Showing posts with label shameed. Show all posts
Showing posts with label shameed. Show all posts

செயற்கை 'கோள்' - மூட்டல் தொடர்கிறது... 4

அதிரைநிருபர் பதிப்பகம் | November 03, 2015 | , , , ,


செயற்கை விண்கோள் என்றால் என்ன இது மனிதனால் வடிவமைக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும் செயற்கை சாதனமே செயற்கை கோள் ஆகும்.

விண்ணில் ஏவப்படும் எந்த பொருளாக இருந்தாலும் அது பூமியின் இழு விசை காரணமாக கிழே இழுக்கப்படும் அப்படி அது கிழே இழுக்கப் படாமல் இருக்க வேண்டுமானால் பூமியின்  ஈர்ப்பு விசையை தாண்டி அந்த கோள்களை செலுத்த வேண்டும் (பூமியின் ஈர்ப்பு விசையானது பூமியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் வரை இருக்கும்).

அதனால், செயற்கை விண்கோள்கள் புவியின் ஈர்ப்பு சக்தியைக் கணக்கில் கொண்டு பூமிக்கு திரும்ப வராமலும் அதே நேரம் பூமியின் இழு சக்தியின் நீள்வட்டப் பாதையின் உள்ளிருந்தே பூமியை சுற்றிவரும் தொலைவிற்குள் செலுத்தப்படுகின்றன இது குறைந்தது 200 கி.மீ தூரத்தில் இருந்து அதிகபட்சமாக 35,000 கி.மீ தூரத்தில் பெரும்பாலான  செயற்கைக் கோள்களும் சுற்றி வருமாறு செலுத்தப் படுகின்றன.

விண்கோள்களை புவியின் ஈர்ப்பு சக்தியைத் தாண்டி அனுப்புவதற்கு தேவைப்படும் சாதனமே ராக்கெட் என்று பெயர். இது பொதுவாக விண்கலங்களை அல்லது செயற்கை கோள்களை தேவையான உயரத்திற்கு தூக்கி சென்று வானில் ஈர்ப்பு விசையை தாண்டி செலுத்திவிடும்.

ஏவுகணைகள் உயரத்திற்கு ஏற்றது போல் பலவிதமான அடுக்குகளாக செயல்படும். உதாரணத்திற்கு மூன்று அல்லது அதற்கு அதிகமான ஏவுகணைகள் செயற்கைகோளை சுமந்து கொண்டு பூமியிலிருந்து புறப்படும். ஒவ்வொரு ஏவுகணையும் அதனுள் செலுத்தப்பட்ட எரிபொருள் தீரும் வரை விண்கலத்தை மேலே தூக்கிக்கொண்டு போகும் எரிபொருள் தீர்ந்ததும் அது செயற்கை கோளில் இருந்து பிரிந்து கிழே விழுந்துவிடும். 

முதலாவது ஏவுகணையின் எரிபொருள் தீர்ந்துவிடும்போது இரண்டாவது ஏவுகணை செயல்பட ஆரம்பித்து விடும். இரண்டாவது ஏவுகணையின் எரிபொருள் தீரும்பொழுது, மூன்றாவது ஏவுகணை செயல்படத் தொடங்கிவிடும். ஒவ்வொரு ஏவுகனையும், ஒன்று முடிவுறுவதற்கு முன்னதாக தானியங்கி முறையில் தொடர்ந்து செயல்பட்டு குறிப்பிட்ட உயரத்திற்கு விண்கோளை எடுத்துச் சென்று விடும்.

ஏவுகணைகள் வானில் அதிக தொலைவு செல்வதற்கு ஏதுவாக இரண்டு விதமான எரிபொருள்களை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். ஒன்று திரவ ஏரிபொருள் மற்றொன்று திடஎரிபொருள். திரவ எரிபொருளில் ஹைட்ரஜன், கெரசின் (மண்ணெண்ணெய்) மற்றும் ஆக்சிஜன் மூன்றும் பயன்படுத்தப்படுகின்றன. திட எரிபொருளில் அலுமினிய மாவும், (இடியப்ப மாவு அல்ல) அம்மோனியம் நைட்ரேட் அல்லது அம்மோனியம் பெர்குலேரேட் என்ற வேதியியல் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதில் திட எரிபொருட்களே ஆபத்தில்லாமல் ஏவுகணையை செலுத்துவதற்கு ஏற்றது.

எல்லாம் சரிங்க கோடி கோடியா செலவு பண்ணி எதுக்காக அதை மேலே சுத்த உடுறாங்கன்னு மேலே சுத்துரத கிழே பார்ப்போம்.

விண்கோள்கள் இரண்டு விதமாக பூமியைச் சுற்றி வருகின்றன. ஒன்று ஈக்குவேட்டர் ஆர்பிட் என்று அழைக்கப்படும் கிழக்கு மற்றும் மேற்கு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருபவை. இன்னொன்று போலார் ஆர்பிட் என்று அழைக்கப்படும் வடக்கு மற்றும் தெற்கு சுற்றுவட்டப் பாதையில் தொடர்ந்து சுற்றி வருகின்றன.

இதை மாற்றி இப்படியும் சொல்லலாம் பூமத்திய ரேகையில் சுற்றி வருபவை சில. பூமியின் துருவங்களைச் சுற்றி வருபவை சில. இரண்டுக்கும் இடைப்பட்ட வீதிகளில் சுற்றி வருபவை சில. செயற்கைக் கோள்கள் வட்ட வீதியிலும் நீள் வட்ட வீதியிலும் பலவாறாக சுற்றி வருகின்றன.

ஈக்குவேட்டர் பாதையில் சுற்றிவரும் விண்கோள்கள் 35,000 கி.மீ உயரம் வரை செலுத்தப்படுவதால் ஈக்குவேட்டர் விண்கோள்கள் சற்று அதிகமான உயரத்தில் பூமியை ஒரு சுற்றி வருவதால் ஏறக்குறைய 24 மணிநேரம் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு தகுந்தாற்போல் உள்ள வேகத்திலும் உயரத்திலும் சுற்றி வரும்படி . இதன்  வேகத்தை அமைத்துக்கொள்வார்கள்  35,000கி.மீ. தொலைவில்   சுற்றிவரும் விண்கோளை ஜியோஸ்டேஷனரி சேட்டிலைட் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். (தமிழில் எப்படி  என்று தெரியவில்லை )

இது பூமியைச் சுற்றிவரும் விண்கோளைப் போன்று இல்லாமல் ஒரு குறிப்பிட்ட பூமியின் மேல்பரப்பில் எப்போதும் நின்று கொண்டிருப்பது போல் தோன்றும். இவ்வாறு ஒரே நிலையில் நிற்பதுபோல் தோன்றும் விண்கோள்களின் உதவியால்தான் தொலை தொடர்பு மற்றும் தொலைகாட்சி சாதனங்கள் (சீரியல் பார்த்து கண்ணீர் வடிப்பவர்களுக்கு இது தெரியுமா) ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு ஒளிபரப்பப்படுவதும் இது போன்ற செயற்கை கோள்கள்தான்.

மேலும் இந்தவகை கோள்களே புயல், இயற்கை சீரழிவுகளுக்கான எச்சரிக்கைகள் செய்யவும்,(ரமணன் நினைவுக்கு வருவாரே, அவரைச் சுத்தலில் விடும் கோள்கள்) வானிலை ஆராய்ச்சிகளுக்கும், பூமியின் நிலவளங்கள், கனிமங்கள் மற்றும் நீர் நிலைகளை அறிந்துக் கொள்ளவும் உதவுகின்றன.

போலார் ஆர்பிட் என்று அழைக்கப்படும் வட்டப் பாதையில் சுற்றிவரும் செயற்கை கோள்கள் பூமிக்கு அருகாமையிலேயே சுற்றிவரும் உயரத்தில் அதாவது 200 கி.மீ தொலைவில் மட்டுமே செலுத்தப்படும். இவைகள் பெரும்பாலும் பூமியை ஒரு சுற்று சுற்றி வர இரண்டு மணி நேரமே எடுத்துக் கொள்ளும், அது மட்டுமல்லாமல் அதிகமான இடங்களையும் சுற்றி வந்துவிடும். இவ்வகையான செயற்கை கோள்கள் பெரும்பாலும் உளவு பார்க்கும் பணிக்காகவே செலுத்தப் படுகின்றன.

வசதிமிக்க நாடுகள் இது போன்ற செயற்கை கோள்களை எதிரி நாடுகள் மற்றும் தனக்குப் பிடிக்காத நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார செயல்பாடுகளை உளவு பார்க்கும் நோக்கத்துடன் மட்டுமே வானில் செலுத்துகின்றன. போலார் ஆர்பிட்டில் சுற்றிவரும் கோள்கள் சூரிய வெளிச்சத்தைக் கணக்கில் கொண்டு பகல் முழுக்க தான் சுற்றிவரும் பகுதியை ஸ்கேனிங் செய்தபடி நிலக் கட்டுப்பாட்டுத் தளத்தினுடன் தொடர்பு கொண்டு புகைப்படங்களையும், இன்னும் பிற ரேடார் சமிக்கைகளையும் அனுப்பிக் கொண்டிருக்கும். போர்க்காலங்களில் இந்த செயற்கைக் கோள்களின் செயல்பாடுகள் மிகவும் அவசியமானதாக இருக்கும். காரணம் எதிரி நாட்டு ராணுவ அசைவுகளை கண்காணிக்க இது போன்ற செயற்கை கோள்கள் உதவியாக இருக்கும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் வானில் ஏவப்பட்ட செயற்கை கோள்களின் பட்டியலை கொஞ்சம் பார்த்துடுவோம்... ஏதும் விற்பனைக்கு வந்தால் மாடல் என்னவென்று தெரிந்து கொள்ள உதவும்.

07-Jun-1979 - பாஸ்கரா-1, எடை 442 கிலோ
31-May-1981 - ஆர்.எஸ். டி-1, எடை 38 கிலோ
20-Nov-1981 - பாஸ்கரா - 2, எடை 444 கிலோ
17-May-1983 - ஆர்.எஸ். டி-2 - எடை 41.5 கிலோ
17-Mar-1988 - ஐ.ஆர்.எஸ்.-1-எ. - எடை 975 கிலோ
13-Jul-1988 - ஸ்ரோஸ்-2 - எடை 150 கிலோ
20-Aug-1991 - ஐ.ஆர்.எஸ்.-1-பி. - எடை 975 கிலோ
20-Sep-1993 - ஐ.ஆர்.எஸ்.-1-இ. - எடை 846 கிலோ
15-Oct-1994 - ஐ.ஆர்.எஸ்.-பி-2. - எடை 804 கிலோ
28-Dec-1995 - ஐ.ஆர்.எஸ்.-1-சி. - எடை 1,250 கிலோ
21-Mar-1996 - ஐ.ஆர்.எஸ்.-பி-3. - எடை 920 கிலோ
27-Sep-1997 - ஐ.ஆர்.எஸ்.-1-டி. - எடை 1,250 கிலோ
26-May-1999 - ஐ.ஆர்.எஸ்.-பி-4 (ஒசென்சாட்-1). - எடை 1,050 கிலோ
22-Oct-2001 - டி.இ.எஸ்.(தி டெக்னாலஜி எக்ஸ்பைரிமெண்ட் சாட்டிலைட்) - எடை 1,108 கிலோ
15-Oct-2003 - ரிசோர்ஸ்சாட்-1. - எடை 1,360 கிலோ
05-May-2005 - கேர்டோசாட்-1. - எடை 1,560 கிலோ
10-Jan-2007 - கேர்டோசாட்-2. - எடை 650 கிலோ (64 ஜீபி கொள்ளலவு கொண்ட பதிவுப் பெட்டகம் உள்ளடக்கம்)
24-Apr-2008 - கேர்டோசாட்-2-எ. - எடை 690 கிலோ
28-Apr-2008 - ஐ.எம்.எஸ்.(இந்தியன் மினி சாட்டிலைட்)-1 - எடை 83 கிலோ
20-Apr-2009 - ரிஸாட்-2 (ரேடார் இமேஜிங் சாட்டிலைட்). - எடை ___ கிலோ
23-Sep-2009 - ஓசென்சாட்-2. - எடை 960 கிலோ
12-Apr-2010 - கேர்டோசாட்-2-பி. - எடை 694 கிலோ
20-Apr-2011 - ரிசோர்ஸ்சாட்-2. - எடை 1,206 கிலோ
12-Oct-2011 - மெகா டிரோபிக்குஸ் (இந்தோ பிரெஞ்ச் கூட்டு) - எடை 998 கிலோ
26-Apr-2012 - ரிஸாட்-1 (ரேடார் சாட்டிலைட்). - எடை 1,858 கிலோ
25-Feb-2013 - சாரல் (இந்தோ பிரெஞ்ச் கூட்டு) - எடை 407 கிலோ

1 July 2013 PSLV-C22 IRNSS-1A is the first satellite in the Indian Regional Navigation Satellite System(IRNSS). It is one of the seven spacecraft constituting the IRNSS space segment

26 July 2013 Ariane-5 INSAT-3D is the meteorological Satellite with advanced weather monitoring payload.

30 August 2013 Ariane-5 GSAT-7 is the advanced multi-band communication satellite dedicated for military use. 

5 November 2013 PSLV-C25 The Mars Orbiter Mission (MOM), informally called Mangalyaan is India's first Mars orbiter.

5 January 2014 GSLV-D5  GSAT-14 is the twenty third geostationary communication satellite of India to augment the In-orbit capacity of Extended C and Ku-band transponders.

4 April 2014 PSLV-C24 IRNSS-1B is the second satellite in the Indian Regional Navigation Satellite System(IRNSS)

10 November 2014 PSLV-C26 IRNSS-1C is the third satellite in the Indian Regional Navigation Satellite System(IRNSS)

7 December 2014 Ariane-5 GSAT-16 is twenty fourth communication satellite of India configured to carry a total of 48 communication transponders.

28 March 2015 PSLV-C27 IRNSS-1D is the fourth satellite in the Indian Regional Navigation Satellite System(IRNSS)

27 August 2015 GSLV-D6 GSAT-6 is a communication satellite. GSAT- 6 features an unfurlable antenna, largest on board any satellite. Launch of GSLV-D6 also marks the success of indigenously developed upper stage cryogenic engine.

28 September 2015 PSLV-C30 ASTROSAT is India’s first dedicated multi wavelength space Observatory.


இதுவரைக்கும் ஏவப்பட்டது அவ்வளவுதான் !

கோள்(கள்) சொல்வதை நம்பும் நாடுகள் இருக்கும்போது நாமெல்லாம் எம்மாத்திரம் !?

Sஹமீது

பேசும் படம் - தொடர்கிறது... 23

அதிரைநிருபர் பதிப்பகம் | September 11, 2014 | , , ,

அதிரைநிருபர் அவ்வப்போது அசைபோடும் அழகியலோடு அதன் தனித் தன்மையான மூன்றாம் கண்களோடு பேசும் கலைக்கும் மேடை அமைத்துக் கொடுத்து அவைகள் ஒவ்வொன்றுக்கும் கிரீடமே (கிரவ்ன்) வைத்துப் பார்ப்பதில் உவகை கொள்கிறது...!

அந்த வரிசையில் விழியால் மொழி மாற்றம் செய்து தனக்கு பிடித்த இடங்களை இடமாற்றம் செய்யாமல் இதயத்தில் இருப்பிடம் கொடுக்க வைக்கும் அற்புதமான கைவண்ணத்திற்கு சொந்தக் காரரான அதிரைநிருபரின் 'மூண்றாம் கண்' Sஹமீத் அவர்களின் கிளிக்ஸ் இனி தொடர்கிறது..


அனல் பறக்கும் கோடைச் சூடு அரபுநாடுகளை விட்டு அகல மறுக்கும் இந்த சூழலில் குளிருக்கு முன்னரே குளிர் காய ஏற்ற தீப்பிழம்பு எப்படி எழுந்து நிற்க வேண்டுமென்று சொல்லிக் காட்டுகிறது.


மொட்டுக்கள் குத்தி வைத்திருக்கும் அழகு காது குடையச் சொல்லும் ரீங்காரம்.


மலைகளின் இடுக்கில் தவழும் தண்ணீர், அந்த வானாமோ அதனை தனது அழகை சரிபார்த்துக்கொள்ள விரிக்கப்பட கண்ணாடியாக்கிக் கொண்டது ! சாரலும் சத்தமில்லாமல் சம்மதம் தெரிவிக்கிறது.


குளிருக்கு ஆவி புடிக்க போர்த்திய வெள்ளிப் போர்வையை கழட்டி வீசிவிட்டு ஆசுவாசப் படுத்திக் கொள்கிறது....


ஆகாயம், மலை, இலைகளில்லாத குச்சிகள், மரம், புல் இதெல்லம் கவிஞர்களுக்குத்தான் கருவறையைத் காட்டும்.


அழகிய குடில், ஆயிரம் ஏசி போட்டு அடுக்கு மாடியில் படுத்து உறங்கினாலும் அங்கே வராத தூக்கமும் சுகமும் இங்கே மண்டியிட்டு மயக்கியெடுக்கும்...

'புகை' படங்கள் : Sஹமீது

பேசும் படம் - தொடர்கிறது... 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 24, 2014 | , ,

நிழற்படங்கள் நிஜத்தை பிரதிபலிக்கும் பிம்பங்களாக தெரிவது அதன் தத்ரூபமான காட்சியமைப்பை அப்படியே கொண்டு வரும்போது, அதனை அப்படியே காட்சிப் படுத்தி காட்டும் மூன்றாம் கண் நிமிர்ந்து நிற்கிறது.


கருவுற்றிருக்கும்  பல்லி இதுகளெல்லாம் கரு கலைப்பு செய்து கொள்வது கிடையாது.


இந்த பூக்களெல்லாம் ஒற்றை காலில் நிற்பது ஏன் தெரியுமா பெண்கள் தலையில் சூடச் சொல்லித்தான்.


ஊட்டி கொடைக்கானல் செல்பவர்கள் இதை சுவைக்காமல் ஊர் திரும்புவதில்லை.


இயற்கையான இடங்களை காண்பதில் மனதுக்கு ஒரு இதமே 


வழுக்கும் பாறையில் வழுக்கிக்கொண்டு ஓடும் நீர்.

Sஹமீது

பேசும் படம் பார்த்து வரைக ! 27

அதிரைநிருபர் பதிப்பகம் | August 25, 2013 | , , , , ,

அதிரைநிருபரின் பேசும் படம் யாவரையும் பேச வைத்தது உலகறிந்த விஷயம். படம் போட்டு காட்டியவரே தன்னுடைய நகைச்சுவையோட அந்தப் படங்களை பேச வைத்ததை இது நாள் வரை ரசித்திருந்தீர்கள். இந்தப் பதிவில் அதிரைநிருபரின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவரான மு.செ.மு.நெய்னா முஹம்மது அவர்களின் வரிகளோடு உரையாடுகிறது நமது பேசும் படம்.


வயதான வாப்பாவின் வலிகள்
வருங்கால வாப்பாமார்களுக்கு
விளங்குவதில்லை.


மேல் குளிக்க விரும்பிய மரம்
உடல் சாய்த்து யாருக்கும் தெரியாமல்
குளிக்கும் காட்சி ஹமீத் காக்காவே அதற்கு சாட்சி


உயிரற்ற படகுகளுக்கு நல்ல நேர்த்தியான வீடுண்டு.
உயிருள்ள ஏழை மனிதவர்க்கத்திற்கு தங்க வீடில்லை


மலை மூலிகையில் புட்டு அவித்து ஆவியாய் பறக்கும்
வெண் பனிக்கூட்டம் யாருக்கு விருந்தளிக்கும்?


எட்டாத தூரத்திலிருந்து என்றும் கவிஞர்களை
கவி படைக்க வைத்த வெண் மேகம் தரையிறங்கி
கொஞ்சம் மண்ணை தாலாட்டிச்செல்கிறது.


புகைப்பிடித்தல் உடலுக்கு கேடு விளைவிக்கும்
பனிபிடித்தல் மலை முகட்டிற்கு நன்மைபயக்கும்


எங்கள் பச்சை சாயம் வெளுத்தாலும் நாங்கள்
என்றுமே பாருக்கு நன்மை செய்வோம். மழைக்கணவன்
எம்மை தொடும் வேளை பசுமை படரும் எம் மேனியில்.


எதையும் பிடித்து திண்ணும் மனிதனருகில் இருப்பதால்
பிளாஸ்டிக் வாத்துக்கள் கவலைப்பட தேவையில்லை.


மனிதன் எளிதில் பிடிக்க முடியாமல் போனதால் தான்
நாம் நாமாக இருக்கிறோம் என்றெண்ணி சந்தோசத்தில்
சிறகின்றி மலை முகட்டை முத்தமிட்டு பறக்கும் வெண்மேகக்கூட்டம்.


கலர் கலராய் இருக்கும் பூக்குஞ்சங்கள்
வரிசையில் நின்று குரூப் ஃபோட்டோ எடுக்குது
வருங்காலத்தில் யாரிடம் காட்டி மகிழும்?


கண்கவர் பெண்களின் பூப்போட்ட புடவை
கடையில் மட்டும் தான் கிடைக்குமென்றிந்தேன்
இங்கு பூவாய் மலர்ந்து உடுத்த உடையின்றி இருக்கும்
ஏழைப்பெண்களுக்கு இலவசமாய் தர காத்திருக்கிறது.


அன்பு என்றும் இதயத்திற்குள்ளேயே இருந்து விட்டால்
அது அறியாமலேயே போய் விடும் பாச உள்ளங்களுக்கு
அவை அம்பாய் வெளியில் காட்டி நிற்கும் பூக்கள் இவை.


தேன் உறிஞ்சும் குழல் தேனிக்களிடம் இந்த
ஈ வாங்க வேண்டும் கொஞ்ச நேரம் கடன்
செய்வதறியாது நிற்கும் ஈ வெண்ணெய்யில்
நின்று கொண்டு நெய்யிக்கு எங்கு செல்லும்?


குளத்தில் பூக்கும் தாமரை மொட்டு
மரத்தில் முளைத்து நிற்பது யாரிடம் இப்படி
சவாலிட்டு தோற்று தலைகுனிந்து நிற்கிறது?


நீ அழகான பூவாக இருந்தாலும் உனக்கு
ஆயுசு குறைவு தான் எனவே சட்டென
நீ விரும்பும் பெண்ணின் புடவைக்குள்
தஞ்சமடைந்து நிறந்தரமாய் தங்கிக்கொள்.





இப்படியே மேலேப் போனா உச்சிக்கு போயிடலாம் ! என்ன ஐடியா வைத்திருக்கீங்க !? மேலேதானே போகனும் அப்படியே சும்மா மவுசை உருட்டிகிட்டே மேலே பார்த்துகிட்டே கிளம்புங்க உச்சியில இருக்கிற வயசானவரைப் பார்க்கலாம் ! :)

மு.செ.மு.நெய்னா முஹம்மது
படங்கள் : Sஹமீது

பசியாறிட்டு சாப்பிடலாம் ! 54

அதிரைநிருபர் பதிப்பகம் | August 23, 2013 | , , , , , ,

நீண்ட நாட்கள் கேட்க நினைத்த ஒன்று நமதூர் காலையில் பசியாற என்பதற்கும் பகலில் சாப்பாடு என்பதற்கும் என்ன வித்தியாசம் அவைகள் இரண்டும் வெவ்வேறு தரமான உணவுவகைகள்தானே ஏன் இரண்டையும் சாப்பாடு என்று சொல்லாமல் காலையில் மட்டும் பசியாற என்று சொல்ல வேண்டும் !?

அது ஒருபக்கம் இருக்கட்டும் இனி மெயின் மேட்டருக்கு செல்வோம்...

நம்ம ஊரு  சாப்பாடுன்னா விருந்து காலங்களில் முதலில் நினைவுக்கு (மந்தி அல்ல) வருவது காலை பசியாறுதல் இதில் இடியப்பம் சிக்கி எடுக்காமல் விக்கல் இல்லாமல் உள்ளே தள்ள வசதியா இருக்கும், பரோட்டா யாசிர் கட்டுரை நினைவுக்கு வந்தாலும் திங்காமல் இருக்க மாட்டோம் யாசிருக்காக வேண்டி எண்ணிக்கையை கொஞ்சம் குறைத்துக் கொள்வோம் ஏதோ நம்மளாலே முடிந்தது. விருந்து அல்லாத மற்ற நாட்களில் பெயரிட்டு பட்டியலிடும் வகைகளில் காலைப் பசியாற இநுதாலும் அதில் சில்வற்றில் ஒன்றான தோலுரித்தல் இது  எத்தனை சாப்பிட்டோம் என்பதை கணக்கு பண்ண நல்ல ஆடிட்டர்  பக்கத்தில் இருக்கணும் இந்த தோலையே கொஞ்சம் ஓட்டை ஓட்டையா சுட்டு ஜால்ரா என்று சொல்லி வடைக்கு மட்டுமா ஓட்டை இதற்கும் ஓட்டை போடுவோம் என்று சொல்லி வடைக்கும் ஜால்ராவிற்கு ஒரு நிரந்தர பகையை உண்டாக்கி வைத்து விட்டார்கள் நம்ம பொம்புளையளுவோ இதுஎல்லாம் காலை பசியாறவின் நமதூர் மெயின் டிஷ்.

சைடு டிஸ்சாக எறச்சி ஆணம் இது தாளிச்சு போடுறப்பவே நாம வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த செண்டெல்லாம்  செயல் இழந்து போய்விடும் நுரை ஈரல் பெரட்டல் இதை கடிக்கிறபோதே பஞ்சை கடிப்பது போல் இருக்கும் ஒரு சில துண்டு கொஞ்சம் கடினமான மாறுபட்ட சுவைடன் வித்தியாசமாக இருக்கும் அது நுரை-ஈரல் கூட ஒண்ணா போட்டு ஆக்கிய செவரொட்டி, (ஆட்டுடைய பார்ட்ஸில் நாங்க எதையும்  விட்டு வைக்க மாட்டோம்)  ஆட்டுத் தலை இதில் செவுலு பீசுக்குத்தான்அதிக கிராக்கியா இருக்கும் (நோன்பில் தலை கிடைக்காது) ஆட்டு மூளையை யாரும் ஒரு மூலையில் போடுவது கிடையாது. இதில் ஏதாவது ஒன்றோ அல்லது  அதற்கு மேற்பட்டோ நமதூர் காலை பசியாறுதலையில் கண்டிப்பா இருக்கும்.


அடுத்து இனிப்பு வகை கடல் பாசி வண்ணத்தாலே ஒன்னு வகையாலே ஒன்னா இருக்கும் இந்த கடப்பாசியை எடுத்து வாயில் வைத்தால் சூடான சட்டியில் ஒரு துண்டு வெண்ணெயை எடுத்து போட்டால் வழுக்கி கொண்டு போவது போல் வழுக்கிக் கொண்டு போய் குடலில் குதிக்கும். வட்டில் அப்பம் (இதை மறந்தால் இந்தப் பதிவு மதிப்பிழந்து விடும் ஒரு சிலருக்கு இதப் பற்றி பேசினாலோ எழுதினாலோ பிடிக்காது) அடுத்து முந்திரி பருப்பு உலர்ந்த திராட்சை போட்டு வறுத்து ரவ்வா அல்லது ஜவ்வரிசி கஞ்சி இது எல்லாத்தையும்  காலை  பசியாற  என்று  சொல்லி  ஒண்ணா உட்காந்து கட்டு கட்டு  என்று கட்டிபுட்டு  தனித்தனியா ஆஸ்பத்திரிக்கு போய் கொழுப்பு குறைக்க மாத்திரை (கொலஸ்ட்ரால் டேப்லெட் ) வாங்கி தின்பது ஒரு தனிக்கதை.


இந்த  காலை  பசியாறுதலையை  செய்வது எல்லாம் பெரும்பாலும் வீட்டுப் பெண்கள்தான்

பகல்  சாப்பாடு !

விஷேச காலங்களில் 'அஞ்சு கறி சோற்றில் நெய்ச் சோறு' நல்லா வச்சாங்க பெயரு சோத்துலே எந்த அளவுக்கு நெய் வடியூதோ அந்த அளவுக்கு நாக்குலே உள்ள ருசி பார்க்கும் நரம்புகளுக்கு வேலை அதிகம். எறச்சி ஆணம் இது தாளிக்கும் போதே கோடையில் ம ழைபெய்தால் (மண்) புழுதி வாடை வருவது போல் அரை கிலோ மீட்டருக்கு தாளிப்பு வாடை மூக்கைத் துளைக்கும் ஒரு சில சென்சிட்டிவ் மூக்கு பார்ட்டிகள் வாசத்தை வைத்தே சமையல்காரன் பெயரைச் சொல்லி விடுவார்கள் அடுத்து உருளைக் கிழங்கு பச்சடி  இது சஹன் சாப்பாட்டில் ஓபனிங் பேட்ஸ் மேன். இந்த உருளைக் கிழங்கு பச்சடி கூட ஆட்டு ஈரல் மற்றும் கிட்னியும் சேர்ந்து வந்தால் அங்கு சமைத்த சமையல் காரருக்கும் அந்த சகனில் சாப்பிட உட்கார்ந்தவங்களுக்கும் ஒரு லிங்க் இருக்கணும்.

அடுத்து கத்தரிக்கா பச்சடி இதை சகனில் இறக்கி விட்டதும் கத்தரிக்காவில் நான்கு விரலை வைத்து ஒரு கோடு போட்டது போன்ற இழுப்பு கத்தரிக்காவின் தோல்  மட்டும் சகனில்  இருக்கும்  ரா-மெட்டீரியல்ஸ் அனைத்தும் அடுத்த வினாடி வாயில்  இருக்கும் இதை வாயில் போட்டு மெல்லும் போது எண்ணெயில் வருபட்ட கடுகும் உளுத்தம் பருப்பும் சுவையும் ஒன்னு சேர்ந்து மறு சோறு கொண்டு வா என்று கேட்கும். இதில்  எண்ணெயில் வறுபட்ட  சின்ன வெங்காயம் தான் ஹீரோ.

அடுத்து சோற்றில் எறச்சி ஆணத்தை ஊற்றி நாத்து நடும் வயலில் உழவு உழுதது போல் பெரட்டி பெரட்டி எடுத்து மல்லாவில் இருந்த இரண்டு துண்டு கறியில் ஒரு துண்டை காலி செய்து விட்டு மறுசோறு வைத்து இருக்கும். பாக்கி ஆணத்தை ஆளுக்கு கொஞ்சமா ஊத்திக் கொண்டு அது மேலே கொஞ்சம் புளியாணத்தை ஊற்றி பக்கத்துஆளு பக்கம் உள்ளது இந்தப் பக்கம் வராமலும் அதே வேலை நம்ம பக்கம் உள்ளது பக்கத்து ஆளு பக்கம் போகாமலும் சகன் டெக்ணிக்கை இம்மி பிசகாமல் கடைபிடித்து அதன் பிறகு வயற்றில் இருக்கும் கொஞ்சனிஞ்ச எடத்துலயும் கேரட் சுவிட்டை  அள்ளி போட்டு அடைத்து விட்டு குடிக்க வைத்திருக்கும் பாக்கெட் தண்ணீரில் கை கழுவி விட்டு சகனுக்கு கிழே விரித்த பேப்பரில் கை துடைத்து விட வேண்டியதுதான்.

இந்த  பகல்  சாப்பாட்டை  சமைத்தது  மேஸ்த்திரி யாருன்னு விசாரிக்க மனசு துடிக்கும் !

இப்போ சொல்லுங்கோ உங்களுக்கு பிடித்தது காலை பசியாறவா பகல் சாப்பாடா ? இரண்டும் பிடிக்கும் என்று சொல்லி காலை பசியாறுதலையும் பகல் சாப்பாட்டையும் ஒரே சகன்லே போட்டு ஒழப்பி வச்சிரக்   கூடாது.

மந்தியில் மருத்துவ குணங்கள் இருப்பது போன்றும் இவ்வகை சாப்பாட்டில் மயக்கும் குணங்கள் இருப்பது போன்றும் சமையல் குறிப்புகளை சொன்னாலும் இரண்டும் ருசிக்காக ரசித்து சாப்பிட வைக்கும் சாப்பாடுகளே !.

Sஹமீது

கேமரா (புகைப்பட கருவி) - குறுந்தொடர் - 2 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 01, 2013 | , , , , ,

கேமராவின் வகைகளையும் ஒவ்வொரு காலகட்டத்தில் அதன் வளர்ச்சியையும் பட்டியலிட்டால் குறுந்தொடர் நெடுந்தொடராக நீண்டு விடும் அதனால் ஃபிலிம் ரோலை சுருக்கிக் கொள்வோம். முன்னொரு காலம் புகைப்படம் (ஃபோட்டோ) எடுத்து விட்டு ஃபிலிம் ரோலை பிரிண்ட் போட்டு புகைப்படமாக பார்ப்பதற்கு சென்னை அல்லது துபாய்க்கு, சிங்கப்பூருக்கு அனுப்பி விட்டு (தோன கானா அவர்கள் நம்ம வீடு தேடிவரும் முன்  நாம் தோன கானா வீடு தேடி அலைந்தது பற்றி ஒரு தனி பதிவே போடலாம் ) அது பல நாட்கள் கழித்து துபாயில் இருந்து  பிரிண்ட் போட்டு திரும்பி வரும்போது (சில சமயங்களில் வராமலும் போகும்) நாம் எடுத்த ஃபோட்டோக்கள் நமேக்கே மறந்து போய் இருக்கும் வயல் வெளியில் எடுத்த ஃபோட்டோ அது திரும்பி வரும்போது அந்த வயல் மனைகட்டாகி வீடு கட்டப்பட்டிருக்கும்.

கல்யாணத்தில் எடுத்த ஃபோட்டோ திரும்பி வரும்போது கல்யாண மாப்பிள்ளை வாப்பாவாகி இருப்பார்  ஆனால் இப்போ நிலைமை தலைகீழ் அதற்கு காரணம் டிஜிட்டல் தொழில் நுட்பம் ஃபோட்டோ எடுத்த அடுத்த வினாடியே ஃபோட்டோவை பார்த்து விடலாம் (ஃபோட்டோ நல்லா இல்லாட்டி கமுக்கமா டெலிட்டும்  செய்துவிடலாம் ).


இந்த டிஜிட்டல் டெக்னாலஜில் ஃபிலிம் ரோல் பிரிண்ட் போடுவதற்கான செலவீனங்கள் கால விரயம்  எல்லாம் ஒழிந்து போய் விட்டன அது கூட ஃபிலிம் தயாரிப்பு கம்பெனிகளும் சேர்ந்து அழிந்து விட்டன (கோடக் கம்பெனி நஷ்ட்டத்தில் தள்ளாடுவதாக ஃபோட்டோவுடன் செய்திகள் வருகின்றன )


டிஜிட்டல் கேமராவில், அவ்வளவாக செலவுகள் கிடையாது (அதுக்கெல்லாம் சேர்த்துதான் கேமரா விலையில் கடுகு உளுதம் பருப்பெல்லாம் போட்டு தாளிச்சு தள்ளிர்ரானே). ஆயிரக்கணக்கில் படங்களை க்ளிக் செய்து தள்ளலாம். அதில் பிடித்த சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அச்சிடலாம். (பெரும்பாலும் யாரும் பிரிண்ட் போடுவதில்லை) இல்லை என்றா ல் அப்படியே கேமராவில்  பார்க்கலாம் , கம்ப்யூட்டரில் பார்க்கலாம், சீரியல் ஓடாத நேரம் பார்த்து டிவியிலும் பார்க்கலாம் தப்பித் தவறி சீரியல் ஓடும் நேரம் டிவியில் பார்த்தால் அது என்னதான் நல்ல போட்டோவா இருந்தாலும் போட்டோ நல்லவே இல்லை என்ற டிஜிட்டல் சவுண்டில் ஒரு ஆடியோ சர்டிஃபிகெட் உடனே கிடைக்கும் இப்படி எல்லாம் தொந்தரவு இருக்கும் என்பதை அறிந்துதான் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு புண்ணியவான் இதற்கு என்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ‘டிஜிட்டல் போட்டோ ஃப்ரேம்’ எல்லாம் வடிவமைத்து கொடுத்துவிட்டார்.


முக்கியமாக, டிஜிட்டல் போட்டோக்களை நாம் யாருக்கு வேண்டும் என்றாலும் உடனே அனுப்பலாம். குறிப்பாக அதிரை நிருபர் எடிட்டருக்கு டிஜிட்டல் கேமராக்களின் தேவை அதிகமாகி விட்டதால், இப்போது மொபைல் ஃபோனிலேயே ஒரு கேமராவையும் தூக்கி சொருகி விட்டார்கள் அதில் போட்டோ எடுத்து உடனுக்குடன் நாம் அனுப்பிக்கொள்ளலாம் (கேமரா மொபைலை வைத்துக்கொண்டு ஒருசிலர் செய்யும் அலப்பரை தாங்க முடியல)  இந்த டிஜிடல் தொழில் நுட்பம் பற்றி மற்றுமொரு தனி பதிவாக பிறகு பார்த்துக் கொள்வோம்.


ஜாலிக்காக ஃபோட்டோ எடுக்கிற கூட்டம் ஒரு பக்கம் குருட்டாம் போக்கில் ஃபோட்டோ எடுக்கும் கூட்டம் ஒருபக்கம் இதை ஒரு கலையாக நினைத்து அக்கறையோடு கற்றுக் கொண்டு ஃபோட்டோ எடுக்கும் கூட்டம் ஒருபக்கம். இதில் நீங்கள் எந்தப்பக்கம் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் புகைப்பட தொழில் நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள விதவிதமான புத்தகங்கள், பயிற்சி வகுப்புகள், இன்டர்நெட் தளங்கள், போட்டிகள் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. எது எப்படியோ போட்டோ எடுக்க முதலில் ஒரு நல்ல கேமரா தேவை  என்பது ரொம்ப முக்கியம்.


இந்த பதிவு சுருங்கிவிட்டதே என்று கவலை வேண்டாம் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால் இந்தப் பதிவும் சுருங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டல் கவலைகள் பிடறியில் கால் அடித்துக் கொண்டு ஓட்டமெடுக்கும் !
தொடரும்...
S.ஹமீது

பேசும்படம் :: பூக்களை கொல்லாதீர் ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | July 30, 2013 | , , , ,

அதிரைநிருபரின் எழில் எடுத்துவைத்த கருத்தாடல் ஒன்றில், 'எழுதுவது ஒரு கலை, அதனை சிலர் செய்வதோ கொலை' என்றார். எழுதுவதில் மட்டுமா ? எடுக்கும் படங்களையும் கலை என்று சொல்லி 'கொல்லும்' படங்களையும் பார்க்கத்தான் செய்கிறோம் ! சற்றே இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பூக்களை எடுத்து கவிஞர்களுக்கும், கட்டுரையாளார்களுக்கும், வாசகர்களுக்குக்கும் அவர்களின்  பார்வையோடு இருக்க விருந்தொன்று பகிர்ந்தளிக்கிறேன் இஃப்தாருக்குப் பின்னரே, இனி உங்கள் சாய்ஸ் !



காகிதப் பூக்களை கசக்கிப் போடவைக்கும் கொசுவங்களுடன், யார் வீட்டு முற்றத்திற்கு இப்படி வெளிச்சம் போடுகிறது... !


சொட்டும் துளிர் நீருடன் மொட்டும் கொள்ளும் திட்டு முட்டு !




இப்பொழுதெல்லாம் வண்டுகள் பூக்களை விட்டுவிட்டு தீன் எனும் தேன் தேடிச் சென்று விட்டன போலும் ஈக்கள்தான் பூக்களின் மீது அமர்ந்து நாங்களும் தேன் குடிப்போம்ல என்று பாவனை செய்கிறது !




தலையில் வைக்க தலைவியை தேடும் தலைவன் இருந்தது அந்தக்காலம் இப்போதெல்லாம் அப்படி இல்லைங்க ! மாறாக தலைவியின் காலில்தான் போடுகிறார்கள் !




எங்களை கிள்ளி கூஜா தேடிச் சொருகும் மனிதன் பின்னர் அதனை மட்டும் தூக்காமல் இருந்தால் சரி.



பூவடை சுட்டு நடுவில் வைத்தது போன்ற இந்த பூவின் சாடை எப்படி !?



பார்வையை சீவியெடுக்கும் பரவசமான பூவின் தோற்றம் !





பூவுக்குத் தெரியுமா மூன்றாம் கண் படம் பிடிப்பது !?




51:58   إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ
51:58. நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.





 41:10   وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِن فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِّلسَّائِلِينَ

41:10. அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).









இனி உங்களனைவரின் ரசனைக்கு விட்டுவிடுகிறேன் இனி அதனை என்னைப் போன்றோரின் வாசிப்புக்கும் வாரி வழங்குங்கள்.

Sஹமீது