Showing posts with label mumbai. Show all posts
Showing posts with label mumbai. Show all posts

கேட்வே ஆஃப் இந்தியா - பேசும் படம் ! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | May 14, 2013 | , , , , ,





ஊரில் இருக்கும்போது மும்பை பக்கம் செல்ல நேர்ந்தது, அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான பாலத்தை  பல கோணங்களில் போட்டோ எடுத்தேன் அதில் சில நேரான கோணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


என்னங்க இம்புட்டு தூரம் போயிட்டு பாலம் போட்டோ மட்டும்தானானு கேட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த போனஸ் கேட்வே ஆஃப் இந்தியா இந்த வழியாகத்தான் இந்தியாவுக்குள் வரனுமாம் ! ஏற்கனவே எப்படி வந்தார்கள்னு டீவிலையெல்லாம் போட்டுக் காட்டினாங்களே ஞாபகம் இருக்கா ?


என்னங்க  கேட்வே ஆஃப் இந்தியாவை பார்த்த நீங்கள் அக்கம் பக்கம் பார்க்கலையா என்று கேட்பவர்களுக்காக  இது மற்றொருமொரு போனஸ் !




'தமிழன் என்று சொல்லாட தலை நிமிர்ந்து நில்லடா' என்று சொல்லக் கூடிய தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வட நாட்டுப் படங்களை போடுவது நியாயமா என்று கேட்கும் (தமிழ்) மொழிப் பிரியர்களுக்காக - மும்பையில் இருந்து இண்டிகோ விமானத்தில் சென்னை  வரும் போது விமானத்தில் காசு கொடுத்து காய்கறி சாண்ட்விச் வாங்கி சாப்பிட்டுவிட்டு தெம்பாக நாம்  நம்ம சென்னையை சுற்றி வளைத்து பிடித்த (!!!???) ஃபோட்டோக்கள் (மெய்யாலும் ராட்டினம் ஜம்போவில் ஏறியெல்லாம் எடுக்கலைங்க). 



விமான டிக்கட்டுக்கு குடுத்த காசுக்கு சென்னையை நல்லவே சுத்தி காட்டிட்டுதான் விமானத்தை தரை இறக்குனாய்ங்க  !


இரயில் பயணத்தில் இவ்வாறான அனுபவங்களை காணாத பயணமும் ஒரு பயணமா ? என்று ஏங்க வைக்கும் "டீ காப்பீ" சத்தங்களுக்கு பதில் "சாய், காப்பீ" என்று என்றோ 'தார்' பூசிய எழுத்தின் உச்சரிப்பு சத்தம் கேட்டது !


பாதி வழியில் மலை இடுக்கில் இப்படி சிக்கிய அனுபவம் உண்டா ?

Sஹமீது