Showing posts with label update. Show all posts
Showing posts with label update. Show all posts

ஓரளவுக்கு அப்டேட்டடா இரிக்கச்சொல்றாப்ளெ...! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | December 05, 2012 | , , , , ,


நான் பணிபுரியும் நிறுவனத்தில் கிட்டத்தட்ட சுமார் ஐந்தாண்டு காலம் திட்டமிடல் துறையின் நேரடி பார்வையில் நல்ல அனுபவ தேர்ச்சியுடன் அளவாயர் (Quantity Surveyor  பணியில் பணிபுரிந்து வரும் புதுக்கோட்டையைச் சார்ந்த என் நம்பிக்கைக்குரிய நண்பர் யாகூப் இப்படி என்னிடம் அடிக்கடி வருத்தப்படுவதுண்டு. அந்த வருத்தத்தை இங்கு பகிர்வதால் அதை படிக்கும் அயல்நாடு/உள்நாட்டு வேலை தேடி செல்ல இருக்கும் நம் இளைஞர்களுக்கு கொஞ்சம் பயனளிக்கும் என்ற எண்ணத்தில் இங்கு பகிர்கிறேன். 

'என்னா பாய்? நம்ம ஆளுங்க புதுசு, புதுசா லேப்டாப் வாங்குறாங்க, ஃவெய்ஃபை ங்கிறான், வாய்ப்புங்கிறான், வெஸ்ட்டா ங்கிறான், விண்டோஸ் என்கிறார்கள், மொபைல் ஃபோன் புது, புது வெர்சனில் வாங்குகிறார்கள், அண்ட்ராய்ட் என்கிறார்கள், டச் ஸ்கிரீன் என்கிறார்கள், புலூடூத் என்கிறார்கள், வூவூ என்கிறார்கள், ஜி டாக் என்கிறார்கள், ட்விட்டர் என்கிறார்கள், ஸ்கைப்பி என்கிறார்கள், ஃபேஸ் புக்கில் தினுசு,தினுசா ஃபோட்டோக்களை தினம், தினம் அப்டேட் செய்கிறார்கள் இப்படி நவீன யுகத்தில் நித்தம், நித்தம் வருவதை புத்தம், புதியதாக இருக்கும் பொழுதே காசு இருந்தாலும், இல்லா விட்டாலும் கடன் வாங்கியேனும் வாங்கி தன் ஆசைகளை தீர்த்துக்கொள்கிறார்கள்.'

ஆனால் இண்டர்வுயூவில் நம்ம ஆளுகள் என்று எண்ணி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இல்லாம எப்படியாவது நாமாகவோ அல்லது நாலு பேரிடம் கெஞ்சி ரெக்குவஸ்ட் பண்ணி பல சிரமங்களுக்கிடையே வேலையில் சேர்த்து விட்டு புதிய வேலை துவங்கியதும் கம்ப்யூட்டரில் ஒரு  எக்ஸல் ஃபைல் ஒப்பன் செய்து ஒரு சிம்ப்ல் ஃபார்முலா போடச்சொன்னால் கூட 'பேக்கபேக்கண்டு' முழிக்கிறார்கள். இருக்கையில் இருந்து கொண்டு நெளிகிறார்கள். எங்கோ பறந்து கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் ஒரு பணியில் சேருவதற்கு முன் அது பற்றிய குறைந்தளவு அனுபவமும், தயாரிப்பும் செய்து கொள்ளக்கூடாதா?

குறைந்தளவு தேவைப்படும் பணியறிவு கூட இல்லாமல் மேலே கணிப்பொறி சம்மந்தமாகவும், கைபேசி சம்மந்தமாகவும் ஆயிரத்தெட்டு விசயங்களை நன்கு அறிந்து வைத்திருப்பதனால் என்ன பயன்? என்று தான் கண்ட சில சங்கடங்களை என்னுடன் இப்படி வேதனையுடன் பகிர்ந்து கொண்டார். இயன்றால் ஒரு கட்டுரையாகவே இதை எழுதிப்போடுங்கள் என கேட்டுக்கொண்டார்.

நல்ல சம்பளத்தில் மற்றும் இன்ன பிற வசதிவாய்ப்புகளில் குறியாக இருக்கும் நாம் இவை எல்லாவற்றையும் எளிதில் ஏற்படுத்தி தரும் வேலை சம்மந்தமாக மட்டும் ஏன் விழிப்புணர்வு இல்லாமல் மட்டும் இன்னும் இருக்கிறோம்?

நிறுவனத்திற்குள் எப்படியாவது நுழைந்து விட வேண்டும். அதுக்கப்புறம் சமாளித்துக் கொள்ளலாம் / பார்த்துக் கொள்ளலாம் என்றிருப்பது ஒரு காலத்தில் உகந்ததாக இருந்திருக்கும். இப்பொழுது அது முற்றிலும் தவறானது. (காக்கா பாத்துக்கிடுவாஹ, மச்சான் பாத்துக்கிடுவான், மாமா பாத்துக்கிடுவாஹ, ஃப்ரண்டு பாத்துக்கிடுவான், அவன் பாத்துக்கிடுவான், இவன் பாத்துக்கிடுவான் என்று நம்பிக்கொண்டு பிறகு அவர்களுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர்)

ஒரு காலத்தில் நம்மவர்கள் பாஸ்ப்போர்ட்டின் ஒரு காப்பியை வெளிநாட்டில் இருக்கும் சொந்தக்காரர்களிடம் கொடுத்து விட்டு செக்கடி மோட்டிலோ அல்லது வெட்டிக் குளக்கரையிலோ உட்கார்ந்து அவர்களுக்கும் விசா ரெடியாகி இன்று அவர்களில் பலர் வாழ்வின் உச்சத்தில் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அக்கால நடைமுறை பழக்க,வழக்கம் இந்த காலத்துக்கு சரிப்பட்டு வராது, சுறுசுறுப்பா, சூட்டிக்கையா, அப்டேட்டடா இன்றைய இளைஞர்கள் இருக்கனும்ண்டு சொல்றாப்லெ.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது