Showing posts with label இருதய சிகிச்சை. Show all posts
Showing posts with label இருதய சிகிச்சை. Show all posts

இருதய சிகிச்சைக்காக உதவி நாடியவரின் - நன்றி [காணொளி] 2

அதிரைநிருபர் பதிப்பகம் | October 17, 2012 | , , ,

கடந்த 29.09.2012 அன்று இருதய சிகிச்சைக்கு உதவி வேண்டி பதிவு  அதிரைநிருபரில் சாகுல் ஹமீதுடைய வேண்டுகோள் காணொளியுடன் பதியப்பட்டது. இந்த பதிவு அதிரையின் மற்ற தளங்களிலும் மீள்பதிவு செய்யப்பட்டது.

இந்த மாதம் 7ம் தேதி அன்று (07.10.2012) இருதய நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர் சாகுல் ஹமீதுடன் அதிரைநிருபர் குழு சகோதரர்களும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் இளையராஜா அவர்களை சந்தித்து விபரம் கேட்டோம்.

சாகுல் ஹமீதிற்கு அறுவை சிகிச்சை தற்போதைக்கு செய்ய வேண்டிய கட்டாயமில்லை என்றும் ஆறு மாத காலம் கழித்து அவருக்கு eco test எடுத்து பார்த்த பிறகு அறுவை சிகிச்சை செய்வதா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்யலாம் என்றும் கூறினார். சாகுல் ஹமீதுக்கு மேலும் இரண்டு வகையான மாத்திரைகளை வழங்கியுள்ளார். அதிகாலை நடை பயிற்சி நன்றாக செய்ய வேண்டும், உணவு கட்டுப்பாடு மற்றும் மருந்துகள் சரியாக சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் ஆலோசனை கூறியுள்ளார்.

ஆறுமாதம் கழித்தோ அல்லது அதன் பிறகோ, சாகுல் ஹமீதுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யும் சூழல் உருவானால் தமிழாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக இலவசமாக ஆபரேசன் செய்ய எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று த.த.ஜ. மாவட்ட நிர்வாகியான சகோதரர் அன்வர் அலி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சகோதரர் சாகுல் ஹமீத்  தனக்கு இதுவரை பொருளாதர உதவி செய்தவர்களுக்கு தொடர்ந்து செய்து வருபவர்களுக்கும் காணொளி வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.



உதவி பெறப்பட்ட பணம் அவருடைய இருதய சிகிச்சை செலவுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று சகோதரர் சாகுல் ஹமீத் உறுதி அளித்துள்ளார். மேலும் தன்னுடைய அன்றாட செலவுகளுக்கும், மருந்து செலவுகளுக்கும்  தினமும் செய்து வரும் கொத்தனார் தொழிலிருந்தே செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவருக்காக பொருளாதார உதவி செய்த அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக!. சகோதரர் சாகுல் ஹமீத் பரிபூரண குணமடைய எல்லா வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

அதிரைநிருபர் குழு

இருதய சிகிச்சைக்காக உதவி நாடி… 3

அதிரைநிருபர் பதிப்பகம் | September 29, 2012 | , , , , ,


இதயம் என்றொரு பதமெடுத்து உணர்வுகளை காட்டவில்லையென்றால் இரக்கமற்றவன் என்று பின்னுக்குத் தள்ளப்படும் மனிதம், அதே இதயத்தை கருவாகக் கொண்டு காவியம் படைக்கிறான், கவிதை புனைகிறான், காதல், கோபம் கொள்கிறான, அது மட்டுமா மன்னிக்கவும் செய்கிறான்.

இங்கே, உதவி நாடி வேண்டுகோள் வைத்திருக்கும் நபரின் தற்போதைய உடல் ஆரோக்கியமும் அவரின் உருக்கமான வேண்டுகோளும் வாசகர்கள் முன்னால் வைக்க வேண்டிக் கொண்டதனால் இங்கே பதிகிறோம்.


படைத்தவனின் திருப் பொருத்தத்தை நாடி இயன்ற உதவிகளை அவருக்கென்று இருக்கும் வங்கி கணக்கிலோ அல்லது நேரடியாகவோ வழங்க வேண்டுகிறார்.

Bank name: India Bank, Account number: 6068577000, account holder name: K. Shahul Hameed (Mobile No. : +91 8220351291), இருப்பிடம்: கடற்கரை தெரு ஜமாத்திற்கு உட்பட்ட ஏறிப்புரக்கரையில் உள்ள குப்பம்.





குறிப்பு : அதிரைநிருபர் வலைத்தளம் நிதி உதவியென்று நேரடியாக எவ்வகை பரிந்துரையோ அல்லது நித்யுதவி வேண்டி வரும் வேண்டுகோளை பதிவதில்லை என்ற நிலைபாட்டில் தெளிவாக இருக்கிறது. இந்த வேண்டுகோளை வைத்த சாகுல் ஹமீத் என்பவரின் குடும்பச் சூழலை நேரில் ஆராய்ந்து பரிந்துரை செய்த சகோதரர்களின் வேண்டுகோளும், அவர்களின் ஆதரவு இவருக்கு இருப்பதை நினைவில் நிறுத்தி இதனை பதிந்திருக்கிறோம்.

அதிரைநிருபர் குழு