Showing posts with label msm rafiya. Show all posts
Showing posts with label msm rafiya. Show all posts

ஆத்திச்சூடி - அறிவுரையாகவும் இருக்கனும் ! 27

அதிரைநிருபர் பதிப்பகம் | July 07, 2011 | , ,



ஆப்பிளை ரசித்தேன்!(ருசிக்கவில்லை-ரசாயனம்)


ஆத்திச்சூடி-என்றால் அறிவுரையாகவும் இருக்கணும்,அதிரை வட்டாரத் தமிழாகவும் இருக்கணும் என்று மனதில் கவ்விக் கொண்டு  என்னால் இயன்றதை தொடர்ந்தேன்.


கிலமெங்கும் ஒலிக்கணும் அதிரைப்புகழ்! மரிக்காவாலும்-ஆஸ்திரேளியாவானாலும் ரிஜிக் மின் அல்லாஹ்!

ண்டவனே எல்லாம் ஏன்டவன்(இயன்றவன்)!

ல்லாத ஊருக்கு வழி தேடாதே !

க்கிரத்தை உட்டுட்டு பறக்கிரத்த ஆசைப்படாதே!

ள்ளதைக் கொண்டு ஒப்பேத்து!

ரார் மெச்ச நடந்து கொள்!

ங்க வேலைசெஞ்சா என்ன..எமிகிரேஷன் கிடைக்குமா?

லும்போதே சம்பாதிக்கணும் !

சு வச்சாவது முதலாளியிடம் நல்ல பேரு வாங்கிக்கோ.....

த்தும சத்துமையா ஈந்துக்கணும் !

வர்டைம் பார்த்தாவது ஊட்டுக்கு காசுவரனும்.!

வை பாட்டி இப்பயிருந்தால் இதைத்தான் சொல்லிக்குடுப்போம்!

தன்றி வேரன்றியோம் சகோதரா!


வாழ்க வளமுடன்.

ராஃபியா

அதிரையில் காணாமற்போன பையன்கள் மக்காவில் கண்டெடுப்பு ! 10

அதிரைநிருபர் | April 08, 2011 | , , ,

பள்ளிப் பருவத்திலே மனதில் எந்த கவலையும்- கிலேசமும் அற்ற அந்த அற்புதமான பிராயத்தில் காலத்தின் கடப்பாட்டின் நிமித்தம் பிரிந்து கடல் கடந்து வேறு வேறு பாகங்களுக்கு தூக்கி எறியப்பட்ட 3 இளைஞர்கள் (Three 'I's) சற்றேறக்குறைய 25- 30 வருடங்களுக்குப்பின் கண்டு கொள்ளப் படுகிறார்கள். அதுவும் மனிதனை புனிதனாக்கும் சங்கை கொண்ட மக்கா மாநகரில் ஒருத்தரை ஒருத்தர் அறிமுகப்படுத்திக் கொண்டு ஜாஃபர் ஷேக்-ஹாஜா அமீன்-முகம்மது ரஃபி ஆகியோர் ஹரம் ஷரிஃப் எதிரில் ஹாஜியார்ர்ர்ர்ர்... என்று நீட்டி, நீங்ங்ங்க.... என மரியாதைப் படுத்தி, பின் குரலை விளங்கிய பின் மாப்ளே.... என்றும் டேய் என்றும் வந்திறங்கி மரியாதை தேய்ந்து- மகிழ்ச்சி தோய்ந்து, அன்பு பரிமாறப் பட்டது. குசலங்கள் விசாரிக்கப்பட்டது. "உன் கல்யாணத்துக்கு முன்னால் பார்த்தது, இப்போது எனக்கு கல்யான வயதில் பிள்ளைகள் உள்ளனர்" என அறிமுகப் படுத்தப்பட்டனர்.


குடும்பம்- உத்தியோகம்- பள்ளி வாழ்க்கை- நாடகத்தில் நடித்தது- அடிதடியில் தடித்தது- குருப் ஃபோட்டோ குளறுபடி என்று எல்லாம் அலசிவிட்டு உனக்கு சுகர் செக் பண்ணியா? BP எத்தனை? கொலஸட்ரால் அதிகமா இருக்குமே...? கலரிச்காப்பாட்டுக்கு ஊறுகா பாக்கெட்டோடு போறவனாச்சே...?! என்று நல்லெண்ண கூட்டணி சேர்த்து மஞ்ச  சோத்தயும் சுட்ட கோழியும் உள்ளே தள்ளினோம்.


Of-course கனாப்போன புள்ளைங்க கிடைக்கையில் கொஞசம் வயசு கூடவாச்சு! ஆனாலும் பக்கத்து அரபு நாட்டிலிருந்து கொண்டு ஹரம் விஜயம் செய்ய இத்தனை நாள் சுனக்கியது கொங்சம் ஓவர்.



OK. past is past!!!

இருப்பிடம் திரும்புகையில் ஹஜ்ஜிக்கு பலமாக நிய்யத் வைக்கவும், நம்மவர்களுக்கு ஹஜ்- உம்ராஆர்வத்தை ஏற்படுத்தி அதிக அதிகமான அதிரையினரையும், சார்ந்தோர்களையும் அனுப்பி வைக்கும் படியும் நேசிக்கும் நண்பர்களை கேட்டுக்கு கொண்டோம்.

இதை வாசிக்கும் உங்களையும் தான்...!!!

வாழ்க வளமுடன்!

- MSM ரஃபியா

அகல இரயில் பாதையும் மீட்டர் கேஜ் மனதும் - MSM R 7

அதிரைநிருபர் | March 26, 2011 | ,

அகல ரயில் பாதைக் கேட்டு சகோதரர் அ.இ.அப்துல் ரஜாக் (சேஸ். காம் ) தகவல் அறியும்  சட்டம் மூலம் விண்ணப்பம் செய்துள்ளார். புது தில்லிக்கும் ,ரயில்வே அமைச்சுக்கும் , முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கும் அணுகப் போவதாக கூறி ,'வெளி நாட்டில் வாழும்  அதிரை அன்பர்கள் அனைவர்களும் இந்தியத்தூதர் அலுவலகங்கள் மூலமும் விண்ணப்பித்தால் மிக நல்லதாகும்' என்ற கருத்தினை முன் வைத்தார்.

இந்த சிறப்பு விண்ணப்பத்திற்காக ஜித்தாவில் Ayda ஒரு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்து கலந்து ஆலோசித்தது .எமது கோரிக்கையை தூதரகம் Attestation செய்து தரவேண்டும் என தொலைபேசியில் அனைவர் முன்னிலையில் Welfare கான்சல் அவர்களை கேட்டுக் கொண்டேன்.

ஊர் நலனுக்காக அனைவரும் ஒன்று பட்டு முன்வருவதை வெகுவாக அவர் பாராட்டுவதை ஸ்பீக்கரில் எல்லோரும் கேட்டு இன்புற்றனர். மேலும் சட்டரீதியாக இதை நாங்கள் அட்டெஸ்ட் செய்யமுடியாவிட்டாலும், நட்பின் அடிப்படையில் நம் இனிய தமிழ் மக்களுக்காக ' மனு ஏற்றுக்கொண்டதாக ஒரு Approval செய்து தருவதாகவும் மற்றும் தில்லிக்கு இதை Forward செய்து தருவதாகவும் ஒப்புக் கொண்டார்.

அஃதன்றி, Saudi Fisheries company க்கு மீனவ விசாவில் வந்து மாட்டிக் கொண்ட ஒரு தமிழரின் அவலநிலையை விளக்கினார். சம்பளமின்றி துன்புறும் அறுவரின் பரிதாப நிலையையும் , அதில் ஒருவரின் சுகவீனம் - இரண்டு மாதத்திற்கும் மேலாக "கோமா" வில் மருத்துவ மனையில் கிடந்து மறுபிறவி எடுத்து வந்துள்ளபோது பாஸ்போர்ட்டும் இக்காமா(Resident Permit) ம் காலாவதி ஆகிவிட்டதாம்.


அந்த தமிழரை ஊருக்கு அனுப்ப எம்பாசியே கையை முறிக்கித்தினறிக் கொண்டிருக்கையில், "நீர்  எவரும் பெரிதாக பொருளோ -பணமோ-மருந்தோ கொடுத்து உதவ முடியாவிட்டாலும் ஆறுதலாக ஹாஸ்பிடல் சென்று பாருங்க சார்" என்று அழாத குறையாக கேட்டுக் கொண்டார்.

இதுவரை அவருக்கு உதவி ஒத்தாசையாய் பார்த்து வந்துள்ளது ஒரு மலையாளியும் ,ஒரு ஸ்ரீலங்காத் தமிழருந்தானாம். இங்கு சவூதியில் கிட்டத்தட்ட ஆறு அமைப்புகளில் சிற்சில பொறுப்புகளில் இருந்து வரும் யான் எந்த அமைப்பின் லேபிளில்(லும்) இந்த சேவை செய்யலாம்..?!. முன்னுரிமை கொடுத்து அதிரை அன்பர்களுக்கு அழைப்பு விடுத்து அயர்ந்து போனதே மிச்சம்! அதிரைக் காரர்களுக்கு விளம்பரம் பெறுவது தங்களுக்கு வெருப்பைத்தரலாம். ஆனால்,இச்சேவை மூலம் கான்சல் அவர்களின் விருப்பத்தை பெறலாம் அல்லவா..?!

அகல ரயில் பாதை சீக்கிரம் வருகிறதோ...இல்லையோ ... மீட்டர்கேஜ்லிருந்து நம் இதயங்கள் ஒரு சில செண்டி மீட்டராவது அகலமாகவேண்டும்!!!

-- MSM ராஃபியா

மற்றுமோர் விழிப்புணர்வு. 17

அதிரைநிருபர் | January 27, 2011 | ,


அதிரையில் அமர்க்களமான முறையிலே கல்வி விழிப்புணர்வு தந்த சாதனையாளர்களை பாராட்டிக் கொண்டிருக்கும் இதே வேளையில் ஜித்தா - சவூதி அரேபியாவில் மாணவச் செல்வங்களுக்கான அறிவுத்திறன் ,ஞாபக சக்தி , தனித்திறமை போன்றவற்றிர்க்கான அருமையான ஆளுமை விழிப்புணர்வு CHILDREN PROGRAM ஒன்று ஜெத்தா தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது .

மக்கா மதீனாவைச்சேர்ந்த துறை நகரமாகிய ஜித்தாவில் கணிசமான நம் சமுதாய குடும்பங்களும் ,மாற்று மதத்தினரும் சேர்ந்து நிறைய குடும்பங்கள் இங்கு வசித்தும், சிறார்கள் இங்குள்ள பள்ளிகளில் பயின்றும் வருகின்றனர்.இந்தியக் குழந்தைகளில் குறிப்பாக தமிழ் குழந்தைகள் அதிலும் குறிப்பாக எம் சமுதாய  குழந்தைகளை மேம்படுத்த வேண்டும் " என்பது எமது அவா! (இந்தியத் தூதரகத்தில் நடத்துவதால் மதப் பற்றை காண்பிக்க இயலாது). போட்டிகளில் ஒன்று Dhum sheraat ,Who am I -தனித்திறமை , table topic (சீட்டுக் குலுக்களில் கிட்டும் தலைப்பில் 2 நிமிடப்பேச்சு ), மேலும் திரையில் 10 -15 பொருட்களை காண்பித்து விட்டு சற்று நேரத்தில் விளக்கை அனைத்து விட்டு சிறிது நேரத்தில் என்னென்ன - எத்தனை பொருட்கள் கண்டாய் ..? என குழந்தைகளிடம் வினவ அதிகமான பொருட்களை கூறும் குழந்தைக்குப்பரிசு.

TONGUE TWISTING (உதாரணம்-சாச்சாக்கு தச்ச சட்டை சாச்சிக்கு ஏத்த சட்டை ), திருக்குர்-ஆன் ஆயத்துக்களை ,திருக்குறள் அத்தியாயங்களை அதி வேகமாக ஒப்புவித்தல் போன்றவையாகும்.

மின்னஞ்சலில் போட்டி அறிவிப்பு பார்த்ததிலிருந்து பெற்றோர்களிடமிருந்து ஆர்வ மிகு அலைபேசி அழைப்புக்கள். மூன்று தினங்களுக்கு முன் போட்டிக்கான தெரிவும் ஒத்திகையும் நடந்தது .குழந்தைகைகளும் பெற்றோர்களும் முண்டியடுத்தி -நெட்டித்தள்ளிக் கொண்டு பெயர் கொடுத்தனர்.(படம் பார்க்க).





அதெல்லாம் இருக்கட்டும் ! வந்துள்ள விண்ணப்பங்களில் 80 சதவிகிதத்தினர் மாற்று மதத்தினர்.நம்மவர்களில் இருவர் தொலைபேசியில் 'எங்கே ஃ புட் ஆர்டர் கொடுத்துள்ளீர் ' என கேட்டு தெரிந்து கொண்டனர். சமுதாய சொந்தங்களே! கொஞ்சம் சிந்தியுங்கள். இது போன்ற மாணவர்களுக்கான ஏற்பாடானாலும் சரி ,பெரியவர்களுக்கான பெர்சனாலிட்டி ப்ரோக்ராம்,பப்ளிக் ஸ்பீகிங், ,கோல் செட்டிங் -கேரியர் டெவலப்மென்ட் ப்ரோக்ரம் எதுவானாலும் சரி 'நம்மடவன்' (ஒருமையில் விளிப்பதற்கு மன்னிக்கவும்-ஆத்திரத்தை இப்படித்தானே ஆதங்கமாக வடிக்க முடியும் ) எவ்வளுவு சிரமப்பட்டு ,அனுமதி பெற்று, உணவும் ஏற்பாடு செய்து இலவசமாக தரும் போதும் அதை பயன் படுத்திக் கொள்வதுமில்லை. அதற்கு ஆதரவு தருவதுமில்லை. நம்ப மாட்டீர்கள் நான்கைந்து அமைப்பாளர்கள் பெயருடன் இந்த குழந்தைகள் ப்ரோக்ராம் பற்றிய அறிவுப்பு மின்னஞ்சல்கள் மூலம் வெளியிட்ட பத்தாவது நிமிடம் ஒரு தாயிடமிருந்து தொலைபேசி அழைப்பு,உரையாடல்........

ஹலோ .....வணக்கங்கே..

எஸ். ..வாழ்க வளமுடன்! யார் பேசிறீங்க ,,?

அண்ணே ! எம் பேரு ரமா ..நான் மெயில் பாத்தேங்க ..

சந்தோசம்!

என்கொழந்தையும் கலந்துக்குன்னும்க..

நல்லதுங்க. அப்ளைப் பண்ணுங்க.

அண்ணே ...ஒரு சின்ன ரிகுவஸ்டுன்னே..எங்க புள்ளை எத்தனை போட்டிகளில்

கலந்துக்கலாம்..?

அத்தனைப் போட்டிகளிலும் கலந்துக்கலாம் அம்மா!

நன்றிங்க!

இது போன்ற ஒரு தொலைபேசி அழைப்புக் கூட நம் சமூகத்து தாயிடமிருந்தோ-தந்தையிடமிருந்தோ வந்ததாகத் தெரிய வில்லை இது போன்ற இன்று நல்ல நம் சமுதாயத் தலைமுறையினரை உருவாக்கினால் தானே நாளை அவர்களை திறமையுள்ள தலைவர்களாக / அதிகாரிகளாக /ஆட்சியாளர்களாக /நம் மீது பழி சுமத்துபவர்களுக்கு பதிலடி கொடுப்பவர்களாக / ஒவ்வொரு நிறுவத்தின் உயர் பதவி வகிப்பவர்களாக நாம் காண முடியும் .ஈசிச்சேரில் சாய்ந்து நம் முதுமைக் காலத்தை நம் நாட்டில் ஈசியாக / பாதுகாப்பாக கழிக்க முடியும்?

வாழ்க வளமுடன்.

--ராஃ பியா

தேவை ஒரு தமிழ் நாளிதழ் 5

அதிரைநிருபர் | January 05, 2011 | , ,

தி  டிவின் சிட்டி என்றழைக்கப்படும் இரட்டை நகரமான 
அபகா -கமீஸ் முஷைஎத் அல் அசீறி ஹாஸ்பிடலின் சீனியர் நீரோ சர்ஜன் டாக்டர் வேலு அவர்கள் மருத்துவ கருத்தரங்கு  நிமித்தம் ஜெத்தா -சவூதி அரேபியா வந்திருந்தவர்களை   நண்பர்கள் சந்தித்து உரையாடியபோது நமக்கென்று ஒரு நாளிதழ் தமிழில் வேண்டும் என்ற அவாவை வெளிப் படுத்தினார்கள்.
மலையாளிக்கு அடுத்த படியாக மிகுதமான மக்களை  கொண்டுள்ள நம் சமுதாய - சமூக மக்களை பிரயோஜனமாக நெறிப் படுத்துவது  என்று கோரப்பட்டது.

அரப் நியுஸ் அல்லது சவூதி கெசட் ஊடகத்துடன் நாம்  கைகோர்த்து கொணர முயற்சிக்கலாம் என ஆலோசனை தெருவிக்கப் பட்டது.

ஜெத்தா தமிழ் சங்க நிர்வாகிகள் இந்தியத்தூதரகத்தில் கான்சுலேட் ஜெனரல் அவர்களைஇன்று  சந்தித்தபோது இதே கருத்தினைக் கூறி,தமிழர்களின் பள்ளி ஒன்று கூடஜித்தாவில்  தென்பட வில்லேயே..? என  JTS ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ரஃபீக்  அவர்களிடம் வினவ, அதற்கு பள்ளிகளின் பிரின்சிபால்களாக தமிழர்கள்தான் உள்ளனர் என்று சகோ.ரஃபியாவும் சகோ.சிராஜூம் விளக்கினர்.நிர்வகிப்பது நம்மவர்கள்தான் என சகோ.ஷஃபீக் மாலிக் கூறினார்.   

மேலே உள்ள புகைப்படத்தில், ஜித்தா, சவூதி அரேபியா-  பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் சவூதி ஸ்பான்சருடன் நிற்பவரும் (பிரின்சிபால்-சென்னை), பரிசுக்கோப்பையை பெரும் மாணவனும்  (அதிரை/msm[a])  தமிழகத்தை சார்ந்தவர்களே..  இதை இந்நாட்டில் நாம் கண்ணுரமாத்திரமே முடியும், வாசிக்க வேண்டுமென்றால் தமிழ் நாளிதழைபற்றி இப்பொழுதே யோசிக்க வேண்டும்..

தமிழ் செம்மொழி மாநாட்டில் மார்தட்டிக்கொண்டோம்  "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்"  என்று.. ஆனால், எங்கும் வியாபித்திருப்பது என்னவோ "மலையாளமே"...

-- MSM. ராஃபியா

No Parking 30

அதிரைநிருபர் | December 25, 2010 |

இன்றைய சூழலில் சமீபகாலமாக துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் கங்கனம் கட்டிக் கொண்டு போடும் அபராதங்கள் எதற்குத் தெரியுமா ? ஓடும் வகனங்களுக்கும் அதோடு ஓடாமல் அமைதியாக நிறுத்தப் பட்டிருக்கும் அப்பாவி வாகங்களுக்கும்தான். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இந்த வாகனங்களுக்கு வாயொன்று இருந்திருந்தால் அதன் புலம்பல்கள்களை கோர்வையாக்கி பத்தி பத்தியாக எழுதிக் கொண்டே இருக்கனும்.

-- அதிரைநிருபர் குழு

 
அன்பு நிறைந்த அ. நி .வாசகர்களே !

இந்தப் படத்தைப் பார்த்து நகைச்சுவை உணர்வோடு உங்கள் கருத்து / கவிதை குதிரையை தட்டி விடுங்களேன்!




-- M.S.M. ராஃபியா

J U M M A A - ஓர் அற்புதக் காட்சி‏ 3

அதிரைநிருபர் | December 24, 2010 | ,

எமது நினைவுகளை அசை போட்டுப் பார்த்ததில் பாம்பேயில் (மும்பையில் அல்ல) பிரதான வீதிகளில் வெள்ளிக் கிழமை பகல் 11 மணிக்கே பள்ளிக்கருகே தட்டி வைத்து தடுத்து போலீசார் வாகனங்களை மாற்றுப் பாதையில் செல்லும்படி கோர ,மக்கள்(மற்ற மதத்தினர் கூட) அச்சா... ஆஜ் ஜும்மா ஹேனா... என புன்முறுவலுடன் வளைந்து சென்றனர்.  ஹைதராபாத் - செகந்தராபாத் - நாக்பூர் - சோலாப்பூர்களில் அரசு அதிகாரிகள் - ஊழியர்கள் - பொதுமக்கள் அனைவரும் "ஈவேள ஷுக்ரவாரன்காதான்ட்டி, சாஹிப்லு தன்னம் பெட்டுக் கொண்டாரு" என உவந்து ஒத்துழைத்தனர். இதெல்லாம் கி.மு./ கி.பி. வில் அல்ல! சற்றே இருபது வருடங்களுக்கு முன்னர். நம் பாரதத் தேசத்தில் நடந்தவை. இப்போது எல்லாம் நேர் மாற்றம். எங்கே போனது அந்த சகிப்பு த்தன்மை?எப்படி ஒளிந்தது ஒத்துழைக்கும் உன்னத உணர்வு? எங்கே தாவியது அந்த விசாலம்? எவர் தூவியது இந்த விஷ(ம)ம்?

இந்த பதிவு உங்கள் பார்வைக்கு கிடைக்கும்போது ஜும்மாத் தொழுகைக்கு தயாராகிக்  கொண்டிருக்கலாம், அல்லது தொழுதுத் திரும்பியிருக்கலாம். பள்ளி நிரம்பி சிலர் வெயிலில் - சிலர் மழை ஈரத்தில் - சிலர் ப்ளாட்பாரத்தில் தொழுதிருக்கலாம். இந்தப் படங்களைப் பாருங்கள். ரஷியப் பிரதேசமான கஜகிஸ்தான் பகுதியில் கொட்டும் கொடும் பனியினூடே சென்ற வார ஜும்மாத் தொழுகைக்கு விசுவாசம் கொண்ட அத்தனை மக்களும் பள்ளி நிரம்பி - இடம் கிடைக்காமல் வெளியிலும் பல் முளைக்காத குழந்தைகளும் - பல் விழுந்த முதியவர்கள் சகிதம் தக்வாவுடன் தொழும் ஓர் அற்புதக் காட்சி ! இறைவனே உன் ஈமானே மாட்சி !!!







இறைக் கட்டளைக்கு கட்டுப்பட்டு இன்ஸான் இபாதத்தில் திளைக்கும் போது மலக்குகளை விளித்து இறைவன் பெருமையுடன் சுட்டிக்காட்டுகிறானாம். ஒருவேளை இந்தத் தருணத்தையும் மலாயிக்குகளிடத்தில் இறைவன் உவந்திருப்பானோ?!  ALLAAHU A'LAM.

யா அல்லாஹ் எங்கள் ஈமானை மேலும் பலப் படுத்துவாயாக!யாக்கல்லாஹ்!

வாழ்க வளமுடன்.

-MSM ராஃபியா

வெற்றி பெறப் பிறந்தவர்கள் நீங்கள் 14

அதிரைநிருபர் | December 05, 2010 | ,

இருபத்திரண்டு ஆண்டு கால அழகிய நாட்களும் அர்த்தமுள்ள வாழ்க்கையும் இரண்டொரு நொடிகளில் மனமெனும் ஞாபகக் கிடங்கிலிருந்தே மறைந்து போனது. துள்ளித் திரிந்த மானொன்று ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாத அளவிற்கு கொடிய உபாதை அது. தாயும் தந்தையும் உயிர் வலிக்க தன்னை தூக்கிச் சுமக்கின்ற போதும் அவர்கள் யாரென்றே அறியாத வேதனைத் தருணம். சரண்யாவிற்கு தேர்வுகள் எழுதி மதிப்பெண்கள் பெற்றுத் தந்த வலதுகை மதிப்பிழந்து செயலற்றுத் தொங்குகிறது.

‘இனியும் உயிர் வாழ்வாளா சரண்யா?’ என அனைவரும் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தபோதுதான் திடீர் ஆச்சரியமாய் சாதனைப் பெண்ணாகவே உருவெடுத்திருக்கிறார்!

‘‘சின்ன வயசுலயிருந்தே ரொம்ப நல்லா படிப்பா. பத்தாவதுல 472 மார்க்! பெரிய அளவில் சாதிக்கணும்னு சொல்லிக்கிட்டே இருப்பா. கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகள்னு நிறைய பரிசுகள் வாங்கி இருக்கா.

பன்னிரண்டாவதுலயும் ஆயிரத்து நூத்திப் பதினெட்டு (1118) மார்க் எடுத்தா. ரொம்பவே சந்தோஷப்பட்டோம்.

சரண்யாவோட ஆசை, பி.டெக். தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துலேயே சேர்த்தோம். படிப்புல இன்னும் ஆர்வம் அதிகமாச்சு.

நாலு வருஷம் இப்படியே சந்தோஷமாப் போச்சு. ப்ராஜெக்ட்டுக்காக கல்பாக்கம் போயிருந்த சரண்யா திடீர்னு சோகமா வீட்டுக்கு வந்தா. ‘உயிரே போகுற மாதிரி தலைவலிக்குதுப்பா’ன்னு சொல்லி துடிச்சுப் போயிட்டா. அதுக்கு முன்னாடியும் பல தடவை லேசா வந்துருக்கு. ஆனா அப்பெல்லாம் இந்தளவுக்கு வேதனைப்பட்டதில்லை. பதறிப்போய் டாக்டர்கிட்ட அழைச்சுட்டுப் போனோம். கண்ணுல ஏதோ பிரச்னையா இருக்குமோனுதான் நெனைச்சோம். ஆனா ஸ்கேன் எடுத்துப் பார்த்துட்டு ‘மூளையில கட்டி!’ன்னு டாக்டர் சொன்னாரு. நிலை குலைஞ்சு போனோம். ஒருநாள் கூட தாமதிக்காம உடனே டாக்டர் சொன்ன மாதிரி அறுவை சிகிச்சை செஞ்சோம்.

பழையபடியே ஆரோக்கியமா எங்க மக திரும்பக் கெடைச்சிடுவான்னுதான் நெனைச்சோம்.

வேண்டாத தெய்வமில்லை. அவ கண்ணு முழிச்சுப் பார்த்ததும்தான் எங்களுக்கு நிம்மதியே வந்துச்சு. ஆனா ஒரு நொடி கூட அது நிலைக்கலை. எங்களையே யாருன்னு அவளுக்குத் தெரியலை. பழைய நினைவுகளை எல்லாமே மறந்துட்டா. அதுவே பெரிய அதிர்ச்சி! இதில்வேறு ஒரு கையும் காலும் செயலிழந்து போயிடுச்சுன்னு தெரிஞ்சதும் மேலும் நொறுங்கிப் போயிட்டோம்.

இருபத்திநாலு மணி நேரமும் சிகிச்சைதான். தொடர்ச்சியா பல நாட்கள் இப்படியே போச்சு. கடவுள் புண்ணியத்தால மெல்ல மெல்ல நினைவு மட்டும் திரும்புச்சு. ஆனா கை கால் மட்டும் சரியாகவே இல்லை. படுத்த படுக்கையாகவே கிடந்தா!’’ என தன் மகளின் கண்ணீர் நாட்களை விவரிக்கிறார் தந்தை ரெங்கராஜ்.

இப்படிப்பட்ட சூழலில் படிப்பை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் அதே தருணத்தில்தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் சரண்யா.

‘‘நான் சிகிச்சையில இருந்தப்பவே தேர்வும் வந்துடுச்சு. படிப்பை விட்டுறக்கூடாதுன்னு உறுதியா இருந்தேன். என்னோட எண்ணத்தை வெளிப்படுத்துனப்ப ‘நீ நல்லாயிருந்தா அதுவே எங்களுக்குப் போதும்’னு சொல்லிட்டாங்க.

நான் உறுதியா இருந்ததுனால என்னோட ஆசைக்கு அவங்களே ஒத்தாசையா இருந்தாங்க! அம்மா, அப்பா, அக்கா எல்லாருமே என்னை ஊக்கப்படுத்துனாங்க... உடம்பு முடியாம துவண்டு கெடந்த சூழ்நிலையிலும் மனதை உறுதியாக்கிகிட்டு பரீட்சைக்குப் படிச்சேன். நண்பர்கள், பேராசிரியர்கள்னு எல்லாருமே பலவிதங்கள்ல உதவியா இருந்தாங்க. பரீட்சை எழுத என்னைத் தூக்கிக்கிட்டுதான் போவாங்க. அப்ப என்னால ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது.

கை விழுந்து கிடந்ததால என்னால பரீட்சை எழுத முடியாது. நான் சொல்லச் சொல்ல பல்கலைக்கழகம் ஏற்பாடு செஞ்சி ருந்த ஒருத்தர் தேர்வு எழுதினார்’’ என்கிறார் சரண்யா.

அப்படி சிரமப்பட்டு எழுதிய அந்தத் தேர்விலும் எண்பத்தைந்து விழுக்காட்டில் தேர்ச்சி பெற்று பி.டெக். பட்டத்தை வென்றெடுத்திருக்கிறார் சரண்யா.

சிகிச்சை தொடர்ந்த போதும்... சரண்யாவின் படிப்புத் தேடல் தீரவே இல்லை. தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். மாணவி சரண்யா!

ஆக்கம்: கொல்லிமலைச்சாரல் ஆனந்த் பிரசாத்


நன்கு உயர்நிலைக்கல்வி படிக்க வாய்ப்புகள் பல இருந்தும் அதற்கேற்ற நல்ல சூழ்நிலைகள் நம்மை தாலாட்டுபாடி தாய் போல் தாலாட்டினாலும் ஏதேதோ காரணம் பல சொல்லி கழுவும் மீனில் நழுவும் மீனாய் ஆர்வமும், இலட்சியமும் ஏதுமின்றி ஏனோதானோ என்று படித்து வரும் சமுதாய மாணவ, மாணவியர்க்கு இது ஒரு நல்ல பாடம் இலவசமாய் பள்ளிக்கூடம் செல்லாமலேயே.

கல்வி விழிப்புணர்ச்சிக்காக இத்தகவல் வழங்கி மகிழும்.


-- மு.செ.மு. ரஃபியா,   ஜித்தாவிலிருந்து...