Showing posts with label facebook. Show all posts
Showing posts with label facebook. Show all posts

ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் (Friend request) 13

அதிரைநிருபர் பதிப்பகம் | April 08, 2014 | , , , ,

"முன்பின் பார்த்திராத வதனம், பள்ளிக்கூடப் படிப்பைப் பாதியில் விட்ட வயது (அ) அரியர்ஸை முடிப்பதற்குள் விசா கிடைத்துவிட்ட சிரித்த முகம், போதாதற்கு மூன்று வயதுக்குள் இருக்கக்கூடிய குழந்தையின் புகைப் படங்களின் பதிவு, எல்லாவற்றிற்கும் மேலாக அடையாளத்தை மேலும் சிரமமாக்கும் கருப்புக் கண்ணாடியும் அணிந்து கொண்டு  "ஃபிரண்ட ரிக்வெஸ்ட்" நிறைய வருகிறதே, என்ன செய்யட்டும்?. எல்லாம் பெண்டிங்கில் நிற்கின்றன.

(அந்த முகங்கள் எப்படியோ எங்கோ பார்த்த மாதிரி இருக்கக் காரணம் அவரகள் வாப்பாக்களை எனக்குத் தெரியுமோ!!!)"

மேற்கண்ட வினாவை முகநூலில் இருக்கும் ஜாகிர் உள்ளிட்ட நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்தபோது கீழ்க்கண்ட பதில் ஜாகிரிடமிருந்து வந்தது:

# பாஸ்.. இது போல் எனக்கும் வரும். சிலர் லத்தீன் அமெரிக்காவிலிருந்து கவர்ச்சி புயலாகவும் இருக்கும்.

# நம் ஊர் சார்ந்த மாதிரி அயன் கலையாத சட்டை போட்ட பசங்களும் வந்து ரிக்வெஸ்ட் எல்லாம் வரும். சிலர் நமது தமிழ் அறிவில் மயங்கி [!] நானும் உன்னுடன் 'பழம்' என்று என்ட்ரி கொடுப்பார்கள். 

#  கவர்ச்சி புயலுக்கு பதில் கொடுத்தால் 3 வது இ-மெயிலில் 2000 அமெரிக்கன் டாலருக்கு மொய் வைக்கப்பார்க்கும் ...ரொம்ப பல்லை இழிச்சால் அமவுன்ட் பெரிதாக தேவைப்படும் [ அவங்களுக்கு ] .

# எங்கள் ஆபிசில் ஒருவர் இப்படித்தான் ஆரம்பித்து மாட்டிக்கொண்டார். இதில் ஒரு பெண்ணும் ஒரு வெள்ளைக்கார பயலிடம் காசு அழுதாள். [ சிவப்பா உள்ளவன் பொய் சொல்ல மாட்டான் பாஸ்.. ] 

# பசங்களுக்கு நாம்  லைக் போட்டால் சமயத்தில் தத்துவ போஸ்டர் அனுப்பி சாவடிப்பானுங்க...சில பேர் மீனில் / செடியில் / பழத்தில் / மேகத்தில் இறைவன் பெயர் இருக்கிறது..உடனே லைக் போடு இல்லாவிட்டால் நீ ஒரு ம.ம.க என்று அதிரை த.த.ஜ  மாதிரி கொடுமை செய்வார்கள். 

# தமிழ் விரும்பிகள்.... இவனுகதான் மொனை மழுங்கிய கத்தி வைத்திருப்பவர்கள்... எதை தமிழில் எழுதினாலும் 'நல்லா இருக்கு' நீயும் படி என்று வார்த்தைக்கு கீழ் வார்த்தை போட்ட எல்லாத்தையும் கவிதை என்று ஜல்லி அடிப்பானுக. 

# சிலர் கலர் கலரான சாமி படம் எல்லாம் அனுப்பி ரொம்ப சக்தி வாய்ந்ததுனு எழுதி எத்தினி ஹார்ஸ்பவர்னு மட்டும் சொல்ல மாட்டானுக..

நீதி: தெரியாதவனுக்கு லைக் / கன்ஃபர்ம் போட்டால் தெரிந்தவர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் திட்டு வாங்க நேரிடும். 

***

இபுறாகீம் அன்சாரி காக்காவிடமிருந்து...

hahahahhahaha. There U R
***

அதிரைக்காரனிடமிருந்து...

அதைவிட கொடும என்னான்னா ஆன்றாய்டில் கேண்டி கலக்சன் கேம் விளையாட வரும் அழைப்புகள்.
***

அபூ இப்ராஹீமிடமிருந்து...

//நீதி: தெரியாதவனுக்கு லைக் / கன்ஃபர்ம் போட்டால் தெரிந்தவர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் திட்டு வாங்க நேரிடும்.//

இப்போ புரியுதா? எவ்வ்வ்வ்வ்வ்வ்ளோ வாங்கி கட்டிக்கிறோம்னு...

பில்லி சூன்யத்திடமிருந்து அழைப்பு வந்திருக்கா?....
***

தூண்டில்காரனுக்கு மிதவையில் கண் என்பதற்கேற்ப அபு இபுறாகீமிடமிருந்து மீண்டும் இப்படி...

"ஆச்சா, இப்பவெல்லாம் எல்லாவற்றிற்கும் "மேக்கிங்" பின்னணியைச் சொல்வது ட்ரெண்டாகி விட்டதால்... சொல்லியாயிற்று. இதில், மேக்கிங்தான் பதிவே என்பதாலும் தனியாகப் பதிவு மேற்கொண்டு இல்லை என்பதாலும் இன்னும் கொஞ்சம் சொல்லிவிட்டு முடித்துக் கொள்வோம்.

இணைய வலையுகம்தான் கலியுகம் என்னும் தற்போதைய நிலைப்பாட்டிற்கு முன்பதாக ஒரு காலம் இருந்தது. அதில், எழுதும் ஆர்வமுள்ளவர்கள் தனது சிறு துணுக்காவது ஜனரஞ்சக பத்திரிகையில் வந்துவிடாதா என்று ஏங்கி கடுமையாக முயற்சி செய்வர். வாசகர் கடிதம் பகுதியிலாவது நம் பெயர் வந்துவிடாதா என்று தொடர்ந்து தபால் அட்டை அம்புகள் தொடுத்த காலம் அது. அன்புள்ள அல்லியோ ("உங்கள் மனைவியிடம் கேட்க வேண்டிய கேள்வி இது") அரசு பதில்களோ ("ஹிஹி") எப்போதாவது இவர்கள் கேள்விக்குப் பதில் சொல்லி விட்டாலே சந்தோஷத்தில் குதிப்பர்.

வலையுகம் தீவிரமடைந்த பிறகு அதே எழுத்தாளர்களுக்கு தம் கருத்தை பதிவாகவோ பின்னூட்டங்களாகவோ எடுத்துச் சொல்வது இலகுவானது. இதனால் அதிகமான திறமைசாலிகள் அடையாளம் காணப்பட்டார்கள். தொடர்ந்து வாய்த்த வலைப்பூ வசதிகளை வாகாகப் பயன்படுத்திக் கொண்ட வலைஞர்கள் தம் திறமைகளை தம்மால் முடிந்த கவிதை, கட்டுரை, கதை, வாழ்வியல் போன்ற வடிவங்களில் வெளிக் கொணர்ந்து தமக்கென உலகளாவிய வாசக வட்டங்களை வசீகரித்துக் கொண்டு எழுத்துலகில் கோலோச்சுகிறார்கள். இதற்காக இவர்கள் செலவிடும் நேரம் வீணாகாமல் இவர்களின் ஆக்கங்கள் ஆவணப் படுத்தப் படுவதால் சிறப்பான ஆக்கம் என்றால் சிகரம் தொடும் வாய்ப்புகள் ஏராளம்.

ஆனால், இந்த ஃபேஸ்புக் மோகம் தலைக்கேறிய பிறகு அது தற்போது ஃபத்வா கொடுத்துத் தடை செய்யப்பட வேண்டிய அளவுக்கு போதையாகவே மாறிப்போய் வருவது ஆரோக்கியமானதா என்றால் கண்டிப்பாக இல்லை என்பதே பெரும்பான்மையானோரின் பதிலாக இருக்கிறது. 

ஃபேஸ்புக்கில் நண்பர்கள் உரையாடுகையில் ஒருசில தருணங்களில் நானும் கலந்து கொள்ள நேர்ந்தபோது, அருமையான, உபயோகமாகக் கூடிய, சுவாரஸ்யமான, ஆக்கப்பூர்வமான எத்தனையோ கருத்துகள், விமர்சனங்கள், ஆலோசனைகள் ஆவணப்படுத்தப்படாத உரையாடல்களால் யாருக்கும் உபயோகம் இல்லாமலும் அவர்களின் பொண்ணான நேரத்தைக் கொன்றும் களைகிறது என்பதை உணர முடிந்தது. 

ஃபேஸ்புக்குக்கு ஒதுக்கும் நேரத்தில் கடிவாளம் இட்டு, சில்லறை உரையாடல்களைத் தவிர்த்து, உங்கள் சிந்தனைகளை ஓர்முகப்படுத்தி, தொகுத்து பதிவுகளாக அதிரைநிருபர் போன்ற நல்ல தளங்களில் வெளியிடுவதன் மூலம் அதிக வாசகர்களைச் சென்றடைவதோடு உங்கள் ஆக்கங்கள் காலகாலத்திற்கும் ஆவணப்படுத்தப் பட்டு எதிர்காலச் சந்ததியர்க்கும் வாசிக்கக் கிடைக்கிறது என்பதை நினைவில் நிறுத்துங்கள். 

ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பும்போது மறவாமல் கண்கள் தெரியுமாறு ஒரு புகைப்படமும் உங்களைப் பற்றியச் சிறு அறிமுகமும் இருப்பது நல்லது. அதைப்போல், யாரையும் ஃபிரெண்ட் என்று ஆமோதிக்குமுன் அவர் யார் என்பது உங்களுக்குத் தெரிந்திருத்தல் மிகமிக அவசியம். 

கீழே கொடுக்கப்பட்டுள்ள சில்லறை உரையாடல்களால் விரயமாக்கப்பட்ட சுவாரஸ்யமானவற்றை விடவா இக்கால எழுத்தாளர்கள் எழுதுகின்றனர்? 

Mohamed Thasthageer:

நான் 
கண்மூடியபின் 
தோண்டியெடுத்தால் 
அதில் 
அவள் உருவம் மட்டும் பதிந்திருக்கும்!
like • 1 • Delete • Feb 28

AbuIbrahim Nainathambi

நிலவை 
அன்னாந்து பார்க்கிறார்கள்
அதனை
பக்கத்தில் வைத்துக் கொண்டு..
like • 2 • Delete • Feb 28

Jamaludeen Noor Mohammed

அன்பே 
நீ கடித்த ஆப்பிளை 
நான் கடிக்க ஆசைதான்
சற்றுபொறு 
என்
பல்செட்டை
பொருத்திக் கொள்கிறேன்.

-80 வயதில் கவி கொள்ளுத்தாத்தா-
(இன்ஷா அல்லாஹ்:)
Edited • Like • Delete • Feb 28

Sabeer Ahmed

ஜமாலுதீன்,

பல் செட் மாட்டுவதற்குள்
ஆப்பிளில்
அவள்
உலர்ந்துபோவாளே?
சட்டென்று
சப்பிவிட வேண்டியதுதானே
Like • 2 • More • Feb 28

Jafarullah Jafar

ஒரு கவிஞர் சொன்னாராம்.. (அது நீங்கள் இல்லை என நம்புகிறேன்)

"ஒரு பெண்ணைப் பற்றி ஒரு கவிதை எழுதினேன் அதற்கு என் மனைவி உதவினாள்"

'அப்படியா?"

"ஆமாம் அக்கவிதையை எழுதி முடிக்கும் வரை அவள் என்னுடன் இல்லை"
Like • 1 • Delete • Feb 28

Jamaludeen Noor Mohammed

கல் நெஞ்சக்காரி 
கடந்து போகிறாள்
கொள்ளெனச் சிரித்து 
நானெழுதிய கவிதைகள் 
கிறுக்கல்களாம்!

அடிப்பாவி அறிவாயா நீ?
உனைப் பார்த்ததுமுதலே
நான் கிறுக்கன்தான் என்பது!

நீ ரசிப்பாய் என்று நம்பி
தூக்கம் தொலைத்து எழுந்த
பின்சாமப் பொழுதுகளில்
வார்த்தை கிடைக்காமல்
வார்த்த வரிகளடி அவை!

மீண்டும் சிரிக்காதடி உன்
சீண்டும் விழிகளுக்கு நான்
மாண்டு போயிடுவேன்.

(அடக்கல்சோ....ஒருநாள்கூட என்னை இப்படி எல்லாம் சொன்னதில்லையே! - அதிரையிலிருந்து அசரீரி)

உடு ஜூட்.
Edited • Unlike • 3 • Delete • Feb 28

Sabeer Ahmed

இப்படி
உழுது வைத்தாலும்
பயிரிடப்படாத வயலாக
எழுதி முடித்தாலும்
கொடுக்கப்படாத கவிதைகள் எத்தனையோ

ஜமாலுதீன்
இதிலெல்லாமா ஜூட் விடுவார்கள்?

நின்று
நிதானமாக
நிறைவாக்கியிருக்கலாமே!

இந்த
உணர்வுகளின் மொழிபெயர்ப்புகளை
கிறுக்கல் என்றால்
அவள்தான் கிறுக்கி!

(பி.கு.: கல்நெஞ்சக்காரி என்று சொல்கிறீர்கள், எதற்கும் நேருக்குநேராக மோதாமல் இருப்பது நல்லது என்று கிரவுன் நினைக்கலாம்)

Muhiyadeen Sahib Mysha

ஜன்னலோரக் காற்றை நான் 
சுவாசித்துக் கொண்டு நின்றபோது 
சலனமற்று ஓர் உருவம் தெரு வீதியில் 
கொலுசு ஒலியில் 
சமிக்கை காட்டிச் சென்றுகொண்டிருந்தன.

சற்றுநேரத்தில் நானும் சலனமற்றவனாய் ஆகி 
உற்று நோக்கிப் பார்ப்பதற்குள் 
எட்டுத் திசையும் சலனமற்று இருந்தன.
அது யாராக இருக்குமென்று 
இன்று வரையிலும் நான் யோசிக்கிறேன்.
Unlike • 1 • Delete • Feb 28

Sabeer Ahmed

மெய்சா,

நீ பேய் பிசாசுபற்றி எழுதுறவனாச்சே... ஒரு வேளை மோகினிப்பிசாசோ?
Like • More • Feb 28

AbuIbrahim Nainathambi

உனக்கு இரவு
எனக்கு பகல்
இரண்டுக்கும் நடுவில்
நாம் இருவர்...

ஜோடிப் பொருத்தம்
பால் பொருத்தி வாசிச்சுடு
Like • Delete • Feb 28

Mohamed Thasthageer

கண் அறிவித்ததோ 
நான் வருவேன் என 
முன்கூட்டியே!
Like • Delete • Feb 28

Mohamed Thasthageer

இரவின்பால் பகலுக்கு காதல்,
பகலின் பால் இரவின் காதல்! 
அன்பின் பால் ஈர்க்கப்பட நட்பு 
நடுனிசி, நன் பகல் பார்க்காது!
like • 1 • Delete • Feb 28

Sabeer Ahmed

தமிழை 
ஃபுட்பால் ஆடுகிறார் கிரவுன்
உதைக்காமல்
ஒருவேளை
கோல் கீப்பரோ!

மேலும்... ஆங்காங்கே வாசித்தவைகள்...

Safath Ahamed
9 minutes ago near Bellevue, WA, United States 

விழுந்து எழுதலில்
விளங்கிக் கொள்ள முடிகிறது..
சில காயங்களும், 
பல பாடங்களும்!!
Like•Comment•Share

Safath Ahamed
Mar 23 at 10:35pm 

Everyone is ready to support some party.. But no one to support voters !!
Like•Comment•Share

அஹ்மது இர்ஷாத் 

"முழு தேங்காய நாய் கவ்விட்டு போன மாதிரி ஃபேசுபுக்கு ஃபுல்லா ஒரே அரசியல் டாலிக்கா ஓடிட்டு இருக்கே பாஸ்...

எம் ஆதரவு இடைத்தேர்தலுக்குத்தான்..." ண்னு ஒரு எம்.எல்.ஏ.வை மண்டைய போடச் சொல்றமாதிரி இருக்கு...
Like•Comment•Share

ஃப்ரெண்டு ரெகுஸ்ட் கிடைக்கப் பெற்று அதனை ஏற்பதா இழப்பதா ? என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு, முகநூல் குறிச்சொல் துவங்கப்பட்ட நிமிடத்திலிருந்து உங்களின் கடைசி தட்டச்சு / விரல் சொடுக்கும் எழுத்து பதியும் வரை என்னவெல்லம் நிகழ்கிறது, அது எவ்வாறு இயங்கி பயனர்களின் நேரத்தை குடிக்கிறது என்பதை மற்றுமொரு பதிவோடு அதிரைநிருபர் டெக்னிகல் டீம் வந்து சந்திப்பார்கள்.

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

இன்டர்நெட் அடிக்ஷன் சிண்ட்ரோம் - FACEBOOK 13

அதிரைநிருபர் பதிப்பகம் | January 20, 2012 | , ,


எச்சரிக்கை !

வழமையான வலைமேய்ச்சலில் நல்லதையே தேடும் நன்னோக்கில் கிடைத்த அதிர்ச்சி தகவல்தான் இது. ஒவ்வொருவரும் அவசியம் இதன் விபரீத வீரியம் அறிந்து விழித்துக் கொள்ள வேண்டும். வேலி போட்டிருக்கிறோம் வேட்டியை இறுக்கி கட்டியிருக்கிறோம் என்று தூங்கிவிடாதீர்கள் ! அவைகள் என்றும் அறுபடலாம் அவிழ்க்கப்படலாம்.

இது ஒரு வியாதியாகி பின்னர் முற்றிக் கொண்டு மனநல மருத்துவர்களுக்கு கப்பம் கட்டும் அடுத்த தலைமுறையை உருவாக்க வழி வகைகளை செய்யாதீர்கள்...

சகோதர, சகோதரிகளே... உங்களிடம் உருக்கமாக வேண்டிக் கொள்கிறோம், பாதுகாப்புடன் இருங்கள் வீட்டிற்குள் மட்டுமல்ல உங்களின் உள்ளங்களுக்குள் அனுமதியின்று நுழையும் இவ்வகை ஊடகங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இவ்வகையான வியாதியைப் பரப்பும் அனைத்து ஊடகங்களிலிருந்தும் பிள்ளைகளை விலக்கி வையுங்கள் நீங்களும் அதனை விட்டும் விலகிவிடுங்கள் அதற்கு முன்னோடியாக இருந்திடுங்கள் Please !

ஃபேஸ்புக், டிவிட்டரில் மூழ்கிக் கிடப்பது சரியா ?

''கல்லூரி மாணவியான என் மகளின் படிப்பில் சமீபகாலமாக தடுமாற்றம் தென்படுகிறது. படிப்பு, நண்பர்கள் என கொஞ்சம் கொஞ்சமாக விலகி, சமூக வலைதளங்களே (ஃபேஸ்புக், டிவிட்டர்) கதி என கிடக்கிறாள்.  அவளை வழிக்கு கொண்டுவர என்ன செய்யலாம்?'' என்று தவிப்போடு கேட்டிருக்கும் விழுப்புரம் வாசகிக்காக கவுன்சலிங் டிப்ஸ் தருகிறார் திருச்சியைச் சேர்ந்த மனநல மருத்துவர் எம்.ராஜாராம்.

"திண்ணைப் பேச்சு, பேனா நட்பு வட்டம் போன்றவற்றின் லேட்டஸ்ட் வடிவம்தான், சமூக வலைதளங்கள். இளைஞர்கள் அவற்றைத் தவிர்க்க முடியாது. ஏனெனில், பொழுதுபோக்க மட்டுமல்ல... வர்த்தகம், படிப்பு, ஆலோசனை, மனப்பகிர்வு என பல விஷயங்களிலும் இந்த வலைதளங்கள் பெரும் உதவி செய்கின்றன. ஆனால், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அளவிலான அறிகுறிகள், உங்கள் மகள் இந்த சமூக வலைதள பயன்பாட்டில் கிட்டத்தட்ட அடிமையாக இருப்பதையே காட்டுகிறது.

தற்போது மனநல மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படும் இளைய வயதினர் பலரையும் பார்க்கும்போது, 'இன்டர்நெட் அடிக்ஷன் சிண்ட்ரோம்' (Internet Addiction Syndrome) என்று புதிதாக பெயர் சூட்டுமளவுக்கு, மனநலம் சார்ந்த புதிய பிரச்னை உருவாகியிருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.

முதலில், உங்கள் மகளை கவனிக்கும் முன், அவரைச் சுற்றியுள்ள சூழ்நிலையை சற்று அலசுங்கள். குடும்பத்தில் எல்லோரும் அவருடன் சரியாகப் பழகுகிறீர்களா, அவர் சொல்வதைக் காது கொடுத்து கேட்கிறீர்களா, அவரோடு குவாலிட்டியான நேரம் செலவிடுகிறீர்களா... என்பதை ஆராய்ந்து பாருங்கள். நடைமுறை உலகம் புறக்கணிக்கும் போதுதான் இளைஞர்கள் வேறு போக்கிடம் தேடுவார்கள். அது உறவினர்களாகவோ, கல்லூரி நட்பு வட்டமாகவோ இருக்கும்போது பெரிய பிரச்னையைத் தந்துவிடாது. அப்படியே பிரச்னை எழுந்தாலும், எப்படியும் உங்கள் கவனத்துக்கு எட்டிவிடும்.

ஆனால், சமூக வலைதளங்களில் ஊர் கடந்து, கடல் கடந்து முகமறியா நபர்களிடம், அவர்களின் சுயரூபம் தெரியாது நட்பு பாராட்டுகிறேன் பேர்வழி என அலைபாயும்போது... நிறைய நிழல் நடவடிக்கைகளில் சிக்க வாய்ப்பாகிவிடும். அதிலும் போதிய முதிர்ச்சி இல்லாவிட்டால் சுலபத்தில் பல தீய சக்திகளுக்கு இவர்கள் இரையாவார்கள்.

பொதுவாக, தனிமையில் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு, அதேபோன்ற இன்னொரு நபரிடம் சாட்டிங் செய்பவர்கள், தங்கள் அந்தரங்கத்தின் புனிதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு எல்லைமீற அதிகம் வாய்ப்பிருக்கிறது. முகம் தெரியாத நபரை எளிதில் நம்பிவிடுவது, வார்த்தை ஜாலத்தில் விசாரிப்பவர்களிடம் எல்லாம் தன் புலம்பலைக் கொட்டுவது, தன்னை பலரும் கவனிக்கிறார்கள், அவர்களின் கவனிப்பும் ஆறுதலும் தொடர வேண்டும்... இப்படி பல உள் உந்துதல்களோடு மேலும் மேலும் அவர்கள் இந்த சமூக தளங்களில் கட்டுண்டு போகிறார்கள்.

ஃபேஸ்புக்கை தனது பிரசாரத்துக்கான உத்தியாகப் பயன்படுத்தி அமெரிக்க அதிபராக உயர்ந்த பராக் ஒபாமாவே, ஒரு பொறுப்பான தந்தையாக தன்னுடைய பெண் குழந்தைகளுக்கு, இப்போதைக்கு ஃபேஸ்புக் தேவையில்லை என்று தடை செய்து, அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்திருக்கிறார். தனது தேசத்து பெற்றோர்களுக்கும் இதுகுறித்த கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார். வளர்ந்த நாடுகளிலேயே இப்படி உஷாராகும்போது, நாம் இன்னும் உஷாராகவே இருக்க வேண்டும்.

ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தினமும் 45 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக ஒரு மணி நேரம் செலவிடுவது ஓ.கே... அதைத் தாண்டி பின்னிரவு வரை பொழுதுபோக்குவது, குடும்ப உறவு, நண்பர்களைத் தவிர்ப்பது போன்றவை கவலைக்குரியவை.

உங்கள் மகளுடன் சகஜமாகப் பேசி அவரது சமூக வலைதளப் பயன்பாடு, நண்பர்கள் விவரங்களை உண்மையான ஆர்வத்தோடு அறிந்து கொள்ளுங்கள். அந்தரங்க தகவல்கள், புகைப்படங்களைப் பதிவேற்றுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்துங்கள். அவரது சமூகப் பழக்கத்தில் நல்ல விஷயங்களைக் கண்டுபிடித்துப் பாராட்டுங்கள். குறையான விஷயங்களைக் காயப்படுத்தாது மென்மையாக எடுத்துச் சொல்லுங்கள். அவர் அக்கவுன்ட் வைத்திருக்கும் சமூக வலைதளத்திலேயே உங்களுக்கும் ஒரு அக்கவுன்ட் துவங்கி, உங்கள் மகளின் சமூக நண்பர்களில் ஒருவராகுங்கள். இது உங்கள் மகளின் இணைய செயல்பாட்டை சுத்திகரிக்கவும், கண்காணிக்கவும் உதவும். பல்வேறு வகையிலும் அவரின் தனிமைச் சந்தர்ப்பங்களைத் தவிர்த்து பிஸியாக வைத்திருக்கும் சூழலை ஏற்படுத்துங்கள்.

இந்த வழிமுறைகள் எல்லாம் சரிவராவிட்டால், விரைவாக மனநல மருத்துவரிடம் கவுன்சலிங் தருவதே நல்லது. மாறாக, அவரது இணைய பயன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினால், மன அழுத்தம் அதிகமாகி வேறு பாதையில் பிரச்னை வெடிக்கக்கூடும்!''

நன்றி : அவள்விகடன்

அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் நன்னடத்தை தொடரும்...

- அதிரைநிருபர் குழு