Showing posts with label தக்வா பள்ளி. Show all posts
Showing posts with label தக்வா பள்ளி. Show all posts

இருவேறு துருவங்கள் ! 27

அதிரைநிருபர் பதிப்பகம் | October 09, 2013 | , , , , , ,

நமதூரில் அண்மைக் காலத்தில் நடந்த இருவேறு நிகழ்வுகள் பற்றிச் சிந்தனையை மனத்துள் ஓடவிட்டேன்.  அவற்றுள் ஒன்றைப் பற்றிக் கேட்டு உவகையுற்றேன்; மற்றொன்றைப் பற்றி அறிந்து மனம் வருந்தினேன்.  அவை, இவைதான்:

நமது சகோதர வலைத்தளமான ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ பதிவாக்கி வெளியிட்ட செய்தி இது: http://adiraixpress.blogspot.in/2013/08/blog-post_1035.html#.UlOZK9KBl_Y

அதிரை ஈசிஆர் சாலை வழியாக அதிவேகமாக நாகப்பட்டினத்திலிருந்து சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைக்கு செல்லும் பொழுது நாய் காருக்கு குறுக்கே புகுந்ததால் திடீரென்று பிரேக் பிடிக்கும்பொழுது வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதில் ஜோதினி என்ற ஆறு மாத பெண் குழந்தை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவியான சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் வாகனத்தில் பயணம் செய்த மற்றவர்கள் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையைச்  சேர்ந்தவர்கள் என்று முதல் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது..

இது குறித்து, தகவலறிந்த அதிரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதிரை அரசுப் பொது  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து அதிரை காவல் துறை அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்வில், நம் சமுதாய அமைப்புகளின் செயல் வீரர்கள் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், சமூக சேவையில் ஈடுபட்டு, உள்ளூர் காவல்துறையை எதிர்பார்க்காமலும், அவர்கள் வந்த பின்னர் அவர்களுக்குத் துணை நின்றும், காயமுற்றோரை உடனடியாக அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றும், இறந்துவிட்டவர்களின் உடல்களைக் காவல்துறையினர் வழக்கமான பரிசோதனைக்கு உட்படுத்த உதவிகள் செய்தும், சேவைகள் செய்துள்ளனர் என்ற தகவலும், வாசகர்களை மகிழ வைத்தது.


அதற்குப் பின்னரும், அமைப்புத் தோழர்கள் காயமுற்றவர்களை அரசு மருத்துவ மனையில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, மருத்துவ மனை ஊழியர்கள் முறையாகச் சிகிச்சை செய்வதற்கு உதவியாக நின்றும், பாதிப்படைந்தவர்களுக்கு மருந்துகளை வாயினுள் செலுத்த உதவிகள் செய்தும், தம் சேவை உணர்வுக்கு இலக்கணமாக நின்று, அவர்களின் தேவைகள் ஒவ்வொன்றையும் பெற்றுக் கொடுத்து  உதவிகள் செய்தனர் என்ற செய்தியும் மனத்தைக் குளிர வைத்தது.

காயமுற்றுக் கிடந்தவர்களுள் ஒருவர் தமது ஊரில் தம் குடும்பத்தாருக்கு விபத்தைப் பற்றிக் கூறியபோது, “இந்த ஊர் முஸ்லிம் மக்கள் சேவை உள்ளத்துடன் எங்களுக்கு உதவிகள் செய்கின்றார்கள்!  எமக்குக் கிடைத்த மாத்திரைகளையும் மருந்து வகைகளையும் வாயில் ஊட்டிவிடுகின்றனர்!  நமது உறவோ, அயலவர்களாகவோ இல்லாத நிலையிலும் எங்களை நல்லபடியாகக் கவனிக்கின்றனர்!  நமக்கிடையே எவ்விதப் பிணைப்பும் இல்லாத முஸ்லிம்கள் இவ்வாறு உதவுவதற்கு இவர்களின் மார்க்கமான இஸ்லாம் தடையாக நிற்கவில்லை” எனவும் கூறி,  உறவினரையும் ஆறுதல் படுத்தினார் என்னும்  செய்தியானது, நம்மை மகிழ்விக்கின்றது.   

இரண்டாவது நிகழ்வு:

இதுபற்றி மற்றொரு வலைப்பூவான ‘அதிரை நியூஸ்' வெளியிட்ட செய்தி இதோ:

அதிரை தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான மார்கெட் பகுதியில்   இன்று [ 02/10/2013 ] இரவு 10.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் உணவகங்கள், பலசரக்குக் கடைகள், தொப்பிக்கடை, சலூன்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள்  முற்றிலும் எரிந்து சாம்பலாகின. கடைகளில் இருந்த பொருட்கள் பெரும்பாலும் தீயில் எரிந்து சாம்பலாகின.

தகவல் அறிந்த அதிரை இளைஞர்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தீயை அணைக்க உதவினர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைப்பதற்கு வேண்டிய உதவியை செய்தனர்.  அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, பேராவூரணி ஆகிய ஊர்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்தின் காரணமாக அதிரை நகரில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தன.

மேலும் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர், தாசில்தார்,  டிஎஸ்பி, வருவாய்துறை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தீ விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘தக்வாப் பள்ளி’க்குச் சொந்தமான மார்க்கெட் கடைகள் தீக்கிரையான அன்றைய இரவில், நமதூர் இளைஞர்கள் ஓடிப்போய், முதலுதவி என்ற முறையில் தீயை அணைக்கப் பாடுபட்டனர்.  


ஆனால், அறிவித்து வெகு நேரம் சென்று வந்ததற்காகத் தீயணைப்புக்காரர்களுடன் சண்டையிட்டு, தீயணைப்பு வண்டி ஓட்டுனரின் மண்டைக்குக் காயம் ஏற்படுத்தி, இளைஞர்கள் சிலர் மனிதத் தன்மையின்றி நடந்துகொண்டனர் என்ற வருந்தத் தக்க  செய்தி, நம்மைக் கவலை கொள்ளச் செய்கின்றது.  இந்த நிகழ்வில் சம்மந்தப்பட்டோர், முன் நிகழ்வைப் போன்று, முஸ்லிம்களும் மாற்று மதத்தினரும் ஆவர். 

முதல் நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்கள், நமதூர் முஸ்லிம்களைப் பாராட்டினர்.  இரண்டாவது நிகழ்வில் பாதிக்கப்பட்டவர், மாற்று மதத்தவரான அரசு ஊழியர்.  இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டோர், நம்மவர்களின் நடத்தையால் முஸ்லிம்களான நம் மீது வெறுப்பைத்தான் அள்ளி வீசுவர்.  பிழை அவர்களிடம் இல்லை;  நம்மவர்கள் மீதுதான் உண்டு என்று உரத்துக் கூற முடியும்.

இரண்டும் எதிரெதிர்த்   துருவங்கள்!   இனி ஏதேனும் பாதிப்போ, வெறுப்பிற்குரிய நிகழ்வோ நமக்கு ஏற்பட்டால், இந்த அரசு ஊழியர்களிடம் ‘நல்ல பெயர்’ வாங்க முடியாது!  முன்னதற்குப் பின்னதும் ஈடாகாது!  

“இறைவனின்  மனித படைப்பினங்கள் அனைத்தும் ஆதமின் குடும்பத்தவர்களே” எனும் அடிப்படையில்தான் சேவை செய்பவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றே  இஸ்லாம் அறிவுறுத்துகின்றது. அப்போதுதான் அந்தச் சேவைகள் நமக்கு நன்மையை ஈட்டித் தரும்.  மாறாக, உணர்ச்சி வயப்பட்டும் காழ்ப்புணர்வு கொண்டும் நடந்துகொண்டால், நாம் செய்த சேவைகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகிப் போகும்.

இவ்வாறு ‘மோட்டுத் தனமாக’ நடந்து கொள்பவர்களின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்போமாயின், அவர்கள் கல்வியில் குறைந்தவர்கள் என்பதையும், பெற்றோரின் வளர்ப்பில் எதோ கோளாறு உடையவர்கள் என்றும் எளிதில் அறிந்துகொள்ளலாம்.

அதிரை அஹ்மது
Pictures : supplied

அதிரையில் நடந்த அடிக்கல் நாட்டு விழா எனும் பூமி பூஜை !. 71

அதிரைநிருபர் பதிப்பகம் | June 24, 2013 | , , , ,

அதிரையின் பிரதான கடைத்தெரு (மார்க்கெட்) பாரம்பரியமிக்க தக்வாப் பள்ளி நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இங்கு அமைந்துள்ள ஒரு சில கடைகள் சுகாதாரமற்று காணப்படுவதை பலர் குறைபட்டுக் கூறினாலும், நீண்ட காலமாக முறையான பராமரிப்பின்றி காணப்படும் கடைகளின் சில பகுதிகள் இடிந்து விழும் நிலையிலேயே இருந்து வந்தன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்ட தக்வாப் பள்ளியின் புதிய நிர்வாகிகள் பழமை வாய்ந்த மீன்-மார்க்கெட் பகுதியை புதுப்பித்து விரிவாக்கம் செய்யும் பணிகளில் ஈடுபடப் போவதாக கூறி வந்தனர். அதன் தொடர்ச்சியே மீன் மார்க்கெட்டை விரிவாக்கம் செய்து அங்கே புதிய கட்டடம் ஒன்றை கட்டி எழுப்புவதாகவும் அறிவித்திருந்தனர். இதற்காக பிரமாண்டமாய் ரூபாய் 85 இலட்சம் பொருட்செலவில் 120 கடைகளைக் கொண்ட வளாகம் கட்டுவதற்காக 17-06-2013 அன்று காலை 7 மணியளவில் அடிக்கல்(!!) நாட்டப்பட்டது. இதுதான் கடந்த வாரம் அதிரைச் செய்திகளை அளித்து வரும் வலைத்தளங்களில் வெளிவந்த செய்தி. ஆனால் அன்று இஸ்லாமிய மார்க்கத்திற்கு விரோதமான நிகழ்வுகள் நடந்ததை கண்டிக்காமல் மறைக்கப்பட்டுள்ளது என்பதை தீர விசாரித்த பின்னரே அறிய முடிந்தது. அதுதான் உண்மை. 

தக்வா பள்ளி பிரதான மார்கெட் அடிக்கல் நாட்டு விழா.


பிற மதத்தவர்கள் செய்யும் பூமி பூஜையில் இடம் பெரும் சடங்குககள்.


பிற சமூகத்தவர் புனிதம் என்று கருதுவதை நாம் அதற்கு இணையாக செய்வது சரியா நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

நபி(ஸல்) அவர்களும் தங்களின் காலத்தில் வீடுகள், பள்ளிவாசல்கள் கட்டினார்கள், ஏதாவது ஒரு சந்தர்பத்தில் இவ்வாறான அடிக்கல் நட்டு கட்டினார்கள் என்று ஹதீஸ்களில் இருந்து காட்ட முடியுமா?

அடிக்கல் நாட்டு விழா என்ற இந்த சடங்கு இஸ்லாமிய மார்க்கத்தில்தான் உள்ளதா?

ஒரு குறிப்பிட்ட மனிதன் அந்தச் செயலை செய்தால்தான் அச்செயலில் பரக்கத்து (அபிவிருத்தி) உள்ளது என்பதற்கு குர்ஆன் ஹதீஸ் படிப்பினையில் என்ன ஆதாரம் உள்ளது?

எந்த ஒரு செயலை செய்தாலும் பிஸ்மில்லாஹ் என்று சொல்லிச் செய்ய வேண்டும் என்ற அறிவு எல்லோருக்கும் இருந்தும், கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் விழா என்று ஒரு நிகழ்வை நடத்தி பாஃத்திஹா ஓதி ஆமீன் சொல்லி அடிக்கல் நாட்ட குர்ஆன் சுன்னா அடிப்படையில்தான் ஆதாரம் உள்ளதா? 

ஏன் ஷாஃபி மத்ஹப் வழிபோற்றுகிறோம் என்று சொல்லுபவர்கள் தான் இந்த அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியுள்ளார்கள். கண்ணியத்திற்குறிய இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் இவ்வாறு செய்வதற்கு அங்கீகரித்த அல்லது அனுமதித்த ஒரு ஃபாத்வாவையாவது ஆதாரமாவது காட்ட முடியுமா?

இது போன்ற மார்க்க விரோத நிகழ்ச்சிகளில் முன்னின்று ஃபாத்திஹா ஓதுபவர்களில் பெரும்பாலானவர்கள் கூலி வாங்காமல் அச்செயலை செய்வதில்லை என்பது மறைக்கப்பட்ட உண்மை. 

அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உள்ளோம் என்று, அல்லாஹ்வின் பெயரை சொல்லி அடிக்கல் நாட்டு விழாக்களில் கலந்து கொள்ளும் ஜின் வைத்தியம், தாயத்து, தட்டு இன்னும் பிற குறி சொல்லி வைத்தியம் செய்யும் பேர்வழிகள் சிலர் அல்லாஹ்வின் புரோகிதர்கள் என்ற பிரம்மையை உண்டாக்கிக் கொண்டவர்களான இவர்கள் என்ன இலவசமாகவா தங்களுடைய சேவையை செய்கிறார்கள்? 

இதெல்லாம் 100% வியாபாரம் ஒவ்வொரு மார்க்க விரோத போக்குக்கு பின்னாலும் பல்லாயிரம் ரூபாய் அல்லவா வீணடிக்கப்படுகிறது.

பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை இதோ..

நபி(ஸல்)கூறினார்கள் யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர் என கூறினார்கள். நூல்: அபூதாவூத் 3512. 

அடிக்கல் நாட்டு விழா என்னும் பெயரில் பூமி பூஜை என்ற அனாச்சாரமான பிறமத கலாச்சாரத்தை அப்படியே செய்து வருகின்றனர் என்பதை மேல் குறிப்பிட்ட தக்வாபள்ளி மார்கெட் அடிக்கல் நாட்டு விழாவில் நடைபெற்றதையும், பிறமதத்தை சேர்ந்தவர்கள் செய்த பூமி பூஜையில் நடைபெறதையும் உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.

மார்க்க அறிஞர்கள் நிறைந்த ஊர் என்று அதிரையை பல வருடங்களாக சொல்லி வருகிறோம். மார்க்க அறிஞர்கள் குறைவாக உள்ள பிற ஊர்களில் இல்லாத மார்க்க விரோத போக்கு அளவுக்கதிகமாகிக் கொண்டே போவதற்கு யார் பொறுப்பு? என்பதை சிந்திக்க வேண்டும். 

ஏன் ஷிர்க் பித் அத்துக்களை எதிர்த்து பேச உள்ளூரில் மார்க்க அறிஞர்கள்தான் இல்லையா? 

வெள்ளி மேடையில் ஷிர்க் பித்அத் அனாச்சாரங்களை எதிர்த்து துணிந்து பிரச்சாரம் செய்யும் அதிரை இளம் ஆலிம்களும், பெரிய ஜும்மா பள்ளியில் பிரச்சாரம் செய்துவரும் ஆலிம் அவர்களும் தாங்கள் தொடர்ந்து செய்துவரும் தக்வா பள்ளி பயானிலும், பெண்கள் பயான்களிலும் இது போன்ற பூமிபுஜை அனாச்சாரங்களை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் அடியோடு இந்தக் கலாச்சாரம் விட்டொழிய பாடுபடவேண்டும்.

அதிரையில் உள்ள பழைமைவாய்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அரபி மதர்ஸாக்கள் என்றைக்கு மத்ஹப் பாடத் திட்டத்திலிருந்து விலகி தூய்மையான குர்ஆன் ஹதீஸ் அடிப்பையிலான மார்க்க கல்வி திட்டத்திற்கு வருகிறதோ அன்று தான் நமதூருக்கு இவ்வாறான மார்க்க புரோகிதர்களிடமிருந்து விடிவுகாலம் பிறக்கும் என்பது மட்டும் தெளிவு.

அல்லாஹ் நம் எல்லோரையும் நேர்வழி படுத்துவானாக. மார்க்கத்தில் இல்லாத புதினங்களிலிருந்து நம் எல்லோரையும் பாதுகாப்பானாக.

புரோகிதர்களின் சூழ்ச்சிக்கு எதிரான எச்சரிக்கை தொடரும். இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் பதிப்பகம்

தக்வா பள்ளியில் இடர்கள் கலைந்து, பயான் தொடர்ந்தது…! 35

அதிரைநிருபர் பதிப்பகம் | April 29, 2013 | , , , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

சூழ்ச்சிக்காரர்களுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ் ஒருவனே..

திருக்குர்ஆன் 8:30.  (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.

திருக்குர்ஆன் 3:120. ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது; உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.

திருக்குர்ஆன் 4:76. நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்; நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்; ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.

திருக்குர்ஆன் 6:123. மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணருவதில்லை.

திருக்குர்ஆன் 8:18. இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் சூழ்ச்சியை இழிவாக்கி (சக்தியற்றதாய்) ஆக்குவதற்கும் (இவ்வாறு செய்தான்.)

அல்லாஹ்வின் மிகப்பெறும் கிருபையால் நமதூர் பாரம்பரியமிக்க தக்வா  பள்ளியில் மார்க்க பிரச்சாரகர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு, தக்வா பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் 28-ஏப்ரல்-2013, மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு வழமைபோல் இனிதே நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

27-ஏப்ரல்-2013 அன்று தக்வா பள்ளி 7 பேர் கொண்ட செயற்குழுக் கூட்டம், நடைபெற்றது. இதில் வழக்கம் போல் தக்வா பள்ளியில் நடைபெற்று வந்த ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு இனியும் தொடர்ந்து நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது என்ற உண்மைச் செய்தியை உடனுக்குடன் அதிரை செய்திகளை சுடச்சுட அளித்துவரும் நமதூர் வலைத்தளங்கள் தர தவறியது மட்டுமன்று சில வலைத்தளத்தில் தவறான தகவல்களும் பதியப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கடந்த ஒருவாரமாக மிகவும் பரபரப்பாகவும் எதிர்பார்ப்புடனும் பேசப்பட்டு வந்த அதிரை பற்றிய செய்தியில் தக்வா பள்ளியில் வழக்கமாக நடைபெற்று வந்த ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மார்க்க சொற்பொழிவு நிறுத்தப்பட்டதாக வெளிவந்த சர்ச்சையான தகவலுக்கு பின்னர் நம் அதிரைநிருபர் வலைத்தளத்தில் அந்தச் சூழலின் உண்மை நிலவரத்தை மிகுந்த சிரமத்திற்கிடையே ஆய்வு செய்து இரண்டு பதிவுகள் பதிந்தோம். 


நம்மிடம் இருந்த, மேலும் கிடைத்த வலுவான ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு, இந்த சர்ச்சையில் மிகப்பெரிய சூழ்ச்சி இருப்பதை மக்கள் மத்தியில் எடுத்து வைத்தோம். அல்லாஹ்வின் கிருபையால் சூழ்ச்சிக்காரர்களின் சூழ்ச்சி வலை கிழித்தெறியப்பட்டது.

மார்க்க அறிஞர் ஒருவரை பழிவாங்கும் திட்டத்தில் பல சூழ்ச்சிகள் செய்தார்கள். மேலும் பல அதிரைவாசிகளுக்கு ஊரில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு சிலர் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தனிப்பட்ட அலைபேசி  மற்றும் தொலைபேசி அழுத்தங்கள், மிரட்டல்கள், செய்ததோடு அல்லாமல், நம் அதிரைநிருபர் வலைத்தளத்தின் குழுவில் உள்ளவர்களின் சொந்தங்களிடம் மறைமுக மிரட்டல்கள் செய்தும், ஹைதர் அலி ஆலிம் அவர்களின் தக்வா பள்ளி பயான் தொடர்பான செய்திகளை முடக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார்கள். இவை அனைத்தையும் அல்லாஹ்வின் மாபெறும் உதவியால் வென்றெடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

தக்வா பள்ளியில் மார்க்க சொற்பொழிவு வழக்கம் போல் நடைபெற்றது என்பதை நினைத்து ஒரு வகையில் நாம் சந்தோசமடைந்தாலும், நம் சகோதரர்கள் சத்தியத்துக்கு எதிராக அல்லாஹ்வின் விபரீதங்கள் அறியாமல் மேலும் மேலும் சூழ்ச்சிகள் செய்து அவமானப்பட்டு போவார்களோ என்ற ஓருவித அச்சவுணர்வும் நம்மில் பலரிடம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. 

யா அல்லாஹ்,  இஸ்லாத்திற்கு எதிராக அறியாமல் சூழ்ச்சிகள் செய்யும் அனைத்து முஸ்லீம் சகோதரர்களுக்கும் மார்க்க தெளிவை தந்தருள்வாயாக..

இதில் யார் வென்றார்கள், யார் தோற்றார்கள், யார் அவமானப்பட்டார்கள் என்று நாம் தனி நபர்களைக் குறிப்பிட்டு கருத்துக்களைப் பதிவதைவிட. இறைவனை மட்டும் புகழ்ந்து, தவறு செய்த சம்பத்தப்பட்ட சகோதரர்கள் திருந்த வேண்டும், அவர்களுக்காக நாம் அனைவரும் துஆ செய்ய வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

மேலும் ஸூரத்துந் நம்லி(எறும்புகள்) என்ற அத்தியாயத்தில்  45 வது வசனம் முதல் (27:45)  முதல்  53வது வசனம் வரை (27:53) கொஞ்சம் நிதானமாக வாசித்துப்பாருங்களேன், அண்மைக் கால அதிரை நிகழ்வுகளுக்கு பொருந்தும் விதமாக இருக்கும். அனைத்தையும் மிக்க அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே…

இங்கு நாம் அழுத்தமாக சொல்ல விரும்பும் தகவல் என்னவென்றால், தக்வா பள்ளியில் நடைபெற்று வந்த ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவை நிறுத்தியது தொடர்பாக உண்மைக்கு புறம்பான அரைகுறை செய்திகளை வெளியிட்ட  அதிரை வலைத்தளங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். பணம் படைத்தவர்களின் ஆதிக்க சக்திகளுக்கு அஞ்சி சத்தியத்தை எடுத்துச் சொல்ல தயக்கமிருப்பின் தயவு கூர்ந்து தவறான செய்திகளைப் பதிந்து உண்மை நிலவரத்தை மறைத்து நமதூர் சகோதரர்களை குழப்ப வேண்டாம் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

பிறமதத்தவர் செய்யும் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டி செய்திகள் போட்டுவிட்டால் முஸ்லீம் ஊடகங்கள் நியாயமானவை, தைரியமானவை என்று பெருமிதம் கொள்ளுவது போல் சத்தியத்துக்கு எதிராக எல்லைமீறி சூழ்ச்சிகள் செய்துவரும் நம்மவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர்களை அவ்வகை தவறுகளிலிருந்து திருத்தும் விதமாக செய்திகளை வெளியிடுவதும் நியாயமானவை, தைரியமானவை என்று பெருமிதம் கொள்ளலாமே இன்ஷா அல்லாஹ்.

முக்கியமாக நினைவுறுத்துகிறோம், மெளலவி ஹைதர் அலி ஆலிம் என்ற தனி மனிதரை மட்டும் உயர்த்தி மற்ற மெளலவிகளை தாழ்த்தும் எண்ணம் எங்களுக்கு துளியளவும் இல்லை. தர்கா வழிபாடு, இணைவைப்பு மவ்லிது, அனாச்சாராங்கள், மூட நம்பிக்கைகள், பித்அத்துகளுக்கு எதிராகவும், சத்தியத்தை தைரியமாக எடுத்துச் சொல்லும் அதிரை மார்க்க அறிஞர்கள் யாருக்கு இத்தகைய தடைகள், தொந்தரவுகள் வந்தாலும் நிச்சயம் குரல் கொடுப்பதில் முன்னணியில் இருப்போம். இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ், நம் அனைவருக்கும் பொறுமையையும், நிதானத்தையும் தருவானாக. 

சத்தியத்துக்கு ஆதரவாகவும், அசத்தியத்துக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் நன்மக்களாக நம் எல்லோரையும் அல்லாஹ் ஆக்கியருள் புரிவானாக.

(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக. (அல்குர் ஆன் 17:81)

நய வஞ்சகத்துக்கு எதிரான போராட்டம் அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் தொடரும். இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் பதிப்பகம்

தக்வாப் பள்ளிக்குப் புதிய நிர்வாகம்! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | March 31, 2013 | , , ,


நான் இந்நாட்டின் பிரதமரானால்...’ என்ற தலைப்பைக் கொடுத்துப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களைக் கட்டுரை எழுதச் செய்வதுண்டு.  அது போன்று அன்று, இக்கட்டுரையின் பின்னணி.

நமதூர் ‘தக்வாப் பள்ளி’க்குப் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாகத் தமிழ்நாடு அரசு வக்பு வாரியம் ‘முயற்சி’ செய்துவந்தது.  அதற்காக விண்ணப்பம் செய்தவர்களுள் 29 பேரை வக்பு வாரியம் தெரிவு செய்து, (அப்பட்டியலில் இருந்து ஏழு பேரை மட்டும் நிர்வாகிகளாக அறிவிப்பதற்காக) அப்பெயர்ப் பட்டியலையும் வெளியிட்டிருந்தது.  

“நீங்களும் விண்ணப்பம் செய்யவேண்டும்” என்று சிலர் வற்புறுத்தியதால் நானும் விண்ணப்பித்திருந்தேன்.  அதனால் அந்த 29 பேரில் நானும் ஒருவன்.  கடந்த 06 / 03 / 2013 அன்று எங்கள் அனைவரையும் நேர்முக விசாரணை க்காகச் சென்னைக்கு அழைத்திருந்தார்கள்; சென்றோம்.  தனித்தனியாக நேர்முக விசாரணை நடைபெற்றது.  யார் யாரிடம் என்ன கேட்டார்கள் என்பது எனக்குத் தெரியாது.  அதனால் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளை மட்டும் நான் கூறமுடியும்.  என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளைப் பொருத்தவரை, இதைக் கேட்கவா இவ்வளவு தூரத்திற்கு வரச் செய்தார்கள் என்று எண்ணத் தோன்றியது.  கூடியிருந்த 25 அல்லது 30 அரசு ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களுள் 4 பேர் மட்டும் என்னிடம் நான்கு கேள்விகள் கேட்டார்கள். 

கேள்வி ஒன்று :  நீங்கள் அதிராம்பட்டினவாசியா?

கேள்வி இரண்டு :  உங்கள் பெயர் என்ன?

கேள்வி மூன்று :  நீங்கள் ஏன் விண்ணப்பம் செய்துள்ளீர்கள்?
(இதற்கு நானளித்த பதில்: “வக்புச் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்;  துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடாது என்பதால்.”)

கேள்வி நான்கு :  நீங்கள் எப்போது உம்ரா செய்து திரும்பி வந்தீர்கள்?

(அதற்கு முந்திய உள்ளூர் விசாரணையில் நான் கலந்துகொள்ள முடியாததால், ‘உம்ரா’ பயணம் செல்வது பற்றி அவர்களுக்கு ஒரு கடிதம் கொடுத்திருந்தேன்.  அதனால் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார்கள் போல் தெரிகிறது.)

நேர்முக விசாரணைக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு, யாரோ என் காதில், “ஆளும் கட்சிக்குத்தான் சான்ஸ்” என்று அப்போது கிசுகிசுத்தது, இப்போது தெரிவு செய்யப்பட்டிருக்கும் பட்டியல் மூலம் ‘உண்மைதான்’ என்று நினைக்க வைக்கிறது. சரி, யார் வந்தால் என்ன?  நாம் தேர்ந்தெடுக்கப்பட்டு, செய்ய நினைத்திருந்த சீர்திருத்தங்களை, அவர்களும் செய்யட்டும் என்று அவர்களின் காதிலும் கவனத்திலும் போட்டுவைக்கலாமே என்ற எண்ணத்தில் கீழ்க்காணும் செய்திகளைப் பட்டியல் போடுகின்றேன்:
  • தக்வாப் பள்ளியானது, ‘துளுக்கா பள்ளி’ என்று அழைக்கப்பட்டுவந்த காலத்தில், அப்பள்ளிக்குரிய சொத்துக்களாக, கடைத்தெரு முழுதும் சுட்டிக்காட்டப்பட்டது!  ஆனால், அன்றைக்கு அதிரையை ஆட்சி செலுத்திவந்த குறிப்பிட்ட ஒரு குடும்பம், தன் இஷ்ட்டப்படி, தன் சொத்துகளாகக் கருதி, கடை வைத்திருப்போருக்கு விற்றதும் விட்டுக் கொடுத்ததும் ஏராளம்!  அவற்றில் வியாபாரிகள் கடைகளும் கட்டிடங்களும் கட்டிக்கொண்டு இன்றும் சுகித்து வருவது கண்கூடு.  தரை வாடகையாவது கொடுக்கிறார்களா என்பது சந்தேகம்.
  • கடைத்தெரு வெளிப்புறத்தில் இத்தகைய கொள்ளை நடப்பதை அறிந்தோ என்னவோ, மார்க்கெட்டின் உள்ளே மீன், காய்கறி, இறைச்சிக் கடைகள் வைத்திருப்போர், பள்ளியின் சார்பில் ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் வசூலுக்குப் போகும் பள்ளி ஊழியரை ஏலனப்படுத்தி விரட்டிவிடும் சந்தர்ப்பங்களும் அடிக்கடி நடப்பது வழக்கமாம்.
  • இது போன்ற ஊழல்களைப் புதிய நிர்வாகம் களைந்து, இறையில்லத்தைத் திறம்பட நடத்திச் செல்லவேண்டும்.  அதற்கான பரிந்துரைகளாகக் கீழ்க்காணும் திட்டங்களைக் கூறி வைக்கிறோம்:

1. தற்போது புதிய கட்டிடங்களாக இருப்பவற்றைப் பட்டியல் போட்டு, அவ்விடங்களில் வியாபாரம் செய்துவருபவர்களுக்கு ‘நோட்டீஸ்’ கொடுத்து, உடனடியாக, ஒரு தொகையை தரை வாடகையாக வசூல் செய்யவேண்டும்.

2. மோசமான நிலையில் உள்ள கடைகளையும் கட்டிடங்களையும் இடித்துவிட்டு, பள்ளிவாசல் செலவில் புதிதாகக் கட்டி வாடகைக்கு விடவேண்டும்.

3. மார்க்கெட்டின் உள்புறம் முழுவதும் காலி செய்து, தற்காலிக இடத்தில் மார்க்கெட்டை அமைத்துக்கொடுத்துவிட்டு, நவீன வசதிகளுடன் தனித்தனிக் கடைகளைக் கட்டிக் கொடுத்து வாடகை வசூல் செய்யவேண்டும்.

4. மேற்காணும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்னால், காவல்துறை மற்றும் வக்பு போர்டு ஆகிய அரசுத் துறைகளின் உதவியைக் கேட்டுப் பெறவேண்டும்.

இவையெல்லாம், நாம் நிர்வாகப் பொறுப்புக்கு வந்தால் செய்ய நினைத்தவை.  புதிய நிர்வாகம் இது போன்ற திட்டங்களைச் சவாலாக ஏற்றெடுத்து, தனது ‘சேவை மனப்பான்மை’யை நிரூபிக்குமா?

அதிரை அஹ்மது

பேசும் படம் - தொடர்கிறது.... 24

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2012 | , ,



சேர்மேன் வாடி அருகே யானை பிடிக்க குழி வெட்டி வைத்துள்ளார்களோ !?


தக்வாபள்ளியின் சுற்றுசுவரில் ஏற்பட்ட காயம் அதிரையர்களின் மனதில் ஆறாத சுவடு ! 


இப்படியோ போய் லெஃப்ட்ல திரும்புனா மாட்டுக்கறி கடை இது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ நம்ம ஊரு தலைங்களுக்கு நல்லவே தெரியும் என்பது சொல்லித்தான் தெரியனுமா ?


இனி இந்த கேட்-கிப்பருக்கு  ரெஸ்ட் தான் (அது சரி வேலை இருந்தப்ப மட்டும் என்ன கிளிச்சாங்களாம்)


மஃக்ரிப்புக்கு நேரமாச்சு 


எந்த பூவாக இருந்தாலும் நமது கவிங்கர்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை புதைந்திருக்கும் கவிதைகளை கோர்த்து மாலையாக்கித் தாக்கிடுவாங்க. 


புகையும் போச்சு வண்டியும் (நின்னு) போச்சு நிலையம் மட்டும் நிலைத்து இருக்கு அகன்ற அலைகற்றுபோல் இல்லாமல் அகன்ற பாதை(கள்) வருமென்று காத்துகிட்டு இருக்கு !


நல்லா  காயப்போடுறாங்க கருவாடு 


கை கட்டு கால் கட்டு அந்த வரிசையில் இது படகு கட்டு...


தமிழ் நாட்டின் கடைசி மீட்டர் கேஜ் இதுதான்

Sஹமீது

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!? 94

அதிரைநிருபர் பதிப்பகம் | September 01, 2012 | , , ,

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.

அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி வலைத்தளத்தில் பதியப்பட்டதால் வெளிநாடு வாழ் அதிரைவாசிகளை மட்டுமல்ல உள்ளூர் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன? இதன் பின்னணியில் யார் இருந்திருக்கிறார்கள்? என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. அவ்வாறான சந்தேகங்களை நிவர்த்தி செய்யவே இந்த விளக்கம்.

இந்த பதிவு எந்த தனிநபரையோ, ஒரு அமைப்பில் உள்ளவர்களையோ உயர்த்தி / தாழ்த்தி எழுதப்பட்டதல்ல, மாறாக உண்மை நிலை மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே. நம் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் கண்கானித்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் எழுத்தபட்டது.

யார் இந்த ஹைதர் அலி ஆலிம்?

கடந்த பல வருடங்களாக ஊரில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக அதிரையின் மறைந்த ஆலிம் பெருமக்கள் பலர் பகிரங்கமாக குரல் கொடுத்து வந்தார்கள் இதில் மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மரியாதைக்குரிய மர்ஹூம் முஹம்மது அலீய் ஆலிம் (ரஹ்) அவர்கள் ஊரில் நடைபெறும் மிகப்பெறும் பித்அத்களுக்கு எதிராக பகிரங்கமாக குரல் கொடுத்தவர்கள். மர்ஹூம் முஹம்மது அலீய் (ரஹ்) ஆலிம் அவர்கள் இருக்கும் காலத்திலும் அவர்களின் மறைவுக்கு பிறகு மார்க்கம் என்ற பெயரில் புதிதாக தினிக்கப்பட்டுள்ள பித்அத்துக்களை (புதின்ங்கள்) பகிரங்கமாக மார்க்க மேடைகளில் எதிர்த்து குரல் கொடுத்து வரும் மார்க்க அறிஞர்களில் முக்கியமானவர்களில் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களும் ஒருவர். தமிழ்நாட்டில் சித்திரக்கோட்டையிலிருந்து அதிரைக்கு குடிபெயர்ந்து மார்க்க பிரச்சாரம் (பெரிய ஜும்மா பள்ளி பயான், பெண்கள் பயான், தக்வா பள்ளி பயான்) செய்துவருகிறார்கள்.

என்ன பிரச்சினை?

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சித்தீக் பள்ளி சொத்து விவகாரத்தில்  ஏற்பட்டுள்ள முறைகேடுகளை சித்திக்பள்ளி நிர்வாகம் உண்மையை வெளியில்  கொண்டு வந்தது என்பது ஊரில் உள்ள அனைவரும் அறிவார்கள். இதனால் சிலருக்கு ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மேல் தனிப்பட்ட கோபமும் குரோதமும் ஏற்பட்டது. மேலும் ஊரில் நடைபெற்று வரும் பித்அத்களை எதிர்த்து குரல் கொடுத்து வருவதாலும் பல ஆண்டுகளாக அதிரையில் பித்அத்களை ஆதரித்து வரும் சில உலமாக்கள் மற்றும் மவ்லித் லெப்பைமார்களுக்கு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் மேல் ஒரு கோபப்பார்வை தொடர்ந்து இருந்து வந்துள்ளது என்பது ஊரில் உள்ள அனைவரும் மிகவும் அறிந்ததே. இதற்கிடையில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவை கேட்க ஆண்கள் மற்றும் பெண்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருவது ஊரில் உள்ள அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.

கடந்த ஓரிரு மாதங்களாக அதிரை தக்வா பள்ளியின் நிர்வாகிகளில் ஒருவரின் முயற்சியால் ஊரில் மிகச் சிலரிடம் மட்டுமே கையொப்பம் பெற்று, தவறான அதாவது பொய்யான தகவலை வைத்து தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது. இந்த தகவல் தவறான தகவல் என்பதால் தக்வா பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் அதே நபர், தக்வா பள்ளி நிர்வாக கூட்டத்தில் எடுக்கப்படாத தீர்மானத்தை அதில் எடுத்தது போல் மினிட் புத்தகத்தில் தானாகவே எழுதி (மினிட் புத்தகம் திட்டமிட்டு இதுவரை மறைக்கப்பட்டுள்ளது) ஷம்சுல் இஸ்லாம் சங்கம், தமிழ்நாடு வக்பு வாரியம், காவல்துறை, ரிசீவர் ஜெயச்சந்திரன் அட்வகெட். இவர்கள் அனைவருக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இதில் தக்வா பள்ளி ட்ரஸ்ட் தலைவர் கையொப்பமின்றியும், அவரின் அனுமதியின்றியும் அவராகவே எழுதுகிறார். இதில் தக்வா பள்ளியில் மார்க்க பிரச்சாரம் செய்யும் ஒட்டுமொத்த தாயிக்கள் அனைவரின் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விசயம் என்னவென்றால், மேற்குறிப்பிட்ட புகாரை அளிக்கும் அந்த சகோதரரே சென்ற வருடம் அதிரை உலமாக்கள் சபையிடம் அதிரை தக்வா பள்ளியில் ஓதப்பட்டுவரும் மவ்லிதை நிறுத்த வேண்டும் என்று கோரிகை மனு அளித்துள்ளார்.

மேலும் அவர் கடந்த 18.08.2012 அன்று பட்டுக்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போடுகிறார். இதில் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தீவிரவாத பிர்ச்சாரம் செய்து, ஊரில் உள்ள இளைஞர்களை வழிகெடுத்து வருதாகவும் மேலும் ஊரில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி பிரிவினை ஏற்பட தூண்டுவதாகவும் இல்லாத பொல்லாதவைகளை எழுதி ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் போலீஸ் நிலையத்திலும் ஹைதர் அலி ஆலிம் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார் என்ற புகாரும் கொடுத்து இந்த வருட ரமளானில் மிகப்பெரிய தொந்தரவை கொடுத்து வந்துள்ளார். ஊரில் உள்ள பல சகோதரர்களின் முயற்சியால் அந்த சகோதரர் காவல் நிலையத்தில் கொடுத்த தவறான புகார் திரும்ப பெறப்பட்டுள்ளது. இருப்பினும் நீதிமன்ற வழக்கு இன்னும் விசாரனையில் உள்ளது.

நிலைமை இப்படி இருக்க, போலீஸ் புகாரை திரும்ப பெற்ற அவர் மீண்டும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தை அனுகி, தான் முன்பு கொடுத்த புகாருக்கு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முறையிட்டுள்ளார். இதன் அடிப்படையில் சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் அவர்கள் ஹைதர் அலி ஆலிம் அவர்களை அழைத்து சங்க தலைவர் வீட்டில் பேச முற்பட்டுள்ளார்கள்.

ஹைதர் அலி ஆலிம் அவர்களை அன்றைய தினம் (29-08-2012) காலை 10:30 மணியளவில் சங்க தலைவர் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்த சங்க பிரதிநிதியாக வந்த சகோதரர் அவர்களிடம் "தக்வா பள்ளி நிர்வாகிகளில் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால் வழக்கமான நிகழ்வுகளை தவிர மற்ற எந்த கூட்டத்திற்கும் செல்ல வேண்டாம் என்று வழக்கறிஞர் அறிவுறுத்தியிருக்கிறார், ஆகையால் வழக்கு முடிந்த பிறகு நானே நேரில் வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி அனுப்பினார். ஆனால் அசர் தொழுகைக்கு பிறகு சங்க பிரதிநிதியாக வந்த சகோதரர் அவர்கள், ஹைதர் அலி ஆலிம் அவர்களிடம் மீண்டும், நீங்கள் வர இயலவில்லை என்றால் நாங்கள் வந்து சந்திக்கிறோம் என்று தலைவர் சொல்லியனுப்பினார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு ஹைதர் அலி ஆலிம், அவர்கள் "சங்க தலைவர் வந்து என்னை சந்திப்பதற்கு நான் பெரிய ஆள் இல்லை, தக்வா பள்ளி பயான் முடித்துவிட்டு போன் பேசிவிட்டு சந்திக்கலாம்" என்று சங்க பிரதிநிதியிடம் சொல்லி அனுப்பிய 10 நிமிடத்திலேயே மீண்டும் சகோதரர்கள் சங்க தலைவர், பேரூராட்சி தலைவர், சங்க துனை தலைவர்,  துணை செயலாளர் மற்றும் இரண்டு  பிரதிநிதிகள் சகிதமாக சென்று ஹைதர் அலி ஆலிம் அவர்களின் வீட்டிற்கு சென்று சந்திக்க முற்பட்டுள்ளார்கள்.

பள்ளியில் வைத்து சந்திக்கலாம் என்று தெரிவித்துவிட்டு ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தன் வீட்டிலிருந்து சித்தீக் பள்ளிக்கு வந்தவுடன் சங்க தலைவர் அவர்கள் "வெளியூர்காரர்" என்ற வார்த்தையை பிரயோகித்த காரணத்தால் நடைபெறவிருந்த சந்திப்பு சலசலப்பால் தடைபட்டது. சங்க தலைவர் மற்றும் அவருடன் வந்த சகோதரர்கள் சித்தீக் பள்ளியிலிருந்து சென்று விட்டார்கள், இது தான் நடந்த சம்பவம்.

இதனை தொடர்ந்து ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள் (தலைவர், துணை தலைவர், துணை செயலாளர்) மூன்று நபர்கள் மட்டும் கூடி ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பயான் செய்து வரும் ஆயிஷா மகளிர் அரங்கத்தில் நடைபெறும் மகளிர் வாராந்திர பயான் தற்காலிகமாக நிறுத்தபடுவதாக தங்கள் அறிவிப்பை அதிரை வலைப்பூ ஒன்றுக்கு மட்டும் அறிவிப்பை தெரிவித்து விட்டு. அதிரையில் உள்ள அனைத்து முஹல்லாக்களுக்கு ஹைதர் அலி ஆலிமை மார்க்க சொற்பொழிவு செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலத்தெரு சங்கத்திற்கு அனுப்பட்ட கடித நகல் மற்றும் ஆயிசா மகளிர் அரங்கத்தின் நிர்வாகி அவர்களுக்கு அனுப்பட்ட கடித நகல் இணைக்கப்பட்டுள்ளது.






ஊரில் இருப்பவர்களுக்கும் வெளியூர்களில் இருக்கும் அதிரைவாசிகளுக்கும் எழும் சந்தேகம் இதே..

1.   ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவை தடை செய்யும் அளவுக்கு அவர் என்ன மன்னிக்க முடியாத குற்றம் செய்தார்?

2.   ஒரு பிரச்சினை சங்கத்துக்கு வந்தால் முறையாக பொதுக்குழு அல்லது செயற்குழு அல்லது நிர்வாக குழு கூடி தீர்மானம் போட்டு அல்லது முடிவு எடுத்த பின்னர்தானே நடவடிகை எடுப்பது சம்சுல் இஸ்லாம் சங்கம் மட்டுமல்ல ஊரில் உள்ள எல்லா சங்கத்திலும் வழக்கம் மற்றும் நெறிமுறை. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் விசயத்தில் சங்கம் போர்கால அடிப்படையில் 24 மணி நேரத்துக்குள் பயான் செய்ய தடை விதித்ததின் மர்மம் என்ன?

3.   மற்ற இரண்டு நிர்வாகிகளை கலந்தாலோசிக்காமல் மூன்று நிர்வாகிகளை கொண்டு முடிவு எடுக்கும் அளவுக்கு அப்படி என்ன அவசர நிகழ்வு நடத்துவிட்டது?

4.   ஷம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட்ட ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெரும் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பயான் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை மட்டும் சங்கத்திற்கு என்று இருக்கும் வலைப்பூவில் வெளியிடாமல் பொதுவான வலைப்பூ ஒன்றில் அவசர அவசரமாக வெளிட்ட மர்மம் என்ன?

5.   ஷம்சுல் இஸ்லாம் சங்கம் எப்போது ஊரில் உள்ள சங்கங்களுக்கு (மேலத்தெரு ஜும்மா பள்ளி சங்கம் உட்பட)  கட்டளையிடும் அதிகாரம் பெற்றது?

6.   தீவிரவாதி என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள தக்வா பள்ளி நிர்வாகத்தில் இருக்கும் அந்த சகோதரர் மீது சம்சுல் இஸ்லாம் சங்கம் என்ன நடவடிக்க எடுக்க போகிறது?

இவ்வாறான பல கேள்விகள் பொது மக்கள் மத்தியில் எழத்தான் செய்கிறது. உண்மை நிலையை அறிய இந்த கேள்விகளுக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பதிலை மக்கள் மத்தியில் வைக்க வேண்டும்

நேற்று முன் தினம் 30-08-2012 அன்று இரவு சித்தீக் பள்ளி முஹல்லா சகோதரர்கள் சிலரை ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர், துணை தலைவர், துணை செயலர், பேரூராட்சி தலைவர் ஆகியோர் அழைத்து பேசினார்கள். இதில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சொற்பொழிவில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையில்லை என்று ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர், துனை தலைவர், துனை செயலர், பேரூராட்சி தலைவர் ஆகியோர் ஒருமனதாக வந்தவர்கள் முன்னிலையில் ஒத்துக்கொண்டார்கள். ஆனால். சம்சுல் இஸ்லாம் சங்கம் ஆயிசா மகளிர் அரங்கம் மற்றும் மேலத்தெரு ஜும்மா பள்ளிக்கு அனுப்பிய கடிதத்தில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு தொடர்பான காரணங்களை கூறியே அவரை வைத்து மார்க்க சொற்பொழிவாற்ற வேண்டாம் என்று கூறிப்பிட்டுள்ளார்கள்.

இது அப்பட்டமான இரட்டை நிலைபாடு என்பது நிரூபனமாகியுள்ளது. சித்திக் பள்ளி முஹல்லா சகோதரர்களிடம் ஒரு நிலை, சங்கம் எழுதிய கடிதத்தில் ஒரு நிலை. இதில் நிறைய மர்மங்கள் உள்ளது என்பது மட்டும் உண்மை.

இந்நிலையில் மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளியில் வழக்கம் போல் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ஜும்மா பயான் (31-08-2012) நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் தகவல்கள் விரைவில்… இன்ஷா அல்லாஹ் !

L.M.S. Mohamed Yousuf 

உண்மை (ஹக்) எந்தப்பக்கம் நிலைத்திருக்கிறதோ அதனைச் சார்ந்து அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக அல்லாஹ்வின் திருப் பொருத்ததை நாடி அதன் வழியில் இருப்பதே தனித் தன்மையுடன் கூடிய உண்மைநிலை ! மாற்றுக் கருத்துடையவர்கள் நெறியாளரின் தனி மின்னஞ்சலுக்கு அனுப்பித் தரலாம்.

அவரவர் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் ஒருவனே நன்கறிவான்.

பின்னூட்டங்களில் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் சகோதரர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள், தனிமனித, அல்லது அமைப்பு  தாக்குதல் இல்லாமல் நியாய உணர்வுடன் கருத்துகளை பதியுங்கள், வரம்பு மீறல் இருக்குமாயின் உடணடியாக அவ்வகை கருத்துகள் நீக்கப்படும்.

நெறியாளர்

அதிரையில் “மாட்டுக்கறி” வியாபாரத்திற்கு தடையா ? - அதிர்ச்சி ரிப்போர்ட் ! 26

அதிரைநிருபர் பதிப்பகம் | June 20, 2012 | , , , ,


அதிரையில் அமைதியை குலைக்க பின்னப்பட்டிருக்கும் சதி அம்பலமாகியிருக்கிறது, அமைதியாக அனைத்து சமுதாயத்தவரும் சகோதர பாசத்தோடு இன-மத பேதமின்றி உறவாடி வரும் அதிரை மக்கள் மத்தியில் பாஸீச கும்பலொன்று தனது வேலையை அரங்கேற்றி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அவர்கள் கையில் எடுத்திருக்கும் சர்ச்சை 'மாட்டுக் கறி', இதற்கு பேரூராட்சி மன்றம் தடைவிதித்து விட்டதாக பகிங்கமாக சுவரொட்டிகள் ஒட்டி ஊர் முழுவதும் பதற்றமான சூழலை பாஸீச விஷமிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

நீண்ட நாட்களாக அமைதியான முறையில் தொழில் செய்துவரும் சகோதரர்களுக்கு இவ்வாறான தொந்தரவுகள் கொடுப்பதிலிருந்தும், ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தனித்து தகுந்த சட்ட ஆதாரங்களை முன்வைத்து அதற்கான ஆவண செய்வதை விடுத்து, ஏதோ தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை களம் இறக்கி அங்கே முஸ்லீம் விரோத கும்பலின் தலையீட்டால் கலகம் ஏற்படுத்தும் சதி அம்பலமாகியிருக்கிறது.


அன்பார்ந்த அதிரை சகோதரர்களே, முஸ்லீம்களின் ஒரு பொது அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் மார்கெட்டில், பாஸீச விரோதிகளின் ஆதிக்கம் நுழைய அனுமதிக்க வழிவகை செய்ய துணை போகாதீர்கள், வீணான பதற்றம் ஏற்படுத்தி சகோதரர்கள் மத்தியில் கலவர பீதியை ஏற்படுத்தும் கும்பலை சட்டபூர்மவாக தண்டிக்க முறையான நடவடிக்கைகளில் இறங்குவதற்கு ஒற்றுமையுடன் ஒன்றினையுங்கள்.

நம் சகோதரர்கள் அனைவரும் ஒற்றுமைகாத்து சகோதரத்துவம் பேனுவோம் இன்ஷா அல்லாஹ்....

-அதிரைநிருபர் குழு

கந்தூரி ஊர்வலம் - தடைவிதிக்க கோரிக்கை... 8

அதிரைநிருபர் பதிப்பகம் | May 26, 2012 | , , , ,


அதிரையில் கடந்த செவ்வாய் கிழமையன்று (22-05-2012) கந்தூரி போதைக் குண்டர்களால் தக்வா பள்ளி அருகில் சகோதரர் அஹமது ஹாஜா தாக்கப்பட்டார், இதனைத் தொடர்ந்து பெரும் கலவரம் ஏற்படும் பீதி ஏற்பட்டது அதன் பின்னர் காவல்துறை ஆய்வாளர் செங்கமலக் கண்ணன் தலையிட்டு சூழலை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

தக்வா பள்ளி நிர்வாகம் தொழுகைக்கு இடையூறு விளைவித்த கந்தூரி போதைக் குண்டர்களின் செயலைக் கண்டித்தும், கந்தூரி என்ற அனாச்சார ஊர்வலம் இனிமேல் தக்வா பள்ளி மற்றும் நடுத்தெரு வழியாக செல்லத் தடை விதிக்க கோரியும் காவல்துறை ஆய்வாளரிடம் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.



-அதிரைநிருபர் குழு