Showing posts with label கண். Show all posts
Showing posts with label கண். Show all posts

“கண்களைக் காக்க வாங்கோ!” 18

அதிரைநிருபர் பதிப்பகம் | February 16, 2015 | , , , , , ,


சில நாட்கள் முன்பு மதுரையில் உள்ள இந்த ‘அரவிந்த்’ மருத்துவ மனைக்கு Routine Check-up காகச் சென்றேன்.  வரவேற்புக் கவுண்டரில் ரூபாய் ஐம்பது மட்டும் செலுத்தி, கோப்பு திறக்க ஏற்பாடு செய்தாகிவிட்டது.  அரை மணி நேரம் காத்திருந்த பின், நர்ஸ் ஒருவர் சற்று உயரமான பலகைக் கட்டை மீது ஏறி நின்று, “நான் பெயர் வாசிக்கும் எல்லாரும் எனக்கருகில் வந்து கூடலாம்” என்று மைக்கில் அறிவித்து, ஒவ்வொருவராகப் பெயர்களை வாசித்தார்.

“அகமது வாங்கோ. அந்தோணி வாங்கோ.  புஷ்பம் வாங்கோ.....” என்று பட்டியலை வாசிக்கத் தொடங்கி, சுமார் பத்துப் பேர்களைத் தன்னருகில் கூடச் செய்தார். அதனைத் தொடர்ந்து, வெள்ளுடைச் செவிலி ஒருவரைக் காட்டி, “இவரோடு போங்கோ” என்றார்.

சிறிது தூரம் அந்தச் செவிலியைத் தொடர்ந்த பின்னர், அவர், “இந்தக் கவுன்டருக்கு முன்னால், வரிசையாக நில்லுங்கோ” என்றார்.  நின்றோம். இங்குதான் file opening செய்யப்பட்டது.  

BP உண்டா?  sugar உண்டா? என்பது போன்ற விசாரணை செய்த பின்னர், நமது பெயரில் ஒரு கோப்பு (file) உருவாக்கப்பட்டது.  அதைக் கையில் வாங்கியவுடன், மறுமையில் நமது செயலேடு நம் கையில் தரப்பட்டது.,

إقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا  (நீயே உன் புத்தகத்தைப் படித்துப் பார், மனிதா! இன்று உனக்கு எதிராகக் கணக்குப் பார்க்க நீயே போதும்.) (17:14) என்ற மறை வசனம்தான் என் இதயத்தில் இடி இடிக்கத் தொடங்கிற்று!  இதற்குள்,

“அகமத் வாங்கோ, சக்கீனா வாங்கோ!  நீங்க இந்தச் சேர்ல உக்காருங்கோ.  அவரை முடித்துவிட்டு, உங்களைக் கூப்பிடுவார் டாக்டர்”. என் இல்லாளை என்னை விட்டுக் கழற்றிவிட இவளுக்கு என்ன ஒரு தெனாவெட்டு!   ராக்கெட் தனது வான்வெளிப் பாதையில் முன்னேறிச் செல்லும்போது, அதன் கீழ்ப்பகுதி கழன்று விழுந்து, அதன் முன் பகுதி முன்னேறிச் செல்வது போன்று, முதல் மூன்று இடங்களில் பார்வைப் பரிசோதனைகள்.

ஐந்தாவது பிரிவில் eye pressure சோதனை.  ‘கண்ணுக்குமா ப்ரஷ்ஷர் இருக்கும்?’  “ஆமாம்” என்கிறது கண் மருத்துவ நிலையத்தின்.  இந்தப் பிரஷ்ஷர் பிரிவு.  இதற்காக ஐம்பது ரூபாய் செலுத்தி பில் வாங்கிக் கொண்டபின், ஆறாவது பிரிவில் காத்திருப்பு.  அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால், நேரம் சற்று அதிகமாயிற்று. எனது பெயர் கூப்பிடப்பட்டபோது, எழுந்தேன்.  நர்ஸ் காட்டிய அறைக்குள் சென்றபோது, டாக்டர் எனக்கு வழக்கமான BP பார்க்கும் முறைப்படி இரத்த அழுத்தப் பரிசோதனை செய்தார்.

ஏழாவது பிரிவில் டாக்டர் என் இரு கண்களிலும் சொட்டு மருந்தை ஊற்றினார்.  தாடையையும் நெற்றியையும் வைத்து, மருத்துவரின் ஆய்வுக்கு உள்ளானதன் பின்னர், அவர் ‘glovcoma’ என்று என் கோப்பில் எழுதினார்.  இது cateract என்ற கண் புரை நீக்க அறுவை சிகிச்சைக்கு முந்திய நோய்.  

மூன்றாவது மாடியின் gloucoma பிரிவின் 304 ஆவது காத்திருப்புப் பகுதி. இங்கு இருந்த டாக்டர் வடநாட்டுக்காரர் போல் தெரிந்தது.  “க்யா பாத் ஹே?” என்றார்.  நான், “டீக்” சொல்லிவைத்தேன்; Just for formality.  அவர் ஒரு நிமிடம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.  பிறகு, முந்திய டாக்டர் எழுதிய ரிப்போர்ட்டை ‘கண்’ணும் கருத்துமாகாகப் பார்த்தார்.  ‘படித்தார்’ என்றுதான் சொல்லவேண்டும்.

Gloucoma பிரிவு முதல் மாடியின் பதினொன்றாம்
ஹாலில்தான் இருக்கிறது. அங்கு ஒற்றைக் கண் மறைத்த இஸ்ரேல் பிரதமர் ‘மொஷே தயான்’ போல், நான்கைந்து பேர் எனக்கு முன் அங்கே இருந்து, வானம் பார்த்து இருந்தனர். 

“உங்க பேர்தானே அகமது?” என்று என்னிடத்தில் வந்து கேட்ட நர்சுடன் போய், டாக்டர் ஒருவரின் அறைக்குள் நுழைந்து, “Good adfternoon Doc” சொன்னபோது, என்னை ஏற இறங்கப் பார்த்தார் அந்த லேடி டாக்டர்.  “என்னடா இது?  கைலி உடுத்தி, தலையில் தொப்பி வைத்து, நீண்ட தாடியும் வைத்து, நமக்கு ‘wish’ பண்ணுறார் இந்த பாய்!?” 

‘அதுக்கென்னம்மா? நீ உன் கடமையைச் செய்’ என்று சொல்ல நினைத்தேன்.  ஆனால் சொல்லவில்லை.  அனைத்து ஆவணங்களையும் பார்த்துவிட்டு, “இப்போ கண்ணாடிக்கு எழுதித் தாரேன்.  அப்றம், ஆறு மாசம் கழித்து வாங்கோ.  glaucoma ஆபரேஷன் செஞ்சுக்குவோம்.  வெறி சிம்பிள்”’ என்று சொல்லி என்னை அனுப்பிவைத்தார்.

அதன் பின்னர், நேற்றுத்தான் மறுபடியும் போக முடிந்தது.  இம்முறை பழைய ‘கேஸ்’ ஆனதால், ரிசப்ஷனில் காசு வாங்கவில்லை.  அதே ரோட்டீன் செக்கப் முறைகள்தான்.  ஆனால், அடுத்த நான்கு மாதங்களின்பின் கண்டிப்பாகப் போய், கண் புரை நீக்க வைத்தியம் செய்யத்தான்  வேண்டும் 

இதைப் படிக்கும் எல்லாரும் துஆச் செய்யுங்கம்மா!  செய்வீங்கதானே....?

அதிரை அஹ்மத்

கண்கள் இரண்டும் - தொடர் - 31 15

அதிரைநிருபர் பதிப்பகம் | April 07, 2014 | , , , ,


சென்றவாரத்தின் கண்களை அலங்கரித்தல் தொடர்ச்சியே இந்த வாரமும் தொடர்கின்றது இது உங்கள் கண்களை அழகாக்கும். இந்த தொடர் பெண்களுக்கு மட்டுமே

கண்களுக்கு உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் உதாரணமாக மஸ்காரா, காஜல் பென்சில், ஐ லைனர் போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வாங்குவது அவசியம். 

பழைய காஸ்மெட்டிக்ஸ் கண்களை பாதிக்கும். இரவு உறங்கும் முன் கண் மேக்கப்பை முழுதுமாக நீக்க வேண்டும். கண் மேக்கப்பை நீக்கவென்றே Eye Make up Remover என்று கடைகளில் கிடைக்கின்றது. பேபி ஆயில் கொண்டும் கண் மேக்கப்பை நீக்கலாம். தினமும் உறங்க செல்லும் முன் முகத்தை கழுவி விட்டு செல்வது கண்களுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது. 

அவ்வாறு இரவில் முகம் கழுவிவிட்டு படுப்பதால் கண்ணில் வரும் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் அறவே அண்டாது. கண்களை அழுத்தித் தேய்ப்பது, தூசு விழுந்தால் கசக்குவது போன்றவற்றை தவிர்த்து கண்களை தண்ணீர் கொண்டு கழுவுவது நல்லது. இப்படி சில அடிப்படை விஷயங்களை ஒழுங்காக கடைபிடித்தோமென்றால் நமது கண்கள் அழகாக, பளிச்சென்று இருக்கும்.

கண்களுக்கு தனி கவனம் செலுத்தி மேக் அப் போடுவதால் கண்களின் அழகு அதிகரிக்கும். முகத்திற்கும் தனி பொலிவு கிடைக்கும். கண்களுக்கு போடும் மேக்அப் சாதனங்களை சரியானதாக தேர்வு செய்யவேண்டும். 

கண்மை, ஐ லைனர், ஐ ஷேடோ போன்றவை தரம் வாய்ந்தவையாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அலர்ஜியினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.

கண்களுக்கு போடும் மேக் அப் கலர் சரியானதாக இருக்கவேண்டும். உங்களுடைய ஸ்கின் டோனுக்கு ஏற்ற சரியான கலரை தேர்ந்தெடுத்து போடவேண்டியது அவசியம்.

கண்களின் வடிவத்திற்கு ஏற்ப கவனம் செலுத்தி மேக் அப் போடவேண்டும். அப்பொழுதுதான் சரியான அளவில் அழகாய் மேக் அப் போடமுடியும். தரமான மேக் அப் கண்களுக்கு இரவில் திக்காகவும், பகல் நேரத்தில் லைட்டாகவும் மேக் அப் போடவேண்டும். 

அப்பொழுதுதான் இயற்கையான ஒரு லுக் கிடைக்கும். கண்கள் மென்மையானவை அவற்றிற்கு தனி கவனம் செலுத்தி மேக் அப் போடவேண்டும். 

லேட்டஸ்ட் மேக் அப் போடுவதன் இளமையாக, ஸ்டைலாக காணப்படுவீர்கள். முதலில் நல்ல தரமான பவுண்டேஷன் தடவ வேண்டும். பிறகு விருப்பமான நிறத்தில் ஐ ஷேடோ தடவ வேண்டும். 

காலை வேளைகளில் லைட்டான ஷேடுகளிலும் மாலை மற்றும் இரவு வேலைகளில் டார்க் நிறங்களையும் உபயோகிக்கலாம். பிறகு ஐ லைனர் தடவ வேண்டும். இப்போதெல்லாம் திக்காக ஐ லைனர் தடவுவதுதான் பேஷன். 

சிறிய கண்களாக இருந்தால் ரொம்பவும் திக்காகப் போட வேண்டாம். கீழ் பாகத்தில் முழுவதுமாக ஐ லைனர் தடவ வேண்டாம். 

பிறகு மஸ்காரா, காலை வேளைகளில் ஒரு கோட்டும் மாலை வேளைகளில் இரண்டு மூன்று கோட்டுகளும் தடவலாம். மஸ்காராவிலேயே இப்போது பிரவுன் நீலம் மாதிரி நிறங்கள் கூட வந்துவிட்டன. விருப்பமுள்ளோர் அவற்றையும் தடவிப் பார்க்கலாம். 

கடைசியாக காஜல் அதாவது கண் மை. இது கண்களுக்குள்ளே போகக் கூடியது என்பதால் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம். 

மேக் அப்பை கலைக்க: கண்களில் போடப்பட்ட மேக்கப்போடு இரவு தூங்கக் கூடாது. அதை அகற்றி விட்டே தூங்கச் செல்ல வேண்டும். 

கண்களின் மேக் அப் கலைக்கும் போது சோப், சோப் ஆயில் பயன்படுத்தவது கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே அதற்கென உள்ள கிளன்சர்ஸ் பயன்படுத்திதான் மேக் அப் கலைக்கவேண்டும்.

தினசரி இரவு தூங்கும் முன்பாகக் கண்களுக்குள் ஒரு துளி சுத்தமான விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டால் காலையில் கண்கள் பளிச்சென்று இருக்கும்..   

அடுத்து, சாதாரணமான மஸ்காரா உபயோகிக்காமல்  Volume Enhancer அல்லது Lash Fantasy   போன்ற மஸ்காரா உபயோகித்தால் கண் இமைகள் அழகாக தெரிவதுடன் கண்களும் எடுப்பாக தெரியும். 

Kohl  பென்சிலைக் கொண்டு கண்களின் கீழ் அழுத்தமாக மெலிதான ஒரே ஒரு லைன் மட்டும் போடுங்கள். இப்படி அழுத்தமான அதே சமயம் மெலிதான லைன் வேண்டுமென்றால்  Kohl pencil ஐ  ஒரு பேப்பரில் நன்றாக ஒரு முறை கிறுக்கிவிட்டு பிறகு உபயோகப்படுத்தினால் அழகாக வரும். அதிகமான அடர்த்தியில் Kohl பென்சிலைப் போட்டால் கண்கள் பளிச்சென்று தெரியாது. இன்னும் சிறிதாக தெரியும்.   

அழகு குறிப்புகள்:பெண்களின் இளமை கண்களில் தெரியும்!

பெண்களின் அழகைக் குறிப்பிடும்போது கவிஞர்கள் அவளின் கண்களைப் பற்றி கூறத் தவறுவதில்லை. கயல்விழி என்றும், காந்தக் கண் என்றும்,  

கண்களில் இருந்தே ஒரு பெண் எவ்வளவு இளமையானவள், எவ்வளவு இனிமையானவள் என்பதை மட்டுமன்றி  சொல்லி விடலாம். 

அத்தகைய அற்புதமான கண்கள் சரியான முறையில் பேணப்படாமல் போகின்ற போது நேருகின்ற கேடுகள் அநேகம். கண்கள் கவனிக்கப்படாமல் விடப்படுகின்ற போது கண்களைச் சுற்றிலும் சுருக்கங்களும், கருவளையங்களும் உருவாகி கண்களை ஒளிகுன்றச் செய்து காலத்திற்கு முந்தியே கண்களுக்குச் சோர்வையும், களைப்பையும் உண்டு பண்ணி மூப்படைந்த தோற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. 

உங்கள் கண்கள் பெரிய இமைகளைக் கொண்டிருப்பின்...

கண் இமைகளை சிறியது போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல் முனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷேடோக்களை இடவும்.

பிறகு அதே வர்ணத்தின் இளம் நிறத்தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தைக் கொண்டு முடியுங்கள்.

கண்ணின் முனைப்பகுதிகளில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள்.

சிறிய கண்களைக் கொண்டவர்கள்.. நன்கு அழுத்தமான வர்ண ஐ ஷேடோவைக் கொண்டு இமைகளின் மேற்புறங்களில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள்.

இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள். சிறிய கண்களும் தற்போது எடுப்பாகத் தோன்றும்.

உள்நோக்கி இருக்கும் கண்களுக்கு... கண்கள் மீது ஐ ஷேடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு, இமையின் முடிவில் அழுத்தமாக முடிக்கவும். 

மேலே குறிப்பிட்ட அணைத்து அழகு குறிப்புகளும் தங்கள் காவன்மார்கள் வழி தவறி போய்விடாமல் தங்கள் கணவன் மார்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள நினைக்கும் பெண்களுக்காக மட்டும் இது உங்கள் கண்களை அழகாக்கும். இந்த தொடர் பெண்களுக்கும்  இதற பெண்களுக்கும் தன் கணவன் மார்களுக்கு மட்டும் அழகு செய்து காட்டும் நோக்கத்தில் எழுதப்பட்டது

அடுத்து வரும் தொடரில் கண்களை பாதுகாப்பது பற்றி வரும்
(வளரும்)
அதிரை மன்சூர்

கண்கள் இரண்டும் - தொடர்-16 9

அதிரைநிருபர் பதிப்பகம் | December 16, 2013 | , ,


பார்வை கோளாறை சரிசெய்யும் கண் செல்கள்

கண் செல்களை வெளியே எடுத்து வளர்த்து, மீண்டும் கண்ணில் பொருத்தினால் பார்வை கோளாறுகள் நீங்கும் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கண்ணில் உள்ள செல்களை கொண்டே பார்வை கோளாறை சரிசெய்வது குறித்து இங்கிலாந்தின் சவுத் ஆம்டன் பல்கலைகழகம் ஆராய்ச்சி நடத்தியது.

இந்த ஆய்வு இங்கிலாந்தின் பிரபல கண் மருத்துவரும் பேராசிரியருமான ஆண்ட்ரூ லோடரி தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அவர் கூறுகையில், விழித்திரை பாதிப்பு காரணமாக பலர் பார்வை இழக்கின்றனர். இங்கிலாந்தில் சராசரியாக 70 வயது பெரியவர்களில் மூன்றில் ஒருவர் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற பாதிப்பு காரணமாக பார்வை இழக்கின்றனர்.  

கண்ணின் முன் பகுதியில் இருக்கும் கார்னியல் லிம்பல் செல், ஸ்டெம் செல்லுக்கான குணாதிசயங்களை கொண்டிருக்கிறது. இதை வெளியே எடுத்தால் வளருமா என்பது தொடர்பாக தீவிர ஆராய்ச்சி செய்து வருகின்றார்கள்.. பார்வை பாதிக்கப்பட்டவரின் கார்னியல் லிம்பல் செல்லை வெளியே எடுத்து முதலில் வளர்க்க வேண்டும்.  ஆரோக்கியமான செல்களாக அது வளர்ந்த பிறகு, கண்ணில் பாதிக்கப்பட்ட செல்களை அகற்றிவிட்டு, இவற்றை பொருத்தினால் பார்வை கோளாறு நீங்கும். தெளிவான பார்வை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பார்வை இழப்பை ஆதார செல்கள் மூலம் சரிசெய்யலாம்: ஆய்வில் கண்டுபிடிப்பு.தற்போதைய அறிவியல் யுகத்தில் உடலில் இழந்த உறுப்புகளை மீண்டும் புதிதாக பொருத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கண்டுபிடிப்பை மருத்துவ உலகம் கண்டுவருகிறது.

நமது உடலில் மிக மென்மையான பகுதி கண்ணாகும். வயதான காலத்தில் பாரம்பரியம் காரணமாக பார்வை இழப்பு ஏற்படுவதுண்டு. இந்த பார்வை இழப்பை சரி செய்து பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் பார்வை பெற புதிய ஆதார செல்களை(ஸ்டெம் செல்) கண்களுக்குள் செலுத்தும் சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பார்வை இழந்த இரண்டு பெண்களுக்கு லட்சக்கணக்கான கரு ஆதார செல்கள் செலுத்தப்பட்டு அவர்களுக்கு பார்வை அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது. கண்களுக்குள் ஆதார செல்களை செலுத்தும் துவக்க கட்ட சோதனை அமெரிக்காவில் நடைபெறுகிறது.


இருப்பினும் இந்த ஆதார செல் சோதனை பிரிட்டன் நோயாளிகளுக்கு வரவிருக்கும் இளவேனிற்காலத்தின் போது மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பார்வை இழப்பு ஏற்பட்ட விலங்குகளுக்கு ஆதார செல் செலுத்தும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது மிக அற்புதமான முடிவு கிடைத்தது. ஆதார செல்கள் செலுத்தப்பட்ட விலங்குகள் புதிய கண் பார்வை பெற்றுள்ளன. இந்த அதிநவீனமான சிகிச்சை மனிதர்களுக்கு மேற்கொள்ளப்படும் போது நல்ல பலனளிக்கும் என மருத்துவ விஞ்ஞானிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆதார செல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இரண்டாவது பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்படுகிறது. முதல் பரிசோதனை கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்றது. புதிய சிகிச்சை முறை குறித்து மாசாசூட்ஸ் அதிநவீன செல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் மருத்துவர் லாங்சா கூறுகையில்,"முற்றும் சிகிச்சை அளிக்க முடியாத நோய்களுக்கு மட்டுமல்லாமல் பலவீனம் அடைந்த கண் நோய்களுக்கும் சிகிச்சையை இந்த ஆதார செல்கள் மூலம் அளிக்க முடியும்" என்றார்.
“கார்னியா”

மனித உறுப்புகளில் மிக முக்கியமானது கண். இதிலுள்ள “கார்னியா” எனப்படும் விழி வெண்படலத்தின் மூலமே உலகில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் மனிதன் பார்த்து ரசிக்கிறான். சிலருக்கு பிறவியிலேயோ அல்லது விபத்தின்போதோ கார்னியா பாதிக்கப்பட்டு பார்வை இழப்பு ஏற்படுவதுண்டு. 


உலகம் முழுவதும் சுமார் 4.9 மில்லியன் பேர் கார்னியா குறைபாடு உடையவர்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு உதவும் விதமாக பிளாஸ்டிக்கால் ஆன செயற்கை கார்னியாவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர். 


ஜெர்மனியில் உள்ள பிரான்ஹோபர் ஆராய்ச்சிமையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோச்சிம் ஸ்டோர்ஸ்பெர்க் என்பவர், இந்த செயற்கை கார்னியாவை வடிவமைத்துள்ளார். ஹைட்ரோபோபிக் பாலிமர் என்ற பொருள்மூலம் இந்த கார்னியா உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருளானது கண் மருத்துவத்தில் நீண்ட காலத்திற்கு செயலாற்றக்கூடியது.

முதலில் பல்வேறு வகையான சிறப்பு பாலிமார்கள் செயற்கை கார்னியாவில் பூசப்படுகின்றன. பின்னர் அதன்மேல் சிறப்பு புரோட்டீன்கள் பூசப்படுகின்றன. இந்த புரோட்டீன்கள் கார்னியாவைச் சுற்றி உள்ள செல்களைத்தூண்டி, பார்வையை ஏற்படுத்துகின்றன. இந்தக் கார்னியாவை பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்க இன்னும் 3-ஆண்டுகள் தேவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உறுப்புகளுள் மிக முக்கியமானது கண். இதிலுள்ள ‘கார்னியா’ எனப்படும் விழி வெண்படலத்தின் மூலமே உலகில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் மனிதன் பார்த்து ரசிக்கிறான். சிலருக்கு பிறவியிலேயோ அல்லது விபத்தின் போதோ கார்னியா பாதிக்கப்பட்டு பார்வை இழப்பு ஏற்படுவதுண்டு.

செயற்கை கண்ணை பற்றிய மீதம் அடுத்த தொடரிலும் தொடரும்...

பார்வை விரியும்...
அதிரை மன்சூர்

கண்கள் இரண்டும் - தொடர் - 5 28

அதிரைநிருபர் பதிப்பகம் | September 30, 2013 | , , , ,


அதிகாலையில் கண் விழிப்பவர்கள்

அதிகாலையில் கண் விழிப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ரோகாம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பி வைப்பார்கள் என்று கூறியுள்ளனர். 

இரவு நேரங்களில் விடிய விடிய வேலை பார்ப்பவர்களும் ஆட்டம் போடுபவர்களும் மன அழுத்தத்தினாலும், உடல் பருமனுடனும் இருப்பார்கள் என்று கூறுகிறது அந்த ஆய்வு முடிவு. 1,068க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. வார இறுதி கொண்டாட்டம் வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியுடன் இரவில் அதிக நேரம் பொழுதை கழிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மறுநாள் காலை 10க்கு அல்லது 12 மணிக்கு இன்னும் சிலபேர் பகல் 2 மணிக்கே கண் விழிக்கின்றனர்.

அன்று முழுவதும் அவர்களிடம் ப்ரஷ்னெஸ் இருக்காது. எதையோ இழந்த மாதிரியும், நோயாளிகள் போன்றும் சுறு சுறுப்பின்றி அந்த முழு நாள் முழுதும் இருப்பார்கள். இதெல்லாம் இரவுகளில் சரியாக தூங்காததினால் ஏற்படக்கூடியவை. இவற்றை வார விடுமுறை நாட்களில் இரவு முழுதும் கண்விழித்து ஆட்டம்போடும் எல்லோராலும் உணரமுடியும். இதற்கு தோதாக இப்பொழுது அரபு நாடுகளில் பெரும்பாலும் வெள்ளி, சனி என்று வாரத்திற்கு இரண்டு  நாட்கள்  விடுமுறை நடைமுறைப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த இரண்டு நாட்கள் போடும் ஆட்டத்தின் கலைப்பு நீங்குவதற்குள் அடுத்த வீக் எண்டை எட்டிவிடுகின்றோம். வாரத்தில் இரண்டு நாட்கள் லீவு விட ஆரம்பத்த்திலிருந்து நாட்கள் வெகு சீக்கிரமாக நகர்கின்றன. இப்படி ஆட்டம் பாட்டத்துடன். நாட்கள் நகர்வதினால் மவுத் நம்மை நெருங்குவதை நாம் உணரவில்லை.

அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இலேசான உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பதாகவும் இது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட டாக்டர் ஜார்ஜ் ஹப்பர் டெலிகிராப் ஆங்கில நாளிதழில் தெரிவித்துள்ளார். அதிகாலையில் கண் விழிப்பது சுறுசுறுப்பானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட என்று தெரிவிக்கின்றது இந்த ஆய்வு முடிவு.   

1438 வருடங்களுக்கு முன்னாடியே நமக்கு அருளப்பட்ட இறைவேத்தில் எல்லாத் தொழுகையையும் (சுபுஹுத்தொழுகை உள்பட  சேர்த்து) சொல்லும் வசனம்

ஈமான் கொண்டவர்கள் நிச்சயம் வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்த்கையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேனுவார்கள் .  அல்குர்ஆன் 23:,2,9

சுபுஹுத்தொழுகை பற்றி அண்ணலாரின் பொன்மொழிகள்

“எவர் சுபுஹுத் தொழுகையை நிறைவேற்றுகின்றாரோ அவர் அல்லாஹ்வினது பாதுகாப்பிற்குள் வந்து விடுகிறார்” என் நபிகள் (ஸல்) அவ்ர்கள் கூறினார்கள் 
ஆதாரம்: புஹாரி

பல ஊர்களில் “தூக்கத்தைவிட தொழுகை மேலானது தொழ வாருங்கள்” என்று ஃபஜர் பாங்கு சொல்லும்போது அரபியல் அஸ்ஸலாத்து கைரும்மின நவ்ம் என்று இரண்டு முறை குரல் கொடுக்கின்றனர். தொழ ஆரம்பிக்கும் சுமார் 10 நிமிடத்திற்கு முன் “தூக்கதை விட தொழுகை மேலானது தொழ வாருங்கள்” என்று தமிழில் சொல்லி அழைக்கவும் செய்கின்றனர் அப்படி இருந்தும் பெரும்பாலான மக்கள் தூக்கத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சுபுஹு தொழுகைக்கு கொடுப்பதில்லை. 

25 வருடங்களுக்கு முன்பு சுபுஹுத் தொழுகைக்கு இளைஞர்களை பெரும்பாலும் காணமுடியாது இளைஞர்களிடம் தவ்ஹீதின் எழுச்சி வந்த பின்பு சுபுஹுத் தொழுகைக்கும் மற்ற தொழுகைக்கும் இளம் வயதினரை பள்ளிவாசல்களில் கனிசமாக காண முடிகின்றது. சுபுஹுத் தொழுகை சம்பந்தமாக மக்களிடையே குறிப்பாக இளஞர்களிடையே இன்னும் விழிப்புணர்வு ஏற்பட்டு இருந்தாலும் சில சமயங்களில் அவர்களிடம் இருக்கும் பொடுபோக்கைப் பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எடுத்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். 

12 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த ஒளவையார் “வைகல் தோறும் தெய்வனம் தொழு” என்பதும் “ஆலயம் தொழுவது சாலமும் நன்று” என்பதும் இஸ்லாமிய சமுதாயத்தில் பள்ளிவாசலில் சென்று தொழுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கும் மற்றும் காலைத் தொழுகையான பஜர் தொழுகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கும் பொருந்துவதைக் காண மகிழ்வாக இருக்கும். 

காலையில் எப்படியாவது வைகறை (பஜர்) தொழுகைக்கு எழுந்தாக வேண்டும். தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுது வந்தால் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். தூய்மையான் அதிகாலை காற்று உடல் நலத்திற்கு மிகவும் நல்லது விடியல் காலையில் பஜர் தொழுகைக்கு போகும்போது சுத்தமான ஆக்ஸிஜன் காற்றை சுவாசிப்போமே அப்போது வரும் உற்சாகம் அது மிகவும் உயர்வானது. 

பால் காரர்களும் பேப்பர் காரர்களும் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிப்பதால்தான் அவர்களால் வேகமாக செயல்பட முடிகின்றது.  சுபுஹு தொழுத நாட்களையும் சுபுஹு தொழாத நாட்களையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மைகள் உங்களுக்கு விளங்கும். அதிரைநிருபரில்  வளம் வரும் நண்பர்கள் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிப்பாகள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது

இன்ஷா அல்லாஹ் அடுத்த 6 வது தொடரில் கண்களின் முக்கிய பாகங்கள்  அதன் அமைப்பு பற்றியும் பார்வை பாதிப்பை பற்றியும்  பார்போம்
தொடரும்...
அதிரை மன்சூர்

கண்கள் இரண்டும்....! – தொடர் - 1 30

அதிரைநிருபர் பதிப்பகம் | September 03, 2013 | , , , , ,

இறைவா!

எங்கள் கண்களில் பக்குவமான பார்வையே தோன்ற வேண்டும்!
எங்கள் கண்களில் மதுரமான பார்வையே மலர வேண்டும்!
எங்கள் கண்களில் சிந்தனைகளின் ஒளி  அதில் வீச வேண்டும்!

இறைவா!

எங்கள் பார்வையின் அசைவுகளை சீராக்கி, எங்கள் எண்ணங்களின் அசைவுகளை உன் பக்கம் ஒருமைப்படுத்தி எங்களை நேரான பாதையில் நடத்துவாயாக ! என்ற துஆவுடன் என்னுடைய கன்னிப் பதிவை அதிரைநிருபர் வாசகர்களாகிய என் அன்பு நெஞ்சங்களின் வாசிப்புக்கும் கருத்தாடல்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன்.

இனிய நண்பர்களான இக்பால் சாலிஹ், சபீர் அஹ்மது, மூத்த ஆய்வாளர் இப்ராஹீம் அன்சாரி காக்கா இவர்கள் தந்த ஆர்வத்தினாலும், நண்பர் ஜாஹிரின் இலகுவாக எழுதலாம் என்ற பதிவாலும் நாமும் எழுதலாமே என்று ஈர்க்கப்பட்டு எனக்கும் கொஞ்சம் எழுத்தின் ஆர்வம் ததும்பியது.  நமது நண்பர் ‘அண்ணன்’ ஹமீது அவர்களின்,  கேமரா ஒரு குறுந்தொடரை நான் படிக்கும்போது, எதை பற்றி எழுதலாம் என்ற என் சிந்தனை துளிகளில் உருவான தலைப்புதான் “கண்கள் இரண்டும்...!!!”.  நண்பர் ஹமீது அவர்கள் பானியிலே ஒரு  பதிவு அமைக்கலாம் என்ற எண்ணத்தில் நம் உடலில் இருக்கும் கேமரா பற்றி ஒரு தொடர் எழுத முடிவு செய்து மேற்குறிப்பிட்ட சகோதரர்களின் ஊக்கத்தோடு உருவாக்கிய ஆக்கம் தான் இது.

தொடராக எழுத நினைத்த என்னுடைய எழுத்தைப் படிக்கும்போது படிப்பவர்களுக்கு போர் அடிப்பது மாதிரி இருக்குமா? அல்லது நல்ல கருத்தோட்டமிக்கதாக இருக்குமா? என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். இது முதல் அனுபவம் என்பதால் இதைப் படிக்கும் உங்கள் அனைவரின் பின்னூட்டத்தின் வாயிலாகத்தான் இதன் தரத்தை என்னால் அறிந்து கொள்ள முடியும். நண்பன் சபீர், முஹம்மது பாரூக் காக்கா போன்றோர்களின் எழுத்தில்  நகைச்சுவை அங்கும் இங்கும் விளையாடும். படிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கும். நகைச்சுவையாக எழுதுவது என்பது மிகச் சிறந்த கலை, இந்த கலை எல்லோருக்கும் அமைந்திடாது என்பது உண்மை. குறிப்பாக எனக்கு வராது. ஆதலால் தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் அதோடு கொஞ்சம் பொருந்திக் கொள்ளுங்கள்.

மூத்த ஆய்வாளர் இப்ராஹிம் அன்சாரி காக்கா, கணினி அறிஞர் ஜமீல் காக்கா, அதிரை அறிஞர் அஹ்மது காக்கா, நபிமணியும் நகைச்சுவையும் தந்த நண்பன் இக்பால் சாலிஹ் இவர்களின் எழுத்துக்களில் நமக்கு தேவையான கருத்துக் காவியமும், உளவியல் படைப்புகளை திறம்பட எழுதும் நண்பர் ஜாஹிர், வாழ்வியலை அப்படியே சொல்லும் மு.செ.மு. நெய்னா முஹம்மது மற்றும் கவியன்பன் கலாம் இவர்களிடம் சுவாரஸ்யமான வார்த்தை ஜாலங்களுடனும், நண்பர் ஹமீது அவர்களின் பதிவுகளில் கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் கலை வண்ணமும் ததும்பும். அனைவருடைய பதிவுகளும் படிக்க படிக்க மேற்கொண்டு படிக்கத் தூண்டும். அவர்களைப் போல்  முடியாவிட்டாலும் என்னால் முடிந்ததை இந்த தலைப்பின் கீழ் எழுதுகிறேன் இன்ஷா அல்லாஹ். 

இது கருத்துக்கள் நிறைந்த தொடராகவும், படிப்போருக்கு மிக பயனுள்ளதாகவும் இருக்கும் என இறைவனை பிரார்த்தித்தவனாக அதிரைநிருபர் வாசகர்களையும் முன் வைத்து நான் உள்வாங்கிய கருத்துக்களையும், நான் வாசித்தவைகளிலிருந்தும் உங்களுடன் பகிர்வதில் நான் ஆனந்தம் அடைகிறேன் 

கருத்தாடல்களில் உரையாடும் சகோதரர்கள் நம் யாவருக்கும் அறிந்த மொழியான தமிழிலே பகிர்ந்தால் என்னுடைய புரிதலுக்கும் வலுசேர்க்கும் என்பதே என்னுடைய வேண்டுகோள்..

இந்த பதிவில் இடையிடையே ஆங்கில வார்த்தைகள் அப்படியே இடம் பெறும், அவை மருத்துவ சம்பந்தமானதாக இருப்பதனால் அவற்றை அப்படியே தமிழில் தந்தால் அதில் தவறுகள் ஏற்பட்டு விடும் என்பதால் அவைகள் மட்டும் ஆங்கிலத்தில் இருக்கும். என்னுடைய வார்த்தை பிரயோகத்தில் உரைநடை, மற்றும் எழுத்துப் பிழைகள் கண்டிருப்பின் எனக்கு அறியத் தாருங்கள்.

இவ்வளவு  பீடிகையுடன் ஒரு பதிவு தேவையா என்று வெறுத்துவிடாதீர்கள்.  

பதிவின் ஆரம்பம் நண்பர் ஹமீது அவர்களை நினைவுரும் முகமாக அவர்கள் பானியிலே தொடங்குகின்றேன்.

லைட்ஸ் ஆன்

நம் கண்களைப் பார்த்து உருவாகியது கேமரா என்றால் அது மிகையாகாது.  நம் கண்கள்  மிக அதிகமான டெகா பிக்சல் ரெஸ்லுஷன் உள்ள மல்ட்டி யூஸ் வீடியோ & ஸ்டில் கேமரா (multi use video & camera) என்பதை நினைவில் கொள்ளவும். இந்த கேமராவினால் ஏற்படும் பயன்களால் நன்மைகளையும் தீமைகளையும் கணக்கிட முடியாது. இந்த கேமராவின் பார்வைக்கு  எண்ணிலடங்கா வியாக்கியானம் செய்யலாம். நமக்கு அளித்த இந்த கேமராவினால் எவைகளை படம் (பார்க்கலாம்) பிடிக்கலாம் எவைகளை படம் (பார்கக்கூடாது) பிடிக்கக்கூடாது   என்ற வரை முறைகளை நமக்கு இறைவன் அளித்துள்ளான் அவைகளை நாம் தெளிவடைந்து பயனடைவோமாக.

கண்களின் இமைகள் திறந்து-மூட காட்சிகள் யாவும் படமாக்கப்பட்டாலும் நமக்கு தேவையானது மட்டும் கோடிக்கணக்கான டெரோ பைட் கொள்ளளவு உள்ள ஹார்டிஸ்கான நமது மூளைக்கு அனுப்பப்பட்டு அங்கே பாதுகாக்க வேண்டியவற்றை பாதுகாத்து வைப்பதுடன் நமக்கு தேவையற்ற விஷயங்களை பதிவு செய்வதில்லை அப்படியே பதிவானாலும் சில விஷயங்கள் ஓரிரு நிமிடங்கள், மணித்துளிகள், ஒரிரு நாட்கள் அல்லது சில மாதங்கள் நிலைத்திருந்து நினைவை விட்டு மறைந்து விடுவதினால்தான் மனிதனுக்கு   மறதி ஏற்படுகின்றது. 

நாட்கள் கடக்கும்போது தேவையில்லாதவற்றை நமது மூளையிலிருந்து பெர்மனென்ட்டாக அழித்து விடுவதினால்தான் இறுதி வரையும் நமக்கு நம் கண் முன்னே நடந்த சம்பவங்கள் ஞாபகத்திற்கு வருவதில்லை.   அதனால்தான் நாம் ஒரு சில நடந்த சம்பவங்களை  நடக்கவில்லை என்றும், பார்க்கவில்லையென்றும் செய்யவில்லை என்றும் வாக்குவாதம் புரிகின்றோம். காரணம் ஹார்டிஸ்க்கை (மூளையை) விட்டு அழிக்கப்பட்டுவிட்டால் அந்த நிகழ்வுகள் நமது ஞாபகத்திற்கு எப்படி வரும் ?

பதியப்பட்ட மற்ற நிகழ்வுகள்  உடனடியாக தேடிக் கொண்டுவர ராம் (ram) என்ற மெமோரி-பவர் (memory power) தானாக வேலை  செய்ய ஆரம்பித்து நமக்கு தேவையான காட்சிகளை நம் கண் முன்னே உடனடியாக கொண்டு வந்து நிறுத்துகின்றது. எல்லா விஷயங்களும் கண்களை அடித்தளமாக வைத்து நம் மூளையில்  இறைவனால் நடத்தப்படும் செயல்களே. 

அடுத்த அத்தியாயத்தில் கண்களைப் பற்றிய அற்புதங்களைக் காண்போம் இன்ஷா அல்லாஹ் ! 
தொடரும்...
அதிரை மன்சூர்

படைத்தவனின் வேதம் - அல்குர்ஆனின் சிறப்பு ! - காணொளி 13

அதிரைநிருபர் பதிப்பகம் | July 21, 2013 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

யா அல்லாஹ் ! எங்களுக்கு அருளியிருக்கும் அனைத்து செல்வங்களுக்கும் சகலவசதிகளுக்கும் உனக்கு நன்றிக் கடன் உடையவர்களாக இருக்கிறோம். எங்கள் பார்வையாலும், ஒவ்வொரு செய்கைகளாலும் உன்னுடைய திருப்பொருத்தத்தை அடையக்கூடிய உண்மையான விசுவாசியாக எங்களை நிலைத்திருக்க வைத்திடுவாயக !

அல்லாஹ் அக்பர் !

யா அல்லாஹ் ! உன்னுடைய அருட்கொடையால் உலகில் ஏதோ ஒரு மூலையில் எங்களில் ஒரு சகோதரன் தனக்கு பார்வை திறன் இல்லை என்ற குறை தெரியாமல் அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடையே என்று உன் புகழையே போற்றும் அந்த சிறுவயது சகோதரன் முஆஃத் உடைய அனைத்து பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வாயாக !

மாஷா அல்லாஹ் ! அல்குர்ஆனை கண்பார்வை இல்லாத நிலையிலும் மனனம் செய்து திடமான மனதுடன் கொண்ட ஈமானில் அழுத்தமாக உரையாடும் இந்த சகோதரனின் காணொளி நம் அனைவருக்கும் ஒரு படிப்பினையே !

அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்ற நோக்கில் இதனை இங்கே பதிக்கப்படுகிறது,


அதிரைநிருபர் பதிப்பகம்

கண்ணுக்கு (நித்)திரை ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | May 05, 2012 | , , ,

CATARACT- ஒரு வாரம் ஒரு கண் மட்டும் மூடி

செருப்பு இல்லையே என்று அழுதுகொண்டிருந்தேன் கால் இல்லாதவனை காணும்வரை- என்று ஒரு பழமொழி படித்து இருக்கிறேன்.

இதே போல்தான் இருந்த்து ஒரு வாரம் ஒரு கண் மட்டும் மூடி இருந்த நிலையில் இருந்த எனக்கு.

ஒரு கண் ஒரு வாரம் மூடி இருந்த நிலைகூட தாங்க முடியாத துன்பம் தந்தபோதுதான் - பிறவியிலேயே இரு கண்களும் இழந்தவர்களின் நிலையையும், இடையில் விபத்துகளில் கண்களை பறி கொடுத்தவர்களின் நிலையையும் அனுபவபூர்வமாக உணர முடிந்தது.

இறைவன் தந்ததை வைத்து திருப்தி அடையவேண்டும். இதையாவது தந்தாயே யா அல்லாஹ் என்று இறையை புகழும் மனப்பக்குவம் வேண்டும். நம்மைவிட இல்லாதவர்கள் இருக்கும் நிலைகள் உலகில் இருப்பதை உணர்ந்து நமக்கு கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருத வேண்டும். வல்ல இறையோனுக்கு நன்றி செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒருகண் மூடி ஒருவாரம் ஓய்வில் இருந்தபோதுதான்...

“தம்மின் மெலியாரை நோக்கி தமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழ்கஎன்ற நாலடியார் வரிகளும்-


“உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடுஎன்ற கண்ணதாசன் வரிகளும் நினைவுக்கு வந்தன.

அது என்ன ஒரு வாரம் ஒருகண் மூடி இருந்த நிலை என்று சில அன்பர்கள் கேட்பதாக தெரிகிறது. அதைப்பற்றி ஒரு விழிப்புணர்வுக்காக நீங்கள் எழுதவேண்டும் என்று ஒரு அன்புத்தம்பி கட்டளை இட்டார். ஆகவே இந்தக்கட்டுரையில் அந்த அனுபவங்களைப்பற்றி எழுதப்போகிறேன். எவ்வளவு நாள்தான் நானும் பொருளாதாரம், மத்திய அரசு, மன்மோகன் சிங்க், அலுவாலியா என்று எழுதுவது? கொஞ்சம் மாறுதலுக்காக  மருத்துவம் பற்றி மருத்துவமனைப்பக்கம் ஒரு ரவுண்டு அடித்து வர மனம் நாடுகிறது. அதுவும் வழக்கம் போல அனுபவம்தானே மீண்டும் பேசப்போகிறது?

கடந்த 16/04/2012, அன்று காலை எனக்கு துபாய். N.M.C. SPECIALITY HOSPITALலில். வலது கண்ணில் ஏற்பட்ட பார்வைக் குறைபாடுக்காக அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை செய்தவர் அனுபவமிக்க இந்திய கண் மருத்துவர் டாக்டர். அமித் நாக்பால் என்கிற கர்நாடகத்தை சேர்ந்தவர். மழலை மொழியில் தமிழ் பேசுவார். “ரெண்டு வாருக்கு தலேலே தண்ணீ எண்ணே போடாதீங்கோ என்பது அவர் பேசும் தமிழுக்கு உதாரணம். ரெண்டு வார் = இரண்டு வாரம். இது இருக்கட்டும் சப்ஜெக்டுக்கு வருவோம்.

எனக்கு ஏற்பட்ட குறைபாட்டை CATARACT .என்று கூறுகிறார்கள்.


CATARACT  என்றால் என்ன?


அல்லாஹ்வின் படைப்பின் அற்புதங்களில் ஒன்று மனித விழிகள். இந்த விழிகளில் ஒவ்வொரு  லென்ஸ் அமைக்கப்பட்டு இருக்கிறது. நாம் உணர்கிற வகையில் காட்சிகள் இந்த விழி லென்சில் விழும். அதைத்தான் நாம் இன்னது என்று அறிந்து வருகிறோம். இந்த விழி லென்சின் மீது ஒரு மேகத்தைப்போன்ற அல்லது ஒரு மூடு பனியைப்போன்ற மூட்டம் விழுந்து படிவதும்- அதன் காரணமாக தெளிவற்ற பார்வை எற்படுவதும்தான் CATARACT  காடராக்ட் ஆகும். மழை காலங்களில் – மார்கழி மாதங்களில் எதிரே வரும் வண்டி தெரியாமல் போய்விடுகிறதே அதுமாதிரி நமது கண்களில் படியும் ஒருவகை மூட்டமாகும். இதன் காரணமாக நாம் காண்பதை தெளிவாக காண இயலாது- படிக்க முடியாது.

பொதுவாக மேகம் என்பதை மப்பு என்று வழக்கு மொழியில் கூறுவார்கள். மப்பு என்று வந்துவிட்டாலே அது ஒருவகை ஸ்தம்பிப்புத்தான். இயங்க முடியாது. குழந்தைகளுக்கு வயிற்றில் மப்பு என்று கேட்டிருக்கிறோம். வயிற்றை சுண்டிப்பார்த்தால் வலையப்பட்டி தவில் மாதிரி சத்தம் வரும் குழந்தைகள் எதுவும் சாப்பிட முடியாது. அதே போல் குடிகாரர்கள் பாஷையில் மப்பு எகிறிவிட்டதாக சொல்வார்கள். ஆகவே மப்பு என்பது இயங்காத்தன்மை. இப்படி ஒரு மப்புத்தான்  நமது விழிகளில் ஏற்படும். இது ஒரு நகராத ஆனால் வளர்கிற மேகக்கூட்டம். பார்வைப்படலத்தின் மேல் படுத்து உறங்கும் மேகக்கூட்டம்.

எனது விழிகளை கணிணி மூலம் பெரிதுபடுத்திகாட்டிய மருத்துவர் என்னையே அதைக் காணச் சொல்லிக் காட்டியபோது வீட்டில் கிரைண்டரில் இட்லி மாவு அரைக்கும்போது நாம் அருகில் நின்றால் சில மாவுத் துளிகள் நமது ஆடைகளில் தெறித்து விழுந்து ஒரு வட்டமாக புள்ளிகளாக வெண்மையாகத்  தென்படுமே அதுபோல் இருந்தது.

பெரும்பாலும் காடராக்ட் குறைபாடு நமது வயதோடு தொடர்புடையதாகும். குறிப்பிட்ட வயதைக் கடந்தோருக்கு  கண்களில் இந்த குறைபாடு ஏற்படுவது பொதுவானதாகும். இந்த குறைபாடு இரண்டு கண்களிலுமோ அல்லது ஏதாவது ஒரு கண்ணிலுமோ ஏற்படலாம். ஒரு கண்ணில் ஏற்பட்டால் அடுத்த கண்ணுக்கு இது “ அடுத்த வீட்டில் புளியானம்  தாளிப்பது மணப்பதுபோல் பரவாது. அத்துடன் இக்குறை ஏற்பட்டவர்களுடன் பழகுபவர்களுக்கும் தொற்றாது. ஒட்டுவாரொட்டி அல்ல.

காடராகட் உண்டாகக் காரணங்கள் எவை?
நமது விழிகளில் அமைக்கப்பட்டுள்ள லென்ஸ், நீராலும் புரோட்டினாலும் ஆனது ஆகும். ஒரு அபூர்வ படைப்பாக இந்த புரோட்டினின் வழியாகத்தான் காட்சிகள் லென்சுக்குள் செலுத்தப்படுகின்றன அத்துடன் லென்சுகளை தூய்மைப்படுத்திவைப்பதும் இந்த புரோட்டின்தான். வயதாகிறபோது இந்த புரோட்டின் சுருங்கி அல்லது உருண்டு , திரண்டு லென்சின் ஒரு இடத்தில் வந்து உட்கார்ந்து கொள்வதால் நாம் பார்ப்பது மறைக்கிறது. இதை உடனே சரி செய்யாவிட்டால் இந்த உருண்டு திரண்ட புரோட்டின், (இட்லி மாவு என்றே வைத்துக்கொள்ளுங்கள்.) விழி லென்சில் படர்ந்து நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தும்.

இது மட்டுமல்லாமல் புகைப்பிடித்தலும், நீரழிவு நோயும் (SMOKING & DIABETES.) கூட இந்த காடராக்ட் தன்மை ஏற்படுவதற்கு காரணங்களாக அமையலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

யாருக்கெல்லாம் காடராக்ட் உண்டாகும்?
1..வயதானவர்களுக்கு – நாற்பது வயதுக்குமேல் உள்ளவர்கள் சோதித்துக்கொள்வது முக்கியம்.
2. இனிப்பு நீர் என்ற இனிமைப்பெயர்கொண்டவர்களுக்கு ஏற்படும்.
3. புகைப்பிடிப்பவர்களுக்கும் மது அருந்துபவர்களுக்கும் நிச்சயம் ஏற்பட்டே தீரும்.
4. தொடர்ந்து வெயிலில் நின்று வேலை செய்ய வேண்டியவர்களுக்கு ஏற்படும்.

எப்படி தடுத்துக்கொள்ள முடியும்?
வயதாவதிலிருந்து தடுத்துக்கொள்ள முடியாது. ( மேக் அப்தான் போடலாம்) ஆனால் வாழ்க்கையின் பழக்கங்களை ஒழுங்கு படுத்தித் தடுக்கலாம். வெயிலில் வேலை செய்ய வேண்டியவர்கள் குளிர் கண்ணாடிகளை அணிந்து கொள்வதுடன், தலையில் தொப்பி போட்டுக்கொள்ளலாம். ( யாரங்கே! தொப்பி போடுவதை எதிர்ப்பவர்கள்? இது மருத்துவம் – இதற்காகவாவது போடக்கூடாதா?) சூரியனின் நுண்கதிர்கள் கண்ணுக்குள் நேரடியாக பாய்வதில் இருந்தும்  , தொப்பி இல்லாத  தலைவழியாக எமிகிறேஷன் இல்லாமல் இலங்கை வழி போவதுபோல் தலையின் வழியாக கண்ணுக்குள்  பிம்பம் அடித்து நுழைவதையும் தடுக்கலாம்.

புகைப்பிடிப்பதைத்தடுத்துக்கொள்ளலாம். வாய்வழியாகவும், மூக்கின் வழியாகவும் விடுகின்ற புகையிலையின் நச்சுப்புகை கண் படிவங்களின் மீது படியாமல் தடுக்க முடியும்.

மது குடிப்பதை தவிர்க்கவும் நிறுத்தவும் வேண்டும். (புதிய மதுபானக்கடைகள் திறப்பதை எதிர்த்து போரிடவேண்டும். பெருநாள் தினங்களில் கூடுதலாக கல்லாக்கட்டுவதாக செய்திகள் வருகின்றன. இவற்றுக்கு நாம் வெட்கப்படவேண்டும்.) உணவுப்பழக்க வழக்கங்களை நோய்தடுப்புக்கு உதவும் வகையில் சீரமைத்துக்கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் ஆட்டிறைச்சி சோறுதான் வேண்டும் என்று அடம்பிடிக்ககூடாது. கறி கிலோ நானூறு அல்ல நாலாயிரம் விற்றாலும் வாங்கித்தான் தீருவேன் என்று கச்சை கட்டக்கூடாது. காய்கறிகளா அவை நமக்காக படைக்கப்பட்டதல்ல இதெல்லாம் யார் சாப்பிடுவது  என்று காரணம் கற்பித்து ஒதுங்கக்கூடாது. புரோட்டவையும் கறி சால்நாவையும் புரட்டி அடிக்கக்கூடாது. தழைத்த கீரைகள், காய்கறி, பயறுவகைகள், பழங்களை காலம் முந்தும் முன்பும்- நோய் முற்றும் முன்பும் சாப்பிடப்பழகிக் கொள்ளவேண்டும்.

காடராகட் நோய் தாக்கியுள்ளதன் அறிகுறிகள் யாவை?
பொதுவாக கீழ்க்கண்டவைகள் அறிகுறிகளாக சொல்லப்படுகின்றன.
1. மேகம் அல்லது பணி மூட்டம் போன்ற புலப்படுதல்/கண்மறைத்தல் ( மப்பு )
2. நிறங்களின் வெளிறிய புலப்பாடு,
3. வாகனங்களின் தலைவிளக்குகள், வீட்டின் விளக்குகள், சூரிய வெளிச்சம் ஆகியவை மிகவும் பிரகாசமாக தெரிவதாக தோன்றுவது- கண் கூச்சம், வெற்றிடங்கள் சுற்றியும் விளக்குகள் எறிவதாக தோன்றுவது,
4. இரவுகளில் குறைந்து காணப்படும் காட்சிப் புலப்பாடுகள்
5. ஒரே பொருள் ஒரு கண்ணில் பலவாகத்தோன்றுவது
6. பார்வைக்குறைபாடுகளுக்கான கண்ணாடிக்கான மருத்துவரின் சீட்டுக்களில் அடிக்கடி வித்தியாசமான ஏற்றதாழ்வுகலான பவர்கள்.

இப்படிப்பட்ட பிரச்னைகளை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

காடராகட் இருப்பது மருத்துவ ரீதியில் எப்படி உறுதி செய்யப்படுகிறது?
முக்கியமாக இருவகை மருத்துவ சோதனைகளால் இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

  1.VISUAL ACUITY TEST- இந்த முறையில் உங்களின் கண்களின் பார்வை சக்தியின் அளவு மாறுபட்ட தூரங்களில், எழுத்துக்களின் அளவுகளில் வைத்து கணிக்கப்படும்.

  2. DILATED EYE EXAMINATION. – இந்த முறையில் சொட்டு மருந்துகளை கண்களில் விட்டு கண்களை /விழிகளை அகலப்படுத்த செய்து பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டுள்ள லென்ஸ்களின் மூலம் உறுதி செய்யப்படும். இந்த சொட்டு மருந்துகளை கண்ணில் விட்ட பிறகு இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு உங்களால் சரியாக பார்க்க முடியாது. எனவே இந்த சோதனைக்கு செல்லும் முன்பே துணைக்கு ஆள் அழைத்து செல்லவேண்டும். கார் ஒட்ட இயலாது- கூடாது. இரண்டு மூன்று மணிகளுக்குப் பிறகு சரியாகிவிடும்.

(இந்த மருந்தை என் கண்ணில் ஊற்றிய செவிலியர் சகோதரி சார் வண்டி ஓடிக்குமா என்று கேட்டார்- என் வண்டி என்ன முருங்கைப் போத்தா என்று அதிரைக் குறும்புடன் மனதுக்குள் சிரித்துக்கொண்டே இல்லை டிரைவர் வந்திருக்கிறார் என்றேன். )

சிகிச்சை முறைகள்
மிக சிறிய அளவிலோ அல்லது ஆரம்ப நிலையிலையோ இந்நோய் தொடங்குவது கண்டறியப்ப்படும்போது கொஞ்சம் பெரிதுபடுத்திக்காட்டும், பிரதிபலிப்புத் தன்மைகள் குறைந்த மூக்குக் கண்ணாடிகள் அணிந்துகொள்ள பரிந்துரைப்பார்கள். ஆனால் இது ஒரு தற்காலிக ஏற்பாடே.

நிரந்தரமான பரிகாரம் வேண்டுமானால் அறுவை சிகிச்சை ஒன்றே வழியாகும். இந்த அறுவை சிகிச்சை என்பது, ஏற்கனவே மேகம் மூடிய விழி லென்சை  பிறவிக் கண்ணிலிருந்து  அகற்றிவிட்டு ஒரு செயற்கையான லென்சை அந்த இடத்தில்  அமைப்பதாகும்.

உங்களின் இரண்டு கண்ணிலும் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் ஒரே நாளில்  இரண்டு கண்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்படக்கூடாது என்று சட்டம் தடுக்கிறதாம். முதலில் ஒரு கண்ணில் செய்துவிட்டு அதன் பின் குறைந்தது எட்டு வாரங்களுக்குப் பிறகே அடுத்த கண்ணிலும் செய்யப்பட  வேண்டும்.

இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கு முன்பாக ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவுகளையும், ரத்தக்கொதிப்பு முதலான அமசங்களையும் சோதித்து அவைகள் ஒரு சீரான நிலையில் இருந்தால் மட்டுமே அறுப்பதற்கு நாள் குறிப்பார்கள். ரத்தத்தில் குளுகோஸ் அதிகமாக இருந்தால் இன்சுலின் ஊசிகளைப்போட்டு அதைக் குறைத்துக்கொண்டே கத்தி வைப்பார்கள். அத்துடன் BIOMETRY  TEST  என்ற சோதனையும்  செய்வார்கள். இந்த சோதனை உங்கள் கண்களிண் லென்சின் அளவுகளையும், கண்களின் வளைவுகளையும் கணக்கிடுவதாகும். (பூனைக்கண், சீனன் கண், சறுகல் கண், ஒன்னரைக்கண் எல்லாவற்றிற்கும் பொருத்தமான லென்சை தேர்ந்தெடுப்பதற்காக இது நடத்தப்படுகிறது.).

அறுவை சிகிச்சை நடப்பதற்கு பனிரெண்டு மணி நேரம் முன்பு முதல் நீங்கள் எதுவும் சாப்பிடவோ பருகவோ கூடாது. பயத்தில் எனக்கு வரண்டதுபோல் தொண்டை வரண்டுபோனால்  ஜூம் ஆவுக்கு போகும்போது ராஜா ஜாஸ்மின் அத்தர் போல் சில துளி நீரை நாக்கில் தடவிக்கொள்ளலாம்.

இந்த அறுவை சிகிச்சைக்கு மருத்துவ மொழியில் PHACOEMULSIFICATION  WITH IOL IMPLANTATION  என்று பெயர். இயற்கையான விழி லென்சை அகற்றிவிட்டு செயற்கையான   INTRAOCULAR LENS (IOL) என்கிற பெயரில் அழைக்கப்படும் லென்சை விழித்திரையில் பொருத்துவார்கள். இந்த பொருத்தப்படும் லென்ஸ் ஒரு உயர்வகை பிளாஸ்டிக் அல்லது  அக்ரிலிக மூலப்பொருள்களால் ஆனது. ( பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலும் ஒழிக்கவேண்டுமானால் சிலரின் கண்களைத்தோண்டவேண்டி வரும்). இந்த மூலப்பொருளுக்குத் தகுந்தபடி இதன் விலை வித்தியாசப்படும். அக்ரிலிக் வகையில் உள்ளதே விலை அதிகம். ( கம்பெனிதான் செலவை ஏற்கிறது என்பதாலும் நண்பர் அஸ்லத்துக்கு பயந்தும் எனக்கு அக்ரிலிக் லென்ஸ்தான் வைக்கச் சொன்னேன். ) இந்த லென்ஸ் பொருத்தப்பட்டதும் அது உங்கள் உடலின் ஒரு அங்கமாகிவிடும். அப்படி ஒரு உறுப்புப் பொருத்தபட்டிருப்பதே தெரியாது உறுத்தாது.

சுன்னத் மாப்பிள்ளையை கொண்டுபோவதுபோல் துணிகளை மாற்றி தள்ளுவண்டியில் கொண்டுபோனார்கள். வழியனுப்பிய மனைவிக்கோ ஏதோ என் கிட்னியை எடுக்கக்கொண்டுபோகிறார்கள் என்ற உணர்வு விம்மலில் தெரிந்தது. உரலில் உட்காருவதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொள்ளவேண்டும். ஆடாமல் அசையாமல் இருக்கும்படி தலைமை மருத்துவர்  கூறுவார். அவரைச் சுற்றி உதவியாளர் கூட்டம் நிற்கும்.

முதலில் கண்களில் விழிகளை அகலப்படுத்தும் சொட்டு மருந்துகளை விட்டார்கள். அதன்பின் ஒரு சிறிய ஊசி போடுகிறேன் என்று சொல்லி கண்ணுக்கும் மூக்குக்கும் இடையில் ஒரு மெல்லிய ஊசியைப் போட்டார்கள்.  அத்துடன் ஏதோ பாராங்கல்லை தலையில் வைத்தது போல் மறத்துவிட்டது. கண் கனத்துவிட்டது. காது  கேட்டது. உடலின் மற்ற பாகங்களில் உணர்வு இருந்தது. சிகிச்சை நடக்கும்போது முகத்தை மூடி , சிகிச்சைக்குரிய கண்ணை மட்டும் திறந்து வைத்து இருந்தார்கள். மூக்கின் துவாரங்களில்  ஆக்சிஜன் குழாயை சொருகிவிட்டர்கள். சிகிச்சை நடக்கும்போது ஏதோ கண்களில் மொசைக் போடுவதுபோல் உணர்ந்தேன். சரிதான் இட்லி மாவை சுரண்டி எடுக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.

ஒரு மணிநேரத்தில் முடிந்துவிட்டது. எல்லாம் முடிந்து பிரியாணியை “தம்  போடுவதுபோல் காற்றுக்கூட புகாமல் கண்ணை மூடி டேப் வைத்து ஒட்டிவிட்டு , ‘ ஓகே மிஸ்டர் அன்சாரி. ‘ என்றார் எனது மருத்துவர். (அதாவது அந்த ஓகே அவரைப் பொருத்தவரை 13470/=  திர்ஹம்).  அதன்பிறகு “கந்தூரியில்  கூடு முடிந்தகாலை கடைகளைப் பிரிப்பதுபோல் முகமூடி, ஆக்சிஜன் முதலிய எல்லாவற்றையும் பிரித்துவிட்டு என்னை மீண்டும் தள்ளுவண்டியில் படுக்கவைத்து முதலில் அரைமணிநேரம் ரெகவரி அறையிலும் பின்னர் எனது அறையிலும் கொண்டுவந்து விட்டுச்சென்றுவிட்டார்கள்.  உடனே லெண்டில் சூப் தந்தார்கள். அதன்பிறகு மதிய உணவு வெஜிடபிள் பிரியாணி, தயிர், வேகவைத்த புரோகோலி ஆகியவை தந்தார்கள். அன்று மாலை ஐந்து மணிக்கே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். “தம் போடப்பட்ட கண்ணை இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை திறந்து இரண்டு வகை சொட்டு மருந்துகளை அடுத்தடுத்து விடவேண்டும் அத்துடன் ஐந்து நாளைக்கு ஆண்டிபயாடிக் மற்றும் வலிவந்தால் சாப்பிட ஒரு பெயின் கில்லர். சாப்பாடு ஒன்றும் தடை இல்லை. சுகர் மட்டும் கட்டுப்பாட்டோடு வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த லென்ஸ் பொருத்தப்பட்டு ஒரு வாரம் வரை கண்களில் வெளிச்சம்படாமல் மூடி இருக்க வேண்டும். அதன்பின் கண்திறந்து பார்த்தால் உங்களுக்கே வித்தியாசம் தெரியும். பார்ப்பவை முன்பு தெரிந்ததற்கும் இப்போதும் ‘ பளிச்என்று மின்னலடிக்கும் வெண்மையாகத் தெரியும். ஊசியில் நூலைக் கோர்க்க முடியும். ஆனாலும் இரண்டு வாரங்களுக்கு கணிணி , தொலைக்காட்சிப்பெட்டிகளை காணமல் இருப்பது நல்லது. (யார் விடுகிறார்கள்- ஒரு நாளைக்கு எத்தனை ஈமெயில்கள் – பார்க்காமல் விட்டால் லேப்டாப் பிதுங்கி ஜிப கிழிந்துவிடும் நிலை) . இரண்டு நாட்களிலேயே எந்த பிரச்னையும் இருப்பதாக நான் உணரவில்லை. ஆனாலும் மருத்துவர் கையால் கட்டுப்பிரிக்கும்வரை விட்டுவிட்டேன். ஒருவாரம் கழித்து கட்டுப்பிரித்து திறந்தே விட்டுவிட்டார். சொட்டு மருந்துகள் மட்டுமே இடவேண்டும். இரண்டுவாரம் அலுவலகத்துக்கு மருத்துவ சான்றிதழ். விடுப்பில் , முதலில் செய்தவேலை ஏற்கனவே எழுதிவைத்து இருந்த மாற்றம்! ஏற்றமா? ஏமாற்றமா? கட்டுரையை நெறியாளருக்கு சரிபார்த்து அனுப்பியதுதான்.

சிகிச்சைக்குப் பிறகு?

சிலருக்கு அறுவை சிகிச்சைக்குபிறகு அரிப்புகள் வரக்க்கூடுமாம். அத்துடன் நீர் வடிதல், ஊளை தள்ளுதல் ஆகியவையும் ஏற்படக்கூடுமாம்.  அப்படியானால் உடனே மருத்துவரை அணுகவேண்டும். கீழே குனிந்து எதையும் எடுக்க முயற்சிக்க கூடாது. கனத்த பொருள்களை தூக்கக்கூடாது. தூசிகள் வரும் இடங்களுக்குப் போகவோ வசிக்கவோ கூடாது. அறுவை சிகிச்சை செய்யப்பட கண்ணின் பக்கமான பற்களில் வைத்து வேகாதவைகளை நீண்ட நேரம் மெல்லக்கூடாது. அதிக சத்தம்போட்டுப் பேசக்கூடாது. குலுங்கக் குலுங்க சிரிக்கக்கூடாது. (இதுதானே கஷ்டம்)  மற்றபடி நடக்கலாம், மாடிப்படிகளில் ஏறலாம். வெங்காயம் அல்லாத மற்ற காய்கறிகளை வெட்டிக்கொடுத்து வீட்டுக்கு உதவலாம். கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை சொட்டு மருந்துகளை தொடர்ந்து கண்ணில் விட்டுக்கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை செய்யப்படாத கண்ணுக்கு சொட்டு மருந்துகளை விடுவது நல்லதல்ல.

ஒருமாதம் கழித்து மருத்துவரிடம் சென்று சோதித்துக்கொண்டு புதிய அலைவரிசையில் தேவைப்பட்டால் மூக்குக்கண்ணாடி அணிந்து கொள்ளலாம். கண்ணாடி அணியாமல்தான் இக்கட்டுரையை எழுதி இருக்கிறேன்.

இந்த பதிவை கூடியவரை எல்லா விவரங்களுடனும் பதிந்து இருப்பதாக கருதுகிறேன். படிப்பவர்களுக்குப்  பயன்படும் என்று கருதுகிறேன். கேட்ட கேள்விகளுக்கு முகம் சுளிக்காமல் பதில் தந்த செவிலியர் சகோதரி ஸ்வப்னா அவர்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறேன். இதைப்பற்றி எழுதவேண்டுமென்று அறுவை சிகிச்சைக்கு செல்ல முடிவு எடுத்த போதே முடிவு எடுத்தேன்.. தம்பி சபீர் அவர்கள் தூண்டினார்கள். அதிரை நிருபர் இருக்க என்ன கவலை.? மாஷா அல்லாஹ்.

-இபுராஹீம் அன்சாரி