Showing posts with label எதிர்ப்பு. Show all posts
Showing posts with label எதிர்ப்பு. Show all posts

கரை ஏறுங்கள் 'கறை' நீங்கும் ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | November 18, 2014 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய கடற்'கரை'த் தெரு சகோதரர்களுக்கு,

இப்படி ஒரு கடிதம் எழுத வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு.  இதன் விளைவு சாதகமா பாதகமா என்பதைப் பற்றி என்னால் கணிக்க முடியவில்லை. இருப்பினும், இனியும் தாமதித்தால் அதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சி என்னை வதைக்கும்.

நான் அதிரை வாசி.  கடற்'கரை'த்தெரு என் பிறப்பிடம். வளர்ந்தது படித்தது என்று என் சிறு பிராயத்து மற்றும் இளமைக் காலத்து சந்தோஷங்கள் எல்லாம் எனக்கு அள்ளித் தந்தது கடற்'கரை'த் தெருவின் பாரம்பர்யம் மிக்க வாழ்க்கை முறை. 

ஒரு பிரச்னை என்று வந்துவிட்டால் யாரையும் விட்டுக் கொடுக்காமல் ஒன்று சேர்ந்து கொள்ளும் ஒற்றுமை; யாரையும் ஏமாற்றத் தெரியாமல் உழைப்பைக் கொண்டு மட்டுமே உயரும் ஆண்மை மிக்க ஆண்கள்; புறத்து ஆண்களால் அதிகம் அறியப்படாத மார்க்கம் பேணும் பெண்கள், மொத்த தெருவும் ஒரே குடும்பம் என்னும் பாங்கினாலான அன்பு, பாசம், தோழமை. சகோதரத் தெருக்களுக்குத் தீய சக்திகளால் ஏதும் பிரச்னை என்றால் ஆதரவாக வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கும் துணிவு என்று மகிழ்ச்சியான சமூக அமைப்பு என்றுமே நம் தெருவை சிறப்பாகவும் வித்தியாசப்படுத்தியும் காட்டும். இத்தனை சிறப்பு வாய்ந்த நம் தெருவின் அவமானமாகச் சின்னமாக, பலரது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக வைத்திருக்கும் விஷயத்தைப்பற்றிதான் இக்கடிதம். 

என் சிறுபிராயத்தில் நம் தெருவில் எனக்கு மிகவும் பிடித்தவற்றில் முக்கியமானவை இரயில் நிலையம், கடற்'கரை', கஸ்டம்ஸ் கட்டடங்கள், உப்பளங்கள், ஏரி, ஏரியின் வடிகால்களான சிற்றோடைகள், குளங்கள், புளிய மர மேடைகள், பள்ளிவாசல் மற்றும் தர்ஹா. 

மற்ற விஷயங்களைப் பற்றி பிறிதொரு சமயத்தில் பேசலாம். ஏனெனில், இக்கடிதம் எழுதக் காரணமாக அமைந்த தர்ஹாவைப்பற்றி மட்டும் பேசவே இதை இந்தச் சமயத்தில் எழுதுகிறேன்.

சொல்வதற்கு சற்று மிகையே என்றாலும், அரேபியாவின் ஜாஹிலியாவைப் போன்றே என் வயதையொத்த பலரது அதிரை தினங்கள் கழிந்தன. என் பிள்ளைப்பிராயத்து நினைவுகள் என்றுமே என்னிடம் பசுமையாக நினைவில் நிற்கும்.  ஹந்தூரி காலம் வந்துவிட்டால் தெருவே கலை கட்டும்.  நம் தெருவுக்கு இது மூன்றாவது பெருநாளோ என்று சொல்லும் அளவுக்கு ஹந்தூரி ஏற்பாடுகள் மிக சிரத்தையாக மேற்கொள்ளப்படும்.  ஹந்தூரி படு விமர்சையாக அமைய வேண்டும் என்கிற ஆசை நம் தெரு வாசிகள் எல்லோர் நெஞ்சிலும் நிலைத்து இருக்கும். 

கொடிமரம் ஏற்றும் நாளிலிருந்து கூட்டு இரவு வரை நம் தெருவாசிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் அழ்ந்து போவார்கள்.  ஏதோ அல்லாஹ்வின் கட்டளையை இனிதே நிறைவேற்றிவிட்டதுபோல் திருப்தி மனதில் நிலவும். வாப்பா உம்மா மற்றும் உஸ்தாது கற்றுத் தந்த மார்க்கத்தில், வேறு எந்த மதத்திற்கும் குறைவில்லாத அளவுக்கு கேளிக்கைகளும் கூத்தும் கும்மாளமும் நம் தெருவில் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நடந்தேறும்.

எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை எனக்கும் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களாகத்தான் பட்டன. பெரியவர்கள் வழியைப் பின்பற்றுதலே இஸ்லாம் என்று மூளைச் சலவை செய்யப்பட்ட சந்ததியாகவே நாங்கள் வளர்க்கப்பட்டோம். காலங்கள் செல்லச் செல்ல் நான் வளர என்னோடு சேர்ந்த இயல்பாகவே அறிவும் வளர்ந்தது. மொழிபெயர்க்கப்பட்ட குர் ஆன், ஹதீஸ் தொகுப்புகள் வாசிக்கக் கிடைத்தன. ஏன் எதற்கு என்று கேள்விகள் பிறந்தன. எல்லாவற்றிலும் இணைவைப்பின் தீமை பற்றி மிக விளக்கமாகச் சொல்லப்பட்டிருந்தது.  தர்ஹா இணைவைப்பின் அடையாளம் என்பது விளங்கிற்று.  எனக்குத் தெரிந்ததை என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் சுலபமாக எத்தி வைத்து அவர்களிடம் மாற்றம் கொணற முடிந்தது. ஆனால், வயதில் மூத்தவர்களில் பலர் தர்ஹா கலாச்சாரத்திலிருந்து வெளிவர விரும்பவில்லை.  அதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட மார்க்க கிரியையாகவே கண்டனர்.  அதனால், அறியாமல் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.  கால ஓட்டத்தில் ஹந்தூரி தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வந்தாலும் இன்னும் முழுமையாக இல்லாமல் போகவில்லை.

பெருத்த வணிகமாகிவிட்ட நாகூர் அஜ்மீர் போன்ற தர்ஹாக்களை அனுகுவதே பெரும் சவாலாக இருக்கின்ற இக்காலகட்டத்தில் ஒரு சமுதாயச் சீர்திருத்தத்திற்கான புரட்சி வித்தாக நம் தெருவின் ஹந்தூரியை நடத்த விடாமல் நிறுத்த வேண்டும்.  முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் அதற்கு ஆதரவு கொடுக்காமல் எதிர்க்க வேண்டும்.  

என் சகோதரா,  ஹந்தூரி ஒரு இஸ்லாமியச் சமூகத்தின் கலாச்சாரச் சீர்கேடு என்பதை அறிந்து கொள். கேளிக்கைகளின்மீதான மனிதனின் இச்சையை வெளிப்படுத்தும் ஒரு அலங்கோலம் ஹந்தூரி. ஒரு சில சுயநலமிகளின் பொருளாதாரத் தேவைகளுக்காக நடத்தப்படும் நாடகம் ஹந்தூரி. நரக நெருப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் ஹந்தூரியிலிருந்து உன்னைக் காப்பாற்றிக்கொள்.

அவுலியாவிடம் உன் வேண்டுதல் – அது
முகவரி தவறிய கடிதமே
தீர்வுகள் வேண்டிய இறைஞ்சலை – நீ
தீர்ப்பவன் இடமே கேட்கவும்!

அன்புடன்,
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

கந்தூரிக்கு எதிர்ப்பு ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | December 05, 2013 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்றைய கால கட்டத்தில் அதிரையில் மூழ்கடிக்கப்பட வேண்டிய மூடப்பழக்க வழக்கங்களில் ஒன்றான கந்தூரிக் கோமாளிகளின் கூத்துக்களும் அவர்களால் அரங்கேற்றப்படும் அசிங்கங்களும் அழித்தொழிக்கப்பட வேண்டிய நிலையில் அவைகள் இன்றைய மீடியாக்களின் வாயிலாக கடந்த சில வருடங்களாக முதன்மை படுத்தப்படுகிறது !

இணைவைப்புக்கு கொடி நட்டு ஊர்வலம் நடத்தி நம் உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்களின் போதனையை கேவலப்படுத்தும் மூடர்களை முடக்கிப் போட முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, அதிரையில் பெரும்பாலான சகோதர சகோதரிகள் மனத்தளவில் வெறுத்து ஒதுக்கிய கந்தூரிகளை, வரட்டு கவுரவத்தை வானுயர தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு சிலரால் தொடரப்படுவது வேதனை மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதுமாகும்.

செவிடன் காதில் ஊதும் சங்காக மட்டும் இல்லாமல், அந்த செவிடர்களின் காதுகளை சரி செய்யும் வேலையை அதிரையில் வெகுண்டெழும் ஏகத்துவ எழுச்சிக்கு அல்லாஹ்வின் உதவியால் ஆரம்ப காலங்களில் வித்திட்ட 'அதிரை தாருத் தவ்ஹீத்' செய்து வருகிறது. வெறுமனே தூர நின்று எதிர்க்காமல், சந்திக்க மறுக்கும், சிந்திக்க மறுக்கும் அந்தக் கூட்டத்தை நாடிச் சென்று எதிர்ப்பை மட்டும் தெரிவிக்காமல் அவர்களுக்கு நல்லுபதேசமும் செய்து வருவதை வரவேற்கிறோம் !

அதிரை ஊடகங்களில் சகோதர வலைத்தளமான "அதிரை எக்பிரஸ்" மற்றும் இன்ன பிற தளங்களும் தங்களது எதிர்ப்பை பகிரங்கமாக வெளியிட்டதோடு மட்டுமல்லாது, கந்தூரி களியாட்டச் செய்திகள் எதனையும் பதிவதில்லை என்ற முடிவை மனதாரப் பாராட்டுகிறோம் வரவேற்கிறோம் !

அதிரைநிருபர் தளம் மட்டுமல்ல அதன் பங்களிப்பாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரும் இந்த எதிர்ப்பில் பங்கெடுக்கிறோம். கந்தூரி போதையிலிருந்து தெளிவடையும் வரை எமது எதிர்ப்பை தொடர்ந்து கொண்டிருப்போம் இன்ஷா அல்லாஹ் !

இவ்வகை கந்தூரி களியாட்டங்களை எதிர்த்து செயல்படும் அனைவருக்கும் எங்களின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பும் வழங்குவதோடு மட்டுமல்லாது தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருப்போம். 

செய்தி என்ற போர்வையில் இவ்வகை அனாச்சரங்களை பிரசுரித்து அவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களையும் அல்லது ஆதரிக்கும் அனைவரையும் கண்டிக்கிறோம், அவர்களும் தங்களது எதிர்ப்பை காட்ட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்.

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான். (4:116)

அல்லாஹ்வுக்கு நிகராக இணைவைப்பு செய்பவனுக்கு சொர்க்கம் விலக்கப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிந்தது என்றாலும், அந்த இணைவைப்புக்கு ஆக்கமும், ஊக்கமும், உற்சாகமும், ஆதரவும், பொருளுதவியும், செய்பவர்களுக்கு சொர்க்கம் மேற்சொன்ன விடயம் ஹலாலாகுமா ? என்பதை உங்கள் அனைவரின் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.

யா அல்லாஹ் ! கந்தூரி போன்ற கெடுகெட்ட அனாச்சாரங்களில் ஈடுபடும் அந்த மக்களை நேர்வழிப்படுத்துவாயாக.!

அதிரைநிருபர் பதிப்பகம்

அதிரை மக்களுக்கு அன்பான வேண்டுகோள் ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | May 10, 2013 | , , , , , ,


அஸ்ஸலாமு அலைக்கும்.

நேற்று மாலை பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கந்தூரிக் கமிட்டியினருக்கும் தாருத் தவ்ஹீத் அமைப்பினருக்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் விபரங்கள் தொகுக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் தனிப்பதிவாக வரும்.

பேச்சுவார்த்தையின்போது, கந்தூரிக்குப் பொதுமக்கள் ஆதரவு பெருவாரியாக இருப்பதாகவும் எங்களைப் போன்ற நாலைந்து பேர்கள்தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் க.கமிட்டியின் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.

அது போலியானது என்பதை உணர்த்த கந்தூரியை எதிர்க்கும் ஒவ்வொருவருக்கும் அரிய வாய்ப்பு.

கீழ்க்காணும் மாதிரி மின்னஞ்சல் அல்லது உங்களுக்குத் தோன்றுவதை ஆங்கிலத்திலோ தமிழிலோ எழுதி,  மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிகளான

collrtnj@nic.in, மற்றும் spthanjavur@yahoo.com

எனும் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாதிரி:
______________

SUBJECT: REQUEST TO BAN KANDURI IN ADIRAMPATTINAM.

Dear Sir,

Kanduri is Un-Islamic. I register my protest for Kanduri which will take place on 11th May 2013 in Adirampattinam.

Thanks,
______________

கந்தூரியை வீழ்த்த வேண்டுமாயின் அதன் பொருளாதார வேரைப் பிடுங்க வேண்டும்.

(1) கந்தூரி என்பது ஹராம் என்று நம்புபவர்கள், கந்தூரி வசூல் எனக் கேட்டு யார் வந்தாலும் ஹலால் சம்பாத்தியப் பணத்தை ஹராமுக்குக் கொடுப்பதை ஹராமாக்கிக் கொள்ளவேண்டும்.

(2) மலிவு விலையில் சாமான் வாங்கப் போவதாகக் கந்தூரிக்குக் கடைக்குச் செல்வதற்குக் காரணம் கூறுபவர்களிடம், சற்றே விலை கூடுதலாக இருந்தாலும் வெளியில் வாங்கிக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்த வேண்டும்.

இந்த இரண்டிலும் நாம் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. ஈட்டியைச் சரியான இலக்குக்கு எறிந்தால் மட்டுமே இன்ஷா அல்லாஹ் வெற்றி கிட்டும்.

உறுதியுடன் முயல்வோம்; அல்லாஹ் துணை நிற்பான்.

ஜஸாக்கல்லாஹு கைரா!

SEC-ADT

உயிரினும் மேலான....
محمد رسول الله - صلى الله عليه وسلم
25

அதிரைநிருபர் பதிப்பகம் | September 19, 2012 | , , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... !

உலகின் அருட்கொடை அன்னல் நபி(ஸல்) அவர்களைப் பற்றிய அவதூறான கட்டுக்கதைகளைக் கொண்டு திரைப்படமொன்றை எடுத்து உலக முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் ஈனப் பிறவிகளின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நமது உயிரினும் மேலான ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது அதிமதிகம் சலவாத் மொழிந்தருள்வோமாக இன்ஷா அல்லாஹ்.

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى  إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

 اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى  إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ
பொருள்: இறைவா! இப்றாஹீம்(அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப்போல், முஹம்மது அவர்களின் மீதும், முஹம்மது அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.
இறைவா இப்றாஹீம்(அலை) அவர்களுக்கும், இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் அவர்களுக்கும், முஹம்மத் அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.

(ஒரு தடவை) நபியவர்களிடம் ஸபியா (ரழி) இப்படி  இப்படி  என்று  அவரை உயரமற்றவர்  எனச் சொல்லிக்காட்டினேன். அதற்கவர்கள்  'நீங்கள்இப்பொழுது சொன்ன வார்த்தையை கடலில் கலந்தாலும் கடலை நாற்றமெடுக்கச் செய்து விடும்.என்று சொன்னார்கள்.  (ஒரு தடவை) நபியவர்களிடம்  ஒருவரின்  செயலை செய்து காட்டினேன்.  ஒருவரைப் போன்று செய்து காட்டுவது எவ்வளவுதான் எனக்குக் கிடைத்தாலும் நான் விரும்பமாட்டேன் என்றுசொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹுஅன்ஹா
ஆதாரம்:அபூதாவூத்-4875

மேலே குறிப்பிட்டுள்ள முக்கியமான இந்த ஹதீஸிலிருந்து நமக்கு இரண்டு விசயங்கள் தெளிவாக புரிந்துக்கொள்ள முடிகிறது.

1. ஒருவரை  இப்படிப்பட்டவர், அப்படிப்பட்டவர் (உயர்வானவர், குட்டையானவர்) என்று சொல்லிக் காட்டுவதை நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை.

2. ஒருவரின் செயலை, அது நற்செய்லாக இருந்தாலும் கூட அவரை போல் செய்து காட்டுவதையும் நபி (ஸல்) விரும்பவில்லை. மேலும் சொல்லப்போனால், எவ்வளவுதான் தனக்கு கிடைத்தாலும் அப்படி செய்துக் காட்டுவதை (நடித்துக் காட்டுவதை) விரும்பவில்லை என்று ஒரு படி மேல் சொல்லியுள்ளார்கள்.

ஒருவரின் நற்செயலை கூட நடித்துக் காட்டுவதை விரும்பாத நம் இறை தூதரை பற்றி இல்லாத கட்டுக்கதையை வைத்து சினிமா எடுத்து கேவலப்படுத்துவதை எந்தவொரு முஸ்லிமாலும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நபிகளாரை கேவலப்படுத்தியவனை அல்லாஹ் நிச்சயம் கேவலப்படுத்துவான்.


இறைவனின் பொருத்தத்தை நாடியவர்களாக என்றும்... இன்ஷா அல்லாஹ் !
அதிரைநிருபர் குழு மற்றும் வாசகர்கள்.