Showing posts with label ரமழான் சிந்தனை. Show all posts
Showing posts with label ரமழான் சிந்தனை. Show all posts

நபிகளாரின் தூய வாழ்வின் இறுதி நாட்கள் - ரமளான் சிந்தனை! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 29, 2015 | , , ,

அன்பானவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும், இப்புனித ரமழான் மாதத்தில், ரமளான் சிந்தனை என்ற தலைப்பில் நல்ல சிந்தனை தூண்டும் மார்க்க செற்பொழிகளை மற்ற இஸ்லாமிய தளங்களிலிருந்து இங்கு பகிர்ந்துக் நாமும் மற்றவர்களும் பயனடைய வேண்டும் என்பதற்காக பதியப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நம் உயிரினும் மேலான நபி முகம்மது (ஸல்) அவர்களின் இறுதி நாட்களைப் பற்றி மிக அற்புதமான குரல் வலத்தில், அனைத்து தரப்பட்ட மக்களின் மனதில் எளிதில் புரியும்படியான ஒரு வரலாற்று ஆடியோவை “ நபிகளாரின் தூய வாழ்வின் இறுதி நாட்கள்” எனற தலைப்பில் கீழே வெளியிடுகிறோம். கேட்டு பயனடையுங்கள், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

இந்த ஆடியோவை ஒவ்வொரு முஸ்லீமும் ஒவ்வொரு நாளும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நம் மனதை உருக்கும் நிகழ்வு.

மேலே உள்ள ஆடியோ உலகளாவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற “இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு” என்ற நூலின் ஆடியோ தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

ஆசிரியர் : இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான்
தமிழில் : மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி

Books and MP3 CDs are Available at : Darul Huda, New No. 211(102), First Floor, Linghi Chetty St., Chennai - 600 001.

முழு வரலாறு ஆடியோ தொகுப்பை (real media files) தரவிரக்கம் செய்ய இங்கு சென்று http://www.islamkalvi.com/history/raheeq_audio/index.htm  தரவிரக்கம் செய்துக்கொள்ளலாம்.

இந்த அற்புதமான வரலாற்று தொகுப்பை இவ்வுலகிற்கு தந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.
நல்ல விசயங்கள் எங்கேல்லாம் இருக்கிறதோ அவைகளை மட்டும் நாம் தேர்ந்தேடுத்து, கேட்டு, பிறருக்கும் எடுத்துச் சொல்லி, நாமும் பயனடைந்து மற்றவர்களையும் பயனடைய செய்யலாமே.

அதிரைநிருபர் பதிப்பகம்

ரமளானும் அதன் சிறப்புகளும் 1

அதிரைநிருபர் பதிப்பகம் | June 21, 2015 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)  ஒவ்வொரு வருடமும் நம்மை வந்து அடையும் புனித மாதத்தை வரவேற்பதில் மிக அதிக அளவில் நாம்  மகிழ்ச்சி  அடைகிறோம். இன்னும் சில தினங்களில் நம்மை வந்து அடைய இருக்கும் ரமளானைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 2:183)

நோன்பு சென்று போன சமூகத்தாருக்கும் கடமையாகி ஆரம்ப காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பை கடமையாக்கி இருக்கிறேன் என்று வல்ல அல்லாஹ் கூறுகிறான்.

ரமளான் பிறை:

'ரமளான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள். (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்.' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (புகாரி : 1906)

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்:

'ரமளான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)நூல்: புகாரி: 1898).

'ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல் புகாரி :1899).

நோன்பும் உள்ளமும்:

நோன்பு பசியை உணரச்செய்கிறது. நல்ல பழக்கங்களை கற்றுத் தருகிறது. பிறருக்கு உதவும் எண்ணத்தை தாராளமாக வழங்குகிறது. மற்ற நேரங்களில் உதவும் எண்ணம் இல்லாதவர்கள் கூட நோன்பு காலங்களில் பிறருக்கு உதவி செய்யும் நிலைகளை காணமுடிகிறது.

எந்த ஒரு காரியத்தையும் தொடர்ந்து செய்தால் பழக்கமாகிவிடும். மற்ற நேரங்களில் மனிதர்கள் பல தவறுகளில் இருந்தாலும் நோன்புக் காலங்களில் எல்லாவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்கள். இப்படியே தொடர்ந்து கொண்டு இருப்பதால் (வருடா வருடம் நோன்பு வைப்பதால்) இறையச்சத்துடன் நோன்பு வைத்தவர்களின் கஞ்சத்தனம், தீய செயல்கள் இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை விட்டு அகன்று உள்ளத்தை தூய்மைபடுத்தி நல்லபழக்கத்தை கற்றுத்ததருகிறது புனித ரமளான் நோன்பு.

ரமளானின் சிறப்புகள்:

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் : 2:185)

'சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஸஹ்ல் (ரலி) நூல் : புகாரி : 1896)

'நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும் பானத்தையும் இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!' (என்று அல்லாஹ் கூறினான்)' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி : 1894)

'நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி : 1904)

நோன்பு திறப்பதும் ஸஹர் உணவும்:

சிலபேர் 2மணிக்கு ஸஹர் செய்து விட்டு தூங்கி விடுகிறார்கள். ஸஹர் நேரத்தில் ஸஹர் உணவை சாப்பிடுவதுதான் சிறந்தது.

நீங்கள் ஸஹர் செய்யுங்கள். ஏன் எனில் ஸஹரில் பரக்கத் (அபிவிருத்தி) உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) (புகாரி,முஸ்லிம்)

எனது சமுதாயத்தினர் நோன்பு திறப்பதை அவசரப்படுத்தி ஸஹர் செய்வதைப் பிற்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர். (புகாரி,முஸ்லிம்)

குர்ஆன் ஓதுதல்:

திருக்குர்ஆனை ஐந்து வேளை தொழுத பிறகும் ஓதுங்கள். நேரம் கிடைப்பவர்கள் மற்ற நேரங்களிலும் ஓதுங்கள். நன்மையை வாரி வழங்கும் இந்த மாதத்தில்தான் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது.

இந்த மாதத்தில் குர்ஆனை முழுவதும் ஓதி முடித்து விட வேண்டும் என்பது சிலரின் நம்பிக்கை. ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. (நிதானமாக குர்ஆன் முழுவதையும் ஓதி முடிக்கலாம்). அவசரப்படாமல் குர்ஆனை தெளிவாக நிறுத்தி நிதானமாக ஓதுவது மிகச்சிறந்த நன்மையை பெற்றுத்தரும்.

இரவுத்தொழுகை:

ரமளானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஸலமா (ரலி) (புகாரி : 1147)

லைலத்துல் கத்ர்:

'மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.' (அல்குர்ஆன் 97:1-5)

'நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ர் எனும் புனித இரவில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) (புகாரி : 35)

'லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) (புகாரி : 1901)

'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) (புகாரி : 2017)

நோன்பில் பொய் பேசுவது:

நோன்பு வைத்துக்கொண்டு தம் நடவடிக்கையை மாற்றிக்கொள்ளாதவர்களுக்கு இறைத்தூதரின் எச்சரிக்கை:

'பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!' என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி : 1903)

பாவ மன்னிப்பு:

'ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின் முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) , நூல்: புகாரி : 2008)

'ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின்இ முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி),நூல்: புகாரி : 2014)

உம்ரா செய்தால் ஹஜ் நன்மை:

ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.

'ரமளான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி : 1782)

கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்:

மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். 'ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்' என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 2119)

முன்னேற்பாடுகள்:

ரமளான் மாதத்தில் அதிகமதிகம் அமல்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்துடன்: ஷாபான் மாதத்திலேயே நம்முடைய எல்லா தயாரிப்புகளையும் செய்து கொள்ள வேண்டும். நாம் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் எதையும் தாமதப்படுத்தாமல் செய்து விட வேண்டும். சகோதரிகள் ரமளான் மாதத்திற்கு தேவையான மளிகைகடை பொருட்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டு மசாலா, மாவுப்பொருட்களை தயார் செய்து வைத்துக்கொள்ளவேண்டும்.

வீட்டில் உள்ள அனைவருக்கும் பெருநாளைக்கு வேண்டிய துணிகளை இந்த மாதத்திலேயே எடுத்து வைத்துக்கொள்ளலாம். ரமளானில் வீண் அலைச்சல் இருக்காது.

சகோதரர்கள் நோன்பிற்கு வீட்டிற்கும், உறவினர்களுக்கும் பணம் அனுப்புவீர்கள் பணத்தை இந்த மாதத்திலேயே அனுப்பி நோன்புக்கு முன்பாகவே அனைவருக்கும் கிடைக்கும்படிச் செய்வது நல்லது. ஏனென்றால் நிறைய இடங்களில் பணம் எப்பொழுது வரும் என்ற சிரமத்தில் காத்திருப்பதை காணமுடிகிறது.

சகோதரிகள் கையில் பணம் கிடைத்தவுடன். நோன்பு நடுவில்தான் உறவினர்களுக்கு கொடுப்பேன் என்று பிடிவாதத்துடன் இருக்கிறார்கள். நோன்பு ஆரம்பிக்கும் முன்பே உறவினர்களுக்கு கொடுத்து விட்டால் அவர்கள் எதிர்பார்ப்பின்றி பட்ஜெட் போட்டு தேவையானதை வாங்கி வைத்துக்கொள்வார்கள்.

நோன்பு காலங்களில் செய்யவேண்டியவை:

ஸஹரில் உணவை தயாரிக்கிறேன் என்று சிரமம் எடுக்காமல் தூங்குவதற்கு முன்பாகவே உணவை தயாரித்து வைத்துக் கொண்டு ஸஹரில் சூடு காட்டி சாப்பிடலாம்.

தினமும் மாவு பொருட்களை (சப்பாத்தி, புரோட்டா) தயார் செய்யாமல் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை தயார் செய்து பிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்.

நோன்புக் கஞ்சியை தினமும் தயாரிக்க வேண்டியதில்லை. இரண்டு நாளைக்கு தேவையானதை தயார் செய்து கொள்ளலாம்.

கடற்பாசி முக்கிய உணவாக இருக்கிறது. இதையும் இரண்டு நாளைக்குத் தேவையானதை தயார் செய்து கொள்ளலாம்.

சகோதரிகள் பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு ஒரு தூக்கம் போட்டு விட்டு நோன்பு திறப்பதற்கு வேண்டிய அனைத்தையும் லுஹருக்கு முன்பாகவே தயார் செய்து வைத்து விட்டால் நோன்பு திறக்கும் நேரத்தில் பிரஷர் அதிகமாகி அவசர அவசரமாக சமைத்து படபடப்புடன் நோன்பு திறப்பதிலிருந்து பாதுகாப்பு பெறலாம். செய்து வைத்த உணவுகளை நோன்பு திறப்பதற்கு முன்பாக சூடு காட்டிக்கொள்ளலாம்.

நோன்பு வைத்துக்கொண்டு தொழாமல் பிள்ளைகள், பெரியவர்கள் சில இடங்களில் இருப்பதை காணமுடிகிறது. சகோதர, சகோதரிகள் கவனத்தில் கொண்டு அவர்களையும் தொழுபவர்களாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.

ரமளான் மாதத்தில் சொர்க்கத்திற்கு செல்வதற்குரிய வழிவகைகள் நிறைய இருக்கின்றன. ஆகவே நாம் வருகின்ற ரமளான் மாதத்தின் நோன்பை முழுவதுமாக வைத்து வல்ல அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக்கொள்வதற்கான காரியங்களில் ஈடுபடுவோம்.

நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக இந்த ரமளான் மாதத்தை மாற்றி நோன்பை வைப்பதற்கும், அமல்களை அதிகம் செய்வதற்கும், நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரியட்டும்!.

ரமலானின் சிறப்பைப்பற்றி விரிவாக தொடராக வரவேண்டியது. நேரமின்மையால் விரிவாக எழுதமுடியவில்லை.

S. அலாவுதீன்

நோன்புக்கு பிறகு 5

அதிரைநிருபர் | August 09, 2013 | , , ,

நோன்புக்கு பிறகு சிலருக்கு செறிமானக்கோளாறுகள் தலைதூக்கக் கூடும்.இப்படி செறிமானப் பிரச்சினை உள்ளவர்கள் ஏற்கனவே [நோன்பு இல்லாமலே] செறிமானக் கோளாறு இருந்திருக்கக் கூடும். நோன்பு முழுக்க ஹதீஸ், இபாதத் என இருந்து விட்டு நபி ரசூல் [ஸல்] சொன்ன ஒரு சின்ன விசயத்தை கவனம் செலுத்தாமல் அதை தூக்கி பரன் மீது போட்டு விட்டு 30 நாளும் விட்டுப்போன சாப்பாட்டை எல்லாம் கிரடி கார்டு கம்பெனி மாதிரி கடைசி பைசா வரை வசூலிப்பது மாதிரி சாப்பாட்டை எல்லாவற்றையும் ஒரெ நாளில் அல்லது 2, 3 நாளில் சாப்பிட நினைக்கும் "ஜின்" தனம் தான் இதற்கெல்லாம் காரணம் சரி நபி [ஸல்] என்ன சொன்னார்கள் [உணவு விசயத்தில்] என்பது தெரியும் stomach பகுதியில் 1 பகுதி உணவு, 1 பகுதி தண்ணீர், 1 பகுதி காலியாக இருக்க வேண்டும் [மொத்தமெ 3 பிரிவுதான்காரணம் உணவு உள்ளே போனவுடன் இயற்கையாக அமிலம் [HCL/ Muriatic acid] உணவுடன் கலக்க ஆரம்பித்துவிடும்இந்த நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் வரக்காரணம் இந்த படத்தை பார்த்தால் தெரியும் sphincter பகுதி இயற்கையாக மூட விடாமல் நாம் செய்யும் தவறுதான். 

நீங்கள் கொஞ்சம் பெரிய அளவில் ஒரு ஆட்டிறைச்சித் துண்டை உள்ளே அனுப்பிவிட்டால் அதை தள்ளுவதற்கு உங்கள் குடல் சிரமப்படலாம், உடனே அது வாயுவை அனுப்பி உணவை அடுத்த ஸ்டேஜுக்கு கொண்டு செல்லும்அதற்கு குடலில் வெற்றிடம் தேவை. சமயத்தில் ஆட்டிறைச்சிதானே என்று நீங்கள் சாப்பிட்டு விட்டாலும் அந்த ஆட்டின் லைஃப் ஸ்டைல் உங்களுக்கு தெரியாதுஅது ஏற்கனவெ “Gym” க்கு போய் மிஸ்டர் ஆடு 2013 என பட்டம் வாங்கியிருந்து அதன் இறைச்சி பூப்போல இருக்கும் என நீங்கள் நினைத்தால் அதற்கு பெயர் தான் 'அறியாமை' சரி இப்படியெல்லாம் கவனமாக இருந்தால் 200 வருசம் வாழ முடியுமா? என 'க்ரோர்பதி' கேள்வியெல்லாம் நீங்கள் கேட்கலாம்பதில், முடியாதுதான் இருந்தாலும் வாழும் காலங்களில் நிம்மதியாக வாழ இவை உதவும்.

சிலர் வாழும் நாடுகளுக்கு தகுந்த மாதிரி தனது உணவு பழக்கத்தை வைத்துக்கொள்வதில்லை. Carbohydrate அதிகம் சாப்பிட்டாலும் அது செரிப்பதற்கு பிரச்சினை இல்லாத ஊர்கள் சவூதி, துபாய் போன்ற வெயில் கடுமையான ஊர்கள். அந்த ஊர்களில் வெழுத்துகட்டும் பிரியாணியை குளிர் அதிகம் உள்ள நாடுகளிலும் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க சொன்னமாதிரி சாப்பிட்டால் see in hospital very soon. அதற்காக சவுதி, துபாய் போன்ற வெயில் நாடுகளுக்கு இப்படி வெளுத்துக்கட்ட N.O.C கிடைத்து விட்டது என நினைத்து விட வேண்டாம்.

சில சமயங்களில் நான் ஊர் போயிருக்கும் போது சிலர் என்னிடம் தனது மெடிக்கல் ரிப்போர்ட்டை காண்பிப்பார்கள் “டாக்டர் ஒன்னுமில்லேன்னு சொல்லிட்டான்” என சொல்வார்கள். இது வரை யாரும் ஒரு nutritionistஐ பார்த்ததாக இதுவரை என்னிடம் யாரும் சொன்னதில்லை. இதற்க்கு முன் ஒருமுறை சாப்பிடும் பழக்கங்கள் விசயமாக ஒருமுறை எழுதியிருக்கிறேன். http://adirainirubar.blogspot.com/2010/07/blog-post_17.html [பசிக்காக சாப்பாடு]

ஜென் & தடுமல் [ ZEN & COLD ]
ஒரு ஜென் ஞாநி இடம் படித்த ஒரு மாணவன் இரவு நேரத்தில் அவருக்கு தெரியாமல் சுவர் ஏறிக் குதித்து நடு இரவில் ஊர் சுற்றப் போய்விட்டான்,

சுவரின் பக்கத்தில் ஒரு சின்ன கல் இருந்தது [அவன் சுவர் ஏற உதவிய கல்], இதைப்பார்த்த ஜென் ஞாநி அந்த கல்லை அகற்றி விட்டு அங்கேயே சுவற்றுக்கு கீழே உட்கார்ந்து இருந்தார், இரவில் ஊர் சுற்றி வந்த மாணவன் கல் என நினைத்து ஞாநியின் தலையில் காலை வைத்து இறங்கியவுடன் அவனுக்கு பயம், ஞானி தண்டித்து விடுவாரோ என “ ஏன் இரவில் ஊர் சுற்றுகிறாய் ? தடுமல் பிடித்துக்கொள்ளும்” – என்றார் அந்த ஞாநி, ஞாநி காத்திருந்ததின் purpose அதுதான், பெரும்பாலும் வாழ்க்கையின் purpose யிலிருந்து நாம் வேறுபட்டு செயலாற்றுகிறோம்.

 ZAKIR HUSSAIN

இது ஒரு மீள்பதிவு

ரமளானுக்கு பின் என்ன செய்ய வேண்டும்? காணொளி 0

அதிரைநிருபர் | August 21, 2012 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அல்லாஹ்வின் பேருதவியால் இந்த வருடம் ரமளான் மிகச் சிறப்பாக அனைவருக்கும் அமைந்திருக்கலாம் இன்ஷா அல்லாஹ்...

சிறப்பு மார்க்க சொற்பொழிவு:

தலைப்பு: ரமளானுக்கு பின் என்ன செய்ய வேண்டும்

உரை: மவ்லவி உமர் ஷரீப்  காசிமி

இந்த காணொளியின் ஆடியோவை 1 நிமிடம் கழித்து தடையின்றி கேட்கலாம்
அதிரைநிருபர் குழு

ரமளானும் அதன் சிறப்புகளும் - S. ALAUDEEN 16

அதிரைநிருபர் | July 26, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)  ஒவ்வொரு வருடமும் நம்மை வந்து அடையும் புனித மாதத்தை வரவேற்பதில் மிக அதிக அளவில் நாம்  மகிழ்ச்சி  அடைகிறோம். இன்னும் சில தினங்களில் நம்மை வந்து அடைய இருக்கும் ரமளானைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 2:183)

நோன்பு சென்று போன சமூகத்தாருக்கும் கடமையாகி ஆரம்ப காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பை கடமையாக்கி இருக்கிறேன் என்று வல்ல அல்லாஹ் கூறுகிறான்.

ரமளான் பிறை:

'ரமளான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள். (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்.' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (புகாரி : 1906)

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்:

'ரமளான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)நூல்: புகாரி: 1898).

'ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல் புகாரி :1899).

நோன்பும் உள்ளமும்:

நோன்பு பசியை உணரச்செய்கிறது. நல்ல பழக்கங்களை கற்றுத் தருகிறது. பிறருக்கு உதவும் எண்ணத்தை தாராளமாக வழங்குகிறது. மற்ற நேரங்களில் உதவும் எண்ணம் இல்லாதவர்கள் கூட நோன்பு காலங்களில் பிறருக்கு உதவி செய்யும் நிலைகளை காணமுடிகிறது.

எந்த ஒரு காரியத்தையும் தொடர்ந்து செய்தால் பழக்கமாகிவிடும். மற்ற நேரங்களில் மனிதர்கள் பல தவறுகளில் இருந்தாலும் நோன்புக் காலங்களில் எல்லாவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்கள். இப்படியே தொடர்ந்து கொண்டு இருப்பதால் (வருடா வருடம் நோன்பு வைப்பதால்) இறையச்சத்துடன் நோன்பு வைத்தவர்களின் கஞ்சத்தனம், தீய செயல்கள் இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை விட்டு அகன்று உள்ளத்தை தூய்மைபடுத்தி நல்லபழக்கத்தை கற்றுத்ததருகிறது புனித ரமளான் நோன்பு.

ரமளானின் சிறப்புகள்:

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் : 2:185)

'சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஸஹ்ல் (ரலி) நூல் : புகாரி : 1896)

'நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும் பானத்தையும் இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!' (என்று அல்லாஹ் கூறினான்)' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி : 1894)

'நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி : 1904)

நோன்பு திறப்பதும் ஸஹர் உணவும்:

சிலபேர் 2மணிக்கு ஸஹர் செய்து விட்டு தூங்கி விடுகிறார்கள். ஸஹர் நேரத்தில் ஸஹர் உணவை சாப்பிடுவதுதான் சிறந்தது.

நீங்கள் ஸஹர் செய்யுங்கள். ஏன் எனில் ஸஹரில் பரக்கத் (அபிவிருத்தி) உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) (புகாரி,முஸ்லிம்)

எனது சமுதாயத்தினர் நோன்பு திறப்பதை அவசரப்படுத்தி ஸஹர் செய்வதைப் பிற்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர். (புகாரி,முஸ்லிம்)

குர்ஆன் ஓதுதல்:

திருக்குர்ஆனை ஐந்து வேளை தொழுத பிறகும் ஓதுங்கள். நேரம் கிடைப்பவர்கள் மற்ற நேரங்களிலும் ஓதுங்கள். நன்மையை வாரி வழங்கும் இந்த மாதத்தில்தான் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது.

இந்த மாதத்தில் குர்ஆனை முழுவதும் ஓதி முடித்து விட வேண்டும் என்பது சிலரின் நம்பிக்கை. ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. (நிதானமாக குர்ஆன் முழுவதையும் ஓதி முடிக்கலாம்). அவசரப்படாமல் குர்ஆனை தெளிவாக நிறுத்தி நிதானமாக ஓதுவது மிகச்சிறந்த நன்மையை பெற்றுத்தரும்.

இரவுத்தொழுகை:

ரமளானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஸலமா (ரலி) (புகாரி : 1147)

லைலத்துல் கத்ர்:

'மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.' (அல்குர்ஆன் 97:1-5)

'நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ர் எனும் புனித இரவில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) (புகாரி : 35)

'லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) (புகாரி : 1901)

'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) (புகாரி : 2017)

நோன்பில் பொய் பேசுவது:

நோன்பு வைத்துக்கொண்டு தம் நடவடிக்கையை மாற்றிக்கொள்ளாதவர்களுக்கு இறைத்தூதரின் எச்சரிக்கை:

'பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!' என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி : 1903)

பாவ மன்னிப்பு:

'ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின் முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி) , நூல்: புகாரி : 2008)

'ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின்இ முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி),நூல்: புகாரி : 2014)

உம்ரா செய்தால் ஹஜ் நன்மை:

ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.

'ரமளான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி : 1782)

கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்:

மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். 'ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்' என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 2119)

முன்னேற்பாடுகள்:

ரமளான் மாதத்தில் அதிகமதிகம் அமல்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்துடன்: ஷாபான் மாதத்திலேயே நம்முடைய எல்லா தயாரிப்புகளையும் செய்து கொள்ள வேண்டும். நாம் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் எதையும் தாமதப்படுத்தாமல் செய்து விட வேண்டும். சகோதரிகள் ரமளான் மாதத்திற்கு தேவையான மளிகைகடை பொருட்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டு மசாலா, மாவுப்பொருட்களை தயார் செய்து வைத்துக்கொள்ளவேண்டும்.

வீட்டில் உள்ள அனைவருக்கும் பெருநாளைக்கு வேண்டிய துணிகளை இந்த மாதத்திலேயே எடுத்து வைத்துக்கொள்ளலாம். ரமளானில் வீண் அலைச்சல் இருக்காது.

சகோதரர்கள் நோன்பிற்கு வீட்டிற்கும், உறவினர்களுக்கும் பணம் அனுப்புவீர்கள் பணத்தை இந்த மாதத்திலேயே அனுப்பி நோன்புக்கு முன்பாகவே அனைவருக்கும் கிடைக்கும்படிச் செய்வது நல்லது. ஏனென்றால் நிறைய இடங்களில் பணம் எப்பொழுது வரும் என்ற சிரமத்தில் காத்திருப்பதை காணமுடிகிறது.

சகோதரிகள் கையில் பணம் கிடைத்தவுடன். நோன்பு நடுவில்தான் உறவினர்களுக்கு கொடுப்பேன் என்று பிடிவாதத்துடன் இருக்கிறார்கள். நோன்பு ஆரம்பிக்கும் முன்பே உறவினர்களுக்கு கொடுத்து விட்டால் அவர்கள் எதிர்பார்ப்பின்றி பட்ஜெட் போட்டு தேவையானதை வாங்கி வைத்துக்கொள்வார்கள்.

நோன்பு காலங்களில் செய்யவேண்டியவை:

ஸஹரில் உணவை தயாரிக்கிறேன் என்று சிரமம் எடுக்காமல் தூங்குவதற்கு முன்பாகவே உணவை தயாரித்து வைத்துக் கொண்டு ஸஹரில் சூடு காட்டி சாப்பிடலாம்.

தினமும் மாவு பொருட்களை (சப்பாத்தி, புரோட்டா) தயார் செய்யாமல் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை தயார் செய்து பிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்.

நோன்புக் கஞ்சியை தினமும் தயாரிக்க வேண்டியதில்லை. இரண்டு நாளைக்கு தேவையானதை தயார் செய்து கொள்ளலாம்.

கடற்பாசி முக்கிய உணவாக இருக்கிறது. இதையும் இரண்டு நாளைக்குத் தேவையானதை தயார் செய்து கொள்ளலாம்.

சகோதரிகள் பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு ஒரு தூக்கம் போட்டு விட்டு நோன்பு திறப்பதற்கு வேண்டிய அனைத்தையும் லுஹருக்கு முன்பாகவே தயார் செய்து வைத்து விட்டால் நோன்பு திறக்கும் நேரத்தில் பிரஷர் அதிகமாகி அவசர அவசரமாக சமைத்து படபடப்புடன் நோன்பு திறப்பதிலிருந்து பாதுகாப்பு பெறலாம். செய்து வைத்த உணவுகளை நோன்பு திறப்பதற்கு முன்பாக சூடு காட்டிக்கொள்ளலாம்.

நோன்பு வைத்துக்கொண்டு தொழாமல் பிள்ளைகள், பெரியவர்கள் சில இடங்களில் இருப்பதை காணமுடிகிறது. சகோதர, சகோதரிகள் கவனத்தில் கொண்டு அவர்களையும் தொழுபவர்களாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.

ரமளான் மாதத்தில் சொர்க்கத்திற்கு செல்வதற்குரிய வழிவகைகள் நிறைய இருக்கின்றன. ஆகவே நாம் வருகின்ற ரமளான் மாதத்தின் நோன்பை முழுவதுமாக வைத்து வல்ல அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக்கொள்வதற்கான காரியங்களில் ஈடுபடுவோம்.

நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக இந்த ரமளான் மாதத்தை மாற்றி நோன்பை வைப்பதற்கும், அமல்களை அதிகம் செய்வதற்கும், நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரியட்டும்!.

ரமலானின் சிறப்பைப்பற்றி விரிவாக தொடராக வரவேண்டியது. நேரமின்மையால் விரிவாக எழுதமுடியவில்லை.

-- S. அலாவுதீன்

சிரித்து வாழ வேண்டும்-பிறர் சிரிக்கவும் வாழ வேண்டும்! 0

அதிரைநிருபர் | August 29, 2010 | , , ,

புனித ரமலான் மாதத்திய நோன்பு பசித்தவர் படும் பாட்டினை பாருக்கு உணர்த்தும் ஒரு நடைமுறை.                               பல் வேறு மதங்களிலும், அரசியல் மற்றும் சமூக கிளர்ச்சியிலும் கடைப்பிடிக்கும் உண்ணா நோன்பு வெறும் திடப்பொருளை மட்டும் ஒதுக்கும் ஒரு செயலாகும். ஆனால் தவிக்கும் வாயிக்குக் கூட பட்டிணிபோட்டு வறியவர் படும் துன்பத்தினை வள்ளலுக்கும் உணர்த்தும் அரிய ஒரு மகத்துவம் புனித ரமலான் நோன்பு ஆகும். ஈகையினை உள்ளத்தில் உதிக்கச் செய்து எப்படி பாலைவனத்தின் மணலைத் தோண்டும் போது நீர் சுரக்குகிறதோ அதே போல இல்லாதவருக்கு ஜக்காத், சதக்கா போன்ற கொடையினை அள்ளி அள்ளி வழங்கத் தூண்டும் ஒரு சிறந்த பண்பான கடமைதான் நோன்பு. ஆனால் எத்தனை வள்ளல்கள் தனது செல்வங்களை ஏழை, எளியவர்க்கு வாரி வழங்குகிறார்கள்? நமது சமுதாயத்தில் செல்வந்தர்கள் இல்லையா? ஏன் சகர் நேர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்போமேயானால் தங்க நகைகடை, ரியல் எஸ்டேட்ஸ், லாட்ஜ், துணிக்கடைகள், சூப்பர் மார்க்கட்டுகள், கோரியர் சர்வீஸ்கள், குடிதண்ணீர் சப்ளை செய்யும் நிறுவனம், பொது விளம்பரத்தில் தடுக்கப்பட்ட பீடி-பாக்கு நிறுவனங்கள், தங்களுக்குத் தாங்களே டாக்கடர் பட்டம் சூட்டிக்கொள்ளும் யுனானி மருத்துவ மாமணிகள், கல்வி நிறுவனம் நடத்தும் வள்ளல்கள் போன்ற செல்வந்தர்கள் பட்டியல் வரிசை நீண்டு கொண்டே போகிறது.. சகர் நேரத்தில் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் கால் வாசி விளம்பரங்கள் முக்கால்வாசி என்று சொல்லும் அளவிற்கு விளம்பரம் செய்யும் செல்வந்தர்கள் நம்மிடையே இல்லாமலில்லை. ஆனால் அவர்கள் நோன்பு நேரத்தில் தங்கள் செல்வத்தினை கணக்கிட்டு ஜக்காத், சதக்கா கொடுக்கிறார்களா என்றால் சந்தேகமே! அவர்கள் கொடுப்பதெல்லாம் நோன்பு நேரத்தில் கையேந்துபவர்களுக்கு காசு, குறைந்த விலையில் துணிமணிகள் எடுத்துக் கொடுத்து வெறும் தர்மம் செய்ததாக ஜம்பம் அடிப்பார்கள். அது தான் உண்மையிலே ஏழைகளுக்குச் செய்யும் தொண்டா?

ஓரு உண்மை சம்பவத்தினை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நான்கு வருடத்திற்கு முன்பு சென்னையில் வாழும் எனது தூரத்து அட்வகேட் உறவனர் மகள் பிளஸ்2 பரீட்சையில் 1200 மார்க்குக்கு 1148 மார்க் வாங்கி பள்ளியிலே முதலாவதாகத் தேறியிருந்தார். அந்தப் பெண்ணுக்கு அதிக கட்டாப் மார்க் இருப்பதால் நிச்சயம் அரசின் ஒதுக்கீடிலே நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். ஆனால் அவள் ஒரு முஸ்லிம் இன்ஜினீரியங் கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என தீர்மானித்து அந்தக்கல்லூரிக்கும் மனு செய்தார். இண்டர்வியூக்கும் தந்தையினைக் கூட்டிச் சென்றாள். ஆனால் அங்கு கேட்கப்பட்ட கேள்வி நீங்கள் எத்தனை லட்சம் டொனேசன் தருவீர்கள்? என்பது தான். அந்தப் பெண்ணின் தந்தையே என்மகள் நல்ல மார்க்கில் தேர்வாக உள்ளாள் அவள் மற்ற கல்லூரிக்கு அரசு ஒதுக்கீடு இலவச சீட்டில் செல்வதிற்குப் பதிலாக முஸ்லிம் கல்லூரியில் படிக்க விரும்புகிறாள் ஆகவே அவளுக்கு ஃபிரீ சீட் தாருங்கள் என்று சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் பல லட்சம் டொனேசன் கேட்டதால் அதனை மறுத்துவிட்டு அரசு ஒதுக்கீடு செய்த வெங்கடேஸ்வரா இன்ஜினீரயங் கல்லூரியில் சேர்ந்து முதல் வகுப்பிலும் தேரி டி.சி.எஸ். சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளாள.. இது எதனைக் காட்டுகிறது.? ஏழை முஸ்லிம்களுக்காக மைனாரிட்டி கல்லூரி நடத்துகிறோம் என்று லட்சத்தில் பணம் அள்ளும் முதலைகளாக அந்த வள்ளல்கள் இருக்கின்றார்கள். ஆனால் விளம்பரம் மட்டும் விமரிசையாக வள்ளல் என போட்டு நோன்பின் மாண்பு-மகிமையினை பாழடிக்கிறார்கள் என்றால் மிகையாகுமா? அமெரிக்காவில் வாழும் இந்திய தமிழ் முஸ்லிம்கள் ஆண்டு தோறும் ஒரு ஏழை முஸ்லிம் கிராமத்தினை தத்தெடுத்து அவர்களுக்கு தொழில் வைத்து முன்னேற ரூ10000 வீதம் 100 குடும்பங்களுக்குக் கொடுத்து தன்னிறைவு பெற உதவுகிறார்கள். அது போன்று ஏழைக் குடும்பங்கள் முன்னேற எதாவது நிலையான திட்டங்கள் எவராலும் செய்யப்பட்டுள்ளதா? நகை வியாபாரிகள் நூறு ஏழைக்குமர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குமருக்கும் ஒரு பவுன் தாலிச் செயின் மற்றும் திருமண செலவுகளை ஏற்றுக் கொண்டு அவர்களுடைய திருமணத்தினை நடத்தித் தரக்கூடாது? மைனாரிட்டி கல்வி நிறுவனங்களில் சிறப்பான கல்வித் தகுதியுள்ள மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்-ஐ.பீ.எஸ்-டெப்டி கலெக்டர்-டி.எஸ்.பி பரீட்சை எழுத பயிற்சி அளிக்கக்கூடாதா? எப்படி முன்னாள எம்.எல்.ஏ சைதை துரைசாமி மட்டும் அவ்வாறு இலவச பயிற்சி கொடுத்து வருடா வருடம் 100க்கு குறையாத மாணவர்களை முதன்நிலைத் தேர்வில் வெற்றி பெறச் செய்ய முடிகிறது? ஏன் குடி தண்ணீர் சப்ளை விளம்பரம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு கேன்கள் குடி தண்ணீர் தங்கள் பகுதியிலிருக்கும் பள்ளி-மதரஸாவிற்கு இலவச தண்ணீர் சப்ளை செய்யக்கூடாது? அதுபோல் கூரியர் சர்வீஸ்-டிராவல்ஸ்-ஹோட்டல்ஸ் நடத்தும் உரிமையாளர்கள் அரசு பரிட்சை எழுத வரும் மாணவர்கள் தங்கி பரீட்சை எழுத இலவசமாக வாகனம்-இடம் கொடுக்கக்கூடாது? டீ.வி. நிகழ்ச்சியில் ஒரு விளம்பரப்பிரியர் நீங்கள் அரிசி கொண்டு வாருங்கள் நாங்கள் உமி கொண்டு வருகிறோம் நாம் சமைத்துசாப்பிட ‘பைத்துல்மால்’ அமைப்பினை ஏற்படுத்தி தங்களுடைய முகங்களை பலருக்கு பளிச்சென்று வெளிச்சம் போட்டு பறையடிக்கிறார். அதுதான் இஸ்லாம் சொன்ன தான தர்மமா?

உதவும் கரஙகள் எப்படி இருக்க வேண்டும் என்பதினை; இரண்டு சம்பவங்களினை மட்டும் உங்களுக்கு உதாரணமாக எடுத்துக்காட்டலாம் என நினைக்கிறேன்:

1) படத்தில் உள்ள கனடா நாட்டு பிரதமர் மார்ட்டினுடன் தலை நிமிர்ந்து நிற்கும் சிறுவன் யார் தெரியுமா ‘யூனிசெப்’ ஜக்கிய நாடு குழைந்கைகள் படிப்பு- சுகாதாரம் பாதுகாப்பிற்கான ஒரு சபையாகும். அந்த சபையால் கவுரவ அம்பாசாடர் என்ற பட்டம் வழங்கப்பட்ட கனடா நாட்டு இந்திய வம்சா வழி பதிமூன்றே வயதான அம்மான் என்ற தந்தைக்கும், சமீம் என்ற தாய்க்கு மகனாகப் பிறந்த அருந்தவப் புதல்வன் தியாகச் செம்மல் ஹஜரத் பிலால் அவர்கள் பெயரைத் தாங்கியவன். அவன் அப்படியென்ன அருஞ்செயல் செய்தான் என நீங்கள் கேட்க உங்கள் ஆவல் தூண்டும். இந்திய நாட்டில் குஜராத்தில் புர்ஜ் நகரினை சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அல்குர்ஆனில் சொன்னது போல புரட்டிப்போட்டு மாடி வீடுகளெல்லாம் மண்ணாகி பலர் மடிந்தும் போன கதை பலர் அறிந்திருப்பீர்கள். அப்போது கனடா தலைநகர் டொரனடாவில் வசித்த அந்தச் சிறுவனுக்கு வயது நான்குதான். அந்த பூகம்பத்தினை தொலைக்காட்சியில் ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் அதிர்ச்சியிட்டு மிகவும் துயரம் அடைந்தான்.

அன்றிலிருந்து அவன், அவனது பொற்றோர் மற்றும் பாட்டனாருடன் தெருவில் இறங்கி ஆரஞ்சு பழங்கள் விற்று அதன் மூலம் கிடைத்த 332 டாலர்களை யூனிசெப் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தான். அதன்பிறகு எட்டு வயதான போது 2004 ஆம் ஆண்டு ஹெயிட்டி நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரலையின் போது தன் தந்தையின் ரொட்டிகளை எடுத்து தெரு தெருவாக விற்று அதில் கிடைத்த வருமானத்தினை அந்த நாட்டுக் குழந்தைகளுக்கு அனுப்பியுள்ளான். அதன்பின்பு ஆப்பிரக்கா நாட்டு குழந்தைகள் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிந்து காகித தட்டுகளை செய்து விற்று அதன் மூலம் கிடைத்த 1100 டாலர்களை அந்தக் குழந்தைகளுக்கு அனுப்பியுள்ளான். இது போன்ற உதவிகளை செய்ய ‘ஹேண்ட் பார் ஹெல்ப்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினை நிறுவியும் உள்ளான். 2009ஆம் அண்டு ‘கால் நடை இயக்கம் ஒன்றை’ ஆரம்பித்து தன் பள்ளித் தோழர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுடன் கனடா தலைநகர்டொரண்டோவில் உள்ள பூங்கா, சூப்பர் மார்க்கட், கல்வி நிறுவனங்களுக்கு கால் நடையாக சென்று வசூலித்து அதனை உலக குழந்தைகள் கல்வி, சுகாதாரம், பசி, பட்டிணி போக்க உதவியும் உள்ளான். அவன் அளித்த உதவித் தொகை எவ்வளவு தெரியுமா சொந்தங்களே? 5மில்லியன் டாலர் தொகையாகும். தற்போது அடில்லாலானி என்ற 20 வயது வாலிபருடன் சேர்ந்து சுடோகோ.காம் என்ற விளம்பர இணைய தளத்தினை ஆரம்பித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தினை ‘வோல்ட் புட் பரோகிராம்’ அதாவது உலக உணவுக்கழகத்தின் பசி போக்கும் திட்டத்திற்கு உதவி வருகிறான் என்றால் பாருங்களேன். ஒரு முஸ்லிம் சிறுவனால் செய்ய முடிந்ததினை நான் மேற்கோடிட்டுக் காட்டிய செல்வந்தர்களால் ஏன் முடியாது முஸ்லிம் ஏழை மக்களுக்கு, ஏழை குமர்களுக்கு, அனாதை சிறுவர்களுக்கு, அறிவுசால் மாணவர்களுக்கு வாழ்வில் ஓளியேற்ற?

2)அடுத்த ஒரு சம்பவத்தினையும் உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன் சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டில் வெள்ளம் ஏற்பட்டு 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு 2000 பேர் இறந்தும், 1.கோடியே எழுபது லட்சம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதினை தினந்தோறும் பத்திரிக்கை-எலக்ரானிக் மீடியாக்கலில் பார்த்து-படித்து தெரிந்திருப்போம். அந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நாட்டு ஜனாதிபதி ஆசிப் சர்தாரி கட்சியும், எதிர்கட்சியான எம்.க்யூ.எம் சட்சிகள் செய்த உதவி தலா 5 மில்லியன் டாலர் மட்டுமே, ஆனால் ஹாலிவுட் நடிகை ஆஜ்லினா ஜோஸி செய்த உதவி 8 மில்லியன் டாலர் ஆகும். சொந்த நாட்டினர் தனிப்பட்டு செய்த உதவியினை விட ஒரு தனிப்பட்ட அயல் நாட்டுப் பெண் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்தாளென்றால் ஏன் கோடி கோடியாக பணம் வைத்திருக்கும் செல்வந்தர்கள் நோன்பு நேரத்தில் கூட இது போன்ற உதவியினைச் செய்யக்கூடாதா என்பதே என் ஆதங்கம். ஆகவே தான் நாம் மட்டும் மகிழ்வுடன் இருக்கக்கூடாது மற்றவர்களையும் மகிழ்விக்க வேண்டும் என்பதினை வலியுறுத்தி இந்தக்கட்டுரை எழுதினேன்.

-- முகம்மது அலி ஐ.பீ.எஸ் (ஓ)
 
நன்றி: முதுவை ஹிதாயத்

நபிகளாரின் தூய வாழ்வின் இறுதி நாட்கள் - ரமழான் சிந்தனை 0

அதிரைநிருபர் | August 27, 2010 | , , ,

அன்பானவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும், இப்புனித ரமழான் மாதத்தில், ரமழான் சிந்தனை என்ற தலைப்பில் நல்ல சிந்தனை தூண்டும் மார்க்க செற்பொழிகளை                                                   மற்ற இஸ்லாமிய தளங்களிலிருந்து இங்கு பகிர்ந்துக் நாமும் மற்றவர்களும் பயனடைய வேண்டும் என்பதற்காக பதியப்பட்டுவருகிறது.

 இதன் தொடர்ச்சியாக நம் உயிரினும் மேலான நபி முகம்மது (ஸல்) அவர்களின் இறுதி நாட்களைப் பற்றி மிக அற்புதமான குரல் வலத்தில், அனைத்து தரப்பட்ட மக்களின் மனதில் எளிதில் புரியும்படியான ஒரு வரலாற்று ஆடியோவை “ நபிகளாரின் தூய வாழ்வின் இறுதி நாட்கள்” எனற தலைப்பில் கீழே வெளியிடுகிறோம். கேட்டு பயனடையுங்கள், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Please download if you don not have  REAL MEDIA PLAYER to hear this audio.

To download this audio please visit this link http://www.islamkalvi.com/history/raheeq_audio/043.rm

To download this audio please visit this link https://sites.google.com/site/tjdn77/adirainirubar/043%283%29.mp3

இந்த ஆடியோவை ஒவ்வொரு முஸ்லீமும் ஒவ்வொரு நாளும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நம் மனதை உருக்கும் நிகழ்வு.

மேலே உள்ள ஆடியோ உலகளாவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற “இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு” என்ற நூலின் ஆடியோ தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

ஆசிரியர் : இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான்
தமிழில் : மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி

Books and MP3 CDs are Available at : Darul Huda, New No. 211(102), First Floor, Linghi Chetty St., Chennai - 600 001.

முழு வரலாறு ஆடியோ தொகுப்பை (real media files) தரவிரக்கம் செய்ய இங்கு சென்று http://www.islamkalvi.com/history/raheeq_audio/index.htm  தரவிரக்கம் செய்துக்கொள்ளலாம்.

இந்த அற்புதமான வரலாற்று தொகுப்பை இவ்வுலகிற்கு தந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.
நல்ல விசயங்கள் எங்கேல்லாம் இருக்கிறதோ அவைகளை மட்டும் நாம் தேர்ந்தேடுத்து, கேட்டு, பிறருக்கும் எடுத்துச் சொல்லி, நாமும் பயனடைந்து மற்றவர்களையும் பயனடைய செய்யலாமே.

ஆக்கம்: அதிரைநிருபர் குழு

என்றேனும் சிந்தித்ததுண்டா எதிர்கால வீட்டைப்பற்றி?... 1

அதிரைநிருபர் | August 24, 2010 | , ,

சற்று நேரம் நம் அன்றாட அலுவல்களை நிறுத்தி விட்டு நமக்கு நாமே இந்த கேள்வியை
                                                              
 என்றைக்கேனும் கேட்டிருக்கிறோமா எதிர்கால வீட்டைப்பற்றி?

மண்ணறையில் (கப்ரில்) எனக்கு முதல் இரவில் என்ன நடக்கப்போகிறது?

நான் அதற்காக என்ன தயார் செய்து வைத்திருக்கின்றேன்?

நான் சொர்க்கத்தில் இருப்பேனா? இல்லை நரகத்தில் இருப்பேனா?

எவ்வாறெல்லாம் நான் மரணத்தை அடிக்கடி வாழ் நாளில் நினைவு கூர்ந்தேன்?

சற்று சிந்தித்த பொழுது மய்யித்தான உடல் நன்கு கழுவப்பட்டு கப்ருக்கு எடுத்து செல்ல தயார்படுத்தப்பட்டிருந்தது. அந்த நாள்/நேரம் வரும் பொழுது உடலை மக்கள் (உற்றார், உறவினர்) சுமந்து நமக்கான மண்ணறைக்கு எடுத்துச்செல்வர்.

குடும்பத்தினரின் அழும் குரல்களுக்கிடையே உடல் மண்ணறையில் இறக்கி வைக்கப்படுகிறது.

சற்று சிந்திப்போம் நமக்கு நாமே...மண்ணறையைப்பற்றி. ஆம் நிச்சயம் அது ஒரு இருண்ட மரணப்படுகுழி தான் சந்தேகமில்லை.

தனிமை...இருள் சூழ்ந்த இருட்டறை...உதவிக்காக அழுதிடுவோம் நம் அழுகுரல் யாருக்கும் கேட்காமலேயே...யாரும் நமக்கு உதவிட இயலாது..அந்தோ பாவம் நம் வேதனைகளும் உலகுக்கு சொல்ல விரும்பும் உண்மைகளும் யாரும் அறிந்திடமாட்டோம்... உடலின் எலும்புக்கூடுகள் நெருக்கப்படும்/நொறுக்கப்படும் அவ்வேளையில்...

நிச்சயம் வருந்துவோம் நாம் வாழ்நாளில் செய்த எல்லாத்தீய காரியங்களை எண்ணி...வருந்துவோம் பொடுபோக்காக காரணமின்றி விடப்பட்ட ஐங்காலத்தொழுகையை எண்ணி....

வருந்துவோம் உலகில் இன்னிசைகளை தன் செவியில் தன்னை மறந்து கேட்டனுபவித்ததற்காக...

வருந்துவோம் நம் அவமரியாதையான குணத்தை பிறர் மீது காட்டியதற்காக குறிப்பாக பெற்றோர்களை அவமரியாதை செய்ததற்காக...

பெண்கள் வருந்துவார்கள் தன் மேனியை உலகம் பார்த்து மகிழ ஹிஜாப் அணியாமல் சுற்றித்திரிந்ததற்காக...

வருந்துவோம் இறைவனின் கட்டளைகளை ஏற்று நடக்காமல் விட்டதற்காக....

வருந்துவோம் மார்க்க அறிவை பெறாமல் உதாசீனப்படுத்தியதற்காக...

நிச்சயம வருந்துவோம்...நம் எல்லா துர்குணங்களுக்காகவும், செய்த தீய காரியங்களுக்காகவும்...

அங்கு தப்பிக்க வழியில்லை...கைக்கொடுக்க ஆட்கள் இல்லை...சிபாரிசு செய்ய நாதியில்லை...எல்லா தீய காரியங்களுக்காக தண்டணையை அனுபவித்தே தீர வேண்டியுள்ளது. தனிமையாக்கப்பட்டோம் நம் அமல்களுடன்... அங்கு பணமில்லை, ஆபரணஙகளில்லை... ஒன்றுமில்லை.... நம் அமல்கள் மட்டும்...

மரணப்படுகுழி மூடப்படும் பொழுது... அலறிக்கொண்டே நம்மைவிட்டு செல்பவர்களிடம் கெஞ்சுவோம்...என்னவர்களே தயவு செய்து என்னை தனியே விட்டு, விட்டு போகாதீர்கள். என் மரணப்படுகுழி அருகிலேயே இருங்கள்...யார் கேட்பார் உயிரற்ற உடலின் உள்ளக்குமுறலை...

ஆனால் நம் கதறலை எவரும் கேட்டிலர்...அவர்கள் வந்த வேலை முடிந்தவர்களாய் திரும்பி செல்ல அடி எடுத்து வைப்பதை நாம் செவியுறுவோம்... கதறுவோம்.

நாம் நினைத்தோம் ஒரு போதும் இவ்வுலகை விட்டு செல்லமாட்டோமென்று.  நாம் நினைத்தோம் நம் நண்பர்கள், உறவினர்களுடன் என்றும் நிலைத்திருப்போமென்று. நாம் நினைத்தோம் என்றுமே மகிழ்ச்சிக்கடலில் மிதப்போமென்று...இல்லை...நாம் நினைத்ததில் உண்மையேதுமில்லை... முற்றிலும் தவறானதைத்தவிர....வந்தவர்கள் சென்றுவிட்டார்கள் வந்த வேலை முடிந்தவர்களாய்...தனிமையில் இருளில் அகப்பட்டுக்கொண்டோம்... தினம், தினம் இன்றே சிந்தித்திடுவோம்... நம் எதிர்கால வீட்டைப்பற்றி.... அங்கே நேர்த்தியான வீட்டைப்பெற இங்கு நம் வாழ்நாளில் உழைத்திடுவோம்...

நாம் ஒரு போதும் இதை உதாசீனப்படுத்திட இயலாது. இது நம் நினைவில் என்றும் வந்து போகும் ஒன்றாகட்டும்...ஒவ்வொரு தடவை தவறுகள் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும்பொழுதெல்லாம் நாம் இந்த நினைவை முன்னிறுத்தி தடுத்திடுவோம் தவறுகளை தகர்த்தெறிவோம் தீய துர்க்குணங்களை..நினைத்திடுவோம் அணுதினமும் தற்காலிக சந்தோஷங்களுக்கு நிரந்தர ஆப்படிக்கும் இந்த அழையா விருந்தாளியை (மரணம்) ஒரு போதும் மறந்திடல் வேண்டாம்...

"ஏழையாக நாம் பிறந்தது நம் தவறல்ல; மாறாக இறுதியில் ஏழையாக நல்ல அமல்களின்றி வெறுமனே செத்து மடிவது நிச்சயம் நம் தவறே".

அல்லாஹ் இப்புனித ரமளானின் பொருட்டு காலஞ்சென்ற நம் எல்லாக்கப்ராளிகளின் கப்ருகளை சொர்க்கத்தின் பூஞ்சோலைகளாக்கி எஞ்சியுள்ள நம் யாவரின் இறுதிப்பயணத்தை இனிய பயணமாக்கி தந்தருள நாமெல்லாம் நம்மைப்படைத்தவனிடமே இறைஞ்சிடுவோம்....

எனக்கு வந்த ஒரு மின்மடலின் தோராயமான தமிழாக்கம்.. தயவு செய்து இச்செய்தியை பிறருக்கும் தெரியப்படுத்துங்கள்.

-- மு சே மு நெய்னா முகம்மது

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள் - ரமழான் சிந்தனை 3

அதிரைநிருபர் | August 21, 2010 | , ,

1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை" செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம்)   
                 
2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆலு இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

3) உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

6) ""எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்"" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான், குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான். ஆனால், முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன், தெரிந்தவர்களிடம் சென்று, குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதர சகோதரிகள், குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு, நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி, எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள், அதைப்படிப்பது மிகவும் அவசியமானது. அதைப்படிப்பது மிகவும் இலகுவானது. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நமது சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே, அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜமதுல் குர்ஆனின் மூலம் விளங்கிப் படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளில் எத்தனையோ எழுத்துக்களை படிக்க நமக்கு வாய்ப்பிருக்கின்றது. சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். குர்ஆனைப் படித்து, அதன்படி நடந்து, ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!

- K.L.M இப்றாஹீம் மதனி

Courtesy: Readislam.net

இந்த அருமையான கட்டுரையை தொகுத்தளித்த கட்டுரையாளருக்காக துஆ செய்வோமாக.