Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பசிக்காக சாப்பாடு 34

தாஜுதீன் (THAJUDEEN ) | July 17, 2010 | , , ,

சின்ன வயது ஆண்கள் நிரந்தர கர்ப்பஸ்த்ரீ மாதிரி அலைவதுகண்டு எழுதுகிறேன். வயிறு அதன் சார்ந்த செரிமான செயல்பாடுகளை தெரிய தஞ்சாவூர்    பஸ் ஸ்டான்டில் 'இஞ்சிமரப்பா"விற்க்கும் மனிதர் விவரமாக சொல்லிவிடலாம். இருப்பினும் இதை சரியாக புரிந்து கொண்டால் இறைவனின் எத்தனையோ அதிசயங்களில் இதுவும் ஒன்றாக தோன்றும். வாய்க்கு பக்கத்திலேயே கெட்ட உணவு / நல்ல உணவு கண்டுபிடிக்கும் ஸ்கேனர் [வாசம் அறியும் மூக்கு] வைத்த இறைவன் சில விதி முறைகளையும் வைக்காமல் இருந்திருக்க மாட்டான்.

40 வயதுக்குள் 70 வயது "சாப்பாடு கோட்டா" வை முடித்துவிடுபவர்கள் கவனத்திற்க்கு

முதலில் சாப்பாடு பசிக்காக , பிறகு ருசிக்காக என பரிணாம வளர்ச்சி அடைந்து இப்போது ஏற்க்கனவே அதிகம் சாப்பிட்டு ரப்பர் பேண்ட் மாதிரி பெரிதாக்கி வைத்துஇருக்கும் குடலை சாப்பாடு கொண்டு நிரப்புவது என ஆகி விட்டது.

இப்போதெல்லாம் நம் ஊரில் விருந்துக்கு பஞ்சமில்லை. இப்போது உள்ள ட்ரெண்ட் என்னவென்றால் திருமண விருந்தில் வயிறுமுட்ட வெலுத்துக்கட்டுவது பிறகு செறிமானத்துக்கு என பெப்ஸி, கோக் என கார்பனேட்டெட் சமாச்சாரங்ளில் சந்தோசப்படுவது ஒரு விதமான் அறியாமைதான். ஏற்கனவெ உள்ளே போன ஹெவியான சாப்பாட்டுக்கு இன்சுலின் தயாரிக்க சிரமப்படும் பேன்க்ரியாசஸ் " விட்டுருங்க காக்கா" என கையெடுத்து கும்பிடும்போது நீங்கள் இன்னும் அவதிப்படு என கோக்/பெப்ஸியை அனுப்புவது மஹிந்த்ரா ராஜபக்சே தனமானது.

ஏனெனில் ஒரு 35 வயது மனிதனுக்கு தேவை 1462 கலோரி ஒரு நாளைக்கு போதுமானது , ஆனால் விருந்தில் சாப்பிடும் ஆட்டிறைச்சி மட்டும் [ உதாரணமாக 200 கிராம்] 738 கலோரியை தருகிறது. இதெற்க்கெல்லாம் செத்துபோன ஆடு கலோரி மீட்டரை கழுத்தில் கட்டிக்கொண்டு வந்து உங்கள் கனவில் வந்து செய்தி சொல்லும் என எதிர்பார்ப்பது ரொம்ப தப்பு. இனிமேலும் தெரியாமல் அதிகம் சாப்பிட்டால் தேவைக்காரவீட்டு ஆட்களிடம் சொல்லி கலோரியை ஆட்டிறைச்சியில் ப்ரின்ட் செய்ய சொல்லவேண்டியதுதான்.

நம் ஊரில் ஆட்கள் சமீப காலமாக நடப்பதை [ ராஜாமடம் ரோடு] பார்க்கிறேன். பெரும்பாலான ஆட்கள் "கார்டியோ வாக்" செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லையோ என தெரிகிறது. முதல் பத்து நிமிடம் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் அதிகரித்து 20 வது நிமிடத்திலிருந்து 35 நிமிடம் வரை முடிந்த்த அளவு வேகம் அதிகறித்து 35 - 45 நிமிடம் வரை மெதுவாக நடந்து பிறகு அமைதியான் இடம் பார்த்து அமர்ந்து அமைதி அடைவது கார்டியோவாக். இதனால் இதயம் பலப்படும், நம் கண்ணுக்குதெரியாமல் அடைபடும் ஆர்ட்டரியில் தெளிவான ரத்த ஓட்டம் தரும்.

சுத்தமில்லாத தண்ணீர் , உணவு மூலம் பரவும் கிருமிகளின் "அதபு" நம் ஊர் போன்ற இடங்களில் அதிகம்.முன்பு எல்லோரும் 'ஒற்றுமையுடன்" கழுவிய குளங்களின் மூலம் அமீபியாசிஸ் பரவி நம் ஊர்க்காரர்களின் பீஸில் தஞ்சாவூர் ஆஸ்பத்திரிகள் வளர்ச்சி அடைந்து விட்டது.

தொடர்ந்து செரிமானகோளாரு இருந்தால் ஒருமுறை ஸ்கோப் செய்து அத்துடன் பயோப்சி செய்து விடுவது நல்லது. இப்போது பெரும்பாலானவர்களின் வயிற்றுப்பிரச்சினைக்கு காரணமான வில்லன் H.Pylori எனும் கிருமிதான். [ இது ரத்த பரிசோதனையிலும் தெரியும்.] இது இருக்கும் இடம் தேடி கொல்வதற்க்கு மருந்து கண்டுபிடித்த டாக்டருக்கு நோபல்பரிசு கிடைத்தது. மருந்து ஒரு வாரம் சாப்பிட்டு ஒருமாதம் கழித்து Breath Test டெஸ்ட் எடுத்தால் வில்லன் உங்கள் வயிற்றில் இருக்கிறாரா இல்லையா என சொல்லி விடும் ..அதனால் தான் முன்பெல்லாம் வேப்பெண்ணை / விளக்கெண்ணை தருவார்கள் என சொல்ல வரும் வாசகர்களுக்கு இது கொஞ்சம் திமிர் பிடித்த கிருமி அவ்வளவு ஈசியாக சிக்காது.

இப்போது காலத்துக்கு ஒவ்வாத உணவுகளின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. [நாமும் அதைத்தான் விரும்புகிறோம்]. இதனால் அதிகம் GERD எனப்படும் வியாதி நெஞ்சு எரிச்சல் அதிகமாகி விட்டது. இதனாலும் இதற்க்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் 'சுத்தம் சோறு போடும் ,ஆனம் ஊத்தும்' என நாம் பள்ளிக்கூடத்தில் படித்த நல்ல விசயங்களை நம் வீட்டுக்கு கொண்டுவர மறந்து விட்டோம்.

வெளியூர் போனால் நாம் அதிகம் விரும்பும் சைவ உணவை நாம் மத சாயம் பூசி தூர வைத்து விட்டோம்.

கீழ்காணும் தத்துவ ஞானிகளிடம் கவனமாக இருக்க கடவது.

'எனக்கு தெரிந்து ஒரு நண்பன் சைவம்தான் சாப்பிடுவார், அவருக்கு ஹார்ட்லெ அடைப்பாம் இதுக்கு என்ன சொல்றெ?'

"டாக்டர்னா அப்படித்தான் சொல்வான் அவன் சொல் கேட்டா பட்டினிதான் கெடக்கனும்''

மற்றும்

" ஆறிலும் சாவு நூறிலும் சாவு--இனிமேல் நூறுதான் மாப்லே " என சொல்லும்போது 'ஆறிலேயெ உன்னை தப்பிக்கவிட்டது யார்?" என கேட்க தோன்றும்.இவனுக கிட்டே நம்ம ஸ்டேசன் எடுக்காது என விலகி விடுவது நல்லது.

எடை அதிகரிப்பு , கட்டுப்பாடு இல்லாத உணவு இவைகளில் கவனம் செலுத்தாமல் சின்ன சின்ன உடற்பயிற்சி இவைகளை ஒதுக்கிவீட்டு "நேரம் எங்கே கிடைக்குது" என சொல்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, உங்கள் சுகாதார வாழ்க்கைக்கு நீங்கள் ஆப்சென்ட் ஆகி எதுவும் செய்ய முடியாது. நீங்கள் பிரசென்ட் ஆக வேண்டும்.

மற்றபடி 'ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை தூர அனுப்பிவிடலாம்" போன்ற பழமொழிகளை நம்பி இருந்து விடாதீர்கள், அதற்க்கும் சுகாதார வாழ்க்கைக்கும் 100 சதவீத தொடர்பு இல்லை அதுமாதிரி பழமொழி எல்லாம் ஆப்பிள் வியாபாரிகளின் ஆடித்தள்ளுபடி வியாபார யுக்தி.

ஆக்கம்: அதிரை ஜாஹிர் ஹுசைன்

34 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பசிக்கும், ருசிக்கும், ஆரோக்கியத்துக்கும் விருந்தாக, மருந்தாக அமைந்த நல்ல அருமையான கட்டுரை. உங்கள் தனி ஸ்டைலுக்கு வாழ்த்துக்கள். சகோதரர் ஜாஹிர்.

//நீங்கள் இன்னும் அவதிப்படு என கோக்/பெப்ஸியை அனுப்புவது மஹிந்த்ரா ராஜபக்சே தனமானது.//

ராஜபக்சே தனம் நல்ல கற்பனை

Zakir Hussain said...

Thanx Bro Thajudin. Your selection of photos also nice. When i visit your web there is always a pop up hide behind your web. when we close your pagwe it appears : it is staed with this. http://67.205.90.22/

With some pictures, most of the time with unwanted .

WHY IT APPEARS, and How to avoid it.

Zakir Hussain

Shameed said...

நல்ல பயனுள்ள கட்டுரை அனைவரும் படித்து பயன்படும் வகையில் கட்டுரை அமைந்துள்ளது.
(.நல்ல உணவு கண்டுபிடிக்கும் ஸ்கேனர் வாசம் அறியும் மூக்கு சின்ன வயது ஆண்கள் நிரந்தர கர்ப்பஸ்த்ரீ மாதிரி அலைவதுகண்டு ) இதுபோன்ற உவமையான வார்த்தைகளை சாப்பிட்டுவிட்டு யோசிபியல சாப்பிடாம யோசிபியல!!!!!!
ஆமா நீங்க நியூ காலேஜ்லே படிச்யல இல்லை மெடிக்கல் காலேஜ்லே படிச்யல!!!!!

Zakir Hussain said...

Thanx Bro.Shahul.

Of course i studied in NEW COLLEGE.

medical related matters i came to know through my work.

Zakir Hussain

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Excellent எழுத்து நடை.. கட்டுரை(க்கும்) ஒரு சொட்டு ! - Well done, keep it up

Sahib said...

பசிக்காக சாப்பாடு, நகைச்சுவையான அதே சமயத்தில் நல்ல அறிவான கட்டுரை. சகோதரர் ஜாகிர் ஹுசைனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

Meera Sahib
Sydney

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் ஜாஹிர், நானும் கவனித்துதான் வருகிறேன். இந்த நல்ல templet ஏதாச்சும் adsense தூக்கிட்டு வருது, அதை நீக்குவதற்கு முயற்சி செய்கிறேன்.

தற்காலிகமாக நீங்கள் உங்கள் pop-up windowயை disable செய்துவைய்யுங்கள்.

Shameed said...

வாசம் அறியும் மூக்கு பற்றி = நாம் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால் நம் உடல் உறுப்புக்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழக்கும் ஆனால் மூக்கு மட்டும் செயல் பாடு அதிகரிக்கும் பசியுடன் இருக்கும் போது எங்கோ இராச்சி தாளிக்கும் வாசம் மூக்கை துளைக்கும் தாளிப்பது கோழிய இராச்சியா அல்லது கருவாட்டு ஆனமா என்பதை மூக்கு சரியாக கண்டுபிடிக்கும் .இன்னும் மூக்கை பற்றி தெரிந்தவர்கள் மூக்கை (சிந்தலாமே )பற்றி எழுதலாமே
shahulhameed

Zakir Hussain said...

Thanx Bro Naina , Bro Meeran for your comments.

Bro shahul you are the right person to write about smelling tasty food . since you have written well about that why don't you write in detail. we also enjoy your write-up

Zakir hussain

Shameed said...

நன்றி பிரதர் ஜாகிர்
இப்போதுதான் படிகின்றேன் கூடிய விரைவில் எழுதுகிறேன்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வாங்க சகோதரர் மீரா சாஹிப், தங்களின் முதல் வருகைக்கு நன்றி.

தொடர்ந்து இணைந்திருங்கள், இன்னும் பல நல்ல தகவல்கள் வெளிவர இருக்கிறது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//இப்போதுதான் படிகின்றேன் கூடிய விரைவில் எழுதுகிறேன்//

இப்பவே நல்லா கலக்குறீங்க காக்கா..

Yasir said...

Jahir Nana....your article gave a me great relax from my weekend work pressure....last 2 days was hectic pressure ....tonight i got a time to read and comment on your article..sorry for the late coming.what a writing skills you have........its not just a article.....everyone has to follow in their life....how you are writing this serious matter in a very jovially...wonderful..hats off to you nanaa......we need more more more article from u like this one

Yasir said...

please read as
*in a very jovial way

Adirai khalid said...

சமூகத்தில் பசியோடு இருப்பவர்கள் ஒரு பக்கம், பசியற்று(அஜீரனக் கோளாறு) இருப்பவர்கள் மறுப்பக்கம்.உங்களின் கட்டுரை உச்சநிலை மனிதர்கள் அன்றடம் சந்திக்கக் கூடிய பிரச்சினை பற்றிய கட்டுரை மிக அருமை மேலும் அதை நகைச்சுவை உணர்வோடு கையாண்டுருப்பது மிக அளாதி, (நல்லவேலை இந்த கட்டுரையில் இன்றைய‌ இளைஞர்கள் வயிற்றில் சனியன் கேஸ்(gas) என்ற ரூபத்தில் ரூம் போட்டு உட்காந்து இருக்கின்றது என்று குறிப்பிடவில்லை நன்றி)
////
/சின்ன வயது ஆண்கள் நிரந்தர கர்ப்பஸ்த்ரீ மாதிரி அலைவதுகண்டு//// சிந்திக்க‌தூண்டும் வ‌ரிக‌ள், சிரிக்க‌வும் தோன்றுகிற‌து!!

இறைவன் மனிதனுக்கு இரண்டு அடிப்படை உணர்வுகளை கொடுத்துள்ளான். ஒன்று தன்னைப் பாதுகாக்கும் உணர்வு. இவ்வுணர்வே அவனை சாப்பிடத் தூண்டுகிறது.

மற்றது அவன் இனத்தைப் பாதுகாக்கும் உணர்வு. அதுவே அவனை இனவிருத்தி செய்யத்தூண்டுகிறது.

இதில் முன்குறிப்பிட்டது நிறைவேறினால்தான் பின்னுள்ளது நிறைவேறும். இப்போது மனிதன் எப்போது?, எப்படி? சாப்பிட வேண்டும் என்ற கேள்வியை நாம் எழுப்பினால் கேட்டால் நாம் பசிவரும்போது என்று சாதரன்மாக கூறுவோம் ஆனால் நாம் நம் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறைகளை, உணவு, பசி போன்ற விசயத்திலாவது கடைப்பிடித்தால் குறைவான உணவு., நோயற்ற வாழ்வை பதிலாக‌ கண்டுபிடிக்கலாம்.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும் சகோ.ஜாஹிர் அவசியமான கட்டுரை எழுதி வசியப்படுத்துகிறீர்களே அது எப்படி? நல்லதொரு ஆரோக்கிய கட்டுரை சுத்தமா பளிச்னு இருக்கு.ஊருக்கே உண்டான நையான்டியுடன் நல்ல செய்தி சொன்ன உங்களுக்கு கலிபோர்னியா வந்தால் நிச்சயம் அளவு சாப்பாடு உண்டு.

crown said...

Bro shahul you are the right person to write about smelling tasty food . since you have written well about that why don't you write in detail. we also enjoy your write-up.

Zakir hussain (I am also join with mr.zakir hussain kakka.Mr.shahul plz start your writing skill).

Shameed said...

Zakir,
கல்லூரி தினங்களில் நமக்கேற்பட்ட

சுஜாதா மோகம் உன் எழுத்துக்களில்

மிளிர்வது காண்கிறேன்.

நீ ஒவ்வொரு முறையும் புத்தி சொல்ல வரும்போது

கசப்பு மருந்தை தேன் குழைத்துத் தரும் உன் லாவகம்

பாராட்டத் தக்கது. புதுக் கல்லூரி விடுதியின்

பாரம்பர்ய விளையாட்டாம் கேரம் போர்டை

தவிர்த்து, அரியருக்கு பயந்து, நேரம் காலம் பாராமல் கண்ணாபிண்ணானு

கண் விழித்துப் படித்து நான் அல்சரையும் நீ அமீபியாசயும்

பெற்று அவதியுற்ற காலங்களில் தோன்றவில்லையே

இந்த "பசிக்கு சாப்பிட்ற" புத்தி.

நீ சொல்ற விதம் உன் சொல் பேச்சு கேட்கனும் போல

இருப்பதால் நீ இனியும் சொல்லலாம்.

சரியான நேர இடைவெளியில் சாப்பிடுவது,

அசைவமேயானாலும் ஆரோக்கியமாய் ஆக்கி உண்பது,

சைவமேயானாலும் தொட்டுக்கும் ஊறுகாய் ஒரு உதவாக்கறை

side dish என்பது போன்ற செய்திகளையும் சொல்லேன்.

ஏன்னா, நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்.

-சபீர்

சபீர்ருக்கா சாவன்னா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வாங்க சகோதரர்கள் யாசிர்,ஹாலித்,தஸ்தகீர், சாஹுல்.

சகோதரர் ஜாஹிர் பற்றி சபீர் காக்கவின் செய்திகளும் வேண்டும்கோலும் அருமை.

சகோதரர் சபீர் அவர்களின் கவிதை செய்தியை அதிரைநிருபர் பின்னூட்டத்தில் பதிந்த சகோதரர் சாஹுல் அவர்களுக்கு நன்றி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சாப்பாடுன்னா என்னமா கட்டுறாங்க பாருங்கப்பா ! தஸ்(கீர்)நீயா அளவு(ச்) சாப்பாடுன்னு சொல்றே !! நம்ப முடியலையப்பா !

crown said...

சாப்பாடுன்னா என்னமா கட்டுறாங்க பாருங்கப்பா ! தஸ்(கீர்)நீயா அளவு(ச்) சாப்பாடுன்னு சொல்றே !! நம்ப முடியலையப்பா !
-------------------------------------------------அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா எத்தனை தடவ ஒன்னா சாப்பிடிருப்போம் என்னைகாவது நான் லிமிட் மீறி சாப்பிடிருக்கேனா சொல்லுங்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவுன்(னு): நீயும் தான் நல்லா எழுதிவியே, கட்டிங்க் ஓட்டிங் இல்லாம வழக்கமான அடைப்புக் குறிக்குள்( ).. எழுதேன் ரசிக்கலாம், ஆனா ஒன்னு கேள்வியும் நானே பதிலும் நானேன்னு அடம் பிடிப்பவங்களோட லிஸ்டில் சேர்ந்திடாதமா என்னா சரியா !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// நான் லிமிட் மீறி சாப்பிடிருக்கேனா சொல்லுங்கள் // Yes ! (Un)limitடுடன் ஒத்துக் கொள்கிறேன்(பா) :)

crown said...

Zakir,
கல்லூரி தினங்களில் நமக்கேற்பட்ட

சுஜாதா மோகம் உன் எழுத்துக்களில்

மிளிர்வது காண்கிறேன்.

நீ ஒவ்வொரு முறையும் புத்தி சொல்ல வரும்போது

கசப்பு மருந்தை தேன் குழைத்துத் தரும் உன் லாவகம்

பாராட்டத் தக்கது. புதுக் கல்லூரி விடுதியின்

பாரம்பர்ய விளையாட்டாம் கேரம் போர்டை

தவிர்த்து, அரியருக்கு பயந்து, நேரம் காலம் பாராமல் கண்ணாபிண்ணானு

கண் விழித்துப் படித்து நான் அல்சரையும் நீ அமீபியாசயும்

பெற்று அவதியுற்ற காலங்களில் தோன்றவில்லையே

இந்த "பசிக்கு சாப்பிட்ற" புத்தி.

நீ சொல்ற விதம் உன் சொல் பேச்சு கேட்கனும் போல

இருப்பதால் நீ இனியும் சொல்லலாம்.

சரியான நேர இடைவெளியில் சாப்பிடுவது,

அசைவமேயானாலும் ஆரோக்கியமாய் ஆக்கி உண்பது,

சைவமேயானாலும் தொட்டுக்கும் ஊறுகாய் ஒரு உதவாக்கறை

side dish என்பது போன்ற செய்திகளையும் சொல்லேன்.

ஏன்னா, நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்.

-சபீர்.
------------------------------------------------
மெக்கானிக்கான அயல் நாட்டின் வாழ்வினூடே அன்றாட வாழ்வின் சாயல் சொன்ன சபீர்காக்காவின் வரிகள் அருமை.முகஸ்துதி இல்லாமல் பாரட்டி மேலும் எழுது நண்பா!வாழ்கையியல் வென்பா!என்று அன்பா அழதிருக்கிறார். நண்பனுக்குத்தானே தெரியும் நண்பனைப்பற்றி(ஸ்னே(க்)கம்)பாம்பின் கால் பாம்பறியும்.(நைனா தம்பி காக்கா இப்ப சரியா?).

Anonymous said...

ஜாகிர், உன் ஆக்கங்கள் எல்லாமே சூப்பர், பின்னூட்டமிட எனக்கு நேரம் கிடைப்பதில்லை. அனால் சாப்பாட்டுக்கு நேரம் கிடைக்காமல் போகுமா என்னா , அதான்
காலேஜில் படிக்கும்போது ராயப்பேட்டை safarila போய் முதல்ல சிக்கன் சூப் அப்புறம் முட்டை ஆப்பத்துடன் கார்லிக் சிக்கன் அடுத்து புரோட்டாவுக்கு என்னா நல்லா இருக்கும், கடைசியா பைனாப்பிள் ஜூஸ் ' ஆ அல்லது இஞ்சி டீயா என்று யோசித்தது ( இது இரவுக்கு சாப்பட்டுக்குதான், பகல் நேரத்தில மெனு மாறும் ) எல்லாம் மறந்து போச்சா. அது சரி யாரோ உன்னை முத்துபபேட்டையா என்று கேட்டார்களே என்ன கொடுமை ஜாகிர் இது.
அப்புறம் உனக்கு இரண்டு முறை போன் போட்டேன் கிடைக்கல நம்பர் மாத்திட்டியா? முடிந்தால் போன் போடு 1 925 548 3696 அல்லது அஞ்சல் எழுது sharfunm@gmail.com

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட கிரவ்ன் : நன்பனுக்கு(த்தான்) தெரியும் ஸ்(கேன்)நேக் மனசு ! நல்லாத்தானே(ப்பா) இருக்கு அதுசரி நன்பன் தோளோடு தோள்தானே கொடுப்பான்(ன்னு) கேடதுண்டு ஆனா கால் பக்கம் ஏன் போகிறான் ! (வாருவதற்கில்லையே?)

Yasir said...

நான் தான் கேட்டேன் காக்கா...அறிமுகமில்லாத ஒருவரை அவரின் பேச்சை.எழுத்தை வைத்து நீங்க இந்த ஊரா என்று கேட்பது கொடுமை அல்ல...நடைமுறை தானே காக்கா..முத்துப்பேட்டைகாரர்களுக்குதான் பெரும்பாலும் கிண்டலும் கேளியும் கலந்த நகைச்சுவை இருக்கும்
உதாரணத்திற்க்கு எங்க பெரியாப்பாவின் பேச்சுக்கள்
"ஆட்டை தொலைத்த ஒருவர் அவரிடம் வந்து என் ஆடு தொலைந்துவிட்டது
என்று சொல்ல அவர் ஆடு எப்படி இருக்கும் என்று வினவ...தாடையில் கொஞ்சம் முடி முளைத்து சிறிய தாடி இருக்கும் என்று பதில் தர...இவர் அப்போ ஆடி ஹஜ்ஜிக்கா போய்ட்டு வந்துச்சு என்று சொல்ல...வந்தவர் வெறுத்து ஒடி விட்டார்”
இன்னொன்று “ மொவுத்தான வீட்டில்,மையத்தை கட்டிலில் கிடத்திவைத்து
சுற்று நின்று பெண்கள் அழுது கொண்டு இருந்தார்கள்..அதில் ஒரு பெண் யேன் வாப்பாவை (மையத்தை ) ஒரு பெரிய கட்டிலில் போடுங்களேன் என்று அன்பினால் .கதற ..பக்கதில் நின்ற இவர் கூலாக “ அவர் (மையத் ) என்ன திரும்பியா படுக்க போகிறார் என்று பதில் தர..மரண வீடு என்பதையும் மறந்து இருவர் சிரித்து விட்டார்கள்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோ. யாசிர், நகைச்சுவை செய்திகள் அருமை.

நம்ம ஊரில் பலருக்கும் பேச்சிலே நகைச்சுவை உணர்வு உள்ளது, இவைக்கள் பற்றி யாராவது தொடர்கட்டுரை எழுதினால் நல்ல இருக்கும்.

சகோ. யாசிர் நீங்க ஆரம்பிங்களேன், நல்லா இருந்தா அதிரை நிருபரில் பதிந்திடலாம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வாங்க சகோதரர் ஷரபுத்தீன் நூஹு, தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

தொடர்ந்து இணைந்திருங்கள், நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

Yasir said...

முயற்ச்சி செய்கிறேன் சகோதரரே

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எல்லாம் சரி, நல்லா சாப்பிட்டுவிட்டு எழுதுங்கப்பா ! அப்புறம் பசி மயக்கத்தில எழுதினேன்னு சொல்லாமலிருக்கலாம்ல..

Zakir Hussain said...

Thanx to மு.அ. ஹாலித், i do agree on your comments. and thanx for your compliment.

To Sahrfudeen: i did not change my handphone number. Still Same lah !

Refer your email.

Zakir Hussain

Unknown said...

"மொவுத்தான வீட்டில் மையத்தை கட்டிலில் கிடத்திவைத்து சுற்று நின்று பெண்கள் அழுது கொண்டு இருந்தார்கள். அதில் ஒரு பெண் யேன் வாப்பாவை (மையத்தை ) ஒரு பெரிய கட்டிலில் போடுங்களேன் என்று அன்பினால் கதற, பக்கதில் நின்ற இவர் கூலாக, “அவர் (மையத் ) என்ன திரும்பியா படுக்க போகிறார்?" என்று பதில் தர, மரண வீடு என்பதையும் மறந்து, இருவர் சிரித்து விட்டார்கள்."

This kind of humerous comments are 'kaivantha kalai' for both Adirai and Muthupet pubs only!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு