Showing posts with label அதிரை பைத்துல்மால். Show all posts
Showing posts with label அதிரை பைத்துல்மால். Show all posts

ஐக்கிய அரபு அமீரகவாழ் அதிரைவாசிகளுக்கு ABM இன் அன்பான வேண்டுகோள் ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | July 13, 2013 | , , , , , , ,

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிரை பைத்துல்மால் கடந்த 20 வருடங்களாக உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு அளப்பரிய சேவைகளைச் செய்து வருவதை அறிவீர்கள். அதிரைவாசிகளிடமிருந்து பெறப்படும் ஜகாத், ஃபித்ரா மற்றும் ஸதகா மூலம் இவற்றை மார்க்கம் வரையுறுத்துள்ளபடி பகிர்ந்தளித்து வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷா அல்லாஹ் இவ்வருடமும் வெளிநாடுகளிலுள்ள அதிரைவாசிகளின் நன்கொடைகளைத் திரட்டி வழமைபோல் சேவைகள் தொய்வின்றி தொடர தங்கள் பங்களிப்பை மனமுவந்து வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அதிரைவாசிகளிடமிருந்து ஃபித்ரா தொகையாக தலா 15/- (பதினைந்து திர்ஹம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஃபித்ரா உதவிகள் ரமலான் மாதத்திற்குள் பகிர்ந்தளிக்கப்பட்டு விடும். பிற உதவிகளுக்கு ஜகாத் மற்றும் ஸதகா மூலம் ஆண்டு முழுமைக்கும் திட்டமிடப்பட்டு அதற்கேற்ப நிதி ஒதுக்கப்படுகிறது. ஆகையால், தங்களின் ஜகாத் தொகையை முழுவதுமோ அல்லது குறிப்பிட்ட பகுதியையோ அதிரை பைத்துல்மாலுக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

துபாய் மற்றும் அபூதாபியில் கீழ்கண்ட பிரதிநிதிகளிடம் அதிரை பைத்துல்மாலுக்கான நிதியுதவிகளைச் செலுத்தலாம்.

துபாய்        :      S.M.A.சாகுல் ஹமீது - 0503792167
                             M.Z.அமீன்            - 0505050922                       
                             N.ஜமாலுதீன்         - 0504737200
                             ஜாஃபர் அலி         - 0504364388

அபூதாபி:          S.அபுல் கலாம்        - 0567822844
                             A.முஹம்மது யூசுப்  - 0558084073

இவண்,

செயலர்
அதிரை பைத்துல்மால்
துபை கிளை

1993-2011 ஆண்டுவரை அதிரை பைத்துல்மால் மூலம் வழங்கப்பட்ட முக்கிய உதவிகள்:



சேவைகள்
ரூபாய்
வட்டியில்லா கடன்
6,599,050
மாதாந்திர உதவித்தொகை
1,744,550
கல்வி உதவிகள்
556,509
திருமண உதவிகள்
512,070
மருத்துவ உதவிகள்
229,291
கத்னா உதவிகள்
143,301
பிற உதவிகள்
140,695
மொத்தம்
9,925,466


2012-2013 ஆம் ஆண்டில் அதிரை பைத்துல்மால் மூலம் வழங்கப்பட்ட முக்கிய உதவிகள்:



சேவைகள்
ரூபாய்
வட்டியில்லா கடன்கள்
3,772,000
மாதாந்திர உதவிகள்
403,800
கல்வி உதவிகள்
26,640
திருமண உதவிகள்
37,000
மருத்துவ உதவிகள்
42,500
கத்னா உதவிகள்
29,425
பிற உதவிகள்
326,510
மொத்தம்
4,637,875
பரிந்துரை : N.ஜமாலுதீன்

அதிரை பைத்துல்மால் - வேண்டுகோள் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | August 21, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இருநூற்றைம்பது ரூபாயில் ஒருமாத ஜீவாதாரம்!

அதிரையிலிருந்து படுக்கோட்டைக்கு ஒருமுறை ஆட்டோவில் சென்றுவர செலவளிக்கும் தொகைதான் ஆகும்! இருநூற்றைம்பது ரூபாயில் ஓர் ஏழையின் ஒருமாத ஜீவாதாரத்தேவைகள் ஓரளவு நிறைவேற்றப்படுகிறது என்றால் நம்புவீர்களா? ஆம்! நம்பித்தான் ஆகவேண்டும். அதிரை பைத்துல்மால் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக இதை சாத்தியப்படுத்தி வருகிறது. நமதூரில் சுமார் 50 ஏழைகளை அடையாளம் கண்டு, மாதந்தோறும் தலா ரூ.250 வீதம் உதவித்தொகை வழங்கி அவர்களின் அத்தியாவசிய ஜீவாதாரத் தேவையை ஓரளவு நிறைவு செய்து வருகிறது.

பெரும்பாலும் நோன்பு காலங்களில் தானதர்மங்கள் நிரம்பி, நமதூர் மட்டுமின்றி அக்கம்பக்க ஊர்களிலிருந்தும் ஜகாத் மற்றும் ஃபித்ரா தர்மங்களைப்பெறுவதற்காக வருகின்றனர். அவர்களில் எத்தனைபேர் உண்மையிலேயே ஏழை அல்லது ஜகாத் பெறுவதற்குத் தகுதியுள்ளவர்கள் என்பது அனேகருக்குத் தெரியாது. அதிரை பைத்துல்மால் முஹல்லாவாரியாக பொறுப்புதாரிகளை நியமித்து, உண்மையிலேயே தருமம் பெறுவதற்குத் தகுதியானவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் சுயமரியாதைக்கும் கண்ணியத்திற்கும் எவ்வகையிலும் இடையூறு ஏற்படாதபடி அவர்களுக்கான தானதர்மங்களைச் செய்து வருகிறது.

ஒருமுறை கைத்தொலைபேசிக்கு ரீசார்ஜ் செய்வதைக் குறைத்து, ரூ.250 ஐ பைத்துல்மாலுக்குச் செலுத்தினால், ஓர் ஏழையின் ஒருமாதத்திற்கான குறைந்தபட்ச அடிப்படை உணவுக்கு இது உதவுகிறது. பட்டுக்கோட்டைக்கு ஆட்டோவில் செல்லாமல், ஒருமுறை பேருந்தில் செல்வதன்மூலம், அதில் மிச்சப்படும் தொகையை தர்மமாக வழங்கி மேற்சொன்னபடி உதவலாம். இப்படியாக,நம் செலவுகளை மிச்சப்படுத்துவதன்மூலம் மிஞ்சும் தொகையை மாதம் ஒருமுறை மட்டும் வழங்கினால் இன்ஷா அல்லாஹ் நமதூரில் உண்ண உணவன்றி வாழும் ஏழைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கலாம்.

அதிரை பைத்துல்மாலின் நிர்வாகிகளைச் சந்தித்தோ அல்லது abmchq@gmail.com என்ற முகவரிக்கு மின்மடலுக்கு எழுதியோ, குறைந்த செலவில் நிறைந்த நன்மை பயக்கும் பைத்துல்மாலின் பல்வேறு அளவிலான உதவிகளில் உங்களையும் இணைத்துக்கொள்ளலாமே! இந்த வருடம் ரமலான் பிறை இன்னும் 9-10 மட்டுமே இருக்கக்கூடும். உங்கள் தானதர்மங்களை அதிரை பைத்துல்மாலுக்குச் செலுத்தி விட்டீர்களா? இந்த மாதத்தின் செலவுகளில் அதிரை பைத்துல்மாலுக்கும் ஓர் பகுதியை ஒதுக்கி, பன்மடங்கு நன்மைகளைக் கொள்ளையடிக்கும் இந்த மாதத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ளலாமே!

தகவல் : ஜமாலுதீன்

பிரமிக்க வைக்கும் அதிரை பைத்துல்மால் ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | August 11, 2011 |

ஒவ்வொரு வருடமும் அதிரை பைத்துல்மாலுக்கான ஜகாத், ஃபித்ரா மற்றும் ஸதக்கா நிதியுதவியகளைப்பெற துபையிலுள்ள அதிரைவாசிகள் தங்குமிடங்களுக்கு துபை கிளை பைத்துல்மால் நிர்வாகிகள் செல்வது வழக்கம். கடந்த 2004 ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ரமழானிலும் இவ்வாறு செய்து வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்!

ஒவ்வொரு வருடமும் நமதூர்வாசிகளைச் சந்திக்கும்போது அதிரை பைத்தில்மாலின் செயல்பாடுகளில் ஒருசில குறைநிறைகளைச் சுட்டிக்காட்டுவதும்,அதற்கான பதிலை/விளக்கத்தை அதிரை பைத்துல்மால் தலைமையகத்தில் இருந்து பெற்று தெரிவிப்பதுமாக இருந்து வருகிறோம்.

இந்தமுறை நமதூர்வாசிகளிடமிருந்து முந்தைய வருடங்களைப்போல் குறைகள் எதுவும் சொல்லப்படாதது சற்று ஆச்சரியத்தைத் தந்தது. பொதுவாகவே மனிதர்களால் நடத்தப்படும் எந்த அமைப்பின் செயல்பாடுகளிலும் ஒருசில குறை/நிறைகள் விமர்சிக்கப்படுவது இயற்கை என்றாலும், வழக்கத்திற்கு மாறாக இவ்வருடம் அத்தகைய குறை எதுவும் சுட்டிக்காட்டப்படாதது மகிழ்ச்சியாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

கடந்த 18 வருடங்களாக நமதூருக்கென அதிரை பைத்துல்மால் செய்துவரும் சேவைகள் அதிரையில் பொதுநல அமைப்புகளின் வரலாற்றில் இல்லாத ஒன்று என்பதை அதிரைவாசிகளும் அக்கம்பக்க ஊர்வாசிகளும் உணர்ந்து அதிரை பைத்துல்மாலை அங்கீகரித்துள்ளனர். எனக்குத் தெரிந்து அதிரை பைத்துல்மாலின் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டு கூத்தநல்லூர், அய்யம்பேட்டை போன்ற ஊர்களில் அதிரை பைத்துல்மாலின் செயல்திட்டத்தை அறிந்து இதேபோன்று பைத்துல்மால்களை உருவாக்கியுள்ளனர்.

பெரும்பாலும் முஸ்லிம் அமைப்புகள் என்றாலே ஆண்டுக்கொரு மீலாது விழாவோ அல்லது கத்தூரி விழாவோ நடத்தி, தப்ரூக் வழங்கி கூடிக்கலைவதே நாம் இதுவரை கண்டுவந்துள்ளோம். ஆனால் பைத்துல்மாலோ சற்று வித்தியாசமான பிரச்சினைகளை கையிலெடுத்து செயல்பட்டு வருகிறது. பெயருக்கேற்ப பைத்=வீடு, மால்=நிதி. அதாவது நிதியகம் என்ற வகையில் பொதுமக்களின் பொருளியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மார்க்க ரீதியிலான தீர்வுகளை வழங்கி வருவது இஸ்லாமிய அமைப்புகளின் செயல்பாட்டில் இல்லாத ஒன்று.

முஸ்லிம்களுக்கான பொருளாதார உதவிகளை மையமாகக் கொண்டு இயங்கினாலும், பிறமதத்தவருக்கும் நிதி சார்ந்த உதவிகளைச் செய்து வந்துள்ளது. ஜகாத் விநியோகம் குறித்த குர்ஆனிய வழிகாட்டலில் முஸ்லிமல்லாத வறியவர்களும் ஜகாத் நிதியில் பங்குபெறத் தகுதியானவர்கள் என்பதால் பைத்துல்மாலால் சமயநல்லிணக்கம் வளர்க்கும் அமைப்பாகவும் செயல்பட முடிகிறது. இது பிறமத அமைப்புகளிடம் இல்லாத மற்றுமொரு சிறப்பு அம்சமாகும்.

கடந்த 18 வருடங்களாக பைத்துல்மாலின் சேவைகளை பின்னோக்கிப் பார்க்கும்போது வெரும் 1000 ரூபாய் மூலதனத்துடன் தொடங்கப்பட்ட ஓர் அமைப்பு இந்தளவுக்கு வளர்ந்திருப்பது அதன் செயல்பாடுகளுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரமே என்றால் மிகையில்லை. முழுக்க முழுக்க பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வந்தாலும் அல்லாஹ்வின் பெருங்கிருபையினால் இதுவரை ஒரு ரூபாய்கூட பொருளாதார மோசடி குற்றச்சாட்டு எழுந்ததில்லை.பைத்துல்மாலை உருவாக்கி பல்வேறு விமர்சனங்களுக்கிடையிலும் நடத்தி செயல்பட்டு வரும் நல்லுள்ளங்களின் முயற்சிகளைப் பொருந்திக் கொள்வானாக! ஆமின்.

உங்கள் ஜகாத், ஃபித்ரா மர்றும் ஸதகா தர்மங்களை பைத்துல்மாலுக்குச் செலுத்தி இறைப்பொருத்தம்நாடிய பயணத்தில் உங்களையும் இணைத்து,பன்மடங்கு நன்மை தரும் ரமலானில் உங்கள் நன்கொடைகளைச் செலுத்தி பைத்துல்பாலின் சேவைகள் தொடர்வதற்கு உதவிக்கரம் நீட்டுங்கள். 

- அதிரைக்காரன்

அதிரை பைத்துல்மால் - 13 வது திருக்குர்ஆன் மாநாடு: 2011 2

அதிரைநிருபர் | May 08, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நம் அதிரை பைத்துல்மால் வருடா வருடம் நடத்தும் திருக்குர்ஆன் மாநாடு இந்த வருடம் 2011 மே மாதம் 27, 28, 29 ம் (வெள்ளி சனி ஞாயிறு) தேதிகளில் சாதுலியா புதுப்பள்ளி ஆஸ்பத்திரித்தெருவில் மிகச் சிறப்பாக நடைப்பெற உள்ளது.

இம்மாநாட்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மாணவ, மாணவிகளுக்கான அறிவுத்திறன் போட்டிகள் நடைப்பெற உள்ளது. இவைகள் தொடர்பான அறிவிப்புகள் இதோ உங்கள் பார்வைக்கு தருகிறோம்.

போட்டி விதிமுறைகளை கவனமாக படித்துப்பாருங்கள், சந்தேகங்கள் இருந்தால் நோட்டீசில் தரப்பட்டுள்ள அலைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.


அல்குர்ஆன் அறிவமுத போட்டிகள் தொடர்பான அறிவிப்புகள்.






வினாடி வினா போட்டிக்கான கேள்வி பதில்களை இந்த சுட்டிக்கு  https://sites.google.com/site/tjdn77/java1/questionanswer.pdf  சென்று தறவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள். தறவிறக்கம் செய்வதில் சிரமம் இருந்தால் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள், நாங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கிறோம். மின்னஞ்சல் முகவரிகள் adirainirubar@gmail.com  editor@adirainirubar.in .

நன்றி: Media Magic

தகவல்: அதிரை பைத்துல்மால்