Showing posts with label AM. Show all posts
Showing posts with label AM. Show all posts

கண்கள் இரண்டும் - தொடர் - 13 26

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2013 | , , , ,


கண்ணில் நீர் அழுத்தம்

சிலருக்கு சில வண்ணங்களைப் பார்த்தறிய முடியாத நிறப்பார்வைக் குறைவு (Colour Blindness) இருக்கும். இக்குறைபாட்டை பின்வரும் மூன்று சோதனைகள் மூலம் கண்டறியலாம்.

ஹோம்கிரீன் நிறக்கம்பளச் சோதனை (Holm green wool Test)
இஷிகாரா பல வண்ண எண் அட்டை சோதனை
எட்ரிட்ஜ் விளக்குச் சோதனை (எட்ரிட்ஜ் விளக்குச் சோதனை (Edridge lantem Test)

இராணுவம், கடற்படை, வான்படை, காவல் துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புகளை விரும்புவோர்க்கு நிறப்பார்வை குறைபாடு ஒரு தகுதிக் குறைவாகும்.  
     
க்ளகோமா எனப்படும் கண்நீர் அழுத்த நோய்:      

'க்ளாக்கோமா' என்பது கண்ணின் பார்வை நரம்பைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்த கண் பிரச்னைகளின் தொகுப்பு. உலக அளவில், கண் பார்வை இழப்புக்கான காரணிகளில், 'க்ளாக்கோமா' இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 

நம் கண்ணின் முன்பகுதியில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம், சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக அதிகரிக்கும்போது ஏற்படும் பிரச்னை இது. கண்ணின் உள் நீர் அழுத்தமானது, பார்வை நரம்பினால் தாங்கக் கூடிய அளவை தாண்டும்போது, 'க்ளாக்கோமா’ ஏற்படுகிறது.  "ஆரம்பக்கட்ட நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சையை வழங்கினால், குணம் பெறலாம். ஆனால், படிப்படியாகவே இதன் பாதிப்பு ஏற்படுவதால், தங்களுக்கு இந்நோய் இருக்கிறது என்பதே தெரியாதவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் தான் மருத்துவர்கள் 'க்ளாக் கோமா'வை 'நமக்கே தெரியா மல் நம் கண்ணுக்குள் மறைந்திருந்து தாக்கும் கள்வன்' என்கிறார்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மரபுக் காரணங்களால், ஏற்கெனவே 'க்ளாக்கோமா’ நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த சொந்தங்களுக்கும், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் மற்றும் அதிக கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கும் 'க்ளாக்கோமா’ பாதிப்பு ஏற்படலாம். 

தலைவலி, கண்வலி, சிவந்த கண்கள், குமட்டல், பக்கவாட்டுப் பார்வை பாதிப்பு, படிப்படியான பார்வை இழப்பு போன்ற கண் பிரச்னைகள், 'க்ளாக்கோமா'வுக்கான அறிகுறிகள். பொதுவாக நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. 

அடிக்கடி கண் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள், கண்ணின் உட்பகுதிகளை முழுமை யாக அறியும் சில சிறப்புப் பரிசோதனையின் மூலம், 'க்ளாக்கோமா' பாதிப்பை அறியலாம். நோயின் படிநிலையைப் பொறுத்து சொட்டு மருந்தில் இருந்து அறுவை சிகிச்சை வரை இதற்கான சிகிச்சைகள் விரிகின்றன. எனவே, கண் மருத்துவருடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் பார்வையை பாதுகாக்க முடியும். 

நீரிழிவு விழித்திரை நோய்

பாரதம் நீரிழிவின் தலைநகரமாக உள்ளது. நீரிழிவின் தாக்கத்திற்குள்ளானவர்கள், வருடம் ஒரு முறை கண்டிப்பாக முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வதன்மூலம் நீரிழிவு விழித்திரை நோயினால் பார்வையை இழப்பதைத் தடுக்க முடியும். மேலும் பெற்றோர்களுக்கு அல்லது பெற்றோர்களில் யாரேனும் ஒருவருக்கு நீரிழிவு  இருக்குமேயானால், அவர்களது சந்ததியினர் தமது முப்பது வயது முதல்,  வருடம் ஒரு முறையேனும், தமக்கு நீரிழிவு பிரச்னையிருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மருத்துவர்கள் ஆலோசனைப்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் நீரிழிவு விழித்திரை நோய் உட்பட நீரிழிவு சார்ந்த உடல் நலப் பிரச்னைகளை தவிர்க்க வாய்ப்புள்ளது.

கண் பார்வையைப் பாதிக்கும் சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாதாரணமாக இருப்பதைவிட அதிகமாயிருப்பதுடன் , இரத்த குழாய்களில் பாதிப்பையும் ஏற்படுத்தும், இது பரம்பரை வியாதியும் ஆகும். பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பின் நாற்பது வயதுக்கு மேல் சர்க்கரை நோய் பாதிப்பும், கண் பார்வை பாதிப்பும் ஏற்படும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. சர்க்கரை நோய் இரு வகைப்படும்.

சிறுவயதிலேயே ஏற்படுவது
வயாதனவர்களுக்கு வருவது

சிறுவயதிலேயே ஏற்படும் சர்க்கரை நோய்க்கு இன்சுலின் கட்டாயம் தேவை.வயதானவர்களுக்கு வருவது- இவர்களுக்கு இன்சுலின் தேவையில்லை. இதை உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மாத்திரையின் உதவியால் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியும்.

அதிக்கப்படியான உடலுறவு, கொழுப்புச்சத்து உள்ளவர்கள், 40 வயது கடந்தவர்கள் , மது அருந்துவோர், ஆகியோருக்கு வர வாய்ப்புள்ளது, குழந்தைகளில் தட்டம்மை மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வர வாய்ப்புள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிக்கரிப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் மிகவும் அபாயம், குறிப்பாக பார்வை இழப்பு , நரம்புகள் பாதிப்பு, சிறுநீரகம் பாதிப்பு, இருதயம் பாதிப்பு, போன்ற பின்விளைவுகள் எவ்வித அறிகுறியும் இல்லாமலேயே ஏற்பட்டுவிடும். எப்பொழுதும் இரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு காலையில் சாப்பாட்டிற்கு முன் 120 கிராம்.

காலையில் சாப்பிட்ட 2 மணி நேரத்திற்குப்பிறகு 180 மி.கி இருப்பது இரத்தத்தின் அளவு சீராக இருப்பதை குறிக்கும் , நாம் சாப்பிடும் உணவிற்கேற்ப இரத்தத்தில் சர்கரையின் அளவில் மாற்றம் ஏற்படும் ஒருவரின் இரதத்ததில் சர்க்கரையின் அளவு 300மி.கி வரை எவ்வித அறிகுறியும். இல்லாமல் இருக்கலாம். மனித உடலில் சர்க்கரை என்பது கட்டுப்படுத்தலாமே ஒழிய பூரணமாக குணப்படுத்த முடியாது. சிலர் புகையிலை, சிகரெட் , மதுபானம் இவைகள் உபயோகிக்கும்பொழுது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சர்க்கரை பாதிப்புள்ளவர்கள் குறைந்தது 3 மாதத்திற்கு ஒருமுறை கண், சிறுநீரகம், இருதயம், நரம்புகள் இவற்றில் பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதித்து கொள்வது நல்லது. 

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, மாத்திரைகள் இவைகளை பயன்படுத்தி கட்டுப்படுத்த தவறினால் சர்க்கரை மிகவும் அதிகரித்த நிலையில் இரத்த குழாயில் பாதிப்பும் அடைப்பும் ஏற்பட்டும் மரணம் ஏற்படும் சூழல் உருவாகும், எனவே சர்க்கரை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துவது நமது கண்களின் பார்வையிழப்பை தடுத்திட உதவும். பார்வைக் குறைபாடு ஏற்பட்டால் இவ்வியாதி முற்றிய நிலையில் முழுமையாக குணப்படுத்த முடியாது. கண்ணில் ஏற்படும் ஒளித்திரை மாறுபாடுகளைத் தவிர சர்க்கரை நோயினால் கண்புரை, கண்ணில் நீர் அழுத்தம் அதிகரித்தல் ஆகியவை ஏற்படலாம். இவற்றையும் கண் மருத்துவர் பரிசோதித்து தக்க சிகிச்சை அளித்திடுவார்.

மாறுகண்

நமது கண்களில் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைநார்கள் உள்ளன. இவைகளின் உதவியால் இரு கண்களும் ஒரே சீராக ஒரே கோணத்தில் அசைகின்றன. நமது இரண்டு கண்களும் கீழ் நோக்கியோ, வலது புறமாகவோ, இடது புறமாகவோ, ஒன்று போல் அசைவதால் இரு கண்களின் பார்வையும் ஒன்றுபோல் அமைந்து, 

கண்ணால் பார்க்கப்படும் பொருளின் நீளம், அகலம் , உயரம் ஆகியவை பற்றி விவரமாக தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு இரு கண்களின்) பார்வையும் கண்ணாடி அணிந்தோ, அணியாமலோ ஓரே சீராக அமைந்திடல் வேண்டும். அப்போழுதுதான் இரு கண்களிலும் விழக்கூடிய பொருளின் பிம்பம் ஓரே சீராக பார்க்கப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டு மூளையின் பின்பகுதியில் உள்ள கார்டெக்ஸ் என்ற இடத்தில் பதிவு செய்யப்பட முடியும் இந்தச் செயல் சீராக அமையாவிட்டால் மாறுகண் ஏற்படுகிறது. மாறுகண் உள்ளவர்கள் பார்வை எங்கு விழுகிறது என்பதை சரியாக கூற முடியாது, பார்வை கண்ணுக்கு கண் மாறி இருப்பதால் இதனை மாறுகண் என்று கூறுகிறோம்

இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் பதிவில் கண்களில் ஏற்படும் கண்புரை நோய்கள் பற்றியும் அதன் பாதிப்புகள் பற்றியும் தொடர்கின்றன.

தொடரும்
அதிரை மன்சூர்

கண்கள் இரண்டும் - தொடர் - 12 7

அதிரைநிருபர் பதிப்பகம் | November 18, 2013 | , ,


கண்களில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க.

இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதிலும் இந்த வேலையில் தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதாக உள்ளது. இதனால் கண்கள் களைப்படைந்து, வறட்சி ஏற்பட்டு, சிவப்பு நிறமடைவது, எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. 

ஆகவே பலர் கண்களுக்கு மருந்துகளை விட்டுக் கொள்கின்றனர். இவ்வாறு மருந்துகளை விட்டுக் கொண்டால்,  சிலருக்கு கண்களில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவை நீங்காமல் இருப்பதோடு, அவை கண்களில் வறட்சியை இன்னும் அதிகரித்துவிடும். எனவே இத்தகைய பிரச்சனை இருந்தால், அப்போது கண்களுக்கு மருந்துகளைவிடாமல், ஒருசில இயற்கை முறைகளையும் பின்பற்றலாம். 

• கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலை தடுக்க சிறந்த வழியென்றால் அது குளிர்ந்த நீரால் கண்களை கழுவுவது தான். அதிலும் கம்ப்யூட்டர் மற்றும் டிவியை அதிக நேரம் பார்த்தால், கண்கள் சோர்வடைந்து விடுவதோடு, அதிலிருந்து வரும் கதிர்கள் கண்களில் வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். எனவே அவ்வப்போது கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.  

• நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் முன்பு உட்கார்ந்திருந்தால், அவ்வப்போது கண்களுக்கு சிறிது இடைவேளை கொடுக்க வேண்டும். முக்கியமாக அந்த இடைவேளையின் போது கண்களுக்கான உடற்பயிற்சியை செய்வதால், கண்களில் வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம். அதிலும் கண்களை அங்கும் இங்கும் சுழற்றுவது மிகவும் சிறந்தது. வேண்டுமெனில் சிறிது நேரம் கண்களை சிமிட்டுவது, மூடிக் கொள்வது என்று செய்யலாம்.

• கண்களில் ஏதேனும் சோர்வு, எரிச்சல், வறட்சி போன்றவை ஏற்பட்டால், கண்ளை ரிலாக்ஸ் செய்வதற்கு சிறிது கண்களுக்கு குளிர்ச்சியானது தேவைப்படுகிறது. எனவே கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும் வகையில் வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்தால் கண்களில் வறட்சி நீங்கி, புத்துணர்ச்சியடையும்.  

• கண்களின் வறட்சி மற்றும் அரிப்பை சரிசெய்ய ரோஸ் வாட்டரும் ஒரு சிறந்த பொருள். அதற்கு ரோஸ் வாட்டரை சிறிது கண்களில் விட வேண்டும். இதனால் கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, கண்கள் எப்போதும் வறட்சியின்றி இருக்கும்.

தலைவலி

இன்று சாதாரணமாக ஒரு பிரச்சனை என்றால் கூட பெரிய தலைவலியாய் இருக்கின்றது என்று சொல்வதைக் கேள்விப்படுகிறோம், ஆக தலைவலி என்றாலே பிரச்சனை என்பது தெளிவாகிறது. சாதாரண மக்கள் கூட அடிக்கடி தலைவலி வருகிறது என்றால் கண் டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து பாருங்கள் என்று சொல்லும் அளவுக்கு தலைவலி கண்ணோடு தொடர்புபடுத்தி பார்க்கும் அளவிற்கு பொதுமக்களின் அறிவுத்திறன் கூடியுள்ளது என்றால் , அது முற்றிலும் உண்மையே.

உடல் உறுப்புக்களை இயங்க செய்யும் மூளையின் இருப்பிடம் தலை, அதிலும் கண், காது மூக்கு, வாய் , பல் ஆகியன மூளையின் அருகில் இருப்பதாலும் இவற்றுள் கண் நுட்பமான உறுப்பாக இருப்பதால் அதில் நோய் ஏற்பட்டாலும் கண் நரம்புகளுக்கு கண் தசைகளுக்கும் சோர்வு ஏற்பட்டாலும் தலைவலி ஏற்படும். சிலருக்கு, படிக்கும் பொழுதும், எழுதும் பொழுதும் தலைவலிப்பதாகக் கூறுவர், இதற்குண்டான காரணம் அறியாமலேயே தானாக மருந்து கடைகளில் ‘வலி நிவாரணி’ மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு பின்னாளில் பல்வேறு எதிர் விளைவுகளுக்கு ஆட்பட்டு துயரப்படுவோரும் உண்டு. 

கண் மருத்துவரிடம் சென்றால் கண்களை முழுமையாக பரிசோதித்து உகந்த கண்ணாடி போட்டுக் கொள்ள அறிவுறுத்துவார், உரிய கண்ணாடி அணிய ஆரம்பத்தில் சில நாட்களிலேயே ‘தலைவலி’க்கு விடை கிடைத்து விடும். அடிக்கடி தலைவலி வருவோரின் பார்வை நரம்பு, மூளை, நோயினால் தாக்கப்பட்டிருகின்றதா என்பதைக் கண்ணின் உட்பகுதியில் பரிசோதிக்கும் கருவியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கண்ணைத் தொடர்பு படுத்தும் மூளை நரம்பில் வீக்கம் ஏற்பட்டிருந்தால் அவர்களை கண் மருத்துவர்கள் நரம்பு மருத்துவத்திற்கு அனுப்புவார்கள் இங்கு எடுக்கப்படும் X-RAY, MRI SCAN, CT SCAN ,ஆகிய பரிசோதனைகள் மூலம் வியாதியை கண்டறிய முடியும் , இதனை அறுவை மருத்துவம் மூலம் மூளையிலுள்ள கட்டி, இரத்த கறை போன்றவற்றை அகற்றி விடுவார்கள். அதனால் கண் பார்வையை இழக்காமல் கண்களைப் பாதுகாக்கலாம், தலைவலியும் நீங்கிவிடும். 

ஒற்றைத்தலைவலி என்பது சிலருக்கு அடிக்கடி வரும் , அவ்வாறு வரும்போதெல்லாம் அவர்கள் மரணவேதனையுடன் அவஸ்தைப்படுவதை பார்க்கலாம். இதற்கு காரணம் கண் நரம்பில் ஏற்படும் கோளாறே காரணம் அளவுக்கு மீறி வேலை (பாரப்பது, எழுதுவது, படிப்பது) இவைகளை இதுபோன்ற தலைவலி வருபவர்கள் கண்மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்ல பலனளிக்கும் 

அச்சம் , அருவருப்பு ஆகிய காட்சிகளைப் பார்ப்பதும் ஒயாத அலைச்சல், மனக்கவலை (TENSION), ஆகியவைகளிலும் சிலருக்கு தலைவலி, கண் சிவப்பாக மாறுதல், பார்வை மங்கலாதல், ஆகியவைகள் ஏற்படலாம் , இது போன்ற சமயங்களில் கண் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு சிலருக்கு உணவு மாற்றம் , ஒவ்வாமை போன்றவைகளாலும் தலைவலி ஏற்படும், சிலருக்கு மலச்சிக்கல் காரணமாகவும் தலைவலி ஏற்படும், பல்வலி, இரத்த கொதிப்பு உள்ளவர்கட்கும் சில வேளைகளில் தலைவலி ஏற்படும். தலைவலி என்பது எந்தச் சூழலில் ஏற்பட்டாலும் அதனால் கண்பார்வை நரம்புகள் பாதிக்ககூடும். எனவே அடிக்கடி தலைவலியால் பாதிக்கப் படுபவர்கள் உடனடியாக கண் மருத்துவரை சந்தித்து உரிய ஆலோசனையும், கண்ணாடி அணிய வேண்டியதிருப்பின் கண்ணாடியும் அணிவதன் மூலம் தலைவலியில் இருந்து பூர்ண விடுதலை பெறுவதுடன் கண்பார்வை பாதிப்பிலிருந்து விடுதலை கிடைக்கும்.

கண்கட்டி

குழந்தைகளுக்கு கண் இமைகளின் உட்புறத்தில் கொப்புளம், சிறுகட்டிகள் போன்ற கோளாறுகள் ஏற்படக்கூடும்.சாதாரனமாக இந்த மாதிரிப் பிரச்சனைகள் சத்துக் குறைவு காரணமாக ஏற்பட வாய்ப்புள்ளது. அதே சமயம் இதுபோன்ற குறைபாடுகள் காச நோய்க்கான அறிகுறிகளாகக் கூட இருக்கலாம். ஆகையால் இம்மாதிரிப் பிரச்சனைகள் ஏற்படும் பொழுது சாதாரண கட்டிதானே என்று இருந்து விடாமல் கண் மருத்துவரிடம் பரிசோதித்து காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும்.அடிக்கடி கண்கட்டி (அ) கண் இமைகளில் கொப்புளம் ஏற்படும் குந்தைகள் இனிப்பு வகைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. இவர்கள் பழரசம் , மீன் எண்ணெய் போன்றவைகளை முடிந்த வரை பயன்படுத்த வேண்டும்.சில குழந்தைகளுக்கு “பூச்சி வெட்டு” கண்களில் ஏற்படும் இதனை மக்கள் புழுவெட்டு என்றழைப்பர். இக்குறைபாடுள்ளவர்களின் கண்களில் முடி உதிர்வுகளும், உதிர்ந்த இடத்தில் புழுக்களும் தோன்றக்கூடும்.அதிகமாக காணப்படுகினற இவர்களுக்கு இமைகளின் ரோமங்கள் உதிர்ந்தார் போல் காட்சியளிக்கும்.

இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் தொடரில் கண்நீர் அழுத்த நோய் பற்றியும் கண் பார்வையைப் பாதிக்கும் சர்க்கரை நோய் பற்றியும் பார்க்க பின் தொடரலாம்
(தொடரும்)
அதிரைமன்சூர்

கண்கள் இரண்டு - தொடர் - 11 8

அதிரைநிருபர் பதிப்பகம் | November 11, 2013 | , , ,


கண்களின் பார்வை பாதிப்பு

இன்றைய விஞ்ஞான உலகில் கம்ப்யூட்டர் என்பது மனிதனின் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. கம்ப்யூட்டரில் கணிசமான நேரத்தை செலவிடுபவர்களுக்கு சில பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது இதை E-PAIN என்கிறோம். அவற்றால் கீழ்கண்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

கண்களில் வலி, கண் சிவத்தல், கண்களில் நீர் வடிதல், தலைவலி, கழுத்து வலி, முதுகு வலி, கண்களில் எரிச்சல், பார்வையில் குழப்பம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படக் காரணங்கள். கண்களுக்கும் கம்ப்யூட்டர் திரைக்கும் உள்ள குறுகிய இடைவெளி மற்றும் நெடுநேரம் திரையை பார்த்து கொண்டிருத்தல். நெடுநேரம் கண்களை இமைக்காமல் பார்வையை செலுத்துதலே ஆகும்

ஒரு நிமிடத்திற்கு குறைந்த பட்சம் 18 முறை (இமைக்காமல்) மூடி திறக்க வேண்டும், அப்பொழுதுதான் கருவிழி ஈரமாக இருக்கும். மேலே கண்ட குறைபாடுகளில் இருந்து கண்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள். கம்ப்யூட்டரின் திரைக்கும் நமது கண்களுக்கும் இடையிலான தூரம் 2 (அல்லது) 3 அடி தூரம் இருக்க வேண்டும். குறைந்தது 10 நிமிடத்திற்கு ஒரு முறை கண்பார்வை மாற்றி பிறகு தொடரலாம்.  அரை மணிக்கு ஒரு முறை மற்றும் மணிக்கு ஓரு முறை கண்ணிற்கு ஓரிரு நிமிடம் ஓய்வு கொடுப்பது நல்லது. கண்களை அடிகடி மூடித்திறப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். 

ஆக கம்ப்யூட்டர் உபயோகிப்பவர்கள் எந்த துறையில் பணி புரிந்தாலும் சரி, வேலை நேரம், நம் கவணமெல்லாம் அந்த வேளையில் இருப்பதால் கண்ணை நன்கு திறந்தபடியே பார்த்துக் கொண்டே கண் இமைக்க மறந்து விடுகின்றோம் அப்படியில்லாமல் முந்தைய பத்தியில் மேற்கோள் காட்டப்பட்ட விஷயங்களை சரிவர கடைபிடித்தாலே கம்ப்யூட்டர் பார்ப்பதினால் ஏற்படும் கண் பாதிப்புகளை தவிர்திடலாம். 

கண்களுக்கு உண்டான கடமையை நாம் சரிவர செய்ய வேண்டும். சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுந்திருக்க வேண்டும். அதிகமான தூக்கமும் சோம்பேரித் தனத்தை உண்டாக்கும்.  சரியாக தூங்கவில்லை என்றாலும் கண்களுக்கும் மூலைக்கும் சோர்வு ஏற்பட்டு அதன் இயக்கத்தில் மாறுதல்கள் ஏற்படுவதினால் உடல் ரீதியாக பல பிரச்சினைகள் உண்டாகும். சராசரி மனிதர்கள் 6 மணி முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். இதைவிட கூடுதலாகவும் குறைவாகவும் தூங்கக் கூடாது. இதனால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் உருவாகின்றன. 

கண் நோய்கள்

10 வயது தாண்டுவதற்கு முன்பே கண் பார்வைக் கோளாறுகள் வருகின்றன. இதற்குக் குழந்தைகளைப் பெற்று எடுக்கும் தாய் _தந்தையரே முதற்காரணம். அடுத்து சத்துக் குறைவான உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவது, கண் கோளாறு வரத் துவங்கி விட்டால் அதை உடனே தகுந்த மருத்துவரை நாடாமல் அலட்சியமாக விட்டு விடுவது, அதிக நாட்களுக்குத் தொடர்ந்து கண் சம்பந்தமான நோய்களை கவனிக்காமல் இருந்து விட்டு நோய் முற்றிய பின்னரே கடைசியாக மருத்துவரை நாடுவது இப்படி பல்வேறு காரணங்களினால் கண் சம்பந்தமாக பல வகையான நோய்கள் வருகின்றன.

முக்கியமாக வரக்கூடிய கண் சம்பந்தமான நோய்கள்

கிட்டப் பார்வை, தூரப் பார்வை, பார்வை மந்தம், கண்ணில் சதை வளர்தல், கண்ணில் பூவிழுதல், கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தம் உறைதல் காரணமாகப் பார்க்கின்ற பொருட்கள் கலங்களாகத் தெரிதல், கண்ணில் நீர்வடிதல், மாலைக் கண், வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை, கண் கோளாறு தொடர்ந்து இருப்பதால், அதன் மூலமாக வரும் தலைவலி, தொற்று நோய்க் கிருமிகள் மூலம் வரும் கண் நோய், மஞ்சள் காமாலை மூலமாக வரும் நோய், கண் கோளாறு மூலமாக தூக்கமின்மை, வெள்ளெழுத்து என்னும் கண் பார்வைக் குறைவு இப்படி அடுக்கிக் 
கொண்டே போகலாம். 

கண்ணில் நோய் வரக் காரணமென்ன?

ஆரோக்கிய குறைவுகளுடன் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெற்றோர் அதற்கான காரணம். சத்துக் குறைவான உணவுகளை சாப்பிடுவதாலும் வருகின்றன. கல்லீரல் பாதிக்கப்பட்டாலும் கண் நோய்கள் வரும். உதாரணத்திற்கு ஜாண்டீஸ் அதாவது மஞ்சள் காமாலை நோய் வரும் போது அது முதலில் கல்லீரலைத்தான் தாக்குகின்றது கல்லீரல் தாக்கப்படும் பொழுது அதனுடைய  தாக்கம் கண்களில் தெரியும் முதலில் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும், அதற்கு பிறகுதான் மற்ற உறுப்புக்களை பாதிக்கும், ஆதலால் டக்டர்கள் முதலில் கண்ணைத்தான் பரிசோதிப்பார்கள்.

நரம்பில் ஏற்படும் இரத்தக் குறைவு, இரத்த ஓட்டம் தடைபடுதல், இரத்த அழுத்தம் குறைவு காரணமாகவும் கண்கோளாறுகள் வருகின்றன. பரம்பரைத் தொடர் காரணமாகவும் கண் கோளாறுகள் வருகின்றன. தொற்று நோய்க் கிருமிகள், காற்றில் வருகின்ற கிருமிகள், தூசி, தீ போன்றவற்றாலும் லெட் லைட், லேசர் லைட் போன்ற ஒளிக் கற்றைகள் போன்றவகளினால் கண் நோய்கள் வருகின்றன.

நாம் வாழும் சூழ்நிலை மாசு பட்டதாகவும், தூசு நிறைந்ததாகவும், நச்சுப் புகையுள்ளதாகவும், பசுமையற்றதாகவும் இருக்கும் போது விழித்திருக்கும் கண்கள் அவற்றால் தாக்க மடைந்து பார்வை பாதிப்படைகின்றது.  

நாம் செய்யும் தொழிலும் சில சமயங்களில் கண் பார்வையை கெடுத்து விடுகின்றது. அதிக நேரம் கணினி பாவித்தல், தொழிற்சாலைகளில் தெறித்து வரும் உலோகத் துண்டுகளின்  தாக்கங்களும், இரசாயன வாயுக்கள் கலந்த காற்றும் கண் பார்வையை கெடுத்து விடுகின்றன. அந்த சந்தர்ப்பங்களில் தவறாது பாதுகாப்பு கவசம் அணிதல் வேண்டும். இவை மட்டுமல்லாது நாம் அன்றாடம் கண்களை அழகுபடுத்த பாவிக்கும் இரசாயன திரவியங்களும் தரக்குறைவாலும், அவைகளை தவறான பாவனையாலும், கண்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தரமானவைகளை முறைப்படி பாவித்தால் கெடுதி குறைவாக இருக்கலாம்.

சிலருக்கு தூரத்தில் இருக்கும் எழுத்துக்கள் தெளிவாக தெரியும். ஆனால், புத்தகத்தை எடுத்தால் அவற்றில் உள்ள எழுத்துக்கள் மங்கலாக தெரியும். வேறு சிலரோ புத்தகங்களை, மூக்குக் கண்ணாடியின் உதவியின்றி சாதாரணமாகப் படிப்பார்கள். ஆனால், தூரத்தில் பேருந்து வரும்போது "அது என்ன பஸ்? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க" என்று பக்கத்தில் நிற்பவரிடம் கேட்டுத் தெளிவு பெறவேண்டிய கட்டாயத்திலிருப்பார்கள். 

சிலர் மூக்குக்கண்ணாடி அணிந்திருப்பார்கள். இவர்களால் புத்தகத்தையும் எளிதில் படிக்க முடியும். தூரத்தில் உள்ள எழுத்துக்களையும் நன்கு வாசிக்க முடியும். ஆனால் கணினித் திரையில் மின்னும் எழுத்துக்கள் மட்டும் இவர்களுக்குத் தெளிவாகத் தெரியாது. இதற்கென்றே (இந்த அளவு தூரத்தைத் துல்லியமாக பார்ப்பதற்கென்றே) தனி பவர் கொண்ட கண்ணாடிகளை கண் மருத்துவர் பரிந்துரைப்பார். அதை வாங்கி அணிந்து கொண்டால் பிரச்சினை தீர்ந்துவிடும்.  

கணினி தொடர்பான கண்கள் குறைபாடுகள் கொஞ்சம் வேறுபட்டவை. பொதுவாக கணினித் திரையை நீண்ட நேரம் பார்ப்பதால் கண்பார்வை பாதிக்கப்படுவதில்லை. ஆனால் கண்களுக்குக் களைப்பு ஏற்படுகிறது.

சிலருக்கு கணினியைத் தொடர்ந்து பார்ப்பதால் கண்கள் ஈரத்தன்மையை இழந்து உலர்ந்து விடுகின்றன. இதற்கும் நேரடியான காரணம் கணினி அல்ல. தொடர்ந்து கணினித் திரையை பார்க்கும்போது, நாம் வழக்கமான வேகத்தில் கண்களை சிமிட்ட மறந்து விடுகிறோம். இதன் காரணமாகத்தான் ஏற்கெனவே கொஞ்சம் உலர்ந்த கண்கள் கொண்டவர்களுக்கு அந்த சிக்கல் பெரிதாகிறது. இதற்காக சில சொட்டு மருந்துகள் விற்கின்றன. மருத்துவரின் ஆலோசனையையும் கேட்டுக்கொண்டு இவற்றை பயன்படுத்தலாம்.

பொதுவாக கணினியைப் பயன்படுத்துபவர்கள் கீழே உள்ள ஆலோசனைகளைக் கடைப்பிடித்தால் கண்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கலாம்.

* கணினியின் முன் உட்கார்ந்திருக்கும்போது அடிக்கடி கண்களை சிமிட்டுங்கள். 

* கணினித் திரை உங்களிடமிருந்து சுமார் ஒன்றிலிருந்து ஒன்றரை அடிவரை தள்ளியே இருக்கட்டும்.

* திரையை (மானிட்டரை) உங்கள் பக்கமாக 15 டிகிரி கோணத்தில் சாய்த்துக் கொள்ளுங்கள். திரையின் மேல் பகுதி உங்கள் பார்வைமட்டத்துக்கு நேராக இருக்கட்டும். 

* தொடர்ந்து இருபது நிமிடங்களுக்குக் கணினியைப் பயன்படுத்தினால் நடுவே இரண்டு நிமிடங்களுக்காவது பார்வையை வேறு எங்காவது செலுத்துங்கள். 

கணினியின் பயன்களும், அவற்றை பயன்படுத்தும் நேரமும் அதிகமாகிக் கொண்டே போகும் காலம் இது. எனவே, மேற்கூறிய ஆலோசனைகளை மனதில் கொண்டு உங்கள் கண்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். 

இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் தொடரில் கண்களில் ஏற்படும் வரட்சித் தன்மை பற்றியும் கண்களினால் ஏற்படும் தலைவலிகள் பற்றியும் வர இருக்கின்றது
(தொடரும்)
அதிரை மன்சூர்

கண்கள் இரண்டும் - தொடர்-8 10

அதிரைநிருபர் பதிப்பகம் | October 21, 2013 | , ,


மனமும் கண்களும்

கண் என்பது மனித உடலில் தனி உறுப்பாக இருந்தாலும் உடலின் எல்லா உறுப்புகளுடனும் அதற்கு தொடர்பு உண்டு. அதே போன்று மனதிற்கும் கண்களுக்கும் தொடர்பு உண்டு. ஒருவரது கண்களை வைத்தே ஒருவரது செயல்பாடுகள், குணாதிசயங்களை அடையாளம் காண முடியும் . (உ.ம்) நல்ல சிந்தனையும், ஒழுக்கமும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் கொண்டவர்கள் கண்களில் ஓர் அபரீதமான அமைதியும், அன்பும், குளிர்ச்சியும், கருணையும், வெளிப்படுவதை நன்கு அறிய முடியும் இவர்களுக்கு கண்களில் பெரும்பாலும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படுவதில்லை.

சிலர் தவறான நடவடிக்கைகள், பெண்களிடம் காம களியாட்டத்தில் விருப்பமுள்ளவர்களாகவும், கொலை வெறி கொண்டவர்களாகவும் பழி பாவத்திற்கு அஞ்சாதவர்களாகவும் இருப்பர். இவர்களது கண்களைப் பார்க்கும்பொழுதே ஒருவித அச்சம் நமக்கு ஏற்படுவதை நன்கு அறிய முடியும் அவர்கள் விகாரமாக காட்சியளிப்பர்., இவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட நோய்களின் பாதிப்பு ஏற்படும், எனவே நல்ல சிந்தனையும் நல்ல குணாதிசயமும் நமது கண்களுக்கு ஆரோக்கியத்தையும், அழகையும் ஏற்படுத்தும்.

கண்களை அல்லது கண்பார்வையை இழப்பதற்கு இன்னும் பல காரணங்கள்  உண்டு. நாம் உண்ணும் உணவு, நமது பழக்க வழக்கங்கள், நாம் வாழும் சூழ்நிலை, நாம் செய்யும் தொழில், தூக்கமின்மை என்பனவற்றுடன் நாம் அவற்றை சரியாக பராமரிக்காது விட்டுவிடுவதுவே முக்கிய காரணிகளாகும்..


பார்வை இழப்பிற்கு வயது மட்டும் காரணமல்ல. எமது அக்கறையின்மையே முக்கிய காரணமாகும். கண் வைத்தியரிடம் ஒழுங்கான கால இடைவெளியில் காண்பிப்பதன் மூலம் சுமார் 40 முதல் 50 சதவிகிதமான பார்வை இழப்புக்களை தடுக்க முடியும்.  எந்தவித வெளிப்படையான அறிகுறிகள் இல்லாவிடிலும் கூட 40 வயதிற்கு பின் கண் மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது அவசியமாகும். 

தமது குடும்பத்தில் அல்லது பரம்பரையில் கண் நோயுள்ளவர்களுக்கு இது மேலும் முக்கியமானதாகும்.  உங்கள் பார்வையில் குறைபாடு புலப்படும் வரை கண் மருத்துவரை காண்பதைத் தள்ளிப் போட வேண்டாம். உங்கள் ஒரு கண்ணில் கோளாறு இருந்தாலும் மற்ற கண் பார்வை தெளிவாக இருப்பதால் குறைபாட்டுடன் உள்ள பார்வையை   ஈடு செய்துவிடுவதால் நோயாளி அதனை உடனடியாக உணர மாட்டார். எனவேதான் கண்பார்வைக் கோளாறுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க ஒழுங்கான மருத்துவப் பரிசோதனை அவசியமாகும். 

முதலில் மங்கலான வெளிச்சத்தில் வாசிப்பதை எடுத்துக் கொள்வோம். பலரது நம்பிக்கைகளுக்கு முற்றிலும் எதிர்மாறாக குறைந்த வெளிச்சத்தில் வாசிப்பதால் பார்வைக்கு பாரிய பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை. ஆயினும் அவ்வாறு வாசிப்பதால் கண்கள் விரைவில் களைப்படைந்து விடும் என்பது உண்மை. 

வாசிக்கும் போது படிக்கும் ஒளிவிளக்கின் வெளிச்சம் தாளின் மேல் நேரடியாக விழுவதே சிறந்ததாகும். முதுகிற்குப் பின்னிருந்து உங்கள் தோள்களுக்கு மேலாக வெளிச்சம் வாசிக்கும் தாளில் விழுவது சிறந்ததல்ல. அதேபோல ஒளிவிளக்கு உங்களுக்கு முன் இருப்பதும் நல்லதல்ல. சுற்றிவர ஒளி பரவ முடியா மறைப்பினால்(Shade) மூடப்பட்டு, வெளிச்சம் நேரடியாக உங்கள் புத்தகத்தின் மீது மட்டும் விழ வைக்கும் மேசை விளக்கே (Table Lamp) நல்லதெனலாம்.

படிக்கும் போது  எழுத்துக்கள் சரியாக தெரியாவிட்டால், அப்போது கண்களை பரிசோதித்து, அதற்கு கண்ணாடிகளை போடாமல், சிரமப்படுத்தி அப்படியே படித்து கண்களுக்கு சிரமம் கொடுத்தாலும், குறைவான வெளிச்சத்தில் புத்தகங்களை படிக்கும்போதும், மேலும் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல்களை பார்த்துக் கொண்டே இருந்தால், கண்கள் களைப்படைந்துவிடும். இதனால் கண்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு பிரச்சனைகள் ஆரம்பிக்கும். ஆகவே கம்ப்யூட்டர் அல்லது மொபைல் பயன்படுத்தும் போது, சரியான கண்ணாடிகளை அணிந்து கொண்டு பயன்படுத்தினால், கண் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து விடுபடலாம்.

கண்ணாடி அணிவதில் எச்சரிக்கை தேவை

இன்று கண்ணாடி அணிவதை சிலர் கவர்ச்சிக்காக எவ்வித பரிசோதனையுமின்றி அணிந்து கொள்கின்றனர். கண்களில் சிறிய பிரட்சனையாக இருந்தாலும் உடனடியாக கண்களை, கண் டாக்டரிடம் பரிசோதித்து அவர் பரிந்துரைக்கின்ற பார்வையின் அளவீடு அடிப்படையில் கண்ணாடி அணிவது மட்டுமே கண்களுக்கும் கண் பார்வைக்கும் பாதுகாப்பாக அமையும். ஒருவரது கண்கள் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட கண்ணாடியை இன்னொருவர் பார்வை நன்றாக தெரிகிறது என்பதற்காக அணியக்கூடாது அது முற்றிலும் தவறு.

தற்காலிகமாக கண்பார்வை நன்றாக தெரிவதுபோலத் தோன்றினாலும் சரியாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொருவிதமான பார்வைக் கோளாறுகளுக்கும் ஒவ்வொருவிதமான கண்ணாடி உண்டு ஒரு கண்ணாடிக்கு பதிலாக வேறு கண்ணாடி அணிந்தால் குறைபாடு குறைவதற்குப் பதிலாக அதிகமாகிவிடும். அதனால் கண் டாக்டரின் ஆலோசனையும் அனுமதியும் இல்லாமல் எந்த கண்ணாடியும் அணியக்கூடாது.

உங்களின் பார்வைக் குறைபாடுக்கு ஏற்ப, பொருத்தமான வலது கண் லென்ஸ், இடது கண் லென்ஸ் வகைகளை டாக்டர் உங்களுக்குப் பரிந்துரை செய்வார்.. அதற்கு ஏற்ற வகையில் கண்ணாடிக் கடைக்காரர், நீங்கள் தேர்வு செய்த ஃபிரேமில் கண்ணாடியைப் பொருத்தி, சரியான கோணங்களில் லென்ஸோ மீட்டரில் வேறுபாடு செய்து, கண்ணாடியை அழகாக உருவாக்கிக் கொடுப்பார்.

ஒரு கண்ணாடி  உங்களுடன்  உறையாடுகின்றதை கொஞ்சம் செவிதாழ்த்தி கேளுங்கள்

உன் கண் ஆடியாக உன்னிடம் வந்து சேருகிறேன். கான்டாக்ட் லென்ஸ் என்று என் ஒன்றுவிட்ட சகோதரனும் இருக்கிறான். இவனை அணிய, ஃபிரேம் தேவை இல்லை. குட்டியாக பிளாஸ்டிக் ஷீட் போல இருப்பான். அதைக் கண்ணில் தினமும் பொருத்திக்கொள்ள வேண்டும்.  

எந்த வகையாக இருந்தாலும் என்னைத் துடைத்து சுத்தமாகப் பராமரித்தால், நீண்ட காலம் உழைப்பேன். அத்துடன், கண்களுக்கு நன்மை பயக்கும் கீரை போன்ற உணவுகளைச் சாப்பிட்டால், என்னை அணிய வேண்டிய அவசியமே இருக்காது. செய்வீர்களா? சிந்தித்து எனக்கு ஓய்வு அளியுங்கள்.

என் சிறு வயசு பள்ளிப் பருவத்தில் நடந்த ஒரு சம்பவம் ஒன்று என் நினைவுக்கு வருகின்றது 1969ல் ஆறாங்கிளாஸ் நான் படிக்கையில் என்னுடன் படித்த நண்பன் ஒருவன் பள்ளிக் கூடத்தில் எங்களுடன் வகுப்பில் இருந்த நல்லா படிக்கின்ற சக புள்ளைங்களில் சிலபேர் கண்ணாடி அணிந்திருந்ததைப் பார்த்து  அவனுக்கு அது ஒரு கெட்டப்பாக தெரிந்ததினாலும் கண்ணாடி போட்டா நல்லா படிப்பு வரும் என்ற ஒரு எண்ணம்  அவனுக்குள் இருந்ததாலும் அது போன்று நாமும் போட்டால் என்ன என்ற எண்ணம் வர அதற்குண்டான வேலைகளை செய்ய ஆரம்பித்தான்.  

வீட்ல போய் எனக்கு கண்ணாடி வாங்கித்தான்னு சொன்னா ஒண்ணும் எடுபடாதுன்னு அவனுக்கு தெரியும். அதனால மெல்ல ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டான். போர்டுல டீச்சர் எழுதறது எதுவும் சரியா தெரியலைனு மெல்ல மெல்ல பிட்டை போட்டு பில்டப் பண்ண ஆரமபிச்சான். அப்புறம் அவன் புடுங்கல் தாங்க முடியாமல் அவனுடைய அப்பா அவனை பட்டுக்கோட்டையில் உள்ள கண் டாக்டர் சாகுல் ஹமீது அவர்கள் கிட்ட கூட்டிப் போனார். அவனுக்கு புதுசா இன்னொரு பயம் வேற வந்திட்டது. ஒரு வேளை டாக்டருக்கு உண்மை தெரிஞ்சிட்டா நம்ம நிலை என்னாகும் அப்படினு ஒரு கவலை வேற. 

சரி இருந்தாலும் சமாளிப்போம்னு மனசுல ஒரு தைரியத்தை வரவழைச்சிகிட்டு போய் உட்கார்ந்தான். அங்கே ஒரு நர்சம்மா அவனுடைய கண்ணுல விளக்கெண்ணை மாதிரி ஒரு ஐட்டத்தைக் கொட்டிட்டு 2 மணி நேரம் கழிச்சு தான் கண்ணை டெஸ்ட் பண்ண முடியும். அதுவரை கண்ணை திறக்கக் கூடாதுனு உத்தரவு போட்டுட்டு போய்ட்டாங்க. அவனுக்கு கண்களில் உலக மகா எரிச்சல். அப்போதான் அவனுக்கு ஒண்ணுக்கு, ரெண்டுக்கு, பசி எல்லாம் ஒண்ணா சேர்ந்து வந்தது. ஒரு வழியா ரெண்டு மணி நேராம் போனப்புறம் டாக்டர் அவனைக் கூப்பிட்டு கண்ணை நல்ல கழுவிட்டு ஒரு போர்டில் உள்ள எழுத்துக்களை காமிச்சி படிக்கச் சொன்னார். 

எல்லாத்தையும் சரியா படிச்சா நம்ம குட்டு உடைஞ்சிடுமேன்னு சின்ன எழுத்தை எல்லாம் கொஞ்சம் கஷ்டப் பட்டு படிக்கிற மாதிரி அவன் முடிஞ்ச வரை ஆக்ட் கொடுத்தான். அந்த டாக்டர் வேற வேற கண்ணாடியை எடுத்து அவன் ஃப்ரேமில் சொருகி இப்ப படி இப்ப படினு அவன் உயிரை வாங்கினார்.  

எங்க தப்பு பண்ணினான்னு அவனுக்குத் தெரியவில்லை அந்த பாழாய் போன டாக்டருக்கு அவன் மீது சந்தேகம் வந்திருச்சி. அப்புறம் கடைசியா ஒரு முறை ஃப்ரேமில் வேறு எதோ ஒரு கண்ணாடியை போட்டு இப்ப படினு சொன்னபோது ரொம்ப அற்புதமா எல்லாத்தையும் படிச்சித் தொலைச்சிட்டான். அப்புறமாத்தான் ஃபிரேமில் விரலை விட்டுப் பார்த்தால் அதில் கண்ணாடியே இல்லை ! ஆகா கவுத்துட்டாங்களே அப்படினு நினைச்சிகிட்டே அவங்கப்பாவை பார்த்தா அவரும் அவனை முறைச்சுப் பார்த்துகிட்டிருந்தார். சரிடி இன்னிக்கு உனக்கு டின்னுதான் போ அப்படினு நினைச்சிகிட்டே விட்டுக்குப் போய்..... ஹ்ம்ம் அந்தக் கதையெல்லாம் இங்கன சொன்னா மிச்சமிருக்கிற அவனுடைய மானமும் போய்டும் அப்புறம் நீங்கள்  அது யாரு எவரு என்று கேட்க ஆரம்பித்துவிடுவீர்கள்  வேண்டாம் வம்பு இதோடு விட்டுவிடுவோம்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த வரும் (9வது) தொடரில் மூக்கு காண்ணாடி எப்படி உருவாகின்றது என்பதை பார்போம்.
தொடரும்
அதிரை மன்சூர்

கண்கள் இரண்டும் - தொடர் - 7 6

அதிரைநிருபர் பதிப்பகம் | October 14, 2013 | , ,


போதை வஸ்து

போதை வஸ்து, மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டவர்களாக இருக்கும் போது அவற்றில் உள்ள நச்சுப் பொருள்கள் இரத்தத்தில் சேர்ந்து மிகவும் நுண்ணிய அமைப்பைக் கொண்ட கண்களின் பார்வையைப் பாதிக்கின்றன.. எனவே அவற்றை முற்றிலும் நிறுத்திக் கொள்ளல்வேண்டும். போதை பொருட்கள் உபயோகித்தவர்கள் கண்பார்வயை இழப்பதையும், கண் சம்பந்தபட்ட நோயுடன் வாழ்ந்து வருவதையும் கண்கூடாக கண்டும், அந்த போதை வஸ்துகளுக்கு பலியாகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

மனிதனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய்  - சமுதாயத்தின் கொள்ளைநோயாக இருந்து வருவது போதை தரும் இந்த மது பானங்கள். உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயத்தின் அழிவு என்னும் பெருந்துயருக்கு காரணமாக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். இன்று மனித சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒட்டு மொத்த பிரச்னைகளுக்கும் ஆணிவேராக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். உலகில் பல்கிப் பெருகி வரும் குற்றங்களுக்கு காரணமாகவும் மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வருவதும் மக்களின் உளச்சோர்வுக்கு காரணியாகவும் அமைந்திருப்பது இந்த மதுபானங்களின் அழிக்கும் சக்திதான்.

அல்-குர்ஆன் மதுபானத்தை தடை செய்துள்ளது: அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90வது வசனத்தின் மூலம் அல்லாஹ் மதுபானம் அருந்துவதை தடைசெய்துள்ளான்:

'விசுவாசம் கொண்டவர்களே!. மதுபானமும் சூதாட்டமும் கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்: ஆகவே இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 05 - வசனம் 90)

மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை: -

“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.”  (அல்குர்ஆன் 2: 219)

மது அருந்துதல் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயலாகும்: -

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே,அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)

மது அருந்துவதை பைபிளும் தடை செய்கிறது:

பைபிளின் 20வது அத்தியாயம் Proverbs உடைய 01வது வசனமும் 5வது அத்தியாயம் Ephesians உடைய 18வது வசனமும் மது அருந்துவது சிறந்தது அல்ல என குறிப்பிடுகின்றன.

மனித மூளையின் தடை செய்யும் மையத்தை (Inhibitory Centre) - இயங்க விடாமல் செய்கிறது மது பானங்கள்:

மனித மூளையில் தடை செய்யும் மையம் (Inhibitory Centre) என்ற ஒரு பகுதி உள்ளது. மனிதன் தான் செய்யும் செயல் தவறு என்று எண்ணும் செயல்களை செய்ய விடாமல் தடுப்பது மேற்படி தடை செய்யும் மையத்தின் பணி. உதாரணத்திற்கு தனது பெற்றோரையோ அல்லது தனக்கு மூத்தவர்களையோ கெட்ட வார்த்தைகளால் ஏசக்கூடாது என்று ஒரு மனிதனைத் தடுப்பது தடை செய்யும் மையத்தின் வேலை. ஓரு மனிதன் தன் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்பினால் - அதனை பொது இடத்தில் செய்யக் கூடாது என்று தடுப்பது தடை செய்யும் மையத்தின் வேலை. போதையிலிருக்கும் ஒரு மனித மூளையின் தடை செய்யும் மையத்தின் பணி மது பானங்களால் தடை செய்யப்படுகிறது. 

எனவேதான் குடிபோதையில் இருக்கும் மனிதன் சம்பந்த சம்பந்தம் இல்லாமல் தன் மனம் போன போக்கில் செயல் படுகிறான். குடிபோதையில் இருக்கும் மனிதன் தனது பெற்றோரைக் கூட மோசமான வார்த்தைகளால் ஏசுவதும் அவர்களிடம் மோசமாக நடந்து கொள்வதையும் நாம் காண்கிறோம். போதையில் இருப்பவர்கள் தம் ஆடைகளிலேயே சிறு நீர் கழிப்பதையும் - சரியாக நடக்கவோ அல்லது பேசவோ முடியாமல் இருப்பதையும் பார்க்கிறோம்.

இவ்வளவு மோசமான உடல் நலகேடுகளை விளைவிக்கும் போதை பொருள்களை விற்கும் சாரயக்கடைக்கு அதிராம்பட்டினத்தில்  அனுமதி அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் மூன்று கடைகளுக்கு அனுமதி. இதை தட்டி கேட்டு குட்டிவைப்பதற்கு  அதிராம்பட்டினத்தில் யாருக்கும் திரானியில்லை. எல்லா ஊர்களிலும் இந்த நிலமை இருந்தாலும் நான் ஏன் குறிப்பாக நமதூரை  குறிப்பிடுகின்றேன் என்றால் காரணம் இதுதான் எங்கள் ஊர் முஸ்லீம் ஊர், ஆலிம்கள் நிறைந்த ஊர் என்றும் நான் அந்த இயக்கத்தைச் சார்ந்தவன் இந்த இயக்கத்தைச் சார்ந்தவன் என்றும், ஒருத்தருக்கு ஒருத்தர் பகைமை பாராட்டுவதிலும் அடுத்த இயக்கத்தைச் சார்ந்தவனை அடித்தே சாகடிக்கும் காரியங்களிலும் மட்டுமே கவனத்தைச் செலுத்தும் இளைஞர்களின் வாய்ச்சவடால்களுக்கு மட்டும் குறைவிருக்காது, ஊர் மக்களுக்காக எண்ணிலடங்கா விஷயங்களை இரவு பகல் பாராது எங்கள் இயக்கங்கள் செய்கின்றது என்று பெருமை பாராட்டி மார்தட்டிக் கொள்வதிலும் 

இரத்த தானங்கள் செய்வதிலும் மற்ற உப்புச்சப்பு இல்லாத காரியங்களிலும் தமது பணத்தையும் பொன்னான நேரத்தையும் செலவழிக்கின்றனர். நான் இரத்த தானம் செய்வதை குறை சொல்லவில்லை இதை செய்வதைத் தவிற வேறு என்ன செய்கின்றனர் என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவே இங்கே இதை குறிப்பிடுகின்றேன்

இப்படிபட்ட மார்க்கத்துக்கு புறம்பான விசயத்தை அரசாங்கமே நின்று செய்தாலும் அந்த அரசாங்கத்தை எதிர்த்து நின்று  தட்டி கேட்கவேண்டும். இதற்காக செய்யும் போராட்டம் வெறும் கண்துடைப்பு போராட்டமாக இல்லாமல் அந்த போராட்டத்தின் மூலமாக மது கடை திறந்த புன்னியவான்களெல்லாம் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஊரைவிட்டே ஓடவேண்டும். அப்படி இருக்க வேண்டும் போராட்டம். கமல ஹாசனின் படத்தைத் தடை செய்ய கோரி எல்லா இயக்கங்களும் ஒன்று சேர்ந்த்தைப் போன்று சேர்ந்து செய்தால்தான் சாத்தியப்படும். நாம் செய்யும் போராட்டத்தின் மூலமாக எல்லாமே ஸ்தம்பிக்கவேண்டும் எதுவும் இயங்ககூடாது. அப்பொழுதுதான் எதையும் சாதிக்க முடியும். ஒற்றுமை இல்லாத கோஷங்களாலும் ஆர்பாட்டங்களாலும், ஹர்த்தால்களாலும் எதையும் சாதிக்க முடியாது. 

இது போன்ற பொது காரியங்களுக்கு மட்டுமாவது எல்லா இயக்கத்தவர்களும் ஒன்று சேர்ந்து ஒரு தலைமைக்கு கீழ் கட்டுபட்டு போராடுங்கள். போராட்டத்தில் உயிரோட்டமும் இருக்கவேண்டும் இல்லாவிட்டால் நமதூரில் இத்தனை இயக்கங்கள் இருந்து பிரையோஜனமில்லை என்றும், இருக்கும் இயக்கங்கள் யாவும் வெத்து இயக்கங்கள் என்றுதான் சொல்லவேண்டும். இயக்கங்கள் என்பது எதற்காக? சமுதாயத்திற்கு வரும் இதுபோன்ற தீங்குகளை வரவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் இயக்கங்கள் தேவையா? அதற்கு நாம் கொடி பிடித்து நம்முடைய நேரத்தையும் பணத்தையும் வீனடிக்க வேண்டுமா ஒவ்வொருவரும் இதை சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.

சிறுவர்களும், வாலிபர்களும், வயதில் மூத்தவர்களும் போதைகளுக்கு அடிமையாகும் போக்கை அரசாங்கமே நின்று செய்வதின் காரணம் அரசியல் வாதிகளுக்கு கணக்கில்லாமல் பெருவாரியான பணம் கொள்ளையடிக்க உதவும் தொழில்களில் இதுவும் ஒன்று., அந்த தொழிலை (சாராயக் கடையை) நமதூரிலும்  திறக்க அனுமதித்ததும் நம் சமுதாயத்தவர்களை போதைகளுக்கு அடிமையாக்கும் போக்கை நாம் கண்டும் காணாமல் இருப்பது நமது கையாலாந்த் தன்மையே. இந்த போதை வஸ்துக்களினால் எண்ணற்ற பிரட்சனைகள் உருவாகின்றன, அதில் பார்வை சம்பந்தமன பிரட்சனைகள் முக்கிய அங்கம்வகித்து இந்த போதை வஸ்த்துக்களால் “கண்கள் இரண்டும்” பெரிதும் பாதிக்கபடுவதை யாரும் உணர முடியாத கசப்பான உண்மை இருப்பதை யாரும் அறியமாட்டார்கள்..

போதைக் கலாச்சாரத்தில் மூழ்குவோரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை வைத்து செயல்படும் இயக்கம் தானாக வளரும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் என்பதை கேள்விபட்டதில்லையா? இது என்ன சும்மா உவமைக்காகவோ அடுக்கு மொழிக்காகவோ அல்லது பழமொழியாகவோ  சொல்லப்பட்ட வார்த்தையல்ல. இதற்கு உள் அர்த்தம் நிறையவே இருக்கின்றது.  இன்று ஊரார் பிள்ளையைப் போதைக்கு அடிமையாகாமல் நீ பார்த்துக்கொண்டால் உன்பிள்ளை போதைக்கு அடிமையாகாமலே அடுத்தவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற பொருளையும் எடுத்துக் கொள்ளலாம். 

இன்னொரு கூட்டம் யாரை பற்றியும் கவலைப்படுவதில்லை.  யார் எக்கேடு கெட்டால் நமகென்ன?  நமக்கு ஏன் ஊர் வம்பு என்று ஒவ்வொருத்தரும் ஒதுங்கி எது நடந்தாலும் எருமை மாட்டின்மீது மழைபொழிவது போன்று சமுதாயத்தின் மீது சொரனையற்று நிற்பதினால்தான் நமது சமுதாயத்தில் ஏகப்பட்ட க்ரைம்ஸ் தாராளமாக்கப்பட்டுள்ளது. சமுதாயம் கெடுவதினால் நம்து பிள்ளைகளும்தான்  கெட்டுப் போகின்றன என்பதை நன்கு சிந்திக்க தவறுகின்றனர். பிறர் நம்மை பார்த்து ஏளனமாக பேசுவதையும் ஏளனமாக சிரிப்பதையும் அனுமதிப்பீர்களா?

கை கொட்டி சிரிப்பார்கள் 
ஊரார் சிரிப்பார்கள் 

எப்பொழுது? போதைகளுக்கு அடிமயாகும் வரை கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு போதைக்கு அடிமையானவன் சீரழிந்து போகும்போது கைகொட்டி சிரிப்பார்கள், ஊரார் சிரிப்பார்கள். நமதூரில் நடைபெறும் கலாச்சார சீர்கேடுகளில் இதுவும் ஒன்று இதை முற்றிலும் எப்படியாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.  

இன்னும் ஒன்று மனம் பிசகி அதிரைக்கு வருபவர்களையும் அதிரையிலேயே மனம் பிசகி வசித்துவரும் சகோதரர்களையும் இவர்களின் கோனப்பார்வையால் கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல்  நையபுடைத்து கல்லால் அடித்து துன்புறுத்தி முழு கிருக்கனாக போகும்வரை தமது முழு பங்களிப்பையும் தாராளமாய் அள்ளித் தருகின்றார்கள், இது நமதூர் வாசிகளின் சிறப்பு அம்சங்கள். என்று  திருந்துமோ நம் சமுதாயம்

கட்டுப்பாடற்ற ஊர். காட்டுப்பாடு இழந்த சமுதாயம். இதற்கெல்லாம் விடிவுகாலம் எப்ப்பொழுது?

நமது சமுதாயத்தின் கட்டுப்பாடுகள் பற்றி சில கேள்விகள்

குடும்பத்தில் தலைவன்  இருக்கின்றாரா?           இருக்கின்றது ஆனா.........ல்
குடும்பத்தில் கட்டுபாடு இருக்கின்றதா?               இருக்கின்றது ஆனா.........ல்
தெருவில் தெரு கட்டுப்பாடு இருக்கின்றதா?     இருக்கின்றது ஆனா.........ல்
ஏதாவது சங்கத்தின் கட்டுப்பாடு?                             இருக்கின்றது ஆனா.........ல்
ஊர் கட்டுப்பாடு இருக்கின்றதா?                               இருக்கின்றது ஆனா.........ல்

இருக்கின்றது ஆனா.........ல் என்ன? கட்டுப்பட மாட்டோம் இதுதான் நமது சமுதாயத்தின் இன்றைய நிலமை, ஆனால் ஒன்று மட்டும் உண்மை.

தடி எடுத்தவர்களெல்லாம் தண்டல்காரர்களாக போனதினால்தான் அதிராம்பட்டினம் கட்டுப்பாடு இழந்து குட்டிச் சுவராகி நிற்கின்றது. 

நமது சமுதாயத்தில் பொதுமக்களின்  கண்களுக்கு விருந்தளிக்கின்றோம் என்றும் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கை கொடுக்கின்றோம் என்றும் அனுமதிக்கப்படாத செயல்களான கோவில் திருவிழாக்களில் அரங்கேறும் காட்சிகளை  சில அறிவற்ற ஜீவிகள் தர்ஹாவில் கந்தூரி என்ற பெயரால் அரங்கேற்றி பாவங்களை  சம்பாதிப்பது ஒரு பக்கம் 

இன்னொரு பக்கம்   மாற்று மதத்தில் கோவில் திருவிழாவில் நடப்பது போன்று நமது சமுதாயத்திலும் இரண்டு பிரிவினர் கந்தூரி எடுப்பது நீயா? நானா? என்ற போட்டி பொறாமையால்  வருடா வருடம் அரங்கேறும் அவலங்கள்.  முறியும் உறவுகள் தொடர்ந்து பகமை,  வம்பு வளர்ப்பதற்காக உருவாகும் குடிகாரர்கள், முரடர்கள்  சொல்லி மாலாது. நமது சமுதாயம் முரடர்கள் அற்ற சமுதாயமல்லவா இப்படிபட்ட தர்கா பேர்வழிகளால் இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஏற்படும் கலங்கத்தை இவர்களால் துடைத்து தரமுடியுமா? மாற்றார்கள் நம்மை பார்த்து நம்மிடம் உள்ள எல்லா விசயங்களும் முஸ்லீம்களிடம் இருக்கின்றது என்று நினக்க மாட்டார்களா? நாம் செய்யும் இந்த செயல்கள் அவர்களின் கண்ணை மறைத்துவிடுமா? 

இப்படி கட்டுப்பாடற்று சிந்திக்க தவறும் சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எவற்றை சாதிக்கப் போகின்றோம் எதிர்கால சந்ததியினருக்கு எவற்றை  போதிக்க போகின்றோம் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கின்றது. அல்லாஹ்தான் எல்லோரையும்  அவர்கள் செய்யும் தவறுகளை உணரவைத்து ஒவ்வொருத்தரும் சுய வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் வெற்றியடைய உதவி செய்வானாக ஆமீன்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த வரும் (8-வது) தொடரில் கண்களின் வேதனையும் சோதனையும் இடம் பெறும்
தொடரும்...
அதிரைமன்சூர்

கண்கள் இரண்டும் - தொடர் - 6 10

அதிரைநிருபர் பதிப்பகம் | October 07, 2013 | , , , ,


கண்களின் முக்கிய பாகங்கள் / அமைப்பு

கண்கள் இரண்டும் முதல் பதிவில் குறிப்பிட்டது போன்று கண்ணுக்கும் கேமராவிற்கும் உள்ள ஒப்பீட்டை ஞாபகமூட்டும் விதமாக சில வார்த்தைகளை மீண்டும் கொஞ்சம் தருகிறேன். காமிரா எப்படி ஒரு பொருளின் நிழலைத் தன்னிடம் பதியச் செய்து நிழற்படமாகக் கொடுக்கிறதோ அவ்வாறே கண்களும் வேலை செய்கின்றன. ஒளிக்கதிர்கள் கருவிழி மூலம் கண்ணுக்குள் சென்று கண்மணியில் பட்டு வளைந்து ஒளித் திரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தலைகீழாகப் பதிவாகிறது.

அங்கு ஏற்படும் பார்வை நரம்புகளின் உதவியால் மூளையின் பின்பகுதியை அடைகிறது. அங்கு உருவம் நேராக்கப் படுகிறது. இதைத்தான் நாம் பார்வை என்கிறோம். கண்ணில் கீழ்கண்ட உறுப்புகள் முக்கிய பணியாற்றுகின்றன பார்வை நரம்பு, சிலியா தசை நார், ஒளிக்கதிர்கள் மேகுலா இடத்தில் குவிதல், கண் ஆடி, கருவிழி, விழித்திரை.

பொதுவாக கண்கள் பார்க்கும் பிம்பங்களின் தகவல்கள், விழித் திரையிலுள்ள, 'போட்டோ ரிசெப்டார்' எனும், உயிரணுக்கள் மூலம் சேகரிக்கப்படும். அவை சமிக்ஞைகளாக மூளைக்குச் சென்று, மூளையில் உள்ள 'காங்க்ளியான்' உயிரணுக்கள் மூலம் தகவல்கள் புரிந்து கொள்ளப்படும். இயல்பான கண் பார்வைக்கு தேவையான அடிப்படை உயிரியல் நிகழ்வு இதுவே.

கண்ணின் பாகங்கள்

கருவிழி, பாப்பா, வெண்படலம், கோராய்ட், ஒளித்திரை, பார்வை நரம்பு, கண்முன் ரசம், இரத்தக் குழாய்கள் விழித்திரை, லென்ஸ், விட்ரியஸ், ஆப்பிக் கயாஸ்மா (இரு பார்வை நரம்புகளும் சந்திக்கும் இடம்)  பார்வைத் தடம் (Optic Tract), பார்வை பாதையின் விரிசல்கள்(Optic Radiations) மூளையின் பின்பகுதியில் உள்ள பார்வை பதியும் இடம் (Visual cortex in the occipital lobe) இரு கண்களும் அசைவதற்கு ஒவ்வொரு கண்ணிலும் ஆறு தசைநார்கள் உள்ளன. ஒளிக்கதிர்களானது கருவிழி, கண்ணின் முன்ரசம், பாப்பா, லென்ஸ், விட்ரியஸ் வழியாகச் சென்று ஒளித்திரையில் உள்ள மேகுலா (Macula) என்ற இடத்தில் உள்ள நுட்பமான போவியா Fovea என்ற புள்ளியில் குவிகிறது. இந்தப் பகுதிதான் பார்வையை மூளைக்கு எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கண் என்பது நம் பார்வைக்கான உறுப்பு. இது மண்டையோட்டில் கருக்கோளக் குழிக்குள் அமைந்துள்ளது. கண் புருவங்கள் கண்ணிற்கு நிழலை அளிக்கின்றன. மேலும் இவை வியர்வை கண்ணுக்குள் சென்று எரிச்சலை ஏற்படுத்தாதவாறு தடுக்கின்றன. கண் இமைகளும், இமை முடிகளும் கண்ணுக்குள் தூசி எதுவும் விழாமல் தடுக்கின்றன. கண் இமைக்கும் செயலால் கண்ணீர் கண்ணின் மேல் பகுதியில் பரவி உராய்வு தடுக்கப்படுகிறது. இந்த கண்ணீர் உராய்வினை மட்டும் தடுக்கவில்லை, இதில் பாக்டீரியா போன்ற கிருமிகளை கொள்ளும் நொதிகளும் உப்புகளும்உள்ளன.

கண் என்பது இரண்டு திரவங்களால் நிரப்பப்பட்ட ஒரு கோளம் ஆகும். ஆறுதசைகள் அதை இயக்குகின்றன. அவை குறுக்கும் சாய்வுமான தசைகள். கண்ணின் சுவர் மூன்று அடுக்குகளால் ஆனது. வெளிப்பகுதி விழிவெண்படலம்(ஸ்கிளீரா) என அழைக்கப்படுகிறது. இது வெள்ளை நிறத்தினால் ஆனது. இதனாலேயே நம் கண் வெண்மையாக காணப்படுகிறது. கார்னியா அல்லது கருவிழி எனப்படுவது இதன் ஒளி ஊடுருவும் தன்மையுள்ள முன்பகுதியாகும். இரண்டாவது அடுக்கு காராய்டு ஆகும். இதில் பல இரத்தக் குழாய்களும் நிறமிகளும் அடங்கியுள்ளன. இது கருப்பு நிறத்தில் ஒளி ஊடுருவாத தன்மையுடன் இருக்கும். 

மூன்றாவது மற்றும் உள்பக்க அடுக்கான சிலியரி தசை பகுதியில் பல மென் தசைகள் லென்சை ஒரு நிலையில் தாங்கி பிடித்துள்ளன. விழித்திரைப் படலம் என்பது பாவையை சுற்றி அமைந்துள்ள நிறமுள்ள தசையாகும். இது பாவைக்குள் நுழையும் ஒளியின் விட்ட அளவை கட்டுப்படுத்தும். நாம் இருட்டறைக்குள் செல்லும்போது இது திறந்து அதிக வெளிச்சத்தை உள்ளே அனுமதிக்கிறது. பலமான சூரிய ஒளியில் நாம் இருக்கும்போது சுருங்கி வெளிச்சத்தைக் குறைக்கிறது.

கண்ணின் உள்பக்கம் இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முன்பக்க அறையில் அக்யூவஸ் ஹியூமர் என்னும் திரவம் உள்ளது. இது ஒளியை விலகச் செய்கிறது, கண்ணுக்குத் தேவையான சத்துக்களை அளிக்கிறது, மேலும் கண்ணுக்குள் உள்ள அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது சிலியரி தசையால் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்பக்க அறையில் விட்ரியஸ் ஹியூமர் என்னும் திரவம் உள்ளது. இதுவும் கண்ணுக்குள் உள்ள அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது, ஒளியை விலகச் செய்கிறது, மேலும் ரெடினாவையும் லென்சையும் தாங்குகிறது. ரெடினா என்பது கண்ணின் உட்பக்க அடுக்காகும் இதில் ஒளி உணர் செல்கள் உள்ளன. இதில் உள்ள நிறமிகள் அடுக்கு ஒளி திரும்ப பிரதிபலிக்காதவாறு பார்த்துக்கொள்கின்றன.

இந்த ரெடினாவில் கூம்புகள் மற்றும் குச்சிகள் எனப்படும் நரம்பு செல்களின் அடுக்கு உள்ளது. குச்சிகள் மங்காத வெளிச்சத்திற்கும், கூம்புகள் நிறங்களைக் கண்டறியவும் பயன்படுகின்றன. இந்த கூம்புகளின் கலவையாலேயே நம்மால் அனைத்து நிறங்களையும் கண்டறிய முடிகிறது. இந்த செல்கள் இணைந்து ஆப்டிக் எனப்படும் பார்வை நரம்பை உண்டாக்குகின்றன. இந்நரம்பு மண்டையோட்டின் கருக்கோள குழியில் பின்புறத்தில் உள்ள ஒரு துளைவழியாக மூளையின் பின் பக்கமாக சென்று மூளையுடன் இணைகின்றன.ரெடினாவின் மையத்தில் ஒரு மஞ்சள் நிறப் புள்ளி உள்ளது. அதன் மையத்தில் உள்ள பள்ளம் ஃபோவியா செண்ட்ராலிஸ் என அழைக்கப்படுகிறது இந்த இடமே கூர்மையான பார்வையை உண்டாக்கும் இடமாகும். அதற்கு பக்கத்தில் ஆப்டிக் நரம்பு செல்கிறது. ரெடினாவை உற்பத்தி செய்ய விட்டமின் ஏ தேவை. இதனாலேயே விட்டமின் ஏ குறைபாடு உள்ளவர்களுக்கு மாலைக்கண் நோய் ஏற்படுகிறது. அவர்களால் வெளிச்சம் குறைவான நேரத்தில் பார்க்க முடியாது.


இளைஞர்களுக்கு லென்ஸ் உறுதியான ஒளி ஊடுருவும் திரவத்தால் நிரப்பப்பட்டிருக்கும். லென்ஸ் தளர்ந்த நிலையில் இருக்கும்போது அது ஏறக்குறைய கோளவடிவில் இருக்கும். படத்தில் காண்பித்துள்ளவாறு சுமார் 70 நிலைநிறுத்தும் தசைநார்கள் லென்சை கருக்கோளத்திற்குச் சற்று வெளியே நிற்கும்படி பிடித்துக் கொள்கின்றன. மேலும் பல தசைநார்களும் சிலியரி தசைகளும் லென்சை சரியான நிலையில் நிலைநிறுத்துகின்றன. 

பார்வைத்திறன்

முதல் நிலை: ஒவ்வொரு கண்ணின் பார்வை ஆற்றலும் 6/6 என்ற அளவில் இருத்தல் வேண்டும் (இத்தகுதி இராணுவம், கப்பற்படை, காவல்துறை) ஆகியோருக்குப் பொருந்தும். இரண்டாம் நிலை: ஒவ்வொரு கண்ணின் பார்வைத்திறன் (+4.00 அல்லது -4.00) கண்ணாடி அணிந்தபின் 6/9,6/6 இருத்தல் வேண்டும். மூன்றாம் நிலை: கண்ணின் பார்வைத்திறன் +6.00 அல்லது -6.00 கண்ணாடி அணிந்தபின் 6/6 அல்லது 6/9 இருத்தல் வேண்டும் .

உங்கள் பார்வைத்திறன் குறைவடைந்து செல்கிறதா..? அதிகரிக்க இதோ..!

இன்றைய காலத்தில் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை. ஏனெனில் தற்போது உண்ணும் உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, வேலைப்பளு போன்றவற்றால் கண்களுக்கு தேவையான சத்துக்கள் இல்லாமல், கண்களில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிலும் இப்போதுள்ள குழந்தைகள் அனைவரும், சிறு வயதிலேயே பார்வைக் கோளாறால் விரைவிலேயே கண்ணாடியை போட்டுவிடுகின்றனர்.

மேலும் கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் வேலை செய்பவர்களும் சீக்கிரம் கண்ணாடியை அணிந்து விடுகின்றனர். இவை அனைத்திற்கும் காரணம் போதிய சத்துக்கள் உடலில் இல்லாததே ஆகும். சிலர் தண்ணீர் போதிய அளவில் குடிக்காமல், மிகவும் குறைந்த அளவில் குடிக்கின்றனர். இதனால் உடலில் வறட்சி ஏற்படுவதோடு, கண்களிலும் வறட்சி ஏற்பட்டு, கண்கள் வலுவிழந்துவிடுகிறது.

ஆகவே இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாமல், கண்கள் நன்கு பொலிவோடு, அழகாகவும், பளிச்சென்ற பார்வையை பெறவும், ஒரு சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கண்களுக்கு சக்தியை கொடுக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். இப்போது அந்த உணவுகள் என்னவென்று  கொஞ்சம் சாம்பிலுக்கு தந்துவிட்டு பிறகு இத்தொடரின் இறுதியில் கண்களை  பாதுகாக்க உதவும் உணவுகளையும் உணவு பழக்கங்களை பற்றியும் விரிவாகப் பார்போம்

பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் கரோட்டினாய்டு என்னும் சத்து அதிகம் உள்ளது. அதிலும் லுடீன் சத்தும் அதிகம் உள்ளது. ஆகவே இந்த உணவுகளை சாப்பிட்டால், கண்களில் உள்ள ரெட்டினாவை, கண் எரிச்சல் மற்றும் பார்வையைப் பாதிக்கும் வெளிச்சத்திலிருந்து பாதுகாக்கிறது.

மஞ்சள் நிற காய்கறிகள்
மஞ்சள் நிற காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக அளவில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பீட்டா-கரோட்டீன் போன்ற சத்துக்கள் உள்ளன. இதனால் பகல் நேரத்தில், சூரிய வெளிச்சத்தால் கண் கூசுதல் நீங்கி, பார்வை நன்கு தெரியும்.

பூண்டு மற்றும் வெங்காயம்
பூண்டு மற்றும் வெங்காயத்தில் அதிக அளவில் சல்பர் உள்ளது. மேலும் கண்களுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான குளுததையோன் என்னும் பொருளும் உள்ளது. இதனால் கண்கள் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும்.

சோயா பொருட்கள்
சோயாவில் குறைந்த அளவில் கொழுப்புக்கள் மற்றும் அதிக அளவில் புரோட்டீன் உள்ளது. ஆகவே டயட்டில் இருப்போர்கள் கண்டிப்பாக இதனை உணவில் சேர்க்க வேண்டும். மேலும் இதில் உடலுக்குத் தேவையான ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஈ உள்ளது.

முட்டை
முட்டையில் அதிக அளவில் சிஸ்டெய்ன், சல்பர், லெசித்தின், அமினோ அமிலங்கள் மற்றும் லுடீன் போன்ற பொருட்கள் இருப்பதோடு, வைட்டமின் பி2 சத்தும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிட்டால், கண்புரை உருவாக்கம் ஏற்படாமல் தடுக்கலாம். அதிலும் வைட்டமின் பி சத்து செல் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது.

பெர்ரிஸ்
பெர்ரி பழங்களில் உள்ள இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட், கண்களுக்குப் பளிச்சென்ற பார்வையை அளிக்கிறது. அதிலும் இந்த உணவுப் பொருட்கள் இரவு நேரத்திலும் தெளிவான பார்வையை அளிக்கிறது.

காரட்
பொதுவாக கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது என்று அனைவருக்கும் தெரியும். ஏனெனில் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் சி மற்றும் ஏ, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருவதோடு, குறிப்பாக கண்களைப் பாதுகாக்கிறது.

நட்ஸ்
நட்ஸில் அதிகமான அளவில் வைட்டமின் மற்றும் ஜிங்க் சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள ஒமேகா-3, உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, அணுச்சவ்வுகளை வலுவாக்குகிறது. அதிலும் கண்களுக்கு மற்ற உறுப்புகளினால் ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.

பால் பொருட்கள்
பால் பொருட்களான பால், வெண்ணெய், நெய், சீஸ், க்ரீம் போன்றவற்றில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது கண்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கிறது. எப்படியெனில் உடலில் வைட்டமின் ஏ குறைவினால் தான் பார்வை இழப்பு ஏற்படுகிறது.

மீன்
மீன்களில் ஒமேகா-3 1பேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இதனை அதிகம் சாப்பிட்டால், பார்வையில் கோளாறு ஏற்படாமல், கண்கள் நன்கு பளிச்சென்று தெரியும்.

இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் (7வது) தொடரில் கண்களைப் பாதிக்கும் போதை வஸ்த்துக்களால் அதிரை குடி மக்களுக்காக குடியேறியுள்ள சாராயக் கடைகள் பற்றியும் நமது சமூகத்தின் நிலைபாடு குறித்தும் இடம் பெறும்

தொடரும்...
அதிரைமன்சூர்

கண்கள் இரண்டும் - தொடர் - 5 28

அதிரைநிருபர் பதிப்பகம் | September 30, 2013 | , , , ,


அதிகாலையில் கண் விழிப்பவர்கள்

அதிகாலையில் கண் விழிப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ரோகாம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பி வைப்பார்கள் என்று கூறியுள்ளனர். 

இரவு நேரங்களில் விடிய விடிய வேலை பார்ப்பவர்களும் ஆட்டம் போடுபவர்களும் மன அழுத்தத்தினாலும், உடல் பருமனுடனும் இருப்பார்கள் என்று கூறுகிறது அந்த ஆய்வு முடிவு. 1,068க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. வார இறுதி கொண்டாட்டம் வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியுடன் இரவில் அதிக நேரம் பொழுதை கழிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மறுநாள் காலை 10க்கு அல்லது 12 மணிக்கு இன்னும் சிலபேர் பகல் 2 மணிக்கே கண் விழிக்கின்றனர்.

அன்று முழுவதும் அவர்களிடம் ப்ரஷ்னெஸ் இருக்காது. எதையோ இழந்த மாதிரியும், நோயாளிகள் போன்றும் சுறு சுறுப்பின்றி அந்த முழு நாள் முழுதும் இருப்பார்கள். இதெல்லாம் இரவுகளில் சரியாக தூங்காததினால் ஏற்படக்கூடியவை. இவற்றை வார விடுமுறை நாட்களில் இரவு முழுதும் கண்விழித்து ஆட்டம்போடும் எல்லோராலும் உணரமுடியும். இதற்கு தோதாக இப்பொழுது அரபு நாடுகளில் பெரும்பாலும் வெள்ளி, சனி என்று வாரத்திற்கு இரண்டு  நாட்கள்  விடுமுறை நடைமுறைப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த இரண்டு நாட்கள் போடும் ஆட்டத்தின் கலைப்பு நீங்குவதற்குள் அடுத்த வீக் எண்டை எட்டிவிடுகின்றோம். வாரத்தில் இரண்டு நாட்கள் லீவு விட ஆரம்பத்த்திலிருந்து நாட்கள் வெகு சீக்கிரமாக நகர்கின்றன. இப்படி ஆட்டம் பாட்டத்துடன். நாட்கள் நகர்வதினால் மவுத் நம்மை நெருங்குவதை நாம் உணரவில்லை.

அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இலேசான உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பதாகவும் இது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட டாக்டர் ஜார்ஜ் ஹப்பர் டெலிகிராப் ஆங்கில நாளிதழில் தெரிவித்துள்ளார். அதிகாலையில் கண் விழிப்பது சுறுசுறுப்பானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட என்று தெரிவிக்கின்றது இந்த ஆய்வு முடிவு.   

1438 வருடங்களுக்கு முன்னாடியே நமக்கு அருளப்பட்ட இறைவேத்தில் எல்லாத் தொழுகையையும் (சுபுஹுத்தொழுகை உள்பட  சேர்த்து) சொல்லும் வசனம்

ஈமான் கொண்டவர்கள் நிச்சயம் வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்த்கையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேனுவார்கள் .  அல்குர்ஆன் 23:,2,9

சுபுஹுத்தொழுகை பற்றி அண்ணலாரின் பொன்மொழிகள்

“எவர் சுபுஹுத் தொழுகையை நிறைவேற்றுகின்றாரோ அவர் அல்லாஹ்வினது பாதுகாப்பிற்குள் வந்து விடுகிறார்” என் நபிகள் (ஸல்) அவ்ர்கள் கூறினார்கள் 
ஆதாரம்: புஹாரி

பல ஊர்களில் “தூக்கத்தைவிட தொழுகை மேலானது தொழ வாருங்கள்” என்று ஃபஜர் பாங்கு சொல்லும்போது அரபியல் அஸ்ஸலாத்து கைரும்மின நவ்ம் என்று இரண்டு முறை குரல் கொடுக்கின்றனர். தொழ ஆரம்பிக்கும் சுமார் 10 நிமிடத்திற்கு முன் “தூக்கதை விட தொழுகை மேலானது தொழ வாருங்கள்” என்று தமிழில் சொல்லி அழைக்கவும் செய்கின்றனர் அப்படி இருந்தும் பெரும்பாலான மக்கள் தூக்கத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சுபுஹு தொழுகைக்கு கொடுப்பதில்லை. 

25 வருடங்களுக்கு முன்பு சுபுஹுத் தொழுகைக்கு இளைஞர்களை பெரும்பாலும் காணமுடியாது இளைஞர்களிடம் தவ்ஹீதின் எழுச்சி வந்த பின்பு சுபுஹுத் தொழுகைக்கும் மற்ற தொழுகைக்கும் இளம் வயதினரை பள்ளிவாசல்களில் கனிசமாக காண முடிகின்றது. சுபுஹுத் தொழுகை சம்பந்தமாக மக்களிடையே குறிப்பாக இளஞர்களிடையே இன்னும் விழிப்புணர்வு ஏற்பட்டு இருந்தாலும் சில சமயங்களில் அவர்களிடம் இருக்கும் பொடுபோக்கைப் பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எடுத்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். 

12 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த ஒளவையார் “வைகல் தோறும் தெய்வனம் தொழு” என்பதும் “ஆலயம் தொழுவது சாலமும் நன்று” என்பதும் இஸ்லாமிய சமுதாயத்தில் பள்ளிவாசலில் சென்று தொழுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கும் மற்றும் காலைத் தொழுகையான பஜர் தொழுகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கும் பொருந்துவதைக் காண மகிழ்வாக இருக்கும். 

காலையில் எப்படியாவது வைகறை (பஜர்) தொழுகைக்கு எழுந்தாக வேண்டும். தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுது வந்தால் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். தூய்மையான் அதிகாலை காற்று உடல் நலத்திற்கு மிகவும் நல்லது விடியல் காலையில் பஜர் தொழுகைக்கு போகும்போது சுத்தமான ஆக்ஸிஜன் காற்றை சுவாசிப்போமே அப்போது வரும் உற்சாகம் அது மிகவும் உயர்வானது. 

பால் காரர்களும் பேப்பர் காரர்களும் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிப்பதால்தான் அவர்களால் வேகமாக செயல்பட முடிகின்றது.  சுபுஹு தொழுத நாட்களையும் சுபுஹு தொழாத நாட்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மைகள் உங்களுக்கு விளங்கும். அதிரைநிருபரில்  வளம் வரும் நண்பர்கள் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிப்பாகள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது

இன்ஷா அல்லாஹ் அடுத்த 6 வது தொடரில் கண்களின் முக்கிய பாகங்கள்  அதன் அமைப்பு பற்றியும் பார்வை பாதிப்பை பற்றியும்  பார்போம்
தொடரும்...
அதிரை மன்சூர்

கண்கள் இரண்டும் - தொடர் - 4 21

அதிரைநிருபர் பதிப்பகம் | September 22, 2013 | , , ,


பார்க்கக்கூடாது என்று  தடை விதிக்கப்பட்டவற்றை மீறி காணும் போது பெரும்பாலோரில் சிலர் மாட்டிக் கொள்வதுண்டு. அதுபோன்ற நிகவுழ்வுகளை நீங்களும் பார்த்து இருப்பீர்கள் அப்படிபட்ட சம்பவங்கள் சவூதியில் நடந்தால் தலை போய்விடும். உண்மையிலேயே பிடிபட்டால் தலை வெட்டுதான். 

மேலும், சவூதி அரேபியாவில் தடைவிதிக்கப்பட்ட வீடியோக்கள் பார்ப்பது குற்றம். மற்ற நாடுகளிலும் குற்றமாக இருந்தாலும் சவூதியில் இதற்கு கடும் தண்டனை கொடுப்பார்கள்.    அப்படி தகாத வீடியோக்கள் பார்த்து யாரும் பிடிபட்டால் மயக்க மருந்துகள் ஒன்றும் கொடுக்கப்படாமல் (இங்குள்ள குற்றவியல் சட்டப்படி) அவர்களின் விரல் நகம் கழற்றப்பட்டது, அதே போன்று சவூதியில் பெண்களை உன்னிப்பாக (கூர்ந்து) பார்க்கக் கூடாது பார்த்து பிடிபட்டால் கசையடிகள் கொடுக்கப்பட்டது. 100 கசையடி 200 கசையடி இப்படியாக குற்றத்திற்கேற்ப கசையடிகள் மாறுபடும். 100 கசையடிகள் என்றால் தொடர்ந்து தரமாட்டார்கள்.

அப்படி தொடர்ந்து கசையடி கொடுக்கப்பட்டால் கசையடி வாங்கியவரின் மையத்தைத்தான் பார்க்க முடியும், ஆதலால் கசையடி வாரத்திற்கு 20 வீதம் தவணை முறையில் கொடுக்கப்படும். ஒவ்வொரு கசையடியும் உம்மாவிடம் குடித்த பால்யாவும் வெளியேறி விடும் என்று சொல்லப்படுகின்றது. இந்த தண்டனைகள் யாவும் ஒவ்வொரு ஜும்மா தொழுகைக்கு பின் ஜும்மா பள்ளியின் வளாகத்திலேயே கொடுக்கப்படும். இவைகள் யாவும் பார்வையைப் பாதுகாக்காததால் தானாக வாங்கிக் கொள்ளும் தண்டனைகள்.

பாதுக்க வேண்டிய  பார்வையை   பாதுகாக்கப்படாமல் விதிகள் மீறும்போது அரங்கேறும் நிகழ்வுகள். இப்பொழுது அந்த தண்டனைகள் குறைக்கப்பட்டுள்ளதா? அல்லது  எடுக்கப்பட்டு விட்டதா? தெரியவில்லை. மேற்சொன்ன காட்சிகள்  15 வருடங்களுக்கு முன்பு அடிக்கடி அரங்கேறும் என்பது பல வருடங்கள் சவூதியிலே வாழ்ந்தவர்கள் மற்றும் ஆரம்ப காலத்தில் சவூதியில் வாழ்ந்த சகோதரர்கள் அத்தனை பேரும் கண்ட அல்லது கேள்விபட்ட காட்சிகள் தான் அவைகள். இப்பொழுது அந்த தண்டனைகள் ஒருவேளை இருந்தாலும் அதிகமாக அவ்வாறு தண்டனைகள் வழங்கும் வழிமுறை காணப்படுவதில்லை.

இந்த உலகத்தில் நம்மை போன்ற மனிதர்களால் கொடுக்கப்படும் தண்டனைகள் இப்படி என்றால் மறுமையில் இறைவனால் கொடுக்கப்படும் தண்டனைகள் எவ்வளவு கடுமையாக இருக்கும். அல்லாஹ்தான் எல்லோருடைய பாவங்களையும் மன்னித்து நம் அனைவரையும் ஈமானுள்ள மக்களாக மாற்றி நல்ல ஈனமானுடன் மரணிக்கச் செய்து அவனுடைய தண்டனைகளிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

பிறவியிலே கண் பார்வை இழந்தவர்கள், கண் பார்வை உடையவர்களை விட சொர்க்கம் செல்லும் வாய்ப்புகள் அதிகம். அவர்களின் சுய தேவைகளை பூர்த்தி செய்ய புறக்கண் இல்லாவிட்டலும் அகக்கண் திறந்து அதன் மூலமாக சிறப்பாக செயல் படுகின்றனர். பாவம் இழைக்க துணையாக இருப்பது புறக் கண்ணே. புறக் கண்கள் இல்லாவிட்டால் அந்த கண்களினால் பாவமிழைப்பது மிக மிக  குறைவாகத்தான். இருக்கும் அல்லது இருக்காது. ஆனாலும் கண்கள் இரண்டும் இல்லாமல் சில பேரின் அற்புதமான நிகழ்வுகளும் உண்டு.

உதாரணத்திற்கு நமதூர் காதிர் முஹைதீன் கல்லூரியிலே லெக்சரராக ஒரு இஸ்லாமிய சகோதரர் பணியாற்றினார். இன்னும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார் என்று நினக்கின்றேன். பிரவியிலேயே பார்வை இல்லாமல் பிறந்தவர் என்பது குறிப்பிட தக்கது. பார்வை இல்லாமல் அவரும் கல்வி கற்று, பார்வை உடையோருக்கு கற்றும் கொடுக்கின்றார் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை சிந்திக்க கடைமை பட்டுள்ளோம்.

அதுவல்லாமல் சமீபத்தில்   யு-டியூபில் ஒரு வீடியோ வெளியாகி இருந்தது அதில் பிரவியிலேயே பார்வயைப் பெறாத  சிறுவன் ஒருவன் அல்குர்ஆன் 30 ஜுஸையும் மனப்பாடம் செய்து பிறருக்கு எத்தி வைக்கும் எண்ணம் இருப்பதையும் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தது மனதை தொட்ட வீடியோவில் அதுவும் ஒன்று. அல்லாஹ் நாடினால் எல்லாமே சாத்தியமாகும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டே, இப்படி அகக்கண்ணை திறக்க வைத்து இறைவன் எத்தனை பெரிய வேலைகளை  பார்வை இல்லாதவர்களிமே வாங்குகின்றான் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரை மிக அன்புடன் அழைக்கும்போது கண்களின் முக்கியத்துவத்தை பிரதிபளிக்கும் விதமாக கண்ணா என்றும் கண்ணே என்றும் அழைப்பது உண்டு. உறுப்புகளில் முதலிடம் பெறுகின்ற கண்ணை, ஒருவர் தாம் மிக அதிகமாக நேசிப்பவர்களுக்கும், ஈன்றெடுக்கும் குழந்தைகட்கும் நிகராகக் கருதத் தொடங்கினர். எனவே தான் விருப்பமானவர்களை அன்பொழுக அழைக்கின்ற போதும், குழந்தையை அன்போடு விளிக்கும் போதும், “கண்ணே”  என்று அழைக்கின்றனர். 

இதன் முதல் பதிவின் பின்னூட்டத்தில் மு.செ.மு. நெய்னா முஹம்மது கூறியபடி பாசத்தின் வெளிப்பாடாய், அன்பின் உச்சமாய் நம் ஊர் பெரியவர்கள் பெண் பிள்ளைகளை "கண்ணான உம்மாவே" என்றும் ஆண் பிள்ளைகளை "கண்ணான வாப்பாவே" என்றும் அழைப்பார்கள். அப்படி கண்ணை போன்று நம்மை பாதுகாத்த அவர்களை, நாம் வளர்ந்ததும் அவர்கள் நமக்கு உடலாலும் உள்ளத்தாலும் பொருளாலும் பணத்தாலும் நமக்கு செய்த பெரும் தியாகத்தை எண்ணிப் பாராமல் அவர்களை கவனிப்பார் யாருமின்றி விட்டு விடுவது எவ்வளவு பரிதாபத்துக்குரியது என்பதை நாம் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.  

இல்லையேல் பின்னால் தான் பெற்ற பிள்ளைகளால் இதேபோல் நிந்திக்கப்படுவாய் என்பதையாவது மனதில் வைத்து தாய் தந்தை செய்த தியாகத்திற்கு இல்லாவிட்டாலும் தனது சொந்த நலனுக்காவது தாய் தந்தையை நன்கு கவனிக்க தவறக்கூடாது. என்பது நியதி. இதை நன்கு ஒவ்வொருவரும் மனதில் பதியவைக்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு நாம் கண்களாக இருந்தோம். நம் தாய் தந்தையரை நமது இரு கண்கள் போன்று நன்கு கவனித்துக்கொள்வோம்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த 5 வது தொடரில் பஜ்ரு தொழுகையை நிறைவேற்ற அதிகாலையில் கண் விழிப்போரை பற்றியும் பார்போம்.
(தொடரும்)
அதிரைமன்சூர்

கண்கள் இரண்டும்..! - தொடர் - 3 36

அதிரைநிருபர் பதிப்பகம் | September 16, 2013 | , , , , ,

பேசும் கண்கள்

பார்வைகள் பலவிதம் அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம் ஒவ்வொருத் தரும் பார்க்கும் பார்வைகளிலே அவர்கள் எண்ணங்களை புரிந்து கொள்ள முடிகின்றது. அவரவர்கள் பார்வைக்கு தகுந்தாற்போல் அர்த்தங்கள் மாறு படுகின்றன கோபப் பார்வை, சந்தேகப் பார்வை, முரட்டுப் பார்வை, சந்தோஷப் பார்வை, ஆச்சரியப் பார்வை, காமப் பார்வை, திருட்டுப் பார்வை என நிறைய இனம் பிரிக்கலாம். ஆக கண்களினால் கோபம், சந்தோஷம், துக்கம், காமம், சந்தேகம் எல்லா வற்றையும் கண்களே பேசி முடிக்கின்றது. ஆனால், இறைவனின் கட்டளைகள் அடிக்கடி மறக்கடிக்கப்பட்டு அந்தப்பார்வை தெளிவற்ற பார்வையாக பார்ப்பதால் தனது வாழ்க்கையில் எத்தனை மாற்றங்களை பலர் சந்திக்க நேரிடுகின்றது. 

காமப்பார்வை

சில பெண்களின் காமப்பார்வை ஒன்றே போதும் ஆண்களை வீழ்த்த, கண்களில் சாரயத்தை வார்த்து, எதிர்ப்பட்ட அல்லது தான்  விரும்பும் ஆண்களுக்கு அருந்தச்செய்து,  போதையூட்டி, காமுகராக்கி, கலியாட்டம் ஆடத்துடிக்கும் காமுகிகளிடம் தமது வாழ்க்கையில் தடம் புரண்டவர்களும் வாழ்க்கையை தொலைத்தவர்களும், வாழ்க்கையில் மாட்டிக் கொண்டவர்களும்  எண்ணிலடங்காது. இப்படிபட்ட காமப் பார்வைதான் இளைஞர்களையும், மாணவர்களையும், வாலிபர்களையும் சமுதயாத்தில் உண்மையிலேயே நல்லவனாக வாழ்ந்து வருபவர்களையும், ஆன்மீக வாதிகளையும், சமுதாய உழைப்பாளிகளையும், அரசியல் வாதிகளையும், வேலைக்காரர்களையும், தொழிளாலிகளையும் இப்படி யாரையும் விட்டு வைக்காது ஏற்கனவே பல ஊடகங்களால் காம இச்சைகளில் தூண்டபட்டிருக்கும் இவர்கள் அனைவருக்கும் இது ஒரு வடிகால் போன்று அமையும் இந்த பார்வையின் தாக்கம்  அவர்களை ஒரு வினாடியில் விழவைத்து விடுகின்றது.

வலையில் விழுந்தவர்களின் சந்திப்பு கள்ளத்தனமாக தொடர்கின்றது இருவரும் தவறிழைக்கும் போதோ அல்லது தவறிழைக்க முனையும் போதோ பார்க்க கூடாத கண்களிடம் மாட்டிக் கொண்டு அவர்களின் மானம் போய், பொதுமக்கள் மத்தியில் கட்டிவைத்து அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு அவரின் பெயர் சமூகத்தில் கெட்டுப்போகும் வரையிலும் அந்த “காமப்பார்வை” உறுதுணையாக இருந்து சம்பந்தப்பட்டவர்களை படுபாதாலத்தில் கொண்டு போய் தள்ள இறுதிவரையும் வேலை செய்யும் என்பதை ஒவ்வொருத்தரும் அறிந்திருந்தும், அந்த “காமப் பார்வைக்கு” உட்படுவோர், காமப் பர்வை வீசப்படும் நேரத்தில் இதை பற்றியும் அல்லது வேறு எதை பற்றியும் சிந்திக்கவிடாமல், அவர்களின் மூளை, அவர்களின் எல்லா செயல்களையும் செயல் இழக்க செய்துவிட்டு ஸ்பெஷலாக காமப்பார்வையின் காரணமாக காமத்திற்கு மட்டும் மூளை மிகவேகமாக வேலை செய்ய ஆரம்பித்து சம்பந்தப்பட்டவர்களை படுபாதாளத்தில் விழவைக்கும்.  இப்படிபட்ட தவறான நிகழ்வுகளுக்கு மிகவும் முக்கிய காரணமாக அமைவது இந்த கண்கள் இரண்டினால் வீசப்படும் காமப்பார்வைதான் என்பதை யாரும் மறுக்க முடியாத கசப்பான உண்மை.

“பெண்களின் காமப்பார்வை” என்பது ஆண்களை விஷம்வைத்து சாகடிக்கும் கூரிய வாள். 

“பெண்களின் காமப்பார்வை” என்பது இரத்தமின்றி காயமின்றி ஆண்களை வீழ்த்தும் மிகப்பெரிய ஆயுதம்.

அதனால்தான் சிலபேருக்கு சில காரியங்கள் நடக்க வேண்டுமென்றால் பெண்களை ஏவி விட்டு காய் நகர்த்தும் அவலங்களும் நிறைய நடக்கின்றன. அந்த காமப்பார்வையில்  தூவும் துளி விஷம், ஆண் வர்கத்தை சாகடித்துவிடுகின்றது.

இந்த பார்வை மனிதனின் பாதைகளை மாற்றி அமைத்து விடுகின்றன.

ஆண்களுக்கு இந்த காமப்பார்வை இல்லை காரணம் இவனுக்கு ஒரு பார்வையை அடுத்து மறுபார்வையே போதும் இவன் விழுவதற்கு அதனால்தான் இருபாலருக்குமே பார்வையில் இத்தனை பிர்ட்சனைகள் இருப்பதால் அடிக்கடி நமக்கு பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்று போதிக்கப்படுகின்றது. இறைவனும் அவனது மறையில் கூறுகின்றான்.

‘அவர்கள் தங்கள் பார்வையை கீழ்நோக்கியே வைத்து, கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும்.’ (அல்குர்ஆன் 24:31)

என்ற இறைவசனத்தின் மூலம் உத்தரவிட்டது. பாவங்களில் பெரும்பாலனவை பார்வையாலேயே நிகழ்கின்றன. தீய பார்வையால் தீய உணர்வுகள் ஏற்பட்டு பாவமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். 

அந்த தீய உணர்வே ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளவே‘பார்வையை தாழ்த்தி கற்பைக்காத்துக் கொள்ளவும்’ என அருள்மறை சுறுகிறது. கண்களினால் விபரீதங்கள் ஏற்படும் என்பதை முன்னெச்சரிக்கை செய்வதற்காகவே, ‘கண்களும் விபச்சாரம் செய்கின்றன.  கண்களின் விபச்சாரம் பார்வை  என்றார்கள் கருணை  நபி(ஸல்) அவர்கள்.   ஜரீர் இப்னு அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம்,  திடீரெனப்படும் பார்வையைப் பற்றிக் கேட்டபோது, ‘உம் பார்வையை (உடனேயே) திருப்பிக் கொள்ளும்’ என சட்டெனப் பதில் சொன்னார்கள்.  திடீர் பார்வை தீய எண்ணம் எதுவுமின்றி ஏற்படுவதால் குற்றமில்லை. அதைத் தொடர்ந்து மீண்டும் பார்க்கும் பார்வைதான் பாவமானது என்றார்கள். மனிதன் தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அவனே பொறுப்பாகிறான்.

‘நிச்சயமாக காது, கண், இருதயம் ஆகிய ஒவ்வொன்றுமே (அதனதன் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும் (அல்குர்ஆன் 17:36) 

என்ற இறைவசனம் இங்கு சிந்திக்க தக்கதாகும். பர்தா (ஹிஜாப்)வுடைய ஆயத் அருளப்பட்ட வேளை, ஒரு நாள் நபி நாயகம்(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரான உம்முஸல்மா(ரலி), மைமூனா(ரலி) ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.  அப்போது அங்கே கண் தெரியாத அப்துல்லாஹ் இப்னு உம்முமக்தும்  வந்தார்கள். உடனே அவ்விருவரையும் வீட்டினுள் செல்லுமாறு உத்தரவிட்டார்கள் நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள். அவருக்குத்தான் கண் தெரியாதே! எங்களைப் பார்க்கவும் தெரிந்து கொள்ளவும் முடியாதே! யாரஸுலல்லாஹ்!’ எனக் கேட்டார்கள் மனைவியர் இருவரும். ‘சரிதான், நீங்களிருவரும் குருடர்கள் இல்லையல்லவா? நீங்கள் அவரைப் பார்க்க மாட்டீர்களா?  எனத் திருப்பிக் கேட்டதும் உள்ளே சென்று மறைந்து கொண்டார்கள். - (திர்மிதீ, நஸயீ,அபூதாவூது) 

இந்த உத்தரவின் மூலம் ‘பெண்கள் அந்நிய ஆண்களைப் பார்ப்பது கூடாததைப் போலவே, ஆண்களும் அந்நியப் பெண்களைப் பார்ப்பது கூடாது என இஸ்லாம் தடைவிதிக்கிறது. இருவரது பார்வையையும் சைத்தான் தன் வலையில் வீழ்த்தப் போதுமானவன். எனவே, தீய உணர்வுகளை ஏற்படுத்தும் பார்வையிலிருந்து தற்காத்துக் கொள்வது ஒவ்வொருவரது கடமையாகும். 

மிகவும் கூடுதலான பாவங்கள் நம் கண்களாலேயே ஏற்படுகின்றன.. நாம் பார்க்கும் ஒவ்வொரு பார்வைக்கும் பல கட்டுப்பாடுகள் உண்டு. அந்த கட்டுப்பாடுகளை நாம் சரியாக கடைபிடித்தாலே பாவங்கள் இன்றி நிச்சயமாக நாம் மேன்மை அடைய முடியும்.

வெளியில் செல்லும்போதும், மற்றவர்களின் வீட்டிற்கு செல்லும்போதும் கடைத்தெருவிற்கு செல்லும்போதும் நம்முடைய பார்வை எப்படி இருக்கவேண்டும் என்பதை ரசூலுல்லாஹ் நமக்கு காட்டி தந்திருந்தாலும் தற்போது அவற்றை  தப்லீக் இயக்கத்தில் கற்பிப்பதோடு நின்று விடாமல் நடைமுறை படுத்தி செயல் வடிவம் கொடுத்து அதன் படி நடந்து வருகின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. 

உண்மையிலேயே அது வரவேற்கதக்க விஷயம். சில நல்ல விஷயங்களை அது எந்த இயக்கங்கள் சொன்னாலும் செய்தாலும் அது அல்லாஹ் அல்லாஹ்வின் ரசூலின் சொல், செயல், அங்கீகாரம் இவற்றுக்கு மாறுபடாமல் இருக்கும் வரை அதை நாமும் பின்பற்றலாம். அந்த வகையில் தப்லீக் இயக்கம் நடைமுறைபடுத்திக் காட்டும் இந்த விஷயத்தை ஒதிக்கிவிட முடியாது. அனால் தப்லீக் இயக்கத்தின் மற்ற சில விசயங்கள் சர்ச்சைக்குறியதே என்பது ஏகோபித்த கருத்து. நல்லதை மட்டும் நாம் எடுத்துகொள்வோம். 

இத்தொடரின் தொடரின் தொடர்ச்சியாக இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் தடை விதிக்கும் காரியங்களை தடை மீறி பார்க்கும் போது சவூதி அரேபியாவில் நடைபெறும் சில நிகழ்வுகளை காண்போம்.
(தொடரும்)
அதிரைமன்சூர் 

கண்கள் இரண்டும்...! - தொடர் - 2 37

அதிரைநிருபர் பதிப்பகம் | September 09, 2013 | , , ,


நாம் பெற்றுள்ள ஆறு அறிவுகளில் நான்காவது அறிவு கண்களின் வழியாக பெறப்படும் பார்வைப் புலனும், கண்ணால் பேசப்படும் வார்த்தை ஜாலங்களுமே,. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முகத்தின் அழகிற்கு மெருகூட்டுவதும், கவர்ச்சியைக் கொடுப்பதும் கண்களே. மனித உடலில் கவர்ச்சிப் பிரதேசம் கண்கள். உணர்வுகளையும், உண்மைகளையும் வெளிப்படுத்தும்  மிகச்சிறந்த உறுப்புகள் அவைதான்.

முகத்தின் மெருகிற்கு முத்திரை பதித்தது போல் இருக்கும் கண்கள் ஆரோக்கியமாகவும், அழகாகவும் ஜொலிக்க வேண்டும் என்று  எல்லாப் பெண்களும் விரும்புகிறார்கள். அதனால் எல்லா பெண்களும் கண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மை இடுதல், இமைகளை சுற்றி கலர் இடுதல் போன்றவைகளை செய்து கண்களை கவர்ச்சிகரமாக காட்டுகின்றனர். நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்கள். கண்களில் உண்டாகின்ற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, நமது அழகையும் கெடுத்து விடுகின்றன. நம்முடைய அகத்தின் அழகை மற்றவர்களுக்கு படம் போட்டு காட்டும் பலமிக்க உறுப்பு'


“கண்ணே பாப்பா
என் கனிமுத்து பாப்பா” 

என்ற  பாடல் வரிகளில் குழந்தைகளின் கண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடலின் ஆரம்ப வார்த்தையே கண்ணை கொண்டு ஆரம்பிக்கின்றார் கவிஞர். அந்த கண்களின் அழகை இந்த குழந்தைகளின் முகத்தில் பாருங்கள்.  இறைவனின் படைப்பின் கண்களுக்கு உள்ள அற்புதத்தை பற்றி விஷுவலாக காட்ட வேண்டும் என்பதற்காக மட்டுமே இப்படி ஒரு உதாரணம். இந்த குழந்தைகளின் பார்வை ஒன்றே போதும் நம் உள்ளத்தில் உள்ள கவலைகள்யாவும் பறந்து தவிடு பொடியாகிவிடும்.

நம்முடைய உடலில் மூளைக்கு அடுத்து மிக சிக்கலான உறுப்பாக கருதப்படுவது கண்கள்தான். கண்கள் தன்னுள்ளே 2 மில்லியன் வேலைப் பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 36,000 தகவல்களை பரிமாற்றம் செய்யும் ஆற்றல் நம் கண்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது. பார்வை குறைபாடு இல்லாத ஒருவரால் 14 மைல்களுக்கு அப்பாலுள்ள விளக்கின் வெளிச்சத்தை பார்க்க முடியுமாம்.

மனிதனுக்கு கிடைக்கக்கூடிய மொத்த அறிவில் கண்களின் பங்களிப்பு மட்டும் 85 வீதம் ஆனால் இரவு பகல் என்றில்லாமல் எந்த ஒரு நொடியிலும் முழுமையாக செயல்படும் கண்கள்களுக்கு ஓய்வே இல்லை என்று சொல்லலாம்.

நமது உடலில் எத்தனையோ உறுப்புகள் இருக்கின்றன. ஆனால் நாம் இந்த உலகத்தை மிகத் தெளிவாக பார்த்து தெரிந்துகொள்ள, நன்கு உணர்ந்துகொள்ள நமது இரு விழிகள்தான் முக்கிய காரணமாகின்றன. இறைவன் நம் உடலிலே இவ்வளவு பெரிய அத்தாட்சிகளை வைத்திருக்கும்போது அவற்றை சிறிதும் எண்ணிப் பாராமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன்றைய அவசர உலகில் வாழும் நம் சமுதாயம் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது என்பது புரியாத புதிராக இருக்கின்றது.

திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
51:20   وَفِي الْأَرْضِ آيَاتٌ لِّلْمُوقِنِينَ

51:20. உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.

51:21   وَفِي أَنفُسِكُمْ ۚ أَفَلَا تُبْصِرُونَ

51:21. உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன; (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?

அந்த அத்தாட்சிகளில் உள்ள சிலவற்றை கொஞ்சம் அலசிப் பார்ப்போம்

உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் அவை ஆற்றும் பணிகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை.  நாம் உயிர் வாழவும் நமது உடல் இயங்கவும் எல்லா உறுப்புக்களின் கூட்டு செயல்பாடுகளும் இன்றியமையாதவையாகும் அகப்புலன் புறப்புலன் என இரண்டாகப் பகுக்கலாம். கண், காது, மூக்கு, கை, கால் போன்றவை வெளியில் புலனாகுபவை. மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை உடலின் உள்ளே அமைந்தவையாகும். ஓர் உறுப்பின் அருமை, அதை இழக்க நேரும் போதோ, அது பழுதுபட்டுச் செயலிழக்கும் போதோ தான் முழுமையாக உணரப்படுகிறது. 

உடல் உறுப்புகளில் இதுமதிப்பு மிக்கது, இது மதிப்பு குறைந்தது என்று எந்த உறுப்பையும் கூறுதல் இயலாது. அந்த அளவிற்கு ஒவ்வொன்றும் உடல் இயக்கத்திற்குத் துணை புரிகின்றது. எனினும் மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் இல்லாமல் ஒரு மனிதனால் கணப்பொழுதும் வாழ இயலாது. ஆனால் கண், காது, கை, கால் போன்ற உறுப்புகள் இல்லாமல் ஒருவன் வாழ முடியும். அவ்வாறாயின் மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் உயர்ந்தனவா? என்று கேட்டால், இல்லை என்றே பதில் கூறலாம். ஏனெனில் மனிதன் நிறைவாழ்வு வாழத் தேவையான கல்வியறிவைப் பெறுவதில் கண்ணும், செவியும் முதலிடம் பெறுகின்றன. இவை இரண்டுமே நமது அறிவுக்கு விருந்து தரக்கூடிய உறுப்புகளே

மேலும் கண்களை பாதுகாக்கும் இமைகளின் அற்புதத்தையும் அதன் ஆற்றலையும் நம் கண் முன்னே சிறிது நேரம் கொண்டு வருவோம். மழை அல்லது பனியின்போது கார், பஸ்சில் சென்றால் கவனித்திருக்கலாம். அப்போது `வைப்பர்’ அசைந்து கண்ணாடி மீது விழும் நீர்த் துளிகளைத் துடைத்து டிரைவர் தெளிவாகப் பார்க்க உதவுகிறது. ஆனால் எந்த `வைப்பரும்’ நம் கண் இமைகளுக்கு நிகராகாது. 

நம் கண் இமைகள் மேலும் கீழும் அசைந்து வைப்பரை போல் பணிபுரிகின்றன. மெல்லிய தோலால் ஆன இமைகள் நமது பார்வையைத் தடுக்காதபடி அவ்வளவு வேகமாக அசைகின்றன. இமைகள் தாமாகவே தமது பணியைச் செய்கின்றன. ஆறு வினாடிகளுக்கு ஒருமுறை நாம் இமைக்கிறோம். அதாவது மனிதன் தன் வாழ்நாளில் இரண்டரைக் கோடி முறை இமைக்கிறான்.  இமைப்பது கண்களை எவ்வாறு பாதுகாக்கிறது? இமையில் உள்ள முடிகள் விரிவாக அமைந்தவை. அதன் பணி, தூசுகள் கண்ணில் விழாமல் பாதுகாப்பதே. மழை பெய்யும்போதோ, காற்று மணலைச் சுற்றி வீசும்போதோ இமைகள் தாமாகவே மூடிக்கொள்கின்றன.  

மழைநீர், வியர்வை ஆகியவை கண்களில் விழாமல் ஒரு பக்கமாக வடியும்படி புருவங்கள் தடுப்பாக இருக்கின்றன. மேலும், இமைப்பதால் கண்கள் ஈரத்துடன் இருக்கவும், எளிதில் சுழலவும் முடிகிறது. கண் இமையோரங்களில் இருபது, முப்பது சிறு சுரப்பிகள் உள்ளன. இமைகளுக்கு இடையே இவற்றின் திறப்பு அமைந்துள்ளது. கண் இமைகள் மூடும்போது இந்தச் சுரப்பிகள் நீரைச் சுரக்கின்றன. இந்த நீர், கண்களுக்கு நன்மை பயக்கிறது. கண்ணீர்ச் சுரப்பியில் உள்ள கண்ணீர் இவ்வாறுதான் பயன்படுகிறது. அதனால் ஒவ்வொரு முறை இமைக்கும் போதும் நாம் அழுகிறோம் என்றே கூறலாம். இமைப்பதின் முக்கியத்துவத்தையும் இமைப்பது நின்றுவிட்டால் என்ன விபரீதங்கள் ஏற்படும் என்பதையும் நாம் சிறிது சிந்திக்க கடைமைபட்டுள்ளோம்.

மேலும் இறைவனின் படைப்புகளின் ஒவ்வொரு உறுப்புகளின் செயல் பாட்டை நாம் எல்லோரும் நன்கு அனுபவிக்கின்றோமே தவிர அந்த உறுப்புகளின் செயல் பாட்டை பற்றி எப்பொழுதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? அந்த உறுப்புகளில் ஏதாவது குறைபாடுகளோ அல்லது செயளாற்றத்தில் சிறிது மாற்றங்கள் நிகழும்போது டாக்டரை அனுகின்றோம், டாக்டர் எழுதித் தரும் ப்ரிஸ்கிரிப்ஸனைக் கொண்டு வந்து கண்ணாடியை வாங்குகின்றோமே தவிற அப்பொழுது கூட இறைவனின் நினைப்பு வருவதில்லை இறைவன் நம்மிடம் வைத்திருக்கும் இந்த அத்தாட்சிகளை நாம் பார்ப்பதுமில்லை கவனிப்பதுமில்லை.
தொடரும்...
அதிரை மன்சூர்