Showing posts with label பள்ளி. Show all posts
Showing posts with label பள்ளி. Show all posts

துபாய் கிரசண்ட் ஆங்கிலப் பள்ளியில் அதிரை மாணவி முதலிடம் ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | June 04, 2013 | , , , ,

அதிரை தரகர் தெரு மர்ஹூம் எஸ்.ஏ.ஜப்பார் (நிருபர்) அவர்களின் பேத்தியும், சகோதரர் ஜாகிர் ஹுசைன் அவர்களின் மகளுமான செல்வி அஃப்ரின் துபாய் அல் கிஸ்ஸசில் உள்ள கிரசண்ட் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்! நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 485/500 எடுத்து பள்ளியிலேயே  முதல் இடத்தைப் பிடித்துள்ளார் – அல்ஹம்துலில்லாஹ் !


மாணவி அஃப்ரின் அவர்களுக்கு அதிரைநிருபர் மற்றும் வாசகர்கள் சார்பாக நெஞ்சார்ந்த  வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இனிவர இருக்கும் மேல்நிலைப் பள்ளி தேர்விலும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துகிறோம் இன்ஷா அல்லாஹ்..!

தகவல் : ஜாகிர் ஹுசைன்
அதிரைநிருபர் பதிப்பகம்

MKN டிரஸ்டின் புதிய நிர்வாகிகள் நியமனம்! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | September 22, 2012 | , , , , , , ,


அதிரையின் பாரம்பரியமிக்க கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் MKN டிரஸ்டிற்கான புதிய உறுப்பினர்கள் நியமன நீதிமன்ற ஆணை, தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தினால் நேற்று (21-செப்-2012) அளிக்கப்படது. இதில் பின் வரும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

வம்சாவளி குடும்ப உறுப்பினர்கள்
1.   A. அப்துஸ் ஸுக்கூர்
2.    K.S. சரபுதீன்
3.   K. அப்துல் காதர்
4.   K. அப்துர் ரசூல்
5.   M. முஹம்மது இபுறாஹீம்
6.   A.J. அப்துல் ஜலீல்

வம்சாவளியல்லாத அதிரைக் காரர்கள்
7.   M.J. ஜஸி முஹம்மது
8.   M.A. அப்துல் ஜப்பார்
9.   H. முஹம்மது இப்றாஹீம்

மூன்று ஆண்டுக்கு ஒருமுறை MKN டிரஸ்டிற்கான உறுப்பினர்களின் தேர்வு தஞ்சை நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நியமனம் செய்யப்பட்டு வருவதை யாவரும் அறிந்ததே.

மேற்குறிப்பிட்டுள்ள 9 உறுப்பினர்கள் இன்று (22-செப்-2012) காலை, இடைக்கால தலைவர் மீ.மு. அப்துல் ஜப்பார் அவர்கள் தலைமையில் கூடி பின்வரும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தார்கள்.

A.அப்துஸ் ஸுக்கூர் அவர்கள் - தலைவர்
K.S. சரபுதீன் அவர்கள்  - செயலாளர்

நமதூரின் பாரம்பரியமிக்க மிகவும் பிரபலமான கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் சுழற்சி முறையில் மூன்று வருடத்திற்கு ஒரு முறை மாற்றப்பட்டு வருவதால் நிர்வாகத் திறனும், அதன் தொடர் முன்னேற்ற பணிகளும் பாதிப்படையப் போவது கல்வி நிறுவனங்களுக்கும் ஊர் மக்களும் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

புதிய நிர்வாகம் இறையச்சத்துடன் பாரம்பரியமிக்க கல்வி நிறுவனத்தின் மீது அக்கறையுடனும் கவலையுடன் ஊர் மக்களின் நலன் கருதி, காதர் முகைதீன் கல்லூரி, காதர் முஹைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளின் தரத்தினை மென்மேலும் உயர்த்த அயராது பாடுபடவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

அதிரைநிருபர் குழு