Showing posts with label அதிரை நிருபர். Show all posts
Showing posts with label அதிரை நிருபர். Show all posts

ஹஜ் யாத்திரையும் தன்னார்வளர்களின் உதவியும் 2

அதிரைநிருபர் | November 10, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..


அன்பானவர்களுக்கு,


இந்த வருடத்திற்கான ஹஜ் புனித யாத்திரை நிறைவடைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். உலகெங்குமிருந்து 4 மில்லியன் மக்களுக்கு மேல் இந்த வருடத்திற்கான புனித யாத்திரையை மேற்கொண்டுள்ளார்கள். அல்லாஹ்வின் உதவியால் எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் அனைவரையும் பாதுகாத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.


கடல் கடந்து, அரசு மற்றும் தனியார் ஹஜ் சேவை நிறுவனங்கள் மூலமும் உலகின் பல பகுதிகளிலிருந்து புனித மக்கா மதீனாவுக்கு  வருடா வருடம் ஏராளமான முஸ்லீம்கள் சென்று வருகிறார்கள். சவுதி அரசாங்கமும் தங்களின் நாட்டிற்கு வருகைத ரும் விருந்தினர்களான ஹஜ் யாத்திரியர்களுக்கு தேவையான அதிகபட்ச வசதிகள் பல செய்துவருகிறது.


மறைமுகமாகவோ நேரடியாகவோ ஏராளமான தன்னார்வளர்கள், இவ்வுலகில் எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஹஜ் யாத்திரியர்களுக்கு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையுன் செய்த, சவுதி அரேபியாவில் வேலை செய்துவரும் நம் சகோதரர்கள் அனைவரையும் இங்கு மனதார பாராட்டியே ஆகவேண்டும். அல்லாஹ் இச்சகோதரர்களுக்கு நல்லருள் புரிவானாக. நேரம் காலம் பாராமல் இவர்களின் உதவியால் பயனடைந்த ஹஜ் யாத்திரியர்கள் நிச்சயம் அவர்களின் கைமாறாக அந்தச் சகோதரர்களுக்காக துஆ செய்திருப்பார்கள்.


அன்மையில் அதிரை ஹஜ் யாத்திரிகர்களில் கபீர் ஆலிம்சா அவர்களைk காணவில்லை என்றும், மற்றும் மு.மு. முஹம்மது இப்றாஹிம் அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பtடுள்ளார்கள் என்ற ஒலிச் செய்தியை சகோதரர் ஜாபருல்லாஹ் அவர்கள் நம் சகோதர வலைத்தளம் அதிரை எக்ஸ்பிரஸின் வாயிலாக தெரிவித்திருந்தார்கள். உண்மையில் இச்செய்தியைக் கேள்விபட்ட நம் எல்லோருக்கும் பதற்றமாகவே இருந்தது. அல்லாஹ்வின் உதவியால் காணாமல் போன கபீர் ஆலிம்சா அவர்களைத் தேடி கண்டுபிடிக்கும் வேலையில் நம் அதிரையை சேர்ந்த சகோதரர்கள் செய்த முயற்சியை யாராலும் மறக்க முடியாது.


இதுபோல் அதிரையைச் சேர்ந்த மு.மு. முஹம்மது இப்றாஹிம் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆம்புலன்ஸில் அவர்களை மருத்துவமணைக்குக் கொண்டு சொல்லப்பட்டார்கள், ஆனால் அவர்கள் எந்த மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்காக அதிரைச் சகோதரர்கள் எடுத்த முயற்சியை நிச்சயம் யாராலும் மறக்க முடியாது. முமு. முஹம்மது இப்றாஹிம் அவர்ளுடைய மகளாரும் ஹஜ் பயணம் செய்துள்ளார்கள், தகப்பனாரின் உடல் நலக்குறைவால் பதற்றத்துடன் இருந்த இச்சகோதரிக்கு உதவியாக நம் அதிரை சொந்தம் ஒன்று உதவியாக இருந்து இவர்களின் ஹஜ் கடமையை நிறைவேற்ற உதவியிருந்திருக்கின்றனர் என்ற செய்தியைக் கேட்கும்போது உண்மையில் சிலிர்க்கிறது. ஹாஜிகளுக்காக உதவிகள் செய்தவற்கு என்று அல்லாஹ் இவர்களைப்போன்ற நல்லவர்களை அந்த புனித மண்ணில் வைத்துள்ளான்.


ஹஜ் பயணம் செய்தவர்களுக்கு உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக. இவர்கள் இச்சேவையை அல்லாஹ் அங்கீகரிப்பானாக.


ஏற்கனவே பலமுறை ஹஜ் கடமையை நிறைவு செய்த சிலர் அதிரையிலிருந்து வந்த சகோதரர்கள், தன்னார்வத்துடன் முன் வந்து உள்ளூர்வாசிகள் பெரும்பாலோருக்கு அவர்களின் ஹஜ் கடமையை இனிதே சிறப்பாக சிரமமின்றி நிறைவேற்ற உதவியுள்ளார்கள் என்ற செய்தியை ஹஜ்ஜுக்கு சென்றிருக்கும் உறவினர்களிடமிருந்து அறிய முடிகிறது. இச்சகோதரர்களுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.


இது போல் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளாமல் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி தங்களின் செயல்களால் மறைமுகமாக ஹாஜிகளுக்கு உதவிகள் பல செய்த / செய்துவரும் அனைத்து நல்ல உள்ளங்களையும் நிச்சயம் பாராட்டுவதோடு அல்லாமல். அவர்களுக்காக நாம் எல்லோரும் துஆ செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

- அதிரைநிருபர் குழு






நன்றி: http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=121447

அதிரை கல்வி மாநாட்டுப் புகைப்படங்கள் - 14.01.2011 8

அதிரைநிருபர் | January 15, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்,

அஸ்ஸலாமு அலைக்கும்,
அதிரையில் நடைபெற்றுவரும் கல்வி விழிப்புணர்வு மாநாட்டின் முதல் நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்காக,

நிகழ்ச்சிகளில் மிக ஆர்வத்துடன் கலந்துக்கொண்ட இந்த மாணவர்களில் வருகால டாக்டர்கள், IAS, IPS, வக்கீல்கள், அறிவியளாலர்கள், ஆசிரியர்கள் உள்ளார்கள் என்பது நிச்சயம். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நல்லருள் புரிவானாக.








முதல் நாள் நிகழ்ச்சிகளில் கலந்து பயனைடந்த அனைத்து மாணவ, மாணவிகளை அதிரைநிருபர் குழு நன்றியுடன் வாழ்த்துகிறது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளர் பேராசிரியர் டாக்டர் ஆபிதீன் அவர்களையும் நன்றியுடன் வாழ்த்துகிறோம்.


-- அதிரைநிருபர் குழு

50000 செல்லக் குட்டுகள் வாங்கிய அதிரைநிருபர் 39

அதிரைநிருபர் | October 31, 2010 | , ,

அதிரை நிருபருக்கு
கிடைத்த அடிகள்...
கண்ணடிகள்!


என்ன செய்தீர் - இத்தனை
இதயம் கொய்தீர்!
புன்னகை விற்றீர்
பூக்க்ள் பெற்றீர்!

படிப்படியாய் அடி சேர்வது
பழக்கமான சக்தி...
படீரென அடி சேர்வது
ஆக்க சக்தி...
நீர்தான் இனி
அதிரையின் ஆக்க சக்தி!

அதிரை நிருபருக்கு
ஆயிரக் கணக்கில் அடிகள்...
இடுகைகள் மூலம்
ஈட்டிய புகழ்
உலக மெங்கும் வாழும்


ஊர் மக்களுக்கு
எல்லாம் அறிய
ஏதுவாய் வார்த்து
ஐம்பதாயிர முத்தரை பெற்று
ஒற்றுமையோடு
ஒங்கிச் சொன்னதால்
ஓளவையின் சுவடிபோல் நிலைக்கும்
ஃஎனும் ஆயுதமும் துவக்கமாகும்!

Adirai nirubar...
Breaks the records!

Counting on continuously
Deriving lovely strikes!

Encourages everyone with
Friendly freedom and
Great gentleness!

Highly professional owners
Involving themselves
Just like mates!

Knowledges merge here
Learners learn creation
Mainly about Islam & hometown but
Not limited to!

Optimistic approach and
Progressive postings brought
Queue of readers with
Repeated attendance!

Seniors respected...
Teenagers well treated...
Ultimate result is
Victory...victory and victory!

Work hard Adirainirubar,
Xerox not anyone else,
Yet lot you to achieve in the
Zigzag path of life!!!


-sabeer


25000 அடி வாங்கிய அதிரைநிருபர் 17

அதிரைநிருபர் | September 08, 2010 | , ,


அன்பான அதிரைநிருபர் வாசக சகோதர, சகோதரிகளுக்கு முதலில் அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ்வின் உதவியாலும் உங்களின் ஆதரவு,                                   ஒத்துழைப்பு, பங்களிப்பு ஆலோசனைகளினாலும் நம் அதிரைநிருபர் வலைப்பூ மிகச் சிறப்பாக இணையக்கடலில் மிதந்து நாளுக்கு நாள் நம் அதிரை மக்களின் இதயத்தில் இடம்பிடித்து வருகிறது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

நம் அதிரை நிருபர் ஆரம்பித்து மூன்று மாதத்தில் நம் அதிரை மக்களிடம் மட்டுமால்லாமல் மற்ற ஊர்  நம் சகோதரர்களிடமும் பிரபல்யமடைந்துள்ளது என்பதை வரும் பின்னூட்டங்கள், வருகையாளர்களின் கண்காணிப்பு  (tracking software) மற்றும் மின்னஞ்சல்கள் நமக்கு தெரியப்படுத்துகிறது. நாளுக்கு நாள் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம் அதிரைநிருபர் குழுவுக்கு மிக்க மகிழ்ச்சி.

"இணையத்தில் மூலம் நம் அதிரை மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த ஏன் நம்மால் முடியாதா?" என்று கேள்வியுடன், பிரச்சினைகள் தூண்டாத, நல்ல செய்திகளை மட்டும் நம் மக்களிடம் பகிர்ந்துக் கொண்டு ஒற்றுமையை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் நம் அதிரைநிருபர். இன்று அதிரைநிருபர் 25000 செல்ல அடிகள் வாங்கியுள்ளது, மிக்க மகிழ்ச்சி.

உங்கள் அனைவருக்கும் மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறோம். நம் அதிரைநிருபர் எந்த சர்ச்சையான செய்திகளை பதிவு செய்யாது, அப்படி பதியப்பட்ட செய்திகள் சர்ச்சையானது என்று தெரிந்தாலோ அல்லது வாசகர்கள் தெரியப்படுத்தினாலோ நிச்சயம் உடனே நீக்கப்படும் என்பதை உங்கள் அனைவருக்கு உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதிரைநிருபருக்கு என்று புதிய மடல் முகவரி தொடர்ந்து இயங்கி வருகிறது, adirainirubar@gmail.com  நீங்கள் அனைவரும் இதில் தொடர்பு கொள்ளலாம்.

மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நினைவு படுத்த விரும்புகிறோம், நம் அதிரைநிருபர் வலைப்பூ எந்த அதிரை வலைப்பூவுடன் போட்டி போடவில்லை போட்டி போட வேண்டிய அவசியமும் இல்லை. மற்ற வலைப்பூக்கள் நடத்துபவர்களும் நம் சகோதரர்கள் என்ற எண்ணம் எப்போதும் அதிரைநிருபருக்கு உள்ளது என்பதற்கு நம்முடை அதிரைமணமே சாட்சி.  நமக்கு வரும் கட்டுரைகளை மற்ற சகோதரர்களின் அதிரை வலைப்பூக்களில் வெளியிட எந்த ஆட்சேபனைகளும் நம்மிடம் இல்லை. நல்ல விசயங்களை யார் வேண்டுமானாலும் தங்களின் வலைப்பூக்களில் பதிந்து மக்களை பயனடைய செய்யலாம்.

அலுவலக வேலைகள் அதிகம் இருந்தாலும் புனித ரமழான் மாதத்தில், நம்மால் முடிந்த வரை நம் மக்களுக்கு பயன் தரும் தகவல்கள் பறிமாறப்பட்டது, குறிப்பாக மக்கா, மதீனா நேரலை, நம்முடைய அதிரைமணத்தில் குறைந்த band widthல் தெரியும் மக்கா நேரலை (in flash)யை முதன் முதலில் ஒரு தமிழ் வலைப்பூவில் அறிமுகப் படுத்தியுள்ளோம் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்வதில் தவறில்லை என்று கருதுகிறோம். அதிரைமணத்தில் இருக்கும் மக்கா நேரலை நல்ல பயனுல்லதாக இருந்து வருகிறது என்பதை அதிரை சகோதரர்கள் மூலமும், நண்பர்கள் மூலம் அறிய முடிகிறது. அல்லாஹ் போதுமானவன்.

இனிவரும் நாட்களில் நிறைய நல்ல பல தகவல்கள் வெளிவர இருக்கிறது. ஹஜ்ஜுடைய மாதம் வருகிறது வழக்கம் போல் தன் எழுத்துக்களால் நம் அனைவரையும் நல்ல சிந்தனையின் பக்கம் திரும்ப செய்யும் நம் சகோதரர்களின் நல்ல கட்டுரைகள் வெளிவரும் என்று நாம் எதிர்ப்பார்கலாம்.

ஊரிலும், வெளிநாடுகளிலும், குடும்பங்களையும், நண்பர்களையும் விட்டு பிரிந்துள்ள நம் அனைத்து அதிரை சகோதர, சகோதரிகளுக்கு நல்ல செய்திகளை தந்து, நல்ல கருத்து பரிமாற்றத்துடனும் ஒற்றுமையுடனும் நல்ல மனநிம்மதியை ஏற்படுத்த அதிரைநிருபர் வலைப்பூ முயற்சி செய்யும். இன்ஷா அல்லாஹ்.

முக்கியமாக இங்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு விசயம். சகோதரர் ஷரபுதீன் நூஹூ அவர்களின் ஆற்வமூட்டலால் கல்வி விழிப்புணர்வு, வழிகாட்டல் முகாம் நடத்துவது சம்பந்தமாக நல்ல ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் பரிமாறப்பட்டது. ரமழான் மாதமாக இருப்பதால் நம் சகோதரர்கள் பலரிடம் தொடர்புக் கொள்ள முடியவில்லை, நேரம் கிடைக்கவில்லை. இன்ஷா அல்லாஹ் கல்வி வழிக்காட்டி நிகழ்ச்சி சம்பந்தமாக நல்ல செய்தி விரைவில் வெளியிடப்படும். நிச்சயம் இந்த வருடம் நம் அதிரையில் அனைத்து பள்ளி மாணவர்களையும் ஒன்றிணைத்து ஒரு நல்ல கல்வி வழிகாட்டி முகாம் நம் சகோதரர்களின் ஒத்துழைப்புடன் நம் அதிரைநிருபர் குழுவும் இணைந்து செய்யும் என்பதை மீண்டும் ஒரு முறை இங்கு அனைவருக்கும் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ்.

அதிரை ஷிஃபா மருத்துவமனை மறுமலர்ச்சி கட்டுரையை தொடர்ந்து. நம் அதிரைநிருபரில் மருத்துவம், உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக ஒரு தொடர் கட்டுரைகளை வெளியிடலாம் என்று எண்ணிவருகிறோம். இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவரும்.

அதிரைநிருபரில் கட்டுரைகளையும், செய்திகளையும் தொடர்ந்து நமக்கு அனுப்பிவரும் மு செ மு நெய்னா முகம்மது, அதிரை அஹ்மது, ஜாஹிர் ஹுசைன், அப்துல் ரஹ்மான், புதிய அறிமுகம் அபு ஈஸா மற்றும் பல சகோதர, சகோதரிகளுக்கும் (பெயர் குறிப்பிட்டால் பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்) மிக்க நன்றி. தொடர்ந்து இன்னும் உங்கள் ஆக்கங்களை நமக்கு எழுதி அனுப்புங்கள் உங்களுக்கு என்று தனி இடம் நம் அதிரைநிருபர் வலைப்பூவில் நிச்சயம் இருந்துக்கொண்டே இருக்கும். இவர்களைப்போன்று மற்ற திறமையானவர்களின் படைப்புகள் நம் அதிரைநிருபர் எதிர்ப்பார்கிறது. நல்ல கருத்தை எழுதும் நம் அதிரைவாசிகளை நம் அதிரைநிருபர் நிச்சயம் ஊக்கப்படுத்தும்.

பதிவுகளை ஊக்கப்படுத்தி தங்களின் கருத்துக்களை பதிந்துவரும், சகோதரர்கள் ஷாஹுல் ஹமீது, CROWN, அப்துல் மாலிக், ஷரபுதீன் நூஹு, ஷஃபி, நீடுர் அலி, ஹாலித், அபு இபுறாஹிம், ZAKIR HUSSAIN, SHEIK DAWOOD, YASIR, அஹ்மது இர்ஷாத், அப்துல் ரஹ்மான், சின்னக்காக்கா மற்றும் கருத்துக்கள் பதிந்துக்கொண்டிருக்கும், பதியப்போகும் அனைத்து சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.

நம் அதிரைநிருபர் வலைப்பூவிலும், அதிரைமணம் வலைப்பூ திரட்டியிலும்  பின் தொடர்பவர்கள் பட்டியலில் (FOLLOWERS) சில சகோதரர்கள் இணைந்துள்ளார்கள், இன்னும் நிறைய சகோதரர்கள் இணைந்து எங்களை ஊக்கப்படுத்துங்கள். உங்களுடைய ஊக்கம் எங்களை இன்னும் அதிகம் நல்ல செய்திகளை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள தூண்டுதலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 "ஒரு சில ஏரியாவுக்காக அல்லாமல் ஊருக்காக ஒற்றுமையை மனதில் கருதி செயல்பட வேண்டும்"  என்று அன்பு சகோதரர் மாலிக் தங்களின் பின்னூட்டம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். நிச்சயம் அனைத்து ஏரியாக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் மற்றும் ஆக்கங்கள் வெளியிடம் முயற்சி செய்கிறோம். அனைத்து சகோதரர்களின் ஒத்துழைப்புடன் விரைவில் அதில் வெற்றியும் காண்போம். இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் வலைப்பூவுக்கு ஆதரவும், ஒத்துழைப்பும், ஆலோசனைகளும் வழங்கிவரும் நம் அனைத்து அதிரை மக்களுக்கும், மற்ற ஊர் சகோதரர்களுக்கும் மிக்க நன்றி.. எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நல்ல ஈமானையும் தந்தருவானாக என்று பிராத்தனை செய்தவர்களாக விடைப்பெறுகிறோம்.

தொடர்ந்து இணைந்திருங்கள்...


---அதிரைநிருபர் குழு

 

பத்து ஆயிரம் அடி வாங்கிவிட்ட அதிரைநிருபர் ! 21

தாஜுதீன் (THAJUDEEN ) | July 25, 2010 | , , ,


அன்பான அதிரைநிருபர் வாசக சகோதர சகோதரிகளுக்கு முதலில் அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ்வின் உதவியாலும் உங்களின் ஆதரவு,                ஒத்துழைப்பு, பங்களிப்பு ஆலோசனைகளினாலும்        நம் அதிரைநிருபர் வலைப்பூ மிகச் சிறப்பாக இணையக்கடலில் மிதந்து நம் அதிரை மக்களின் இதயத்தில் இடம்பிடித்து வருகிறது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

அதிரைநிருபர் ஆரம்பித்து ஒரு மாதம் கூட முடியாவிட்டாலும் நாளுக்கு நாள் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதில் நம் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி. "இணையத்தில் மூலம் நம் அதிரை மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த நம்மால் ஏன் முடியாதா?" என்று கேள்வியுடன் பிரச்சினைகள் தூண்டாத நல்ல செய்திகளை மட்டும் நம் மக்களிடம் பகிர்ந்துக் கொண்டு ஒற்றுமையை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது நம் அதிரைநிருபர். இன்று அதிரைநிருபர் 10000 செல்ல அடிகள் வாங்கியுள்ளது, மிக்க மகிழ்ச்சி.

நேற்று டெம்லெட் இலவசமாக வழங்கிய சகோதரர் ஒரு JAVA SCRIPTயை தூக்கிவிட்டார் அதனால் அதிரைநிருபரின் உருவத்தில் சிறிய மாற்ற இருந்தது, அல்லாஹ்வின் உதவியால் இப்போது சரி செய்யப்பட்டுள்ளாது.

நம் அதிரைநிருபர் எந்த சர்ச்சையான செய்திகளை பதிவு செய்யாது, அப்படி பதியும் செய்திகள் சர்ச்சையானது என்று தெரிந்தாலோ அல்லது வாசகர்கள் தெரியப்படுத்தினாலோ நிச்சயம் உடனே நீக்கப்படும் என்பதை உங்கள் அனைவருக்கு தெரிவித்துக்கொள்கிறோம். அதிரைநிருபருக்கு என்று புதிய மடல் முகவரி தொடங்கப்பட்டுள்ளது,  adirainirubar@gmail.com  நீங்கள் அனைவரும் இதில் தொடர்ப்பு கொள்ளலாம்.

மீண்டும் அனைவருக்கும் நினைவு படுத்த விரும்புகிறோம், நம் அதிரைநிருபர் வலைப்பூ எந்த அதிரை வலைப்பூவுடன் போட்டி போடவில்லை போட்டி போட வேண்டிய அவசியமும் இல்லை. மற்ற வலைப்பூக்கள் நடத்துபவர்களும் நம் சகோதரர்கள் என்ற எண்ணம் எப்போதும் அதிரைநிருபருக்கு உள்ளது என்பதை நம்முடை அதிரைமணமே சாட்சி.

இனிவரும நாட்களில் நிறைய நல்ல பல தகவல்கள் வெளிவர இருக்கிறது. ரமலான் மாதம் வருகிறது வழக்கம் போல் தன் எழுத்துக்களால் நம் அனைவரையும் நல்ல சிந்தனையின் பக்கம் திரும்ப செய்யும் நம் சகோதரர்களின் நல்ல கட்டுரைகள் வெளிவரும் என்று நாம் எதிர்ப்பார்கலாம்.

ஊரிலும், வெளிநாடுகளிலும், குடும்பங்களையும், நண்பர்களையும் விட்டு பிரிந்துள்ள நம் அனைத்து அதிரை சகோதர சகோதரிகளுக்கு நல்ல செய்திகளை தந்து, நல்ல கருத்து பரிமாற்றத்துடனும் ஒற்றுமையுடனும் நல்ல மனநிம்மதியை ஏற்படுத்த அதிரைநிருபர் வலைப்பூ முயற்சி செய்யும்.  இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் வலைப்பூவுக்கு ஆதரவும்,ஒத்துழைப்பும், ஆலோசனைகளும் வழங்கிவரும் நம் அனைத்து அதிரையின் அன்பானவர்களுக்கும் (பெயர்கள் குறிப்பிடவில்லை) மிக்க நன்றி. எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நல்ல ஈமானையும் தந்தருவானாக என்று பிராத்தனை செய்தவனாக விடைப்பெறுகிறேன்.

தொடர்ந்து இணைந்திருங்கள்...

அன்புடன் தாஜுதீன்.

25.07.10

அதிரை நிருபர் யாருடன் போட்டி? 11

தாஜுதீன் (THAJUDEEN ) | July 09, 2010 | , ,


நம்முடைய அதிரை நிருபர் வலைப்பூ போட்டிக்காக உருவாக்கப்பட்ட அதிரை செய்தி ஊடகம் என்ற குற்றச்சாட்டு எம்முடைய நட்பு வட்டாரத்திலிருந்து வந்துள்ளது.                                                                      

அதிரை நிருபர் வலைப்பூ அதிரையில் உள்ள மற்ற வலைப்பூக்களைப் போன்று ஒரு சாதாரண வலைப்பூ தான். சில அதிரை வலைப்பூக்கள் பரப்பரப்பு நிறைந்த செய்திகளையும், வேறு செய்தி ஊடங்களின் செய்திகளையும், கல்வி செய்திகளையும், மருத்துவ செய்திகளையும், பல்சுவை செய்திகளை, சமையல் செய்திகளை, மார்க்க செய்திகளையும், இயக்க செய்திகளையும், மற்ற செய்திகளையும் தனித்தனியாக வெளியிட்டு வருகிறது அதனுடன் சேர்ந்து தான் நம்முடைய அதிரை நிருபரும் அதிரை நல்ல செய்திகளுடன் மற்ற நல்ல செய்திகளை வெளியிட்டு வருகிறோம்.

எம்முடைய முதல் நோக்கம், இணையத்தின் மூலம் பிரிவினை ஏற்படுத்தாமல் ஒற்றுமையை நம் அதிரைவாசிகளிடம் ஏற்படுத்துவது மட்டும் தான் நோக்கம். வேறு எந்த புரட்சி வசனங்களும், எந்த புலம்பல்களும் நம்மிடம் இல்லை.

அதிரை நிருபரில் வரும் செய்திகளும், கட்டுரைகளும் எந்த தனி நபரையோ, எந்த சமுதாயத்தையோ தாக்காமல் இருக்கும் என்ற நம்பிக்கை எம்மிடம் பலமாக உள்ளது. இன்ஷா அல்லாஹ்.

அதிரை நிருபரின் தரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இனியும் அதிகரிக்கப்படும், உங்களின் மேலான கருத்துக்களை எமக்கு தெரிவிக்கலாம், இதோ ஈ-மடல் முகவரி tjdn77@gmail.com , அதிரை நல்ல செய்திகள், கட்டுரைகள் எம்முடைய முகவரிக்கு அனுப்பிவையுங்கள், இவைகள் நல்ல செய்தியாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக பதியப்படும். பின்னூட்ட கருத்துக்கள் யாருடைய மனதை பாதிக்கும் பட்சத்தில் நிச்சயமாக நீக்கப்படும் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டால் உடனே நீக்கப்படும், எவ்விதத்திலும் சப்பை கட்டுகள் கட்டி சமாளிக்கப்படமாட்டாது என்பதையும் இங்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.

அதிரைக்காக நடுநிலையான அனைத்து தெருவாசிகளை உள்ளடக்கிய ஒரு பொது இணையத்தளம் நிச்சயம் தேவை, இதற்காக ஒழிந்துக்கொண்டு இணையத்தளம் வைப்பதில் எந்த நண்மையும் இல்லை, குழப்பங்களும் பிரிவினைகளும் தான் வரும், இதற்காக நேரத்தை வீணடித்து பதில் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். சமூக அக்கறையுடன் எழுதுபவர்கள் ஒழிந்துக் கொண்டு எழுத வேண்டி அவசியமில்லை என்பது என்னுடைய நம்பிக்கை, சொல்லும் செய்தியின் நம்பகத்தன்மையும் பலப்படும்.

அதிரை பெயருடன் இணைந்து வரும் அத்துனை வலைப்பூக்களும் (சகோதரர்களும்) சமூக அக்கரையுடன் செய்திகள் வெளியிடுகிறார்கள் என்று  நம்புகிறவன் நான். இங்கு அதிரை நிருபர் யாருடன் போட்டி போடவில்லை, போட்டி போட வேண்டிய அவசியமும் இல்லை, அதிரை நிருபரில் அதிரையின் நல்ல செய்திகளுடன் மற்ற நல்ல செய்திகள் மட்டும் வெளிவரும்.

விரைவில் அதிரை நிருபர் வலைப்பூக்கான விதிமுறைகள் வெளியிடப்படும்.

அதிரைக்கு என்று ஒரு நல்ல பொது இணையத்தளத்தை யாராவது உருவாக்கினால், நிச்சயம் அதிரை நிருபர் மூடப்படும். நீண்ட காலமாக இருக்கும் வலைப்பூக்களில் ஏதாவது ஒன்று பொதுவான விதி முறைகளுடன், நல்ல மனப்பக்குவபட்ட பதிவாளர்களை தேர்வு செய்து, சர்ச்சைகள் இல்லாத தினசரி செய்திகளை வெளியிட்டு நடத்துபவர்கள் இன்னார் தான் என்று வெளியிட்டால் எல்லா கருத்து வேறுபாடுகளை தூக்கி எறிந்து விட்டு ஒற்றுமையை நிலை நிறுத்த என்னைப்போன்றவர்கள் நிச்சயம் தயாராகி உள்ளோம் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும். யாராவது முன்வர மாட்டார்களா?

ஏன் நல்ல செய்திகளால் நம்முடைய ஊர்மக்களின் இதயங்களை இந்த இணையத்தின் மூலம் இணைக்க முடியாதா என்ன?

முடியும் என்பது என்னுடை பலமான நம்பிக்கை. அல்லாஹ் நாடினால் முடியும்.

அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழி படுத்துவானாக.

அன்புடன்

தாஜுதீன்


ஜூலை 08.07.2010