Showing posts with label அல்குர்ஆன். Show all posts
Showing posts with label அல்குர்ஆன். Show all posts

ஈடிணையற்ற இறைவா! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 07, 2016 | , , ,

(மூலம்: ஆயத்துல் குர்ஸி /அல் குர்ஆன்: 2:255)

அல்லாஹ்!

ஊண் உருகி உடல் குறுகி
உயிர்  ஒடுங்கி உளம் நடுங்கி
வணங்கிட ஒருவன்...
அவனைத் தவிற யாருமில்லை

உயிர்த்திருக்கும் அவன்
நிலைத்திருப்பதில் நிகரற்றவன்;
உணர்வுகளில் நித்தம்
மிகைத்திருப்பதில் நிரந்தரமவன்!

சிறு துயிலோ
மடியோ
மதியழிக்கும் மயக்கமோ;
சுணக்கமோ
சுயமிழக்கும் சோம்பலோ
அவனுக்கில்லை!

வானங்களும் பூமியும்
வளி மண்டல நிரப்பிடமும்
விண்வெளியும் வெற்றிடமும்
சிந்தைக்கு எட்டாத
சித்தாந்தங்களு மென
யாவும் அவனுக்கே உரியன!

அவன்
ஆட்சி அதிகாரத்தில்
அகிலம் காக்கும் ஆளுமையில்
படைப்பில் பரிபாலனையில்
விதிப்பதில் வழங்குவதில்
காப்பதில் கற்பிப்பதில்
அவன் நாட்டமின்றி
எவரும் எதையும்
நிகழ்த்துதலோ
நிகழ்த்த முனைதலோ
நடவாதது!

அவன்
படைத்த படைப்பினங்களின்
முன்பும் பின்பும்
முன்னரும் பின்னரும்
இன்னும்
இடைப்பட்டவற்றிலுமான
யாவையும் பற்றிய
ஞானம் மிகைத்தவன்!

கணித்தறிந்துவிட முடியாத
அவன் தன்
அளப்பெரிய ஞானத்திலிருந்து
அணுவளவேனும் யாரும்
அவன் நாட்டமின்றி
அறிந்து கொள்ளல் இயலாது!

எப்பரிமாணம் கொண்டும்
எடுத்தியம்பிட இயலாத
எல்லைகள் இல்லா
எழில்ப் பரிமாண இருக்கை
எம்மிறையாம் அவனுக்காய்
பூமிக்கும் வானங்களுக்குமென
வியாபித்திருப்பதாகும்!

வானங்களும் பூமியுமாகிய
அவ்விரண்டினையும்
இன்னும்
எவருக்கும் எட்டாத
ஏகாந்த இருப்புகளையும்
எடுத்தாள்வது
எம்மிறையாம் அவனுக்கு
யாதொரு பொருட்டுமல்ல
எந்தவொரு சிரமமுமில்லை

அவன்
கற்பனைகளுக்கோ
காட்சிகளுக்கோ எட்டா
உயர்ந்தவன்;
கணக்கீடுகளுக்குள்ளோ குறிப்புகளுக்குள்ளோ அடங்காப்
புகழுக்குரிய அவன்...
மாண்பு மிக்கவன்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

சூரத்துல் ஃபாத்திஹாவை மனனம் செய்து பொருளுணர்ந்து ஓதுகிறோமா? [காணொளி] 0

அதிரைநிருபர் | July 19, 2016 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

"அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! 

உலக மாந்தர்க்கெல்லாம் முன்மாதிரி நம் அருமை இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை, ஏன் பிற மதத்தவர்கள் பலருக்கும் தெரியும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும் தான் இந்த மனித இனத்திற்கு முன்மாதிரிகளில் முதன்மையானவர் என்று. ஆனால், முன் மாதிரி, என்று வெறும் பேச்சளவில் மட்டுமே நாம் சொல்லுகிறோமே தவிர அவர்கள் நமக்காக அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த வஹியான திருக்குர்ஆனின் கட்டளைகள், அல்லாஹ்வின் கட்டளைப்படி மார்க்கமாக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இவைகளை நம் வாழ்வில் கடைப்பிடித்து இறை மார்க்கமான “இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா?” என்ற வினாவோடு இந்த பதிவு தொடர்கிறது.

சூரத்துல் ஃபாத்திஹாவை பொருள் மனனம் செய்து உணர்ந்து ஓதுகிறோமா?

திருக்குர்ஆனில்  முக்கிய அத்தியாயம் ‘சூரத்துல் ஃபாத்திஹா‘ எனப்படும் அத்தியாயமாகும். ஏராளமான சிறப்புகளைக் கொண்ட அந்த அத்தியாயத்தை அறியாத – மனனம் செய்யாத முஸ்லிம்கள் யாரும் உலகில் இருக்க முடியாது. ஆனாலும் அதன் மகத்துவத்தை அவர்கள் பெரும்பாலும் அறிவதில்லை. இதன் சிறப்பு குறித்து வந்துள்ள நபிமொழிகளை தமிழறியும் முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டும், இதன் சிறப்புகளை பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

நம்மில் எத்தனை பேர் சூரத்துல் ஃபாத்திஹாவை பொருள் உணர்ந்து ஓதியிருக்கிறோம்? 

சூரத்துல் ஃபாத்திஹாவின் முழுமையான அர்த்தத்தை மனனம் செய்திருக்கிறோமா? 

நாம் ஒவ்வொரு தொழுகையின் ரக்காத்துகளில் ஓதும் சூரத்துல் ஃபாத்திஹா சூராவை அழகிய உச்சரிப்புடனும் பிழையின்றியும் ஒதுகிறோமா? இதோ இந்த காணொளியை பாருங்கள்.


காணொளியை கேட்ட உச்சரிப்புகளுடனும் பிழையின்றியும் நாம் ஓதும் சூரத்துல் ஃபாத்திஹா உள்ளதா? என்பதை  நாம் சிந்திக்க வேண்டும். இதன் அர்த்தத்தை முழுமையாக மனனம் செய்து, அதன் பொருள் உணர்ந்து இவ்வுலகை விட்டு மரணிக்கும் வரை அதனை மறக்காமல் இருக்க வல்லமை நிறைந்தன அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
M.தாஜுதீன்

-- மீள் பதிவு

காது கொடுத்து கேளுங்கள் - ப்ளீஸ் ! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | November 15, 2013 | , , , ,

இறைவனின் அருட்கொடையான அருள்மறைத் திருக்குர்ஆனிலிருந்து இறை வசனங்களை ஓதக் கேட்டாலும் அதன் பொருள் அறியாவிட்டாலும் அப்படியே நம் மனதை ஈர்க்கும். அன்றாடம் தொழுகையில் ஓதப்படும் இறைவசனங்களை முழுவதுமாக அர்த்தங்கள் பொதிந்த அவ்வசனங்களை கேட்கும்போது உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தை ஒவ்வொருவராலும் அப்பட்டமாக உணரப்படும்.

இந்த வாரம் ஸூரத்துல் 'பகரா' அத்தியாயத்திலிருந்து வசனங்களை அழகிய உச்சரிப்புடன் தொழுகையில் ஓதுவதை காது கொடுத்து கேட்போம் இன்ஷா அல்லாஹ் !

சூரத்துல் பகரா
வசனங்கள் 284 - 286

2:284. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.

2:285. (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.

2:286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”


அதிரைநிருபர் பதிப்பகம்

காது கொடுத்து கேளுங்கள் - ப்ளீஸ் ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | October 30, 2013 | , , , ,

உலக மாந்தர் அனைவருக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட அருள்மறைத் திருக்குர்ஆனிலிருந்து இறை வசனங்களை எங்கு ஓதக் கேட்டாலும் அதன் பொருள் அறியாவிட்டாலும் அப்படியே நம் மனதை ஈர்க்கும், அதனையே முழுவதுமாக அர்த்தங்கள் பொதிந்த அவ்வசனங்களை கேட்கும்போது உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தை ஒவ்வொருவராலும் அப்பட்டமாக உணரப்படும்.

இந்த வாரம் ஸூரத்துல் கியாமா [மறுமை நாள்] என்ற அத்தியாயத்தின் வசனங்களை அழகிய உச்சரிப்புடன் ஓதுவதை காது கொடுத்து கேட்போம் இன்ஷா அல்லாஹ் !

ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்) 

வசனங்கள்: 40

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

75:1. கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

75:2. நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.

75:3. (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?

75:4. அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.

75:5. எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.

75:6. “கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.

75:7. ஆகவே, பார்வையும் மழுங்கி-

75:8. சந்திரனும் ஒளியும் மங்கி-

75:9. சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.

75:10. அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.

75:11. “இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!” (என்று கூறப்படும்).

75:12. அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.

75:13. அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.

75:14. எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான்.

75:15. அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!

75:16. (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர்.

75:17. நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.

75:18. எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.

75:19. பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.

75:20. எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.

75:21. ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.

75:22. அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.

75:23. தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.

75:24. ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.

75:25. இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.

75:26. அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,-

75:27. “மந்திரிப்பவன் யார்?” எனக் கேட்கப்படுகிறது.

75:28. ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.

75:29. இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.

75:30. உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.  

75:31. ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை; அவன் தொழவுமில்லை.

75:32. ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.

75:33. பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.

75:34. கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!

75:35. பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.

75:36. வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?

75:37. (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?

75:38. பின்னர் அவன் “அலக்” என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.

75:39. பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.

75:40. (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?


நன்மையை நாடியே பதிக்கப்பட்டதன் பலனை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்குவானாக!

அதிரைநிருபர் பதிப்பகம்

குர்ஆனை எளிதல் புரிந்துகொள்வது எப்படி? - அறிமுகம் ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | October 05, 2013 | , , , , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்..

அன்புச் சகோதர சகோதரிகளே:

நம் அனைவருக்கும் அல்-குர்ஆனைப் புரிந்து கொள்ள விருப்பம், ஆனால் காலச் சூழலில் ‘பணிச்சுமை’, கால அவகாசம் அல்லது குர்ஆனைப் படிப்பது மிகவும் கடினம் என்ற எண்ணம் மனதில் இருக்கிறதா ?

அப்படியானால், இதுவொரு அரிய சந்தர்ப்பம் நம் அனைவருக்கும் எளிமையாக மிகச்சரியாக அல்-குர்ஆனை நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பு.

அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, துபை, சவுதி அரேபியா மற்றும் தூரகிழக்கு நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான சகோதர, சகோதரிகள், மற்றும் சிறுவர்களுக்கு  இந்த தரம் வாய்ந்த பயிற்றுவிக்கும் பயிற்சி நேரடியாகவும், கணினி வாயிலாகவும் அளிக்கப்படுகிறது.  உலகம் முழுதும் ஏராளமானவர்கள் இதில் பயன் பெறுபவர்களாக இருக்கிறார்கள்.

ஒன்பதே மணி நேரத்தில் அல்-குர்ஆனின் 50% மேல் அறிந்து கொள்ளுதல்.

மொத்தம் 19 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட 9 மணி நேரம். அதில் நாம் (குர்ஆனில் உள்ள சுமார் 78,000 சொற்களில்) 40,000 முறை வரக்கூடிய 125 வார்த்தைகளைக் கற்று கொள்ள இருக்கிறோம் அது 50%க்கு நிகரான புரிதலை பெறுவதற்கு சமம்.

அப்படியானால், இந்தப் பயிற்சியை முடிக்கும் போது குர்ஆனின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள சொற்களில் பாதிக்கு மேல் பொருள் அறிவீர்கள் இன்ஷா அல்லாஹ்!

என்ன பயில இருக்கிறோம் !?

அரபி மொழியை புரிந்து கொள்வதற்கு எளிதான வழி தொழுகை என்பதைக் கண்டறிந்து.  ஏற்கனவே நம் அனைவருக்கும் அரபி உரைநடை தெரியும் என்பதால் தினமும் நாம் பயில்வதை தொழுகையில் பயிற்சி செய்யலாம்! 

பயிலக் கூடியது:
சூராஃபாத்திஹாமற்றும்குர்ஆனின்இறுதி 6 அத்தியாயங்கள்
தொழுகையின்வேறுபட்டநிலைகள்
அவசியமானஅடிப்படைஇலக்கணம்

பிரத்தியேகமானது:   ஒவ்வொரு பகுதியிலும் ஈமானை உயர்த்தக்கூடிய தனித்தன்மையுள்ள பாடங்கள்.

இந்த பயிற்சியின் நோக்கம் என்ன?

தினமும் ஓதக் கூடியவற்றை (தொழுகையிலும் மற்ற சமயத்திலும்) புரிந்து ஓதுதல் – இது தொழுகையில் நம்முடைய கவனத்தையும்  அல்லாஹ்வுடன் நமக்கு இருக்கும்  தொடர்பையும் வெகுவாக முன்னேற்றும்.

குர்ஆன் வைத்திருப்பதற்கு நல்ல பொருள் மட்டுமல்ல – அது, கண்டிப்பாக பெற வேண்டிய வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டி.

குர்ஆனைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம் என்ற எண்ணத்தை நிரந்தரமாகப் போக்குவது.  இப்போது ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள பாதி சொற்கள் புரியும்போது, 100% குர்ஆனைப் புரிய ஆரம்பிப்பது மிகவும் எளிது!

இந்த பயிற்சி வகுப்பின் பயன்கள் என்ன?

குர்ஆன் தொடர்புடைய எல்லா செயல்களுக்கும் முன்னுரிமை அளிப்பதற்கு தேவையான முக்கியமான சூத்திரம்!

மிக விரைவாக படிப்பதற்கு உத்திரவாதம் அளிக்க வல்ல சக்தி வாய்ந்த, ஆராய்ச்சிகளின் அடிப்படையில் உருவாக்கிய அணுகு முறை.

‘எவ்வாறு’என்ற பாடங்கள் உள்ளன.  தொடர்பு கொள்ளுங்கள், கற்பனை செய்யுங்கள்,

இலக்கணம் கற்றுக்கொள்ள புரட்சிகரகமான யுத்தி; முழுமையான உடல்ரீதியாக (இணைந்த) செயல்பாடு- TPI (Total Physical Interaction).

இயன்றவரை எல்லாவிதமான கல்விச்சாதனங்களும் அளிக்கப்படும்: ஒளிப்படங்கள், எம்பி 3 (mp3),பவர் பாயின்ட் கோப்புகள், பாடப் புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள், மின்னஞ்சல் நினைவூட்டல்கள், சிறப்பு வினா விடைகள் மற்றும் ஒரு இறுதித் தேர்வு.

UNDERSTANDING QURAN ACADEMY http://understandqurantamil.com/

இந்த அருமையான பயிற்சி வகுப்புகள் தமிழில் அமீரகம், சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளிலும் இந்தியாவில், ஆங்கிலம் உருது தமிழ் ஆகிய மொழிகளில் இந்தியாவில் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. டாக்டர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம் மற்றும் இன்னும் பல தன்னார்வச் சகோதரர்களின் பாரிய முயற்சியால் குர்ஆனை எளிதில் புரிந்து கொள்வது எப்படி என்ற வகுப்பு மிகச் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.

http://understandqurantamil.com/ தளம் பற்றி டாக்டர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம் அவர்கள் என்ன சொல்லியுள்ளார்கள் என்பதை பார்க்க இந்த சுட்டிக்கு செல்லவும் http://understandqurantamil.com/about-us மேலும் இது தொடர்பாக இந்த தளத்தின் பயிற்சியாளர் அவர்கள் தரும் தகவல்கள் இதோ காணொளியாக.


அமீரகத்தில் சகோதரர் சேக் ஜலாலுதீன் அவர்கள் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக இந்த பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறார்கள். இதில் நிறைய சகோதரர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இதில் கலந்து கொண்டு பயனடைந்து வரும் நமது அதிரை சகோதரர்களின் பயிற்சிகளின் காணொளிகள் இதோ உங்கள் பார்வைக்கும்.

சகோதரர் T. அப்துல் காதர்.



சகோதரர் M. தாஜுதீன்



jalaludeens1@gmail.com  என்ற மின்னஞ்சலை தொடர்பு கொண்டு மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு : வெள்ளிதோறும் காணொளிப் பயிற்சி பதிவுகள் பதிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்!

அதிரைநிருபர் பதிப்பகம்

படைத்தவனின் வேதம் - அல்குர்ஆனின் சிறப்பு ! - காணொளி 13

அதிரைநிருபர் பதிப்பகம் | July 21, 2013 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

யா அல்லாஹ் ! எங்களுக்கு அருளியிருக்கும் அனைத்து செல்வங்களுக்கும் சகலவசதிகளுக்கும் உனக்கு நன்றிக் கடன் உடையவர்களாக இருக்கிறோம். எங்கள் பார்வையாலும், ஒவ்வொரு செய்கைகளாலும் உன்னுடைய திருப்பொருத்தத்தை அடையக்கூடிய உண்மையான விசுவாசியாக எங்களை நிலைத்திருக்க வைத்திடுவாயக !

அல்லாஹ் அக்பர் !

யா அல்லாஹ் ! உன்னுடைய அருட்கொடையால் உலகில் ஏதோ ஒரு மூலையில் எங்களில் ஒரு சகோதரன் தனக்கு பார்வை திறன் இல்லை என்ற குறை தெரியாமல் அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடையே என்று உன் புகழையே போற்றும் அந்த சிறுவயது சகோதரன் முஆஃத் உடைய அனைத்து பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வாயாக !

மாஷா அல்லாஹ் ! அல்குர்ஆனை கண்பார்வை இல்லாத நிலையிலும் மனனம் செய்து திடமான மனதுடன் கொண்ட ஈமானில் அழுத்தமாக உரையாடும் இந்த சகோதரனின் காணொளி நம் அனைவருக்கும் ஒரு படிப்பினையே !

அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்ற நோக்கில் இதனை இங்கே பதிக்கப்படுகிறது,


அதிரைநிருபர் பதிப்பகம்

அருள்மறையாம் அல்-குர்-ஆன் அகிலத்தின் பொதுமறை... 13

அதிரைநிருபர் பதிப்பகம் | December 09, 2012 | , , , , ,



ஒப்பில்லா உயர்மறையாய் விளங்கும்அல் குர்ஆன்
.. உலகத்து மாந்தரினம் உய்க்கவேவந் தவேதம்
செப்பிவைத்தான் திருமறையில் சிறப்பாக அல்லாஹ்
.. செழுமைபெறும் நல்வழியாயல் சிறக்கவொரு  வேதம்
இப்புவிக்குப் போதுமென ஏற்றவர்கள் உரைப்பார்
.. இம்மகிழ்ச்சி உலகத்தில் வேறெங்கு முண்டோ?
அப்பழுக்கே இலாவாழ்க்கை அமைந்திடவே அறங்கள்
.. அளிக்கின்ற திருமறையும் உலகமாந்தர்ச்  சொத்து!

அறமுரைக்கும் திருமறையை அறபுமொழி  யிலிருந்(து)
.. அகிலமொழி யனைத்திலுமே மொழிபெயர்ப்புச் செய்து
சிறப்புறவே அதிலுள்ள கருத்துரைகள் உணர்ந்து
.. செய்கின்ற நம்வாழ்க்கை முறையொழுக்க நெறியாம்
திறன்வியந்து போற்றுகிறார் உலகப்பேர் அறிஞர்
.. திக்கெல்லாம் இறைபெருமை திகழவைக்கும் குர்ஆன்
மறந்துவிடா வண்ணம்சொல் லடுக்குகளாய்க் கோக்கும்
.. மனனத்தில் ஏற்றிவைக்கும் ஓசைநயம் ஈர்க்கும்

ஒன்றுபட்டச்  சமுதாயம் உருவாக வேண்டி
.. ஓரிறையை வழிபடவே ஓர்மறையைத் தந்தான்
நன்றுபலக் காட்டுகளாய் வரலாறும் பேசும்
.. நாமின்று  காணுகின்ற அறிவியலும் வீசும்
குன்றுகளை மேகத்தை ஒட்டகத்தைப் பார்த்துக்
.. கூரறிவுச் சீராக்கச் சொல்லுமிந்த வேதம்
இன்றுவரை இவ்வேதம்  அழியாமல் காக்கும்
.. இறைவனவன் வாக்குறுதி மெய்யாகக் காணீர்!

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com