அதிகம் கருத்துகளால் கதகதப்பான விவாதங்களெல்லாம் நடந்தேறியிருக்கிறது இதுவரை. இனி நம்ம மூன்றாம் கண்ணால் எழுதிய ஸாரி, எடுத்தவைகளின் முத்தாய்ப்பான பதிவுகளை ஏன் இன்னும் பதியவில்லை என்று இரண்டிரண்டாக ஏராளமான கண்கள் தேடிக் கொண்டிருக்கின்றன என்பதை இதுவரை விட்ட ராக்கெட்டிலிருந்து தகவல் வந்து கொண்டிருக்கிறது.
அதை எப்படி புறக்கனிக்க முடியும், எடுத்த படங்களை பதிய தவறினால், ஏன் இன்னும் பதியவில்லை ? அங்கே பதிவு போடுறது இல்லையா ? அப்படின்னா டேர்ம் சரியில்லையா ? அவுங்கல்லாம் அப்புடித்தான் ! நம்பாதியா ஹாக்கா, வாங்க ஹாக்கா.... இப்புடியெல்லாம் காதுல விழுற மாதிரி பிரம்மையா இருக்கு. இதுக்குமேல் சும்மா இருந்தா சரியா வராது எடு கேமராவை போடு போட்டோவைன்னு வந்துட்டேன்.
மழை வருமா வாராதான்னு ஊரில் பட்டிமன்றமே வைக்காலம்
இப்புடியே போய் லெஃப்ட்டுல திரும்புனா சித்திக் பள்ளி வரும்ன்னு யாரைக்கேட்டாலும் சொல்லுவாங்க !!
இன்டெர்நெட் வருகை அதில் மின்னஞ்சல் கடுதாசிகள் வந்ததுலே வெளிநாடு வாழ் குறிப்பாக வளைகுடா வாழ் அதிரையர்களின் மெயில் பாக்ஸ் அடிக்கடி நிறம்புகிறது. ஆனால் அன்றைய கடிதப் போக்குவரத்தின் ராக்கெட்டான மரியாதைக்குரிய தோனகானா அவர்களின் மெயில் பாக்ஸ் இதுவரை ஃபுல் ஆகாமலே இருக்கு. அவசியம் நம் அனைவராலும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு வி.ஐ.பி.இவர்கள்.
மேலே புறாக்களின் பார்கிங் ஏரியா, கிழே ஆட்டோக்களின் பார்கிங் ஏரியா !
உள்ளே வெளியே நடப்பவைகள் யாவுமே யதார்த்தமே !
நல்லா பார்த்துக் கொள்ளுங்கள் இதுதான் யானை விழுந்தான் குளம். இப்போ இங்கே குப்பை விழுந்து விழுந்து குப்பை விழுந்தான் குளமா போச்சி இனி இந்தப் பக்கம் டைனேசர் வந்தா கூட இதில் விழாது
இந்த இடத்தை நிறையை பேர் மறந்துட்டு ஊருக்குள்ளே ஆட்டம் போடுறாங்க !!
Sஹமீது













