Showing posts with label அதிரைநிருபர் பதிப்பகம். Show all posts
Showing posts with label அதிரைநிருபர் பதிப்பகம். Show all posts

நூல் வெளியீட்டுக் களமும் - நூல் இடைவெளி காலமும் - நன்றி ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | June 11, 2015 | , , ,


எல்லாப் புகழும் இறைவனுகே ! (அல்ஹம்துலில்லாஹ்)

'நபிமணியும் நகைச்சுவையும்

சென்னை - துபாய் - அமெரிக்கா விமானப் பயணம் இடையே சற்று தாமதமானதால் விதைக்கப்பட்ட விதை, நபிகளாரின் நகைச்சுவையுணர்வு எவ்வாறு இருந்தது என்று எடுத்துரைத்த கணமே முடிவானது 'நபிமணியும் நகைச்சுவையும்'.

அதிரைநிருபர் வலைத்தளத்தில் தொடராக வாசித்த அனைவரையும் தன் வசப்படுத்தி வெற்றி முகம் காட்டி வென்றெடுத்தது ஏராளமான உள்ளங்களை! - புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!

இருபத்தி ஏழு வாரங்கள் தொடர்ந்து வெளியாகி நிறைவு பெற்றதும் முடிவெடுத்தோம் நூல் வடிவமெடுக்க அடுத்த முயற்சியில் ஈடுபடுவதென!

நூல் எவ்வாறு இருக்க வேண்டும் எதனை தன்னகத்தே கொண்டிருக்கிறது என்று எவ்வகையில் எடுத்துச் சொல்வது என்ற ஆலோசனைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டது, நிறைவில் அழகான அட்டைப்படம் வடிவமைத்து அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.

இணையத்தில் தொடர் வெற்றி நடை போட்டது உண்மையே! அது நூலாக வெற்றி நடை போட அதன் நடையழகையும், வரிகளும் அதன் வடிவும் சரிபார்க்க எங்கள் மூத்தோர் இருவரின் பார்வை அவசியம் என உணர்ந்ததால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அவர்களின் பார்வையும் கையும் பட்டதும் புத்துணர்வு பெற்றோம்.

நல்லதொரு, மெருகேற்றலுடன் நூலாசிரியர் அவர்கள் மீண்டுமொரு வரைவாக அனுப்பித் தந்த அனைத்து தொடரையும் அச்சுக்கு அனுப்பி வைக்க முடிவானது.

நூலாசிரியரும் நூல் வெளியீட்டுக்கான நாள் என்னவென்றும் அறியத் தந்ததால், நாட்கள் மிகக் குறைவாக இருப்பதை உணர்ந்தோம். அடியெடுத்து வைத்து விட்டோம் அயர்ந்து இருக்கமாட்டோம் என செயல்வடிவம் பெற்றது !

கிடைத்த இருபத்தி மூன்று நாட்களில் (இடைவெளி) டெஸ்க் டாப் பப்ளிஸிங் (Desktop Publishing) என்றிருப்பதை ரிமோட் டெஸ்க்டாப் பப்ளிஸிங் (Remote Desktop Publishing) ஆக மாற்றி அனைத்து பனிகளையும் மின்னஞ்சல், கணினிகளுக்கிடையே ஊடுருவல் என்று தொடர்ந்து ஈடுபட்டு திருத்தங்கள் அனைத்தையும் எவ்வித வருத்தங்களுமின்றி அதன் பொருத்தமான நூல்வடிவம் பெற உழைத்தோம்!

குறித்த நாட்களில், நேரத்தில் அழகிய வடிவத்தில் நூல்கள் அனைத்தும் எமது இருப்பிடம் தேடி வந்தது அல்ஹம்துலில்லாஹ்!

நன்றி மறப்பது நன்றன்று!

குறிப்பாக சகோதரர்கள் அதிரை அறிஞர் (அதிரை) அஹ்மது, கணினியறிஞர் ஜமீல் M ஸாலிஹ், நூல் ஆசிரியர் - இக்பால் M.ஸாலிஹ், 'தோழர்கள்' நூருத்தீன்,  பேராசிரியர் NAS ஷாஹுல் ஹமீது,‘எழுத்தறிஞர் இபுராஹீம் அன்சாரி, அதிரைநிருபர் பதிப்பகத்தின் அனைத்து சகோதரர்கள், கலர்லைன் மற்றும் அச்சகத்தார்கள், ரஹ்மத் & மான் (சென்னை-அதிரை-சென்னை) பேருந்து நிறுவனத்தார்கள், அதிரைநிருபர் பங்களிப்பாளர்கள், இன்னும் எமது பிரியத்திற்குரிய வாசககர்கள் அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியினை என்றும் உரித்தாக்கி ஒத்துழைத்த அனைவருக்காகாவும் வல்லமை நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

இந்நூல் எழுத்துரு பெற்றதிலிருந்து அச்சாகி முழு'நிலவாக' வெளியீட்டு நிகழ்வுவரை அனுபவித்த சுவராஸ்யங்களையும் கலந்தாய்வுகள் பற்றிய விபரங்கள் மற்றுமொரு பதிவாக விரைவில் இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் பதிப்பகம்

வரவுக்கும் செலவுக்கும் வழி சொல்லும் நாடு !? - விவாதக்களம்! 32

அதிரைநிருபர் பதிப்பகம் | April 17, 2013 | , , ,


1970க்கு முன்னர் பர்மா, மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை என்று கொடிகட்டிப் பறந்த(விமானத்தில்) / மிதந்த(கப்பலில்) நம்மக்கள் அதன் பின்னர் கண்டெடுத்த வளைகுடா நாடுகள் என்று இரண்டுக்கு மேற்பட்ட தலைமுறைகள் இன்னும் அங்கே கோல்லோச்சிக் கொண்டிருக்கின்றனர்.

இதனையும் தாண்டி பூமி உருண்டையில் இருக்கும் அனைத்து கண்டங்களிலும் காலடி வைத்து அதன் விளைவாக நிறைய அஸ்திவாரங்களும் போட்டிருக்கிறோம் (ஊரிலும் அதனைச் சுற்றியுள்ள வயல் வெளியிலும்).

வம்புக்கு இழுக்கவில்லை, வரம்புக்குள் ஈர்க்கப்பார்க்கிறோம் எந்த நாடு பொருளீட்டவும், செலவு செய்யவும், சேமிக்கவும் ஏற்ற நாடு !?

உங்களனைவரின் அனுபவம் தானே பேசப்போகிறது, ஆகவே ! வாருங்கள் எடுத்துரையுங்கள் உங்களின் அனுபவங்களையும் ஆலோசனைகளையும் ! வாசிப்பவர்களுக்கும் பலன்கள் கிடைக்கட்டும் என்ற நம்பிக்கையுடன் இன்ஷா அல்லாஹ் !

இக்கரைக்கு அக்கரைப் பச்சை (பாக்கிஸ்தானியர்கள் அல்ல)... என்று நினைக்கத் தூண்டும் தூண்டில்கள் இங்கேயும் அங்கேயும் இருப்பதை நினைத்து இழந்தவைகளும் நிறைய என்று புலம்புபவர்களும் உண்டு !

ஊரை விட்டுக் கிளம்பும்போது இப்படியெல்லாம் இல்லை, ஆனால் ரொம்பவே மாறிப்போச்சுன்னு திரும்பி ஊருக்குப் போகும்போது பழையபேப்பர் படித்த பிரம்மை எற்படுவதுமுண்டு.

இனி உங்கள் சாய்ஸ்...! எந்த நாடு நீங்கள் நாடுவது !?

அதிரைநிருபர் பதிப்பகம்

ஈழத் தமிழனும்…. e-தமிழனும்...! 14

அதிரைநிருபர் | March 10, 2013 | , , ,

இலங்கையில் நடைபெற்றது போர் குற்றம் என்ற ஒற்றை வாக்கியத்தை கையில் எடுத்துக் கொண்டு அன்மையில் தமிழ் ஊடகங்கள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்திகளாகவே உள்ளது.

உலகில் தமிழை வாழ வைக்கிறோம், தமிழினத்தை வாழ வைக்கிறோம் என்று சீசனுக்கு சீசன் e-தமிழின தலைவர்கள் டெல்லிக்கு கடிதம் என்றும் போராட்டம், சாலை மறியல், இரயில் மறியல் என்று தொடர்ந்து இலங்கை தூதரக தாக்குதல், இலங்கை சுற்றுலா பயணிகள் தாக்குதல், இலங்கையுடன் தொடர்புடைய அலுவலகங்களை தாக்குவது என்று நீடித்து தீக்குளிப்புடன் தீவிரமடைந்து, தீக்குளித்த அந்த அப்பாவியை தியாகியாக்கி, பிறகு அவனுக்கு இறுதி ஊர்வலம் நடத்தி போராட்டம் நிறைவடையும். பின்னர் வருடா வருடம் நினைவு தினம் என்று அன்றாட e-தமிழர்களின் வாழ்வு சுழன்று வருகிறது.

பிரபாகரன் மகனை கொடூரமாக கொலை செய்தது வன்மையாக கண்டிக்கத் தக்கது என்பது மனசாட்சியுள்ள அனைவரின் ஒட்டுமொத்த நிலைபாடாகும். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தற்போது போர் குற்றம் தொடர்பாக சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகளை வைத்து மிகப்பெரிய அரசியல் நாடகத்தை உலகம் முழுக்க அரங்கேற்றும் அமெரிக்கா இந்தியாவையும், e-தமிழர்களையும் முட்டாளாக்குகிறார்கள் என்பதே எதார்த்த உண்மை.

பொதுவாக சாப்பாட்டில் ரசம் சேர்த்து சாப்பிட்டால் தான் ருசி அதிகம் இருக்கும் என்பது ஊற்றிச் சாப்பிடுபவர்கள் சொல்வார்கள், அதுவும் நிறைய சாப்பிடலாம்.  தமிழ்நாட்டு அரசியல் விருந்திற்கு ஈழத் தமிழர்கள்தான் ரசம். 

ராஜபக்சே என்ற போர்க் குற்றவாளி ஈழ ரத்தம் குடித்தான் என்று சொல்பவர்களால்தான் இந்த e-தமிழர்கள் தங்களின் அரசியல் விருந்தில் ஈழத் தமிழர்களை ரசமாக்கி ருசிக்க ருசிக்க குடிக்கிறார்கள். ஒளி ஊடகங்களிலும், இணையை ஊடகங்களில் ஈழத் தமிழர்களை வைத்து அரசியல் இலாபம் அடையவே அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டிப் போட்டு உளறல் பேட்டிகள் கொடுத்து, தங்களின் ஈழத் தமிழினத்திற்கான கரிசனத்தை (?) காட்டி வருகிறார்கள். இன்னும் ஒரிரு வாரத்தில் அனைத்தையும் மறந்து விடுவார்கள் இந்த e-தமிழர்கள்.

திமுக, காங்கிரஸ், பாஜக, அதிமுக இன்னும் இதர கட்சிகளின் விளையாட்டு:

திமுக, காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக, போன்ற அரசியல் கட்சிகள் ஈழத் தமிழர்களை அழித்தொழிக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரளித்தவர்கள் என்பது ஒட்டு மொத்த உலகத்திற்கு தெரியும். இவர்கள் அனைவரும் சேனல் 4 காணொளிகளை வைத்து அரசியல் இலாபம் அடையலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக அவதியுறும் ஈழத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம் பற்றியோ அவர்களின் முன்னேற்றம் பற்றியோ வழியுறுத்த தவறிவிட்டனர் என்பது வெளிப்படையான உண்மை.

மதிமுக மற்றும் நாம் தமிழர் விளையாட்டு:

இலங்கை இனப்படுகொலைக்காக குரல் கொடுத்துவரும் கட்சிகளில் நாம் தமிழர் கட்சியும், மதிமுகவும் முக்கிய பங்களிக்கிறார்கள். ஆனால் இவ்விரு கட்சிகளும் ஆயுத போராட்டக்காரன் (அப்பாவி தமிழர்களையும், முஸ்லீம்களையும், சிங்களர்களையும், ராஜீவ் காந்தியையும் கொன்று குவித்த) இயக்கத்தின் தலைவனை முன்னிருத்தியே தங்களின் குரல்களை போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதுவும் இலங்கை அரசு ஈழத் தமிழர்களை துன்புறுத்துவதற்கு பலமான காரணம்.

இலங்கை மக்களின் வில்லனாகவே பிரபாகரன் கருத்தப்படுகிறார்கள். இலங்கை மற்றும் காங்கிரஸ் கட்சியின் வில்லன் பிரபாகரனை சீமான் மற்றும் வைகோ வைகையறாக்கள் ஹீரோவாக சித்தரித்து ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது செவிடன் காதில் ஊதிய சங்காகவே சலித்துப் போகிறது.

எங்கள் தலைவன் சாகவில்லை, உயிருடன் இருக்கிறான் என்று முன்பு சொல்லி வந்தனர் e-தமிழின வகையறாக்கள், சேனல்-4 வெளியிட்ட கானொளியில் பிரபாகரன் மகனின் இறப்புடன் சேர்த்து, பிரபாகரனும் கொல்லப்பட்டுள்ள செய்தி சொல்லப்பட்டுள்ளதை இன்னும் கண்டு கொள்ளாமல் அந்தச் செய்தியை மூலை முடுக்கெல்லாம் போட்டுக் காட்டிவரும் இவர்கள் செய்யும் அரசியலின் உச்சகட்ட நகைச்சுவை என்று சொன்னால் மிகையில்லை.

அமெரிக்காவின் விளையாட்டு:

அமெரிக்கா, ஈழத் தமிழர்களுக்காக ஏதோ கரிசனம் காட்டுவது போல் ஊடகங்கள் ஒப்பாரி வைக்கின்றன. ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், பாகிஸ்தானிலும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளையும், அப்பாவிகளையும் அமெரிக்கா கொன்றுக் குவித்துள்ளதை நாங்கள் அப்பொவே எதிர்த்து விட்டோம் என்று மொத்த பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் இந்த அரசியல் கயவர்களின் செயலை பற்றி என்ன சொல்ல முடியும். மனித உரிமை மீறல்கள் பற்றி பேச அமெரிக்காவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

இந்தியா அரசின் நிலைப்பாடு:

இந்தியா அரசு இலங்கை உள் விவகாரத்தில் தலையிடுவதற்கு தயங்குவதற்கு பல காரணம் இருந்தாலும், முக்கிய காரணம் இந்தியா இலங்கையில் தலையிட்டால், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் தங்களின் வில்லனான இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதால் இலங்கைக்கு உதவ முன்வர ஆயத்தமாக உள்ளனர். மேலும் காஷ்மீர் விசயத்தில் பிற நாடுகள் இந்தியாவில் தலையிடுவதற்கு நாமே காரணமாகிவிடுவோம் என்ற அச்சமும் இந்திய அரசிடம் உள்ளது நியாயம் தானே. மேலும் அமெரிக்கா உளவுத்துறை இந்திய அரசியல் நடவடிக்கைளை நம்ம அரசியல் வாதிகள் அறிந்ததைவிட ஆழமாகவே அவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள்.

ஈழத் தமிழர் பிரச்சினையை வைத்து ஆசிய கண்டத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தவே அமெரிக்கா கொண்டுவரும் ஐநாவில் தீர்மானம்.

30 வருடங்களுக்கு மேல் நடந்து வரும் இலங்கை பிரச்சினையால், ஈழத் தமிழர்களின் வாழ்வு அன்றும் இன்றும் மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. இதற்கு 100% பொறுப்பானவர்கள் தமிழ்நாட்டின் e-தமிழர்களே. விடுதலைப் புலிகளை ஊக்குவித்தவர்கள் யார்? இலங்கையில் சமாதான நடவடிக்கை எடுக்க தடுத்தவர்கள் யார்?  உள்ளூர் அரசியலுக்காக ஈழத்தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கையின் இறையாண்மைக்கு வேட்டு வைத்தவர்கள் யார்? என்பது தமிழ்நாட்டு மக்கள் மறந்தாலும் இலங்கை அரசும், இலங்கை மக்களும் நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள்.

ஈழத் தமிழர்களுக்கு E-தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன?

ஈழத் தமிழர்களுக்கு நன்மை பிறக்க வேண்டுமானால், தமிழ்நாட்டு E-தமிழர்கள் தங்களின் 30 வருட அரசியல் விளையாட்டை நிறுத்திக் கொண்டு சும்மா இருந்தாலே போதும். ஈழத் தமிழர்களின் வாழ்வு சுபிட்ச்சம் பெரும். மீண்டும் E-தமிழர்களின் ஈழ அரசியல் விளையாட்டு தொடருமானால்,  பாவம் ஈழத் தமிழர்கள்.

அடிக்குறிப்பு: e-தமிழர் = தமிழ் இனவெறித் தீவிரவாதத்திற்கு உடந்தையாக இருக்கும் ஈனப்பட்ட தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் அவர்கள் பின்னால் சுற்றும் தமிழர்களும்.

அதிரைநிருபர் பதிப்பகம்

அதிரைநிருபர் வலைக்காட்சி செய்தித் தொகுப்பு ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | February 16, 2013 | ,

வாரம் ஒருநாள் வலைக்காட்சி செய்தித் தொகுப்பு ஒவ்வொரு வாரமும் வழங்கி வருவதை அறிவீர்கள் அதன் தொடர்ச்சியாக இந்த வார செய்தித் தொகுப்பு !

இந்த வார செய்தியில், இத்தாலி ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல், 17 தூக்கு தண்டனை கைதிகள் விடுதலை, சிரியா புரட்சிப்படையினரின் முன்னேற்றம், வடகொரியா அணு குண்டு சோதனை, காரைக்கால் விநோதினி மரணம் மற்றும் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை போன்ற செய்திகள் எமது பார்வையுடன் காணொளியாக உங்களனைவரின் பார்வைக்கும்.


இந்த வலைக்காட்சி பற்றிய மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நேரிலும், அலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்து வரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்...!

இன்னும் புதுப் பொலிவுடனும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப சகோதரர்களுடன் இணைந்து சிறப்பாக வெளிவர இருக்கிறது இன்ஷா அல்லாஹ்...

அதிரைநிருபர் பதிப்பகம்

அதிரைநிருபர் வலைக்காட்சி செய்தித் தொகுப்பு ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | January 24, 2013 | , ,


அதிரைநிருபர் வலைத்தளம் ஏற்கனவே வலைக்காட்சி நேரலையை 2010 வருடம் அரம்பித்து கிடத்தட்ட ஒன்றரை வருடம் இந்திய நேரம் இரவு 10:30 முதல் 11:30 வரை  ஒளிபரப்பியது அது ஒரு வெள்ளோட்டமாகவே செய்தோம். பெரும்பாலான வாசகர்களின் பேராதவைப் பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

வெள்ளோட்டத்தையே முன்னோட்டமாக வைத்து அடுத்த படி எடுத்து வைத்திக்கிறோம்.

அதிரைநிருபர் வலைத்தளம் வாரம் ஒருநாள் வலைக்காட்சி செய்தித் தொகுப்பு ஒவ்வொரு வாரமும் வழங்க இருக்கிறது. நாளடைவில் இதனை விரிவுபடுத்தவும் எண்ணியிருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

'அகர வரிசையில்' அதிராம்பட்டினம் என்று வாநிலை அறிக்கையில் முதலிடம் இருப்பதோடு அல்லாமல் இனிவரும் வரும் காலங்களில் அனைத்து செய்திகளிலும் முன்னிலைப் படுத்த எல்லா வகையில் முயற்சிப்போம்.


அதிரைநிருபர் பதிப்பகம்

அதிரைநிருபர் பதிப்பகம்
(அதிரையின் நிய்யத்து)
28

அதிரைநிருபர் பதிப்பகம் | December 14, 2012 | , ,


முதல் பிரசுரம்
தலைப் பிரசவமான
அதிரைநிருபர் பதிப்பகம்
இனி
புத்தகங்களின்
புக்ககம்

எவ்வகம் உதித்துப் பிறந்த
எண்ணங்களையும்
இனிமேல் பதிக்கும்
இவ்வகம்

கனவான்களின் கனவுகளையும்
கவிஞர்களின் சிறகுகளையும்
தத்துவங்களையும்
தனித்துவங்களையும்
காகிதங்களில் காக்கயிருக்கும்
காப்பகம்

இப் பதிப்பகம்
வெளியிடும் நூல்கள் மூலம்
சமூக அவலங்களின்மீது
உளியிடும்,
சிதிலமற்ற சமுதாயம்
செதிக்கியெடுக்கும்

ஊருலகம் வியக்கும் வண்ணம்
உறவகம் உவக்கும் படியும்
குறிக்கத்தகுந்த காரியங்களை
கோக்கயிருக்கும்
நூலகம்

நம்பகமான காரியங்களையும்
நபிமயமான போதனைகளையும்
நமக்காக சேர்த்துவைக்கும்
பெட்டகம்

நெடுந்தூரப் பயணத்திற்கு
நீர்சேர்த்து வைப்பதுபோல்
நினைவுகளைச் சேமிக்கும்
ஒட்டகம்

இந்தப் பதிப்பகம்
அதிரைக்கான இனிப்பகம்
கல்வியாளர்களின் களிப்பகம்

அச்சகம் வியக்க
இஜ்ஜகம் சிறக்க
அறிவை வளர்க்க
நிறைவாய்ப் பணிசெய்யும்
அதிரை நிருபர் பதிப்பகம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

அதிரைநிருபர் பதிப்பகம் முதல் நூல் வெளியிடு - காணொளி 24

அதிரைநிருபர் பதிப்பகம் | December 10, 2012 |


அதிரைநிருபர் பதிப்பகத்தின் முதல் வெளியீடான "மனுநீதி மனிதகுலத்துக்கு நீதியா? என்ற நூல் நேற்று மாலை வெளியிடப்பட்டதை அறிவீர்கள்.

அழகிய மாலைப் பொழுதில் எளிமையாக நடந்த அந்த நிகழ்வின் காணொளித் தொகுப்பினை இங்கே பதிவதில் மகிழ்வடைகிறோம் !



நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு வருகைதந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும், கருத்தாடல்கள் வழியாக வாழ்த்துரையும் துஆவும் வழங்கிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அதிரைநிருபர் பதிப்பகம் இனிவரும் காலங்களில் அடுத்தடுத்த புத்தங்களை வெளியிட ஆயத்தமாகிறது அந்த வரிசையில், ஏற்கனவே சகோதரர் S.அலாவுதீன் அவர்களால் எழுதி தொடராக வெளிவந்து அனைவரின் பெரும் பாராட்டைப் பெற்ற 'கடன் வாங்கலாம் வாங்க'

அடுத்து சகோதரர் ஜாஹிர் ஹுசைன் அவர்களால் எழுதி தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் உறங்கும் உணர்க்வுகளைத் தட்டி எழுப்பும் 'படிக்கட்டுகள்' தொடர்.

மேலும் அதிரை நிருபரின் ஆஸ்தான கவி சபீர் அபுஷாருக் அவர்கள் எழுதி அதிரை நிருபரில் வெளிவந்த கவிதைத் தொகுப்பு.

விரைவில் நூல் வடிவம் பெற இருக்கிறது இன்ஷா அல்லாஹ் !

நேற்றைய நூல் வெளியீட்டு நிகழ்வின் புகைப்படங்கள் மேலும் இதோ உஙகளின் பார்வைக்கு.







அதிரைநிருபர் பதிப்பகம்

அதிரைநிருபர் பதிப்பகம் - "மனுநீதி மனித குலத்துக்கு நீதியா " நூல் வெளியிட்டது ! 29

அதிரைநிருபர் பதிப்பகம் | December 09, 2012 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... 

அல்ஹம்துலில்லாஹ் !

இன்று (09-டிசம்பர்-2012) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்புடனும் எளிமையாகவும் நிறைவுற்றது.

எங்கள் அன்பான அழைப்பிற்கு ஆதரவு தந்து வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.

நிகழ்வு சிறப்புடன் துவங்கியது, அதிரை தாரூத் தவ்ஹீத் அமீர் அதிரை அஹ்மது B.A., அவர்கள் தலைமை தாங்கினார்கள் அதனைத் தொடர்ந்து, வரவேற்புரை சகோதரர் M. தாஜுதீன் M.B.A., நூல் அறிமுக உரை சகோதரர் தீன்முகமது B.Sc .B.G.L., நிகழ்த்தினார்கள்.

அதிரை தாருத் தவ்ஹீத் செயலாளர் சகோதரர் ஜமீல் M.ஸாலிஹ் அவர்கள் முதல் பிரதியை வெளியிட அதனை சகோதரர் எஸ். முகமது பாரூக் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்

வாழ்த்துரையை சகோதரர்கள் M.L. அஷ்ரப் அலி M.A.B.L மற்றும் அப்துல் முனாஃப் B.A.B.L., வழங்கினார்கள்

நிகழ்வின் நிறைவாக நூல் ஆசிரியர் சகோதரர் இப்ராஹீம் அன்சாரி M.Com., அவர்கள் தனது ஏற்புரையுடன் நன்றியுரை வழங்கினார்கள், இது ஒரு நெகிழ்வான நிகழ்வாக அமைந்தது.

மேலும் விபரங்கள் விரைவில்....

நூல் வெளியீட்டு நிகழ்வு புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக.









அதிரைநிருபர் பதிப்பகம்

மனுநீதி மனித குலத்துக்கு நீதியா !? - நூல் வெளியிடு 32

அதிரைநிருபர் பதிப்பகம் | December 08, 2012 | ,



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மறுக்கப்படும் நீதிக்கு எதிராகவும், நீதியை நிலைநாட்டுவதிலும் ஓர் இறை நம்பிக்கையாளனின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் தெள்ளத் தெளிவாக வழிகாட்டியிருக்கிறது. அவ்வழியில் அதிரைநிருபர் வலைத்தளத்தில் எங்கள் மூத்த சகோதரர் இபுராஹீம் அன்சாரி M.Com., அவர்களால் ஆய்வு செய்து எழுதப்பட்ட "மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?" என்ற தொடர் வெற்றிகரமாக வெளியானதை அனைவரும் நன்கு அறிவீர்கள், அல்ஹம்துலில்லாஹ் !

ஏற்கனவே அறிவித்தபடி, நூல் வடிவம் பெற்ற தொடர் மிகவும் எளிமையாக நாளை (09-டிசம்பர்-2012) வெளியிட இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !


நாள்: 09-Dec-2012

நேரம் : மாலை 4:15 மணி முதல் 5:30 மணி வரை. 

இடம் : அதிரை இ. சி. ஆர் ரோடு , இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் இல்லம்.

தலைமை : அதிரை அஹமது B.A., அதிரை தாருத் தவ்ஹீத் அமீர்

வரவேற்புரை :  M. தாஜுதீன் M.B.A., அதிரைநிருபர் அமீர்

நூல் அறிமுகம் : தீன் முகமது B.Sc .B.G.L,

வெளியீட்டு உரை   : ஜமீல் M.ஸாலிஹ், அதிரை தாருத் தவ்ஹீத் செயலாளர்

முதல் பிரதி பெறுபவர்: எஸ். முகமது பாரூக் 

வாழ்த்துரை : M.L. அஷ்ரப் அலி M.A.B.L

நன்றி மற்றும்  ஏற்புரை : இப்ராஹீம் அன்சாரி M.Com., நூல் ஆசிரியர்

விருந்தினர்களாக முன்னால் ஆசிரியர்கள், நண்பர்கள், அதிரை வலைப்பூக்களின் பங்களிப்பாளார்கள் மற்றும் உறவினர்கள்.

மிகக் குறுகிய காலக் கெடுவுக்குள் நடத்த வேண்டியிருப்பதாலும், புத்தக வெளியீடு மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்ற ஆலோசனையின் பேரிலும் இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இப்படிக்கு,

அதிரைநிருபர் பதிப்பகம்
ஷப்னம் காம்ப்ளெக்ஸ் - முதல்மாடி
கா.மு.கல்லூரி எதிர்புரம்
கிழக்கு கடற்கரைச் சாலை
அதிராம்பட்டினம் - 614701
தஞ்சாவூர் மாவட்டம்

முக்கிய அறிவிப்பு ! 27

அதிரைநிருபர் பதிப்பகம் | October 15, 2012 | , ,


மனுநீதி மனித குலத்துக்கு நீதியா - திகுதிகுவென வளர்கிறது !

அதிரைநிருபரில் ஏராளமான வாசர்களின் பேராதரவைப் பெற்ற தொடர் !

சாட்டையாகச் சுழன்ற "மனுநீதி மனித குலத்துக்கு நீதியா!?" தொடர்!

சகோதரர் இபுராஹீம் அன்சாரி M.com., அவர்களால் எழுதி சமீபத்தில் வெளிவந்து - நிறைவடைந்த தொடர் !

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளையும், மனு நீதி என்றொரு வஞ்சக வலைப் பின்னலில் எண்ணிடலங்கா சிக்கல்களை ஒவ்வொன்றாக எடுத்தாய்ந்து எளிமையாக எடுத்துச் சொல்லும் ஆத்திச்சூடியாக வெளிவந்த தொடர்!

புத்தகவடிவில் உருவெடுக்கும் பனிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, சான்றோர்களின் கரம் பட்டு கம்பீரமாக வெளிவர இருக்கிறது இன்ஷா அல்லாஹ் !

விரைவில் புத்தக வெளியீட்டு நாள் அறிவிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் !

மற்றுமொரு இனிப்பு - அதிரைநிருபர் பதிப்பகம் பிரசவிக்கும் முதல் புத்தகம் இன்ஷா அல்லாஹ் !

அன்புடன்,

அதிரைநிருபர் குழு