அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பான வாசக நேசங்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிரைநிருபர் கடந்த ஒன்றறை ஆண்டுகளுக்கும் மேலாக நம் சமுதாய மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவ்வப்போது விழிப்புணர்வு பதிவுகளை பகிர்ந்தளித்து வருவதை நன்கு அறிவீர்கள். இதில் ஏராளமான அதிரை நேசங்கள் மட்டுமல்லாது இன்னும் பிற ஊர்களிலிருந்தும், கடல்கடந்தும் இருக்கும் நேசங்களும் அதனைக் கொண்டு பயனடைந்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக அதிரைநிருபர் தினமும் இந்திய நேரம் இரவு 10:30 மணி முதல் 11:30 மணி வரை மார்க்க சொற்பொழிவு காணொளி நேரலை நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு கன்னி முயற்சிதான், இதனை முதல் சோதனை ஓட்டமாக செய்கிறோம். அல்லாஹ் நாடினால் இந்த சிறிய முயற்சி நாளடைவில் வளர்ந்திடவும் அதன் பணிகள் தொடர்ந்து தொய்வின்றி செய்திட முயற்சி செய்கிறோம். இன்ஷா அல்லாஹ் !.
முதல் முயற்சியாக இன்று (13.11.2011) இந்திய நேரம் இரவு 10:30 – 11:30 வரை, ஐக்கிய அரபு அமீரக நேரம் இரவு 09:00 – 10:00 வரை, சவுதி நேரம் 08:00 – 09:00 வரை நேரலை செய்யப்படும்.
முதல் நிகழ்ச்சியின் தலைப்பு : முன் மாதிரி இஸ்லாமிய குடும்பம்
உரை: முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி அவர்கள்
இதில் தமிழகம், இலங்கை மற்றும் உலகில் தமிழ் பேசும் நாடுகளிலிருந்து தலைச்சிறந்த மார்க்க சொற்பொழிவாளர்களின் காணொளிகள் தொடர்ந்து ஒரு மணி நேர நேரலையாக உங்களின் பார்வைக்கும் செவிக்கும் விருந்தாக்க உள்ளோம்.
நேரலை காணொளியில் இடம் பெரும் சொற்பொழிவுகள் அனைத்தும் குர்ஆன், ஹதீஸ் தொடர்பானவைகளாக மட்டுமே இருக்கும். எந்த ஒரு இயக்கத்தையோ அல்லது எந்த ஒரு தனி நபர்களையோ முன்னிருத்தியோ / சார்ந்ததாகவோ / எதிராகவோ இருக்காது என்பதை தெளிவாக அறிவிக்கிறோம். நம் சமுதாய மக்களுக்கு மார்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நன்நோக்கில் கையாளப்படும் இந்த சிறு முயற்சிக்கு அழைப்பு பணியில் அதிகமதிகம் ஈடுபடுத்தி வரும் நம் சகோதரர்கள் சிலர் மார்க்க சொற்பொழிவு குறுந்தகடுகளை அதிரைநிருபக்கு வழங்கிட முன்வந்துள்ளார்கள். இது பற்றிய முழு விபரங்கள் பின்னர் ஒரு பதிவில் வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ்.
மார்க்க சொற்பொழிவுகளின் நேரலையை அனைத்து மக்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பு ஒவ்வொரு இஸ்லாமிய ஊடகத்தின் கடமை என்பதை உணர்ந்த நாம் இந்த சிறு முயற்சியாக நேரலையை யார் வேண்டுமானாலும் தாராளமாக உரிமையுடன் பகிர்ந்துக்கொள்ளலாம்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் நுனுக்கங்களை கையாண்டு அதன் மூலம் இஸ்லாமிய அழைப்புப் பணியிலும் அதிரைநிருபர் வலைத்தளம் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள இருக்கும் இத்தருணத்தில் உங்கள் அனைவரின் மேலான கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து, எங்களின் நிறை குறைகளை சுட்டிக்காட்டி ஒத்துழைப்பையும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
-அதிரைநிருபர் குழு

