Showing posts with label கல்வி விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label கல்வி விழிப்புணர்வு. Show all posts

இஸ்லாமிய ஸ்கூல் எப்படி இருக்கவேண்டும்?. இதோ உங்களுக்கு ஒரு வீடியோ!!. 4

அதிரைநிருபர் | August 20, 2011 | , ,

மாஷா அல்லாஹ்!. ஒரு இஸ்லாமிய கல்வி நிறுவனம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விளக்கமும், அது இந்தியாவிலேயே எப்படி நடைபெறுகின்றது என்ற ஆதாரத்துடன் உங்களுக்காக வழங்குகின்றோம். இதை தமிழக முஸ்லிம்கள் குறிப்பாக அதிரை, காயல்பட்டினம், கீழக்கரை, கூத்தாநல்லூர்,மேலப்பாளையம் போன்ற முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் ஊரிலாவது நடைமுறை படுத்த முன்வரவேண்டும்.  




இதையும் கொஞ்சம் கேளுங்களேன்.






மேலும் கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து இந்த பள்ளியை பற்றிய கூடுதல் விபரங்களை காணுங்கள்!.

http://almuminahschool.org/

நன்றி: அதிரைமுஜீப்

கல்வி வழிகாட்டல் கேள்வி பதில் - CMN சலீம் 2

அதிரைநிருபர் | May 15, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பானவர்களே, கடந்த 15.01.2011 அன்று அதிரையில் நடைப்பெற்ற கல்வி விழிப்புணர்வு மாநாட்டு இறுதி அமர்வில் கல்வி தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. சகோதரர் CMN சலீம் அவர்கள் மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். அதன் காணொளியை இங்கு உங்கள் பார்வைக்கு தருகிறோம். இந்த நேரத்தில் எல்லோருக்கும் மிக பயனுல்லதாக இருக்கும் என்று கருதுகிறோம்.






தொடர்ந்து இணைந்திருங்கள்.

-- அதிரைநிருபர் குழு

டியூஷன் - சிந்திப்போம் ! 14

அதிரைநிருபர் | April 27, 2011 | ,

அல்லாஹ்வின் சாந்தி நம் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!

அல்லாஹ்வின் அருளால் கல்வி விழிப்புணர்வுப் பயனத்தை மேற்கொன்டிருக்கிற நாம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், தரமான கல்வியை கொடுப்பதற்காகவும், வளரும் சமுதாயத்தை வருங்கால சவால்களை சமாளித்து வெற்றியின் இலக்குகளை நோக்கி பயனிக்க தகுதியானவர்களாக உருவாக்குவதற்காகவும் பல்வேறு வியூகங்களை வகுத்து அவர்களை வழிநடத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.

அந்த அடிப்படையில் மாணவர்களின் கல்வித் தகுதியை உயர்த்த பொதுவாக எல்லோரும் மேற்கொள்கிற வழி "டியூஷன்". அன்றாடம் வகுப்பில் நடத்துகிற பாடத்தைப் மீண்டும் ஒரு முறை படித்து அதில் ஏற்படுகிற சந்தேகங்களைக் களைந்து பாடத்தை மனதில் பதிய வைத்துக்கொள்கிற பணியைத்தான் இந்த டியூஷன் செய்கிறது. வசதி உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்பி படிக்கவைக்கின்றனர்; ஆனால் படிப்பதற்கே வசதி இல்லாத ஏழைகளுக்கு டியூஷன் என்பதெல்லாம் எட்டாக் கனியாகவே இருக்கிறது. எனவே, நாம் பொதுவான மையங்களை ஏற்படுத்தி ஏற்றத்தாழ்வின்றி எல்லா மாணவர்களும் பயன்பெறும் வண்ணம் வழி வகை செய்ய வேண்டும்.

பயிற்றுவிக்கும் முறை:
பொதுவாக டியூஷன்களில் ஆசிரியர்கள் மானவர்களுக்கு பயிற்றுவிப்பர். அவ்வாறு ஆசிரியர்களைக்கொன்டு பயிற்றுவிக்காமல் மாணவர்களைக்கொன்டே மாணவர்களுக்கு பயிற்றுவிக்கலாம். அதாவது எல்லா வகுப்புகளிலும் நன்றாகப் படிக்கின்ற மாணவர்கள் இருப்பர்; அவர்களைக்கொன்டு மற்ற மாணவர்களுக்கு பயிற்றுவிக்கலாம். மேலும் மேல் வகுப்பு மாணவர்களைக்கொண்டு கீழ் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்றுவிக்கலாம். ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை தேர்ந்த ஆசிரியர்கள், சுய தொழில் மற்றும் நல்ல உத்யோகங்களில் உள்ளவர்களைக்கொண்டு SEMINAR எடுக்கலாம். பாடம் நடத்துகிற மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கலாம்.

நன்மைகள்:

ஆசிரியர்களை வைத்து பயிற்றுவிக்காமல் மாணவர்களைக்கொண்டே மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதால் அல்லாஹ் நாடினால் கீழ்கானும் பலன்கள் ஏற்படும் என்று நம்புகிறேன்.

1) படித்துக் கொடுக்கின்ற மாணவர்கள் பாடங்களை மேலும் தெளிவாக புரிந்துகொள்வர்.

2) சக மாணவர்களே பாடம் நடத்துவதால் படிக்கின்ற மாணவர்களுக்கும் ஒரு சகஜமான சூழ்நிலை ஏற்பட்டு தங்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வழி வகுக்கும்.

3) மேல் வகுப்பு மாணவர்கள் கீழ் வகுப்பில் உள்ளவர்களுக்கு பாடம் எடுப்பதால் அவர்களுக்கு பழை பாடங்களையும் நினைவில் வைத்துக்கொள்ளும் வாய்புகள் ஏற்படும்.

4) பல மாணவர்களுக்கு முன் நின்று பாடம் நடத்திப் பழகுவதனால் அச்சம் தெளிந்து மேல் வகுப்புக்குச் செல்லும்போது SEMINAR போன்றவற்றில் சிறப்பாக செயல்பட உதவும்.

5) சராசரி மாணவர்களையும் ஊக்கப்படுத்தி அவர்களையும் பாடம் எடுக்க வைக்கலாம்.

6) பெண்களுக்கு டியூஷன் செல்வதனால் ஏற்படுகின்ற பாதிப்பிலிருந்தும் பாதுகாக்க இது வழிவகை செய்யும்.

7) மாணவர்கள் பாடம் நடத்த வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே தயார்படுத்த வேண்டிய நிலை ஏற்படுவதால் சுயமாக கற்கும் ஆற்றல் அவர்களிடத்திலே வந்துவிடும்.

8) மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும்.

இவ்வாறாக அல்லாஹ்வின் உதவியால் ஏராளமான பலன்கள் கிட்ட வாய்ப்புள்ளதாகக் கருதுகிறேன்.

நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.

'அஸ்ஸலாம்

அபு ஈசா

கோடைகால கல்வி பயிற்சி முகாம் 13

அதிரைநிருபர் | April 23, 2011 | , ,

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும். கடந்த ஆண்டுகளைப் போன்று, இவ்வாண்டும் மாணவ மாணவியர்க்கான பயனுள்ள கல்விப் பயிற்சிகளை வழங்கும் ஒரு மாத காலப் பயிற்சி முகாம், இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 01 – 05 – 2011 முதல் 31 – 05 - 2011 வரை துபை 'அதிரை இஸ்லாமிக் மிஷன்' மற்றும் ஏ. எல். எம். பள்ளி நிர்வாகம் சார்பில் மேற்படிப் பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கின்றது. ஆர்வமுள்ள பெற்றோர்கள் தம் ஏழு வயதுக்கு மேற்பட்ட மக்களைப் பயிற்சிகளில் பங்குபெற வைப்பது கொண்டும், மாணவ-மாணவியர் தாமே வந்து இணைந்து பயன்பெறுவது கொண்டும் இந்த விடுமுறை நாட்களைப் பயனுள்ள வழியில் கழித்து இம்மை-மறுமை வெற்றிக்கான முயற்சியில் ஒத்துழைப்புத் தருமாறு கோருகின்றோம்.

பாடங்கள்:

· தீனியாத் பயிற்சிகள்

· இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை

· கம்ப்யூட்டர் கோர்ஸ்

· Spoken English / Arabic

· Personality Development

· உயர்கல்வி வழிகாட்டுதல்கள்..

மற்றும் பல...


வகுப்புகளின் நேரம்: காலை ஒன்பது மணி முதல் பகல் ஒரு மணிவரை.

தூரப் பகுதிகளிலிருந்து மாணவ-மாணவியரை அழைத்து வருவதற்கும், வகுப்புகள் முடிந்த பின்னர் திருப்பிக் கொண்டுவந்து விடுவதற்கும் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. முழுமையாகப் பங்கு பெற்று முடிக்கும் மாணவ-மாணவியர்க்குப் பரிசுகளும் அன்பளிப்புகளும் வழங்கப்படும்.

தொடர்புக்கு: 9566716216 / 9750969302 / 9894989230

அன்புடன் அழைக்கும்,

AIM & ALM
அதிராம்பட்டினம்

தகவல்: அதிரை அஹமது


10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்? 6

அதிரைநிருபர் | April 23, 2011 | , ,

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.  இவ்வகை படிப்புகள் அனைவரும் அறிந்ததுதான் என்றாலும் தொடர்ந்து இவற்றை மீண்டும் தெரிந்துக்கொள்வது அவசியமே.

1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு

2. பட்டய படிப்பு (டிப்ளோமா)

3. சான்றிதழ் படிப்பு (ITI)

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம்.

I. மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு:

1. First Group

எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு : பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு. இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc...), சட்டம், ஆசிரியர் படிப்புகள், ஆராய்சி படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் மேல் படிப்பு படிக்கலாம். அரசு துறை, தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. இந்த பிரிவில் படிப்பது மிக சிறந்தது. எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்பு உள்ள பிரிவு இதுதான், எனவேதான் இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த பிரிவில் படிக்க முயற்சி செய்யவும். குறிபிட்ட பள்ளிகளில் இந்த குரூப் கிடைக்காவிட்டால், இந்த குரூப் கிடைக்கும் பள்ளியில் சேருங்கள்.

2. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு : பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). மருத்துவ துறை தவிர்த்து மற்ற பெரும்பாலன துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. First Group கிடைக்காத மாணவர்கள் இந்த குரூபையாவது தேர்ந்தெடுக்கவும். அதிக வேலைவாய்ப்பு பெற்றுதரும் குரூப்பில் இதுவும் ஒன்று.

3. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு : மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc...) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). அதிகமாக மருத்துவம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது

4. Commerce, Accountancy, பொருளாதாரவியல் பிரிவு : B.Com, CA (Charted accountant ), M.Com படிப்பதர்க்கான பிரிவு, அரசு வேலை, Accountancy துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளது.

5. வரலாறு, பொருளாதாரவியல் : எதிர்காலதில் B.A. M.A படிக்கலாம். அரசு தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு, ஆசிரியர் பணிகள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன

6. Vocational குரூப் : தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவு, பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.

II. பட்டய படிப்பு (டிப்ளோமா):

இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பதுறைகள் , மருத்துவ துறைகள், கடல்சார் துறைகள், ஆசிரியர் படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன. தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil etc... போன்ற துறைகள் சிறந்த துறைகள். மேலும் பல சிறந்த பிரிவுகள் உள்ளன. டிப்ளோமா படித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம். பொறியியல் (B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள் டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது சிறந்ததல்ல (Not Advisable ). 12 ஆம் வகுப்பு முடித்து பொறியியல் படிக்கவும். டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது.

III. சான்றிதழ் படிப்பு (ITI):

இது ஓராண்டு படிப்பு. Fitter welder, machinist , AC mechanic போன்ற துறைகள் சிறந்த துறைகள். இன்னும் மருத்துவம் சார்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த பல்வேறு படிப்புகள் ITI-ல் உள்ளது. உடனடி வேலைவாய்பிற்க்கு ஏற்ற படிப்பு, ஆனால் அதிக சம்பளம் கிடைக்காது.

10 - ஆம் வகுப்பு முடித்த பிறகு வேலை வாய்ப்பு (கோரிக்கை:- தயவு செய்து மாணவர்களை 10 -ஆம் வகுப்பு மேல் படிக்க வையுங்கள்)

1. சிறு தொழில் நுட்ப பயிற்சிக்கு பிறகு வேலை. (தமிழகத்தில் அரசு, மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் தொழில் பயிற்சி அளித்து வருகின்றது.)

2. இராணுவத்தில் வேலை மற்றும் அரசு வேலை, இரயில்வேயில் வேலை etc...

3.Data Entry வேலைகள்

4. சமுதாய கல்லூரிகள் மூலம் 6 மாத பயிற்சிக்கு பிறகு உடனடி வேலைவாய்ப்பு.

மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு , ITI, டிப்ளோமா படிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள sithiqu.mtech@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

--- S.சித்தீக்.M.Tech

தகவல்: V.A. Syed Abdul Hameed,  www.anet2010.webs.com 
 
 

தகவல் புகைப்படம் உதவி: அதிரை அபூபக்கர்.

மாணவர்களின் விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்!. 8

அதிரைநிருபர் | April 14, 2011 | , ,


10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டது. மாணவர்களும், பெற்றோர்களும் நிம்மதி பெருமூச்சுடன் தேர்வுக் முடிவுகளை எதிர்பாத்த வண்ணம் இருக்கின்றனர். இடையில் 6 முதல் 10 வாரம் வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களை எதிர்காலத்தில் தமது கல்வி அறிவு சிறக்க பயன்படும் வகையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.


 
விடுமுறை நாள்களின் என்ன பண்ணலாம்?
1.ஆங்கில மொழிதிறனை (English language skill) வளர்த்து கொள்ள முயற்சிக்கவும் :
ஆங்கில மொழிதிறன் என்பது இன்று இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்கள் ஆங்கில பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்கலாம் அல்லது வீட்டில் இருந்தே ஆங்கில மொழி பயிற்சி புத்தகங்களை படிக்கலாம். ஆங்கில திறனை வளர்த்து கொள்ள மிக சிறந்த வழி ஆங்கில குர்ஆனை தமிழ் குர்ஆனுடன் ஒப்பிட்டு வாசிப்பது. குர்ஆனை, வசனத்திற்க்கு வசனம் ஆங்கிலத்திலும் தமிழிலும் படிப்பதின் மூலம் ஆங்கில அறிவும் வளரும், அல்லாஹ்வுடைய கட்டளைகளையும் அறிந்து கொள்ளமுடியும்.

2. தொடர்பு திறனை (Communication skill) வளர்ப்பது : 
வேலைவாய்ப்பு பெற மிக முக்கிய தகுதியாக கருதபடுவது தொடர்பு திறன் எனப்படும் Communication skill. என்னதான் மதிப்பெண் வாங்கி இருந்தாலும் Communication skill இல்லாவிட்டால் எந்த நிறுவனத்திலும் வேலைக்கு எடுக்க மாட்டார்கள். இந்த தொடர்பு திறன் Communication skill -யை வளர்த்து கொள்ள மிக முக்கிய தேவை தைரியம், தைரியமாக நீங்கள் நினைக்கும் கருத்துக்களை பிறருக்கு சொல்ல பழகுங்கள். அதாவது இஸ்லாமிய ரீதியில் சொல்வதாக இருந்தால் நல்ல தாயிகளாக ( பிரசாரகர்களாக) மாற பழகுங்கள். Communication skill என்பது ஒவ்வொறு முஸ்லீமிடமும் கட்டாயம் இருக்கவேண்டிய பண்பாகும். 

"நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்." (குர்ஆன் 3 : 104)

தினமும் குர் ஆனை எடுத்து தொழுகைக்கு பிறகு வீட்டில் உள்ளவர்காளுக்கு படித்துகாட்டுங்கள், முடிந்தவரை பிறருக்கு எடுத்து சொல்லுங்கள், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல பழகுங்கள். குர் ஆனுடைய கருத்துகளை பிறருக்கு சொல்வதற்க்கு வெட்க படாதீர்கள், தைரியமாக சொல்லுங்கள். இப்படி தொடர்சியாக செய்வதன் மூலம் நம்முடைய Communication skill - யை வளர்த்து கொள்ள முடியும்.

கணினி அறிவை (Computer knowledge ) வளர்த்து கொள்ளுங்கள்:
தற்போது பள்ளிபடிப்பு படிக்கவே கணினி அறிவு (Computer knowledge)அவசியமாகின்றது, எனவே கணினியில் குறிப்பாக MS Office (Word, Excel, Power Point etc..)கற்றுகொள்ளுங்கள். மேலும் internet-ன் பயன்பாட்டையும் கற்றுகொள்ளுங்கள், குறிப்பாக மின் அஞ்சல் (E -mail) துவங்குவது, google Search, விக்கீபீடியா போன்றவைகளை அறிந்துகொள்ளுங்கள், இன்டெர்னெட் பயன்படுத்தும் போது பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும், இணையதளத்தில் நல்ல வியஷயங்களுக்கு இணையாக கெட்ட விஷயங்களும் கொட்டிகிடக்கின்றது. தற்போதுள்ள காலத்தில் இன்டெர்னெட்டே வேண்டாம் என ஒரேடியாக ஒதுக்கிவிட முடியாது, எனவே பெற்றொர்கள்தான் மாணவர்களை இன்டெர்னெட்டை சரியான முறையில் பயன்படுத்த பழக்க படுத்த வேண்டும்

10 மற்றும் +2 ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்களுக்கு :
விடுமுறையை வீணாகாமல் இப்போதே பொது தேர்விற்க்கு படிக்க ஆரம்பித்து விடுங்கள். 9 - ஆம் வகுப்பு முடித்து 10 - ஆம் வகுப்பு செல்லும் மாணவர்கள் 10 - ஆம் வகுப்பு பொது தேர்விற்க்கும். +1 முடித்து +2 செல்லும் மாணவர்கள் +2 வகுப்பு பொது தேர்விற்க்கு தயாராகுங்கள். +2 ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்கள் தேசிய அளவில் மருத்துவம் பொறியியல் படிக்க நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகுங்கள்.

+2  வகுப்பு படிக்க போகும் மாணவர்களுக்கான போட்டி தேர்வுகள் :
IIT-JEE - இந்த தேர்வு IIT, IISc - ல் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தபடும் தேர்வாகும், +2 - ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம். AIEEE - NIT மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தபடும் தேர்வாகும், +2 - ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.

AIPMT - மத்திய அரசின் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் MBBS படிக்க நடத்தபடும் தேர்வு, உயிரியல் அல்லது விலங்கியல், தாவரவியல் மற்றும் இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.

HSEE - IIT -யில் ஒருங்கினைத்த 5 ஆண்டு M.A. படிப்பிற்க்கான தேர்வு. அனைத்து பிரிவு மாணவர்களும் எழுதலாம், குறிப்பாக Arts குரூப் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வின் மூலம் IIT-யில் படிக்கலாம்

மாணவர்களே! நேரத்தை வீணாகாமல் இப்போதே போட்டி தேர்வுகளுக்கும் , பொது தேர்வுகளுக்கும் தயாராகுங்கள். தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

அனைத்து போட்டி தேர்வுகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள sithiqu.mtech@gmail.com என்ற ஈ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி: S.சித்தீக்.M.Tech
                 
தகவல்: அதிரை மீரா B.E

அலுமினி"யமான தங்கங்கள் 13

அதிரைநிருபர் | April 13, 2011 | , ,

நேற்று ஒரு சுவையான சம்பவம். அமெரிக்காவில் நான் தங்கி இருக்கும் வீட்டிற்கும் பக்கத்து வீட்டிற்கு ஒரு நண்பர் புதிதாக குடி வந்தார். அவர் பெயர் சுஷில்குமார். எதேச்சையாக சந்திக்க நேர்ந்தபோது ஒரு 'ஹாய்' சொல்லிக் கொண்டோம். கை குலுக்கும்போது அவரவர் பெயர் சொல்வது முறை என்பதால் 'Hi.. This is Safath ' என்றேன்.

பதிலுக்கு அவரும் "Hello.. This is Sushil'' என்றார்.

பிறகு பேசத் தொடங்கினோம்.

'' Where are you from ?"-இது நான்.
"I'm from Chennai. "

'ஓ அப்படியா.. நானும் தமிழ்நாடு தான்'- தமிழுக்கு மாறியாச்சு....

'நெஜமாவா? பார்த்தா அப்படி தெரியலையே.'- இதே போல் என்னிடம் சொன்ன மூணு லட்சத்து முப்பதாயிரத்து முன்னூற்றி ஒன்றாம் நபர் இவர். எண்ணிக்கையை அவரிடம் சொல்லாமல், சின்ன புன்னகையோடு நிறுத்திக் கொண்டேன்.

பிறகு அவர் தொடர்ந்தார்.

"தமிழ்நாட்டுல எங்கே?"

"தஞ்சாவூர்-ங்க."

"தஞ்சாவூர் ல எங்கே?"

"தஞ்சாவூர் பக்கத்துல பட்டுக்கோட்டை-னு ஒரு ஊர், அங்கே தான்".

"ஓ அப்படியா? பட்டுக்கோட்டைக்கு பக்கத்துல அதிராம்பட்டினம் காதிர் மொஹைதீன் கல்லூரி தெரியுமா"- இது அவர்.

என்னடா இது... நம்ம ஊரைப் பத்தி நம்ம கிட்டயேவா?

"அதிராம்பட்டினம் காதிர் மொஹைதீன் கல்லூரில தான் நான் M.C.A படிச்சேன், நாங்க தான் முதல் Set. ஜெயவீரன் சார் தெரியுமா? அப்துல் காதர் சார் தெரியுமா? NAS சார் தெரியுமா?"னு பட்டியலும் பேச்சும் நீண்டது. பின், கல்லூரி நாட்கள், நம்மூரில் அவர் இருந்த மூன்றாண்டு கால வாழ்க்கை, நாயக்கர் கடை சாப்பாடு-னு பேசினார்.

இதே மாதிரி எனக்கு இதுக்கும் முன்பே ஒரு அனுபவம். நம்மூர் கல்லூரியில் இளங்கலை முடித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை சேர்ந்த சமயத்தில் என்னுடைய ஆசிரியரில் ஒருவரும் இப்படி கேட்டார்.

"நீ எந்த ஊருப்பா?"

"தஞ்சாவூர் சார்"

"தஞ்சாவூர் ல எங்கேப்பா?"

"தஞ்சாவூர் பக்கத்துல பட்டுக்கோட்டை-னு ஒரு ஊர் சார்,"

"அப்படியா.. எதுக்கு கேக்குறேன்னா.. அதிராம்பட்டினம்னு ஒரு ஊர்ல காதிர் மொஹிதீன் காலேஜ்-னு ஒரு காலேஜ் இருக்கு, அங்கே இருந்து வருஷத்துக்கு ஒரு மாணவரையாவது இந்த கல்லூரிக்கு மேல்படிப்புக்கு அனுப்பிடுறாங்க. ஒரு வேளை நீயும் அங்கே இருந்து தான் வர்றியோ-னு தான் கேட்டேன்"

"சார், நான் அந்த காலேஜ்-ல இருந்து தான் சார் வர்றேன், உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ-ன்னு தான் தஞ்சாவூர்-னு சொன்னேன் சார்".

ஆக மொத்தத்துல நான் எடுத்திருக்கிற முடிவு என்னான்னா... யாராவது தமிழ் ஆட்கள் நம்ம கிட்ட, எங்கே இருந்து வர்றீங்க?-னு கேட்டால், அதிராம்பட்டினத்துல இருந்து வர்றேன்னு முதல்-ல சொல்லனும். "அது எங்கே இருக்கு?"-னு கேட்டாங்கன்னா மட்டும் "என்னங்க நீங்க. G.Kல இவ்ளோ கம்மியா இருக்கீங்க.. பட்டுக்கோட்டைக்கு பக்கத்துல தான்". இதையும் தாண்டி "அது எங்கே இருக்கு?"-னு கேட்டாங்கன்னா... "அது தஞ்சாவூருக்கு பக்கத்துல இருக்கு-னு சொன்னா மட்டும் உங்களுக்கு புரியவா போகுது?"-னு கேட்கனும்!!!

ஓ.கே. On a serious note......இந்த கட்டுரையின் முதல் பத்தியில் குறிப்பிட்ட சுஷில்குமார் போன்று, நமதூர் கல்லூரியில் பயின்று, இன்று நல்ல பொருளாதார வசதியோடு, நல்ல நிலைமையில் வாழ்ந்து வருவோர் நிறைய பேர் இருக்கின்றார்கள். என்னுடைய சக நண்பர்களாக இருக்கட்டும், இதை வாசிக்கும் நீங்கள் ஒரு வேளை காதிர் மொஹைதீன் கல்லூரியில் பயின்றவராக இருந்தீர்களானால் உங்க வயது ஒத்தவர்களில் கூட நிறைய பேர் நல்ல நிலைமையில் இருக்கின்றார்கள் என்பதை, கண்டிப்பாக ஒத்துக்கொள்வீர்கள். ஆனால், நம் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் எங்கு இருக்கின்றார்கள்? என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? எப்படி இருக்கின்றார்கள்? என்ற ஒரு தகவலும் இது வரையிலும் கல்லூரிக்கு தெரியாது. பழைய மாணவர்களோடு இருந்திருக்க வேண்டிய தொடர்பு, இறந்திருக்கின்றது. "பழைய மாணவர்கள் சங்கம்" என்ற ஒரு அமைப்பு கூட இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவர்களது மூன்றாடு கால கல்வியோடு, அவர்களுக்கும் கல்லூரிக்குமான தொடர்பு அறுந்துபோய் விடுகின்றது. இந்த நிலை மாற வேண்டும். நமதூர் கல்லூரியில் பழைய மாணவர்கள் பற்றிய தகவல் திரட்டப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

சரி. இதனால் என்ன நன்மை ?

நிகழ்கால மாணவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கு வழி காட்டல்.

பழைய மாணவர்களின் உதவியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்.

கல்வி முறைகளில் செய்யப்படவேண்டிய முன்னேற்றம் பற்றிய முன்னாள் மாணவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அவற்றை செயல் படுத்துதல்.

இது போன்ற அரும்பெரும் நன்மைகள் கண்டிப்பாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இதற்கு நிகழ்கால உதாரணம் தேடுவோர் 'திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி'யின் அலும்னி-அமைப்பைப் பற்றி விசாரித்து அறியலாம். அவர்கள் செய்வது போன்று, வருடத்திற்கு ஒருமுறை சென்னையில் 'முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிகள்' நடத்தலாம். சிந்திப்போம், செயல்படுத்துவோம்.

STUDENT ALUMNI நம்மூர் பள்ளிகளில் உள்ளதா?  என்ற தலைப்பில் சகோதரர் தாஜுதீன் அவர்கள் அதிரைநிருபரில் சில மாதங்களுக்கும் முன்பு எழுதி நல்ல வரவேற்பை பெற்ற கட்டுரையையும் படித்துப்பாருங்கள்.

 

அன்புடன்,

-- அதிரை என்.ஷஃபாத்

10 & 12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம் 7

அதிரைநிருபர் | April 03, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும்,

கல்வி விழிப்புணர்வு மாநாட்டை தொடர்ந்து கல்வி தொடர்பான பதிவுகள் நம் அதிரைநிருபரில் பதியப்பட்டு வருகிறது. அதிரை சகோதரர் அபூபக்கர் அவர்கள் இணையத்தேடலில் கிடைந்த இந்த பயனுல்ல தகவல் புகைப்படத்தை உங்கள் அனைவருடன் பகிர்ந்துக்கொள்கிறோம். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு பிறகு நமக்கு தேவையான என்ன துறைசார்ந்த படிப்புகள் படிக்கலாம் என்ற விபரம் சுருக்கமாக இந்த செய்தி புகைப்படத்தில் உள்ளது. உங்கள் கணினியில் தரவிரக்கம் செய்து பெரிதுபடுத்தி பார்த்து பயனைடையுங்கள்.


மேலும் பயனுல்லவைகள் வரும் நாட்களில் பகிர்ந்துக்கொள்ளப்படும்.

அதிரைநிருபர் குழு

நன்றி: அதிரை அபூபக்கர்
                 smdabu@gmail.com

இன்னொரு கல்வி விழிப்புணர்வு மாநாடு 11

அதிரைநிருபர் | February 28, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னொரு கல்வி விழிப்புணர்வு மாநாடு என்ற தலைப்பைப் பார்த்ததும் எல்லோரும் ஆவலுடன் படிக்க ஆரம்பித்துவிட்டீர்களா. ஆம் முஸ்லீம்கள் அதிகம் வாழும் அபிராமம் நத்தம் என்ற ஊரில் 19.02.2011 அன்று மாபெரும் முதல் கல்வி விழிப்புணர்வு மாநாடு இனிதே நடைபெற்றது. சிறப்புப் பேச்சாளராக பேராசிரியர் டாக்டர் அபீதீன் அவர்கள் கலந்துக்கொண்டு அறிமுகமில்லாத அற்புத கல்விகள் என்ற தலைப்பில் வந்திருந்த மாணவ மாணவிகள், பெற்றோர்கள் அனைவருக்கு எளிதில் புரியும்படி மிக அருமையான ஒரு சொற்பொழிவை நிகழ்த்தி எல்லோருக்கும் பயன்படும்படியாக இருந்தது என்ற செய்தி நம் அதிரைநிருபர் வலைப்பூவுக்கு வந்தும் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமிராமம் நத்தம் கல்வி அரகட்டளையில் (ANET) உள்ள அனைத்து சகோதரர்கள் அனைவரும் நிச்சயம் பராட்டப்படவேண்டியவர்கள். குறிப்பாக சகோதரர் V.A. செய்யது அப்துல் ஹமீது அவர்கள் மற்றும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒத்துழைப்பு அளித்த அனைத்து சகோதரர்களின் கடின முயற்சியால் இந்த முதல் கல்வி விழிப்புணர்வு மாநாடு இனிதே வெற்றியுடன் முடிவுற்றது. இறைவனுக்கே எல்லா புகழும்.



சரி ஏன் இந்த செய்தியை  அதிரைநிருபரில் பதியவேண்டும்? எல்லா ஊர்களிலும் தான் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைப்பெறுகிறதே என்று எல்லோரும் கேட்கலாம்,  ஆனால் காரணம் உள்ளது.

சென்ற மாதம் 14 மற்றும் 15ம் தேதிகளில்  நம்மூர் அதிரைப்பட்டினத்தில் சமூக அக்கறையுள்ளவர்களின் முயற்சி மற்றும் உதவிகளுடன் கல்வி விழிப்புணர்வு மாநாடு மிகச்சிறப்பாக இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது, இந்த மாநாட்டு நேரலையை உலகெங்கும் உள்ள சகோதரர்கள் காணும்படியும் செய்யப்பட்டது. மாநாடு முடிந்தவுடம் சகோதரர் V.A. செய்யது அப்துல் ஹமீது அவர்கள் அதிரைநிருபர் வலைப்பூவிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்கள், அதிரையில் நடைப்பெற்ற மாநாடை பாராட்டிதோடு அல்லாமல், எப்படி இது போன்ற மாநாடு நடத்துவது, நேரலை எப்படி இவ்வளவு பிரமாதமாக செய்தோம் என்றொல்லாம் கேட்டு எழுதியிருந்தார்கள். நாம் அவர்களுக்கும் முடிந்தவரை நாம் செய்தவைகளைப் பற்றி மின்னஞ்சல் மூலம் பதில் அளித்தோம், நேரலை செய்வது தொடர்பாக சகோதரர் மொய்னுதீன் அவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருந்தோம்.

அபிராமம் நத்தம் முதல் கல்வி விழிப்புணர்வு மாநாடு நிறைவுற்றவுடன், சகோதரர் V.A. செய்யது அப்துல் ஹமீது அவர்களிடமிருந்து நமக்கு மீண்டும் ஒரு மடல் வந்தது, இரண்டு வருடங்களாக மாநாடு நடத்த திட்டமிட்டு செயல்படுத்த முடியாமல் போய்விட்டது, அதிரைநிருபர் வலைப்பூவில் கல்வி விழிப்புணர்வு மாநாட்டுச் செய்திகளையை பார்த்தபிறகு தான் தமக்கு ஊக்கமும் உற்சாகமும் வந்து இந்த மாநாடு நடத்தியே தீர்வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டோம் என்றும், இந்த மாநாடு நடைப்பெறுவதற்கு அதிரைநிருபர் வலைப்பூவும் ஒரு காரணம் என்று எழுதியுள்ளார்கள். இந்த மடல் நம் அதிரைநிருபர் குழுவுக்கு மிக்க மகிழ்ச்சியை தந்துள்ளது என்று சொன்னால் மிகையில்லை. இந்த செய்தியை உங்கள் அனைவருடன் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இச்செய்தியை நாம் இங்கு பதிவு செய்வதற்கு மற்றுமொரு காரணம் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஆர்வத்துடன் நாமும், இவர்களும் மற்றும் இதை படிக்கும் பார்க்கும் கேட்கும் அத்துனை முஸ்லீம் ஊர்வாசிகளாலும் நடத்தப்படவேண்டும் என்பதற்காவும் தான்.

இது போன்ற கல்வி விழிப்புணர்வு மாநாடுகள் தமிழக முஸ்லீம்கள் அதிகம் உள்ள எல்லா ஊர்களிலும் நடத்தப்பட வேண்டும். யார் நடத்தினாலும் மாணவ செல்வங்களுக்கு பயனுல்லதாக இருக்கும் பட்சத்தில் அனைவரும் கல்வி நிகழ்ச்சிகளுக்கு அரசியல் சாயலின்றி ஒத்துழைக்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக கல்வி சேவையாற்றி வரும் அபிராமம் நத்தம் கல்வி அரக்கட்டளையின் சேவை மென்மேலும் தொடர அதிரைநிருபர் குழு மற்றும் வாசகர்கள் சார்பாக எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கின்றோம்.

சகோதரர் V.A. செய்யது அப்துல் ஹமீது அவர்களையும் அனைத்து ANET சகோதரர்களையும்  நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். சகோதரரே உங்களுக்கும், இந்த கல்வி சேவையில் ஈடுபடுத்திவரும் அனைத்து ANET சகோதரர்களுக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்து மேலும் இச்சேவையை தொடர அல்லாஹ் நல்லருபுரிவானாக.

-- அதிரைநிருபர் குழு

சகோதரர் V.A. செய்யது அப்துல் ஹமீது அவர்களின் முகவரி

V.A. Syed Abdul Hameed
No 5/1, 3rd Street, Eswar Nagar
Kodambakkam - Chennai 600 024
Tel 044-24814466 / 23780252
Mob 9445110544
Mob 9094833511
Email: hameed.unicon@gmail.com

Please visit http://www.anet2010.webs.com/   &   http://www.uniconchennai.webs.com/

கடன் வாங்கலாம் வாங்க - 13 25

அதிரைநிருபர் | February 27, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

நீண்ட இடைவெளிக்கு பிறகு கடன் தொடர் தொடர்கிறது. தொடர் 12வரை அனைத்து வகையான கடன் கொடுக்கல் வாங்கல் பற்றி பார்த்தோம். இனி நம்முடைய வருமானத்திட்டத்தை பற்றி பார்ப்போம்.
கடன் வாங்காமல் இருப்பதற்கு வருமானத்திட்டம்

எந்தக் காரியத்தையும் திட்டமிட்டுவிட்டு அந்தக்காரியம் நல்லபடியாக நடைபெற அல்லாஹ்விடம் உதவி தேடியபிறகு செயல்படும்பொழுது நம் காரியங்கள் அனைத்தும் இலகுவாகும். நம்மிடம் திட்டமிடும் பழக்கம் மிக குறைவாகவே உள்ளது.ஆனால் அசத்திய கொள்கையை பின்பற்றுபவர்கள் ஒரு வருடம், ஐந்து வருடம் இன்னும் பல வருடங்கள் என்று பல காரியங்களை  திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றி காண்கிறார்கள்.

ஆனால் நம்மால் ஒரு மாத வீட்டு செலவையே திட்டமிட்டு செயல்படுத்தத் தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். குடும்பத்தில் செலவாகும் மளிகை கணக்கு, மருந்து, மாத்திரை செலவுகள், இன்னும் பிற செலவுகளை நோட்டு போட்டு எழுதி வருபவர்கள் நம் சமுதாயத்தில் குறைவே. எழுதி வைத்து யாரிடம் காட்டப்போகிறோம், பணம் வருகிறது செலவு செய்கிறோம். இதற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கிறது என்று சொல்லிவிடுவீர்கள். காலம் ஒரே மாதிரி இருக்காது.

இன்றைய செல்வந்தன் நாளைக்கு ஏழையாகி விடுவதையும், ஏழை பணக்காரனாகி விடுவதையும் பார்த்து வருகிறோம். வல்ல அல்லாஹ் எல்லோரையும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி வைப்பதில்லை. வாழ்க்கையில் சோதனைகள் மாறி மாறி வரக்கூடியது. அதனால் உங்களின் செலவுகளை சிக்கனமாக திட்டமிட்டு செலவு செய்து சேமிக்கும் பழக்கத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சேமிப்பு பல வகைகளில் உங்களை கடன் வாங்காமல் கை கொடுக்கும். நமக்கு கிடைக்கும் வருமானத்தை திட்டமிட்டு செயல்படுத்த சில சட்டங்களை நமக்குள் வகுத்துக்கொண்டால் இன்ஷாஅல்லாஹ் பலன் கிடைக்கும்.

எனக்கு காரைக்குடி செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் வீட்டில் அனைவருக்கும் ஒரு உண்டியல் தனித்தனியாக இருக்கும் அதில் காசு சேர்த்து வருவார்கள். சேமித்தால் உனக்கு தேவைப்பட்டதை வாங்கிக்கொள்ளலாம் என்பது அவர்களின் தாயாரின் அறிவுரை. மேலும் தீனிகள் (முறுக்கு, சீடை, இதுபோன்ற பொருள்கள்) வீட்டிலேயே தயார் செய்து வைப்பார்கள். வெளியில் கடையில் அதிகம் வாங்கி சாப்பிடமாட்டார்கள். இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்த உண்டியலில் அதிகமாக பணம் சேரப்போவது கிடையாது, இருந்தாலும் அந்த பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சேமிப்பின் அவசியத்தை உணர்த்தி விடுகிறார்கள். சிறு வயது முதலே எப்படி சிக்கனமாக இருக்க வேண்டும் என்பது மனதில் பதிந்து விடுகிறது.

நம் சமுதாய இளைஞர்களின் சேமிப்பு நிலையை மனதில் ஓட விடுங்கள். ஆளுக்கு ஒரு வண்டி. அதில் தேவையற்ற இடங்களுக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு வீணாக அலைவார்கள். சில பேர் வீட்டுக்கு கூட வேலை பார்த்து கொடுப்பது கிடையாது. தாய்மார்களே பிள்ளைகளுக்கு பணத்தை கொடுத்து வீணான வழியில் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். எந்த கேள்வியும் பிள்ளைகளை கேட்பதில்லை. அவன் வயது பிள்ளைகளிடம் பைக் இருக்கிறது. அவன் வயது பிள்ளைகளிடம் செல்போன் இருக்கிறது. என்று மிக அத்தியாவசியம்போல் மிக வருந்தி கையில் பணம் இல்லாவிட்டாலும் அவனின் தாயோ, சகோதரிகளோ நகைகளை வங்கியில் அடகு வைத்து அவனுக்கு பைக், செல்போன் போன்ற பொருட்களை வாங்கிக்கொடுக்கிறார்கள். வீட்டில் தந்தை அல்லது அண்ணன் வெளிநாட்டில் சம்பாரிப்பார்கள். பணம் எவ்வளவு சிரமத்துடன் வீட்டுக்கு வந்து சேர்கிறது என்ற எந்த கவலையும் இல்லாமல் பிள்ளைகள் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு அலைந்து கொண்டு இருக்கிறார்கள். காரணம் வீட்டில் உள்ள இளைஞர்களுக்கு தாய்மார்கள் எந்தவித குடும்ப கஷ்டங்களையும் தெரியப்படுத்துவதில்லை, உணர வைப்பதுமில்லை.

மாதச் சம்பளக்காரர்களாக இருந்தாலும், மாதா மாதம் வெளிநாட்டில் உள்ள கணவர், தந்தை, அண்ணன் இப்படி வீட்டுக்கு பொறுப்பாளியாக இருந்து யார் பணம் அனுப்பினாலும் தங்களுக்கு கையில் பணம் கிடைத்தவுடன் தாங்கள் செய்யவேண்டிய முதல் காரியம் (சில சகோதர, சகோதரிகள் பணம் கையில் கிடைத்தவுடன் நகை கடைக்கும் இன்னும் ஆடம்பர பொருள்கள் வாங்கவும் சென்று விடுவதாக கேள்விப்பட்டேன்) இப்படி ஆடம்பரங்களில் மூழ்கி விடாமல் பட்ஜெட் போடத் துவங்குங்கள். எப்படி பட்ஜெட் போடுவது உதாரணத்திற்கு  வருகிற மார்ச் மாதத்திற்கு என்னென்ன செலவுகள் உள்ளது என்பதை குறிப்பெடுங்கள்.

தங்கள் குடும்பத்தின் மளிகை செலவு, அரிசி, தண்ணீர் பில், கரண்ட பில், டெலிபோன் இணையதள பில், வீட்டு வரி, டாக்டர் செலவுகள், பிள்ளைகள் ஸ்கூல் பீஸ், எதிர்பாராத செலவுகள், சேமிப்பிற்கு ஒரு தொகை, கடன் எதுவும் இருந்தால் அதற்கும் ஒரு தொகை என்று குறிப்பெடுத்து விட்டு (மார்ச் மாதத்திற்கு என்ன செலவுகள் வரும் என்று தங்களுக்கு தெரியாமல் இருக்காது) பணத்தை சில்லரையாக மாற்றி (காசாக இல்லை - சில்லரை பணமாக) தனித் தனி கவரில் பணத்தை போட்டு மளிகை செலவுக்கு, கடனுக்கு, கரண்ட் பில்லுக்கு, டெலிபோன் பில்லுக்கு, டாக்டர் செலவுக்கு, தினச்செலவுக்கு, சேமிப்பிற்கு என்று கவரின் மேல் தனித் தனியாக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். செலவுகளையும் நோட்டில் எழுதி வாருங்கள். (எந்த பொருட்கள் எந்த தேதியில் வாங்கினீர்கள் எத்தனை நாட்கள் பயன்பட்டிருக்கிறது என்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம்) எந்த செலவுக்கு என்று பணத்தை தனியாக பிரித்து வைத்து இருக்கிறீர்களோ அதன்படிதான் செலவு செய்யவேண்டும்.

சேமிப்பிற்காக உள்ள பணத்தை பேங்கில் போட்டு வாருங்கள். பேங்கில் பணம் போடும்பொழுதும், எடுக்கும் பொழுதும் தங்கள் கணக்கு புக்கில் வரவு வைத்திருக்கிறார்களா? என்று கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த திட்டத்தை அலட்சியம், சோம்பல் இல்லாமல் செயல்படுத்தி வாருங்கள். இன்ஷாஅல்லாஹ் பலன் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் அனைவரிடமும் மனக்கட்டுப்பாடும் இருக்க வேண்டும். வீட்டை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் தேவையற்ற பொருள்களை வாங்கி சேர்த்து விடாதீர்கள்.

தற்சமயம் நான் கேள்விட்டது நம் ஊரில் பிறந்த நாள் விழா கொண்டாடுகிறார்களாம். மார்க்கம் காட்டித்தராத பால்குட விழா, பிறந்த நாள் விழா, பெண்கள் வயதுக்கு வந்தவிழா, காதணிவிழா, சுன்னத் விழா, இன்னும் என்னென்ன விழாக்கள் இருக்கிறதோ இவைகள் அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும். மேலும் இந்த விழாக்களுக்கு செல்வதற்காக நாகரீக பெண்கள் (நம் சமுதாயத்து பெண்கள்)பியூட்டி பார்லர்களுக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். அங்கு சென்று முக அழகு படுத்திக்கொண்டு இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். ஆக இதனால் அறிய வேண்டியது என்னவென்றால் இந்த விழாக்கள் அனைத்தும் நம்மை கடனாளியாக்கும் நிலைக்கு தள்ளிவிடும். இதற்காக பியூட்டி பார்லர்களுக்கு சென்று முகத்தில் எதை எதையோ பூசி முக அழகு ஏற்படுவதற்கு பதிலாக அலர்ஜி ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பும், பண பாதுகாப்பும் ஏற்படும். பெண்களுக்கு நாம்தாம் அழகு என்ற தற்பெருமையும் விலகும். (பெண்கள் அழகே படுத்திக்கொள்ள வேண்டாம் என்று கூறவில்லை. கணவர் ஊரில் இருக்கும்பொழுது அலங்காரமாக இருப்பதில் தவறில்லை.  கணவர் வெளிநாடுகளில் இருக்கும்பொழுது அதிகபட்ச அலங்காரங்களை தவிர்த்துக் கொள்வது நன்மை அளிக்கும்).

தாய்மார்கள்: தந்தை, அண்ணன்  வெளிநாடுகளில் படும் சிரமங்களை அடிக்கடி பிள்ளைகளிடம் கூறி, சிக்கனமாக வீண் விரயம் செய்யாமல் எவ்வாறு வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதை சிறு வயதிலிருந்தே மனதில் பதிய வைத்து கல்வியின் அவசியத்தையும் உணர்த்தி விட வேண்டும்.

வளைகுடா சகோதரர்களும் தங்களுக்கு சம்பளம் கையில் கிடைத்தவுடன், தாங்களும் இதுபோல் ஊருக்கு அனுப்புவது, இங்குள்ள செலவுகள், கடன், சேமிப்பு என்று தனித் தனி கவர்களில் பணத்தை பிரித்து வைத்து செலவு பண்ணி பாருங்கள். தங்களுக்கும் இதன் பலன் கிடைக்கும். சோதனை முயற்சியாக செய்து பார்த்து விட்டு பிறகு தங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

குறிப்பு : கடன் தொடர் 11ல் சில கேள்விகள் கேட்டிருந்தோம். அதற்கு பதில் அளித்த : சபீர், தாஜுதீன், யாசிர் சகோதரர்களுக்கு பரிசாக அர்ரஹீக் அல்மக்தூம் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இன்ஷாஅல்லாஹ் வளரும்...

- அலாவுதீன். S.

கடன் வாங்கலாம் வாங்க 12                                     கடன் வாங்கலாம் வாங்க 14

                                                    கடன் வாங்கலாம் வாங்க முகப்பு

குறிக்கோள் + நம்பிக்கை + முயற்சி = வெற்றி 13

அதிரைநிருபர் | February 23, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

அன்பான அதிரைநிருபர் வாசகர்களே…

வாழ்க்கையில் முயற்சி, நம்பிக்கை, குறிக்கோள் இந்த மூன்று வார்த்தைகளில் உள்ள முக்கியத்துவத்தை பற்றி கொஞ்சம் அலசிப்பார்போம். நாம் சிறு வயதில் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே இந்த வார்த்தைகளை நம் வாத்தியார் / பெற்றோர் / உற்றார் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் எத்தனை பேர் கடைபிடித்தோம்? எத்தனை பேர் இவர்களுக்கு வேற எந்த வேலையும் கிடையாது என்று ஏளனம் பேசியிருப்போம் என்று நம் மனசாட்சியை கேட்டால் புரியும். ஆனாலும் வாழ்வில் ஏதாவது ஒரு தருணத்தில் இதை நிச்சயம் உணர்ந்து இருப்போம்.

குறிக்கோள்

இது ரொம்ப கஷ்டம், ஆனால் முதல் தடைவை மட்டும்தான். கூகிள் குதிரையில் ஒரு வார்த்தையை தட்டிவிட்டால் அது வேறு எதையும் தேடாது அந்த வார்த்தைகள் உள்ள இடங்களை மட்டும் அள்ளி கொண்டு வந்து தரும் அதுதான் கூகிளின் வெற்றி. அது மாதிரிதான் நம் குறிக்கோளும் இருக்க வேண்டும். நம் அடைய முடிய குறிக்கோள்களை ஏற்படுத்திக்கொண்டு (புர்ஜ் கலிஃபாவில் ஃபளாட் வாங்குவது என்பது நல்ல குறிகோள்தான். ஆனால் நிறைவேற்றுவது சிரமம்) அதை நோக்கி பயணிப்பது. வெற்றி என்ற பறவைக்கு வலை விரித்து விட்டோம் என்றுதான் பொருள்.

நம்மவர்கள் சில பேர் குறிக்கோள் இல்லாமல் மெயின் ரோட்டில் போய் சாமான் வாங்கலாம் என்று கிளம்பி, கடைத்தெருவுக்கு சென்று பின்னர் பட்டுக்கோட்டைக்கே சென்று பஸ் செலவை தெண்டத்துக்கு செலவு செய்துவிட்டு வருவார்கள் + போனஸாக உடம்பு வலியையும் அலைச்சலையும் சேர்த்து வாங்கி வருவார்கள். அந்த சாமான் நம்மூரில் கிடைக்கும் அதே விலைக்கு என்பது வேறு விசயம், இவர்கள் முயற்சி செய்து இருக்கிறார்கள் ஆனால் குறிக்கோள் இல்லா முயற்சி.

நம்பிக்கை

நம்பிக்கை என்பது தும்பிக்கை போல் வலுவாக இருக்க வேண்டும். நான் யாருக்கும் சளைத்தவனல்ல, அடுத்தவர் செய்யக்கூடியதை உருவாக்க கூடியதை நாமும் செய்ய முடியும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்.

நம்பிக்கை என்றவுடன் எதோ குருட்டுதனமாக வைப்பது அல்ல. நம்மூரில் ”பூனை நபுசு” என்பார்கள் அந்த மாதிரி எண்ணங்களெல்லாம் வெற்றிக்கு உதவாது, அது வாழ்வை வெறுமையாக்கி விடும். சில பேர் கழிவறைக்கு போய்விட்டு வந்து அந்த கையை விரல் ரேகைகலெல்லாம் போகும் அளவிற்கு தேய்த்து தேய்த்து கழுவி கடைசிலேயும் அது இன்னு சுத்தமாகல என்ற அவ நம்பிக்கையுடன் போய்விடுவார்கள். இவர்களை “ஒசுவாசு” என்றும் அழைப்பதுண்டு, இந்த மாதிரி நம்பிகையற்ற ஆள்கள் ஜொலித்தாக எந்த நாட்டுல உள்ள டேட்டா பேஸ்லையும் இல்லை, கூகில் தேடலில் பார்த்தாலும் கிடைப்பது இல்லை.

வீட்டை பூட்டிவிட்டு “பூட்டிடுச்சா பூட்டிடுச்சா “ என்று தன்மேல் இல்லாவிட்டாலும் பூட்டு மேலயாவது நம்பிக்கை வைக்காமல் போன எத்தனையோ பூட்டான்களை (அதாங்க பூட்டை இழுத்து இழுத்து உடைத்த ஆட்கள்) நாம் பார்த்திருக்கிறோம்.

நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலிலும் நம்பிக்கை வைக்க வேண்டும். வாழ்க்கையை நம்பிக்கை என்ற இயக்கியை (processor) கொண்டே ஒடிகொண்டு இருக்கிறது. ஒவ்வொரு செயலையும் செய்யும் போது தூய எண்ணத்துடன், முடிந்த அளவு நேர்த்தியாக செய்து விட்டு “ நம்பிக்கையுடன் அமருங்கள் வெற்றி உங்களை எட்டி பார்க்கும். நமது மார்க்கமே நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததுதான்.

முயற்சி

ஒரு முயற்சி செய்து அதன் மேல் நம்பிக்கை வைத்து (இறை நம்பிக்கையுடன் தான், அவனின்றி அணுவும் அசையாது), அடையக்கூடிய குறிக்கோளுடன் (அனில் அம்பானி போல வர வேண்டும் என்பது டூ மச் ) உழைத்தால் “வெற்றி” படுக்கை விரித்து போட்டு நாம் பக்கத்திலேயே படுத்துக்கொள்ளும்.

ஒரு மார்க்க சிறப்பு மிக்க ஊரில் ஒரு நல்ல முஸ்லிம் இருந்தார். அவர் எப்பொழுதும் இறைவன் தருவான்.. இறைவன் தருவான்… என்று சொல்லி கொண்டே இருப்பார். அவரிடம் சிலர் வந்து முயற்சி செய்யாமல் இப்படியே சொல்லிக்கொண்டு இருக்கீங்களே… இதை நிரூபித்துக் காட்டுங்கள் என்று கேட்டுக் கொண்டனர், ஒத்துக்கொண்ட அவரும் “நாளை நமதூர் பள்ளியில் ஒரு விசேசத்திற்காக சோறு ஆக்கி அனைவருக்கும் குடுப்பாங்க, நான் பள்ளிக்கு எதிரில் சும்மா உட்கார்ந்து இருப்பேன், அவர்கள் என் அருகில் வந்து உணவை தருவார்கள்“ என்றார். அந்த சிலரும் அதை ஏற்றுக்கொண்டு இடத்தை விட்டு அகன்றார்கள்…

மறுநாள் உணவு சமைக்கப்பட்டு அங்கு குவிந்த அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அனைவரும் வந்து வாங்கி சென்றனர். இவரை கவனித்தார்கள் ஆனால் கொடுக்கவில்லை, உணவெல்லாம் முடிந்து விட்டது.

அப்போது அந்த நல்ல முஸ்லீம், அருகில் சென்ற உணவு பரிமாறிய ஒருவரிடம் கேட்டார். “நான் பள்ளிக்கு எதிரில்தானே அமர்ந்து இருந்தேன் ஏன் எனக்கு உணவு தரவில்லை “ என்று

அதற்கு உணவு பரிமாரியவர் “ஓ !!! அப்படியா நீங்க மற்றவர்கள் போல வந்து உணவை வாங்கவில்லையே, நீங்க நோன்பு வச்சிருக்கீங்கலோ என்று எண்ணி எதுக்கு இந்த உணவை கொடுத்து பாவத்தை விலைக்கு வாங்கணும் என்று இருந்தோம்“ என்று பதில் அளித்தார்.

நம்பிக்கை வைத்திருந்த அந்த மனுசன் முயற்சி செய்யவில்லை. முயற்சி செய்வதற்கு முயலாவிட்டால் என்றும் எதுவும் கிடைக்காது, இறைவனும் உதவ மாட்டான். நமக்கு உறுப்புக்களை இறைவன் கொடுத்ததே முயற்சி எடுத்து முன்னேறத்தானே.

கண்டுப்பிடிப்பாளர்கள் முயற்சி செய்திருக்காவிட்டால் இன்று நாம் பயன்படுத்தும் எந்த பொருளும் நம்மிடம் வந்து இருக்காது. நம்பிக்கை இல்லாவிட்டால் எந்த ஒரு முயற்சியிலேயும் நாம் வெற்றி பெற்று இருக்க முடியாது. குறிக்கோளுடன் நம்பிக்கைவைத்து, முயற்சி செய்யாமல் இருந்திருந்தால் அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாடு நடந்தேறி இருக்காது.

ஏன் நம் தாய்மொழி தமிழை எளிதில் தட்டச்சு செய்வதற்கும், இணையத்தில் தமிழ் வெகுவாக வளர்வதற்கும், நம்மைப் போன்றவர்களுக்கு இலவசமாக அறிமுகப்படுத்தி பேருதவி செய்ததில் முதன்மையானவர்களாக இருந்தவர்களில் ஒருவர்தான் நம்மூரில் பிறந்தவர், தேனீ ஒருங்குறி எழுத்துரு தந்தவர் மர்ஹூம் உமர்தம்பி அவர்கள். அவர்களிடம் குறிக்கோள், நம்பிக்கை, முயற்சி இருந்ததால், அன்று தேனீ, வைகை என்ற தானியங்கி எழுத்துருக்களை (dynamic fonts) உருவாக்கி தமிழ் இணைய உலகில் ஒரு மாபெரும் புரட்சி செய்ததால்தான், அன்று அவர்கள் போட்ட விதையால் கடந்த 10 வருடத்திற்கும் மேலாக தாய்மொழி தமிழ் இணையத்தில் அளவிட முடியாத வளர்ச்சியடைந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழை இணையத்தில் பார்த்து, படித்து, ரசித்து, நல்லவற்றின் மூலம் பயனடைந்து வருகிறோம். மர்ஹூம் உமர்தம்பி அவர்கள் மற்ற தமிழார்வளர்களுடன் சேர்ந்து முதன் முதலில் உருவாக்கிய தமிழா ஏகலப்பை (Ekalappai) மென்பொருள்கள் (software) மூலம் இன்று நாம் தாய்மொழி தமிழை தட்டச்சில் தட்டித் தட்டி இணையத்தில் உலகெங்கும் பரவசெய்துக் கொண்டிருக்கிறோம்.

கூகில் தேடலில் “உமர்தம்பி” என்று தமிழில் தேடிப்பாருங்கள் அவர் குறிக்கோள்யுள்ளவர் + நம்பிக்கையுள்ளவர் + கடின முயற்சி செய்தவர் = வெற்றிப்பெற்றவர் என்று எல்லோருக்கும் புரியும். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் உமர்தம்பி அரங்கம் என்று ஓர் அரங்கம் அமைத்து மற்றும் "தமிழ் இணைய அறிஞர்" என்ற விருதினையும் அளித்து நம் அதிரை உமர்தம்பி அவர்களின் வெற்றிக்கு அங்கீகாரம் தந்தார்கள் இணையத்தமிழ் ஆர்வலர்கள் என்பது உலகறிந்ததே.

ஆகையால் வாழ்க்கையில் முடிந்தவரை குறிக்கோள்,முயற்சி, நம்பிக்கை இந்த மூன்றையும் பேணுவோம். வெற்றிபெருவோம் நம் குழந்தைகளுக்கும் புகட்டுவோம். இன்ஷா அல்லாஹ்.

இக்கட்டுரையில் இன்னும் நிறைய எழுதலாம் நேரம் இல்லாததால் புள்ளி வைத்து நகர்கிறேன். யாரவது கண்டினிவ் பண்ணுங்களேன்… தொடரட்டும்…

-- முகமது யாசிர்

சகோதரர் யாசிர் எழுதிய மற்றுமொரு கட்டுரை நம் அதிரைநிருரில் ஏற்கனவே June 22, 2010 பதிவாகியுள்ளது, சென்றுப்பாருங்கள் "வாழ்க்கைல ஒரு சவால் இருக்கனும்".