Showing posts with label கம்பன். Show all posts
Showing posts with label கம்பன். Show all posts

ஒரு ச்சிக்குபுக்கு பாதை... 27

அதிரைநிருபர் பதிப்பகம் | August 19, 2014 | , , ,


எழும்பூர் இரயில் நிலையம்
எட்டுமணி இராப் பொழுது
எங்களூர் கம்பன் ரயில்
எட்டு பத்துக்கு எடுக்கத்தயார்

வசந்த பவன் தயிர்சாதம்I
வாழையிலைப் பொட்டலத் துள்
வாங்கி வைத்த வார இதழ்
வாசிக்க கை இருப்பில்

மேற்படுக்கைக் கேட்டு வாங்கும்
மாணவப் பருவம் அது
மேற்படி ரயில் பயணம்
மறவாத இன்ப வடு

ரயில் கிளம்பும் முன்னரே
உயிர் போகும் ஊர்நோக்கி
தயிர் சாதம் உண்டபின்னே
துயில் நாடி கண்சொக்கும்

தாள கதி தாலாட்ட
தூக்கம் கனா வந்துசேறும்
பாலச் சத்தம் தட்டியெழுப்ப
பக்கம் புரண்டு படுக்கை தொடரும்

திருத்துறைப்பூண்டி காஃபி ருசி
அடியக்காமங்கலத்தில் எழுப்பிவிடும்
முத்துப்பேட்டை நிலையம் முதல்
வாசலில் நின்றால் வயல் விரியும்

சுந்தரம் தம்பிக்கோட்டை மரவகாடு
அப்பக்கம் உப்பள வெண்மை
இப்பக்கம் தென்னையின் பசுமை
இடையிடையே மாவும் பலாவும்

கேசம் கலைக்கும் எதிர்க்காற்றில்
வாசம் இருக்கும் ஈரமண்ணின்
விரல்கள் துலாவி முடி ஒதுக்க
தலைமுடிக்குள் நிலக்கரி துகள்கள்

சங்கிலிப் பாலம் தொட்டுவிட்டால்
சந்தோஷ பலம் கூடிவிடும்
அதிராம்பட்டினம் நிலையத்துள்
ரயில் நுழைய மனம் மகிழும்

ஊரின் உயிரனங்களில்
ஒன்றாகவே கம்பன் ரயில்
உறவொன்று இறந்ததுபோல்
துக்கம் காக்கிறது ரயில் நிலையம்

நிஜ ரயில் கனவாகிட
பொம்மை ரயில் பிள்ளைகளுக்கு
தடதடக்கும் ஊர் எல்லையோ
தண்டவாளம் புதைந்த மயானமாய்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

அதிரையில் அகல ரயில்பாதை - ஐந்தே வினாடிகளில் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | March 22, 2014 | , , ,

அப்ப...ப்பா எத்தனை போராட்டங்கள், எத்தனை இழப்புகள், மன உளைச்சல்கள் இதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்து வருகிறது....

இந்த அரசியல் மற்றும் அதிகார வர்க்கமும் ஏதோ ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு கபட நாடகமாடி நீண்ட நாட்களாக கிடைக்க வேண்டியதை கிடைக்க விடாமல் செய்து வருகின்றனர் சுயநல அரசியல் அதிகார வர்க்க கிருமிகள்.

இந்த தூரோகத்திற்கு சட்டரீதியான பாதிப்புகள் கண்டிப்பாக அவர்களுக்கு கிடைக்கும் அதனை அனுபவித்தே தீருவார்கள்.

சின்னஞ்சிறுசுகள் பேச்சுவாக்கில் சொன்னது "இருக்கிற இருப்பு பாதையை அங்கிட்டாலேயும் இங்கிட்டாலேயும் இழுத்துப் போட்டுட்டு ரயில ஓட்டுங்கப்பான்னு".

அட! அப்படியே செய்தால் என்ன !?

கண்ணை மூடாம ஐந்தே வினாடிகள் பாருங்க...! இவ்வளவு ஈசியான வேலையை எவ்வளவு கஷ்டமா காட்டுறாய்ங்க !


ஓட்டுக் கேட்டு வரும் வேட்பாளர்களும் அவர்களின் செயல்பாடுகளும் இந்த தருணத்தில் நினைக்கு வந்தால் தவிர்க்கவா முடியும்?

புகைப்பட பொக்கிஷம் : Sஹமீத்
அதிரைநிருபர் பதிப்பகம்
இது ஒரு மீள்பதிவு !

எப்படியும் கம்பன் வருவானா? 15

அதிரைநிருபர் பதிப்பகம் | February 26, 2013 | , , , ,


மத்திய ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் இன்று (26-02-13) மத்திய ரயில்வே பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் (பாராளுமன்ற தாக்குதல் அல்ல) செய்ய இருக்கிறார். ஆனால் அதில் நமதூர் வழி திருவாரூர் காரைக்குடி அகல ரயில்பாதைப்பற்றி ஏதேனும் சொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் ஒன்றும் தெரிவிக்கவில்லை.

இந்த வழித்தடத்தில் காலம் காலம் ஓடிய கம்பன் எக்ஸ்பிரஸ் என்ன ஆனது?

அதில் பல வருடங்கள் பயணித்து அனுபவித்த பகுதி மக்களின் போராட்டங்களுக்கு கிடைத்த பலன்கள் என்ன?

மத்திய உள்துறை மந்திரியாக இருந்த சமயம் திரு. ப. சிதம்பரத்தை நம் ஊர் பெரியவர்கள் அவர் வீட்டில் நேரில் சந்தித்து அகல ரயில்பாதையை துரிதப்படுத்தி அதில் கம்பனை விரைவில் ஓட்டச்செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொண்டு கொடுக்கப்பட்ட மனுவிற்கும் பிறகு அவர் மத்திய அரசின் லட்டர் பேடிலிருந்து அதை பெற்றுக்கொண்டதற்காகவும் பின்னர் அதை ரயில்வே துறை அமைச்சருக்கு பரிந்துரைக்கப்பட்டதற்காகவும் எழுதி அனுப்பப்பட்ட அந்த நகல் கடிதத்தால் ஏற்பட்ட பலன்கள் என்ன?

நமது தஞ்சை தொகுதி பாராளுமன்ற எம்.பி.யும் மத்திய நிதித்துறை இணையமைச்சருமான திரு. பழநிமாணிக்கத்தை நேரில் பல முறை சந்தித்து நமதூர் பெரியவர்கள் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கும், அகல ரயில் பாதை பணிக்காக அவர் கொடுத்த வாக்குறுதிகளுக்கும் என்ன பலன் கிடைத்துள்ளது?

திமுகவின் பாராளுமன்ற எம்பிக்கள் குழு தலைவரும், முன்னாள் மத்திய கப்பல் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவரும், மன்னார்குடியை சொந்த ஊராகக்கொண்ட திரு. டி.ஆர்.பாலு அவர்களிடமும் நம்மூர் பெரியவர்கள் நேரில் சென்று மனு கொடுத்துள்ளார்கள். அதன் பலன் என்ன?

திரு. பழநிமாணிக்கம் அவர்களும், திரு. டி.ஆர். பாலு அவர்களும் நம் பகுதி அகல ரயில்பாதை பணிகள் பற்றி மாறி, மாறி பத்திரிக்கைகளில் பேட்டியும், வாக்குறுதியும் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து வந்தனர். அதன் பயன் தான் என்ன?

நமக்கு அருகில் உள்ள முத்துப்பேட்டையை சொந்த ஊராகக்கொண்டு வேலூர் தொகுதியின் தற்பொழுது எம்பியாக இருக்கும் ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்களை நேரில் சந்தித்து மனுக்கள் கொடுக்கப்பட்டு என்ன ஆனது?

புதிதாக ரயில் வழித்தடம் அமைத்துக்கேட்டால் அதனால் பாதிக்கப்படும் விவசாய நிலங்களின் உரிமையாளர்கள், விவசாயிகளால் பல போராட்டங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஓடிக்கொண்டிருந்த குறுகிய ரயில்பாதையை அகல ரயில்பாதையாகத்தானே இப்பகுதி மக்கள் ஆக்கிக்கேட்கிறார்கள்? பிறகு ஏன் இந்த சுணக்கமும், தயக்கமும் என்று தெரியவில்லை.

இப்பகுதி உப்பளங்களாலும், கருவாட்டு மண்டிகளாலும் அரசுக்கு வருவாய் அதிகம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்பகுதி மக்களின் வாக்குகளில் தானே நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராகி அங்கு அலங்கரிக்க முடிகிறது? என்ற குறைந்தளவு நன்றி விசுவாசம் நம் எம்பிக்களுக்கு வர வேண்டாமா?

இவர்களிடம் மனுக்கள் பல கொடுத்து நம் மக்கள் மல்லுக்கட்டி நின்றும், மாறி, மாறி இவர்கள் வாக்குறுதிகளை வாரி வழங்கியும் கடைசியாக நம் மண்ணில் கம்பனை கொண்டு வந்து சேர்ப்பதற்குள் அதை பயன்படுத்தி இன்னும் கொஞ்சம் மிச்சம், மீதி உசுரோடு இருக்கும் எத்தனையோ நம் பெரியவர்களும் போய்ச்சேர வேண்டிய இடம் போய்ச்சேர்ந்து விடுவார்கள் போலும். அதற்குள் பல பாராளுமன்ற தேர்தல்களும், சட்ட மன்ற தேர்தல்களும் நம்மை சந்தித்து விட்டுப்போய் விடும் போல் தெரிகிறது.

மத்திய அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சி +8 சதவிகிதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக அறிவித்திருந்தாலும் நம்மைப்பொறுத்தவரை இன்னும் நாம் -8 சதவிகிதம் தாழ்ச்சி அடைந்ததாகவே கருதவேண்டியுள்ளது பழைய பல விடயங்களை இன்று ஒப்பிட்டு பார்க்கும் பொழுது......

கணவன் இறந்ததால் ஒரு விதவையாக்கப்பட்ட மனைவிக்கு கழட்டப்படும் வண்ண ஆடை, அணிகலன்கள் போல் சமீபத்தில் நம் ஊர் இரும்பு ரயில் பாதைகள் பெயர்த்தெடுக்கப்பட்டன. அகல ரயில்பாதை பணி மூலம் அவளுக்கு என்று தான் அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு மறுமணம் செய்து வைக்கப்படுமோ? காத்தே இருப்போம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

விரைவில் விரைவு எக்ஸ்பிரஸ் - கம்பன் ஏமாந்தான் ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | November 02, 2012 | , , , , , ,


அதிரையின் மனம் கவர்ந்த மண்வாசனை எழுத்துக்குச் சொந்தக்காரர் மண்ணின் மைந்தன் அதிரைநிருபரில் வழக்காடு சொல்லால் வசீகரிக்கும் மு.செ.மு. நெய்னா முஹம்மது அவர்கள் சமீபத்திய கருத்தாடல் ஒன்றில் கீழ் கண்டவாறு கூறினார்கள்.

"மக்களின் உள்ளம் எல்லாம் அகன்றே இருக்கிறது அந்த அகன்ற ரயில் பாதையைத்தவிர."

அதிரை மக்களின் உள்ளம் பரந்து விரிந்த மனைகள்போல் இருக்கிறது ஆனால் அரசியல் சூழ்ச்சிக் காரர்களின் எல்லைக் கல் ஆங்காங்கே ஊன்றியிருப்பதால் எவர் எல்லை அவர் எல்லை என்று விளையாட்டுகள் தண்டவாளத்தில் ஏறி ஓடுகிறது.

அவை ஒருபக்கம் இருக்கட்டும், செல்லும் ஊர்களிலெல்லாம் காணும் இந்த இரயில் சப்தம் அன்றுபோல் என்றுமே அதிரையிலும் அதிகாலையிலும் அந்திமாலையிலும் கேட்காதா என்ற ஏக்கத்தில் எழுந்த கற்பனையே இந்தக் காணொளி....

சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளத்தானே அன்றி ஆனந்தபடுவதற்கு அல்ல...!

இது பண்பட்ட செயலா ? அல்லது கூனியப்பார்வையில் பண்படாத செயலா ?



அதிரைநிருபர் குழு

அதிரை to பட்டுக்கோட்டை: புகைவண்டி (கம்பன் தோற்றான்) 9

அதிரைநிருபர் பதிப்பகம் | August 06, 2012 | , , , , , ,


அதிரை to பட்டுக்கோட்டை வழித்தடமாக கடந்த பல வருடங்களாக Point to Point பேருந்து போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. கடந்த சில நட்களாக அதிரை to பட்டுக்கோட்டை வழித்தடத்தில் செல்லும் அரசு பேருந்துகள் இயங்கிக் கொண்டிருந்த நல்ல பேருந்துகள் அனைத்தையும் பழைய பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளது. இதில் Point to Point பேருந்து அரசு பணிமனைகளிலிருந்து கழிக்கப்பட்ட மிகப் பழமையானதை இந்த வழித்தடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 

பேருந்து எதுவாக இருந்துட்டு போகட்டும், ஆனால் இந்த பேருந்திலிருந்து வெளிவரும் (கரும்)புகை அதிரை to பட்டுக்கோட்டை வழித்தடத்தில் கம்பனின்(எக்ஸ்பிரஸ்) மூதாதையர்கள் கடந்து செல்வதுபோன்ற பிரம்மை ஏற்படுத்தக்கூடிய புகைவண்டி செல்லுவது போல் உள்ளது. 

இதோ இந்த காணொளிய கொஞ்சம் உற்றுப் பாருங்கள் தார்சாலை புகை வண்டியை (உங்கள் கண்களுக்கு புகை நெருங்காது என்ற உத்திரவாதத்துடன்).


இந்த பேருந்து(கள்) செல்லும் வழித்தடங்களில் வியாபார தளங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், குடியிருப்புகள் அதிகம் இருப்பதனால் மக்களின் நடமாட்டமும் அதிகமே. இவைகள் அனைத்திற்கும் slow poisonயை இலவசமாக காற்றில் கலந்து தன்னுடைய மக்கள் சேவையை செய்து வருகிறது.

அதிரையில் சுகாதாரம், சுற்றுச்சூழல் மாசு சுத்திகரிப்பு பற்றி விழிப்புணர்வோடு அதிகமதிகம் பேசப்படுகிறது, அதற்காக வெளியூர்களிலிருந்தெல்லாம் சுகாதரத்துரையும் தேவைக்கேற்றார்போல் விசிட்டும் அடிக்கிறார்கள். ஒரு நாளைக்கு பல முறை அங்கும் இங்கும் செல்லும் இந்த அரசு பேருந்துக்கு பின்னால் சென்று சுற்றுச் சூழல் சீர்கேட்டை கொஞ்சம் சீர் தூக்கிப் பார்த்து ஆவன செய்தால் முகத்தில் கரிபூசாமல் வைத்த புன்னியமாவது கிடைக்குமே!

இந்த பழுதடைந்த அரசு பேருந்துகளை மாற்ற அதிரையின் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பேரூராட்சி நிர்வாகம் மற்ற அமைப்புகள் அரசு பேருந்து நிர்வாகத்திடம் தெரிவித்து மக்கள் நலனை காப்பாற்ற வேண்டும்.

அதிரைநிருபர் குழு

இரயில் பயணம் - இனி ஒரு கனவா ? 10

அதிரைநிருபர் | December 01, 2011 | , , , , ,

அன்று அதிகாலை ! கிழக்கில் கதிரவனோடு சேர்ந்தே உதித்தது ஒரு கரும்புள்ளி போன்ற புகை நீண்டு எழுந்து வந்த அந்த இரயில் வண்டி நெருங்கியது. இன்னும் நெருங்கியது அதிர்ந்தது எங்களூரின் இரயிலடியின் நடைமேடையும் அங்கே மூச்சு இழுத்து வந்த அந்த தொடர்வண்டியும் நின்றது கம்பீரமாக. ஆஹா ! என்ன கம்பீரம், இதுவல்லவா இந்திய திருநாட்டின் மிகப்பெரிய பொதுத் துறையின் தன்னிறைவு நிறுவனத்தின் கம்பீரம் என்று இறுமாப்பு காட்டியது...

அது ஒரு பொற்காலம் !


ஆனால், இன்று விரிவாக்கம், விரிவு படுத்துதல், விரைவுக்காக, என்று வீராப்பு பேசியதுபோல் ஆகிவிட்டது இவர்களின் அறிவிப்பும் அதோடு தவழும் நடவடிக்கைகளும்.

ஏன் இவர்கள் மழுப்புகிறார்கள், எதனால் அகல இரயில் பாதைத் திட்டத்தை நீட்ட முடியவில்லை ? தடைகள் என்னதான் இவர்களுக்கு ? அதிரையின் வழித்தடம் என்றுமே எவ்விதமான அதிர்வுகளையும் அமைதியாக ஆட்கொள்ளும் என்பது ஏன் புரியவில்லை இவர்களுக்கு !?

கெஞ்சினோம், கொஞ்சினோம், ஆர்ப்பாட்டம் (முடிந்தவரை) செய்கிறோம், தனிப்பட்டவர்களும் இயக்கங்களும் அவரவர் பங்கிற்கு மனுக்களை அளிக்கிறோம் அடிமேல் அடித்தால் அம்மியும் அசையும் என்பதற்கினங்க, இரும்பால் தடம் கண்ட இரயில்வே நிர்வாகத்தின் மேலதிகாரிகளின் இதயக்கதவையும் தட்டும் சீக்கிரம் அங்கே கைகாட்டியும் இறக்கப்படும் நம்புவுவோமாக !

இரயிலடியைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறோம், வாசித்திருக்கிறோம், ஏன் கனவுகளும் கண்டிருக்கிறோம்... கடந்த தலைமுறையிலிருந்து இன்றைய தலைமுறை வரை மனோகரா எக்ஸ்பிரஸிலும், கம்பன் எக்ஸ்பிரஸிலும் பயணம் செய்தவர்கள் அந்த நாட்களின் ஞாபகத்தைக் கிளறினால் எப்படியிக்கும்னு ஒரு யோசனைதான் தோன்றியது, ஆக !

மூச்சிரைத்த தொடர்வண்டி இனிமேலும் கனவிலாவது வருமா !?

இரயிலடி ஒரு நினைவலைகள் !




- அபுஇபுறாஹிம்
- நன்றி : காணொளி adiraiBBC

இரயிலடிக்கு போவோமா !? - ஃபோட்டூன் 18

அதிரைநிருபர் பதிப்பகம் | May 04, 2011 | , , , ,


கம்பன் ஏமாற்றினாலும் கழகங்களின் தலைவர்கள் காற்று வாங்க இங்கே வந்திருக்காங்க...

இவர்களோடு நீங்களும் அங்கே சென்றால் என்ன பேசுவீர்கள் ?

ஓட்டு வேட்டை முடிந்ததும் ஓய்வெடுக்க வந்திருக்கும் இடமோ அதிரைப்பட்டினம்... ஒருவேளை மின்சார இரயில் வருமென்று காத்திருக்காங்களோ ?

இனி உங்கபாடு.. ஜமாய்ங்க மக்களே !

- அபுஇபுறாஹீம்