அதுதான் 'தயம்மும் கல்' என்று ஒரு சிறு பாறை போன்ற கல், வருபவர்கள் அதில் தயம்மும் செய்கிறார்கள். தூய மண்ணில் தயம்மும் செய்ய நாம் இறைத் தூதர் அவர்களால் ஏவப்பட்டுள்ளோம். நிர்பந்த அடிப்படையில் சுவர், தாரை போன்றவற்றில் தயம்மும் செய்யலாம் என மார்க்க அறிஞர்கள் rulings எடுக்கிறார்கள்.
ஆனால், இதற்காக வேண்டி ஒரு கல்லையே பள்ளி வாசலில் அமைத்தால், அல்லது வீடுகளில் வைத்துக் கொண்டால், அது சிலை வணக்கத்திற்கு மறைமுகமாக, தூண்டுகோலாக அமையாதா? சுப்ஹானல்லாஹ்! இதைப் பற்றி லண்டனில் வசிக்கும் நமது ஊர்ச் சகோதரர்கள், அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகளைத் தொடர்பு கொண்டு ஹீத்ரோ விமான நிலைய அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி, அதை அகற்ற ஆவண செய்யும்படி வேண்டுகிறேன்.
இதே போன்று, வேறு எங்கு இருந்தாலும், அவைகளை அப்புறப்படுத்த நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சில ஆன்லைன் சாப்பிங் இணைய தளங்கள் (முஸ்லிம்களால் நடத்தப்டுபவைகள்) தயம்மும் கல், தயம்மும் மண் என்று விற்கின்றன. அவைகளையும் அவ்வாறு விற்கக் கூடாது என நாம் அறிவுறுத்த வேண்டும்.
லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் டல்லாஸ் நோக்கிப் புறப்பட மீண்டும் 10:30 மணிநேரப் பயணத்தால் உடல் அயர்ந்து போனேன்.
டல்லாஸ் (Dallas) ஏர்போர்ட் டெக்சாஸ் இமிகிரேஷன் முடிந்து, கஸ்டம்ஸ் வந்தேன், எல்லாவற்றையும் பிரித்துப் போட்டு விட்டார்கள், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொண்டு வந்த மசாலா வகைகள், அல்வா, பனியாரம், ஊறுகாய் வகைகள் சிதறிக் கிடக்க சிலவற்றை கழிவு கூடைக்கும் (Garbage) போக, ஊரிலிருந்து கூடுதல் லக்கேஜுக்கு என்று ருபாய் 8,000 கட்டி எடுத்து வந்ததை (152/- டாலர்) இங்கு வந்ததும் தூக்கி எறிகிறானே என்ற ஆதங்கம் ஒருபக்கம், மறுபுறம் நான் வேறு டெர்மினல் மாறி டிரெயின் மூலம் சான்பிரான்சிஸ்கோ செல்லும் விமானத்தை பிடிக்க வேண்டும்.
என்ன செய்வது !? கஸ்டம்ஸ் அதிகாரி சொன்னான் "உனக்கு உன் கவலை எனக்கு என் டூட்டி" என்று, அதுவும் சரிதானே ! இதற்கு கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது.
உண்மையான வலிமையான இமிகிரேஷன், கஸ்டம்ஸ் ஆபிசர்கள் என்று நம்மை விசாரிக்க இருக்கும் மலக்குகளை விடவா ? இது முக்கியம் ! அந்த விசாரிப்புகளில்தான் உண்மையான பாஸ் / ஃபெயில் இருக்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த மலக்குகளின் விசாரிப்புக்களில் பாஸாகி ஏக இறைவனின் மன்னிப்புக்கும், அருளுக்கும் உரித்தானவர்களாக நம்மை ஆக்குவானாக ஆமீன் !
அடுத்த டெர்மினல் சென்றடைந்ததும், பிளைட் புறப்பட 1/2 மணி நேரமே இருந்தது. ஏறி அமர்ந்தவுடன், ஆசுவாசப்படுத்திக் கொள்ள சான்பிரான்சிஸ்கோ நோக்கிய பயணம் துவங்கியது.
சுமார் 3 1/2 மணி நேரப் பயணத்தில் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையம் அடைந்து வெளியே வந்தேன். அல்லாஹ்வின் உதவியால், அழைத்துச் செல்ல மச்சானும், மகனும் வந்திருந்தார்கள்.
மீண்டும் அமெரிக்க மண்ணை மிதித்தவுடன் என் மகள் ஒருவாரமாக புலம்பிக் கொண்டிருந்தது இதயத்தில் அழுத்த சோகம் என்னை ஆட்கொண்டது, "வாப்பா உங்களை தேடுவேன்" இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.
நிறைவுற்றது.
A.R.அப்துல் லத்தீஃப்












