Showing posts with label SMF. Show all posts
Showing posts with label SMF. Show all posts

நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள்? 6

அதிரைநிருபர் பதிப்பகம் | April 12, 2016 | , , ,

போலி ஆலிம். 

மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் நான் இருந்தபோது இரவு ஏழுமணிக்கு என் டெலிபோன் மணி கிணுகிணுத்தது. எடுத்துக் கேட்டேன். பேசியது நம்ம ஊர்காரர்தான்.

haji’ பாரூக், “பாரூக்! நம்மூரிலிருந்து… ஒரு ஆலிம் வந்திருக்கிறார்கள். அவருக்கு இன்று இரவு என் வீட்டில் விருந்து கொடுக்கிறேன். நீயும் வந்து கலந்து கொள்’’என்றார்.

ஆலிம் என்று மட்டும் விவரம் இல்லாமல் மொட்டை மொழுகட்டையாய் சொன்னால் யாருக்கு புரியும்? நம்மூரில் எத்தனையோஆலிம்கள் இருக்கிறார்கள். விவரம் முழுதும் தெரியாமல் இந்த நபரின் அழைப்புக்கு போய்விட்டால் அதன்பின் விளைவுகள் பெரும் தொல்லைகளை உண்டாக்கும்.

“வந்த விருந்தாளியை அழைத்துக் கொண்டு அங்கேபோ! இங்கே போ!” என்று சொல்வார்.

அவரை நாடி வந்த விருந்தாளியின். தேவைகளை பூர்த்தி செய்யும் பாரத்தை என் தலையில் கட்டி விட்டு நைஸாக அவர் ஒதுங்கிக் கொள்வார், இது அவரின் பாணி. 

“நம்மூரில் எனக்கு பெயர் தெரிந்த ஒரே ஆலிம்சா. ‘அப்துல் காதர் ஆலிம்சா’ மட்டுமே  அவர்களா வந்திருக்கிறார்கள்?’’ என்று கேட்டேன்.

’’இல்லை’’, வேறு ஒரு ஆலிம்சா வின் பெயரை சொன்னார் எனக்கு அவர் யாரென்று விளங்கவில்லை.

“இங்கே அவருக்கு தெரிந்த ஒரு பெரும் புள்ளி தன் காரில் அவரை இங்கேஅனுப்பி வைத்திருக்கிறார்.’’என்றார்.

ஆலிம்சாக்களும், மௌலானாக்களும் வெளிநாட்டிலும் சரி ,வெளியூரிலும் சரி, உள்ளூரிலும் சரி, பசையுள்ள பெரும்-பெரும் புள்ளிகளோடுதான் தொடர்பில் இருப்பார்கள். அவர்கள் முதலாளிகளின் சதுர சுகத்துக்கும் செல்வச் செழிப்புக்கும் புள்ளே குட்டிகளின் நல்வாழ்விற்கும் அல்லாஹ் இடத்தில் சதா மன்றாடி-மன்றாடி துவா கேட்பார்கள். இவர்கள் கை ஏந்தி வேண்டி கேட்ட துவா’ அல்லாஹ் இடத்தில் ‘கபூல்’ ஆகும். இந்த மௌலானாக்கள், ஆலிம்சாக்களின் கடைக்கண் கருணைப் பார்வை சாதாரண ஏழை எளிய மக்கள் மீதும் அன்றாடங் காய்ச்சிகள் மீதும் படுவதேயில்லை. இவர்களின் பார்வையின் நேர் கோட்டில் இந்த அப்பாவி ஏழைகள் வருவதில்லைபோலும். நம்ம ஊரு ஆலிம்சா வேறு ஒரு பெரிய புள்ளியின் காரில் வந்தது வரை சந்தோசம் இது யார் செய்த புண்ணியமோ என் தலைக்கு வந்த ஆபத்து தலப்பாவோடு போச்சு தொல்லை விட்டது.

அங்கே போய் பார்த்தபோது அவரை நான் தெரிந்து கொண்டேன். அவரை  எனக்கு  தெரியும். என்னை அவருக்கு தெரியாது, அவர் என்னை யாரென விசாரித்தார் பெயரைச் சொன்னேன், தெருவை சொன்னேன்  தந்தையின் பெயரை சொன்னேன், அவருக்கு என்னை யாரென்று விளங்கவில்லை. அவருக்கு விளங்காதுதான். அது அவரின் தப்பு அல்ல, காரணம் என் ‘தந்தை ஊரில் தோப்பு தொறவு’ தேங்காவாடி,சென்னையில் ஏற்றுமதி  இறக்குமதி பிஸினெஸ் ஏதுமில்லாமல் இருந்தவர். இவை எல்லாம் இருந்தால்தான் மனிதருக்கு உலகில் அரியாசனத்தோடு ஒரு சரியாசனம் கிடைக்கும். அது  ஒரு சறியாசனமாகவும் இருக்கும்.!

//கல்லானே யானாலும் 
கைப்பொருள் ஒன்று உண்டாயின் 
எல்லாரும் சென்றங்கு எதிர் கொள்வர்-
இல்லானை இல்லாளும் வேண்டாள்-
மற்று ஈன்றுரெடுத்த தாய் வேண்டாள்
செல்லாது அவன் வாய் சொல்//

[சங்க கால தமிழ் பாட்டி அவ்வையார் பாடியது] இந்தப் பாடல் பாடி இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் கூட இக்கருத்துக்களுக்கு எதிர் கருத்து பாடும் புலவனை இன்னும் எந்த தாயும் தன் கருவறையில் சுமக்கவில்லை]                                   அவருக்கு என்னை ஒரே வரியில் அறிமுகம் செய்து அவர் புரிந்து கொள்ளும் அளவுக்கு என்னிடம் எந்த அடையாளமும் இல்லை. ஆனால் அவரை எனக்கு தெரியும். செக்கடிப் பள்ளியில்  நடந்த ஒரு திருமணத்தின் போது ‘’புதுமணத் தம்பதிகள் இஸ்லாமிய நெறிமுறைப்படி தாம்பத்திய வாழ்க்கை நடத்துவது எப்படி?’’ என்று நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளையும் திருக்குர்ஆன் ஹதிஸ் வசனங்களையும் எடுத்துக்கூறி சுமார் முக்கால் மணி நேரம் பயான் செய்தார். அடுத்து அவர் கம்பன் எக்ஸ்பிரஸில்அடிக்கடி சென்னைக்கு செல்லும்போது ரயிலடியில் கண்டதுண்டு; பேசியதில்லை அவ்வளவே. 

ஒருமுறை நான் மலேசியாவிலிருந்து ஊர் வரும்போது பலவண்ணங்கள் கொண்ட அழகான இரண்டு முசலாக்கள் வாங்கி வந்தேன். விலை ரொம்பக்கூட. விற்றவரோ மலாய்காரர். மலாய்காரர்கள் எந்த வியாபாரம் செய்தாலும் மூன்று தலைமுறை வாரிசுகள் சும்மா உக்காந்து சாப்பிடுவதற்கான சொத்துக்களை வாங்கி போடும்அளவுக்கு ஆதாயம் வைத்து வியாபாரம் செய்ய மாட்டார்கள். 120 ருபாய் ஹதியா போட்ட தமிழ்மொழி பெயர்ப்பு திருக்குரானுக்கு 2,500 மலேசியன் ரிங்கிட் விலை சொன்னார் தாடியும் வைத்து தொப்பியும் போட்ட தமிழ் முஸ்லிம் [அதிரைகாரர்தான்] மலாய்காரர்கள் அப்படியெல்லாம் பூனைக்கு யானை விலை போட்டு பிழைக்க விரும்ப மாட்டார்கள். இன்றைய சாப்பாட்டிற்கு அல்லாஹ் கொடுத்தால் போதும்.என்பார்கள். “நாளைய சோத்துக்கு என்ன செய்வாய்?”என்று கேட்டால் nasi besok ada di thangan Allah. நாளைய சோறு அல்லாஹ்வின் கையில். nasi dan jodol tetap kan oleh Allah, ஒருவரின் ஜோடியையும் உணவையும் அல்லாஹ்வே நிர்ணயம் செய்கிறான்’’ என்பார்கள்.

நம்மூரில் ஆணுக்கு பெண்ணையும் பெண்ணுக்கு ஆணையும் ஜோடி சேர்ப்பது பணம், உயர் குலத்து ஆண்மகனை தாழ்குலத்து பெண்ணுக்கு நிக்காஹ் செய்ய வேண்டுமானால் மாப்பிள்ளையின் விலையோ  கிடுகிடுவென இமையத்தை எட்டும்.

முசலா விற்ற மலாய்காரரிடம் “மற்றதைவிட இந்தமுசலா விலை ரெம்பக் கூடுதலாக இருக்கிறதே!” என்றேன்.

ஏதோ ஒரு மத்திய கிழக்கிலுள்ள ஒரு அரபு நாட்டின் பெயரை சொல்லி “இது அங்கே தயாரிக்கப்பட்டது. இந்த நாடு தரமான கம்பளத்துக்கு பெயர்போனது நீண்ட நாள் உழைக்க கூடியது, சாயம் வெளுக்காது, விலை கூடத்தான் இருக்கும். தரத்தில் உயர்வு, விலை பற்றி கவலை படாதே தைரியமாக வாங்கு நான் உன்னை ஏமாற்றவில்லை” என்றார். 

அவர்கள் பொய் பித்தலாட்டம் செய்து யாவாரம் செய்ய மாட்டார்கள், நம்பி நான் இரண்டு கம்பளம் வாங்கினேன். ஒன்றை வீட்டுக்கு வைத்துக் கொண்டேன். அது இன்னும் எங்கள் வீட்டில் இருக்கிறது இன்னொன்றை நம்மூரில் ஒரு பள்ளிவாசலுக்கு ஹதியா கொடுத்து விட்டேன். மீண்டும் சில மாதங்களுக்கு பின் ஒருநாள் அந்தப்  பள்ளிவாசலுக்கு நான் சென்றபோது கம்பளத்திற்கு கனத்த வெள்ளை துணியில் உறைபோட்டு. அதன் அழகிய பல வர்ணங்கள் யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைக்கப் பட்டிருந்தது. அங்கிருந்த மோதினிடம் “ஏன் இந்த அழகான முசலாவை உறை போட்டு மூடி இருக்கிறீர்கள்?”  என்றுகேட்டேன்.
மேலே சொன்ன ஆலிம்ஸா ஒருநாள் இந்தப் பள்ளியில் இமாமாக நின்று தொழ வைத்த பின் “இந்த முசலாவில் நின்று தொழுகையில் ருக்குஹுக்கு போகும் போதும்’ சுஜுதுக்கு போகும் போதும், முசலாவின் கலர் கண்ணைக் கவர்ந்து அது தொழவைக்கும் இமாமின் நிய்யத்தை அல்லாஹ்வின் நாட்டத்தில் நின்றும் திருப்பி செய்தானின் வழிகேட்டில் கொண்டு போகிறது. ஆதலால், உடனே இந்த முசலாவுக்கு ஒருகனத்த வெள்ளை உறை போட்டுஅந்த கலரை தொழ வைக்கும் இம்மாமின் கண்ணில் படாமல் மறைத்து விடுங்கள்! என்று சொன்னார். அதனால் அதற்கு உறை போட்டு கலர் யார் கண்ணிலும் படாமல் மறைத்து விட்டோம்” என்றார்.

“அப்படியென்றால் வானவில்லின் வர்ண ஜாலங்களை படைத்தவன் அல்லாஹ்வா? இல்லை செய்தானா’?” என்று கேள்வி கேட்டால் வம்பு வரும். இந்த முசலாவின் கலர் உறுதியான ஈமான் கொண்ட ஒரு இமாமை செய்தானின் வழிகேட்டில் திருப்புமென்றால் இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான மத்திய கிழக்கு அரபு நாடு ஒன்றில் ‘இதை தயாரிக்க அனுமதிப்பார்களா? அப்படியே அது அங்கிருந்து எல்லோருடைய கண்களையும் குத்திவிட்டு தப்பித்து வந்தாலும் வேலூர் மதர்சாவிலும் எகிப்பது அல் அஸ்ஹார் இஸ்லாமிய பல்கலை கழகத்திலும் மார்க்கம் கற்று வந்த மேதைகள் நிறைந்த இஸ்லாமிய நாடான மலேசிய நாட்டுக்குள்ளே இவர்கள் எல்லோருடைய கண்ணையும் குத்திவிட்டு இது இங்கே காலெடுத்து வைக்கமுடியுமா?’ என்ற சந்தேகம் என்னுள் எழுந்தது* [மலேசியா தனிக்கை  இலாக்கா இஸ்லாமிய பகுதி இறக்குமதியாகும் சாமான்களின் மீது கழுகுக் கண்பார்வை பதித்து இருக்கும்].

“ஒரு அரசியல்வாதி தன் ஆரம்ப காலத்தில் எந்த கொள்கையை அல்லது ஒரு சித்தாந்தத்தை தீவிரமாக எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ பேசி வந்தாரென்றால் இறுதி சுற்றில் அவன் முதலில் பேசிய கொள்கைக்கு மாறாகவோ அல்லது எதிராகவோ திரும்புவான்” என்று நம்நாட்டு ஒருஅரசியல் கட்சி பற்றி ஆராய்ச்சி செய்து கனடா பல்கலை கழகம் ஒன்றில் டாக்டர் பட்டம் பெற்ற மலேசிய தமிழ் முஸ்லிம் ஒருவர் என்னிடம் சொன்னார். இந்தக் கோட்பாட்டின் கண்ணோடு கார்பெட் ஆலிம்ஸாவை நோட்டமிடும் போது அவர் சொல்லு எதிரான ஏதோ செயல் இருப்பதுபோல் ஒரு உணர்வு என்னுள் எழுந்தது. நான் ஹாஜி பாரூக் வீட்டுக்குள் நுழைந்த போது அந்த ‘கார்பெட் ஆலிம்சாவை அங்கே கண்டேன். என்னைப் பற்றி பலகேள்விகள் விசாரணைகள் நடந்தது. 

இஷா தொழுகை நேரம்வந்தது. ஒளு செய்ய ஆலிம்சா பாத்ரூம் போனார். அது ஒருசிக்கென அடுக்குமாடி வீடு, குளியல் அறையோடு கழிவறையும் ஒன்றாக இணைந்தே இருக்கும். ஒளு செய்து முடித்து வெளியே வந்த ஆலிம்ஸா “இந்த பாத்ரூமில் ஒளு செய்து விட்டு தொழுவது கூடாது!” என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். அங்கிருந்தவர்கள் எல்லோரும் ஒருவரையொருவர் முகத்தை பார்த்தார்கள். வொவ்வொருவர் முகத்திலும் “ஏன்?” என்ற கேள்விக் குறி ஊஞ்சலாடியது. ஆனால் யாரும் ஏதும் கேட்கத் துணியவில்லை. ஏன்? என்ற கேள்வி கேட்டதால் எத்தனையோ உண்மைகள் வெளிவந்து உலகம் செழித்திருக்கிறது. இங்கே கேட்க விரும்பினார்கள். ஆனால் யாரும் கேட்க துணியவில்லை. பூனைக்கு மணி கட்டுவது யார்’ என்ற Dilemma நிலவியது.

கொஞ்ச நேர அமைதிக்குப் பின் நான் வாய் திறந்தேன்.

“ஏன் கூடாது?” என்று  கேட்டேன்.

என்னை வெறித்து  ஒரு பார்வை பார்த்தது விட்டு ஆலிம் சொன்னார்.

“குளியல் அறையோடு சேர்ந்து கழிவறையும் இருக்கிறது. கழிவறை நஜிஸ், அது  செய்த்தான் தங்குமிடம் அவன்அங்கே நிற்பான், நாம் தொழும்போது நம்மை அல்லாவின் நிய்யத்தி நின்றும் திருப்புவான்” என்றார். அவர் இதை சொன்னதும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் “ஏன் கூடாது ?” என்ற கேள்விக் குறி ஊஞ்சல் கட்டி ஆடியது. ஆனால்  விளக்கம் கேட்பார் யாருமில்லை. கேள்வி கேட்க பயந்தார்கள். ’I Wanted to ask a question but afraid to ask’ என்ற தலைப்பில் ஒரு ஆங்கில புத்தகம் வெளியானது. நல்ல விற்பனை கேள்வி கேட்பதனால் விளையும் நன்மைகளை இந்நூல் பட்டியளிடுகிறது. 

மலேசியாவில் உள்ள எல்லா வீடுகளும்… வீடு கட்டும் ஒப்பந்ததாரர்களால்  மட்டுமே கட்டப்படுகிறது. நம் ஊரைப் போல அவரவர் விருப்பம் வசதிக்கு ஏற்ப மடல் மாடலாக சொந்தமாக கட்டமுடியாது.பெரும் கோடீஸ்வரர்கள் மட்டுமே சொந்த பிளான் போட்டு விருப்பமான மாடலில் விதவிதமான வீடு கட்டமுடியும். அதுவும் நகராட்சி வீட்டு பிளானுக்கு ஒப்புதல் கொடுத்த பின்னே வேலைகள் தொடங்க வேண்டும். கோடி கோடியாய் கொட்டி கட்டும் அதுபோன்ற வீடுகளில் வேண்டுமானால் குளியல் அறை தனியாகவும் செய்த்தான் தங்குவதற்கு வசதியாக கழிவறையும் கட்டலாம். கழிவறையில் செய்த்தான் தங்குவான் என்றால் வீட்டுக்கொரு செய்த்தான் உண்டு.

“ஏன் ஆலிம்சா? கழிவறையில் செய்த்தான் தங்குவான் என்றால் மலாய்கார [இஸ்லாமிய] பெண்கள் பெரும்பாலும் வேலை முடிந்து வந்து வீட்டிலேயே தொழுகிறார்கள். அப்படி இருக்க இஸ்லாமிய அரசான மலேசிய அரசும், ஆலிம்கள்சபையும் குளியல்அறையும் செய்த்தான் நிற்கும் கழிவறையும் இணைத்துக் கட்டி மூமீன்களின் தொழுகையில் இடைஞ்சல்கள் செய்ய செய்த்தானுக்கு வாய்ப்பு கொடுப்பார்களா?” என்ற கேள்வியை ஆலிம்ஷாவிடம் கேட்டேன். என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு “சொன்னால் விளங்காது, கித்தாபில் இருக்கிறது காட்டுகிறேன்” என்றார்கள்.

அங்குள்ளவர்கள் எல்லோருக்கும் இரவு சாப்பாடு வந்து விட்டது. காடை பிரட்டல், கோழி பொரியல், Bread இடியப்ப சோறு கடப்பாசி சேமியா அன்னாசிப் பழம், ஆப்பிள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை எல்லோருமே மஜாவா ஒரு வெட்டு வெட்டினோம். ‘உண்டகளைப்பு தொண்டர்க்கும்’ உண்டல்லவா? கொஞ்ச நேரம் ஓய்வு.

ஓய்வுக்குப் பின் மலேசியா பற்றிய பொலிடிக் பேச்சு! திடீரெனஅலிம்சா தனக்கு handbag தூக்கி வந்த ஒரு பையனை காட்டி “இவனை யாரென்று தெரிகிறதா?” என்று கேட்டார்.

“ஒ! தெரிகிறதே... நம்மூர் பையன் தான் மலையன் மன்சியன் சோத்துக் கடையில் வேலை பார்த்தான்” என்றார் பாரூக்.

“இவன் வாப்பாவின் மையத்தை நான்தான் எடுத்தேன்” என்று விருந்துக்கு வந்த எல்லோரையும் பார்த்து சொன்னார். அங்கு இருந்தவர்கள் முகமெல்லாம் அந்தப் பையனின்  பக்கம் திரும்பியது. அவன் சபை நடுவே அவனுக்குஏற்பட்ட அவமானத்தால் தலை குனிந்து முகம் பார்க்க முடியாமல் நிலம் பார்த்தான். அவன் கூனிக் குறுகி நின்றான். அவனைஅவமானப் பிசாசு பிடுங்கி-பிடுங்கி தின்றது. அவன் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது. இதைக் கண்ட மற்றவர்கள் அவனை காணாதது போல் பாவனை செய்து வேறு வேறு திசை நோக்கி முகம் திரும்பினார்கள். தான் செய்த இந்த ‘மையத்து எடுப்பு’ தர்மத்தை ஊறார் அறிய சபை நடுவே ஊளை இட்ட அந்த ஆலிமின் சாயம் வெளுத்து விட்டது. எது எப்படியானாலும் கைதவறிய கண்ணாடி பாத்திரமும் வாய் தவறிய சொல்லும் மீண்டு வரபோவதில்லை. வந்தவர்கள் எல்லாம் நொந்தமனதோடும் வெந்த மனதோடும் வெளியேறினார்கள்.

ஆலிம்சாவை விருந்துக்குஅழைத்து வந்த பையனை எனக்கு நன்றாக தெரியும் மலேயன் மன்சியன் சோத்து கடையில் அதிக நாள் தொடர்ந்து வேலை பார்த்தான். சாப்பாட்டு நேரங்களில் அங்கு போக நேர்ந்தால் இவன் வேலை செய்த அந்த கடைக்குத்தான் போவேன். நல்லகவனிப்போடு நாக்குக்கு ருசியான உணவு கிடைக்கும் அவ்வளவு சுவை. இருந்தும்கூட அல்லாஹ்வுக்கு அஞ்சிய குறைவான விலை. “அல்லாவுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று ஊருக்கு உபதேசித்து விட்டு வெளியூருக்கு சென்று வட்டிக்கி கொடுத்து வாங்குகிறார்களே அவர்களைப்போல் இவர்கள் இல்லை. நளபாகம் என்று சொல்வார்களே அதை இங்கேதான் காணலாம். “இன்று நளமஹாராஜா மீண்டு வந்தால் இங்கே வந்து மீண்டும் சமையல் கலை கற்று செல்வார்” என்றால். அது மிகையாகாது.

ஒருநாள் நான் அந்த சோத்து கடைக்கு சென்றபோது அந்தப் பயனை கூப்பிட்டு சொன்னேன்’ ’கையும் காலும் ஒழுங்காகவும் உழைக்க சக்தியும் அல்லாஹ் உனக்கு கொடுத்திருக்கிறான். நீ என்ன நொண்டியா முடமா!? உன்னை பெற்று வளர்த்த தகப்பனின் மையத்தை எடுக்கும் பாக்கியத்தை வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டாயே?’’ என்றேன்.

‘என் வாப்பா சிலகாலம் என்னுடனும் என்தாயாருடனும் மனஸ்தாபமாக இருந்தார்கள். வீட்டில் சாப்பிடுவதில்லை, ஏதாவது சிறுசிறு யாவாரங்கள் செய்து அந்த வருவாயில் தன் வவுத்தை கழுவிக் கொண்டிருந்தார். யார் சொல்லியும் கேட்க்காமல் ’தான் பிடித்த முயலுக்கு மூணுகால்’ என்று உடும்பு பிடித்து கொண்டு வம்பு பண்ணிக் கொண்டிருந்தார். ஒருவருஷம் சொச்சம் அவர் பொழப்பு இப்படி ஓடியது.

நான் மலேசியாவிலிருந்து ஊர் போனதும் அவருக்கு வேண்டிய நாலு பெரிய மனிதர்களிடம் நடந்த நடப்பை சொன்னேன். அவர்கள் எங்களையும் என் வாப்பவையும் சமாதானம் படுத்தி விட்டார்கள். என் வாப்பாவும் இந்த ஆலிம்சாவும் ரெம்ப நெருங்கிய கூட்டாளிகள்  நகமும் சதையும்போல ஒட்டியே இருந்தார்கள். நாங்கள் உறவாகிபோன இரண்டுஆண்டுகளுக்குப் பின் என் வாப்பாவின் உடல்நிலை சரி இல்லாமல் போய் மூன்று மாதம் சொச்சம் பாயோடு கிடந்து மௌத்தாகிபோனார்.

மூனு மாதம் தொண்ணூறு நாள் பாயோடு கிடந்த என் வாப்பாவை   ஒரு நாள் கூட ஊட்டுக்கு வந்து எட்டிபாத்து “என்ன சேதி? சொவமா ஈக்கிரியா?” என்று வாய் திறந்து ஒரு வார்த்தை கூட இந்த ஆலிம்ஷா கேட்டதில்லை. என் வாப்பா மௌத்தாப் போன செய்தி காதில் பட்டு வேகு வேகு என்று ஓடிவந்து ‘’உன் வாப்பாவின் மையத்தை நான்தான் எடுப்பேன். அவன் மூணுவருசத்துக்கு முன்னே “நான் மௌத்தாப் போனதும் என்னுடைய மையத்தை நீதான் எடுக்க வேண்டும்.” என்று என்னிடம் ஒசியத்து சொல்லி விட்டான். நானும் சரியென்று சொல்லி விட்டேன். நான் கொடுத்த என் வாக்கை நிறைவேற்ற வேண்டும். தவறினால் நாளை ஆஹ்ரத்தில் அல்லாஹ்வுக்கு வாக்கு தவறியதற்கு நான் பதில் சொல்லி ஆகவேண்டும். அந்த வாக்கை இப்போது நிறை வேற்றாவிட்டால் ஆஹிரத்தில் என் கழுத்தில் முடிச்சு போட்டு தொங்க விடும் பாவச்சுமையை என்னால் தூக்கி சுமக்க முடியாது” என்று வம்படி வழக்கு செய்தார் ஆலிம்சா.

மத்தியஸ்தம் பன்ன வந்தவர்கள் எல்லாம் அங்குட்டும் பேசினார்கள், இங்குட்டும் பேசினார்கள், இவர்கள் முள் இல்லா தராசுகள். முடிவில் வலுத்தவன் பக்கமே சாய்ந்து விடுவார்கள். இங்கேயும் அதுதான் நடந்தது “காவிரிக் கரையில் மரமாய் இருந்தால் வேருக்கு யோக மடி” என்ற பார்முலாவை தெரிந்து வைத்திருந்த மத்தியஸ்த்தர்கள் வழக்கம் போல் கனத்த கைக்கு வழக்கை சாதகமாக முடித்துக் கொடுத்து  ஆலிம்சாவுக்கு வேண்டியப்பட்டவர்கள் ஆனார்கள். அதாவது மகன் எடுக்க வேண்டிய வாப்பாவின் மையத்தை ஆளிம்சாவே எடுக்கலாம். ‘வாப்பா உயுரோடு இருக்கும்போது சொன்னஒசியத்து படிஇது சரி.’

ஆக, கடைசியில் ஆலிம்சா ‘ஒசியத்’ என்ற ஒரு அரப் மொழி சொல்லை மூலதனமாக போட்டு ஒரு மனிதனை இல்லை, இல்லை ஒரு குடும்பத்தையை அடிமையாக்கினர். ஒருதலை பஞ்சாயத்துக்கு செவிசாய்த்த மகனின் சுயமரியாதை இனி ‘நன்றிகடன்’’என்ற பெயரில் காற்றோடு காற்றாக கலந்து கரையும். இரவென்றும் பகலென்றும் நேரங்காலம் பார்க்காமல் ஆலிம்சாவின் கூப்பிட்ட குரலுக்கு ஓடிப்போய் கூனிக்குறுகி கைகட்டி நிற்க வேண்டும் .இரவெல்லாம் ‘’லொக்- லொக்’ என்று ஆலிம்சா இருமி துப்பிய எச்சில் படிக்கனை கொண்டு போய் குப்பை மேட்டில் கொட்டிவிட்டு குளத்தில் புளி போட்டு கழுவி கொண்டு வரவேண்டும்.

“எம்மவளுக்கு பொறக்கிற பொறை மாஷம். ’தாத்தாக்கா- புத்தக்கா’என்று இருக்கிறாள். புள்ளே பொறக்கிற வரை ராத்திரிக்கி ராத்திரி ஊட்டுலே வந்து ஒன்பொண்டாடியை துணைக்கு படுக்கச்சொல்லு”. நாளக்கி ராத்திரி மெயுளுக்கு மதராஸ் போறேன். செத்தே எனேடே ஹேன்டு பேகை ரயில் டேஷன் வரை தூக்கிட்டுவந்து கொடு /=/ பொறந்த பச்ச புள்ளயோட அனையார துண்டுகளை எல்லாம் ஒன்பொண்டாட்டிடே சொல்லி கொளத்துலே போட்டு கழுவி கொடுக்க சொல்லு/-/ இதுபோன்ற கட்டளைகளுக்கு எல்லாம் அவனும் அவன் குடும்பமும் தலைசாய்த்தே ஆக வேண்டும். காரணம் வாப்பாடே ‘ஒசியத்து.’[இதை இத்தோடு முடிப்போம்.அடுத்து ஆலிம்சாவின் Integrity பற்றி நாம் சற்று ஆராய்வோம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஹாஜி பாரூக் வீட்டில் ஆலிம்சா இரவு உணவு உண்ட சுமார் எட்டு பத்து மாதங்களுக்கு பிறகு ஒருநாள் ஹாஜி பாரூக்கிடமிருந்து எனக்கொரு டெலிபோன் கால் வந்தது, எடுத்துக் கேட்டபோது.

‘’செய்தி தெரியுமா?’’ என்றார்.

“என்ன செய்தி?” என்றேன்.

“ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு நம்மூர் ஆலிம்சா ஒருவருக்கு வீட்டில் விருந்து கொடுத்தோமே! நினைவிருக்கா?”என்றார். 

“ஏன்னில்லை? மறக்கமுடியாத என்றும் பசுமையான நினைவுகளை நெஞ்சில் பதித்து சென்ற ஆலிம்ஸா அல்லவா அவர்? ‘இந்த பையனின் வாப்பாவின் மையத்தை ‘நான்தான்’ எடுத்தேன்’ என்று சபை நடுவே சொன்னவர் அவரல்லவா? அவரையா ‘நெஞ்சம் மறக்கும்?!’’ என்றேன்.

“இப்போ ஒரு செய்தி வந்திருக்கு”என்றார்.

“ஏழு லட்ச ரூவா ஒருவரிடம் வட்டிக்கு, கொடுத்த வகையில் வட்டியும் வராமல் கைமுதலும் வராமல் கலங்கி நிற்கிறார்” என்று பாரூக் சொன்னார்.

வாங்கியவர் நாணயமானவர்தான், சென்னையில் பல பிசினஸ். இதற்கு முன்னர் பலஆண்டுகள் வாங்கல் கொடுக்கல் நடந்த வகையில் அரிச்சந்திரன் போல சொன்னால் சொன்னபடி நடந்திருக்கிறார். யாருடை போறாத காலமோ யாவாரத்தில் சறுக்கல் ஏற்பட்டுவிட்டது. அல்லது ஒசியத்தை கருவியாக வைத்து ஆலிம்சா ஒரு குடும்பத்தையே தனக்கு அடிமையாக்கி ஆட்டிப் படைத்தது “இவன்வாப்பாவின் மையத்தை நான்தான் எடுத்தேன்” என்று போகுமிடமெல்லாம் தண்டோரா அடித்து அந்த அப்பாவி பையனை நாலு பேருக்கு முன்னால்  அவமானப்படுத்திய பிரதிபலிப்போ என்னவோ அல்லாஹ் இவரை பிடிக்க வேண்டிய நேரத்தில், பிடிக்கவேண்டிய இடத்தில் பிடித்து விட்டான் இப்போ ஆலிம்சாவின் குட்டு வெளிப்பட்டு விட்டது. ஆலிம்சா / ஹாஜியார் / என்ற வேஷங்கள் கட்டி ஆடியபோலி நாடகம் பலபேர் அறிய அம்பலத்துக்கு வந்தது. ஊர் சிரித்த்து.

இன்ஸா அல்லா அடுத்தடுத்த பதிவுகளில் சந்திப்போம்.

S. முஹம்மது பாரூக்

பினாங்கு சபுறுமாப்புளே - 4 [முதல் பகுதி...] 7

அதிரைநிருபர் பதிப்பகம் | January 12, 2016 | , ,


ராத்திரி பூரா உம்மா சொன்ன பேய்க்கதையே கேட்டுட்டுபடுத்த மம்மசங்கனி கொஞ்சம் நேரஞ்சென்டு ‘திடுக்’குண்டு பயந்து கொளறிகிட்டு பாயே உட்டு எந்திருச்சான். 

ராத்திரி படுத்ததும் கண்ணை கொண்டேயி ஒரே சொறுவா சொறுவி நெத்திரை வந்து மையத்து கட்டையா போட்டுடுச்சு. ராத்திரிபூறா –ஒரே பேய்மினாம் - பேய் மினாமா வந்து ‘திடுக்-திடுக்’ கின்டு பயந்து குளறி கிட்டு – எந்துரிச்சு – எந்துரிச்சு படுத்தான். நெஞ்சுகுள்ளே திடுக்கு-திடுக்குண்டு அடுச்சுகிட்டு கொஞ்சங் நெத்திரையை வரலே! பொறண்டு -பொறண்டு படுத்துப் பாத்தான்.

அப்படி செஞ்சும் கண்ணுலே நெத்திரை கடுகு அளவும் வரலே. பாயே சுருட்டி எடுத்து கக்கத்துலே வச்சுக்கிட்டு கூடத்தை உட்டு ஊட்டுகுலி உள்ளே போய்படுத்தான்.

ஊட்டு குளியில் படுத்து’ அப்பாடா!’ என்று நல்லா கண்ண சந்து தூங்கிய கொஞ்ச நேரத்தில் அங்கே அடுக்கி வச்சிருந்த அடுக்கு பானை சட்டிபொட்டி எல்லாம்’கடப்புடா திடுப்புடு-தடபுடா’ என்ற பெரும் சத்தத்தோடு கீலே உலுந்து உருண்ட. சத்தம் கேட்டு திடுக்குன்டு பயந்து கொளரிகிட்டு எந்திரிச்ச மம்மசங்கனிமேலே கறுப்பு பூனை ஒன்னு ஏறி ’’மியாவ்!மியாவ்’’ என்று கத்திக் கொண்டு ஓடியது. அந்தப் பூனை பயந்து கண்ணை மூடிகிட்டு ஓடிய வேகத்தில் அங்கே ஏற்றி வைத்த அரிக்கன் லாம்பு மேலே உலுந்து, லாம்பு சாஞ்சு மண்எண்ணை எல்லாம் கீலே ஊத்தி ஊடுபூரா நெருப்பு புடிக்கப் போச்சு! நல்லவேளே! அல்லாஹ், நெருப்பு பத்தி ஊடு சாம்பலா போகமே காப்பாத்துனான்! 

அந்தப் பூனை அலறி அடிச்சு பயந்து கண்ணை மூடிகிட்டு ஓடுன ஓட்டத்துலே அடுக்கு பானை மேலே மோதி பானை எல்லாம் ஒன்னுக்கு மேலே ஒன்னு ‘’தடப்புடா-கடப்புடா’’ என்று சரிந்து உளுந்தது. பானை சரிந்து உளுந்த சத்தம் கேட்டு உம்மா தங்கச்சி எல்லாம் பதறிக்கிட்டு வாரிச்சுருட்டி எந்திருச்சு ’’கள்ளன்! கள்ளன்’’ என்று சத்தம் போட்டு கத்தினாங்க.

சத்தம் கேட்டு அடுத்த ஊடு அண்டுன ஊட்டுகாரவோ எல்லாம் கம்பையும் தடியையும் எடுத்துக் கிட்டு ஆளாளுக்கு ஓடிவந்தாஹ. மூனாம் நம்பர் வீட்டு வாலேமீன் முள்ளு மீசை சீனி மீராஸா தாழை வெட்டும் நீண்ட அறுவாலே கையிலே எடுத்துக் கிட்டு ’’எங்கேடா அந்த அம்மாளே......... மகன்? அவனை இங்கேயே இழுத்து போட்டு கொடுவாமீனு போல கண்ட-துண்டமா வெட்டி கூறுபோட்டுடுறேன்’’ என்று உறுமிக் கொண்டு புலிபோல் வெளியை பாய்ந்தார். கடசியா பாத்தா கள்ளன் வரலே. வந்தது கறுப்பு பூனை என்றதும் ரெத்த தாகத்தில் தவித்த வாலேமீன் மீசை சீனி மீராசாவின் தாழே வெட்டும் வீச்சு அறுவா ஏமாந்து போனது...!

‘’தெரு முளுதும் ஒரே பேய்பெறலியா ஈக்கிது. வயசு பையன் தனியா படுக்கப்புடாது. எங்கிட்டனேயே படுத்துக்கோண்டு’’ உம்மா சொன்னதும் பாயே கூடத்துலே போட்டு உம்மாவும் மம்மசங்கனியும் படுத்து கொண்டார்கள். கொஞ்ச நேரத்தில் மம்மசங்கனிக்கு நெத்திரை வந்து கண் மசங்கி பாயிலே உலுந்து படுத்தவன்தான். அப்பொறம் பாத்தா அங்கிட்டு இங்கிட்டு அசையாமே மையத்து பொணமா கெடந்தான். இடுப்பிலே வுடுத்திய வேட்டி இடுப்பை உட்டு சோந்துபோய் மொட்ட கட்டையாய் பொறண்டு சோந்து கெடந்தான். உம்மா முளிச்சு பாத்துட்டு இடுப்பு வேட்டியை எடுத்து மூடி ஒலுங்கு பண்ணி போட்டாங்கோ. தான் பெத்தபுள்ளேதானே? வேறே யாரும் பொறர்த்தியாறா? செஞ்சா என்ன? கொஞ்ச நேரத்தில்.. அவன் பொண்டாட்டி பக்கீர் பாத்துமா மண்எண்ணையை சதுரம் முளுதும் ஊத்தி கிட்டு கொளுத்திக் கிறமாதிரி ஒருமினாம் கண்டு திடுக்குன்டு பயந்து பதறி கொலரிகிட்டு பாயை உட்டு எந்திரிச்சான். அவன் சதுரம் முலுக்க குப்புண்டு முத்து முத்தா வேத்து போயி போத்தி கிட்ட போர்வை தலே வச்சு படுத்த தலவாணி விருச்சு படுத்தபாயி யெல்லாம் தொப்பு தொப்பா நொனஞ்சு போச்சு. 

அதுலேந்து அவனுக்கு பயமும் மனக்கொலப்புமும் பதட்டமும் வந்து, கண்ணை கொஞ்சம் மூடுனால் அவன் நெஞ்ஜூ மேலேயாரோ ஒரு வயசு பொண்ணு ஏறி உக்காந்துக்கிட்டு கொரவளையை புடிச்சு நெறிச்சு ’’அடே! கலிச்சலுலே போவா! நீ மண்ணா போயி மடிவா! அம்மா வாத்து ஒன்னே வாறிக்கிட்டு போவ! பொக்கடை கெளம்பி பொக்குண்டு போவா! ஒனக்கு காலரா வந்து நீ கதறி துடிச்சு அலுவ-அலுவ ஒன்னே வாறி சுருட்டி கொண்டுகிட்டு போவ! பினாங்குக்கு போனவன் அப்புடியே திரும்பி வராமே கப்பலுலேயே மல்லாக்க உலுந்து மாண்டுடுவா! 

ஒனக்கு களுத்தை நீட்டி வாக்கப்பட்டு வந்து என்ன சொகத்தேடா கண்டேன்? பினாங்கு சபுறு மாப்புலேன்ட ஆசைப்பட்டு வாக்கப்பட்டு வந்தேனேடா? ஆசைப்பட்டு வந்தஎனக்கு ஒரு பினாங்கு பத்தைகைலி உண்டு மாடா? பூவெண்ணை போத்தல் உண்டு மாடா? பொட்டி பீஸ்பொடவை உடுத்தி கலஞ்ஜேனாடா? ‘’நைலெக்ஸ் ஸாரி உடுத்திக் கலாம்’ முண்ட ஆசை யோடு தானேடா ஒனக்கு களுத்தை நீட்டினேன்.? நீட்டிய களுத்துக்கு கருசமணி பொன்னுக்கு எடமணி செஞ்சு போடவக்கத்த பயலுக்கு வாக்கப்பட்டு வந்தேனே! நான் பாவிமவ? பினாங்கு கடப்பாசி, கிளிசாப் தைலம், ஓடிகுலோன் போத்தல் உண்டுமாடா? பினாங்கு பத்தை கைலி உடுத்திக் கலந்சுக்கலாம்’ முன்டு ஆசையோட தானேடா பினாங்கு சபுறு மாப்புளேலேண்டு வாக்கப்பட்டு வந்தேன். அப்புடி ஆசைப்பட்டு வந்து நான் என்ன சொகத்தேடா கண்டேன்? என் ஆசையிலே கொல்லி வச்சுட்டு இப்போ கூதகாலத்துலே பொன்ட்டாடியே கட்டிலிலே சொகமா கட்டிபுடிச்சு படுத்து பொரண்டுட்டு காலங்காத்தாலே மாமியாகாரி அடிச்சுகொடுக்கும் கோலி முட்டை தேத்தண்ணி குடிச்சிட்டு கொளத்துலேபோய்குளிக்கலாமுண்ட ஆசையோட வந்துட்டியா?’’ என்று அந்த உருவம் கர்ஜித்தது.

‘’நான் புளியங் கொம்பை புடிக்கவல்லோ புவிமேல் தவங்கெடந்தேன்! நாம்பாவி புடிச்ச கொப்பு முருங்ககொப்போ? புடிச்சகொப்பு முருங்ககொப்போ’’ என்று மம்மசங்கனி நெஞ்சுமேலே ஏறி உக்காந்த அந்த பேய்ராகம் போட்டு பாட்டும் பாடியது. இசைஞானமும் குரல் இனிமையையும் கவிதை புனையும் திறனும் கொண்ட சர்வகலை பேயே மினாமில் கண்டது முதல் மம்மசங்கனிக்கு ராவுபூரா நெத்திரையே அத்துப் போச்சு. நெஞ்சுக்கு மேலே ஒரு மலையை தூக்கி வச்ச மாதிரி ஒரே பாரம். மூச்சுதெணறி உஸுரு போற மாதிரி வந்துடுச்சு. பக்கத்துலே படுத்து கெடக்குற உம்மாவை எலுப்பக்கூட வாய் வறலே.! நல்லவேலே சுபுஹு தொளுவைக்கு ‘’அல்லாஹுஅக்பர்!அல்லாஹு அக்பர்!’’ என்று வாங்கு சொன்னாங்க. வாங்கு சத்தம் கேட்தும் பேய் மம்மசங்கனி நெஞ்ச உட்டு எறங்கிஓடிப்போச்சு. பேய் ஓடிப்போனதும் மம்மசங்கனியோட சதுரம்பூரா ஒரே முத்து-முத்துவேர்வை குப்புண்டு வேத்து விறுவிறுத்து போயி பேச்சு-மூச்சு இல்லாமே மசங்கி அங்குனேயே அசையாமே மையத்தா கெடந்துட்டான்.. கொஞ்ச நேரஞ்செண்டதும் ஊசார் வந்து ரெண்டு கண்ணேயும் முளிச்சு பாத்தான். கெ லக்கு வெளுத்து நெலம் தெளிஞ்சுருச்சு! அவனோட மூத்த தங்கச்சி பாத்து முத்து வெறும் தேத்தண்ணியில் முட்டை அடிச்சு ஒரு கொவளே நெறைய கொண்ணாந்து வச்சு ’’ குடி காக்கா! நம்மூட்டு கோலி உட்ட முட்டை அடிச்சவெறும் தேத்தண்ணி’’ என்றாள்.

அதைக் குடிச்ச மம்மசங்கனி பெட்டியை தொறந்து தேங்காபூ டவளு, கோள் கட்டு பல்லு பசை, பல் விளக்குற புருசு ,சோப்புடப்பா, யார்ட்லி சோப்பு 555 தீக்காலி மாசிகரெட் ஒரு டின்னு, Ronson Lighter எல்லாம் கையிலே எடுத்துக் கிட்டு குளிக்கப்போனான். 

போகும்போது எதுக்குகே வந்த காது கொடஞ்சான் கார் மீராசா ’’அடே! மம்மசங்கனிய?! எப்போடா வந்தா?’’ என்றான்.

’’அடே! கார் மீராசாவா? நேத்து வந்தேண்டா! நல்லா ஈக்கிரியா?’’என்றான்.

’’ஈக்கிறேன்டா! ஆமா,ஒன்னே பாத்தா ரெம்போ எளச்சு போனா போலே இருக்குகே? 

அது சரி எங்கே வந்து எறங்குனா?’’ யென்றான்’ கார்மீராசா.

’’நாகபட்டினத்துலே தான்! அதுதானே நமக்கு வசதி! எறங்குனதும் கார் புடிச்சு சாயங்காலமே ஊருக்கு வந்து சேந்துடலாம்’’ என்றான் மம்மசங்கனி.

’’அடே! நா அதே கேக்கலேடா, யார் ஊட்டுலே வந்து எறங்குனா? உம்மா ஊட்டுல்லேயா? இல்லே பொண்டாட்டி ஊட்டுலேயா?’’ என்றான் கார்மீராசா.

’’உம்மா ஊட்டுலேதான் வந்து எறங்குனேன். மொத சபுறு உம்மா ஊட்டுலேதானே எறங்கணும். அதானே வளக்கம்!’’என்றான் மம்மசங்கனி.

“ஆமா.... ஒனக்கு..... ஒரு.. புல்லே பொறந்திருக்கிறதா கேள்விபட்டேனே? புள்ளயே தூக்கி பாத்தியா? புள்ளேய உன்னேபோல கருப்பா இருக்கா? இல்லே உம்மாவைபோல செவப்பா இருக்கா?’’என்று கேட்டான் கார்மீராசா.

இதைக் கேட்ட மம்மசங்கனி பதில் சொல்ல தயங்கினான். இப்படி கொடைஞ்சு-கொடைஞ்சு கார்மீராசா கேள்வி கேப்பான் என்று மம்மசங்கனி நெனைக்கலே. விவஸ்த்தை இல்லாமல் கேள்வி மேல் கேள்விகளை கொடஞ்சு-கொடஞ்சு கேட்பது கார்மீராசாவோடு கூடப்பிறந்த குணம். அதனால்அவனுக்கு ‘காது கொடஞ்ஜான் கார்மீராசா’’ என்று பட்டப்பெயர் வைத்து விட்டார்கள். காது கொடஞ்ஜான் கார்மீராசா’ என்று சொன்னால் தான் அங்கே எல்லோருக்கும் அவனை தெரியும். இன்னொரு கார்மீராசாவும் இருக்கிறார். அவருக்கும் ஒரு பட்டப்பெயர் உண்டு. அது ’காதுஊதி’ ‘கார்மீராசா’’ என்பதாகும். ஊரில் எந்த மூளை-முடுக்கு,சந்து-பொந்தில் நடக்கும் நல்லது-கெட்ட விஷயங்கள் எதுவானாலும் கொஞ்சங்கூட பிசகாமல் இவர் எலிகாதுகள் எட்டிபிடித்து விடும். செய்தி கிடைத்த சில வினாடிகளில் போவோர் – வருவோர் - இருப்போர் எல்லோர் காதுகளையும் இவர் பிடித்து அந்த செய்தியை கிசுகிசுயென காதில் ஊதினால் தான் ‘பிறவிப் பயனை’ அடைந்த மனதிருப்தி அவருக்குஉண்டாகும்.

செய்தி ஊதி முடித்தபின் அவர் சொல்லும் கடைசி வார்த்தை ‘’இதை வெளியே யாரிடமும் சொல்லிப் புடாதே! உன்னிடம் மட்டும் தான் சொல்கிறேன். இதை மனசுக்குள்ளே பொத்தி வச்சுக்கோ!’’ என்பார் இவர் ஊதிய அந்த செய்தியே கேட்டவர்களில் இவர் நூற்றி ஏழாவது ஆஸாமி.

இப்போ நாமோ காது ஊதிகார் மீராசவை உட்டுட்டு காது கொடஞ்ஜான் கார் மீராசாவுக் குவருவோம். மம்மசங்கனி நெனச்சு பாக்காத கேள்வியை காது கொடஞ்சான் கார்மீராஸா கேட்டதும் அதற்கு பதில் சொல்லத் தெரியாமல் திணறிய மம்மசங்கனிக்கு திடிரென ஒரு ஐடியா பிறந்தது. ’’இன்னும் பிள்ளையை நான் தூக்கி பாக்கலே!’’ என்றான். ’’என்னடா? நேத்து சாங்காலம் வந்தேங்குறா?! ராத்திரிபூர புள்ளேயே பொண்டாடியை பாக்காமே என்னடா செஞ்சே?’’ என்றான். 

காது கொடஞ்சான் கார்மீராசா. ’நீ’ கேக்குறா? இது என்ன மாஷம் தெரியுமா? சபூர்களி மாசம். இந்த மாசத்துலே எந்தநல்ல காரியமும் செய்யப்புடாது. செஞ்சா விடியாது. இது எனக்கு மொத சபுறு. பொறந்தது தலேபுள்ளே. அதனாலே இந்த மாசம் நான் அங்கே போனால் காலம் முளுதும் கஸ்ட்டமும் சண்டை வம்புமா வந்து வந்துகிட்டேயிருக்கும். அதனாலே இன்னும் அஞ்சு நாள் செண்டு சபுர்களி மாஷம் முடிஞ்ஜதும் அடுத்த வியால கெலமே பின்னேரம் வெள்ளி கெலமே ராவு மக்ரிப்புக்கு பொறவு அந்த ஊட்டு நெலப் படியை பிஸ்மில்லா சொல்லி சோத்தங்காலாலே தாண்டி உள்ளே போய் புள்ளேயே தூக்கிபாரு’’ என்டு என் உம்மா சொன்னுச்சு. அதான் நான் இன்னும் பொண்ட்டாட்டி ஊட்டுக்கு போவலே’’ என்று மம்மசங்கனி ஒரு வாகா ஒரு பொய் சொல்லி காது கொடஞ்சான் கார்மீராசவை சமாளித்தான்.

தொடரும்...

S முஹம்மது பாரூக்

பினாங்கு சபுறுமாப்புளே ! - தொடர் 3 12

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2015 | , ,

எங்கு தேடியும் பாத்துமாயி யார் கண்ணிலும் அகப்பட வில்லை ‘தான் பெற்ற இரண்டு பிள்ளைகளையும் தனியா விட்டு விட்டு அவள் மாயமாய் எங்கு மறைந்தாள்?’ என்பதே ஊரார்களின் நெஞ்சில் ஊசலாடிய கேள்வி. நேரம் இரவு மணி பத்தரை ஆனாலும் ஊர் உறங்கவில்லை. யாரும் சோறு உங்கவில்லை. தாகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீ கூடகுடிக்காமல் ‘பாத்துமாயி எங்கே போனாள்?’ என்ற கேள்வியோடு கவலையும் கொண்டிருந்தார்கள். கடைசியாக. ஒரு பெரியவர் ’’தெருக் கோடியிலே ஈக்கிற பாழடஞ்ச குப்பை கெனத்தை பாத்தியலா?’’ என்ற கேள்வி ஒன்றை போட்டார்.

இதைக் கேட்டஎல்லாருடைய நெற்றி புருவமும் சுருங்கி விரிந்தது. அந்தக் கோணத்தில் யாரும் அங்கே அதை அப்படி யோசிக்கவில்லை! ‘அந்த அளவுக்கு போகும் படியான சூழல் பாத்துமாயிக்கு ஏதும் இல்லையை’’ என்றே எல்லோரும் எண்ணினார்கள். ‘’சரி! தேடியது தான் தேடினோம் இதையும் போய் பார்த்து விடுவோமே!’’ என்று. அரிக்கன் லாம்பு பினாங்கு பேட்டெரி லைட் எல்லாம் எடுத்துக் கொண்டு எல்லோரும் கிணத்தங்கரைக்கு போனார்கள். 

கிணற்றில் விளக்கை அடித்து பார்த்தபோது வெள்ளைதுணி ஒன்று நீரில் மிதப்பது போல் தெரிந்தது. கிணறுற்றில் நீர்மட்டம் வற்றி இருந்ததால் விளக்கு வெளிச்சம் அங்கே சென்றுயேற முடியவில்லை. இறங்கி பார்த்தாலே அது என்ன என்று தெரியும்! அங்கே கிடப்பது என்ன என்று தெரியாமல் எப்படி இந்தப்பாழுங் கிணற்றில் இறங்குவது’ என்ற கேள்வியும் வந்து கிணற்றில் இறங்கலாமா? வேண்டாமா என்ற Dilemmaவில் சிக்கி என்ன செய்வது என்று யோசித்த போது அங்கே நின்றவர்களில் வயதில் குறைவான பதினெட்டு வயதுடைய பையன் சொன்னான் ’’யாரும் கிணற்றில் இறங்க வேண்டாம். பட்டெரி விளக்கை கைற்றில் கட்டி சுச்சை தாட்டி அதை கிணற்றுக்குள் விடுங்கள். அந்த வெளிச்சத்தில் கிணற்றில் மிதப்பது என்ன? என்று தெரியும்’ என்றான். அந்த இளம் வயது பொடியனின் மதிநுட்பம் கண்டு அங்கிருந்த அனுபவசாலிகள் ஆடிப்போனார்கள். ’ஓட்டை பானைக்குள் சர்க்கரை இருக்கும்’  என்ற முதுமொழி மெய்யானது.

அவன் சொன்னது போல்விளக்கு கிணற்றுக்குள் இறக்கப்பட்டது. விளக்கு வெளிச்சத்தில் கிணற்றில் மிதந்தது ஒரு பெண்ணுடல். மூன்று ஆண்கள் கைலியை மடித்து கச்சை கட்டிக் கொண்டு கிணற்றுக்குள் இறங்கினார்கள். மிதந்தது ஒரு பெண் உடல். மிதந்த உடலை புறட்டி பார்த்த போது ’’பா...த்...து...மா.. யீ..... யீ...... யீ ..... யீ....’’ கிணற்றில் இறங்கிய மூவரும் ஒரே குரலில் அலரிய அலறல் ஓசை. அந்த ஓசை எதிரொலித்து-எதிரொலித்து அங்கு நின்ற ஆண் பெண் அனைவர் நெஞ்சையும் ஒரு ஆட்டு ஆட்டி கசக்கி பிழிந்தது. அவர்கள் கண்களில் வழிந்தது கண்ணீரல்ல, ரத்தம்.! பாத்துமாயி கிணற்றில் விழுந்து உசிரை மாச்சு கிட்டா! ’’ஏன் மாச்சு கிட்டா’’? என்பது யாருக்கும் விளங்காத புதிர்! எல்லோர் கண்ணிலும் கண்ணீர்.! கண்ணீரில்லா கண்கள் அங்கில்லை!. தண்ணீரில் போன ஜீவனுக்கு கண்ணீரே காணிக்கையாக கொடுப்பதை தவிர மானிடரால் வேறு என்னதான் செய்ய முடியும்? .பாத்துமாயை பத்துமாசம் சுமந்து பெற்ற தாய்க்கு அந்தசுமை சுமையல்ல; பாத்துமாயீ தன்னை சுமந்து பெற்ற தாயின் நெஞ்சில் தூக்கி வைத்த இந்த சுமையை அவள் கண் மூடும் வரை சுமந்தே ஆகவேண்டும்.

’’அடி யென் மகளே! உன்னை பத்து மாதம் சுமந்து பெற்றதற்கு கூலியாக நீ கொடுத்தது இதுதான?’’ என்று நெஞ்சில் அடித்து கொண்டு அழுது புலம்பி நிலை குழைந்து விழுந்தாள். அப்பொழுதே காதும் காதும் வச்ச மாதிரி மையத்து எடுத்து முடிந்துவிட்டது.

‘’இது தாண்டா பாத்துமாயியோட கதே!’’ என்று மம்மசங்கனியோட உம்மா சொல்லி முடிச்சாங்க. ’’மவுத்தா போனவங்கலேல்லாம் பேயாவா வருவாங்க’? ன்னு  மம்மசங்கனி கேட்டான். ‘’தூக்கு போட்டுக்கிட் டுமவுத்தா போரவங்க, தண்ணிலே உலுந்து மொவுத்தாப் போனவங்க, கொலே செஞ்சி மவுத்தா போனவங்க அம்மா பாத்து மவுத்தா போனவங்க புருஷனுட்டே நல்லா வாழாமே போனவங்கள் குளியிலே அடங்கியதும் பேயாக கெளம்பி ராத்திரியெல்லாம் அலஞ்சு திரிஞ்சுட்டு அவங்க மையத்து போன வழியிலேயே வந்துட்டு வந்த வழியே திரும்பி போய்டுவாங்க.!” என்று மம்மசங்கனியோட உம்மா சொன்னாங்கோ. ’’பேயே கண்டு நாய் ஏம்மா கொலைக்கிது?’’ என்றான் மம்மசங்கனி. ’’அதா? பேய் வர்றது-மனுச கண்ணுக்கு தெரியாத காத்து கருப்பெல்லாம் நாய்கன்னுக்கு மட்டும் தான் தெரியும்.. அது வாறதே மனுஷருக்கு தெரியப்படுத்த கொலைக்கிது.

பேய் வரும் போது மனுஷங்க, புள்ளே உண்டாவுன சூலிய, தீட்டு தொடக்கு பட்டபொம்பளைய தலேபுல்லேயளுவோ, மாப்புளேகிட்டே படுத்து கெடந்துட்டு போற பொம்புலேயளுவோ, பொண்டாட்டிகிட்டே படுத்துகெடந்துட்டு போற ஆம்புளேயளுவோ இவங்கள்லாம் பேய் வர்ற அந்த அஹால நேரத்திலே அதுக்கு எதுக்கே போனா ஓங்கி ஒரே அடிதான். அப்புறம் வாயாலே ரத்தம் ரத்தமா கக்கிசாவ வேண்டியதுதான். பேய் யாரையும் பொம்பளையான்டும் ஆம்புளையாண்டும் பாக்காது! செலசமயங்களுலே பெத்த உம்மா, வலத்த வாப்பான்டும், மாமா-மச்சான்டும்கூட மொரேயெல்லாம் வச்சுபாக்காது! யாரா   இருந்தாலும் அடிக்கனுண்டு நெனச்சா அடுத்தது அடிதான் உளுவும். அதுக்கு மேலே வேறே பேச்சுக்கு எல்லாம் இடமே இல்லே!’’ என்றாங்கோ  மம்மசங்கனியோட உம்மா. ’’யாம்மா! பேயிண்டும் சொல்றாஹ்ஹ, கவுஸ்ஸுண்டும். சொல்றாஹ்ஹ, ரெண்டும் ஒன்னா? இல்லே வேறே வேறேயா?’’ என்று கேட்டான் மம்மசங்கனி.

கவுஸ்சுண்டா மௌத்தா போன ஆம்புளேயோ கபுறு குலிலேந்து கிளம்பி வந்தா அதே கவுஸுன்னு சொல்லு வாங்கோ! பொம்பளைங்க கபுறை உட்டு கெளம்பி வந்தா பேய்ம்பாங்க. என்று மம்மசங்கனியோடசொன்னாங்கோ. ‘’சரிடா! எனக்கு நெத்திரே கண்ணே சுத்திக்கிட்டு வருது! நீனும் கப்பலுலே வந்த கலப்பா இருப்பா! போய்படு!’’ என்றதும் .மம்மசங்கனி கூடத்துக்கு படுக்க போய்ட்டான்.
[தொடரும்].
S.முஹம்மது பாருக்

பர்மா தேக்கு வீட்டுக்காரர் - தொடர்கிறது.... 17

அதிரைநிருபர் பதிப்பகம் | September 22, 2015 | , , ,

ஞாபகம் வருதே - [4] part - 2

அன்று இரவு சென்னையிலிருந்து கேலாலம்புருக்கு புறப்பட்டேன். காலை ஆறு மணிக்கு விமானாம் தரை இறங்கியது. முதலில் குடி நுழைவு துறை எல்லோ லைன் கடந்து பின் கஸ்டம்ஸ். இந்திய கஸ்டம்ஸ்காரர்களின் கண்ணில் விழித்தாலே நளவெண்பாவின் கதாநாயகன் நளனுக்கு பிடித்த ‘சனி’தமயந்தி நமக்கு மாலை. இடாத போதும் நம்மையும் வந்து பிடிக்கும். ஆனால் இங்கே சகோதரத்துவ-நட்பு முறை வாசனைப்பூ மணம் கமழும். செழிப்பான சிரித்த முகத்துடன் சுங்கதுரை அதிகாரிகள்.                    கொண்டு வந்த பெட்டியே தூக்கி மேஜையில் வைத்தேன். ‘’பெட்டிக்குள் என்னஇருக்கிறது?’’என்றார் ’என் சொந்த உபயோகத்துக்கான சாமான்கள்! என்றேன்

"புடைவைகள் எத்தனை இருக்கிறது?" என கேட்டார். 

"ஒரே ஒரு புடவை" என்றேன்.

"யாருக்கு? மனைவிக்கா?"

"மனைவி ஊரில் நானிங்கே?"

"அப்படியென்றால் Girl Friendகா கொண்டு போகிறாய்?" என்றார். 

"எனக்கு girl friend இல்லேயே" என்று செயற்கையான ஏக்கத்துடன் சொன்னேன்.

"u nampa handsome! cubalah.boleh dapat satu" என்றார் 

[நீ கவர்ச்சியாக இருக்கிறாய், முயற்சி செய்; ஒன்று கிடைக்கும்] இது போன்ற நட்பு-கேலி முறையிலான பேச்சுக்கள் வயது வரம்பு இன்றி அங்கே பேசிக்கொள்வது சகஜம். நம் பாரத பூமிபோல் பதவி பந்தாக்கள், மூஞ்சியே ‘உற்ர்ரர்ர்ர்’ என்று நாய் போல் நரி போல் வைத்துக் கொள்வதெல்லாம் அங்கே இல்லை!.

"பெட்டியே மூடு" என்றவர், அடுத்து கீழே  மாம்பழக்கூடையே பார்த்தார்.

"அது என்ன கூடையில் மாம்பழமா?’’

"ஆமாம்" 

"நிறைய இருக்கிறதே! வியாபாரம் செய்ய கொண்டு போகிறாயா?"

"இல்லை! என் நண்பர்களின் குடும்பம் இங்கே இருக்கிறது. அவர்களுக்கு கொடுக்ககொண்டுபோகிறேன். மற்றபடி இது மாதிரியான வியாபாரம் செய்யும் சில்லறைதனமான பழக்கமெல்லாம் என்னிடம் இல்லை!" என்றேன் 

"சரி! நம்புறேன்! நானொன்று கேட்கிறேன். நீ தப்பாக நினைக்காதே! என் பிள்ளைகள் இந்திய மாம்பழம் திங்க ஆசைப்படுகிறார்கள். இரண்டு பழம் கொடுக்க முடியுமா! காசு தந்து விடுகிறேன்!" எனக் கேட்டார்.

கூடையை திறந்து நாலு பழத்தை எடுத்துக் கொடுத்தேன். 

"இரண்டு போதுமே!  உன் நண்பர்களுக்கு வேண்டுமே?"

"நிறைய இருக்கிறது! பிள்ளைகளுக்கு கொடுங்கள்!"

காஸு கொடுக்க பர்ஸை திறந்து கொண்டே "பிறப்பா ரிங்கிட்?" [எத்தனை வெள்ளி] வினவினார்..

"இதை நான்காஸுக்கு விற்கவில்லை! உங்கள் பிள்ளைகளுக்கு என் அன்பளிப்பாக கொடுக்கிறேன்."

என்னை ஒரு பார்வை பார்த்தவர் "திரிமாகஸி! [நன்றி] என்றார். இந்த "திரிமாகசி" மலாய் மொழியில் அதிகம் உபயோகப்படும் வார்த்தை. அதிகம் உபோயோகப்பட்டதனால் அது தேய்ந்து போய் பழைய இரும்பு வியாபாரியிடம் பேரீச்சம் பழத்திற்கு எடை போட்டு கொடுத்து பண்டமாற்று செய்யப்பட வில்லை. மாறாக அது என்றும் வளர்ந்து கொண்டே வருகிறது. 

ஆனால் கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடிகள் வாழும் நம் நாட்டில் `நன்றி` என்ற வார்த்தை பேங்க்லாக்கரில் saftyயாக இருக்கிறது. சில சமயங்களில் இது ஒப்புக்காக சொல்லப்படுகிறது. அடிமனதின் ஆழத்திலிருந்து உணர்வுபூர்வமாக இந்த வார்த்தை வருவதில்லை. எப்படி வரும்? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்! 

நான் மலேசிய சுங்கசோதனையிலிருந்து மலர்ந்த முகத்துடன் வெளியாகி வீடு வந்து சேர்ந்தேன். 


அன்று ஞாயிற்றுக் கிழைமை. ஓய்வு! மறுநாள் மாலை சென்னையில் என் நண்பர் தந்த சாமான்களை எடுத்துக்கொண்டு ’லிட்டில்இந்தியா’ என்று அழைக்கப்படும் Malayan Mansion/Selangor Mansion பகுதிக்கு சென்றேன். அங்கே ‘வைர யாவாரி’ தங்கி இருக்கும் ரூமுக்கு போனேன். கதவில் பூட்டு தொங்கியது. ஆளில்லை. பக்கத்து ரூம்காரர் வெளியே வந்தார்.அவரிடம் கேட்டேன்.

"காலை எட்டு மணி சுமாருக்கு வெளியே போவார். ஒரு மணி சுமாருக்கு வருவார். கொஞ்சநேரம் இருந்து  விட்டு போறவர் இரவு ஒன்பது மணிக்கு மேல் வருவார்" என்றார்.

"நீங்கள் எந்த ஊர்?" எனக் கேட்டவரிடம், ஊர் பெயரைச் சொன்னேன்.

"அவர் உங்க ஊரா?" என்றார் 

"அடுத்த வீட்டுக்காரருக்கே இவரை யாரென்று இன்னும் தெரியவில்லை. இவருடைய பொது உறவு கொள்கையின் லட்சணம் இப்படி!

மண்ணுக்காகப் படைக்கப்பட்ட மனிதனை மனித நேயத்திலிருந்து எது பிரிக்கிறது?

"ஆமாம்! எங்க ஊர்தான். தெருவு வேறே!" என்றேன்.

அவருக்கு ஊரில் ஒருவர் கொடுத்த சாமானைக் கொடுக்க வந்திருக்கிறேன்! தயவுசெய்து அவரிடம் கொடுத்து விடுகிறீர்களா?’ என்றேன். 

இதைக் கேட்டு திடுக்கிட்டுப் போனவர்

"மன்னிச்சுக்கோங்க தம்பி! இதை வாங்கிட்டு அவரோடு என்னால் மல்லுக்கு நிக்க முடியாது! லாயர் Burrow* கேக்காத கேள்வி யெல்லாம் அவர் என்னிடம் கேட்பார். இந்த வம்பெல்லாம் நமக்கு வாணாம்! நீங்களே நேரடியா கொடுத்துடுங்கோ!" என்றார். 

கொண்டு போன சாமானுடன் திரும்பி விட்டேன். [*லாயர் Burrow. மலேயாவில் ஜப்பானியர் ஆட்சிக்கு முன் வெள்ளயார் ஆட்சிகாலத்தில் மேல் சொன்ன பெயரில் உச்ச நீதி மன்ற வழக்கறிஞராக வெள்ளைக்கார துரை ஒருவர் இருந்தாராம். அவர் தன் கட்சி காரருக்கு எதிரான சாட்சிகளை கூண்டில்லேற்றி ’எடக்கு-முடக்கான’ கேள்விகளைக் கேட்டு குழப்பு-குழப்பென்று குழப்பி திண்டாட வைத்து விடுவாராம். சாட்சிகள் குழம்பிப்போய் ‘உடும்பு வேணாம் கையைவிடு!’ என்று ஓடி விடுவார்களாம். இன்னும் புரியும்படி சொல்வதென்றால் ’ஆட்டைக் கழுதையாக்கிய ’நம்மூர்கதைதான்.] 

மறுநாள் பகல் ஒரு மணி சுமாருக்கு வைரயாவாரிக்கு டெலிபோன் போட்டேன். விஷயத்தைச் சொன்னேன்.

"நான் நீங்கள் வந்த அந்த நேரம் ரூமில் இருக்கமாட்டேன். ரெம்ப பிஸி. இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் ரூமில் இருப்பேன். அப்போ கொண்டு வந்து கொடுங்கள்!" என்றார். 

பேச்சில் கொஞ்சம் அதிகாரத் தொனி இழையோடியது.

"நான் மாலை 5.30க்குஅங்கே வருவேன்! 7.30க்கு திரும்பி விடுவேன். ஒன்பது மணிவரை அங்கிருந்தால் திரும்பி வர பஸ் கிடைக்காது. என் மாமா கடையில் கொடுத்து விட்டுப் போகிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்" என்றேன்.

"அங்கெல்லாம் நான் போய் வாங்க முடியாது! `யாரிடம் கொடுத்து விடுகிறேன்!` என்று ‘வாக்கு’கொடுத்து அதை வாங்கி வந்தீர்களோ அதை அவர் கையிலேயே ஒப்படைக்க வேண்டும். இதுதான் ’அமானிதம்’ என்பதன் அர்த்தம். இதுதான் முறை!" என்றுரைத்தார்.

"புண்ணியத்திற்கு உழைக்கும் மாட்டை பல்லை பிடித்து பதம் பார்ப்பது" என்று தமிழில் சொல்வார்கள். ஆங்கிலத்தில் Look not a gifted horse in the mouth. 

இதைக் கேட்ட எனக்கு ஏறியது ரத்தம்!

"நான் அதை உங்கள் திருவடி பணிந்து உங்களிடமே ஒப்படைக்கிறேன்" என்று வாக்கு கொடுத்து வாங்கி வரவில்லை. இது ஒன்றும் நேத்திக்கடன் அல்ல! வெள்ளிக்கிழமை இரவு அங்கே ’தலை போட்டு’ படுத்துவிட்டு நேத்திக் கடனையும் செலுத்தி வர!. வேண்டுமானால் ஒரு வாரத்திற்குள் இங்கே வந்து உங்கள்  சாமான்களை எடுத்துக் கொள்ளுங்கள். வருவதற்கு முன் அப்பாயின்மென்ட் வாங்கி வரவேண்டும். நான் ரெம்ப பிஸி" என்றேன்.

[வேணுமென்றே நானும் ஒரு’பந்தா’ பன்ணினேன்] டெலிபோனை வைத்து விட்டார். கொஞ்சநேரம் கழித்து டெலிபோன் மணி அடித்தது. என் மாமா பேசினார்

"என்னப்பா அவரிடம் தகராறு செய்கிறாயாமே?" கேட்க..

"ஒன்றும் தகராறு இல்லை" என்று நடந்ததை சொன்னேன்.

"அவர் குணம் அப்படித்தான். நாம்தான் பார்த்து அனுசரித்துப் போகணும் . பெரியமனுஷன். கொண்டுபோய் கொடுத்துவிடு"

"அவர் போடும் கண்டிசனுக்கும் சவுடாளுக்கும் நான் பணிந்து போக முடியாது. வேண்டுமென்றால் ஒரு வாரத்திற்குள் வந்து எடுக்கட்டும். இல்லையென்றால் இங்கேயே கிடக்கட்டும்" என்றேன்.  என் மாமாவுக்கு என் குணம் தெரியும்.

"நீ அதை என்னிடம் கொண்டு வந்து கொடுத்துவிடு. நான் கொடுத்து கொள்கிறேன்" என்றார். அடுத்த நாள் மாலை அங்கே போய் அதை என் மாமாவிடம் கொடுத்துவிட்டு வந்தேன்.  

பல மாதங்கள் கடந்து போனது. ஒரு நாள் மாலை லிட்டில் இந்தியா மலையன் மன்சனில் இருக்கும் புத்தக மொத்த வியாபாரம் செய்யும் கடைக்கு போனேன். அங்குள்ளவர்கள் அனைவரும் என் உடன் பிறவா சகோதரர்களும் நண்பர்களும் போல. நான் நம்மூர்காரர் ஒருவரின் நிறுவனத்தில் working partnerராய் இருந்து கடினமாக இரவு பகல் பாராமல் உழைத்து-உழைத்து ஓடாய்போய் பையிலும் கையிலும் காசில்லாமல் வீசியகையும் வெருங்கையுமாய் வெளியே வந்தபோது எனக்கு ஆதரவு கரம் நீட்டி நெஞ்சோடு நெஞ்சாக அணைத்துக் கொண்ட மனித இதயம் கொண்ட மனிதர்கள் அங்கே இருந்தார்கள். வாரத்திற்கு இரண்டு மூன்று தடவை அங்கே போய் வருவது என் வாடிக்கையான பொழுதுபோக்கு. 

ஒரு நாள் மாலைஅங்கே போய் பேசிக் கொண்டிருந்தபோது அந்த கம்பெனி டெலிபோன் மணி கினுகிணுத்தது. அதை எடுத்துக் கேட்ட மேனேஜர்

"உங்களுக்குத்தான். யாரோ பேச வேண்டுமாம்" என்று ரிஸிவரை என்னிடம் தந்தார். பேசியது வைரயாவாரி

"பாரூக்! நான் இங்கே மூனாவது மாடியில் பதினாளாம் நம்பர் ரூமில் இருக்கிறேன்! ஒரு செய்தி பேசவேண்டும். இங்கே வர முடியுமா?" என்றார். பேச்சில் பணிவும் கனிவும் சோகமும் இழையோடியது.

"அவர்தானா இவர்?" என்ற சந்தேகத்தை தூண்டும்படியான தொனி ஒலித்தது. அங்கே சென்றேன். முகத்தில் வாட்டம். ஆழ்ந்த யோசனை. என்னையே பார்த்துக்கொண்டு ஏதும் பேசாமல் யோசனையில் மூழ்கி இருந்தார். கொஞ்சநேரம் சென்றதும்.

"செய்தி சொல்ல கூப்பிட்டீர்களே? என்ன சேதி" என்று அவரை யோசனைலிருந்து கலைத்தேன். "ஒன்றுமில்லை! நானும் பல யாவாரங்கள் செய்தும் ஒன்றும் கை கொடுக்கவில்லை. ஜான் ஏறினால் முழம் வழுக்குது! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. ’கை’ முதல் எல்லாம் ’கை’ விட்டு  போய்விட்டது. தங்குமிடத்துக்கு மூன்று மாத பாக்கி நிக்கிது. கேட்டு இம்சை படுத்துகிறார். கையில் காசில்லை.கை செலவுக்கு நூறு வெள்ளி இருந்தால் கொடுங்கள் அப்புறம் தந்து விடுகிறேன்" என வேண்டினார்.

அப்பொழுது என்னிடம் இருந்தது ஆறுவெள்ளி சில்லரை மட்டுமே.

"இங்கேயே  இருங்கள் கொஞ்ச நேரத்தில் வருகிறேன்" என்று கீழேபோய் என் நண்பரிடம் பணம் வாங்கி கொடுத்து விட்டு வந்தேன்.

அவர் சொன்னது போல் யாவாரம் அவருக்கு மட்டும் தான் கை கொடுக்கவில்லை. பயறு கஞ்சி, பால் காய்ச்சி வித்தவர்கள் வடைசுட்டு வித்தவர்கள்," வாடா! வாடா! என்று மரியாதை குறைவாக கூறிகூறி "வாடா" விற்றவர்களும் ஆப்பம் சுட்டு யாவாரம் செய்தவர்களும் காஸு சம்பாதித்து ஊரில் மாடிவீடு கட்டினார்கள். அம்பாஸிடர் கார் வாங்கி விட்டார்கள். அவர்களையெல்லாம்  விட அனுபவத்திலும் கல்வியிலும் உடல் கவர்ச்சியிலும் பலமடங்கு மேலான இவர் ஏன் தோற்றார்? அவரை தடுத்த சீனத்து  சுவர் எது.? ஒரே ஒரு காரணம் "வாய்" அவருடைய ‘வாய்!’ வாயாலே கெட்டுச்சாம்  கௌதாரி’’ என்று சொல்வார்கள். 

அதன் முழுகதையும் தெரிந்தவர்கள் சொல்லலாம். சும்மாபோன குருட்டு பாம்பை பார்த்த தவளை வாயே வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் அதை பார்த்து கேலி செய்தது. கடைசியில் அந்த குருட்டு பாம்புக்கே அந்த தவளை இரையான கதை உங்களுக்கு தெரியும்.

1967 ஆண்டு வாக்கில் தென் இந்திய ரயில் நிலையங்களில் "வாய் நல்லதானால் ஊர் நல்லது" என்ற வாசகம் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது.

நீண்ட நாட்களாக அந்த நபரின் நடமாட்டம் லிட்டில் இந்தியா பக்கம் இல்லை. மாதங்கள் பல கடந்தது. ஒரு நாள் மாலை என் கடைக்கு திடீரென வந்தார். முகத்தில் வாட்டம் இழையோடியது. வந்தவருக்கு சேர் எடுத்து போட்டு உட்காருங்கள் என்று சொன்னேன். அது டி’டைம்! இரண்டு.டி வந்தது. டி குடித்த பின் கொஞ்ச நேரம் எதையோ யோசித்துக் கொண்டிருந்தார்.

"யாவாரம் ஏதும் செய்கிறீர்களா?" எனக் கேட்டேன். 

"இல்லை! இந்த சபுர் நான் புறப்பட்டு வந்த நேரம் சரி இல்லை. ஊர்போய் இரண்டு மூன்று மாதம் நின்று விட்டு வந்து யாவாரம் பாக்கலாம் என்று இருக்கிறேன். அடுத்த வாரம் பயணம் டிக்கட்டுக்கு தோது செய்து விட்டேன். ஊருக்கு போனால் பிள்ளைகள் கையை-கையை பாக்கும். அதுகளுக்கு கொடுக்க சாமான்கள் வாங்க கையிலே காசில்லை. ஒரு நூறு வெள்ளி கொடுங்கள் வந்ததும் தந்து விடுகிறேன்" என்றார். 

கொடுத்தேன்.போய்விட்டார்.

அவர் போன அரை மணி நேரம் கழித்து  என் டெலிபோன் மணி கினு கிணுத்தது. எடுத்துக் கேட்டேன். நம் மூர்காரரின் குரல்.

"அவர் அங்கே வந்தாரா?" 

நான் "இல்லை" யென்றேன். 

அவர் என்னிடம் வந்ததை இவரிடம் சொன்னால் ஊரெங்கும் பறையரைவார். சந்தர்ப்ப சூழலில் மனிதனுக்கு ஏற்ற-தாழ்வுகள் இயற்க்கை. அதை யறியாது   ஒரு மனிதனை மட்டம் தட்டுவதும் இழித்து பேசுவதும் இந்த மனிதனின் habit. அதனால் அந்த நபர் வந்ததை நான் அவரிடம் சொல்லவில்லை. 

அவரைப் பற்றி நண்பர் சொன்னார்:

"என்னிடம் வந்து ஊருக்கு போக போரதாகவும் கையில் காசில்லை" என்றவர். 

"கொஞ்சம் பணம் கொடுத்தால் போய் விட்டு வந்து தருகிறேன்" என்று கேட்டிருக்கிறார்

`போய்விட்டு வந்து எங்கே தரப்போகிறார்?’ என்று நூறு வெள்ளி கொடுத்ததைச் சொன்னதும்.

அடுத்து,

"என்ன! நூறு வெள்ளியை தூக்கி போடுகிறீர்கள்? இதை வைத்து நான் என்ன செய்ய முடியும்? என் பேரப் பிள்ளைகளுக்கு சோக்லேட்டே வாங்க முடியாதே! நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று கொடுத்த பணத்தை நண்பரின் பக்கமே தள்ளி விட்டிருக்கிறார் அவர்.

"உங்கள்  பேரப் பிள்ளைகளுக்கு சொக்லேட் வாங்க நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும்?" என்று பணத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். போய்விட்டார்.

இந்த நிலைக்கு அவரை தள்ளியது எது? அவரின் கடந்த கால செல்வ செழிப்பும் அதனால் ஊறிய மமதையும். கால ஓட்டத்தையும் மாற்றத்தையும் கணிக்காமல் கால்போன பாதையெல்லாம் கண் போனது! கண்போன பாதையெல்லாம் மனம் போனது.

மனம்போன பாதையெல்லாம் வாய் போனது.
        வில் விட்டு புறப்பட்ட அம்பும் வாய்விட்டு 
புறப்பட்ட சொல்லும் திரும்ப வராது.

பெரும்பாலோர் தங்களின் கடந்த கால `பாட்டன் பூட்டன்` பெருமைகளை பேசிபேசியே  நிகழ்காலத்தை கைவிட்டார்கள். 

இவர்கள் "பொய் நெல்லை குத்தியே பொங்க நினைத்து கை நெல்லும் விட்டவர்கள்".

S.முஹம்மது பாருக்

பர்மா தேக்கு வீட்டுக்காரர் 28

அதிரைநிருபர் பதிப்பகம் | September 16, 2015 | , , ,

ஞாபகம் வருதே - [4] part - 1

ஒரு முறை மலேசியா புறப்பட சென்னைக்கு ரயில் ஏறினேன். என் நண்பர் ஒருவர் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்திருந்தார். எழும்பூரில் ஒரு விடுதியில் தங்கி வாங்க வேண்டிய சில சாமான்களை வாங்கிக்கொண்டு அன்று இரவு விமானத்தில் புறப்பட எண்ணி இருந்தேன். 

"மண்ணடியில் என் ரூமிலேயே தங்கிவிட்டு புறப்படலாமே! கொஞ்சநேரம் தானே! எதற்கு விடுதிக்கு வேறு வீண் செலவு?" என்று வற்புறுத்தினார்.

"சரி" என்று அங்கே சென்றேன். 

மண்ணடியில் எனக்கு தெரிந்த ஒரு வர்த்தகர் இருந்தார். ‘அவரையும் போய் பார்த்து விட்டு வரலாமே! ’ என்று அங்கே சென்றேன். மூன்றாவது மாடியில் அவர் அலுவலகம் இருந்தது. மேலே போக லிஃப்ட்டும் தொங்கிக் கொண்டு இருந்தது. லிஃப்ட் ஆப்பரேட்டர். முகமும் தொங்கிக் கொண்டிருந்தது. லிஃப்டில் போகலாம் என்று எண்ணிய எனக்கு தொங்கும் முகம் கண்டதும் லிஃப்டில் போக மனமில்லை. அதில் ஏறினால் வம்பு தும்பு வருமோ என்ற அச்ச உணர்வு வந்தது .அதனால் படி ஏறியே மேலே போகலாம்  என்று  ’வலது காலை எடுத்து முதல் படியில் வைத்தேன். அடுத்த கணம்,

"யாரது? நில்லுங்கள்! எங்கே போகிறீர்கள்?" என்ற அசரீரி போல் ஓசை கேட்டது.  இந்த அதட்டல் போட்டது  லிஃப்ட் ஆப்பரேட்டரே யன்றி வேறு யாருமல்ல.

"மூன்றாவது மாடிக்குப் போகிறேன்!"என்றேன்.

"யாரைப் பார்க்கப் போகிறீர்கள்?" என்றார். பதில் சொன்னேன். "எந்த ஊர்?" என்றார். இந்தக் கேள்வியை கேட்டதும் கண்ணதாசன் எழுதிய "எந்த ஊர் என்றவனே! இருந்த ஊரைச் சொல்லவா?" என்ற பாடல் நினைவுக்கு வந்தது.’ அதைப் பாடலாமா?’ என்று நினைத்தேன். வந்த இடத்தில் வம்பு எதற்கென்று விட்டு விட்டேன். இப்பொழுது இந்தப் பாடல் உருவான ஊற்றுக்கண் பற்றி  சுவையான செய்தி ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறேன். கண்ணதாசனின் இந்தப் பாடலுக்கு ‘கரு’கொடுத்தவர் அண்ணா என்றால் நம்புவீர்களா? ‘அண்ணா முதல்வராய் இருந்தபோது கரூர் வர்த்தக சங்க பிரதிநிதிகள் அண்ணாவைச் சந்திக்க வந்தார்கள். வந்தவர்கள் "வணக்கமுங்கோ! நாங்கள் கரூரிலிருந்து வருகிறோம்!" என்றார்கள். அதைக் கேட்ட அண்ணா `நானும் கரூரிலிந்து வந்தவன் தான்!" என்று நமுட்டுச் சிரிப்புடன் சொன்னார். இதைக் கேட்ட கரூர்காரர்களும் மற்றும் அங்கிருந்த நெடுஞ்செழியன், கருணாநிதி, அன்பழகன் கண்ணதாசன் ஆகியோரும். புருவத்தை உயர்த்தினார்கள்.

"என்ன அண்ணா உளறுகிறார்? காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணா கரூரில் பிறந்தேன்’ ’ என்று சொல்கிறாரே”? என்று ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள்.  கரூர்காரர்களில் ஒருவர் குழப்பத்தோடு அண்ணாவை பார்த்து "நீ...ங்....க....ள்.....கா...ஞ்....சி......" என்று இழுத்தார். அவர் முடிக்கு முன்னே அண்ணா சொன்னார்.

"நான் காஞ்சிபுரத்தில் பிறந்தவன்தான். ஆனால் நான் என்தாயின் ‘கரு’ஊரில் உருவாகி வந்து காஞ்சிபுரத்தில் பிறந்தேன்.               அதனாலேதான் நானும் கரூரிலிருந்து வந்தவன்” என்று சொன்னேன் என்றார். இதைக்கேட்ட கரூர் ஆசாமிகள் கலங்கி போனார்கள்-அண்ணாவின் சொல் வண்ணம் கண்டு சொக்கிப் போனார்கள். ‘தூண்டில் காரனுக்கு மிதப்பு மேல் கண்!’ என்பது போல் அங்கிருந்த கவிஞர் கண்ணதாசனும் காரியத்தில் கண்ணா இருந்தார். வாய்ப்பு வந்தபோது அண்ணா கொடுத்த டிப்சை வைத்தே." எந்தஊர் என்றவனே? இருந்த ஊரைச்சொல்லவா? இருந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!" என்ற பாடலை எழுதினார்.’ வல்லவன் கையில் புல்லும் ஓர் ஆயுதம்’ என்று சொல்வார்கள். அதை அண்ணாவும் கண்ணதாசனும் மெய்ப்படுத்தினார்கள். இப்பொழுது நாம் கரூரிலிருந்து மண்ணடிக்கு  வருவோம். 

கரூரிலிருந்து மண்ணடி வந்தவர்கள் எல்லாம் மீண்டும் ஒரு நாள் ‘மண்ணடிப் போகத்தானே வேண்டும்!? . நான் சொல்லும் மண்ணடி அந்த இறுதிப் பயணம் போகும் மண்ணடி அல்ல: சிங்காரச் சென்னையின் கடலோரமிருக்கும் மண்ணடி. மீண்டும் மண்ணடிக்கு வருவோம்.

"எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?" மண்ணடி லிஃப்ட் கேட்டது.

"அதிராம்பட்டினம்!"

"தெருவு?"

"கடல்கரை தெரு”

"பேரு?" 

"முஹமது பாரூக்!" [கேட்ட கேள்விகளைப் பார்த்தால் மண்ணடிக்குப் பதிலாக பாஸ்போர்ட் ஆபிஸுக்கு. வந்துவிட்டோமோ?’ என்ற சந்தேகமும் எனக்கு வந்தது.]

"என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்?" என்றார்.

அவர் என்னை மதரஸா-அல்லது குமர் காரியமாக வந்த வசூல் பேர்வழி என்று எண்ணினாரோ என்னவோ? இப்படிக் கேட்டார்.

"அதையெல்லாம் சொல்ல முடியாது! விட்டால் விடு! இல்லையென்றால் நான் திரும்பிப் போய் விடுகிறேன்...........

அவர் வரச் சொன்னார் வந்தேன். விடமுடியாதென்றால் போய் விடுகிறேன். அதனால் எனக்கு ஒன்றும் குடி மூழ்கி விடப் போவதில்லை" என்றேன். 

இப்படி நான் சொன்னதும் என்னை ஏற இறங்க ஒரு பார்வைப் பார்த்தார். டெலிபோனை தட்டி மேலே கேட்டார். பின்பு,

"நீங்கள் லிஃப்ட்டிலேயே போங்கள்" என்றார்.

இப்போ பூசாரி மணியடித்தார். சாமியும் வரங்கொடுத்தது. ’நீங்கள் லிஃப்ட்டிலேயே போகலாம்" என்றார். 

அதட்டல் இல்லாத மரியாதை தொனி அவர் குரலில் ஒலித்தது. இதுவரை தொட்டிலில் துயில் கொண்ட மனித குணம் இப்பொழுது விழித்துக் கொண்டது. அங்கே ஒருவரை  லிஃப்டில் போக அனுமதிப்பது என்பது ஒரு வெளிநாட்டுத் தலைவர் இன்னொரு நாட்டுக்கு வரும்போது சிவப்பு கம்பளம் வரவேற்புக் கொடுப்பது போல! இது ஒரு[ Royal Salute] ‘ராஜமரியாதை!?’

**********************************************************************************
நான் மலேசியா புறப்படத் தயாரான போது என் நண்பர் இரண்டு கைலி ஒரு சந்தன சோப் ஒரு Vicco பல்பசை இவற்றை நம் ஊர்காரர் ஒருவரின் பேரைச் சொல்லி அவரிடம் கொடுத்து விடும்படி தந்தார். அவர் பெயர் உச்சரிக்கப்பட்டபோது’ என் நெஞ்சுக்குள் ஒரு எச்சறிக்கையுணர்வு மையம் கொண்டது’ இதனால் அவருக்கும் உனக்கும் ஒரு Ego போர் தொடங்கும்!.

"அதை வாங்காதே!" என்று என் உள் மனம் எச்சரிக்கை மணி அடித்தது.

அந்த நபரிடம் பழகுவதிலும் பேசுவதிலும் ஒருவர் எப்படித்தான் முன் எச்சரிக்கையுடன் இருந்தாலும் அதில் எப்படியாவது ஒரு குறை அல்லது தவறு கண்டு அடிபட்ட நாகம்புபோல சீறுவார். உப்புக்குக் கூட பிரயோஜனமில்லாத ஒரு தவறு, நாம் சொல்வதில் கண்டுபிடிப்பார். அதை வைத்தே நம்மைத் தாழ்த்துவார். தலையில் குட்டுவார். அதோடு அல்லாமல் அவரை அவரே ஒரு தூக்கு தூக்கி உச்சாணிக் கொப்பின் உயரத்தில் கொண்டு போய் வைத்துக் கொள்வார். 


அவரே உயர்ந்தவர்; அவரினும் உயர்ந்தவர் யாருமில்லை. அவர் சொல்வதெல்லாம் சரி;! அவர் போட்டிருக்கும் சட்டையே விலை உயர்ந்த சட்டை; அந்த விலை கொடுத்து அதை யாராலும் வாங்கிப் போட முடியாது. அவர் வீட்டு ஜன்னல், கதவு தூண் எல்லாமே "பர்மாவில் இருந்து விமானத்தில் அவர் பூட்டனுக்கு பூட்டன் காலத்தில் கொண்டு வரப்பட்டது” என்பார்.

கையில் கிடந்த ஒரு பவுன் மோதிரம் கீழே விழுந்தாலும்கூட அதை குனிந்து எடுக்காத குடும்பம் எங்கள் குடும்பம் என்பார்’ பர்மா தேக்கிலேயே அடுப்பு எரித்துச் சோறு பொங்கி திண்ட குடும்பம் எங்கள் குடும்பம்’ என்று சொல்ல மறந்து விட்டார் போலும். அவர் "பூட்டன்-,பூட்டன்’ என்று என்றோ போய் சேர்ந்தவர்களின் சாதனைகளையும் பெருமைகளையும் திரும்பதிரும்பச் சொல்லியதைக் கேட்டவர்களுக்கு ஆரம்ப பள்ளியில் படித்த வாய்ப்பாடு போல் மனப்பாடமாகி விட்டது வேறு-சிலருக்கு இந்த பூட்டன்! பூட்டன்" என்ற சொல் அவங்களெல்லாம் பழைய பூட்டுக்களைப் பழுது பார்க்கும் தொழில் செய்தவர்களோ?" என்ற எண்ணத்தை உண்டாக்கியது. 

அவர்கள் விமானத்தில் பர்மா `தேக்கு` கொண்டு வந்த காலத்தில் விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதர்களின் உம்மாக்கும் வாப்பாக்கும் கல்யாணமே ஆகலேங்கிற சங்கதி அங்குள்ள கிணற்று தவளைகளுக்கு தெரியாது. தெரிந்தவர்களும். "எதற்கு வீண்வம்பு?" என்று ‘செட்டி ஜாடையில்’ கண்டும் காணாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். இவரின் குணங்களில் ஒன்றை மட்டும் உங்களுக்கு விளக்க ஆசைப்படுகிறேன். தயவுசெய்து நான் அவரை வேண்டு மென்றே எல்லை கடந்து அதிகம் விமர்சிப்பதாக எண்ண வேண்டாம். அவர் இடக்கு-முடக்காக ஏதேனும் பேசுவாரே தவிர யாருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை.

நண்பர் அந்த சாமான்களை என்னிடம் தந்தபோது நான் அதை கைநீட்டி வாங்கியபோதே ‘அவருக்கும் எனக்கும் ஒரு Ego போர் தொடங்கப் போகிறது’ என்ற உள் மனம் என்னை என்னை எச்சரித்தது. இது போன்ற எச்சரிக்கையை உள் மனம் தரும் போது `NO` என்றவர்கள் பிழைத்துக் கொண்டார்கள். `yes` என்றவர்கள் தூண்டிலில்  சிக்கிய மீன் ஆனார்கள். இது என் வாழ்நாளின் பெரும்பகுதியில் நான் செய்த தவறு. I wanted to say NO but I said YES! NO என்று சொல்ல நினைத்ததை No என்று சொல்லாமல் Yes என்று சொன்னேன். என் வாழ்வின் தேன் நிலவுகாலங்கள் வீண் நிலவுஆனது.

அப்படி சொன்னவர்கள் எல்லாம் தங்கள் சொந்தச் செலவில் தங்களுக்கே சூணியம்வைத்துக் கொண்டவர்களுக்கு சமம். போர் பிரகடனம் ஒன்றை எதிர் நோக்கத் தயாரானேன். காரணம் இவரோடு Deal செய்வது மிகமிக கடினம். 

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் வேறு ஒருவர் கடையில் Working Partner-ராக இருந்தபோது மாதம்  இருமுறை வெளிவரும் சஞ்சிகை ஒன்றை  அதன் உரிமையாளர் மலேசிய தீபகற்பத்தின் பெரும்பகுதிக்கு விநியோகம் செய்ய எங்களுக்கு தந்தார். அதன் விற்பனை ஏறத்தாழ ஒரு இலட்சம் பிரதிகள். மாதம் இருமுறை என்றால் இரண்டு லட்சம் பிரதிகள். அந்த  இதழின்ஆசிரியரும் உரிமையாளருமான மலாய்க்காரர் மாலை நேரங்களில் வேலை  முடிந்ததும் எங்கள் கடைக்கு இரண்டு-அல்லது மூன்று வாரத்திற்கு ஒரு முறையாவது வந்து சஞ்சிகை விற்பனை சம்பந்தமாகவும் மற்ற பத்திரிக்கைகள் எப்படி ஓடுகிறது என்றும் மற்றும் பொதுவான அரசியல் நிலவரங்கள் பற்றியும் பேசிச் செல்வார். இது அவர் வாடிக்கையான பொழுது போக்கும்-ஒரு ரிலாக்சும் கூட. 

இதை வழக்கமாக்கி கொண்ட அவர் ஒன்னரை மாதமாக வரவே இல்லை. ஆளைக் காணோம். ஒரு நாள் மாலை திடீரென வந்தார். நான்கேட்டேன்

"எங்கே ரெம்ப நாளா ஆளைக் காணோம். ஏதாவது புது Girl friend எதையாவது பிடித்துக்கொண்டு ஹனிமூன் போய் இருந்தாயா?" என்றேன்.

"ஹும்! என்ன முயற்சி செய்தும் ஒன்னும் கிடைக்கலே!" என்றார்.

இது  போன்ற பேச்சுக்கள் மலாய்க்காரர்களுக்கு ரெம்ப பிடிக்கும். எவ்வளவு பெரிய முதலாளியாக இருந்தாலும் கொஞ்ச நாள் பழகியதும் கேலி கிண்டல் செய்யலாம். நம் நாட்டு முதலாளிகளுக்கு இருக்கும் Ego போல் மலாய்கார முதலாளிகளுக்கு இல்லை. ஆனால் மலேசியாவில் கடை வைத்திருக்கும் தமிழ் முஸ்லிம் தஞ்சை மாவட்ட முதலாளிகளுக்கு கெளரவம் ஈகோ எல்லாம் இங்கேயும் [மலேசியாவில்] உண்டு. இது ரத்தத்தோடு கலந்தது அல்ல; ரத்தமே அதுதான். கண் மூடிய பின் அவர்களை மண் மூடி போட தூக்கியபோது ego சொன்னது"you go ! I stay!

மலாய்கார முதலாளிகளிடம் மூஞ்சியை ‘உம்’மென்று வைத்து டீல் பண்ணினால் தகர டப்பா ரெங்கு பெட்டி பாக்கட்டை தோளில் தூக்கி கொண்டு ஜப்பான் காரன் செய்த கித்தா செருப்பை வரட்வரர்ட்டென்று காலில் போட்டு இழுத்துக் கொண்டு ஊர் வந்து சேர வேண்டியதுதான். ரைபன் மூக்கு கண்ணாடி அத்தர் பூசிய டெர்லின் சட்டை, ஓடிகுலான் பாட்டால் ஹார்லிக்ஸ் போட்டல் யார்ட்லி புட்டாமாவு, யார்ட்லி சவ்வுக்காரம் 555 சாப் ரோக்கோ (சிகரெட்) கோபுர சாப்பு பணியன் ONE MAN SHOW சென்ட் பாட்டில்Etc. Etc ஏதுமில்லாமல் கோஷப்பெட்டி(empty]யோடு ஊர் வந்து எறங்க   வேண்டியதுதான்.   

வயதுக்கு வந்து கல்யாணத்துக்கு நிக்கிற தன் மகள் பாத்துமுத்துக்கு மாப்பிளைகேக்க நினைச்சிருந்த தாயோடு கூடப்பிறந்த மூத்த மாமாவே கூட வீட்டுப்படி மிதிச்சு உள்ளே வந்து, "சொவமா வந்தியலா?"-ன்டும் ஒரு வா[ர்]த்தை கேக்க மாட்டார். "மவளுக்கு மாப்புளே தாங்கோ!"-ன்டும் கேக்க மாட்டார்.! பெண் கொடுப்பதும்,மாப்பிளை எடுப்பதும் பினாங்கிலிருந்து வரும் சபுராளியின் பெட்டியின் வெயிட்டை பொறுத்தே அது அமையும்.

ரெம்ப நாள் கழித்து கடைக்கு வந்த அந்த மலாய்காரரிடம்…

"எங்கே ரெம்ப நாளா காணோமே!” என்றேன்.

"பிரிண்டிங். மெசின் வாங்கலாமென்று ஜெர்மனி சென்றிருந்தேன். அதான் வர வில்லை!" என்றார். அவர் கையில் வைரக்கல் பதித்த மோதிரம் ஒன்று பளிச்சிட்டது. அதை நான் கவனித்ததை  கண்ட அவர் அதை என்னிடம் காட்டி..

"இதை அங்கே வாங்கினேன். விலை மலேசியன் ரிங்கிட் இருபத்தி அஞ்சாயிரம்" என்றவர் ‘இதை பார்த்த` என் மனைவி

"இதுபோல் எனக்கும் ஒன்று வேண்டும்!" என்று அடம் பிடிக்கிறாள்!’” என்றார். 

"உனக்கு தெரிந்த வைர வியாபாரம் செய்யும் ’மாமா’* யாராவது இருந்தால் சொல்! பத்து பணி ரெண்டு ஆயிரரிங்கிட்க்குள் ஒன்று வாங்கலாம்!’ என்றார் 

[*தமிழ் முஸ்லிம்களை மலாய்காரர்கள் ’மாமாக்’ என்று அழைப்பது வழக்கம்] மேற்சொன்ன பாட்டன் பூட்டன் பரம்பறை பெருமை பேசும் நபர் கொஞ்ச நாளாக "நான் வைர யாவாரம் செய்கிறேன்! நான் வைர யாவாரம் செய்கிறேன்”! என்று சொல்லிக் கொண்டு இருந்தார். ’அவரை இந்த மலாய்காரரிடம் காட்டி விடுவோம் ’ஏதாவது அஞ்சோ பத்தோ கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவருக்கு டெலிபோன் போட்டேன். 

"எனக்கு தெரிந்த மலாய்க்காரர் ஒருவர் வைரம் வாங்க வேண்டுமாம்! உங்களிடமிருக்கும் வைரங்களை எடுத்துக் கொண்டு இங்கே வரமுடியுமா"? என்றேன்.

"அவர் என்ன வேலை செய்கிறார்?"என்றார்.

"அவர் ஒரு மலாய் மொழி பத்திரிக்கையின் எடிட்டரும் உரிமையாளரும்" என்றேன்.

"என்னிடம் இருக்கும் வைர மெல்லாம் வெறும் முன்னூறு நானூறு வெள்ளி விலை யுள்ள மலிவான வைரமல்ல! ஆயிர வெள்ளியிலிருந்து ஐயாயிரம் வெள்ளி வரை விலையுள்ள வைரங்கள். அவரால் அந்த விலை கொடுத்து அதை வாங்க முடியுமா?" என்றார்

"அந்த விலையில் நிச்சயமாக அவரால் வாங்க முடியுமென்றால் மட்டுமே நான் அங்கே வருவேன். இல்லையென்றால் வெட்டித்தனமாக வந்து என் டயத்தை வேஸ்ட்டு பண்ண விரும்பவில்லை" என்றார்.  

நான் பதில் கொடுத்தேன் "இப்போ அவர் கை விரலில் கிடக்கும் மோதிரத்தில் பதித்த வைரத்தின் விலை 65 ஆயிரம் மலேசியன் ரிங்கிட் மதிப்புள்ளவை. இப்போ அவர் Girl friendடுக்குவாங்க நினைப்பது இருபது ஆயிரத்திலிருந்து முப்பதாயிரம் வரை. நீங்கள் வைத்திருக்கும் மலிவான வைரங்கள் அவர் வீட்டு வாசல் படிக்கு பதிக்க தேவைபட்டால் சொல்லுகிறேன்! கொண்டு வாருங்கள்" என்று சொல்லி விட்டு டெலிபோன் ரிசிவரை ’டக்’கென்று போட்டேன். சற்றுநேரத்தில் டெலிபோன் மணியடித்தது.

நான் எடுக்கவில்லை. 

அடுத்த பகுதியிலும் தொடரும்… 

S.முஹம்மது பாருக்

ஞாபகம் வருதே - 3 [சில நேரங்களில் சில மனிதர்கள்!] 19

அதிரைநிருபர் பதிப்பகம் | March 24, 2015 | , , ,

ஒருமுறை நான் மலேசியா சென்றபோது முன்பு வேலை செய்த கடையில் மீண்டும் வேலைசெய்ய மனமில்லை. காரணம் ஜில்லா வாரியான [மாவட்ட அளவில்] தஞ்சாவூர் காரர்களுக்கு ராமநாதபுர காரர்களை பிடிக்காது. அதுபோலவே ராமநாதபுர காரர்களுக்கும். ஊர்வாரியான, ஜில்லாவாரியான வேற்றுமைகள் கொடி கட்டி பறக்கும். இருந்தாலும் தஞ்சை மாவட்டத்துk காரர்களிடம் வேலை செய்வது மிக கடினமே. அமரிக்காவில் ஆப்பிரிக்க அடிமை கருப்பர்கள் பட்ட துயரத்தை எல்லாம் இவர்கள் தரும் துயரம் தூசு ஆக்கிவிடும். இது பற்றி நிறையவே எழுதலாம். இன்ஷா அல்லாஹ் இன்னொரு முறை அதை காண்போம்.

வேலை தேடி ஒரு வாரம் காத்திருந்தேன்.

ஒரு நாள் ஒரு புத்தக கடையில் மேனேஜராக இருக்கும் எனக்கு தெரிந்த ஒருவர் கூப்பிடவிட்டார். “தைபிங்கில் இருக்கும் எங்கள் கடையில் வேலை செய்யப்போகிறாயா? சம்பளம் 150 இரண்டு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து இருந்தால் இரண்டு மாதச் சம்பளம் போனஸ்!” என்றார்.

‘சரி’ என்றேன்.

தமிழ் முஸ்லிம்கள் கடையில் போனஸ் என்பதற்கும் Working partner என்பதற்கும் அர்த்தமே வேறு. அதன் முழுபொருள் Stick and Carrot. ஒரு நீண்ட கம்பின் நுனியில் கேரட் கிழங்கை கைற்றில் கட்டி குதிரை அல்லது ஒட்டகத்து மீதுயேறி ஒருவர் உட்கார்ந்து கொண்டு வாய்பேச தெரியாத  பசி கொண்ட அந்த ஜீவன்களின் கண்களுக்கு முன்னே இந்த கம்பில் கட்டிய கேரட் கிழங்கை தொங்க விடுவார்கள். 


பசி கொண்டபோது புசிக்க கிடைக்காத அந்த அப்பாவி ஜீவன்களும் மனிதனின் ‘தந்திரம் அறியாமல்’ கரட் நமக்கு அருகில் தானே இருக்கிறது! திங்கலாம்! பசி தீரதிங்கலாம்’’! என்ற ஆசையோடு வேக வேகமாக எட்டு மேலே எட்டு வச்சு நடக்கும். நடக்க-நடக்க கம்பில் கட்டிய கேரட்டும் அந்தவாயில்லா ஜீவன்களின் வாய்க்கு எட்டாமல் நகர்ந்து நகர்ந்து போகும். அது போல்தான் மலேசியாவில் தொழில் நடத்திய தமிழ் முஸ்லிம் முதலாளிகள் தங்களிடம் பணிந்து பணிபுரிந்த loyal  (விசுவாசமான) வேலையாட்களுக்கு கொடுத்த போனஸ் அல்லது பங்கு. இந்த கானல் நீரை நம்பி கண்ணீரும் விட்டு கடையையும் விட்டு காணாமல் போனவர்கள் பலர். நான் இந்த மேனேஜர் சொன்ன போனஸை நம்பவில்லை. ஆனால் சும்மா இருந்து பொழுதை போக்க விரும்பாமல் ரயில் ஏறினேன்.

பகல் முழுதும் ரயில் பயணம். இரு பக்கங்களிலும் பசுமை கம்பளங்கள் போர்த்தது போல் புல்வெளிகள். அடர்ந்த மரங்கள் மலாய்காரர்களின் முற்றிலும் மரத்தினால் கட்டிய பாரம்பரிய வீடுகள். ரப்பர் தோட்டங்கள் மலையில் பிறந்து மண்ணில் நெளிந்து கடலில் கலக்கும் நதிகள் இவை எல்லாம் கண்ணுக்கு காட்சியாய் இருந்தது.மாலை மணி ஐந்துக்கு தைபிங் நிலையத்தில் வண்டி நின்றது. பெட்டி படுக்கையுடன் இறங்கினேன். அங்கு நின்ற டேக்ஸியில் ஏறி அட்ரஸை சொன்னேன். பத்து நிமிஷத்தில் டேக்ஸி கடை முன் நின்றது.

அடுத்த நாள் கடையில் நிர்வாகி நான் செய்ய வேண்டிய வேலைகளை சொன்னார். [பெரும்பாலான தமிழ் முஸ்லிம் கடைகளில் இன்னார் இன்னாருக்கு இன்ன இன்ன வேலை  யென்று ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டாலும் இட ஒதுக்கீட்டை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு எல்லா வேலைகளையும் எல்லோரும் செய்ய வேண்டும். இந்த ஒதுக்கீடெல்லாம் சம்பளத்தை குறைத்து பேச தூண்டிலில் கோர்க்கும் பூச்சியே.. முதலாளிக்கு சொந்தக்கார மாமன் மச்சாங்கள் தப்பு செஞ்சால்கூட வேறு எவனாவது ஒருத்தன்தான் முதலாளிக்கு ஜவாப் சொல்ல வேண்டும். இது எழுதப்படாத சட்டம்.] Formalityக்காக மேனேஜர் சொன்னதை Formalityக்காக நானும் ஒப்புக் கொண்டதாக டும்டும் மேல தாளத்திற்கு தலையாட்டும் கோயில் மாடுபோல் தலையாட்டினேன். மாதங்கள் ஓடியது.

ஒரு நாள் முதலாளிக்கும் மேனேஜருக்கும் சண்டை வந்தது! மச்சான் மச்சினன் சண்டை அன்றே மேனேஜர் கடையே விட்டு மூட்டை கட்டினார். நான் மேனேஜராக பதவி பிரமானம் எடுத்துக் கொண்டேன். பதவி எனக்கு வந்ததால் எனக்கு முந்திய சீனியருக்கு என் மேல் பொறாமை வந்தது. ‘முன்னவன் நான் இருக்க என் பின்னவனுக்கு பதவியா?’ என்று அவர் போர்க் கொடிதூக்கினார். கடையில் வேலை செய்த பையன்கள் எல்லாம் என் பின்னே நின்றார்கள். ஒரு மாதம் கழித்து அவரும் கடையே விட்டு எக்ஸிட்’ வாங்கினார். கடையில் எனக்கு வயதில் மூத்த ஒருவரும் இருந்தார். அவர் உண்டு அவர் வேலை உண்டு யென்று எதையும் கண்டும் காணாமல் இருந்தார்.

TAIPING என்னும் இந்த சீன மொழி சொல்லுக்கு [PEACE] அமைதி என்று பொருளாம். பெயருக்கு ஏற்றாற் போல் ஊரே ஒரே அமைதி பூங்காவாகவே இருந்தது. மலேசியாவின் முதல் ரயில்பாதை 1885-ஜூன் மாதம் முதல் தேதி தைபிங்கிலிருந்து Port Weld. வரை போடப்பட்டது.

மலேசியாவில் பல பழங்கள் விளைந்த போதிலும் இந்நாட்டு மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பது துரியான் [DURIAN] பழமே! ’தூறி’ என்ற மலாய் சொல்லுக்கு ’முள்’ என்பது தமிழ். முக்கனிகளில் ஓன்றான பலா பழவகையை சார்ந்தது. ஆனால் பழமோ நம்ம ஊரு தேங்காய் அளவில் இருக்கும். இதை முன்பின் தின்று ருசி காணாதவர்கள் இதன் கிட்டே நெருங்கினால் குமட்டலும் வாந்தியும் வந்து காத தூரம் காலெடுத்து ஓடுவார்கள்.

இவர்களுக்கு தாம்பாளம் நிறைய பொன்னும் மணியும் குவித்துக் கொடுத்து “சாப்பிடுங்கள்! சாப்பிடுங்கள்!” என்று என்னமாத்தான் கெஞ்சினாலும் ஊஹும் “கல்லசை! என்னசை!” என்று அசைச்சு கொடுப்பார்கள். நெருங்கவே மாட்டார்கள். அதன் வாசம் அப்படி!. ஆனால், இதை மனதைக் கட்டுப்படுத்தி மூக்கை பொத்திக் கொண்டு  ஒருமுறை இருமுறை தின்று ருசி கண்டு விட்டார்களேயானால் அடுத்தமுறை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் கொஞ்சமாவதும் சாப்பிடாமல் போகமாட்டார்கள்.

ருசியும் வெட்கம் அறியாது. ஆனால் இனிப்பு நீர்காரர்களுக்கு இது நஞ்சு. ஆண்மை விருத்திக்கு கைகண்ட மருந்து. விடுதிகளில் தங்கி ஆண்மை விருத்திலேகியம் கொடுக்கும் டாக்டர்களை தேடி விடுதிப்படி ஏற வேண்டியதில்லை. இந்த பழசீசனிலிருந்து சரியாக பத்து மாசம் சென்றதும்  பிறசவ வார்டில் இடநெருக்கடியும் ‘குவா-குவா’ சத்தமும் அதிகமாகும். Duriyan jatoh sarong naik இது இந்தோனேசியா  பழமொழி. தமிழில் “துரியான் பழம் விழுந்தால் கைலி உயரும்”.

தைபிங் நகரில் துரியான் சீசன் ஆரம்பமானது. ரோடுகளின் இருபக்கமும் பழங்கள் குவிந்தன. ஒரு இரவு நாங்கள் எல்லாம் துரியன் பழம் வாங்க கிளம்பினோம். எங்கள்திட்டம் எல்லோருக்கும் மொத்தமாக வாங்குவது எல்லோரும் ஒன்று சேர்ந்து உண்பது. விலையில் எல்லோரும் சரிசமமாக ஈவிச்சு கொள்வது. எங்களில் அந்நாட்டில் பிறந்து ரப்பர் தோட்டத்தில் கூலி வேலை செய்த ஏழை குடும்பத்து பையனும் மிகக்குறைந்த சம்பளத்தில் வேலைசெய்து கொண்டிருந்தான் [குறிப்பு: குறைவான சம்பளத்துக்கு நிறைய வேலை செய்வோர்களை தமிழ் முஸ்லிம் முதலாளிகளுக்கு ரெம்ப பிடிக்கும்] அவன் திண்ணும் பழத்திற்கு அவனிடம் காஸு வாங்குவதில்லை அவனுக்கு நல்ல  பழம் எது, பூச்சி பழம் எது என்று நன்றாகத் தெரியும். மேலும் அவன் நாட்டுபுற மலாய் மொழி Slang நன்றாக பேசுவதால் அதை இதை சொல்லி விலை குறைத்து வாங்கி விடுவான். மலாய்காரர்களுக்கு மலாய்மொழியை அவர்களைப் போல் பேசுபவர்களை பிடிக்கும். அது ஒன்றையே மூலதனமாக கொண்டு பல காரியங்களை சாதித்து விடலாம்.


நாங்கள் துரியான் பழ பஜார் நோக்கி துரிதமாக நடந்தோம். அங்கே மலை மலையாய் பழம் குவித்திருந்தது Mari-marilah Tuan! buah yang bagus.dan sedap.Harga murah saja என்று வொவ்வொரு கடைகாராரும் கூவினார். இதன் பொருள். ”[வாங்க பெரியவரே! நல்ல பழம்! ருசியான பழம்! விலையோ மலிவுதான்]’’. ஒவ்வொரு குவியலாக பார்த்துக் கொண்டே போனோம். அந்த நாட்டுப்புற தெலுங்கு பையன் ஒருகுவியல் அருகில் போய் உட்கார்ந்து கவனமுடன் பார்த்து பார்த்து பலபழங்களை பொறுக்கி சேர்த்து விலைபேசினான். கொஞ்ச நேரம் விற்பவருக்கும் வாங்குபவருக்கும் பேரம் நடந்து பரஸ்பர நல்லெண்ணத்துடன் பேரம் முடிந்தது.

காசை கொடுத்த பையன் “சாயாசூடா பிள்ளி”, [நான் உன்னிடம் வாங்கி விட்டேன்].

பழம் விற்றவன் பதில் சொன்னான் “சாயாசூடா ஜூவால். செலாமத் மாக்கான் திரிமாகஸி” [நான் விற்று விட்டேன். நல்லபடியாக சாப்பிடுங்கள்.நன்றி.]

இது அந்த சின்னஞ் சிறிய நாட்டின் பண்பாடு. கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடியான நம்மைவிட எவ்வளவோ பின் தங்கியவர்களின் பண்பாடு இப்படி. நம்நாட்டின்நிலைஎப்படி?

நம் ஊர்  மெயின் ரோட்டில் ஒருபத்திரிகை கடைக்கு சென்று கைற்றில் தொங்கிய ‘ஆனந்தவிகடன்’னை எடுத்தேன் “ஆஆஆஆ… அதை எடுக்காதீர்கள்! என்னிடம் கேட்டால் நானே தருவேனே!” என்று அதட்டலாக சொன்னார்.

“சரி! கொடுங்கள்” என்றேன். உள்ளே இருந்த ஒரு பிரதியை எடுத்து அங்கிருந்தே தூக்கி மேஜைமீது வீசினார். அது வெளியே வந்து மண்ணில் விழுந்தது. கல்லாவில் இருந்த முதலாளி இந்த மரியாதை கெட்ட செயல் கண்டு கொஞ்சங்கூட கவலையில்லாமல் யாரோ ஒருவருடன் சுவாரசியமாக,தன்னை மறந்து கருணாநிதி-versus ஜெயலலிதா அரசியல் பேசிக்கொண்டிருந்தார்.

விகடனுக்கு. விலைRs15 போட்டிருந்தது. இருபது ரூபாய்கொடுத்து “பாக்கிகாஸு தாங்க!” என்றேன்.

நோட்டை வாங்கியவர் அதை மேஜை மேல் வைத்து காற்றில் நோட்டு பறந்து விடாமல்இருக்க கையை நோட்டின் மேல் வைத்துக் கொண்டார். இப்பொழுது அவர் கையே நோட்டுக்கு பேப்பர் வெய்ட்.

“பாக்கி கொடுங்கள் போகனும்! பாக்கி கொடுங்கள் போகனும்!” என்று நான் ’பலமுறை’ கத்தியும்கூட கடைகாரர்காதில்.அது ஏறவேஇல்லை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் அங்கே சேர்ந்து வந்து இந்த இருவர் வாதங்களை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

“பா..ஆஆஆக்கி கொடுங்கள்” என்று ஏழுருக்கு அப்பாலும் கேக்கும்படி சத்தம் போட்ட பின்பே கடை முதலாளி கருணாநிதி ஜெயலலிதாவை விட்டு விட்டு தன் சுயநினைவுக்கு வந்தார்.

“இன்னும் பாக்கி வாங்கலையா?” என்று அவர் என்னையே கேட்டுக் கொண்டு அஞ்சு ரூவா நோட்டைஎடுத்து வீசினார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இங்லாந்திலிருந்து வெளிவந்த Psychologist என்ற மாத இதழில்  Herbert Cason என்பவர் எழுதினார் ’ஒரு வாடிக்கையாளர் உன் கடையிலிருந்து திருப்தியுடன் வெளியானால் அதுவே நூறு வாடிக்கையாளர்களை உன் கடைக்குள் கொண்டுவரும்’’ என்றார். இங்கே பாக்கிகாசைத் தூக்கி வீசுகிறார்கள். கொடுத்த காஸுக்கு பாக்கி கேட்டு பிச்சைகாரன் போல் ஒத்தைக் காலில் நிற்கவேண்டிய திருக்கிறது. [‘’இவர்கள் என்ன Psychologist-டா படித்தார்கள்? ஹெர்பர்ட்காசன் சொன்னது போல்செய்ய’’ என்று நீங்கள் கிசுகிசுப்பது காதில் விழுகிறது].

இப்பொழுது பேசு பொருளுக்கு திரும்புவோம். வாங்கிய பழங்களை எல்லாம் தூக்கி கொண்டு அருகிலுள்ள தனியிடத்திற்கு சென்று சாப்பிட உட்கார்ந்தோம்.பெரியவர் மட்டும் உட்காராமல் நின்றார்.

“ஏன் நிற்கிறீர்கள்? உட்காருங்களேன்!” என்றேன்.

’’நான் தனியாக ஒரு இடத்தில் போய் சாப்பிடுகிறேன். என் பங்குக்கு உள்ள பழத்தை கொடுங்கள்!’’ என்றார்.

பையன்கள் எல்லோருமே என்னை பார்த்தார்கள். ‘பழம் வாங்க வரும் போது பேசியது ஒன்று. இப்பொழுது இவர் மட்டும் ஏன் மக்கர் பண்ணுகிறார்? என்று எனக்கு குழப்பமாக இருந்தது.

“ஏன்? என்ன விஷயம்? வரும் போது இப்படித்தானே பேசி வந்தோம். இடையில் யாரும் ஏதும் தவறாக சொல்லி விட்டார்களா?” என்றேன்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை! எனக்கு எல்லோர் கூடவும் ஒன்றாக இருந்து சாப்பிட பிரியமில்லை” என்றார்.

அங்கிருந்த எல்லோரும் என்னைப் பார்தார்கள். அவர்கள் என்னை நோக்கிய நோக்கம் ‘அங்கிருந்தவர்களில் நானும் அந்தப் பெரியவரும்தான் முஸ்லிம்கள். மற்ற அனைவரும் இந்துக்கள்’. ‘இந்துக்களோடு ஒன்றாக இருந்து நான் சாப்பிடமாட்டேன்’ என்று அவர் சொல்கிறாரோ என்பதே அந்தப் பார்வையின் பொருளாய் எனக்கு பட்டது.

"எல்லோரும் அண்ணன் தம்பிகளாய் ஒன்றாக இருந்து வேலை செய்யும் போது நீங்கள் மட்டும் குழப்பம் செய்வதில் பல பிரச்சனைகள் வரும். அப்புறம் கடை வேலைகளிலும் அது எதிரொலிக்கும். அது எனக்கு தலைவலியை கொண்டு வரும். அதனால் விஷயம் என்னவென்று கூறுங்கள் அது எதுவானாலும் உங்கள் விருப்பபடியே செய்யலாம் என்றேன்"

“ஒன்றுமில்லை! நீங்கள் எல்லாம் இளம் வயதுகார்கள். சீக்கிரம் சீக்கிரம் சாப்பிடுவீர்கள். நான் மெதுவாதான் சாப்பிடுவேன். நான் ஒன்னு சாப்பிட்டு முடிப்பதற்குள் நீங்கள் லெல்லாம் ரெண்டு மூனை முடித்து விடுவீர்கள். காசு கொடுத்தும் எனக்கு கெடைக்க வேண்டிய பங்கு கெடைக்காது அதனால் என்பங்கை தனியே கேட்டேன்’’ என்றார்.

உள்ளம் திறந்துவிட்டார். அவர்உள்ளத்தில் சைத்தான் குடிகொண்டான். அங்கிருந்தவர்களில் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். அந்தப் பார்வையின் பொருள் “இதுதான் உங்கள்இஸ்லாமா?” என்று கேட்பது போல் இருந்தது. 

அவர் அப்படி நினைத்தால் அவர்பங்கை அவருக்கு கொடுத்துடலாமே!’’ என்று ஒரு பையன் சொன்னான்’’ முதலில் பழத்தை அவரையே சாப்பிட சொல்லுங்கள். மீதியை நாம் சாப்பிடலாம்’’ என்று இன்னொரு பையன் சொன்னான்.

“என் பங்கைத்தான் நான் கேட்டேன்! யாரும் எனக்கு தர்மம் கொடுக்க வேண்டாம்’’என்றார்.!

‘சரி! இதற்கு மேல் கெஞ்சினால் குரங்கு மரத்துக்கு மேலே ஏறும்’’! என “எத்தனை பழம் இருக்கிறது’ என்று எண்ணும்படி சொன்னேன். ஆள் ஒன்னுக்கு மூனு பழம் வீதம் வந்தது போக.ஒரு பழம் மீத மிருந்தது.

‘’ஆள் ஒன்னுக்கு மூனு பழம் வருகிறது. உங்கள் பங்கை நீங்களே பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்றேன்.

அவரே நன்றாக பார்த்து பார்த்து எடுத்துக் கொண்டு சற்று ஒதுங்கிபோய் உட்கார்ந்தார். மீதமிருந்த அந்த ஒரு பழத்தையும் அவரிடம் கொடுத்தேன். 

“வேண்டாம் !ஒருபழம்தானே? நீங்கள்தான் அதிகம் பேர் இருக்கிறீர்கள். உங்கள் பங்கிலேயே இருக்கட்டும்!’’ என்று பெரும்தன்மையுடன் சொன்னார். செய்த்தான் வேதம் ஓதியது!

‘’பரவாயில்லை! எங்களிடம் நிறைய பழம் இருக்கிறது. அதில் ஒன்று பூச்சிப் பழமானால் இன்னொன்றை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு ஒரு பழம் பூச்சியானால் மிஞ்சுவது இரண்டுதான். அதிலும்கூட பூச்சி இல்லாத பழம் கிடைப்பது அல்லாவின் நாட்டம். கைகாவலுக்கு இதையும் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றேன். என் முகத்தை பார்க்காமல் வாங்கிக் கொண்டார்.

பழங்களை உடைத்து திண்ண ஆரம்பித்தோம். ஒரு பழத்திற்கு நாலு compartment-இருக்கும். ஒரு  compartment-டில் மூனுசுலை இருந்தால் அதில் ருசி அதிகமும் விதை சிறிதாகவும் இருக்கும். விதையைச் சுற்றிலும் வெண்ணைபோல் மெல்லிய இலேசான மஞ்சள் நிற க்ரிம் பத்தை போல் படிந்திருக்கும்.இது பழத்தின் கீரிம் compartment-டில் ஒட்டாமல்அப்படியே எடுத்துசாப்பிட அல்லாஹ் படைத்திருக்கும் அற்புதங்களில் இதுவும் ஒன்று அவன் படைப்பின் ஓவ்வொன்றிலும் உற்று நோக்கினால் இதைக் காணலாம்.

நாங்கள் பழங்களை ருசித்து-ருசித்து சாப்பிட்டோம். பக்கத்தில் இருந்த பையன் “அண்ணே! அங்கே பாருங்கள்!’’ என்றான். 

இலேசாக அந்தப் பெரியவர் பக்கம் பார்வையை போகவிட்டேன். ஒரு பழம் முழுதும் பூச்சி. அது ஒரு ஓரத்தில் தூக்கி வீசிக் கிடந்தது. மற்றொரு பழத்தில் பாதி பூச்சி. பாதியை ருசித்துக் கொண்டிருந்தார். ஆக உடைத்த இரண்டில் ஒன்னரை பழம் பூச்சி. பூச்சியில்ல பாதியை ருசிதுக் கொண்டிருந்தார். அவரிடத்தில் பாக்கி இருந்தது அவர் பங்குக்கு கிடைத்த ஒன்று, துண்டு விழுந்ததில் நாங்கள்கொடுத்தஒன்று.ஆக இரண்டு உடைக்காமல் வெய்டிங் லிஸ்ட்டில் இருந்தது. எங்கள் பழங்களிலும் இரண்டு பழத்தில் பாதிபூச்சியும் ஒன்று முழுதும் பூச்சியாய் போனது. அவரும் நாங்களும் துரியான் தின்று எழுந்த போது அவர் துரியானில் ஒன்னரை பூச்சியும் எங்களில் ரெண்டு பழ நட்டதிற்க்கும் எழுந்தோம் எங்களில் ஆறுபேர். அவர் ஒருவர் மட்டுமே.! 

நாங்கள் எல்லோரும் கடைக்கு நடந்தோம். தனித்து போனவரும் கூடவே வந்தார். யாரும் யாருடனும் பேசவில்லை. மௌனத்தின் ஆட்சி சிம்மாசனம் ஏறியது. மறுநாள் வேலைகள் வழக்கம் போல் நடந்தது. அவர் யாருடனும் ஏதும் பேசாமல் தன்வேலைகளை செய்து கொண்டிருந்தார். எப்பொழுதும் பேச்சும் சிரிப்பும் கிண்டலும் நையாண்டியுமாக ஓடியபொழுது சோகமாய் ஓடியது. ஒரு வெள்ளிகிழமை மாலை பினாங்கு தலைமை நிலையத்திலிருந்து டெலிபோன் வந்தது” அவர் கடையை விட்டு நின்றுகொள்கிறேன்” என்று டெலிபோன் போட்டார். நாளைக்கு அவர் கணக்கை பார்த்து பாக்கியே கொடுத்து எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவிடு! ’போனஸ் கீனஸ்’ என்று ஏதெனும் ’’கிக்கிரிபுக்கிரி’’ என்றால் என்னிடம் பேசிக்கிடசொல்’’ என்றார்.

அந்த முதலாளிக்கு பிடிக்காத ஒரே ஒருவார்த்தை ’’போனஸ்’ தான் அந்தக் கடையில். வேலைபார்த்த அத்தனை பேருக்கும் அவர்கடைசியாக உச்சரித்த வார்த்தை இதுதான். பினாங்கு தொடங்கி சிங்கப்பூர் வரை கிளைகளை நிறுவி ’ஓகோ! ஹோ’வென்று ஆலமரம் போல விழுதுகள் விட்டு வளர்ந்த இந்த விருட்சம் வீழ்ந்தது உழைத்துஉழைத்து ஓடாய்போன தொழிலாளிகளின் சாபமே.

இவைகளுக்கு காரணம் தலைமை நிலையத்தில் ஒருசெய்த்தான் மேனேஜராக இருந்து கெடுத்தான். துரியான் பழ செய்தானிடம் விஷயத்தை சொன்னேன் ’’அவன் நாசமாய் போகட்டும் என்று பாக்கிகாசை வாங்கி கொண்டு போய் விட்டார். நானும் அங்கிருந்து விலகியபோது எனக்கும் அந்த செய்த்தான் ஓதிய வேதம் ‘போனஸ் இல்லை! ’மலேசியாவில் தஞ்சாவூர் காரர்கள் கடையில் மேனேஜராக இருந்தவர்களும் முதலாளியும் வேதம் ஓதும் செய்த்தான்களே! வேதம் ஓதிய அவர்கள் கடைகளில் எல்லாம் இப்பொழுது YALE-பூட்டு தொங்குகிறது.!

S.முஹம்மது ஃபாருக்