங்களில் தண்ணீர் உப்பு அதிகமாகி விட்டது . அது மட்டுமல்ல நமது தண்ணீரில் இரும்பு தாது அதிகமாகி விட்டது என்கிறது நீர்வள அமைச்சகம். அதுமட்டுமல்ல ஈயம், குரோமியம் , காட்மியம் போன்ற கனிமங்களால் தண்ணீர் மாசுபட்டிருக்கிறது என்று தனது அறிக்கையில் நீர்வள அமைச்சகம் மிரட்டுகிறது, உலக அளவில் பார்க்கும் போது கூட இந்தியாவின் நீர்வளம் பெருமை பட்டு கொள்வது போல் இல்லை. மோசமான நிலைதான் , உலக மக்கள் தொகையில் இந்தியாவின் மக்கள் தொகை பதினாறு சதவிகிதம், ஆனால் இந்தியாவின் நீர்வளம் வெறும் நான்கு சதவிகிதம் தான் , நிலத்தடி நீர் ஏற்கனவே குறைந்துவிட்டது தற்போது மேற்பரப்பு நீரும் குறைந்து விட்டது என்கிறார்கள் நீர்வள நிபுனர்கள் .

இப்படியே போனால் என்ன ஆகும்? நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. பொதுவாக, நிலத்தின் அடியில், நீர் அடுக்கு(water table)க்கு சற்று கீழே, சில நூறு அடிகளில் நிலத்தடி நீர் பொதிந்து கிடக்கிறது. இந்த நிலத்தடி நீரை அக்யூபர் (aquifer) என்று நீர்வள நிபுணர்கள் சொல்கிறார்கள். அதற்கு கீழே, ஒரு அடுக்குக்கு பிறகு, ஆழ்நிலை உப்புத் தண்ணீர் களம்(deep salty aquifer) உள்ளது. சில நூறு அடிகளில் இருக்கும் நிலத்தடி நீரை, நாம் முற்றிலுமாக இறைத்துவிட்டால், அந்த இடத்திற்கு ஆழ்நிலை உப்புத் தண்ணீர் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்த தண்ணீர் கடல் நீர் போலத்தான். இதனை நமது அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்துவது மிகவும் கடினம்.

மக்களுக்கு பாதுகாக்கபட்ட சுகாதாரமான குடிநீர் வழங்காமல் இந்தியா வல்லரசு என்று சொல்லி கொள்வது பெருமையான விஷயம் அல்ல.

அதிரை தென்றல் (Irfan Cmp)

துபாய் - ஓர் மந்திரச் சொல் ! 36

அதிரைநிருபர் பதிப்பகம் | March 24, 2012 | , , , , ,


துபாய் எனும் மந்திர வார்த்தையைக் கேட்டதும் சிறு வயதில் பலர் மத்தியில் மகிழ்ச்சி பொங்கும் . நான் படிக்கும் பருவத்தில் என்னுடைய தோழரும் மற்றுமொரு மாற்று மத தோழனும் வகுப்பைக் கட்டடிக்க முயற்சிக்கும் பொழுது வலுவாக மாட்டிக்கொண்டார்கள் அப்பொழுது அந்த ஆசிரியை அவர்களை கண்டிக்கும் பொழுது நம் சமுதாய தோழனைப் பார்த்து "நீயெல்லாம் உருப்படவே மாட்டே உனக்கு என்ன கவலை படிக்காமலே துபாய் பக்கம் போயிடுவே ஆனால் இவன் இங்கேயே நன்கு படித்து விட்டு பின்பு நல்லதொரு வேலையைத் தேட வேண்டும் என்றொரு கட்டாயத்தில் இருக்கிறான்" என்று ஆசிரியையே இப்படிச் சொல்லி பலரும் அதிர்ச்சியுற்றோம் (ஆசிரியரை மட்டும் நான் இங்கே தவறாகக் கூறவில்லை பெற்றோர்களுக்கும் பங்குண்டு)

ஐக்கிய அரபுக் குடியரசு எனப்படும் அமீரகக் கூட்டமைப்பிற்குள் ஒரு அங்கம்தான் துபாய். கடலில் மணலைக் கொட்டி, விரிந்த ஈச்சமர வடிவில் ஒரு தீவை உருவாக்கி, அதில் அடுக்கு மாடி ஆடம்பரக் குடியிருப்புகள்; இந்த உல்லாசத் தீவில் வீடு வாங்குவது ஒரு தனிச் சிறப்பான அந்தஸ்து என்ற மாயையில் உலக மகா கோடீசுவரர்கள் அதில் முதலீடு செய்யப் போட்டியிட்டனர். ஈச்சமர வடிவத் தீவுத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, “துபாய் வேர்ல்ட்” என்ற புதிய வீட்டுமனைத் திட்டத்தை துபாய் அரசு கொண்டு வந்தது. உலகப் பட வடிவில் உருவாக்கப்படும் இப்புதிய தீவில் அடுக்குமாடி ஆடம்பரக் குடியிருப்புகள் கட்ட, கட்டுமானக் கழகங்களும் நிதி நிறுவனங்களும் போட்டி போட்டன. 

ஏழு பெருநகர அமீராட்சியும் தனித்தனி பட்ஜெட்டும் கொண்டுள்ள ஐக்கிய அரபுக் குடியரசில் ராஸ் அல் கைமாஹ், அபுதாபியைப் போல துபாயில் எண்ணெய் வளம் இல்லை. பெட்ரோலியம் உறிஞ்சி எடுக்கப்பட்டு வற்றத் தொடங்கிவிட்டதால்.

புதிய சட்டம் தீட்டினார்கள் கைலி அணிந்து செல்வது குற்றம் மீறினால் அபராதம் வசூலிக்க படுமென்று. பாஜாரில் ஒரு பக்கம் கைலி அணிந்து மானத்தோடு போனால் மறு பக்கம் ஒரு சில பெண்கள் அரை ஆடையுடன் செல்கிறார்கள் எங்கே போய்விட்டது இஸ்லாமிய கலாச்சாரம் யாருக்கு விதிக்கப்படுகிறது அபராதம் பாவம் பிழைப்பிற்காக வந்தவர்களிடத்திலா? மிகவும் கண்டிக்கதக்கது 

புத்தாண்டு கொண்டாட்டங்களும் சீரழிவும் :

இசை,நடனம்,மது,உணவு,கேளிக்கைகளில் நடந்தேறும் அத்துமீறல்கள் என்று பண்பாட்டுக்கு ஒவ்வாத காரியங்கள் வருடந்தோறும் மிகை பட்டுக்கொண்டே இருகின்றது என்ற உண்மையை சமூக ஆர்வலர்கள் மிகவும் கவலையுடன் நோக்குகின்றனர்.

புத்தாண்டுகொண்டாட்டங்களை ஜரூராக ஏற்பாடு செய்து ஒரே இரவில் பணத்தை மூட்டை,மூட்டையாக அள்ளும் நிறுவனங்கள் தனியாக வருபவருக்கு ஒரு மாதிரிக்கட்டணம்,பெண்களுடன் வருபவருக்கு கட்டணசலுகை என்று ஆசை வலை விரித்து காலாச்சார பேரழிவுக்கு சிகப்புக்கம்பளம் விரிக்கின்றது என்பது அச்சபடவைக்கும் உண்மை.ஆண்களும்,பெண்களும் சேர்ந்து குடித்து ஆட்டம் போட்டு கேளிக்கை நடத்தி,இளையவர்களைக் கெடுக்கும் பாதைக்கு அழைத்து செல்லும் பாப் கலாச்சாரம் நாட்டில் நடக்கும் பயங்கரவாதத்தில் ஒன்று என்றால் மிகை ஆகாது.

இத்தகைய அந்நிய கலாச்சார சீரழிவு நம் நாட்டுக்கு வேண்டாம் .அது நாளைய மன்னர்களை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்ல வழிகோலாகிவிடும் என்று கதறும் கதறலை இந்த அமீரக மற்றும் இதர அரேபிய நாட்டு அரசாங்கம் வேடிக்கைப்பார்த்துகொண்டு வெறுமனே இருக்கின்றது.

புது வருட வினாடியை கொண்டாடுகிறோம் என்ற போர்வையில் குடித்துவிட்டு கேவலமான செயல்களை செய்யும் போது எங்கே போகிறது இந்த சமூகம் என என்ன வைக்கிறது"

இஸ்லாம் எனும் வாழ்வியல் கலாச்சாரத்தை-வாழ்க்கை நெறியை மக்கள் மனதில் புணரமைக்கும் வேலையை அவ்வப்போது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல இறைத்தூதர்கள் தம் மக்களிடம் செய்து வந்தனர். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு இறைத்தூதர் வந்தார். அப்படி வந்தோரில்... ஒரு 25 இறைத்தூதர்களைப்பற்றியும் அவர்களின் வரலாற்று சம்பவங்களையும் கற்பதன் வாயிலாக இக்கால மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக வேண்டி, திருக்குர்ஆன் மூலம் இறைவனால் நமக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.

திருக்குர்ஆன் குறிப்பிடும் அந்த 25 இறைத்தூதர்கள்... ஆதம், இத்ரீஸ், நூஹ், ஹூத், ஸாலிஹ், இபுராஹீம், லூத், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாஃகூப், யூஸுஃப், அய்யூப், ஷுஐப், மூஸா, ஹாரூண், யூனுஸ், தாவூத், சுலைமான், இல்யாஸ், துல்கிப்லு, அல்யஸவு, ஜக்கரியா, யஹ்யா, ஈஸா, முஹம்மத் (இவர்கள் அனைவர் மீதும் இறைவனின் ஸலாம் உண்டாவதாக) ஆகியோர்..!

இவர்கள் அனைவருக்கும் இறைவனால் அருளப்பட்ட வாழ்வியல் நெறி ஒன்றுதான் -ஒரேகலாச்சாரம்தான்- அது இஸ்லாம்..! இதைத்தான், இவர்கள் தம் மக்களுக்கும் போதித்து... தாமும் அதன்படியே வாழ்ந்தும் காட்டும்படி இறைவனால் கட்டளையிடப்பட்டு கண்கானிக்கப்பட்டார்கள்.

உலகில் மனித குலத்துக்கு எதிராக நாம் உருவாக்கி வைத்துள்ள நமது பல தீய கலாச்சாரங்களை மட்டும் ஒழித்து மக்களின் வாழ்வியல் நெறியை செம்மை படுத்திக் கொண்டிருக்கிறது இஸ்லாம். பிற மனிதற்கு நன்மை பயக்கும் நல்ல கலாச்சாரங்களை இஸ்லாம் என்றுமே எதிர்த்ததுமில்லை; அழித்ததுமில்லை. எனவே, நல்ல கலாச்சாரங்களை எவர் சொன்னாலும் எடுத்துக்கொள்வோம். நம்மிடம் இருக்கும் தீய கலாச்சாரங்களை விட்டொழிப்போம்.

ஆதலால், தீய கலாச்சாரங்களை தூக்கி தூர வீசி எறிந்து விட்டு நல்ல கலாச்சாரத்தை மட்டுமே நம் வாழ்வினில் கைக்கொள்வோம் ....இன்ஷா அல்லாஹ்...

- அதிரை தென்றல் (Irfan CMP)