Showing posts with label வேண்டுகோள். Show all posts
Showing posts with label வேண்டுகோள். Show all posts

முக்கிய அறிவிப்பு ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | August 22, 2013 | , , , ,

அதிரை சகோதர சகோதரிகள் அனைவருக்கு ஓர் கணிவான வேண்டுகோள் !

அமெரிக்காவில் மரணம் தழுவிய சகோதரி முஃப்லிஹா (முஹம்மது இபுராஹீம் -மு.இ.- அவர்களின் மூத்த மகள்) அவர்களின் நல்லடக்கம் இன்று (21-08-2013) லிவர்மோர், கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. சகோதரர் மு.இ. அவர்களின் இரண்டாவது மகளின் உடல்நிலையில் நல்லதொரு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ். விரைவில் மு.இ.அவர்களின் இரண்டாவது மகள் குணமடைய அனைவரின் பிரார்த்தனையை வேண்டுகிறோம் இன்ஷா அல்லாஹ்!

உருக்கமான வேண்டுகோள் அவசியமற்ற யூகத்தினடிப்படையில் தகவல்களை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள், அவ்வாறு உங்களிடம் யாரும் தெரிவித்தால் அவர்களிடம் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ள அறிவுறுத்துங்கள். தவறான தகவல் பறிமாற்றங்களினால் குடும்பத்தினர் மிகவும் மன உளச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர் அவர்கள் இந்த பாதிப்பிலிருந்து மீண்டெழ அல்லாஹ்விடம் நாமும் துஆச் செய்வோம் இன்ஷா அல்லாஹ் !

இப்படிக்கு,

தமீம் அன்சாரி
கலிஃபோர்னியா

விரைவில் நலம்பெற பிரார்த்திக்க வேண்டுகிறோம் ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | July 16, 2013 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]

காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி பின்னர் உதவித் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்து சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்ற ஹாஜி M. முகம்மது அலியார் அவர்கள் கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவாக இருந்து வருகிறார்கள். ஆகவே அவர்கள் பூரண குணம் அடைந்து விரைவில் நலமடைய இப்புனித மிக்க ரமளான் மாதத்தில் நாம் அனைவரும் துஆச் செய்வோமாக!

இப்புனித மிக்க ரமளான் மாதத்தில் மனமுவந்து கேட்கப்படும் துவாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில் கொடையாளன். படைத்தவன் அல்லாஹ்விடம் நாமும் அவர்களின் நலனுக்காக பிரார்த்திப்போம் இன்ஷா அல்லாஹ் !

தகவல் : M. அப்துல் ஜலீல்
அமீரக கீழத்தெரு முஹல்லா தலைவர்

அதிரை மக்களுக்கு அன்பான வேண்டுகோள் ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | May 10, 2013 | , , , , , ,


அஸ்ஸலாமு அலைக்கும்.

நேற்று மாலை பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கந்தூரிக் கமிட்டியினருக்கும் தாருத் தவ்ஹீத் அமைப்பினருக்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் விபரங்கள் தொகுக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் தனிப்பதிவாக வரும்.

பேச்சுவார்த்தையின்போது, கந்தூரிக்குப் பொதுமக்கள் ஆதரவு பெருவாரியாக இருப்பதாகவும் எங்களைப் போன்ற நாலைந்து பேர்கள்தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் க.கமிட்டியின் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.

அது போலியானது என்பதை உணர்த்த கந்தூரியை எதிர்க்கும் ஒவ்வொருவருக்கும் அரிய வாய்ப்பு.

கீழ்க்காணும் மாதிரி மின்னஞ்சல் அல்லது உங்களுக்குத் தோன்றுவதை ஆங்கிலத்திலோ தமிழிலோ எழுதி,  மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிகளான

collrtnj@nic.in, மற்றும் spthanjavur@yahoo.com

எனும் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாதிரி:
______________

SUBJECT: REQUEST TO BAN KANDURI IN ADIRAMPATTINAM.

Dear Sir,

Kanduri is Un-Islamic. I register my protest for Kanduri which will take place on 11th May 2013 in Adirampattinam.

Thanks,
______________

கந்தூரியை வீழ்த்த வேண்டுமாயின் அதன் பொருளாதார வேரைப் பிடுங்க வேண்டும்.

(1) கந்தூரி என்பது ஹராம் என்று நம்புபவர்கள், கந்தூரி வசூல் எனக் கேட்டு யார் வந்தாலும் ஹலால் சம்பாத்தியப் பணத்தை ஹராமுக்குக் கொடுப்பதை ஹராமாக்கிக் கொள்ளவேண்டும்.

(2) மலிவு விலையில் சாமான் வாங்கப் போவதாகக் கந்தூரிக்குக் கடைக்குச் செல்வதற்குக் காரணம் கூறுபவர்களிடம், சற்றே விலை கூடுதலாக இருந்தாலும் வெளியில் வாங்கிக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்த வேண்டும்.

இந்த இரண்டிலும் நாம் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. ஈட்டியைச் சரியான இலக்குக்கு எறிந்தால் மட்டுமே இன்ஷா அல்லாஹ் வெற்றி கிட்டும்.

உறுதியுடன் முயல்வோம்; அல்லாஹ் துணை நிற்பான்.

ஜஸாக்கல்லாஹு கைரா!

SEC-ADT

இருதய சிகிச்சைக்காக உதவி நாடி… 3

அதிரைநிருபர் பதிப்பகம் | September 29, 2012 | , , , , ,


இதயம் என்றொரு பதமெடுத்து உணர்வுகளை காட்டவில்லையென்றால் இரக்கமற்றவன் என்று பின்னுக்குத் தள்ளப்படும் மனிதம், அதே இதயத்தை கருவாகக் கொண்டு காவியம் படைக்கிறான், கவிதை புனைகிறான், காதல், கோபம் கொள்கிறான, அது மட்டுமா மன்னிக்கவும் செய்கிறான்.

இங்கே, உதவி நாடி வேண்டுகோள் வைத்திருக்கும் நபரின் தற்போதைய உடல் ஆரோக்கியமும் அவரின் உருக்கமான வேண்டுகோளும் வாசகர்கள் முன்னால் வைக்க வேண்டிக் கொண்டதனால் இங்கே பதிகிறோம்.


படைத்தவனின் திருப் பொருத்தத்தை நாடி இயன்ற உதவிகளை அவருக்கென்று இருக்கும் வங்கி கணக்கிலோ அல்லது நேரடியாகவோ வழங்க வேண்டுகிறார்.

Bank name: India Bank, Account number: 6068577000, account holder name: K. Shahul Hameed (Mobile No. : +91 8220351291), இருப்பிடம்: கடற்கரை தெரு ஜமாத்திற்கு உட்பட்ட ஏறிப்புரக்கரையில் உள்ள குப்பம்.





குறிப்பு : அதிரைநிருபர் வலைத்தளம் நிதி உதவியென்று நேரடியாக எவ்வகை பரிந்துரையோ அல்லது நித்யுதவி வேண்டி வரும் வேண்டுகோளை பதிவதில்லை என்ற நிலைபாட்டில் தெளிவாக இருக்கிறது. இந்த வேண்டுகோளை வைத்த சாகுல் ஹமீத் என்பவரின் குடும்பச் சூழலை நேரில் ஆராய்ந்து பரிந்துரை செய்த சகோதரர்களின் வேண்டுகோளும், அவர்களின் ஆதரவு இவருக்கு இருப்பதை நினைவில் நிறுத்தி இதனை பதிந்திருக்கிறோம்.

அதிரைநிருபர் குழு

வேண்டுகோள் ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | November 14, 2011 | , , ,



"வா...வரையும் சரித்திரச் சித்திரம்" தொடரின் ஆசிரியர் 'வாவன்னா சார்' அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, தஞ்சை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.  அவர்கள் மேல் அன்பும் மரியாதையும் பாசமும் வைத்துள்ள சகோதரர்கள் அனைவரும், அவர்கள் விரைவில் நலம் பெற்றுத் திரும்பி வந்து, தமது எழுச்சியூட்டும் எழுத்துப் பணியைத் தொடர வேண்டி அல்லாஹ்விடம் இறைஞ்சுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

- அதிரை அஹ்மது

த.த.ஜ விற்கு ஒரு அவசர வேண்டுகோள்!

அதிரைநிருபர் | March 23, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்!.


கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் பொதுக்குழுவில் கலந்துக்கொள்ளவிருக்கும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அதன் தீவிர ஆதரவாளர்களுக்கும், சமுதாய நலனை முன்னெடுக்கும் நல்லுள்ளம் கொண்ட என் சகோதர சகோதரிகளுக்கும் சமுதாயத்தின் சார்பில் முக்கிய கோரிக்கை!

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடந்தேறிய காட்சிகள் எல்லாம் நாம் நன்கறிந்ததே!. எல்லோரும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின், சாதியின் நலனை மட்டுமே முன்னிறுத்தி, பேருந்தில் இடம் பிடிக்க துண்டைப் போடுவது போல் கூட்டணியில் இடம் கிடைத்தால் போதும் என்ற அக்கறையைத்தான் நாம் கண்டோம்!. கொள்கை, கோட்பாடுகள், பொதுநலம் அப்படி என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்குத்தான், அவரவர்கள் நடந்தார்கள். ஒவ்வொரு கட்சிகளும் தாங்கள் சார்ந்திருக்கும் சாதிகளையும், இனத்தை மட்டுமே, முன்னிலைப் படுத்தினார்கள். படுத்துகின்றார்கள்!.

சிறுபான்மை, முஸ்லிம்கள் என்ற கோஷங்கள் எல்லாம் தேர்தல் பிரசாரங்களில் மட்டுமே எதிரொலிக்கும். ஆனால் நம்மவர்களுக்கு தேர்தலில் நிற்க அவர்கள் ஒதுக்கி இருக்கும் இடங்கள் மிகவும் சொற்பமே!. அதிலும் பாட்டாளி மக்கள் கட்சி, மற்றும் கம்யூனிஸ்ட்கள் முஸ்லிம்களுக்கு ஒரு சீட் கூட ஒதுக்காமல் செய்துள்ள துரோகம் யாராலும் மன்னிக்க முடியாதது!. இந்த நிலையில்தான் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை நடத்துகின்றார்கள். முஸ்லிம்கள் சட்டமன்றத்திற்குள் நுழைந்து விடக்கூடாது என்று மிக எச்சரிக்கையுடன் இவர்கள் இம்முறையும் தங்களின் நிலைபாட்டை எடுத்துள்ளனர்.

வன்னியர்கள் வன்னியர்களுத்தான் ஆதரவு என்றும், தேவர்கள் தேவர்களுக்குத்தான் ஆதரவு என்றும், கொங்கு சாதியினர் அவர்களின் சாதிக்குத் தான் ஆதரவு என்ற நிலைபாட்டை எடுக்கும்போது, நாம் மட்டும்தான் யாருக்கு வேண்டுமானாலும் முஸ்லிம்களின் ஓட்டு என்ற நிலைபாட்டில் இருக்கின்றோம்.

மற்ற அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியை சார்ந்த முஸ்லிம்களுக்கே தேர்தலில் நிற்க இடம் கொடுக்காத நிலைதான் உள்ளது. எனவே முஸ்லிம்களின் வெற்றிடத்தினை நிரப்ப, தற்போது களத்தில் உள்ள இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றிபெற வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலையில் நாம் இப்போது உள்ளோம் என்பதையும் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்!.

முஸ்லிம்களின் பிரதி நிதித்துவத்தை, நமக்கு நாமே ஏற்படுத்தி கொள்ளும் சூழ்நிலையில் நாம் உள்ளோம். இதுபோன்ற கட்டாய நேரத்தில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் ஆதரவும் இந்த வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க தேவையுள்ளதையும் அனைத்து முஸ்லீம் சமுதாயம் நன்றியுடன் எதிர்பார்க்கின்றது.

மமக, எஸ்.டி.பி.ஐ இயக்கத்தினையும், ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி, தமீம் அன்சாரி, ஆகியோரை புறக்கணிக்கும் நோக்கில், இந்த சமுதாயத்திற்கு கிடைக்க இருக்கும் பிரதிநிதித்துவத்தினை தங்கள் இயக்கம் தடுக்க வேண்டாம் என்று இந்த பெரும்பாலான முஸ்லீம்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த இயக்கங்களின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க ததஜ வின் ஆதரவை இந்த சமுதாயம் எதிர்பார்க்கின்றது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 30க்கும் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் இந்த தேர்தலில், நாம் அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டிய மிக முக்கியமான சூழ்நிலையில் உள்ளோம். இது போன்ற எண்ணிக்கை மீண்டும் அமைவது சில நேரங்களில் சாத்தியப்படுமா என்பதும் சந்தேகமே!.

ஏதோ ஒரு சிலர் செய்யும் விசமத்தனத்தினால், ஒட்டு மொத்த இயக்கங்களையும் நாம் எதிரிகளாக பார்க்க வேண்டாம். நாதியற்று கிடக்கும் இந்த சமுதாயத்தை சீண்டிப்பார்க்க பலர் காத்து கிடக்கின்றனர். நாமும் தெரிந்தோ தெரியாமலோ நம் செயல்பாடுகளினால் அதற்கு உடன்பட்டு விடுகின்றோம். நம் சகோதர சண்டை, மன வேறுபாட்டை எல்லாம் காரணம் காட்டி இந்த தேர்தலில் ம.ம.க/எஸ்.டி.பி.ஐ மற்றும் பிற அரசியல் கட்சிகளின் முஸ்லிம் வேட்பாளர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்ய, முன்பு சேலத்தில் எடுத்திருக்கும் முடிவை சென்னையில் கூட உள்ள பொதுக்குழுவில் மறுபரிசீலனை செய்வீர்கள் என்று மனதார நம்புகின்றோம். யாருக்கு ஆதரவு என்ற நிலைபாட்டை எடுக்க தங்களின் இயக்கத்திற்கு முழு உரிமை உள்ளது என்றாலும், இது போன்ற கோரிக்கையையும் பரிசீலிப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது.

அரசியலில் அடிமைபட்டுக் கிடக்கும் இந்த சமுதாயம், அரசியலில் விழிப்புணர்வு ஏற்பட, நம் கோரிக்கையை நாமே நிறைவேற்றிக் கொள்ள, நம் பிரநிதித்துவம் சட்டமன்றங்கள் உட்பட அணைத்து அரசு மன்றங்களிலும் இன்றியமையாதது. எனவே அரசியலில் நிற்க மாட்டோம் என்ற முடிவையும் ததஜ இனி வரும் காலங்களின் சூழ்நிலையை மனதில் கொண்டு, அதையும் மறுபரிசீலனை செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

முஸ்லிம்களின் முன்னுரிமையே, என்னுரிமை! என்ற முழக்கத்துடன்.....

- அதிரை முஜீப்

Thanks: http://adiraimujeeb.blogspot.com/2011/03/blog-post_23.html


அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பானவர்களே, அதிரைநிருபர் மூத்த வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பதிவில் உள்ள பின்னூட்டங்கள் அனைத்தும் நம் சமுதாய ஒற்றுமை நலன் கருதி மறைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இணைந்திருங்கள்..
அதிரைநிருபர் குழு

கம்பன் விரைவு இரயில் மீண்டு வருமா? - வேண்டுகோள் ! 10

அதிரைநிருபர் | March 05, 2011 | , , ,

அன்பின் அதிரைச் சமுகமே !

விழித்தெழுவோம் ஒன்றுபடுவோம்... இது தனிமனிதனின் கோரிக்கையல்ல நம்மூர் உறவுகளின் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையை வென்றெடுக்கும் கோரிக்கை, கிடைத்திருக்கும் இந்த வலைப்பூக்களின் விரிவாக்கத்தினை கொண்டு திரண்டெழுவோம் ஒன்று திரளுவோம் கொட்டி கொட்டிக் கொடுக்கும் நமது அன்னியச் செலவாவனிக்கு நாம் தான் கேள்விகள் கேட்கவேண்டும்.

அதிரைச் சகோதரர் அப்துல் ரஜாக் (media CHASECOM Service P.Ltd.) இந்திய இறையான்மை வழங்கியிருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு மனுதாக்கல் செய்திருக்கிறார்கள் நிச்சயம் இவர்களின் மனுக்கு பதில் தந்தே ஆகவேண்டும் இதற்கு தென்னக ரயில்வே தப்பிக்க முடியாது.
இம்முயற்சிக்கு ஏதும் கைவிட்டுப் போகவில்லை, வெளிநாடுகளில் வாழும் அதிரைச் சமூக சகோதரர்களே, உங்களில் ஒன்றினைந்து அவரவர் வசிக்கும் நாடுகளில் இருக்கும் இந்தியத் தூரகத்திற்கு சென்று முறையாக அவர்களின் மூலமாக இந்திய தென்னக ரயில்வேயிக்கும், மத்திய இரயில்வே மந்திரிக்கும், தமிழக முதல்வருக்கும் தொடர்ந்து மனுக்களை அனுப்ப முயற்சிக்கவும்.

இங்கே கீழ் வைக்கப் பாட்டிருக்கும் கோரிக்கையால் தனிமனிதனோ அல்லது தனிப்பட்ட வர்க்கமோ பயனடையப்போவதில்லை, ஒவ்வொரு அதிரைப்பட்டினத்தில் வீடு வைத்திருக்கும் வெளிநாட்டுவாழ்  மற்றும்  வெளியூர்களில் வாழ்ந்து வரும் அதிரை சகோதரர்களின் நலன் கருதியே என்று களம் காண்போமே.... இன்ஷா அல்லாஹ்!

---------------
அஸ்ஸலாமு அலைக்கும்,

திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம் கடந்த 2011 - 2012 வரவு செலவு திட்டத்திலும் சேர்க்கப்படவில்லை என்பதை நாம் அறிந்ததே... தற்போதைய சூழ்நிலையை பார்த்தால் அடுத்த 3 ஆண்டுகளிலும் இதற்க்கான வாய்ப்பு தெரியவில்லை.இருந்த போதிலும் முயற்ச்சியை கை விட கூடாது, மேலும் உண்மை நிலவரத்தை அறியவும், ," தகவல் அறியும் உரிமை" ( Right to Information Act ) சட்டத்தின் கீழ் , ரயில்வே நிர்வாகத்திற்கு மனு எழுதி நேற்றைய தினதன்று அனுப்பியுள்ளோம்.. இதற்க்கான பதில் 45 நாட்காளில் பதிலை ரயில்வே நிர்வாகம் கொடுத்தாக வேண்டும்.அதன் அடிப்படையில் மேற்கொண்டு நம் முயற்சியை தொடருவோம்.

வெளி நாடுகளில் வசிக்கும் சகோதர்களுக்கு , சிறிய வேண்டுகோள் :

அங்குள்ள பொது அமைப்பின் மூலமாக, Ministry of Foriegn Affairs, Ministry of Railways, & Chief Minister of Tamil nadu இவர்களுக்கு நமது அகல ரயில் பாதை கோரிகையை அங்குள்ள EMABSSAY மூலமாக தொடர்ந்து அனுப்பிவைக்க வேண்டுகிறோம்..

ஓன்றுபட்டு முயற்சி செய்தால் இன்ஷா அல்லாஹ் நம் நல்ல சிந்தனைகள் செயல் வடிவம் பெரும்.

தங்கள் அன்புள்ள

ABDUL RAZAK
Media CHASECOM Services P.Ltd.
0091 - 44 - 42052222

இணைப்பு: தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கான மனுவின் நகல்




தேர்தல் நேரம் என்பதால் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம். ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளில் உள்ள அன்பு பாசமிகு உறவுகள் வந்து நம்மிடையே நம்பிக்கையூட்டும். மக்களே ஏமாறவேண்டாம். அன்னிய செலாவனியை அள்ளிகொடுக்கும் வெளிநாட்டு வாழ் அதிரைவாசிகளே இந்த கோரிக்கைக்கு வலு சேர்பதற்காக ஓர் இணையப் புரட்சியில் ஈடுபடுவது காலத்தின் கட்டாயம்.

கடந்த வருடம் அதிரையில் இரயில் மறியல் போராட்டம் நடைப்பெற ஏற்பாடுகள் அதிரைவாசிகளால் செய்யப்பட்டு சில அரசியல் சூழ்ச்சிகளால் முறியடிக்கப்பட்டது, இது தொடர்பான செய்தியை நம் அதிரைநிருபரி. வெளியிட்டோம், மீண்டும் இந்த சுட்டிக்கு சென்று பாருங்கள்.

சரி இனி பூனைக்கு யார் மணி கட்டுவது?

கட்டுவோம்.... இன்ஷா அல்லாஹ், இது  தொடர்பான பின்னூட்டங்களும், தொடர்ந்து வரும் ஆக்கங்களும் நிச்சயம் புனைக்கு மட்டுமல்ல புலிக்கும் மணிகட்டும்.

- அதிரைநிருபர் குழு

நன்றி; அதிரை போஸ்ட்

புகைப்படம்; சகோதரர் ஜாஹிர் ஹுசைன்

கம்பன் எக்ஸ்பிரஸ் வருமா? எழுதுங்கள் MLA வுக்கு கடிதம் 15

அதிரைநிருபர் | January 17, 2011 | , ,

அதிரை வாழ் பெரியவர்கள், வெளிநாட்டு வாழ் அதிரை வாசிகள் மற்றும் நண்பர்கள் கவனத்திற்கு,

"தமிழக ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற புதிய கூட்டணி அமையுமா?" என்ற தலைப்பிட்ட இன்றைய பதினேழாம் தேதியிட்ட தினமலரில் வெளியான செய்தி என் கவனத்தைக் கவர்ந்தது.

ஒப்புதலுக்கும், நிதி ஒதுக்கீட்டிற்கும் காத்திருக்கும் தமிழக ரயில்வே திட்டங்களில் திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம் முதல் திட்டமாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ரயில்வே பட்ஜெட் தாக்கலாகவிருப்பதால் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியும் அதிகாரிகளும் அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகவும், எதிர்வரும் தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் மேற்கு வங்க சட்ட சபை தேர்தல்களை கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என்ற கருத்து மத்திய மாநில அரசு வட்டாரங்களில் நிலவுவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மற்ற மாநில அரசியல் வாதிகளை முன்னுதாரணம் காட்டி நம்முடைய அரசியல் வாதிகளும் கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டால் அதிக அளவில் நிதி ஒதுக்கீடும், பெரும்பான்மையான திட்டங்களுக்கு ஒப்புதலும் பெற்றுவிடலாம் என குறிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நம் ஊர் மற்றும் அண்டை ஊர் தனவந்தர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் செல்வாக்குடையோர் முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் மீண்டும் அந்த முயற்சியை முடுக்கிவிட்டு முக்கிய அமைச்சர் பெருமக்களையும் செல்வாக்குடைய எதிர்க்கட்சி பிரமுகர்களையும் உரிய முறையில் சந்தித்து முறையிட்டால் நம் நீண்ட நாள் கனவு நிச்சயம் விரைவில் நிறைவேறும் என்பது என் துணிபு.

முடிந்தோர் முயற்சிப்பார்களா?

-- அபு பஜ்லு (செ.ஒ.மு.ஹுசைன்) , ஜித்தா.

புகைப்படம்: சகோதரர் ஜாஹிர் ஹுசைன்


குறிப்பு: பின்னூட்டமாக சகோதரர் M H ஜஹபர் சாதிக் அவர்கள் சொன்ன யோசனை மிக சரியானதாக இருந்ததால் நாம் அந்த பின்னூட்டத்தையும் இந்த ஆக்கத்துடன் பதிவு செய்து இந்த ஆக்கத்தின் தலைப்பையும் மாற்றிவிட்டோம். சகோதரர் அபுபஜ்லு அவர்கள் இதற்கு சம்மதம் தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம். இதை படிப்பவர்கள் அனைவரும் சகோதரர் ஜஹபர் சாதிக் அவர்கள் குறிப்பிட்டுள்ள MLAவின் மின்னஞ்சல் முகவரிக்கும் மற்ற அரசு மின்னஞ்சல் முகவரிக்கும் எல்லோரும் கோரிக்கை மடல் அனுப்ப வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  நல்ல கோரிக்கை மடலை நம் மூத்த சகோதரர்கள் யாராவது மாதிரியாக எழுதி பின்னூட்டமிட்டால் நாம் அனைவரும் தெளிவாக நம் கோரிக்கையை அனுப்ப ஏதுவாக இருக்கும்.

M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…  இன்ஸா அல்லாஹ் வரும்.இணயத்தின் மூலம் நம்மால்(தொலைவில் உள்ளவர்கள்) முடிந்தது MLA வுக்கு மெயில் அனுப்பலாமே! MLA eMail address. mlapattukkottai@tn.gov.in


-- அதிரைநிருபர் குழு.