Showing posts with label MHJ. Show all posts
Showing posts with label MHJ. Show all posts

அவனா யிராதே...! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | October 22, 2015 | , , ,

அழுது கேட்பவன்
அகம் மகிழப் பெறுகிறான்
எழுதி சடைத்தவன்
தொட்டே சாதிக்கிறான்

தொழுது கேட்பவன்
திருப்தி யுறுகிறான்
கொள்வோ மெனும்
உள்ளமும் அடைகிறான்

எழுந்து விழிக்கையில்
ஒளிரும் கதிரவன் போல
தொழுது வணங்கி – முகச்
செழுமை யடைகிறான்

பழம் புளிய மரத்தின்
காயும் நிழலும் போல்
குழம்புக்கும் பயனாகி
குளிர்ச்சியும் தருகிறான்

எழுது கோலினால்
அன்று சாதித்தான்
எழுதாமலே யின்று
தட்டி தொட்டு படைக்கிறான்

அழுகைப் பார்வைக்கு
உருகும் நெஞ்சம் போல
நல்ல குணமுமாய்
நாளும் சிறக்கிறான்

அழுது கண்ணீர் வடித்து
மெழுகாய் ஒளிர்வது போல
அழுதே அக்காலமாய்
மின்சாரம் தருகிறான்

எல்லை தாண்டி
இவ்வுலகில் பிறப்பினும்
ஆறும் அஞ்சு போல்
நாவில் சுவைக்கிறான்

மெல்ல மெல்ல நல்
வசனம் இணைக்கிறான்
பெருதற் கரிய பல்
அறிவை வளர்க்கிறான்

தானடைந்த செல்வம்
தானமாய் பகிர்கிறான்
தான் பெற்ற நலன்
தம்பிக்கும் தருகிறான்

சுட்டு புண்படுமுன்
வாங்கி இருத்திடுவான் 'பர்னால்'
ருசிக்கும் நாவிற்கு
சுவைக்கும் உணவிடுவான் ஆனால்

ஏழ்மை இழிவெனெ
பழிக்கும் உலகிலே
இல்லார் தூற்றும்
அவனா யிராதே!

M.H.ஜஹபர் சாதிக்

துக்ளக்' வார இதழின் 45-ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பேராசிரியர் எம்.ஹெச்.ஜாவாஹிருல்லாஹ் 4

அதிரைநிருபர் பதிப்பகம் | January 16, 2015 | , , , , , ,

பேராசிரியர் MHJ அவர்களின் முகநூல் பகிர்விலிருந்து....

துக்ளக் வார இதழின் 45வது ஆண்டுவிழாவில் பங்குக் கொண்டு நான் ஆற்றிய உரையின் முழு வடிவத்தை இங்கே தருகிறேன். தலா 15 நிமிடங்கள் மட்டுமே மூன்று விருந்தாளிகளுக்கும் வழங்கப்பட்டது. நான் 19 நிமிடங்கள் பேசினேன். இன்னும் பல செய்திகளை சொல்வதற்கு நான் தயார் நிலையில் இருந்த போதினும் குறுகிய காலத்தில் எண்ணிய அனைத்தையும் பதிவுச் செய்ய இயலவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. இருப்பினும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரும் அவர்களது அபிமானிகளும் நிறைந்திருந்த அந்த நிகழ்வில் மோடி ஆட்சியின் அவலத்தை அவர்கள் உணரும் வகையில் பேசும் வல்லமை தந்த ஏக இறைவனுக்கே எல்லா புகழும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தொடக்கமாக இந்த நிகழ்விலே பங்குக் கொண்டு உரையாற்ற வாய்ப்பு தந்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 1983ல் நான் சார்ந்திருந்த மாணவர் இஸ்லாமிய இயக்கம் சார்பாக நடத்தப்பட்ட தீமை எதிர்ப்பு வாரத்தின் நிறைவாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் எங்கள் அழைப்பை ஏற்று வருகை புரிந்து மது ஆபாசம் வட்டி லாட்டரி முதலிய தீமைகளுக்கு எதிராக உரையாற்றினார். 30 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அவரது அழைப்பை ஏற்று நான் தங்கள் முன் உரையாற்ற நிற்கிறேன்.

மாணவப் பருவத்திலிருந்து துக்ளக் இதழை நான் வாசித்து வந்துள்ளேன். துக்ளக் வெளியிடும் கருத்துகளில் எனக்கு ஏராளமான மாற்றுக் கருத்து இருந்த போதினும் வெகுஜன தமிழ் அரசியல் வார இதழ்பத்திரிகை உலகில் துக்ளகின் வருகை ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்வு குறித்து புலனாய்வு செய்துக் கொண்டிருந்த இதழ்களுக்கு இடையே துக்ளக் பிரசுரமாகி அரசியல் ரீதியான சிந்தனைகளை பரவச் செய்ய வழிவகுத்தது. 1992 டிசம்பர 6 அன்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது அந்த சட்டவிரோத செயல் நடைபெற்ற தினம் ஒரு கருப்பு தினம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் முழுமையாக கருப்பு வண்ணத்தில் துக்ளக் வெளிவந்ததையும் நான் இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.

இன்றைய அரசியல் என்ற தலைப்பில் உரையாற்றுமாறு நான் பணிக்கப்பட்டிருக்கிறேன்.

2014ம் ஆண்டு மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்த ஆண்டாக அமைந்தது. திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மத்தியில் புதிய ஆட்சி பொறுப்பேற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 282 இடங்களிலும் அது தலைமை தாங்கிய தேசீய ஜனநாயக கூட்டணி 336 இடங்களிலும் வெற்றிப் பெற்றன. இருப்பினும் வாக்களித்த மக்களில் 69 விழுக்காட்டினர் மோடிக்கு எதிராக வாக்களித்தார்கள் என்பதை நாம் மறக்க முடியாது.

சேது சமுத்திரத் திட்டம்

பல்வேறு கவர்ச்சிகரமான மனதை சுண்டியிழுக்கும் வாக்குறுதிகளை அளித்து திரு. நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்தது. ஆனால் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் பல ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றப்படவில்லை. , முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு நடைபெற்ற போது பாஜக எடுத்த நிலைப்பாட்டிற்கு நேர்மாற்றமாக மோடி அரசு செயல்பட்டு வருகின்றது. முந்தைய காங்கிரஸ் கட்சி போட்ட பாதையிலேயே இந்த அரசும் பயணிக்கின்றது. எடுத்துக் காட்டாக திரு. வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போது தொடங்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை பின்னர் பாஜக கடுமையாக எதிர்த்தது. தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் மாற்று வழியில் அதனை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றது.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வேட்டு தான் ஏழைகளின் அரசின் லட்சணமா?

திரு. நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்ற பிறகு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இந்த அரசு ஏழைகளுக்குச் சொந்தமான அரசு. ஏழைகளுக்கு வறுமையை ஒழிக்கும் வல்லமையை அளிப்போம். அதன் மூலம் அவர்கள் கண்ணியமாக வாழ்வதற்கு வழிவகுப்போம் என்றார். திரு.மோடி அவர்கள் இது போன்று கவர்ச்சிகரமாக பேசுவதில் தான் வல்லவராக இருக்கின்றார். ஆனால் அவரது செயல்பாடு இதற்கு நேர் மாற்றமாக இருக்கின்றது. எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமெனில் 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்குவதற்கு மோடி அரச எடுத்துள்ள நடவடிக்கையை குறிப்பிடலாம். மகாத்மா காந்தி தேசீய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் உலகம் கண்டிராத மிகப் பெரும் அரசு வேலை வாய்ப்பு திட்டமாக இருந்து வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 4.8 கோடி வீடுகளைச் சேர்ந்த 7.4 கோடி மக்கள் பயனடைந்தார்கள். 

இத்திட்டத்திற்கு கடந்த ஆண்டு அரசுக்கு ஏற்பட்ட செலவீனம் 39 ஆயிரம் கோடி ரூபாய். ஜிடிபி (ஒத்துமொத்த உள்நாட்டு உற்பத்தி) 0.5 விழுக்காடு மட்டுமே. பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டவாறு கிராம புற ஏழைகள் வறுமையை ஒழிக்க உதவிடும் இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தி இன்னும் அதிமான மக்களை அது சென்றடைய செய்திருக்க வேண்டும். ஆனால் மாநிலஅரசுகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை பெரும் அளவில் குறைத்துள்ளதுடன் அதன் பயனை மட்டுப்படுத்தும் முடிவையும் எடுத்துள்ளது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் 385 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டு வந்த இந்த திட்டம் தற்போது 98 ஊராட்சிகள் என்ற அளவு குறைந்து கிராமபுற ஏழை மக்களை பெரிதும் பாதித்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பயனடைந்த ஏழை மக்களிடமிருந்து நல்ல நாட்கள் விடைப் பெற்று சென்று விட்டன.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் வேட்டு

இதே போல் மகளிர் சுய உதவிக் குழுக்களும் இது வரை அனுபவித்து வந்த நல்ல நாட்களும் பறிபோய்விடும் போல் தெரிகின்றது. சுய உதவி குழுக்கள் கலைக்கப்படலாம் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கருத்து வெளியிட்டுள்ளார். மகளிர் சுய உதவிக் குழுக்களால் தான், தமிழகத்தின் கிராமப்புற பொருளாதாரம் மேம்பட்டிருப்பதோடு, குடும்பத்தில் இருக்கும் பெண்கள், பிறரை சாராமல் தன்னிறைவு பெற்றுள்ளனர். . நாடு முழுவதும் பரவலான வளர்ச்சியை, பெண்கள் மத்தியில், சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தி உள்ள நிலையில் அவற்றை கலைப்பது தான் மோடி அரசுக்கு வளர்ச்சியாக தெரிகின்றதா?

மோடி அரசின் அச்சே தீன் பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே திரு. நரேந்திர மோடிதேர்தலில் வெற்றிப் பெற்றவுடன் பாரதம் வெற்றிப் பெற்றுள்ளது. இனி அச்சே தீன் அதாவது நல்ல நாட்கள் வரப் போகின்றன என்றார். ஆனால் அவரது ஆட்சியில் பெரும் கார்ப்ரேட் முதலாளிகளும் மேல் தட்டு மக்களும் தான் நல்ல நாட்களை அனுபவித்து வருகின்றார்கள். எடுத்துக்காட்டாக கல்வி உதவி தொகை கடன் பெறுவதற்கு நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள் சாமனிய மாணவர்களை பெரிதும் அலைக்கழிக்கின்றன. எங்களை போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்தாலும் கல்வி உதவி தொகை அளிப்பதில்லை. ஆனால் பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்ற போது அவருடைய நண்பரும் பெரும் முதலாளியுமான அதானியையும் அழைத்துச் சென்றார். 

குவின்ஸ்லாந்து மாகாணத்தில் நிலக்கரி சுரங்க திட்டத்தை அதானி குழுமம் தொடங்குகின்றது. இத்திட்டத்திற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஐந்து முக்கிய வங்கிகள் அதானி குழுமத்திற்கு கடன் அளிக்க மறுத்து விட்டன. இச்சூழலில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக பாரத ஸ்டேட் வங்கி 6200 கோடி ரூபாய் கடன் அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதமர் மோடி முன்னிலையிலேயே கையெழுத்தாகின்றது. எனவே தான் நாம் சொல்கிறோம் பிரதமர் மோடி சொன்ன நல்ல நாட்கள் பெரும் கார்ப்ரெட் முதலாளிகளுக்கு மட்டுமே வந்துள்ளன.

மோடி அரசின் விளம்பரப் பித்து

வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான பணிகள் நடக்கின்றதோ இல்லையோ மோடி ஆட்சியில் பகட்டான விளம்பரங்கள் மட்டும் தாராளமாக அரங்கேற்றப்படுகின்றன. இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு சுவச் பாரத் தூய்மை இந்தியா திட்டம். திரு. சோ அவர்களே (22.10.2014) இந்த திட்டம் விளம்பரம் பெறுவதற்கான திட்டம்; தூய்மை இந்தியா பேனர்கள் போஸ்டர்கள் எல்லாம் குப்பையோடு குப்பையாக கலந்திருக்கும் என்று மிக சரியாக சொல்லியிருக்கிறார். 

தலைநகர் டெல்லியில் பாஜக தலைவர் சதீஸ் உபாத்யாயா குப்பைகளை கொட்டிவிட்டு பிறகு அதனை தூய்மைப்படுத்தியதை 26 10 இதழில் ஸ்டன்ட் என்று வர்ணிக்கிறார் சோ. எந்த அளவிற்கு இந்த விளம்பர மோகம் இந்த அரசை ஆட்டி படைக்கின்றது என்பதற்கு இது மட்டுமல்ல இன்னும் பல சான்றுகள் உள்ளன. சமீபத்தில் இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் விடுதலைச் செய்யப்பட்டார்கள். இதில் மத்திய அரசிற்கு பெரும் பங்கு இருப்பது போல் தமிழக அரசுக்கும் பங்கு உண்டு. 

தூக்கு தண்டனை அளிக்கப்பட்டட செய்தி வந்தவுடன் பொங்கியெழுந்து போராட்டங்கள் நடத்திய ராமேஸ்வரம் மீனவர்களுக்கும் இது போல் இந்த 5 மீனவர்களும் விடுதலைச் செய்யப்பட வேண்டுமென்று ஒருமித்து குரல் எழுப்பிய தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிககள் மற்றும் பொது நல அமைப்புகளுக்கும் உண்டு. ஆனால் இந்த மீனவர்கள் விடுதலைச் செய்யப்பட்டவுடன் திருச்சி அழைத்து வராமல் டெல்லிக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை வரவேற்க காத்திருந்த தமிழக அரசின் பிரதிநிதிகளுக்கு கூட காட்டாமல் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று ராஜபக்சேவிற்கு நன்றி பிரதமர் மோடிக்க நன்றி என்று துர்தர்ஷன் மற்றும் எஎன்ஐ நிறுவனங்களுக்கு மட்டும் சொல்ல வைத்து மீண்டும் அவர்களை சென்னைக்கு திருப்பி அனுப்பியதின் மர்மம் என்ன? கொழும்புவிலிருந்த தங்கச்சி மடம் வர குறுக்கு வழி கொழும்பு டெல்லி சென்னை ராமநாதபுரம் தானா?

ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் திரு மோடி அவர்கள் தான் ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்கள் பிரச்னை தீர்க்கப்படும் என்றும் மீனவர்களுக்கான தனி அமைச்சகம் அமைக்கப்படுமென்றும் வாக்குறுதி அளித்தார். தமிழக மீனவர்களுக்கும் நல்ல நாட்கள் வந்தபாடில்லை. அன்றாடம் உயிரை பணயம் வைத்து நமது மீனவர்கள் கடலுக்குச் செல்லும் நிலை உள்ளது. மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இலங்கை கைப்பற்றியுள்ள தமிழக மீனவர்களின் படகுகளில் ஒன்றை கூட மீட்க முடியாத வலிமையான பிரதமராக அவர் உள்ளார். இது வரை 90 தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை வசம் உள்ளன.

பாரம்பரிய மீனவர்களின் உரிமைகளுக்கு காத்திருக்கிறது ஆபத்து

பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி உரிமையை பறிக்கும் திட்டமும் மோடி அரசிடம் உள்ளது. பசுமை புரட்சி வென்மை புரட்சியை தொடர்ந்து நீலப் புரட்சியை ஏற்படுத்துவோம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளளார். இந்த நீலப் புரட்சி என்பது நமது கடற்கரையோரம் கடலை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வுரிமையை பறிப்பது தான். இதற்கு ஏதுவாக மத்திய வேளான்மைத் துறையில் உதவி தலைமை இயக்குனராக இருக்கும் மீனா குமாரி தலைமையிலான குழு மத்திய அரசிடம் கடந்த ஆகஸ்ட் 20 அன்று சமர்பித்துள்ள அறிக்கை அமைந்துள்ளது.

வெளிநாட்டு மீன்பிடி படகுகளும் அதனை இயக்குவதற்கு வெளிநாட்டு படகோட்டிகளும் நமது கடல் பகுதியில் உருவாக்கப்பட போகும் exclusive economic zone பிரத்யோக பொருளாதார மண்டல்த்தில் ல் இயங்கப் போகின்றார்கள். இது ஐடிசி டன்லப் மற்றும் டாட்டா முதலிய பெருமுதலாளிகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் திட்டத்திற்கு வழிவகுத்து அவர்களுக்கு அச்சே தீனை மோடி அரசு வழங்கிட பெரிதும் உதவிடும்.

தமிழகத்தில் அணு உலைகளும் மீத்தேனும்

சமீபத்தில் ரஷ்யா அதிபர் புதின் இந்திய வருகை தந்த போது 12 அணுஉலைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இவற்றில் பெரும்பாலனவை தமிழகத்தில் கூடங்குளத்தில் தான் அமைக்கப்படும். தமிழகத்தில் மட்டும் தான் இரண்டு ஊர்களில் கூடங்குளம் மற்றும் கல்பாக்கத்தில் அணுஉலைகள் உள்ளன. ஏனைய மாநிலங்களில் ஒரே இடத்தில் மட்டுமே உள்ளது. மராட்டியத்தில் ஜைத்தாபூரில் அணுஉலை அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று பிஜேபியை சேர்ந்த அம்மாநீலத்தின் சுற்றுச் சூழல் அமைச்சர் கதம் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளளார்.. தமிழக அரசு மட்டும் தமிழ்நாட்டை அணுஉலைகளின் குப்பைத் தொட்டியாக மாற்றுவதற்கு அனுமதிப்பது நியாயமா?

இதே போல் தமிழகத்தின் நெல் களஞ்சியமான காவிரி படுக்கை பகுதியான பழைய தஞ்சை பகுதியீல் மீதேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். இது காவிரி படுக்கை பகுதியில் 50 லட்சம் உழவர்களை விரட்டியடிக்கும் திட்டம். முதலில் மீத்தேன் எரிவாயு பிறகு நிலக்கரி எடுக்கும் திட்டம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு காவிரி படுக்கை பகுதி விவசாய பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பது தான் அப்பகுதி மக்களின் விருப்பம். இது குறித்து மத்திய மாநில அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அப்போது தான் டெல்டா பகுதி மக்களுக்கு மட்டும் அல்ல தமிழக மக்களுக்கே நல்ல நாள் பிறக்கும்.

சங்கபரிவாரின் வரம்புமீறிய பேச்சுகள்

'ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து மனுஷனைக் கடித்த கதையாக பாபர் மசூதியை இடித்த ஹிந்து பரிவாரம், ராமருக்குக் கோவில் எழுப்புவதில் ஆரம்பித்து இப்போது கோட்ஸேவுக்குக் கோவில் கட்டுவது வரை வந்து விட்டது. இவர்களைப் பிடித்தாட்டுகிற ஹிந்துத்துவ வெறியில் இன்னும் யார் யாருக்கெல்லாம் கோவில் கட்டப் போகிறார்களோ, யார் யாருக்கெல்லாம் சிலை வைக்க வேண்டுமென்னு சொல்வார்களோ தெரியவில்லை. ஹிந்துத்துவ வெறி இவர்களைப் படாதபாடு படுத்துகிறது ' என்று நான் சொல்ல வில்லை துர்வாசர் துக்ளக் ஜனவரி 14 இதழில் ஆணித்தரமாக பதிவுச் செய்துள்ளார். இது அவரது எண்ணோட்டம் மட்டுமல்ல நமது நாடு மதசார்பற்ற நாடாக நீடித்து நிலைக்க வேண்டும் என்று விரும்பும் அனைவரது கவலையும் இது தான்.

'பாஜகவில் உள்ள சிலர் எம்.பி.க்கள் முக்கியஸ்தர்கள் மனம் போன போக்கில் பேசி வருகின்றார்கள். 'மோடியை ஏற்காதவர்கள் பாகிஸ்தானுக்கு போகலாம்.. ராமரைத் தந்தையாக ஏற்காதவர்கள் முறைகேடாக பிறந்தவர்கள் என்பது போல் துவேஷத்தைத் தூண்டுகிற பல பேச்சுக்கள் ஹிந்துத்துவ அமைப்புகளால் அரங்கேற்றப்பட்டு வருகின்றன' என்று மீண்டும் நான் சொல்லவில்லை துக்ளக் டிசம்பர் 24 தலையங்கம் குறிப்பிடுகின்றது.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கண்டவர்கள் பேசுவதற்கெல்லாம் மோடி பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது என்றார் திரு சோ. ஆனால் அவரே துக்ளக் செப்டம்பர் 10, 2014 இதழின் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளதை இங்கே நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

'பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்து விட்டதால் இந்த மாதிரிப் பிரசாரங்கள் நடக்கின்றன. இதற்கு அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மோடியோ அமித் ஷாவோ இது பற்றிப் பேசாமல் இருப்பது இதற்கு அவர்களுடைய அங்கீகாரம் உண்டு என்று கூறுவது போல் இருக்கின்றது' என்ற விமர்சனம் மற்ற மதத்தினரிடையே மாத்திரமல்ல, ஹிந்துக்களிடையே கூடத் தோன்றும்' என்று அந்த தலையங்கம் கூறியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டமே இணைப்பு பாலம்

நமது நாடு பல பூக்கள் பூக்கும் ஒரு கதம்ப மலர் தோட்டம். இந்த பூக்களின் வண்ணங்களும் வாசங்களும் வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால் அத்தனை பூக்களும் அந்த தோட்டத்தின் மலர்கள் என்று பெருமைக் கொள்ளும் வகையில் அனைத்து இந்தியர்களையும் இணைக்கும் ஒரே புள்ளி இந்தியாவின் மதசார்பின்மையை உறுதிச் செய்யும் நமது அரசியலமைப்புச் சட்டம் தான். அந்த இணைப்பு பாலத்திற்கு பங்கம் வரும் வகையில் யார் பேசினாலும் செயல்பட்டாலும் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் மட்டும் அல்ல சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் மோடி அரசு அப்படி நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை எங்களைப்போன்றோருக்கு இல்லை.

பாரிஸ் பெஷாவர் தாக்குதல்கள்

இறுதியாக பிரான்ஸ் நாட்டில் சார்லி பெப்டே என்று நையாண்டி பத்திரிகையை தாக்கி அதன் ஆசிரியர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். இதனை யார் செய்தார்கள் என்பது உறுதியாக இது வரை தெரியாவிட்டாலும் தாக்குதல் நடத்தியவர்கள் இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து கேலி சித்திரம் வரைந்ததற்காக பலி வாங்கினோம் என்று சொன்னதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்களுக்கு குறிப்பாக ஐரோப்பாவில் வாழும் முஸ்லிம்களுக்கு பெரும் துரோகம் இழைத்துவிட்டார்கள் என்பதே உண்மை.

பெஷாவரில் பள்ளிக்கூடம் மீது நடைபெற்ற தாக்குதல்கள் எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாது. இதே போல் ஐஎஸ் அமைப்பும் போகோ ஹராம் அமைப்பும் செய்வதாக ஊடகங்கள் தெரிவிக்கும் நடவடிக்கைகளும் காட்டுமிராண்டித்தனமானவை. இந்த பயங்கரவாதிகளுக்கும் இஸ்லாத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை. ஏனெனில் இந்த அமைப்புகள் செய்து வருவது போன்ற பயங்கரவாதத்தை ஒரு போதும் இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை.

பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை. ஆனால் முஸ்லிம் பெயர் தாங்கிகள் செய்யும் பயங்கரவாதம் மட்டும் ஒரு சாரார் இஸ்லாத்துடன் இணைத்து பார்க்கப்படுகின்றது.

திருக்குர்ஆனில் வெறுப்பை போதிக்கும் வசனம் எதுவும் இல்லை -சுஜாதா

இந்த போக்கு குறித்து நமது சமகாலத்தில் வாழ்ந்து மறைந்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு தரமான பல இலக்கியங்களை வழங்கிய சுஜாதா அவர்களின் பதிலுடன் என் உரைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு திரு. இராம சம்பந்தன் ஆசிரியராக இருந்த போது தினமணி வெளியிட்ட ரமலான் பெருநாள் மலரில் திருக்குர்ஆன் குறித்து ஒரு கட்டுரையை எழுதினார் சுஜாதா. அதன் இறுதி வரிகளில் 'திருக்குர்ஆனை முதலிலிருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும் மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம் தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய என் கண்களை திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்'

அதிரை உலா - 2013 24

அதிரைநிருபர் பதிப்பகம் | December 31, 2013 | , , , ,

2013 - வது  வருடம் விடைபெறும் தருவாயில் இருக்க  அதனை விடை கொடுத்து அனுப்பும் முன்னர் சென்ற வருட உலகம், சென்ற வருட இந்தியா என்றெல்லாம் பல்வேறு ஊடகங்களிலும் கண்டு வருகிறோம். அவைகளையெல்லாம் விடுத்து நாமும் 2012ம் வருடத்தில் பார்த்தது போலவே இவ்வருடமும்  அதிரையின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காண்போம்.


1.பல்லாண்டுகளாய் சாக்கடையும் ஆக்கிரமிப்பும் நிறைந்த நடுத்தெரு பள்ளியின் பின்புறமுள்ள செட்டியா குளத்திற்கு தமிழ்நாடு அரசு மூலம்  நபார்டு உதவி திட்டத்தின் கீழ்  50 லட்சம் ஒதுக்கி அவ்வப்போது  பணி நடந்து முடியும் தருவாயில் உள்ளது. 


2.மக்களின் மடமையை பயன்படுத்தி அவர்களின் மூட நம்பிக்கைக்கு புகைமூட்டி அதில் குளிர்காய எடுத்துக் கொண்ட ஆயுதமாக  இந்த புதிய கல்லறை, அதுவும் ஏற்கனவே இருக்கும் கல்லறைக் கட்டிடத்திற்கு அருகிலேயே புதியதொரு கல்லறை ஜொஹரா அம்மாள் என்று பெயரிட்டு!


3.செக்கடிப்பள்ளிக்கு சொந்தமான அதன் மேட்டுப் பகுதிகளில் பல கட்டிடமாகவும் கீத்துக் கொட்டகைகளாகவும் இருக்க, மற்றொரு கட்டிடம் செக்கடிப்பள்ளி நிர்வாகம் பேரில் கட்டி வருகையில் திடீரென்று அங்கே பேரூராட்சி சார்பில் "இது பேரூராட்சிக்கு சொந்தமான இடம்" என பெயரிட்டு போர்டு  வைத்து கட்டிட தளவாட சாமான்களை பேரூராட்சி அள்ளிச் சென்றது, பேரூராட்சி தலைவரின் கவனத்திற்கு வராமலே! பின்னர்  நிர்வாக  (அரசியலில் நீயா நானா) குளறுபடிகள் கலைந்து அத்தகைய அறிவிப்பு போர்டு நீக்கப்பட்டு பேரூராட்சி தலைவரின் தலையீட்டின் பேரில் செக்கடி பள்ளி நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட்டன. 


4. மார்ச் மாத்தத்தில் தக்வாபள்ளிக்கு புதிய நிர்வாகம் வந்தது. பதவி ஏற்பு விழாவுக்கு கூடாது அல்லது சர்ச்சை என நன்கறிந்த   மெளலிது ஓதி நார்சாவுடன் முரண்டு செய்தார்கள். சில முடிவெடுப்பதில் சிலரை கலக்காமலேயே செயல்பட்டதாக வழக்கும் தொடர்ந்தனர். அதோடு மட்டுமல்லாமல் பல்லாண்டுகளாய் மார்க்க பயான் செய்த ஹைதர் அலி ஆலிம் அவர்களை நீக்க வழி தெரியாமல் 10 நாள் சஸ்பென்ஸ் மற்றும் மைக் கிடையாது போன்ற சட்டமன்ற சமாச்சாரமெல்லாம் நடந்து முடிந்தன.


5. அல் அமீன் பள்ளி விவகாரத்தில் பல ஆண்டுகளாய் நிலச் சர்ச்சைக்கு தீர்வு கிடைத்து சாதகமான தீர்வு கிடத்தது ஒட்டு மொத்த அதிரையருக்கும் குறிப்பாக "அதிரை எக்ஸ்ப்ரஸ்" வலைத் தளத்தின் முன்னெடுப்பகளுக்கும் கிடைத்த வெற்றியாகும். விரைவில் பிரம்மான்ட பள்ளி உருவாகி தொழுகையால் நிரம்ப துஆ செய்வோமாக!


6. மார்க்க அறிஞர் ஒருவரை பழிவாங்கும் திட்டத்தில் பல சூழ்ச்சிகள் செய்தார்கள். மேலும் பல அதிரைவாசிகளுக்கு ஊரில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு சிலர் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தனிப்பட்ட அலைபேசி மற்றும் தொலைபேசி அழுத்தங்கள், மிரட்டல்கள், செய்ததோடு அல்லாமல் தக்வா பள்ளி பயான் தொடர்பான செய்திகளை முடக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்கள்.  ஒரு கட்டத்தில் நம்மவர்களே நம்மவர் மீது வழக்கு தொடர்ந்து அவர்களை கைது செய்ய காவல் துறை பள்ளிக்கு வந்தும் பின் அவரே நானே வருகிறேன் என்று காவல் துறைக்கு போயும் பின்னர் பலதரப்பு பேச்சு வார்த்தை நடத்தி ஓரளவு சுமூக தீர்வுடன் அல்லாஹ்வின் நாட்டபடி அதிரையிலேயே இருக்கிறார்கள்.


7. அதிரையர்களுக்கு பொழுது போக்கு அம்சங்கள் என்ற புதிய முயற்சியாக வர்த்தக திருவிழா என்ற பெயரில்  ஏப்ரல் 28 முதல் மே 12 வரை  ஒரு குழுவினர் சார்பாக நடத்தப்பட்டது. இது கந்தூரிக்கு மாற்றாகவும் மார்க்கத்திற்கு உட்பட்டும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  முதல் நாள் இரவு அரங்கேற்றிய நிகழ்ச்சியொன்றில் அருவருக்கத்தக்க வார்த்தைகளால்  வெளிப்படுத்த முடியாத இரட்டை அர்த்தமுள்ள கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் இது இப்படியே தொடர்வது மார்க்க விரோதம் என கருதி ஒரு புறம் ஆலிம்கள் தலையீட்டின் பேரிலும் மறுபுறம் கலெக்டரின் தலையீட்டின் பேரிலும் கலை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விழா தொடர்ந்தது.


8. கடந்த மேயில் கடற்கரை தெருவில் கல்வி விழிப்புணர்வு மாநாடு அன்னை ஆயிசா மகளிர் கல்லூரி நிறுவனர் சலீம் அவர்கள் சிறப்பு சொற்பொழிவுடன் சிறப்பாக நடை பெற்றது.


9. கடந்த ஜூனில் கடைத்தெரு மார்க்கெட்டில் புதிதாக கடைகள் கட்டும் நோக்கில் திட்டமிட்டு அஸ்திவார மட்டம் வரை தற்போது எழுந்துள்ளது. துவக்க நிகழ்வில் அடிக்கல் நாட்டு சம்பவ முறையில் சர்ச்சைகள் எழுந்தன. நிர்வாகத்தின் நல்ல நோக்கம் சீக்கிரம் நிறைவேறட்டும். இன்சா அல்லாஹ்.


10.  அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் மேற்பார்பார்வையில் பெண்களால் அதிரையில்  இயங்கி வரும் அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் ஸனது (பட்டம்) வழங்கு விழா கடந்த  ஜூனில் அன்னை ஆயிசா அறிவியல் கலை மகளிர்கல்லூரி தாளாளர் பேராசிரியை சயீதாபானு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள    சிறப்பாக நடைபெற்றது.


11. பேராசிரியர்கள் அப்துல் காதர், பரகத் இவர்களுக்கு பதிலாக இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் மூத்த முதல்வராக டாக்டர் எஸ்.எம் அன்வர் பாட்ஷா அவர்கள்  பள்ளியின் நிர்வாகத்தால் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


12. சகோ. M.ஜமால் முஹம்மது அவர்களின் மகன் J.மீராசாகிப் குரூப் தேர்வுகளில் வெற்றிகரமாகத் தேர்ச்சிபெற்று 2014 ஆம் ஆண்டு நடைபெறும் I A S தேர்வு எழுதவுள்ளார். பொறியியல் பட்டம் பெற்றுள்ள J.மீராசாகிப், சென்னை அண்ணா சாலையிலுள்ள அழகிய கடன் I A S  அகாடமியில் இதற்கான பயிற்சிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 


13. காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில்  கா.மு.மே.பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் SKM ஹாஜா முகைதீன் அவர்களின் தலைமையுரையுடன், இணையதள எழுத்தாளரும் அதிரைநிருபர் வலைத்தளத்தின் மூத்த பங்களிப்பாளருமான சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் சிறப்புரையை ஆற்றி  பேசியதுடன்  பட்டிமன்றப் பேச்சாளர் சகோதரர் அண்ணா சிங்கார வேலு அவர்கள் தனக்கே உரித்தான நகைச்சுவை மற்றும் சிந்திக்க வைத்த பேச்சுடன்  அதிரைநிருபர் வலைதளத்தால் கவுரவித்து வழங்கப் பட்ட “நபிகள் நாயகம்” என்கிற வரலாற்று நூல் நினைவுப் பரிசாக ஆசிரிய ஆசிரியைகளுக்கு வழங்கப்பட்டது.  அத்துடன் ஆசிரியர் தினம் பற்றிய கவிஞர் சபீர் அவர்களின் கவிதை படி எடுத்து அனைவருக்கும் வழங்கப் பட்டது.  நிகழ்ச்சியில் அதிரை அறிஞர் பன்னூலாசிரியர் அதிரை அகமது, பேராசிரியர் அப்துல் காதர், கணிணி தமிழ் அறிஞர் ஜமீல் எம். ஸாலிஹ், மூத்த சகோதரர் முகமது பாரூக். நாவலர் நூர் முகமது, பெற்றோர் சங்க  தலைவர் செய்யது, எல்.எம்.எஸ். அபூபக்கர்,ஆகியோர் உட்பட கலந்து கொண்டு சிறப்பித்தனர்.   


14. கடந்த அக்டோபரில் கடைத்தெரு மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டு மிகப் பெரும் சேதம் ஏற்பட்டது. இதிலும் அரசியல் வாதிகள் அத்தனை பேரும் தனக்கே உரிய பானியில் ஆதாயம் அடைய முற்பட்டனர். உண்மை அல்லாஹ்வுக்கே வெளிச்சம். இன்னும் கயறு தொழிற்சாலை தீ, சமாதி கூரை தீ, வீடுகள் தீக்கிரை என தொடர்கதையாக உள்ளது. அதிரைக்கென்று தீயணைப்பு வாகனம் ஒதுக்குவதில் அரசின் மெத்தனம் உடனடியாக களையப்பட வேண்டும். வெளியூரில் இருந்து வரும் தீயணைப்பு வாகன தமதித்தால் அவர்கள் மீதே கோபத்தை காட்டி தாக்கிய வேதனைச் சம்பவமும் கடைத்தெருவில் அரங்கேறியது.


15. K M A ஜமால் முஹம்மது அவர்கள் ஆரசியல் ஆதாயம் இல்லாமல் பொது நலனில் அக்கரை கொண்டு பல்வேறு தேவை அறிந்து அரசுக்கு சட்ட ரீதியாக கோரிக்கை வைத்து  அவ்வப்போது சேவையில் சாதித்து வருகிறார். இவரைப் போல தெருவுக்கு நாலு பேர் சமுக அக்கரை கொண்டால் அரசியலே தோற்பது நிச்சயம்.


16. அதிரை தாருத்தவ்ஹீத்  மார்க்க பிரச்சாரங்கள் சிறப்பாக செய்து வருவதுடன் கடந்த இரு சாமதித்திருவிழாவுக்கு எதிராக நேரடி அணுகுமுறை, மற்றும் குறைந்த பட்சமாக  அதனால் மின் துண்டிப்பு தவிர்க்கப்பட மனுச் செய்தும் அதில் வெற்றியும் கண்டது. இன்னும் தொடர் நடவடிக்கைகளால் மார்க்க விரோதங்கள்  முற்றிலும் ஒழியும் என்பதில் ஐயமில்லை. 


17. கடந்த காலம் அதிகமான விபத்துகளை அதிரை சந்திக்க நேர்ந்தது. குறிப்பாக ரமலான் மாத வாக்கில்  அதிகமான வாகன, உயிர் சேதம் ஏற்பட்டது. 


18. தெருவில் இறங்கி காலி குடங்களுடன் போராட்டம் என்பதெல்லாம் பத்திரிகையில் படித்த செய்தி அன்று. இன்றோ அதிரையில் பெண்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது அதிரை பேருராட்சி!


19. பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் சட்டத்தாலும் செயலாலும் தடுக்க முடியாமல் தோல்வியுற்ற பேரூராட்சி இன்று சாலைகளில் அலையும்  ஆடு மாடுகளை பிடிப்பதிலும் சட்டம் போட்டு 'லூஸ்' விட்டு அதிலும் தோல்வி கண்டுள்ளது. ஆளுமையின் குறையா அல்லது ஆள்பவரை பிடிக்காத அரசியல்  சதியா? பாவம் அதிரை!


20. ஈ.சி. ஆர் சாலையில் மூன்றடுக்காய் பிரம்மாண்டமாய் காட்சி தரும் இறையில்லம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில்  மீதி வேலை முடித்திட நிதிக்காக காத்திருக்கிறது. இன்சா அல்லாஹ் வழி கிடைக்கும். 


21. சி.எம்.பி.லைனில் அமைந்த  ALM ஸ்கூலில் ஜூம்மா மட்டும் நடந்த இடத்தில் ஐவேளைக்கும் தொழுகைக்கும் மஸ்ஜிதும் உருவாக்கி எளிய முறையில் திறப்பு விழா கண்டு அதிரை மஸ்ஜித் எண்ணிக்கையை மேலும் ஒன்று கூட்டியுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.


22. கடந்த தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற S.அப்துல் அஜீஸ் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவின் செயலாளராக நியமிக்கப்பட்டார்., புதிய பொறுப்பு அதிரைக்கும் இஸ்லாமியர்களுக்கும் பெருமை சேர்க்க அல்லாஹ் நாடுவானாக!


23. பேரூராட்சி தலைவர் அன்றிலிருந்து இன்று வரை ஏகப்பட்ட சவால்களையும் எதிர்ப்புகளையும் வழக்குகளையும்  எதிர் கொண்டு அதிரைக்காக! போராடி வருகையில் அரசியல் காழ்ப்புணர்வால் திட்டங்கள் கேன்சலாகிய கதையாகவே உள்ளன. நேர்மையும் உண்மையும் வெற்றியாகட்டும். 


24. சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, பெருநாள் சந்திப்பு, கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி இறைவன் அருளால் மிகச் சிறப்பாக சகோதரர் இப்ராஹிம் அன்சாரி அவர்கள் தலைமையில்  நடந்தேறியது, இந்நிகழ்ச்சியின் நோக்கம், பிற சமுதாயத்தினர் மத்தியில் இஸ்லாம் பற்றிய தவறான புரிந்துணர்வுகளைக் களைந்து, அவர்களுக்கு இஸ்லாத்தைப்  பற்றிய நற்போதனைகளை எடுத்துக் கூறுவதும், இஸ்லாமியர்களுக்கும் பிற சமுதாயத்தினருக்குமிடையே உள்ள புரிந்துணர்வை வளர்த்து, நம்மை சுற்றியுள்ள   வட்டாரத்திலும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நன்னோக்கத்தில் நமதூர் இளைஞர்களின் மனதில் உதித்ததே இந்த ஈத்-மிலன் நிகழ்ச்சி. இந்த வருடத்தின் ஹைலைட் நிகழ்வு இது.


25. அல்லாஹ்வின் நாட்டப்படி மஸ்ஜிதின் கம்பீர தோற்றத்திற்கும், மனம் குளிர இயற்கையை ரசிக்கவும் மண் வளம் கூடிடவும் அல்லாஹ் தந்த அருட்கொடை. இதுபோல் அதிரையின் எல்லா குளமும் நிரம்பிட மனம் ஒன்றிய வலிமையையும்,  மழைநீரையும்  அனைத்து ஆறு ஏரி வளங்கள் வாயிலாகவும் வாய்ப்புகளை தந்தருள்வானாக! 


* இன்ஷா அல்லாஹ் அடுத்த வருட அதிரை-உலாவில் அதிரைக்கு இரயில் போக்குவரத்து, ஷிஃபாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம், பாதாளச் சாக்கடைத் திட்டம், அனைத்து குளத்திலும் தண்ணீர், விபத்தே இல்லாப் போக்குவரத்து  இன்னும் எல்லாம் இன்பமாய் காண்போமாக! மார்க்க நெறிக்குட்பட்டு!

M.H.ஜஹபர் சாதிக்
pictures supplied

என் வீட்டுத் தோட்டத்தில்...! 31

அதிரைநிருபர் பதிப்பகம் | December 24, 2013 | , , , ,

மரம் நடுவதை நபி (ஸல்) அவர்கள் பல ஹதீஸ்களின் வாயிலாக ஊக்குவித்திருக்கின்றார்கள். அதனை அவர்கள் வெறும் உலகியல் நடவடிக்கையாக மட்டும் குறிப்பிடாமல்  அதனை நன்மை தரும் தர்மமாக மார்க்கத்துடன்  தொடர்புபடுத்திக் காட்டியுள்ளார்கள்.

‘எந்தவொரு முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது ஒரு பயிரை விளைவித்தால் அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது பறவையோ அல்லது விலங்கோ உண்ணும் காலமெல்லாம் அவருக்கு அது தர்மமாக அமையும். 

‘உங்களில் ஒருவரின் கையில் மரச்செடியொன்று இருக்கும் நிலையில் மறுமை வந்து விட்டது என்றிருந்தாலும் அவர் அச்செடியை நாட்டிவிடட்டும்’ (ஆதாரம் : அஹ்மத்) 

எவ்வளவு ஆழமான கருத்துக்களை இந்த ஹதீஸ் உள்ளடக்கியுள்ளது என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.


‘இமாரத்’ என இப்பணி அழைக்கப்படுகின்றது. ஒரு மனிதன் இவ்வுலகில் மேற்கொள்ள வேண்டிய மூன்று முக்கிய பணிகளில் இபாதத், கிலாபத்,  இமாரத் என்பவையாகும். இதில் 'இமாரத்' என்பது பூமியை பரிபாலித்து நிர்வகித்து அதனை வளப்படுத்தும் இப்பணி சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதுடன் தொடர்பானது. இப்பூமியை அதில் காணப்படுகின்ற வளங்களைப் பயன்படுத்தி மனிதன் சிறப்பான முறையில் வாழ்வதற்குப் பொருத்தமானதாக மாற்றுவதற்கும் அதனைத் தொடர்ந்து நிலைபெறச் செய்வதற்கும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதை இஸ்லாம் ஒவ்வொரு மனிதன் மீதும் கடமையாக்கியுள்ளது.

‘அவனே உங்களைப் பூமியிலிருந்து தோற்றுவித்து அதனைப் பரிபாலிக்குமாறும் கேட்டுக்கொண்டான்’ (அல்குர்ஆன் 11 : 61). 

இவ்வாறெல்லாம் நம் இஸ்லாத்தில் மரம் வளர்ப்பின் அவசியத்தை கூறப்பட்டுள்ளது. இத்தகைய நன்மையான அரும்பணியை நம் வீடுகளிலும் பொது இடங்களிலும் நடுவதுடன் அழகிய பொழுது போக்குடன் நன்மையும் அடைய முடியும்.

இத்தகு நற்பணியில் எனது உழைப்பில் வளர்ந்த காய்கறிகளும் அதன் பலனும்.

கொண்டையிலெ பூ இடையிலெ கனி - சோளம்


சோளம் பொதுவாக நாம் மெரினா பீச்சில் சுட்டு உப்புடன் மிளகாதூள் லெமன் தடவியும் விளக்காரிகளிடம் அவித்து வருவதை வாங்கி கொரித்து சாப்பிட மற்றும் பிரத்யேகமாக பொழுது போக்கிக்கென்றே இதனை வறுத்து உருவகமற்ற  பாப்கார்னாகவும் விற்கப்படுகிறது.  இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.  

சோளம் அரைத்த  மாவிலிருந்து சப்பாத்தி தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மாவை பொறிக்க வேண்டிய பொருளின் மீது தூவி பொறித்தால் சுவையாகவும், எண்ணெய் அதிகம் உறிஞ்சப்படாமலும் காக்கும். இதில்  கலோரி, புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கால்சியம் , இரும்புசத்து, கரோட்டின் இன்னும் பல  சத்துக்கள் கலந்துள்ளன. 

கோழியுடன் சம்பந்தமே இல்லை ஆனால் - முட்டை கோஸ்


வயிற்று புண்ணை ஆற்றி, குடலுக்கு பலமூட்ட உடலுக்கு வனப்பும் வலிமையையும் தரும் நல்ல உணவு. சமைக்கும் பொழுது கூடவே மிளகும் சீரகமும் சேர்த்து சமைப்பதால்  கோஸ் கீரைகளிலுள்ள விஷத்தன்மைகள் முறியும் .அதனால் ஏற்படும் ஒவ்வாமை நீக்கும்

இதன் வண்ணமே தனி அழகு  -  கலர் முட்டை கோஸ்


இது  திருப்பூர் கோவை பகுதியில் அதிகம் கிடைக்கிறது. இதில் முட்டை கோசுக்குரிய சத்துக்களுடன் பீட்ரூட்டின் மகத்துவமும் கலந்து உள்ளது.

டைலருக்கோ, நாவிதருக்கோ சம்பந்தமில்லா காய்- கத்தரி


பொதுவாக கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்துடன் ஃபைபர்  மாங்கனீசு , பொட்டாசியம் , ஃபோலேட் , வைட்டமின் கே , வைட்டமின் பி ,, வைட்டமின் சி , மெக்னீசியம் ,ஆகியவை உள்ளன. ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம். சரும நோயாளிகள், புண், அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. மேலும் இவற்றை சாப்பிட்டால் அலர்ஜி அதிகப்படும், மேலும் அரிப்பை தூண்டும்.. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது. 

காதல் கணி எனப் பெயரும் உண்டு  - தக்காளி 


இதில் வைட்டமின் சி பொட்டாசியம் மாங்கனீசு இன்னும்  சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது. இதை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரககல் உருவாகும் என்பது ஆதாரப்பூர்வமானதல்ல!

காயாக, காய்ந்ததாக, காரத்தூளாக – மிளகாய்


காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்து  உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். எனவே உடலின் கொழுப்பைக் குறைக்க  பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்வது மட்டுமல்லாமல் சந்தோச உணர்வைத் தூண்டும் ஒருவகை சக்தியும் இதில் இருக்கிறது.

இரத்தம் ஓட நல்ல ரூட் -பீட்ரூட். 


இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன் அல்சர் குணமாக, பித்தப்பையும் சுத்திகரிக்கப்பட,  நல்ல உணவு.  இதன் சாறு   அஜீரணத்தை நீக்கி மலச் சிக்கலையும் போக்குகின்றன. இதில் வைட்டமின்  A B B1 B2  C  மற்றும் கால்சியம் இரும்பு சத்துக்களும் மிகுந்திருக்கின்றன.

நிறமே இதன் தரம் - கேரட்


கேரட்  சாப்பிடுவதால் பற்கள் ஒளிர்கின்றன.கண் பார்வையை பாதுகாக்கின்றன.  இதயம்  மற்றும் வலிப்பு நோயை தடுக்கின்றன.முதுமையை பிற்படுத்தி  ஆரோக்கியமும் மினுமினுப்பும் உடைய தோள்களை பெற முடியும். இதிலும் பீட்ரூட்டில் காணப்படும் வைட்டமின்கள் இருக்கின்றன.

உருவத்தில் பல வகை - உருளைக்கிழங்கு 


இதற்கு பூமியின் ஆப்பிள் என்ற பெயரும் உண்டு.உருளை சத்து மிகுந்தது. அரிசியை போன்ற மாவுப் பொருள்.  இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. மற்ற காய்கறியுடன் ஒப்பிடும் போது குறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. இதனை வறுத்து உண்பதைவிட வேக வைத்து உண்பதே நல்லது.

தமிழ் பெயர் இல்லாத பூ - காலிஃப்ளவர்


சமையலில் பயன்படுத்தப்படும் காலிஃப்ளவர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த பூக்களில் மாவுச்சத்து, உயிர்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன. இந்த பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்  வைட்டமின் சி, மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் பீட்டா கரோட்டீன் போன்றவையும் உள்ள சத்தான உணவாகும்.  காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா  சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.  இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிற்றுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல் கேன்சரையும் கட்டுப்படுத்துகிறது.  

இது நரம்பை பலமாக்குவதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொல்லை அதிகம் ஏற்படாது.

தலைப்புக்கு பொருத்தம் இல்லாத- பூ


இது ரோடியம் மிளிரும் வண்ண செடிகள். நான் வளர்த்தவை அல்ல கடையில் கிளிக்கியது.

நாமும்  மரம் செடி வளர்ப்போம் மனமகிழ்வும் பெறுவோம்.

M.H.ஜஹபர் சாதிக்

விலை! 54

அதிரைநிருபர் பதிப்பகம் | August 15, 2013 | , , ,


ஊருக்கு போக
யாருக்கு இல்லை ஆசை
வாழ்க்கை விற்று
சேர்த்தென்ன செய்ய காசை

திர்ஹத்திற்கும் தினாருக்கும்
தினம் படும் இம்சை
ரியாலுக்கும் டாலருக்கும்
இரவுபகல் பாரா ஆசை

துள்ளியோடும் வசந்தம்
திரும்ப வராதென்று அறிந்தும்
தொலைந்து போகிறோம்
திரும்பத் திரும்ப!

எந்நாடும் வேண்டாமென்று
வீடு திரும்பியும்
கோடியில் வீடு காண
நாடி மீண்டும் அடைக்கலம்

தங்கமெல்லாம் கொட்டிக் கிடக்கவுமில்லை
அங்கே காலம் கடத்துவது எளிதுமில்லை
காசு ஈட்டுவது கடினம்
காலம் தள்ளுவதோ கொடுமை

சொந்த மண்ணின் சுகங்களுடன்
சொந்த உறவின் பாசங்களுடன்
சோறு உண்பவன் எவனோ
சொல்லத்தக்க
இன்பம் காண்பவன் அவனே

பவுன்டை காண மண்டை காய்ந்து
டாலரை தேடி கண்டம் பாய்ந்து
தொலைந்து போவது வருடமட்டுமல்ல
கலை இழந்திடும் உடல் வளமும் கூட!

ஊருக்குப் பேர் போன
நா ஊறும்
நோம்புக் கஞ்சி கூட
நான் சமைக்க
களனி போலாகுதே
அவள் கை படா வாழ்க்கையில்!

இவ்வாழ்க்கையின் சில வேளை
இனிய பெருநாள் நன்னாள் கூட
முடிவு அறியா  அரிய வேளை
வான் வெளியிலும் கொண்டாடும் நிலை

கடல் கண்ட அனுபவத்தில்
கண்டதோ உப்பில்லா பத்தியம்போல்
இஞ்சியுமில்லா மஞ்சளுமில்லா
கண்டனத்துடன்  துண்டமாய்
"மந்தி" யே கண்டோம்

கடந்து செல்லும் இளமையும்
படர்ந்து வரும் வெண்நரையும்
காலம் விதித்த
விலை!

M.H.ஜஹபர் சாதிக்

கண்மணி குளிரோடு நான்...! 26

அதிரைநிருபர் பதிப்பகம் | January 23, 2013 | , , , ,



கண்மணி குளிரோடு
கணவன் எனும் உன்னவன்
கணினியில் கலந்தாடி
காலந்தள்ளும் கோலமின்று

பனிப் பொழிவின் மிகுதி
பகுதியெங்கும் வெண்மணல்
மிகுதியான உன் நினைவால்
மீதி  தள்ளுவதில் வெந்தனல்

இலைகள் கூட தாங்காது
குளிரால் உதிர்ந்தது போல்
இளமைகளில் சில
இழந்து விட்ட உணர்வு

மலரும் கனியுமிலா
மரம்போல உள்ளம் மட்டும்
பரந்து கிடக்கு -  நாளை
வரும் நாட்களை எண்ணி

தனிமையெனும் கடும்பிடியில்
இனிமையெனும் எதுவுமற்று
பனிபொழிவு போல வெண்
மனதாய் மட்டும் இருக்கு

உன்னை விட்ட இப்பிரிவு
உறக்கமின்றி கனக்கும் இதயம்
ஏன் இந்தச் சதி வலையில்
அதிரையே அகப்பட்டதோ

காலம் செய்த கோலமிதை
கடத்தச் செய்யும்  வினையோ
கஷ்டமான ஒன்றாய் கோடைக்
கதிரவன் சுடுவது போல

கடந்ததை எண்ணிட
கனத்திடும் இதயம்
கனவில் நினைத்திட
கண் விழிப்பில் மனக்காயம்

“உ”. க்கள் மூன்றின் அருமை கருதி
வெற்று மனிதனாய் வருந்தி
வெள்ளந்தியாய் நாட்கடத்தி
வெளியேறிடும் நாளை எண்ணி

ஒன்று மட்டும் தென்படுகிறது
உடல் மட்டும் தொலைவாகி
உள்ளம் மட்டும் நெருக்கமாகி
கள்ளமில்லா எண்ணம் வருகிறது

நெஞ்சை நெகிழும் இப்பிரிவில்
தஞ்சை தரணியைக் கொண்ட நமக்கு
செட்டியா குளக் காட்சி கூட
ஊட்டி விடுகிறது கண்ணுக்கு விருந்தாகி

கடல் கடந்த வாழ்வில்
கப்பலேறிய கடித காலத்தில்
கைபேசி கிடைத்த இத் தருணத்தில்
கைமாறு செய்வது எங்ஙனம்?

M.H,ஜஹபர் சாதிக்

அவனா யிராதே...! 40

அதிரைநிருபர் பதிப்பகம் | October 12, 2012 | , , ,

அழுது கேட்பவன்
அகம் மகிழப் பெறுகிறான்
எழுதி சடைத்தவன்
தொட்டே சாதிக்கிறான்

தொழுது கேட்பவன்
திருப்தி யுறுகிறான்
கொள்வோ மெனும்
உள்ளமும் அடைகிறான்

எழுந்து விழிக்கையில்
ஒளிரும் கதிரவன் போல
தொழுது வணங்கி – முகச்
செழுமை யடைகிறான்

பழம் புளிய மரத்தின்
காயும் நிழலும் போல்
குழம்புக்கும் பயனாகி
குளிர்ச்சியும் தருகிறான்

எழுது கோலினால்
அன்று சாதித்தான்
எழுதாமலே யின்று
தட்டி தொட்டு படைக்கிறான்

அழுகைப் பார்வைக்கு
உருகும் நெஞ்சம் போல
நல்ல குணமுமாய்
நாளும் சிறக்கிறான்

அழுது கண்ணீர் வடித்து
மெழுகாய் ஒளிர்வது போல
அழுதே அக்காலமாய்
மின்சாரம் தருகிறான்

எல்லை தாண்டி
இவ்வுலகில் பிறப்பினும்
ஆறும் அஞ்சு போல்
நாவில் சுவைக்கிறான்

மெல்ல மெல்ல நல்
வசனம் இணைக்கிறான்
பெருதற் கரிய பல்
அறிவை வளர்க்கிறான்

தானடைந்த செல்வம்
தானமாய் பகிர்கிறான்
தான் பெற்ற நலன்
தம்பிக்கும் தருகிறான்

சுட்டு புண்படுமுன்
வாங்கி இருத்திடுவான் 'பர்னால்'
ருசிக்கும் நாவிற்கு
சுவைக்கும் உணவிடுவான் ஆனால்

ஏழ்மை இழிவெனெ
பழிக்கும் உலகிலே
இல்லார் தூற்றும்
அவனா யிராதே!

M.H.ஜஹபர் சாதிக்

லண்டனில் கந்தூரி ! 29

அதிரைநிருபர் பதிப்பகம் | October 03, 2012 | , , , ,


அட ! தலைப்பை பார்த்து தடுமாற வேண்டாம், தலைப்பிற்கான அர்த்தம் "ஒன்றுகூடும் விழா" அவ்வளவு தான். இடம்:  லண்டன். இங்கே ஷிர்க் இல்லை இணை வைப்புக்கான சூழல் இல்லை, கப்ரு வணக்கம் இல்லை (விழா நடக்குமிடத்தில் யாருடைய அடக்கஸ்தலமேதும் இல்லை)

இந்த இடம்  மஸ்ஜித் & இஸ்லாமிய தாவா செண்டருக்கு சொந்தமான பெரிய  இடம். இந்த சென்டர் 2 மஸ்ஜிதை நிர்வகிக்கிறது. மஸ்ஜிதுக்கு வெளியே அவ்வப்போது டேபிள்கள் போட்டு தாஃவா பணி செய்வார்கள். இந்த சென்டரின் கீழ் நர்சரி ஸ்கூல், மேல் நிலைப் பள்ளி மற்றும் ஹிஃப்ளு மதரசா ஆகியவை இயங்குகின்றன. இது வருடாந்திர விழாவாக நடக்கும் இடத்தின் ஒரு பகுதியில் பெரிய அளவில் கல்லூரி கட்டும் திட்டமும் இருக்கிறதாம் இன்ஷா அல்லாஹ்.

இதனை மேலாண் செய்பவர்கள் குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நம் சகோதரர்களே. இங்கே வருடந்தோரும் ஒரு நாள் மட்டும் பெரிய அளவில் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட கடைகளை அனுமதித்து குடும்பத்தோடு இங்கு வந்து ஒரு நாளை சந்தோசமாக களிக்கின்றனர். அதோடு சிறுவர்களின் மகிழ்வுக்காக ராட்டினம் போன்ற பல்வேறு விளையாட்டு அம்சங்களும் உண்டு. சிறுவர்களுக்கு கால்பந்து விளையாட்டு நடத்தி பரிசளித்து ஊக்கப்படுத்துவதும் உண்டு. மேலும் பிள்ளைகளை கழுதையில் ஏற்றி சவாரி செய்தல் (நம்மூரில் யானையில் ஏறுவது போல) மற்றும் முக பெயின்ட்டிங்,மருதானி  இடுதல் போன்ற பல்வேறு அம்சங்களும் உண்டு.

இதன் நோக்கம் நம்மவர்கள் பல்வேறு கலாச்சார அனாச்சார  நிகழ்வுகளுக்கு செல்லாமல் வருடத்தில் ஒரு நாளாவது இவ்வாறு கூடட்டுமே என்ற சேவை மற்றும் பொழுது போக்கு அம்சமாக செய்கின்றனர். ஆண்களும் பெண்களும் தனித்தனியாக  தொழ ஒழு செய்யும் வசதியுடன் வேளைக்கு தொழுகையும் இங்கேயே நிறைவேற்றுகின்றனர். இங்கே வர நுழைவுக் கட்டணமும் உன்டு.

இந்தாண்டு சுமார் 5000 பேர் இங்கே கூடினர்.உள்ளே வர குட்டைப் பாவாடைகளுக்கு அனுமதியில்லை.இஸ்லாமிய அங்கீகரிப்பு ஆடை அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.அனைத்து நிகழ்வுகளும் மார்க்க வரம்புகுட்பட்டே நடை பெறுகிறது. நான் சில வருடங்களாக விழாக்கமிட்டி சார்பாக தன்னார்வலராக நம்ம ஊரவர் சிலருடன் தொடர்ந்து கலந்து வருகிறேன். நம்மூரில் நடக்கும் இரு நிகழ்வையும் இது மாதிரி மார்க்க நெறிக்கு உட்பட்டு நடத்தினால் மறுமைக்கும் நலமாயிருக்குமே!-- 

கந்தூரி காட்சிகளின் புகைப்பட அணிவகுப்பு இதோ :-























M.H.ஜஹபர் சாதிக்