Showing posts with label சிங்கப்பூர். Show all posts
Showing posts with label சிங்கப்பூர். Show all posts

குருவி...! 37

ZAKIR HUSSAIN | May 20, 2013 | , , , , ,

இது முழுக்க முழுக்க லைட் ரீடிங் ..அதனால் யாரும் ட்யூப்லைட் போட்டு படிக்கனும்னு சொல்லவில்லை.

விசயம் சொல்லிக் கொள்வது மாதிரி பெரிசா ஒன்னுமில்லை என்றால் தன்னடக்கம் கருதி சின்னதாக சொல்வது மாதிரி விமான பயணம் என்பதில் நிறைய டெக்னிக்கல் விசயம் ஏதாவது இருக்கும் என்று நினைத்து படிப்பவர்களுக்கு நான் துண்டை போட்டு தாண்டி சொல்கிறேன், இதில் அப்படி ஒன்னும் விசயமில்லை. [தெரிஞ்சாதானே எழுதறதற்கு!!!].

எனவே உருப்படியான விசயம்தான் படிப்பேன் என்று 'மாகானதிபதி" முன் சத்யப்பிரமானம் எடுத்தவர்கள் வீட்டில் வெங்காயம் வெட்டிக் கொடுப்பது , துவைத்து வைத்த பிள்ளைகளின் துணியை காயப்போடுவது போன்ற பொறுப்பான வேலைகளில் ஈடுபட்டு அப்படியும் நேரத்த ஒட்ட முடியவில்லை என்றால் இதைப்படிக்களாம்.


1968 என நினைக்கிறேன். முதன் முதலில் என் வாப்பா திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கியதை பார்க்க / அழைக்க போயிருந்தேன். அவ்வளவு சின்ன வயதில் அந்த விமான நிலையத்தில் ஒரு பட்டனை அழுத்தினால் ஐஸ் வாட்டர் வரும் [குவளை மிஸ்ஸிங்] அதை அழுத்தி குடித்ததில் ஜென்ம புண்ணியம் அடைந்ததாக நினைத்தேன்.

அப்போது வந்த விமானத்திற்கு "காத்தாடி' வெளியில் சுற்றியது. இப்போதைய டெக்னாலஜியை பார்க்கும்போது ரைட் பிரதர்ஸிடம் நமது இந்தியன் ஏர்லைன்ஸ் லீசுக்கு எடுத்த மாதிரிதான் தெரிந்தது. எங்கே இவனுக ரைட் பிரதர்ஸிடம் வம்புடியாக வாங்கிட்டு வந்துட்டானுகளா என நினைக்க தோன்றும்.

இந்திய முஸ்லீம்கள்  முன்பு பர்மா / சிலோன் என்று பிழைக்க போன காலத்திற்கு பிறகு பினாங்கு பிழைக்கும் தளமானது . [ஏதோ தமிழ்நாடு செய்தித்துறையின் பிளாக் & ஓயிட் ஃபிலிமில் தியேட்டரில் காண்பிக்கும் செய்தித் தொகுப்பு மாதிரி இல்லே!!].


பயணத்திற்கு  S.S ரஜூலா , M.V.சிதம்பரம் கப்பல்கள் வாழ்க்கையுடன் ஒன்றிப்போனது. [கப்பலில் நான் பயணம் செய்ததில்லை என்பதால் எனக்கு அதைப் பற்றி எழுத தெரியாது என்பதால் நீங்கள் தப்பித்தீர்கள்].

பிறகு துபாய் / சவூதிக்கு மக்கள் படையெடுக்க ஆரம்பித்தவுடன் வந்தது விமான பயணங்களின் பயன்பாடு. இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று எல்லோரையும் ஏற்றிக் கொண்டு சென்றதில் தான் காமெடி. 

சிலர் கட்டிச் சோறிலிருந்து மாங்கா ஊறுகாய் வரை வாங்கிப்போய் துபாயில் சாப்பிட்டதாக ஆட்களை அழைக்கப் போகும்போது கேள்விப் பட்டதுண்டு.

ஆரம்ப காலத்தில் நீங்கள் விமான டிக்கெட் எடுத்திருந்தால் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து ஒரு மினி வேன் அழைத்துச் செல்லுமாம். இப்போது 5 நிமிடம் அந்த விமான கம்பெனியின் மேனேஜிங் டைரக்டரே தாமதமாக போனாலும் "போடா பசுநெய்" என்று சொல்லிவிட்டு கேப்டன் புறப்பட்டு விடுவார். [ஏதாவது வித்யாசமா எழுதுங்க என்று அ.நி கட்டளை இல்லாவிட்டால் ' போடா வெண்ணே"  என்று சொல்லிவிட்டு கேப்டன்... என எழுதியிருக்களாம்.]

இதில் ப்ளேனில் கொண்டு போகும் பொருட்களும் அதை கையாளும்  ஆட்களும்தான் இன்னும் காமெடி. ஒருமுறை நான் காட்மாண்டுவில் விமானத்தில் ஏறி உட்கார்ந்ததும் அதில் வந்த சில நேப்பாளிகளையும் அவர்கள் வைத்திருந்த கூடை மாதிரி இருந்த பொருட்களை பார்த்ததும் எனக்கு தூக்கமே வரவில்லை. ஏதும் பாம்பு போட்டோ [படம்] எடுத்து ஆட ஆரம்பித்தால் என்ன செய்வதென்று ஒரே புலப்பம். தவிறவும் நாம் ஏதாவது பெண் பாம்பை வஞ்சித்திருக்கிறோமா என்று எனது நினைவுகளை ரிவர்சில் ஒட்டிப்பார்த்தேன். அப்புறம் பாட்டு பாடி நம்மை பழிவாங்குதெல்லாம் இருக்க கூடாதல்லவா?. இருந்தாலும் தனுஸ் எல்லாம் பாட்டுப் பாடுவதற்கு பாம்பு பாட்டு எவ்வளவோ தேவலாம்.

விமான பயணங்களில் விதிக்கப்படும் 20 கிலோ / 30 கிலோ லக்கேஜ் விதி தனது ரத்தத்தில் கொஞ்சம் கூட இந்திய ரத்தம் சம்பந்தம் இல்லாத ஏதோ ஒரு இனத்தை சார்ந்தவன் ஏற்படுத்தியது என நினைக்கிறேன். தமிழ்நாட்டு முஸ்லீம்கள் வெளிநாட்டுக்கு வரும்போது பேரன் / பேத்தியின்   கல்யாணத்துக்கூட உழைக்கும் சோசியல் கான்ட்ராக்டில் கையெழுத்திட்டு வந்து உழைத்து லக்கேஜ்கள் வாங்கி செல்ல வேண்டியிருக்கிறது என்பது எழுதப்படாத விதி. உழைக்கும் ஆட்கள் கதவுக்கு வைக்கும் சக்கை மாதிரி மொபைல்போன் வாங்குவதும் பள்ளிக்கூடம் தாண்டாத பிள்ளைகளுக்கும் , நேராக கையெழுத்துப்போட தெரியாத வீட்டுப்பெண்களுக்கு சம்சங் கேலக்ஸி-3 வாங்குவதும்... என்ன கொடுமை சார் இது??.

லக்கேஜ் கொண்டு போவதற்கென்று இப்போது எவ்வளவோ வசதியான சக்கரம் வைத்த கேபின் பேக் எல்லாம் இருந்தும் சமீபத்தில் மலேசியா வந்த சபீர் ஒரு சூட்கேசுடன் வந்து இறங்கியவுடன் என் மனதில் தோன்றிய வசனம் ' பாஸ்.. இந்த அணு ஆராய்ச்சி குறிப்பெ வச்சு எந்த இடத்திலே நாம் அணு குண்டு வெடிக்கப் போறோம்??' என்ற கேள்விதான்.  நல்ல  வேலை  ஏர்போர்ட்டிலிருந்து வரும் வழியில் எந்த புத்தர் கோயிலும் இல்லை..இருந்தால் ஆராய்ச்சிக்குறிப்பின் ஒரு பகுதி  அங்கு உள்ள மொசைக் கல்லுக்கு கீழ்தான் இருக்க வேண்டும் என்று காரை விட்டு இறங்கிவிட்டால் என்ன செய்வது. ??

சூட்கேஸ் பிதுங்க பிதுங்க லக்கேஜ் கட்டும் என் சொந்தக்காரர்களை பார்த்திருக்கிறேன். அது ஒரு தனித்திறமை.. எக்கோலாக் சூட்கேசில் 15 கிலோவுக்கு மேல் சர்வ சாதாரணமாக கட்டுவார்கள். இன்னும் சில பேர் பிளாஸ்டிக் கயிறை இழுத்துக்கட்டும் திறமை அலாதியானது. கட்டும்போது இடையில் உங்கள் விரல் மாட்டிக்கொண்டால் பிறகு ஏழுகடல் தாண்டி ஒரு தீவில் உள்ள கிளியிடம் போய் சொல்லி உயிர்பிச்சை கேட்டாலும் அந்த பிளாஸ்டிக் கயிற்றிலிருந்து உங்கள் விரலை எடுக்க முடியாது. அவ்வளவு ஸ்ட்ராங்காக கட்டுவார்கள் அந்த காலத்து நம் ஆட்கள்.

இந்தியாவில் தங்கம் கொண்டுவரலாம் என்ற சட்டம் வந்தவுடன் வரும் எல்லோரிடமும் "பாய் பிஸ்கட் கொண்டு வந்திருக்கீங்களா?' என்ற கஸ்டம்ஸ் ஆபிசரின் கேள்விக்கு வயதான ஒருவர் சொன்ன பதில் ' கிரீம் தடவியதா? இல்லை தடவாததா?' என்ற அப்ரானி பதிலிலேயே தெரிய வேண்டும் எப்படியாகப்பட்ட ஆட்கள எல்லாம் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்று.

நம் மக்கள் மலேசியா சிங்கப்பூருக்கு ஆரம்பத்தில் புறப்பட்டு செல்லும் காலங்களில் வயதை நிர்ணயிக்க கப்பலுக்குள் நுழையுமுன் கன்னத்தை தடவிப்பார்த்து [சவரம் செய்திருந்தால் “பெரியவன்”] அனுப்புவார்களாம். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் 'மிகப்பெரிய' கண்டுபிடிப்பு இது. கால ஓட்டத்தில் என்ன என்ன தடைகள் இருந்தாலும் மனித மூளை தப்பிக்க ஈசியாக ஒரு  தடம் போட்டுவிடும் என்பது சமயங்களில் எந்த அரசுக்கும் தெரிவதில்லை.

இப்போது வந்திருக்கும் பட்ஜட் ஏர்லைன்ஸ் அதிகம் விமான      பயணங்களை ஊக்குவித்தாலும் பயணிக்கும் போது பெரும் அவஸ்தைகளே மிஞ்சுகிறது என்று பட்டிமன்ற தீர்ப்பு மாதிரி சொல்லி விடலாம்.

புதுக்கல்லூரியில் படிக்கும்போது நாங்கள் வாங்கிக் கொடுத்த டிக்கட் OK  களும் தாதர் எக்ஸ்பிரஸ் டிக்கட்களின் மொத்த கூட்டுத்தொகையும் கின்னஸ் புக் கில் இடம் பெரும் அளவுக்கு அதிகமானது. [வெளிநாடு போய் இறங்கி ஒருவர் கூட 'கடுதாசி" போடாதது வேறு கதை]. பாஸ்போர்ட்டையும் டிக்கட்டையும் ரொம்பவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சொல்லி நம்மிடம் ரயில்வே ஸ்டேசனில் வந்து சொல்வார்கள். கடைசியில் ட்ரைன் நகறும் போது சத்தமாக ‘மாப்லெ மறந்துடாம சொன்ன தேதிக்கு டிக்கட் OK வாங்கிட்டு தாக்கல் சொல்லிடு என்று மறவக்காடு/தம்பிக்கோட்டை ஸ்டேசன் மாஸ்டர் காதில் விழும் அளவுக்கு கத்துவார்கள். ஒருமுறை  நான் கொஞ்சம் "ம்ம் ம்ம் சரி" என்று அவ்வளவு வெயிட் கொடுத்து பேசாததால் என் மச்சான் என்னைப்பார்த்து சொன்னது ' டேய் பாஸ்போர்ட்டை / டிக்கட்டை காணாக்கிடாதே ..அப்படி காணாக்கிட்டா வரும்போது  திருவாரூர் / திருத்துறைப்பூண்டி எங்காவது  எறங்கி ஏதாவது மளிகைக்கடையிலே போய் எனக்கு வேலை கேட்டு வாங்கிட்டு வா.. நான் நல்லா சுருல் போடுவேன்.”

நாம் கோபால் பல்பொடி மாதிரி  இலங்கை , மலேசியா, சிங்கப்பூர் என்று போன காலம் போய் கேள்விப்படாத நாட்டிற்கெல்லாம் போய் வருகிறோம். 

இன்னும் நமது மக்கள் தனது வேலைக்காக எங்கெல்லாம் போய் தனது வருமானத்திற்காக வாழ்க்கையில் பல வருடங்களை தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது.

ஒரு வாரத்துக்குள் மலேசியா சிங்கப்பூர் வந்து   வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி இந்தியாவில் விற்கும் வியாபாரிகளை "குருவி"என்று சொல்வார்கள். நாம் எவ்வளவுதான் அதிக நாட்கள் தங்கினாலும் நாமும் ஒரு குருவிதான். கொஞ்சம்    “நாள் பட்ட குருவி”.

[அப்பாடா 'இந்தாளு தலைப்பு க்கு சம்பந்தம் இல்லாமெ எழுதறான்னு யாரும் சொல்லிடக்கூடாதல்லவா? ].

இதைப்படித்த பிறகு 'உண்மையிலேயே இதில் ஒன்னுமில்லேதான்" என்று சொல்பவர்கள்தான் உண்மையான விமர்சகர்கள்.

ZAKIR HUSSAIN

சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை... - 2 36

அதிரைநிருபர் பதிப்பகம் | October 31, 2012 | , , ,

தொடர் - 2

மகள் சொன்னதை கேட்டு பதறிய எனக்கு ஞாபகத்திற்கு வந்த இந்த குர்ஆன் வசனத்தை என் மகள்களுக்கும், மனைவிக்கும் சொன்னேன்.

بسم الله الرحمن الرحيم

   أَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ مُسَخَّرَاتٍ فِي جَوِّ السَّمَاءِ مَا يُمْسِكُهُنَّ إِلَّا اللَّهُ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ

"வான(மண்டல)த்தின் (காற்று) வெளியில் (இறை கட்டளைக்குக்) கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை; நிச்சயமாக இதில் ஈமான் கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன." - அல்குர்ஆன் - 16:79

ஆகையால், இந்த அலுமினியப் பறவை விழுந்து விடாமல் காப்பவனும் அல்லாஹ்வே என்று ஆறுதல் கூறினேன்.

விமானம் சென்று கொண்டே இருந்தது, விமானத்தின் திரையில் சான்பிரான்சிஸ்கோ புறப்பட்டு, கனடா எல்லை வரை சென்று - ஜப்பானின் டோக்கியோ மேலே (பசிபிக் மேலே) பறந்தது விமானம். நீண்ட பயணத்தின் முதல் கட்டமாக ஹாங்காங் வந்து சேர்ந்ததை காட்டிக் கொண்டே வந்தது (சுமார் 14 மணிநேரப் பயணம்). இடையிடையே நேரத்தைக் கணித்து இருக்கையிலேயே தொழுது கொண்டோம். பிறகு 1 1/2 மணிநேர இடைவெளியில் மீண்டும் பயணம் சிங்கப்பூர் நோக்கி. சிங்கப்பூர் வந்தடைந்தபோது வெள்ளிக்கிழமை காலை 11:20 மணி.


சிங்கப்பூர் நெருங்க, நெருங்க பச்சைப் பசேல் என்ற பசுமையான போர்வைக்குள் அழகான குட்டிக் குழந்தை தூங்குவது போல் கண்களுக்கு தெரிந்தது இந்த சிங்காரச் சிங்கப்பூர்.

அன்று ஜும்மா தினம் இன்ஷா அல்லாஹ் ஜும்ஆ தொழ வேண்டும் என்கிற எண்ணம் அலைமோதியது, அடுத்த சென்னை ஃபிளைட் இரவு 08:30 மணிக்குத்தான். எனவே, டெர்மினல் மாறினோம் வெளியில் செல்ல இமிக்ரேஷன் முடிக்க வேண்டும். அமெரிக்க பாஸ்போர்ட்களுக்கு சிங்கப்பூர் விசா எடுக்க வேண்டிய தேவையில்லை. இமிகிரேஷனில்! நான் ஒரு நாள் மட்டும் விசா போதும் என்றேன், மூன்று மாதங்களுக்கு தந்தார்கள்.

அந்த பிரமாண்டமான சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் ஈத் பெருநாளைக் குறிக்கும் வண்ணம் அழகாக ஜோடித்திருந்தார்கள்.


Money exchange சென்று சிறிது சிங்கப்பூர் டாலர் மாற்றிக் கொண்டு வெளியில் வந்தோம். லேசான தூறல் ஆரம்பித்திருந்தது, ஏர்போர்ட் வாசலில் ரெடியாக இருந்த டாக்ஸியில் ஏறி சிறிது முஸ்தபா செண்டர் வந்தடைந்தோம். சிங்கப்பூர் வெள்ளி 21.40 வந்தது அதைக் கொடுத்து விட்டு அருகில் பள்ளிவாசல் இருக்கிறதா ? என்று விசாரித்தோம்.

''அங்குளியா மஸ்ஜித்" இருக்கிறது என்று சொன்னார்கள். அங்கு சென்றபோது தமிழில் பயான் நடந்து கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் தமிழ் பேசும் முஸ்லிம் பெருமக்கள் நிம்மதியாக 'ஜும்ஆ" தொழுதுவிட்டு, அருகில் உள்ள ஹலால் ரெஸ்டரண்டில் பகல் உணவை முடித்துக் கொண்டு, அங்கேயிருக்கும் கடைகளில் சில பொருட்களை வாங்கினோம். சிங்கப்பூர் விலைவாசி பற்றிய என் கருத்து 'பல பொருட்கள் இந்தியா, அமெரிக்காவை விடவும் அதிகமாகவே இருந்தது. அமெரிக்காவிலிருந்தே தேவையான பொருட்களை வாங்கி வந்து விட்டதால் இங்கு வேறு அதிகமாக வாங்காமல் திரும்பிவிட்டோம்.

இனி ஏர்போர்ட்டுக்கு போகலாம் என வெளியிலே வந்தபோதுதான் கண்ணில் பட்ட அந்த காட்சி அதிர்ச்சியாக இருந்தது.
தொடரும்...
A.R.அப்துல் லத்தீஃப்

சிங்கப்பூரில் மூன்றாம் கண் - பேசும்படம் ! 27

அதிரைநிருபர் பதிப்பகம் | July 11, 2012 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் 

அதிரைநிருபரில் வலம் வரும் பேசும் படத்திற்காக அதிரை மற்றும் அதனைச் சுற்றிய ஊர்களையும் கிளிக்கிக் கொண்டிருந்த மூன்றாம் கண்ணுக்கு தேடலின் பார்வை விரிந்தது (பார்வையைகூட யோசிக்க வைத்தது அதிரைநிருபரின் ஆஸ்தான கவி சபீர் அவர்களின் கவிதா(க்)கம்). மூன்றாம் கண்ணின் தேடலோ விமானம் ஏறி சிங்கப்பூருக்கே சென்றது (அட நம்ம பே.ம.த. ஊராச்சே!). இரவு பத்து மணிக்கு நண்பர் அவரின் குடும்பத்தோடு நம்மை வரவேற்க ஏற்போர்ட்டுக்கு வந்திருந்தார்.

சுத்தம் சோறு போடும் என்பார்கள் இங்கு சிங்கப்பூரில் சோறு போடும் இடமும் சுத்தமாத்தான் இருக்கு. மார்க்கெட்டில் மாட்டுக்கறி வியாபாரம் கொடிக்கட்டி பறந்தது அங்கும் சுத்தம்தான் (அங்கு மாடு ரயிலில் அடிபட சான்ஷே இல்லைங்க).

சிங்கப்பூரில் உழைத்தால்தான் சாப்பிடமுடியும் என்ற நிலையை உருவாக்கி வைத்துள்ளனர். வயதானவர்கள் கூட ஹோட்டல்களில் படு சுறுசுறுப்பாக வேலை செய்கின்றார்கள் இலவசங்களை கொடுத்து அங்கு மக்களை சோம்பேறியாக்க வில்லை.

என்னை அதிகமதிகம் ஆச்சர்யப்படுத்தியது அங்கு உள்ள மெட்ரோ ரயிலோ, சுத்தமோ, உயர்ந்து நிற்கும் கட்டிடமோ அல்ல நம் நாட்டு மக்கள் அங்கு உள்ள சட்ட திட்டங்களை மதித்து நடப்பதுதான். அதே ஆட்கள் நம் நாட்டின் மண்ணில் கால் பதித்து விட்டால் நம் நாட்டு சட்டத்தை மிதித்து(தான்) நடக்கிறார்களே என்ற ஆதங்கமும், ஏக்கமும் விஞ்சியதை தவிர்க்க முடியவில்லை. 

சிங்கப்பூரில் நம் மூன்றாம் கண் கிளிக்கியதை உங்களின் கண்களுக்கு விருந்தாக பகிர்ந்துள்ளேன்…


கோடு போட்ட ரோடு போடுவேன்னு சொல்வாங்களே ஆனா இங்கே உல்டாவா ரோடு போட்டு கோடு போட்டு இருக்காங்களே !


எங்கே ஒருத்தரையும் விளையாட காணோம் இதைவிட நல்ல இடமா பார்த்து விளையாட போய்டாங்களா !


கலர்புல் கலர்புல்ன்னு சொல்வாங்களே அது இதுதானோ !


அதிரை பட்டினத்தில் இதேபோல் ஒரு மைதானம் அமைந்தால் எப்படி இருக்கும் !?


வலைத்து வலைத்து  கட்டுறதுன்னு சொல்வாங்களே அது இதுதானோ 


டேபிள் செட்டபெல்லாம் நல்லாத்தான்  இருக்கு ஆனா முக்கியமான ஐட்டம்    சாப்பாட்டை காணோம் (அதான் கூட்டத்தையும் காணோமோ ) 


கொடல கையில புடிச்சிக்கிட்டு போனேன்னு சொல்வாங்களே அது இதுலே போறதையா?


அங்கே எல்லாம் ரோட்டுலே சோறு போட்டு தின்னலாம் என்று விடுவாங்களே ஒரு புருடா அது இந்த ரோடு தானோ !


சிங்கப்பூரில் என்னதான் பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டினாலும் பழசை மறக்காமல் சுற்றுலா தளங்களில் மரங்களில் கூடாரம் அமைத்து அழகு பார்க்கின்றனர்.


இதை தொங்கு பாலம்முன்னு சொல்றதா அல்லது தொட்டில் பாலம்ன்னு சொல்றதா 


புது மாப்பிள்ளையைதான் வசியம் பண்ணிட்டாங்கன்னு சொல்வாங்க ஆனா இந்த பறவையை எப்படி வசியம் பன்னுனாங்கன்னு தெரியலே 

Sஹமீது