Showing posts with label abu easa. Show all posts
Showing posts with label abu easa. Show all posts

பாலியலுக்கு பலியாகாதே ! - தொடர் - 4 12

அதிரைநிருபர் பதிப்பகம் | May 06, 2013 | , , , , ,

கவனமாக இருங்கள்!

பாலியல் வன்முறைகளுக்கெதிராக என்னதான் மக்கள் ஆர்பரித்தெழுந்தாலும், நாடு தழுவிய போராட்டங்களை நடத்தினாலும், குழு அமைத்து ஆய்வு செய்தாலும், சட்டத்திருத்தம் கொண்டு வந்தாலும், ஆயுள் தன்டனை, ஆண்மை நீக்கம் என்று அரட்டிக் கொன்டாலும் அன்றாடம் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. மாறாக அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. சத்திய மார்க்கம் தளத்தில் வெளியான ஒரு கட்டுரையில், ஊடகங்களில் "இன்றைய வன்புணர்வுச் செய்திகள்" என்று தனிப்பக்கங்கள் ஒதுக்குமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது” என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார் KATKA கட்டுரையாளர். 

இந்தியாவின் தலை நகரான டெல்லி பாலியல் குற்றங்களுக்கும் தலை நகரமாக முன்னேற்றம் அடைந்துள்ளதை எண்ணி வருந்தாமல் இருக்க முடியாது. பாலியல் குற்றங்களுக்கு கலாச்சார சீர்கேடு ஒரு முக்கிய காரனமாக இருந்தாலும், மக்களின் கவனக்குறைவும் ஒரு முக்கிய காரனியாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

பாலியல் குற்றங்கள் பெரும்பாலும் அறிமுக மற்றவர்களால் நிகழ்த்தப் படுவதில்லை. மாறாக நன்கு அறிமுக மானவர்களாலேயே அரங்கேற்றப் படுகிறது. அறிமுக மற்றவர்களால் ஏற்படுத்தப்படும் பாலியல் குற்றங்கள் வெகு சொற்பமே. அது ஒரு சதவிகிதம் கூட இருக்காது என்பதை உறுதியாகச் சொல்லலாம். ஆனால் பெரும்பாலான பாலியல் குற்றங்கள் நெருங்கிய உறவினர்களால், அண்டை வீட்டினரால், நண்பர்கள், காதலர்கள், சகமாணவர்கள், சகபணியாளர்கள், மேலதிகாரிகள், முதலாளிகள் என அன்றாட வாழ்கையில் தொடர்புள்ளவர்களாலேயே அரங்கேற்றப் படுகிறது.

பெரும்பாலான பாலியல் குற்றங்கள் வழக்கு மன்றங்களுக்கு வருவதில்லை என்று புள்ளி விவரங்கள் தெறிவிக்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்களிருப்பினும் அறிமுகமானவர்களால் குற்றங்கள் இழைக்கப்படுவதும் ஒரு முக்கிய காரணமாகும். மேலும் அறிமுகமானவர்களால் இழைக்கப்படும் பாலியல் வன்முறைகள் நன்கு திட்டமிடப்பட்டே அரங்கேற்றப்படுவதால் அதிலிருந்து தப்பிப்பதும் முடியாமலாகிவிடுகிறது.

சமீபத்திய செய்தியிகளிலிருந்து சில உங்கள் சிந்தனைக்காக!

காதலர்கள் வீட்டிலிருந்து வெளியேறி கோவிலிலே தாளிகட்டிக்கொள்கிறார்கள். பிறகு பதிவுத்திருமனம் செய்துகொள்ளலாம் என்று காரில் ஏற்றி, குலிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து காரிலேயே தன் உறவினர்களோடு சேர்ந்து கற்பழித்திருக்கிறான் ஒரு கபோதி.

இரவில் குப்பைத்தொட்டியில் குழந்தை அழும் சப்தம் கேட்க, குழந்தை மீட்கப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. காலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் தன் மகளோடு சென்று குழந்தை எங்களுடையது தான் என்று கேட்க, எழுதி வாங்க்கிக்கொண்டு குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அங்கே காவல் நிலைய வியரனையில் அந்த தாய் சொன்ன செய்தி – இக்குழந்தை என் மகளுடையதுதான். பள்ளி விடுமுறையில் தன் அத்தை வீட்டுக்குச் சென்றிருந்தபோது அத்தை மகனோடு உறவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் குப்பையில் போட்டுவிட்டோம். 

9ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் கோவை மாவட்டம் ராமநாதபுரத்திலுள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறார். அங்குகிருந்த 59 வயதான அந்த மாணவியின் உறவினரும், அவருடைய நண்பரும் அந்த சிறுமியை சுமார் ஓராண்டு காலமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்துள்ளனர். அதனால் அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவே, அவர்களுடைய 70வயது நண்பரான, ஓய்வுபெற்ற மருத்துவரின் உதவியை நாடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த 70 வயதான மருத்துவரும், இன்னும் இருவரும் சேர்ந்து அந்த சிறுமிக்கு தொடர்ந்து வன்கொடுமை இழைத்துள்ளனர். அதனால், பாதிப்படைந்த சிறுமி கோவை மாநகராட்சி காவல் துறை ஆணையரிடம் புகாரளிக்கிறார். விசாரணையில் சிறுமியை மிரட்டியும், மயக்க மருந்து அளித்தும் அவர்கள் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. 

இப்படி ஏராளமான காட்டுகளை சுட்டிக் காட்டிக்கொண்டே இருக்கலாம். இதுபோன்ற வன்முறைகளில் பெறியவர்களும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும் பெரியவர்களின் இழப்பு அவர்களின் நடத்தையின் காரணமாக அவரவர்கள் தேடிக்கொள்வதே அதிகம். ஆனால் பாவம் குழந்தைகள் என்ன குற்றம் செய்தார்கள். இந்தக் காமுகர்களின் கழுக் கண்கள் அவர்களுக்கு விளங்குமா? இந்த அநியாயத்தை பாருங்கள்

டெல்லி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த 15-ம் தேதி வீட்டினருகே விளையாடிக்கொண்டிருந்தவள் காணாமல் போய் 17-ம் தேதி அச்சிறுமியின் வீட்டிற்குக் கீழுள்ள மற்றொரு வீட்டில் உடல் முழுதும் காயங்களுடன் கண்டுபிடிக்கப்படுகிறாள். கீழ் வீட்டுக்காரனின் மனைவி தாய்வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் அந்த மிருகம் இக்கொடுமையைச் செய்துள்ளதாக செய்திகள் தெறிவிக்கின்றன. 

இரண்டு நாள் அந்தக் காமுகனின் கொடுஞ்சிறையில் அந்த பிஞ்சு எத்துனை வேதனையை, இன்னல்களைச் சந்தித்திருக்கும். அந்தக் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும். காப்பாறுவோர் எவரும் உண்டா என்று அந்தப் பிள்ளை எவ்வளவு ஏங்கியிருக்கும். நினைக்கும் போதே உள்ளம் நடுங்குகிறது. பிறருடைய வேதனைகளை நாம் யூகிக்கத்தான் முடியும். உண்மையில் முழுமையாக உணரமுடியாது. ஆனால் சம்மந்தப்பட்டவர்கள் அதை உணரும்போது அவர்களின் உள்ளம் வெடித்துச் சிதறிவிடாதா?

இது போன்ற நிகழ்வுகள் தொடர்வது சட்டமும் ஒழுங்கும், குற்றவாளிகளைக் காப்பதற்கே, குடிமக்களைக் காப்பதற்கல்ல! என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகின்றன.

நம்மைக் காப்பாற்ற யாரும் வருவார்களென்று இருக்காமல் நம்மையும் நம்மைச் சுற்றியிருப்போரையும் நாம்தான் காக்க வேண்டும் என்று கவனமாக இருந்தால் இறையருளால் இயன்றவரை அனேக ஆபத்துக்களிலிருந்த்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். அரசாங்கம் சட்டம் இயற்றி நம்மை காப்புற்றும் என்று எண்ணியிருந்தால் ஏமாந்து போய்விடுவோம்.
  • நம்மைச் சுற்றி நடப்பதைக் கண்கானியுங்கள்!
  • பிள்ளைகள் அதிகநேரம் ஃபோனிலே பேசினால் விசாரியுங்கள்!
  • பிற வீடுகளுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாமல் பிள்ளைகளை அனுப்பாதீர்கள்!
  • கனவன் மனைவி மட்டும் (பெரிவர்கள் இல்லாமல்) இருக்கும் வீடுகளுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாமல் டியூசனுக்கு அனுப்பாதீர்கள்!
  • பருவப் பெண்களுக்கு சக பருவப் பெண்களையே பாதுகாப்பெனக் கருதாதீர்கள்!
  • வீட்டிற்கு வரும் உறவினர்களானாலும் கண்கானியுங்கள்!
  • மூத்த அன்னியப் பெண்களோடு பிள்ளைகள் பழகுவதற்கு அனுமதிக்காதீர்கள்!
  • பாலியல் தொல்லைகள் பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் உண்டு என்பதை அறிந்துகொள்ளுங்கள்!
  • கண் பார்வையிருந்து குழந்தைகள் சற்றே மறைந்தாலும் உடனே அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுங்கள்!
எத்துனைக் கோரச் சம்பவங்கள் நிகழ்ந்தாலும் வாசிப்போருக்கும், செவியேற்போருக்கும் செய்தி. ஆனால் பாதிப்புக்குள்ளானோருக்கு? சிந்தித்துணரும் மக்களுக்கு இதில் படிப்பினைகள் இருக்கின்றன. என்ன நடந்தாலும் அரசாங்கம் ஒன்றும் பெரிய தீர்வுகளைக் கொண்டுவரப்போவதில்லை. மக்களின் கோபத்தைக் குறைக்க ஒரு குழு அமைக்கும். தவிற பெரிய மாற்றங்கள் எதையும் கொண்டுவரப்போவதில்லை. கற்பழிப்புக் குற்றங்கள் இல்லாமலாக்க கற்பழிப்பு குற்றமில்லை என்று சட்டம் இயற்றச் சொல்லும் கோமாளிகளே பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

எல்லாம் வல்ல ஏக இறைவனான அல்லாஹ் நம் அனைவரையும் துற்பாக்கியங்களிலிருந்து தூரமாக்கி ஈருலக வாழ்வையும் அழகாக்கித் தருவானாக! மேலும் நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் நம்மை பாதுகாப்பானாக!

இன்ஷா அல்லாஹ் தொடரும்
அபு நூரா

மீண்டும் முஸ்லிம்களைக் குறிவைக்கும் காவித்துறைகள்! 11

அதிரைநிருபர் | March 07, 2013 | , , , ,

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ் பெயரால்..

நேர்வழி பெற்றோர் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தி என்றென்றும் உண்டாகட்டுமாக!

"கேட்பவன் கேனப்பயலாக இருந்தால் எருமை மாடு ஏரோபிலேன் ஓட்டும்" என சொல்வார்கள் என்பது வழக்கு மொழி. நம் நட்டின் உளவுத் துறை இந்தியக் குடிமக்களை அவ்வாறு நினைத்துக் கொன்டதோ என்ற எண்ணமே இந்த செய்தியை வாசிக்கும் போது ஏற்பட்டது. எத்தனை முறை உதை வாங்கினாலும் அத்தனை முறையும் பிறரை அடித்துத் துவைத்தது போன்று பாவனை செய்யும் நகைச் சுவை நடிகளை மிஞ்சிய நடிப்பு மன்னர்கள் நம் உளவுத் துறை அதிகாரிகள். குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லையே என்று சொன்னவனுக்காவது கீழே விழுந்ததை ஒப்புக்கொண்டான். ஆனால் நம் உளவுத் துறை குப்புற விழவே இல்லை என்று சொல்லும் மகா யோக்கியர்கள்(?).

ஒவ்வொரு முறையும் கொத்துக் கொத்தாய், குழந்தைகள், பெண்கள், முதியவர் என்று ஏற்றத் தாழ்வின்றி கருவின் குழந்தையையும் கொடூரமாய்க் கொன்ற கூட்டு மனசாட்சிகள் ஒற்றை உயிரில் குளிர்ந்துவிடுமா?

2013 கடந்த பிப்ரவரி மாதம் ஆந்திர மாநிலம் தில்சுக் நகரில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம். இதில் சுமார் 17 பேர் இறந்தும் பலர் படுகாயமும் அடைந்தனர். மனித உயிர்களை வேட்டையாடும் இது போன்ற ஈனச் செயல் வன்மையான கன்டனத்துக்குறியது. அதன் உண்மைக் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால் ஒவ்வொரு குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னும் எது வருகிறதோ இல்லையோ இமெயில் மட்டும் தவறாமல் வரும். எங்கிருந்து தான் தேடிப்பிடித்து கொன்டு வருகிறார்களோ புதுப்புது பெயர்களை!? படைத்தவனே மிக்க அறிந்தவன். (பெயர் வைக்கத்தான் உளவுத்துறை என்றால் அப்படி ஒரு துறை அவசியமே இல்லை)

எப்போதும் போல்
இப்போதும் வரலாம்
முன் பின் இணைப்போடு
முஜாஹிதின் அமைப்பு –

என்று கவிக் காக்கா மாதிரி கவிதை எழுதலாம் என்று நினைத்துக் கொன்டிருக்க, கட்டுரை எழுத வைத்து விட்டது இச்செய்தி.

அனைத்து குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பின்னும் பாகிஸ்தானை மையமாக வைத்து இயங்கும் தீவிரவாத? அமைப்பு வழிய வந்து பொறுப்பேற்றுக் கொன்டது என்றும் அதில் பயிற்சி பெற்றவர்கள் என்று சில முஸ்லிம் இளஞர்களை கைது செய்து அவர்களுடைய வாழ்க்கையை நாசமாக்கியும் சாதனை? படைத்த உளவுத்துறை, காவல் துறை, ஊடகத்துறை என்று பல்வேறு பெயர்களில் இயங்கும் அனைத்தும் காவித்துறைகளே என்பதை தில்சுக் நகரில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திலும் நிறுபித்திருக்கிறது.

அழையா விருந்தாளியாய் வந்து முஜாஹிதின் அமைப்புகள் பொறுப்பேற்றுக் கொன்ட அனைத்திலும் சங்பரிவாரத்தின் பங்களிப்பு இருப்பது வெட்ட வெளிச்சமாக்கப்பட்ட பின்னும் ஈமெயில் வந்தால் மக்கள் காரித்துப்பிவிடுவார்கள் என்று ரூம் போட்டு யோசித்தார்கள் போலும்.

முதலிலே அத்வானி "ஹைதராபாத் குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருக்கிறது, சில பத்தாண்டுகளாக நம்முடன் யுத்தம் நடத்தி வெற்றியடையவில்லை. என்வே அது போலி யுத்தத்தை நடத்தி வருகிறது. இந்தியாவில் பிரச்சனைகளை ஏற்படுத்த தொடர்ந்து பயங்கரவாதச் செயல்களை செய்து வருகிறது "என திருவாய் மலர்ந்தார்" http://www.inneram.com/news/india-news/pakistan-behind-hyderabad-blasts-advani-9194.html

இரண்டாவது ஆந்திர மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டிக்கு லஸ்கர் எ தொய்பா விடமிருந்து நடந்த குண்டு வெடுப்புக்கு பொறுப்பேற்றும் மேலும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பேகம் பஜார், டெல்லி உள்ளிட்ட இடங்களில் குண்டு வெடிப்புகள் தொடரும் என்றும் மிரட்டல் கடிதம் வந்ததாம் (இவர் லஸ்கர் எ தொய்பாவோடு தொடர்பி லிருப்பதால் இவருக்கு கடிதம் அனுப்பப்பட் டிருக்கலாம்). சோலியங் குடும்பி சும்மா ஆடாது! http://www.inneram.com/news/india-news/lashkar-threat-letter-claims-responsibility-9232.html

அதைத் தொடர்ந்து ஸ்லீபர் செல் எனப்படும் இரகசியமாக செயல்படும் தீவிரவாதிகள் 200 பேர் ஆந்திராவில் ஊடுருவி இருக்கிரார்கள். இவர்களை இந்தியன் முஜாஹிதீன் போன்ற உலக நாடுகளிலுள்ள 10 தீவிரவாத அமைப்புகள் வழி நடத்துகிறது என்று உளவுத்துறை அதிர்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது என்றும், இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காவிட்டாலும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புதான் இதை செயல்படுத்தி இருக்க வேண்டும் என்று போலிஸ் விசாரனையில் தெரிய வந்துள்ளது என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் வறுமையில் வாடும் ஏழை இளைஞர்களைப் பாணத்தாசை காட்டி வேலை வாங்கித்தருவதாக துபாய் அழைத்துச் சென்று அங்கிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பி மூலைச் சலவை செய்து தீவிரவாத பயிற்சி கொடுத்து பின் அவர்கள் இந்தியா திரும்பி மக்களோடு மக்களாக இருந்து தலைமை சொல்லும் செயலை செயல்படுத்துவார்களாம். இத்தகைய பயிற்சிக்கு திருட்டுத்தனமாக குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் எல்லை வழியாகவு பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்கிறார்களாம் (எல்லைப் பாதுகாப்புப் படைகளெல்லாம் என்ன செய்கிறது என்று யாரும் கேட்கக் கூடாது). மேலும் வங்க தேசத்திலும் இத்தகைய பயிற்சி அளிக்கப்படுகிறதாம். கேட்பதற்கே பயமாக இர்ந்தாலும் துப்பாக்கி திரைப்படத்தை திரைக் கதை என்பதால் பயப்படத் தேவையில்லை.

இதில் பெரிய ஆச்சரியத்துக்குறியது என்னவென்றால் குண்டு வெடிப்பு சிதறல்களில் இருந்த துணியில் உருது எழுத்து எழுதி இருந்ததாம். அது நார் நாராய் கிழிந்திருந்ததால் என்ன எழுதியிருக்கிறது என்ரு தெரியவில்லையாம். இதன் மூலம் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு சதி இருப்பது உறுதியாகியுள்ளதாம் எத்தனை நகைப்புக்குறிய ஆய்வு என்பதை நாம் சொல்லித்தெறிய வேண்டியதில்லை. http://tamil.oneindia.in/news/2013/02/26/india-sleeper-cells-have-increased-hyderabad-say-police-170466.html

பாகிஸ்தான் தொடர்பு என பஜனை பாடுவதே முஸ்லிம்களைக் குறிவைக்கப் போடும் திட்டம் என்பதையே என்பதையே கடந்த கால நிகழ்வுகள் மெய்பித்திருக்கின்றன

வழக்கம்போல் சிலர் கைது செய்யப்பட்டு, இருக்கிறார்கள். உளவுத்துறையின் பரிந்துரையின் பெரில் சிறையிலிருக்கும் மதானியிடம் காவல் துறை விசாரனை நடத்தயிருக்கிறது. அனைத்து வகையான சித்திரவதைகளையும் அனுபவித்து சிறைக் கம்ம்பிகளுக்கிடையே வாழ்க்கை சீரழிந்த பின் அப்பாவிகள் அன விடுதலை செய்யப் படலாம், அல்லது கூட்டு மனசாட்சியைக் குளிர்விக்க காவு கொடுக்கப்படலாம் அப்சல் குருவைப் போல்!

 ...அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன். (அல்குர்'ஆன் 8:30)

அபு ஈஸா

கலப்பட உணவு!? - கலக்கல்(!!?) காணொளி! 7

அதிரைநிருபர் | March 01, 2013 | , , , ,

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ் பெயரால்..


நேர்வழி பெற்றோர் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தி என்றென்றும் உண்டாகட்டுமாக!

கடந்த சில நாட்களுக்கு முன் ஐரோப்பிய நாடுகளில் மாட்டு இறைச்சி பர்கரிலும், நெஸ்ட்லே நிறுவனத்தின் தயாரிப்பான பாஸ்தாவிலும் குதிரை மாமிசம் கலந்திருந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இப்போது தென்னாப்பிரிக்க நாட்டில் உணவுப் பொருளில் கலப்படம் தொடர்பாக மேற்கொன்ட ஆய்விலும் மாட்டு இறைச்சி பர்கரில் எருமை மற்றும் கழுதையின் மாமிசம் கலந்திருந்த செய்தி பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றது. ஒவ்வொரு முஸ்லிமும் உணவுப் பொருட்களின் ஹராம் ஹலால் பேன வேண்டிய நிலையில் இச்செய்தி மிகவும் கவனிக்கத் தக்கதாகும்.

இலங்கையில் ஹலால் உணவுக்கு எதிராக புத்தர்களின் போராட்டம் முஸ்லிம்களை ஆன்மீக ரீதியாக பலகீனப்படுத்த யூத, கிறித்தவர்களின் சூழ்ச்சி பணத்திற்காக எதையும் செய்யத் துணிகின்ற நேர்மையற்ற வியாபாரிகள் என்று மனித நலனுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களின் இறை நம்பிக்கைக்கு எதிராகவும் பெரும்பான்மை உலகம் களம் இறங்கியிருக்க, நம்முடைய இறை நம்பிக்கையையும், ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்வது நம் ஒவ்வொருவர் மீதும் கடமை.

இறை மார்க்கமான இஸ்லாம் மனிதர்களுக்கு உண்ணத் தடை செய்தவற்றுள் தானாய் செத்ததும், இரத்தமும், இறைவன் பெயர் சொல்லி அறுக்கப்படாததும், பன்றியின் மாமிசமும், கழுதையும் அடக்கம்.

மாட்டுக் கறியோடு குதிரை, கழுதையின் கறியைக் கலந்தவர்கள் தானாய் செத்த கோழியையும், மாட்டையும், ஆட்டையும் எப்படி விற்பனை செய்யாமல் விடுவார்கள்?




கலப்படம் சோதனை மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஆனால் தானாய் செத்ததை பயன்படுத்தினால் எந்த சோதனையில் தெறிய வரும்?

இது போன்றவைகள் ஹலால் என்ற பெயரில் நமக்கும் விற்பனை செய்யப்படலாம். அதை வாங்கி நாமும் உட்கொள்ள நேரலாம்! அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

இது போன்ற நிலையில் அது நம் மீது குற்றமாகாது என்றாலும் கால நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு மேலை நாடுகளிலிருந்தும், நிராகரிப்பாளர்களிடமிருந்தும் வருகின்ற ஹராம், ஹலாலோடு தொடர்புடைய பொருட்களை தவிர்ப்பதே இறை நம்பிக்கைக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் ஷைத்தானின் அனைத்து சூழ்ச்சிகளிலிருந்தும் பாதுகாக்கப் போதுமானவன்.

அபு ஈசா
கலக்கல்(!!?) காணொளி !


அதிரைநிருபர் பதிப்பகம்