அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ் பெயரால்..
நேர்வழி பெற்றோர் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தி என்றென்றும் உண்டாகட்டுமாக!
"கேட்பவன் கேனப்பயலாக இருந்தால் எருமை மாடு ஏரோபிலேன் ஓட்டும்" என சொல்வார்கள் என்பது வழக்கு மொழி. நம் நட்டின் உளவுத் துறை இந்தியக் குடிமக்களை அவ்வாறு நினைத்துக் கொன்டதோ என்ற எண்ணமே இந்த செய்தியை வாசிக்கும் போது ஏற்பட்டது. எத்தனை முறை உதை வாங்கினாலும் அத்தனை முறையும் பிறரை அடித்துத் துவைத்தது போன்று பாவனை செய்யும் நகைச் சுவை நடிகளை மிஞ்சிய நடிப்பு மன்னர்கள் நம் உளவுத் துறை அதிகாரிகள். குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லையே என்று சொன்னவனுக்காவது கீழே விழுந்ததை ஒப்புக்கொண்டான். ஆனால் நம் உளவுத் துறை குப்புற விழவே இல்லை என்று சொல்லும் மகா யோக்கியர்கள்(?).
ஒவ்வொரு முறையும் கொத்துக் கொத்தாய், குழந்தைகள், பெண்கள், முதியவர் என்று ஏற்றத் தாழ்வின்றி கருவின் குழந்தையையும் கொடூரமாய்க் கொன்ற கூட்டு மனசாட்சிகள் ஒற்றை உயிரில் குளிர்ந்துவிடுமா?
2013 கடந்த பிப்ரவரி மாதம் ஆந்திர மாநிலம் தில்சுக் நகரில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம். இதில் சுமார் 17 பேர் இறந்தும் பலர் படுகாயமும் அடைந்தனர். மனித உயிர்களை வேட்டையாடும் இது போன்ற ஈனச் செயல் வன்மையான கன்டனத்துக்குறியது. அதன் உண்மைக் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால் ஒவ்வொரு குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னும் எது வருகிறதோ இல்லையோ இமெயில் மட்டும் தவறாமல் வரும். எங்கிருந்து தான் தேடிப்பிடித்து கொன்டு வருகிறார்களோ புதுப்புது பெயர்களை!? படைத்தவனே மிக்க அறிந்தவன். (பெயர் வைக்கத்தான் உளவுத்துறை என்றால் அப்படி ஒரு துறை அவசியமே இல்லை)
எப்போதும் போல்
இப்போதும் வரலாம்
முன் பின் இணைப்போடு
முஜாஹிதின் அமைப்பு –
என்று கவிக் காக்கா மாதிரி கவிதை எழுதலாம் என்று நினைத்துக் கொன்டிருக்க, கட்டுரை எழுத வைத்து விட்டது இச்செய்தி.
அனைத்து குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பின்னும் பாகிஸ்தானை மையமாக வைத்து இயங்கும் தீவிரவாத? அமைப்பு வழிய வந்து பொறுப்பேற்றுக் கொன்டது என்றும் அதில் பயிற்சி பெற்றவர்கள் என்று சில முஸ்லிம் இளஞர்களை கைது செய்து அவர்களுடைய வாழ்க்கையை நாசமாக்கியும் சாதனை? படைத்த உளவுத்துறை, காவல் துறை, ஊடகத்துறை என்று பல்வேறு பெயர்களில் இயங்கும் அனைத்தும் காவித்துறைகளே என்பதை தில்சுக் நகரில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திலும் நிறுபித்திருக்கிறது.
அழையா விருந்தாளியாய் வந்து முஜாஹிதின் அமைப்புகள் பொறுப்பேற்றுக் கொன்ட அனைத்திலும் சங்பரிவாரத்தின் பங்களிப்பு இருப்பது வெட்ட வெளிச்சமாக்கப்பட்ட பின்னும் ஈமெயில் வந்தால் மக்கள் காரித்துப்பிவிடுவார்கள் என்று ரூம் போட்டு யோசித்தார்கள் போலும்.
முதலிலே அத்வானி "ஹைதராபாத் குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருக்கிறது, சில பத்தாண்டுகளாக நம்முடன் யுத்தம் நடத்தி வெற்றியடையவில்லை. என்வே அது போலி யுத்தத்தை நடத்தி வருகிறது. இந்தியாவில் பிரச்சனைகளை ஏற்படுத்த தொடர்ந்து பயங்கரவாதச் செயல்களை செய்து வருகிறது "என திருவாய் மலர்ந்தார்" http://www.inneram.com/news/india-news/pakistan-behind-hyderabad-blasts-advani-9194.html
இரண்டாவது ஆந்திர மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டிக்கு லஸ்கர் எ தொய்பா விடமிருந்து நடந்த குண்டு வெடுப்புக்கு பொறுப்பேற்றும் மேலும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பேகம் பஜார், டெல்லி உள்ளிட்ட இடங்களில் குண்டு வெடிப்புகள் தொடரும் என்றும் மிரட்டல் கடிதம் வந்ததாம் (இவர் லஸ்கர் எ தொய்பாவோடு தொடர்பி லிருப்பதால் இவருக்கு கடிதம் அனுப்பப்பட் டிருக்கலாம்). சோலியங் குடும்பி சும்மா ஆடாது! http://www.inneram.com/news/india-news/lashkar-threat-letter-claims-responsibility-9232.html
அதைத் தொடர்ந்து ஸ்லீபர் செல் எனப்படும் இரகசியமாக செயல்படும் தீவிரவாதிகள் 200 பேர் ஆந்திராவில் ஊடுருவி இருக்கிரார்கள். இவர்களை இந்தியன் முஜாஹிதீன் போன்ற உலக நாடுகளிலுள்ள 10 தீவிரவாத அமைப்புகள் வழி நடத்துகிறது என்று உளவுத்துறை அதிர்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது என்றும், இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காவிட்டாலும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புதான் இதை செயல்படுத்தி இருக்க வேண்டும் என்று போலிஸ் விசாரனையில் தெரிய வந்துள்ளது என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் வறுமையில் வாடும் ஏழை இளைஞர்களைப் பாணத்தாசை காட்டி வேலை வாங்கித்தருவதாக துபாய் அழைத்துச் சென்று அங்கிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பி மூலைச் சலவை செய்து தீவிரவாத பயிற்சி கொடுத்து பின் அவர்கள் இந்தியா திரும்பி மக்களோடு மக்களாக இருந்து தலைமை சொல்லும் செயலை செயல்படுத்துவார்களாம். இத்தகைய பயிற்சிக்கு திருட்டுத்தனமாக குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் எல்லை வழியாகவு பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்கிறார்களாம் (எல்லைப் பாதுகாப்புப் படைகளெல்லாம் என்ன செய்கிறது என்று யாரும் கேட்கக் கூடாது). மேலும் வங்க தேசத்திலும் இத்தகைய பயிற்சி அளிக்கப்படுகிறதாம். கேட்பதற்கே பயமாக இர்ந்தாலும் துப்பாக்கி திரைப்படத்தை திரைக் கதை என்பதால் பயப்படத் தேவையில்லை.
இதில் பெரிய ஆச்சரியத்துக்குறியது என்னவென்றால் குண்டு வெடிப்பு சிதறல்களில் இருந்த துணியில் உருது எழுத்து எழுதி இருந்ததாம். அது நார் நாராய் கிழிந்திருந்ததால் என்ன எழுதியிருக்கிறது என்ரு தெரியவில்லையாம். இதன் மூலம் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு சதி இருப்பது உறுதியாகியுள்ளதாம் எத்தனை நகைப்புக்குறிய ஆய்வு என்பதை நாம் சொல்லித்தெறிய வேண்டியதில்லை. http://tamil.oneindia.in/news/2013/02/26/india-sleeper-cells-have-increased-hyderabad-say-police-170466.html
பாகிஸ்தான் தொடர்பு என பஜனை பாடுவதே முஸ்லிம்களைக் குறிவைக்கப் போடும் திட்டம் என்பதையே என்பதையே கடந்த கால நிகழ்வுகள் மெய்பித்திருக்கின்றன
வழக்கம்போல் சிலர் கைது செய்யப்பட்டு, இருக்கிறார்கள். உளவுத்துறையின் பரிந்துரையின் பெரில் சிறையிலிருக்கும் மதானியிடம் காவல் துறை விசாரனை நடத்தயிருக்கிறது. அனைத்து வகையான சித்திரவதைகளையும் அனுபவித்து சிறைக் கம்ம்பிகளுக்கிடையே வாழ்க்கை சீரழிந்த பின் அப்பாவிகள் அன விடுதலை செய்யப் படலாம், அல்லது கூட்டு மனசாட்சியைக் குளிர்விக்க காவு கொடுக்கப்படலாம் அப்சல் குருவைப் போல்!
...அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன். (அல்குர்'ஆன் 8:30)
அபு ஈஸா


